கனவே 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அகிலன் குளித்து விட்டு வந்தபோது அறையின் நடுவில் தலை குனிந்து நின்றிருந்தாள் மீரா.

அவனின் சட்டையை அவனிடமே நீட்டினாள். சட்டையை வாங்கித் தோளில் போட்டுக் கொண்டான்.

"ஆர் யூ ஓகே?" தயக்கமாக கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் மின்னியது. வழிந்து விடும் கண்ணீரை விடவும் கீழே சிதற விடாமல் சிரமத்தோடு தேங்கி நிற்கும் கண்ணீருக்கு அதிக வலிதான் போல.

மீண்டும் தரையை பார்த்தபடி கைகளை கூப்பினாள்.

"தேங்க்ஸ்!" என்றாள் உதட்டை கடித்தபடி. அந்த இதழ்களின் ஓரத்தில் எப்போது வேண்டுமானாலும் கதறி விடுவோம் என்பது போல அழுகை தேங்கி நின்றிருந்தது.

பச்சை தண்ணீரில் குளித்து வந்த பிறகும் கூட இவளின் வேதனை கண்ட பிறகு அவனுக்கு நெஞ்சுக்குள் தீ மட்டும்தான் பற்றி எரிந்தது.

யோசிக்காமல் அவளை ஒற்றை கையால் அணைத்துக் கொண்டான். ஏதோ ஒரு நட்பின் அணைப்பிற்கு காத்திருந்தவள் போல விம்ம ஆரம்பித்தவளின் தலையை பரிவோடு வருடி தந்தான்.

"அழாதப்பா.. இட்ஸ் ஓகே! அந்த கிழவி செஞ்ச தப்புக்கு நீ ஏன் பீல் பண்ற?" எனக் கேட்டான் சிறு குரலில்.

அவளுக்கு அழுகைதான் அதிகரித்தது.

"எனக்கு எவ்வளவு பயமா இருந்தது தெரியுமா?" எனக் கேட்டவள் குலுங்கி அழுதாள்.

அணைத்திருந்தவனின் கரம் இறுகியது. 'நீ ஆசைப்பட்ட போதே நெருங்காதவன் நான். உனக்கு விருப்பம் இல்லாதபோது உன்னை டச் பண்ணுவேன்னு நினைச்சி பயந்துட்டியா மீரா?' என கேட்க துடித்தது அவனின் மனம்.

"பயப்படும் அளவுக்கு ஒன்னும் நடக்கல. நீ சேப்பா இருக்க. என்னை உன் பிரெண்டா நினைச்சிக்க. இதை தவிர வேற என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல. நான் அவ்வப்போது உளறி வச்சா அதை பெருசா எடுத்துக்காத. ஆனா வலுக்கட்டாயமா உன் நிழலை கூட தொட மாட்டேன்! அன்னைக்கு கிஸ் பண்ணதுக்கு நிஜமா சாரி!" என்றான்.

அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு விலகி நின்றான். தரைப் பார்த்து நின்றிருந்தவளைத் தாண்டி நடந்தான்.

மீரா திரும்பிப் பார்த்தாள். அகிலன் அந்த அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தான். என்ன மாதிரியான உறவு இது என்றுப் புரியவே இல்லை அவளுக்கு.

அன்று அவள் வித்யாவின் பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த பிறகு வீட்டில் குப்பாயி பாட்டி இல்லை.

"இந்த பையன் என்ன சொன்னானோ அந்த கிழவி துண்டை காணோம், துணியை காணோம்ன்னு ஓடிட்டா!" என்றுச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆரவல்லி.

மீரா நிம்மதியில் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

"தேங்க்ஸ்!" என்றாள் அகிலனிடம்.

அவன் புன்னகைத்து விட்டு நகர்ந்துக் கொண்டான்.

நாட்கள் மெள்ள ஓடியது. மீராவும் ஆரவல்லியும் பழையபடி நெருங்கி விட்டார்கள்.

மைவிழியும் கதிரும் இடையில் ஒருமுறை மீராவை பார்க்க வந்தனர். கதிரை கண்டு நடுங்கவில்லை மீரா. மாமனிடம் கை குலுக்கும் அளவிற்கு முன்னேறி விட்டிருந்தாள்.

அருகாமையின் நிழல் தேவையில்லை. பிடித்தவர்களின் வாசம் கூட சில மாற்றங்களை உருவாக்கும் என்பதை அன்றுதான் அகிலனும் மைவிழியும் கூட அறிந்துக் கொண்டனர்.

"தேங்க்ஸ்!" என்றாள் மைவிழி அகிலனை தனியாய் பார்த்து.

"எனக்கு எதுக்கு தேங்க்ஸ்? அவ இல்லன்னா நான் வாழ்ந்து என்ன யூஸ்?" எனக் கேட்டான் அவன்.

"இரட்டை பிறவி மாதிரியே பேசுற!" என்றுச் சிரித்தாள் மைவிழி.

"இரட்டை பிறவி இல்ல. இரட்டை உயிர். இரட்டை உணர்வு. இரட்டை ஜீவன். சோல்மேட்ஸ்!" கன்னங்குழிய சிரித்து வெட்கத்தோடுச் சொன்னான்.

மைவிழிக்கு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. தங்கையின் வாழ்க்கை இத்தோடு முடிந்து விடுமோ என்றுப் பயந்து விட்டிருந்தாள் அவள். ஆனால் இப்போது தங்கையின் வாழ்க்கையில் புது அத்தியாயம் தொடங்கி இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.

மீராவுக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டிருந்தது. குப்பாயி பாட்டி வீட்டை விட்டுச் சென்ற பிறகு பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை.

அன்றைய நாள் ஞாயிற்றுக் கிழமை. வித்யா வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்தாள். அவள் வருவதற்குள் குளித்து விடலாம் என்ற எண்ணத்தோடு நடுப்பகல் வேளையில் குளியலறைக்குள் நுழைந்தாள் மீரா.

பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி குளித்து முடித்தவள் கடைசியாகதான் சுடிதாரின் டாப்பை எங்கேயோ விட்டுவிட்டு வந்ததை கண்டாள்.

"ரூம்க்குள்ளதான் விழுந்திருக்கும்!" என்ற எண்ணத்தோடு கதவை திறக்க முயன்றவள் அறையினுள் யாரோ நடமாடும் சத்தம் கேட்டு திகைத்து நின்றாள்.

'அகிலனா?' என்று நினைத்து நெற்றியில் அறைந்துக் கொண்டாள்.

'அவர் வீட்டுல இல்ல. இது வித்யா அக்காவாதான் இருக்கும்!' என நினைத்தபடி "வித்யாக்கா!" என்றழைத்தாள்.

"ஏன் மீரா?" வித்யாவின் குரல் கேட்டவள் கதவை பாதியாய் திறந்தாள்.

"அக்கா.. என் டாப்பை எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன். எடுத்து தரிங்களா?" எனக் கேட்டாள் கதவின் அந்த பக்கம் நின்றபடி.

"ம்!" என்ற அகிலன் அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். கட்டிலின் அருகே விழுந்து கிடந்தது டாப். எடுத்துச் செல்லும் போது விழுந்து விட்டது போல என்று யூகித்தவன் டாப்பை எடுத்துச் சென்று கை நீட்டி காத்திருந்தவளிடம் தந்தான்.

மீரா வெளியே வந்தபோது குளியலறை கதவோரம் நின்றிருந்தான் அகிலன்.

"அம்மா!" பயந்து கத்தியவள் நெஞ்சில் கையை வைத்தபடி ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

"இ.. இங்கே என்ன பண்றிங்க?" என்றாள் கண்களை உருட்டி.

"இது எனக்கும் ரூம்!" என்றவனை கோபத்தோடு பார்த்தவள் வித்யாவை தேடினாள்.

"யாரை தேடுற?" வித்யாவின் குரலில் அவன் கேட்கவும் துள்ளி விழுந்தாள்.

விசயத்தை புரிந்துக் கொள்ள சில நொடிகள் பிடித்தது அவளுக்கு. "மிமிக்ரி பண்ணிங்களா?" எனக் கேட்டாள்.

மொத்தமாக தலையை ஆட்டினான் அவன்.

"இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன? நான் பயந்தே போயிட்டேன்!" என்றாள் கோபமாக.

"நீ ஏதாவது ஒரு விசயத்துக்கு பயப்படாம இருந்தா அப்ப சொல்லு பார்க்கலாம். எல்லாத்துக்கும் பயப்பட்டா அப்புறம் நான் எதைதான் சொல்ல முடியும்?" எனக் கேட்டவன் அவளின் ஈர கூந்தலை தாண்டி சொட்டிய தண்ணீர் துளியை சுட்டு விரலால் தொட்டான்.

"தள்ளி போங்க!" அவனை விலக்கி தள்ளிவிட்டு வெளியே வந்தாள் மீரா.

"மீரா நாம எங்கேயாவது வெளியே போலாமா?" எனக் கேட்டபடி பின்னால் வந்தவனை முறைத்தாள்.

"நான் வரல.. வித்யா அக்கா வரும்வரை நான் மகியோட.." அவள் மீதியை சொல்லும் முன் "மகியோட கனவுல குடும்பம் நடத்த போற.. அதானே?" என்று அவன் முடித்து வைத்தான்.

ஆமென்று தலையசைத்தவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் "ஒருநாளைக்கு அவனை மறந்துட்டு என்னைக் கனவு காணப் போற நீ!" என்றான்.

"ரொம்பதான் ஆசை!" நாக்கை நீட்டி கேலியாக சொன்னவளை சிரிப்போடு பார்த்துவிட்டு நகர்ந்தான்.

வித்யா மாலை நேரத்தில்தான் வீட்டிற்கு வந்திருந்தாள்.

"ஏன் அக்கா லேட்?" எனக் கேட்டபடி அவளின் தோளைக் கட்டிக் கொண்டாள் மீரா.

"வீட்டுல வேலைப்பா!" என்றாள் அவள்.

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த அகிலன் "தினமும்தான் இரண்டு பேரும் சந்திக்கிறிங்க.. அப்புறம் ஏன் ஒவ்வொரு முறையும் ஓவரா பாசம் பொங்குது?" என்றான்.

அவனுக்கு பொறாமை என்று வித்யாவிற்கு தெரியும்.

மீரா வித்யாவின் தோளில் சாய்ந்துக் கொண்டு "ஏனா இவங்க மகியோட அக்கா!" என்றாள்.

வித்யா அவளை விலக்கி நிறுத்தினாள்.

"அவனும்தான் மகியோட அண்ணன்!" என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

மீரா இடம் வலமாக தலையசைத்தாள்.

"நீங்க பிப்டி பர்சண்ட் மகி மாதிரியே இருக்கிங்க. ஆனா அவர் இல்லையே!" என்றாள் மனதில் இருந்ததை மறைக்காமல்.

அகிலனின் முகம் வாடிப் போனதை வித்யா மட்டும்தான் கவனித்தாள்.

வித்யா மீராவின் கை பிடித்தாள்.

"மீரா நான் ஒன்னு சொன்னா கேட்பியா?" எனக் கேட்டாள்.

மீரா பள்ளியின் குழந்தைகளை போலவே தலையாட்டி சரியென்றாள்.

"நாம ஆசைப்பட்ட ஒரு பொருள் கொஞ்சம் மாறிப் போய் நம்ம கைக்கு கிடைச்சா எப்பவும் அந்த பொருளை வெறுக்க கூடாது நாம! நம்ம நேசம் அந்த பொருள் மேலதான் இருக்குமே தவிர அந்த பொருளோட உருவ மாற்றத்திலோ இல்ல மதிப்பு குறைவிலோ இல்ல!" என்றாள்.

மீராவுக்கு சுத்தமாக புரியவில்லை.

"போங்க அக்கா. புரியாத தியரியா இருக்கு!" என்றவள் எழுந்து சென்றுத் தொலைக்காட்சியை இயக்கினாள்.

வித்யா அருகே அமர்ந்திருந்த தம்பியின் கையை பற்றினாள். கண்களால் ஆறுதல் சொல்ல முயன்றாள். அகிலன் புரிந்துக் கொண்டதாக புன்னகைத்தான். ஆனால் அந்த புன்னகையின் பின்னால் இருந்த வலியை அந்த சகோதரியால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

மீரா தொலைக்காட்சியை இயக்கி விட்டு வந்து வித்யாவின் அருகே அமர்ந்தாள். மணியம்மா மூவருக்கும் குளிர்பானத்தை கொண்டு வந்து தந்து விட்டுப் போனாள்.

தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. மீரா சேனலை மாற்ற ரிமோட்டை கையில் எடுக்க நினைத்தாள்.

"நேற்று பிற்பகல் வேளையில் மிதுனாராணி எனும் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமையாளர் நால்வரால்.." மீதியை செய்தியில் வாசிக்கும் முன் தொலைக்காட்சி இறந்துப் போனது.

வித்யா தம்பியின் திசை பார்த்தாள். தொலைக்காட்சியை அணைத்தவன் சிலை போல அமர்ந்திருந்தான். தரை பார்த்திருந்த மீராவின் கைகளும் கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. வித்யா அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"ஏன் அக்கா?" என்பதைத் தவிர மீராவால் வேறு எதுவும் கேட்க முடியவில்லை.

"விடுப்பா. அதை யோசிக்காத!" என்றாள் வித்யா.

"மகியை பழி வாங்குறேன்னு அவங்க என்னை டார்ச்சர் பண்ணாங்க. ஆனா இந்த குழந்தையை ஏன்க்கா பழி வாங்கணும்?" எனக் கேட்டாள்.

வித்யா மீராவின் தலையை வருடினாள்.

"பழி வாங்கல், காமம் ஓவர், போதை, மயக்கம்.. இது எதுவும் காரணம் கிடையாது. சிலரோட கேவலமான மனசுதான் காரணம். ஒரு பொண்ணை வன்புணர்வு செய்ய இங்கே யாருக்கும் காரணம் தேவையில்ல மீரா. ஆனா அப்படி நடக்காம இருக்க நம்ம நாட்டுல சட்டம்தான் தேவைப்படுது!" என்றாள்.

"அந்த குழந்தை செத்திருக்கும்தானே அக்கா?" சில நிமிடங்களுக்கு பிறகு தயக்கமாக கேட்டாள் மீரா. அதைக் கேட்கும்போதே அவளின் குரல் உடைந்து விட்டிருந்தது.

அகிலன் எழுந்து நின்றான். அங்கிருந்து சென்றான்.

வித்யா மீராவிற்கு ஆறுதல் சொன்னாள்.

"அந்த குழந்தையை நினைக்காத!" என்றாள்.

"குழந்தைதானே அக்கா அது? என் வயசா இருந்தா கூட துப்பட்டா போடல, கண்டபடி திரிஞ்சேன்னு ஒரு கேவலமான காரணமாவது சொல்லலாம். ஆனா அந்த குழந்தை என்னக்கா பண்ணுச்சி? டிரெஸ், மானம், உடம்பு, செக்ஸ்,‌ரேப் பத்தியெல்லாம் அந்த குழந்தைக்கு எதுவுமே தெரியாதே அக்கா!" என்றாள் சோகமாக.

"அவளை வேட்டையாடின மிருகங்களுக்கும் பெண்மை, குழந்தை, மனிதம் பத்தி தெரிஞ்சிருக்காது மீரா. அதான் பிரச்சனையே!" என்றாள் அவள்‌.

மணியம்மா சூடான பால் கொண்டு வந்து வைத்தாள்.

"இதை குடி!" என்று நீட்டினாள் வித்யா.

கை நடுங்க பாலை எடுத்துக் குடித்தாள் மீரா.

வசந்தும், ரோகிணியும் வெளியே சென்றுவிட்டு அப்போதுதான் வீட்டிற்கு வந்தார்கள். அழுத முகமாய் இருந்த மருமகளை கண்டுவிட்டு என்னவென்பது போல வித்யாவை பார்த்தார்கள். அப்புறம் போனில் சொல்வதாக அவள் சைகை காட்டியதும் அமைதியாகிக் கொண்டார்கள் இருவரும்.

மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. வித்யா எழுந்து நின்றாள்.

"நான் கிளம்பறேன் மீரா. அத்தை காத்திருப்பாங்க!" என்றாள்.

மீராவுக்கு வித்யாவின் அருகாமை தேவைப்பட்டது.‌ ஆனால் வித்யாவின் மாமியார் மருமகள் மீது கொண்ட பொசசிவ்னெஸ்ஸை அறிந்திருந்தவளுக்கு வித்யாவை தன்னோடு வைத்துக் கொள்ள முடியவில்லை.

ரோகிணியும் வசந்தும் வித்யாவை வழி அனுப்பி வைக்க கிளம்பினார்கள். மீராவுக்கு தலை வலித்தது.

மாத்திரையாவது விழுங்கலாம் என நினைத்து அவளது அறையை திறந்தாள். அறை முழுக்க புகையாக இருந்தது.

இருமல் தாங்க முடியவில்லை.

"மீரா!" இவளின் இருமல் சத்தம் கேட்டு அழைத்தான் அகிலன்.

"ம்!" என்றவள் "என்ன கருமம் இது? எத்தனை பாக்கெட் சிகரெட் பிடிச்சிங்க? சாக உங்களுக்கு அவ்வளவு ஆசையா?" என்றாள்.

அகிலன் ஜன்னலை திறந்து விட்டான்.

"மூடியிருந்த ரூம். அதனால இப்படி தெரியுது. மூணே மூணு சிகரெட்தான் பிடிச்சேன்!" என்றபடி அவளின் அருகே வந்தான்.

மீரா நெற்றியை பிடித்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.

"என்னாச்சி மீரா?"

"ஏற்கனவே தலைவலி.‌ இப்ப இந்த நாத்தத்துல குடலையும் சேர்த்து புரட்டுது. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் பாஸ்? கொஞ்சம் முன்னாடி வரை நல்லாத்தானே இருந்திங்க? திடீர்ன்னு இப்படி புகை போட்டுட்டு இருக்கிங்க!"

அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான்.

"எனக்குப் பிடிச்சவங்களுக்கு வலிச்சது. அந்த வலியை என்னால தாங்க முடியல!" என்றான்.

அவனின் கண்களில் இருந்த காதலை அவளால் பார்க்க முடிந்தது. இவ்வளவு நேரம் இருந்த வலியை விடவும் இது இன்னும் மோசமாக இருந்தது.

தாடையின் கீழ் இருந்த அவனின் கரம் அவளின் கன்னம் நோக்கி மேலேறியது. கண்களை திறந்து வைத்துக் கொண்டிருக்காவிட்டால் மகிழன் என்றே எண்ணியிருப்பாள்.

இந்த நேரத்திலும் கூட மகிழனின் தீண்டலை கூட இவ்வளவு உன்னிப்பாக கவனித்து மனதில் பதிய வைத்திருக்கிறோமே என்றுதான் எண்ணினாள்.

அவனை விட்டு விலக சொன்னது மூளை. அவள் நகர முற்படும் முன் அவளின் இடுப்போடு வளைத்து விட்டது அவனின் கரம்.

சில வாரங்களாக இல்லாத நடுக்கம் இப்போது அனிச்சையாக வந்து சேர்ந்தது. ஆனால் நடுக்கத்தின் வகை வேறு என்றுதான் சந்தேகித்தான் அகிலன்.

"அழாத மீரா!" என்றான் அவளின் தோளில் முகம் புதைத்து.

"எதுவும் வேணாம். அழாம இரு. எனக்கு அது ஒன்னு மட்டும் போதும்." என்றான்.

மீரா அவனை விலக்கி நிறுத்தினாள்.

அவனின் முகம் வாடி போனது.

"ப்ளீஸ்.. இப்படி செய்யாதிங்க.." என்றவள் அலமாரியை நோக்கி நடந்தாள்.

தலைவலி மாத்திரை ஒன்றை எடுத்துக் கொண்டவள் "உங்க வலியை பொறுத்துக்க முடியலன்னு சிகரெட் பிடிக்கிறிங்க. நான் என் வலிக்கெல்லாம் நெருப்புலதான் குதிக்கணும்." என்றாள் சிரிப்போடு.

அகிலன் நெற்றியை பிடித்தான்.

"சாரி..‌ இனி இப்படி செய்ய மாட்டேன்!" என்றான்.

"என்னவோ.. நீங்க என்ன பண்ணா எனக்கென்ன?" விட்டேறியாக சொல்லிவிட்டு நகர்ந்தவளை கைப்பிடித்து நிறுத்தியவன் "மகியா இருந்தாலும் இப்படிதான் சொல்லி இருப்பியா?" என்றான். அவனுக்கு அவளின் பதில் அவசியமாக தேவைப்பட்டது.

"அவனா இருந்திருந்தா இன்னேரம் பல்லை தட்டி கையில் தந்திருப்பேன். சிகரெட் பிடிப்பியா குரங்கு பையலேன்னு கேட்டு என் கை வலிக்கும் வரைக்கும் அவன் தலையில் கொட்டி வச்சிருப்பேன். சிகரெட் பிடிச்ச கை விரல் எல்லாத்திலும் சூடு வச்சிருப்பேன்.!" என்றவளை அவசரமாக விலக்கியவன் "போதும் ஆத்தா.. இதுவே பக்குன்னு இருக்கு. இதுக்கு மேலயும் சொல்லாத!" என்றான்.

மீரா அவனை சலிப்போடு பார்த்துவிட்டு வெளியே நடந்தாள்.

அகிலன் தன் கையை பார்த்தான். விரல்கள் அனைத்திலும் சூடு இருப்பது போலிருந்தது. தலையை அசைத்தபடி ‌கையை உதறிக் கொண்டான்.

ஒரு வாரம் ஓடி விட்டது. மீரா அவசியம் இல்லாமல் அகிலனின் முன்னால் கூட வரவில்லை.

'ஐ வாண்ட் யூ!' அவள் மகிழனின் பின்னால் பித்தாய் சுத்தியதை நினைத்துப் பார்த்தான். மனதின் உணர்வுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அன்று மாலையில் அலுவலகத்தில் வேலையாக இருந்தவனை அழைத்தார் வசந்த்.

"என்ன அப்பா?" என வந்தவனிடம் பைலை நீட்டினார்.

"இதை கொஞ்சம் பார்த்துடு!" என்றார்.

"சரிப்பா!" என அவன் திரும்பிய நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் அகிலன்.

"ஹாய் அண்ணா!" என்றான்.

"ம்!" சோகமாக கையை அசைத்தவன் தந்தையின் முன்னால் வந்து அமர்ந்தான்.

"இவன் வொர்க்கை கத்துக்கிட்டான்னு சந்தோசப்படுவதா? இல்ல என்னை வீட்டை விட்டு துரத்திட்டான்னு வருத்தப்படுறதா?" எனக் கேட்டான்.

வசந்த் இரு மகன்களையும் மாறி மாறி பார்த்தார்.

"அந்த பொண்ணு இப்பதான் அழுகையை நிறுத்தி இருக்கு அகி‌. இன்னும் கொஞ்ச நாள்." என்றவர் தனது இளைய மகனைப் பார்த்தார்.

"அவ நல்லா இருக்கும்போது நீதான் மகின்னு சொல்லிடுடா!" என்றார்.

இடம் வலமாக தலையசைத்தவன் "என்னால முடியாது. அவளுக்கு மகியேதான் வேணுமாம். இந்த முகம் பிடிக்கலன்னு சொல்லிட்டான்னா??" என்றான் அதிர்ச்சியாக.

அகிலன் எழுந்து நின்றான்.

"அதுக்காக இப்படியே விட போறியா? நீதான் மகின்னு சொன்னா அவளுக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ப்ரியாவாவது இருக்கும் இல்ல?"

"இ.. இல்ல அண்ணா.. மகி முன்னால் நிற்க கூட தனக்கு தகுதி இல்லன்னு நினைக்கிறா‌. நான்தான் மகின்னு தெரிஞ்சா ஏதாவது பண்ணிப்பா அண்ணா. ரொம்ப பயமா இருக்கு. முதல்ல அவளோட மனசு சமநிலைக்கு வரணும். கற்புன்னு ஒன்னை நினைச்சி அவளுக்குள்ளயே வெந்துட்டு இருக்காளே.. அது மாறணும். அவளோட அந்த மனநிலை மாறலன்னா உயிர் போனாலும் கூட நான்தான் மகின்னு சொல்லவே மாட்டேன்!" என்றான்.

அகிலன் தம்பியின் தோளில் கை பதித்தான்.

"வெயிட் பண்றேன்டா!" என்றான்.

"தேங்க்ஸ் அண்ணா!" என்றவன் அண்ணனை அணைத்துவிட்டு வெளியே நடந்தான்.

தந்தை தந்த வேலையை முடித்து விட்டு அவன் எழுந்த நேரத்தில் அவனின் போன் ஒலித்தது.

எடுத்துப் பார்த்தான். ஏதோ புது எண். அழைப்பேற்று பேசினான்.

"ஹலோ.." என்றவன் யாரென்று கேட்கும் முன்பே "வீடியோ ஒன்னு‌ அனுப்பி இருக்கேன். பார்த்துட்டு கால் பண்ணு!" என்றான் எதிர் முனையில் இருந்தவன்.

அகிலன் (இவன் மீராக்கிட்ட உண்மையை சொல்லும் வரை இவனை அகிலன் என்றுதான் குறிப்பிட போறேன் மக்களே) குழப்பத்தோடு போனை பார்த்தான்.

"யார் பேசுறது?" எனக் கேட்டான்.

"யாரா இருந்தா என்ன? உன் வொய்ப் பத்தி வீடியோ அனுப்பி இருக்கேன். அந்த பத்தினி தெய்வத்தை நீ கொண்டாட உனக்கு இன்னொரு வீடியோ!" எதிரில் இருப்பவன் சொன்னது கேட்டு ஆத்திரமாக வந்தது அகிலனுக்கு.

"*** என் வொய்ப் பத்தினியா இருந்தாலும் இல்லன்னாலும் லாப நட்டம் எனக்குதானேடா! உனக்கென்னடா வந்தது நாயே?" எனக் கேட்டான் கடுப்போடு.

"மச்சி.. மச்சியும் ஆகாது. சகோ.. இளமை இல்லையா? அதான் அப்படி பொங்கி பொங்கி பேசுற.. கொஞ்ச நாள்ல மோகமும் ஆசையும் தீர்ந்த பிறகு உனக்கே எல்லாம் புரிய வரும். எச்சில் இலைன்னு எச்சில் இலைக்கு ஏன் பேர் வச்சாங்கன்னா அது எச்சில் இலைங்கறதாலதான். ஆனா உன்னையும் சும்மா சொல்ல கூடாதுப்பா.. இத்தனை வருசமா அவளோட சாரை பாம்பு மாதிரி பிண்ணி பிணைஞ்சி திரிஞ்சும் கூட எங்களுக்காக அவளை பிரெஸ்ஸா கொடுத்த பார்த்தியா.. அதுக்காகவே உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்! அவ பிரெஸ்ஸா இருப்பான்னா நாங்க கற்பனை கூட பண்ணல. ஆனாலும் நீ ரொம்ப நல்லவன்தான் போல.. சரி அப்புறம் பேசலாம். நீ வீடியோ பார்த்துட்டு கால் பண்ணு சகோ!" என்றவன் இணைப்பை துண்டித்துக் கொள்ள அகிலனுக்கு கரங்கள் இரண்டும் தானாக நடுங்கியது.

புது குழப்பம் போல இருந்தது. எதிரில் பேசியவன் யாராய் இருப்பான் என்றும் யூகிக்க முடியவில்லை. அவன் பேசியது ஆத்திரத்தை அதிகரிக்கதான் செய்தது. மீராவை பற்றி அவன் சொன்னதை நினைக்கையில் ரத்தம் கொதித்தது.

"எச்சில் இலைன்னு எச்சில் இலைக்கு ஏன் பேர் வச்சாங்கன்னா அது எச்சில் இலைங்கறதாலதான்.." அவன் சொன்னது செவிக்குள் கேட்கவும் பற்களை கடித்தபடி அருகே இருந்த சுவற்றில் கையை குத்தினான்.

'என் மீரா. அவ என் மீரா. எச்சில் கிடையாது. அவ என் மீரா!' என்றுத் தனக்குள்ளேயே பைத்தியம் போல சொல்லிக் கொண்டான். இப்படி ஒரு வார்த்தை அவளின் காதிற்கு சென்றால் அவளின் மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்பது புரிந்துதான் அதிகம் பயந்தான்.

"எங்களுக்காக அவளை பிரெஸ்ஸா கொடுத்த பார்த்தியா.." அவன் சொன்னது நினைவிற்கு வந்ததும் தலையை பற்றினான். 'ஐ வாண்ட் யூ!' மீராவின் கொஞ்சல் மொழிகளும் அடுத்தடுத்து நினைவிற்கு வந்தது.

மனதின் வலியை கட்டுப்படுத்த முயன்று உதட்டை கடித்ததில் கடித்த இடத்தில் இருந்து ரத்தம்தான் வந்தது. மனதின் வலி குறையவில்லை. தலையை பற்றியிருந்த கரம் இரண்டும் இறுகியது.

"மீரா!" வலியோடு அழைத்தான். அவளை தேடியது அவனின் இதயம். அவளின் கை கோர்க்க, அவளின் மடி சாய ஏங்கியது அந்த இதயம். ஆனால் எழவே முடியவில்லை அவனால்.

அவன் தன் மனதின் வலியை கட்டுப்படுத்த முயன்ற அதே நேரத்தில் அவனின் இதயத்தில் சுருக்கென்றது. நெஞ்சை பிடித்தான்.

'மகி.. லவ் யூ மகி. ஐ வாண்ட் யூ மகி!' மீராவின் குரல் மூளையின் அடுக்குகளில் நூறு ஆயிரம் குரல்களாக எதிரொலித்தது.‌

"மீரா!" என்றான்.

அவனின் எதிரே வந்து நின்றவள் அவனின் கன்னங்களை பற்றினாள்.

"டால்.. மை டால்!" என்றாள். அவனைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள்.

நிமிடங்கள் கடந்ததை அவன் அறியவேயில்லை.

"மகி.. நீ என் உலகம்!" அவனின் செவியோரத்தில் கொஞ்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது மீராவின் குரல்.

அகிலன் மீண்டும் கண் விழித்தபோது தான் இவ்வளவு நேரமும் மேஜையின் மீது தலை வைத்து படுத்து இருந்ததை கண்டான். இதயத்தின் மீது தேய்த்தான். வலி தெரியவில்லை. இருந்தும் மாத்திரையை தேடி எடுத்து விழுங்கினான்.

போனை எடுத்தான். வீடியோ வந்து விட்டதாக மொபைலின் நோட்டிபிகேஷன் சொன்னது. ஆனால் அதை திறந்துப் பார்க்கும் அளவுக்கு தைரியம்தான் இருக்கவில்லை.

அலுவலகத்தில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டிருந்தார்கள். அகிலனோ போனை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

முன்பு அழைத்தவன் மீண்டும் அழைத்தான். அழைப்பை துண்டித்து விட்டான்.

'வில்லங்கமா எதுவும் இருக்க கூடாது. இல்லன்னா என்னால மீராவை சமாளிக்கவே முடியாது!' என்று‌ நினைத்தபடி வீடியோ ஓட விட்டான். இரண்டாம் நொடியில் போனை அணைத்தான்.

மீராவை வன்புணர்வு செய்ததை வீடியோவாக எடுத்து அதைதான் இவனுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

அவன் மீண்டும் அழைத்தான். துண்டித்து விட்டு மீண்டும் வீடியோவை ஓட விட்டான். போன் பேசியவன் யாரென்று அறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அகிலன். வினய்யும், சாரதியும் ஜெயிலுக்குள் இருக்கும்போது இந்த புது வில்லங்கம் யாரென்று யூகிக்க முடியவில்லை.

வீடியோவை ஓட விட்டாலும் கூட அவனால் பார்க்கவே முடியவில்லை. மீராவின் மேல் படர்ந்திருந்த வினய்யை உயிரோடு கொளுத்த வேண்டும் போல வெறி வந்தது. மீராவின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை பார்க்க முடியாமலேயே பார்வையை திருப்பிக் கொண்டான் அகிலன்.

"என்னை விடுடா.. மகி என்னைத் திட்டுவான்டா! ப்ளீஸ் என்னை விடுடா. நான் மகியோடவ! அவன் கோவிச்சிப்பான். என்னை விடுடா.. மகி.. மகி!" என்று மீரா மெல்லிய குரலில் அரற்றுவது மட்டும் காதுகளில் வந்து விழுந்தது.

நடுங்கும் கரங்களில் போனை பிடித்திருப்பதே சிரமமாக இருந்தது. வியர்த்து விட்டது கைகள். அவளின் 'மகி.. மகி!' எனும் ஓயாத அழைப்பு அவனை உயிரோடு கொன்றுக் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN