கனவே 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகிழன் மீராவை பார்த்தான். "தலை‌ வலிக்குது மீரா. மணியம்மாக்கிட்ட சொல்லி ஒரு டீ வாங்கிட்டு வரியா?" எனக் கேட்டான்.

மீரா அவனின் கையில் இருந்த போனை பார்த்துவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

"டேப்ளட் எடுத்துட்டு வரட்டா?" எனக் கேட்டாள்.

அவன் இடம் வலமாக தலையசைக்கவும் தயக்கத்தோடு அவனை விட்டு விலகி நடந்தாள்.

"என்னடா சகா, உன் லவ்வர்கிட்ட பொய் சொல்ல கூட கத்துக்கிட்ட போல!" என்றான் ரோகித்.

மகிழன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு "உனக்கு என்னதான் வேணும் ரோகித்? ஏன் எங்களை டார்ச்சர் பண்ற?" எனக் கேட்டான்.

"இரண்டு பேர்ல ஒருத்தர் சாகணும்.. இல்லன்னா பிரியணும்!" என்றான் அவன் அந்த பக்கம் பற்களை அறைத்தபடி.

மகிழன் நெற்றியை தேய்த்தான்.

"உனக்கு பணம் வேணும்ன்னா தரேன் ரோகித்.!"

"உங்க அப்பன் சொத்து வச்சிருந்தான். அதனால உன் லைப்பை உன் இஷ்டத்துக்கு வாழுறன்னு சீன் போடுறியாடா ***? உன்னையும் அவளையும் துடிக்க துடிக்க சாவடிக்க போறேன் நான்!"

"நான் ஏற்கனவே உன் மேல கொலைவெறியில் இருக்கேன். உன்னை போலிஸ் பிடிக்கும் முன்னாடி நான் பிடிச்சேன்னை பார்த்த இடத்துலயே உன்னைக் கொல்லப் போறேன்.." என்றுக் கர்ஜித்தான் மகிழன்.

"அதையும்தான் பார்க்கலாம்டி" என்ற ரோகித் அத்தோடு போன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டான்.

ஒவ்வொரு முறையும் புது எண். புது போன். புது சிக்னல். அவனை பிடிக்க இனியனாலும் முடியாமல் இருந்தது. அவனை தேடி பிடிக்கும் முன்னால் தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைத்தான் மகிழன்.

யோசனையோடு நின்றிருந்தவன் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினான். மீரா விளக்கை ஒளிர விட்டாள். தன் கையிலிருந்த தேனீரை கொண்டு வந்து மகிழனிடம் தந்தாள்.

"தலையை பிடிச்சி விடட்டா பேபி?" எனக் கேட்டாள்.

வேண்டாமென தலையசைத்தவன் அவளை அழைத்துக் கொண்டு சென்று இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

"நான் ஒன்னு கேட்கட்டா மகி.?" தயக்கமாக கேட்டவளிடம் சரியென தலையசைத்தான்.

"ஏதாவது பிரச்சனையா.?"

மகிழன் புன்னகைத்தபடி "இல்ல மீரா.." என்றான்.

மீரா தன் இரு கை விரல்களையும் கோர்த்தபடி தரை பார்த்தாள்.

'போன் பண்ணது யார் மகி.? உன் முகம் ஏன் இப்படி மாறி போகுது.? என்கிட்ட கூட சொல்லாத அளவுக்கு பிரச்சனையா, இல்ல வேற..' மேற்கொண்டு யோசிக்கவும் இயலவில்லை அவளால்.

அவளின் முகத்தை கவனித்துக் கொண்டிருந்த மகிழன் அவளின் தாடையை பற்றினான். அவளை தன் புறம் திருப்பினான்.

"என்ன யோசனை.?"

"எ.. என்னை அனுப்பிடுறியா.?:

மகிழன் காலியான தேனீர் கோப்பையை கீழே வைத்தான்.

'இன்னும் எத்தனை தடை போட போறாளோ.. ஆண்டவா.. எனக்கு மட்டும் ஏன்டா இத்தனை சோதனை.?' என வருந்தியவன் "ஏன்?" என்றான்.

மீரா தயங்கினாள்.

"நா.. நான் சொல்றதால என்னை தப்பா நினைக்காத மகி.. நான் எப்படின்னு உனக்கே தெரியும் இல்லையா.? உனக்கு லவ் லெட்டர் தந்த பொண்ணை கிளாஸ் மத்தியிலேயே வச்சி அறைஞ்சேன். இப்ப அதுக்காக வருத்தபடுறேன். ஆனா இப்ப அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலும் நான் அதேதான் செய்வேன் மகி. நான் ஒரு மாதிரி. உன்னை யாருக்காவது விட்டு தரணும்ன்னா எனக்கு முடியவே முடியாது. உன்னைப் பத்தி உன் பாட்டிக்கு தெரிஞ்சதை விட எனக்கு அதிகம் தெரிஞ்சி இருக்கணும்ன்னு ஆசைப்பட்டிருக்கேன்.." என்றவளின் முன்னால் கையை காட்டி நிறுத்தினான்.

"உன்னை பத்தி உனக்குத் தெரிஞ்சதை விட எனக்கு அதிகம் தெரியும். நீ விசயத்தை நேரா சொல்லு." என்றான்.

மீரா அவனை தாண்டிக் கொண்டுப் பார்த்தாள். ஏன் அவள் தன் கண்களை கூட பார்க்க மறுக்கிறாள் என்று குழம்பினான் மகிழன்.

"இதுக்கு மேலயும் உன்னை என்னால கன்ட்ரோல் பண்ண முடியுமா மகி.?" என்றவளை குழப்பமாக பார்த்தான்.

"நான் கெட்டுப் போனவ. என்னால எப்படி இனியும் அதே பழைய கட்டுப்பாடுகளை உன்கிட்ட விதிக்க முடியும்?"

"புரியல.." என்றவனின் குரலில் கோபம் சேர்ந்திருந்தது.

மீராவுக்கு மேற்கொண்டு பேச பயமாக இருந்தது. சத்தம் இல்லாமல் திரையில் ஓடிக் கொண்டிருந்த கார்டூன் மூவியின் பக்கம் பார்வையை திருப்பினாள்.

"என்ன கேட்க வந்தியோ அதை முழுசா கேளு மீரா. நான் கெஸ் பண்ணது போலவே உன்னோடது சில்லறைதனமான எண்ணங்கள்தானான்னு நானும் தெரிஞ்சிக்கிறேன்!" என்றான் அதட்டலாக.

மீராவுக்கு பின்னங்கழுத்தில் வியர்த்தது. பேச்சு எழுவது சிரமமாக இருந்தது.

"உனக்கு இப்படி ஆனதை காரணமா சொல்லி நான் கண்டபடி திரிவேன்னு நினைக்கற.. ரைட்.?" அடங்காத ஆத்திரத்தோடு வார்த்தைகளை மென்று துப்பினான்.

மீரா கண்களை மூடி தன் பயத்தை குறைக்க முயன்றாள்.

அவளின் முகத்தை பற்றியவன் "சொல்லு.. இன்னும் என்னவெல்லாம் என்னை பத்தி நினைச்சிருக்கன்னு சொல்லு." என்றான்.

மீரா அவனின் கையை விலக்க முயன்றாள். கன்னங்களில் பதிந்திருந்த அவனின் கரம் அவளுக்கு வலியை தந்தது.

"மீரா.." அவனின் கோபம் அதை விட அதிக வலியை தந்தது.

"நான் அப்படி மீன் பண்ணல."

"வேற எப்படி?"

"ஏதாவது ஒரு பொண்ணை நீ ல.. லவ் பண்ணிட்டா.."

அவளின் கலங்கிய கண்களை வெறித்தவன் அவளின் முகத்தை தள்ளினான். ஏற்கனவே ரோகித் மீதிருந்த கோபம். இப்போது இவளால் அந்த கோபம் இரு மடங்காகி இருந்தது.

ஆயிரம் காரணங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் தன்னையே காரணமென சொல்ல இவளுக்கு எப்படி மனம் வந்தது என்று அதிர்ந்தான்.

'இதுதான் லவ்வா.? இல்ல இவ்வளவுதான் லவ்வா.?' என தன்னையே கேட்டுக் கொண்டவனுக்கு தனது காதலின் அஸ்திவாரம் ஆட்டம் காண்பது போலிருந்தது.

"சா.. சாரி மகி.. ஆனா உனக்கு என் பயம் புரியாது. உன் சொந்தக்காரங்களுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சா அவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயமா இருக்கு. நாளை வரும் நாளில் உனக்கும் எனக்கும் நடுவுல ஏதாவது சண்டை வந்தா நீ என்னை என் பாஸ்டை சொல்லிக் காட்டிடுவியோன்னு.." அவள் சொல்ல சொல்ல அவனின் கை நரம்புகள் முறுக்கேறிக் கொண்டிருந்தது. அதை கவனித்தவளுக்கு வார்த்தைகள் வெளி வர போராட்டம் செய்தன.

"..பயமா இருக்கு மகி. பைத்தியக்காரதனமா லவ் பண்றேன். சினிமா நடிகையை நீ வெறிச்சா கூட சண்டை போடுவேன். ஆனா இனி எப்படி.? நீ ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிட்டா என்னால தாங்கிக்கவே முடியாது. ரோட்டுல போற பொண்ணை நீ சைட் அடிச்சா கூட நான் கேள்வி கேட்க பயப்படுவேன். நீ எனக்கு துரோகம் செய்வன்னு சொல்லல. ஆனா நான் அப்படி நினைச்சி பயப்படுவேன்னு சொல்றேன். இப்ப உனக்கு வந்த கால் யார் என்னன்னு எனக்கு தெரியல. அது ஏதாவது பொண்ணா இருக்குமோன்னு மண்டைக்குள்ள சிலந்தி வலை கட்டுது. உன்னை நான் சந்தேகப்பட்டுடுவேனோன்னு நினைச்சி பயப்படுறேன். நான் ஏதாவது சொல்லி நீ ஏதாவது சொன்னா அப்புறம் இரண்டு பேருக்குமே வாழ்க்கை நரகம்தான். பேசாம என்னை என் வீட்டுக்கே அனுப்பிடு."

மகிழனுக்கு அவளை கடித்து குதற வேண்டும் போல கோபம் வந்தது. அவளின் நடுங்கும் கரங்களையும், திணறும் பார்வையையும் கண்டவனுக்கு கோபப்பட்டதற்காக தன் மீதே கோபம் வந்தது.

'அவ நிஜமாவே பயத்துல பேசுறா மகி..' என நினைத்தவன் "நான் அப்படி இல்ல மீரா." என்றான்.

"நான் அப்படி மகி." என்றவளின் கையை பற்றியவன் "தப்பு பண்ணணும்ன்னு நினைச்சா அதுக்கு நம்ம துணையோட விசுவாசம் ஒரு பொருட்டே கிடையாது மீரா. இங்கே புருசன் தப்பு பண்றான்னு பொண்டாட்டி தப்பு பண்றது கிடையாது. பொண்டாட்டி தப்பா போனான்னு புருசன் அப்படி போனதும் கிடையாது. எல்லாத்துக்கும் அவங்கவங்க மனசுதான் காரணம். நான் உன்னை தப்பானவன்னு எப்பவும் சொல்ல மாட்டேன் மீரா. உன்னை விட்டு விலகும் ஒரு சூழ்நிலை வந்துடவே கூடாதுன்னுதான் உன்னை சமாதானம் செய்யும் முன்னாடியே கல்யாணம் செஞ்சேன். நான் உன்கிட்ட சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் சத்தியம். நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னை நம்பும் முன்னாடி தயவு செஞ்சி உன்னை நம்பு. நீ தப்பானவ கிடையாது. நீ எப்பவும் அதே மீராதான். என்னை பைத்தியம் போல காதலிக்கும் மீரா. சும்மா கிடந்தா மனசுல இப்படி கண்டதும் தோணும். அதனால நீ புல்டைம் ஜாப்பா என்னை லவ் பண்ணு. எல்லாம் சரியா போயிடும்!" என்றான்.

மீரா மௌனமாக பார்த்தாள்.

"நீ என்னை நம்பணும்ன்னா நான் என்ன மீரா பண்ணட்டும்?" பெருமூச்சி விட்டபடி கேட்டான்.

"போன்ல யாரு? உனக்கு ஏன் தலைவலி வந்தது?"

மகிழன் தலையசைத்தபடி அவளின் தோளில் சாய்ந்தான்.

"போன்ல ஒரு பிசினெஸ் கால். நான் பண்ண தப்பால சில லட்சம் லாஸ்.. அப்பா திட்டிட்டாரு. இப்பவும் அதையே காரணம் காட்டி போன் வரவும் தலைவலி. உன்கிட்ட இதை சொல்ல பயம். ஏன்னா என்னை நீ கையாலாகாதவன்னு நினைக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல!" என்றான்.

மீரா அவனின் கன்னங்கள் பற்றி அவனின் முகத்தை நேராக நிமிர்த்தினாள்.

"மை பேபி டால் ரொம்ப புத்திசாலி. நீ இப்பதானே வேலையே செய்ய ஆரம்பிச்சிருக்க.. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும். உங்க அப்பா உன்னை ரொம்ப திட்டிட்டாரா? நான் வேணா போய் அவரோட தலையில் கொட்டி வச்சிட்டு வரட்டா?"

தலைசாய்த்துக் கேட்டவளின் கன்னம் கிள்ளியவன் "நீ குழந்தை போலவே நடந்துக்கற.‌. அப்பா திட்டுறது நல்லதுக்குதான். நீ அவங்ககிட்டயெல்லாம் மரியாதை குறைவா நடந்துக்காத.. நம்ம இரண்டு பேருக்காகவும் நம்ம இரண்டு பேரோட பேமிலியும் நிறைய அட்ஜஸ்ட் பண்ணியிருக்காங்க. உன்னையும் என்னையும் மீட்டுக் கொண்டு வர நிறைய சிரமப்பட்டு இருக்காங்க.. தேங்க்புல்லா இருப்போம்.." என்றான்.

மீரா சரியென்று தலையசைத்தாள்.

"அப்புறம் இன்னொன்னு.. சொந்தக்காரங்க என்ன சொல்வாங்களோன்னு யோசிக்காத.. நம்ம பேமிலியை விட மத்த சொந்தக்காரங்க முக்கியம் இல்ல.. இங்கே நம்மை குறை சொல்ற அளவுக்கு மத்த மனுசங்க யோக்கியமும் கிடையாது. கல்யாணம் பண்ண பிறகு புருசனுக்கு துரோகம் பண்றவங்களும், மனைவிக்கு துரோகம் பண்றவங்களும் சர்வ சாதாரணமா நிறைஞ்சி வாழுற உலகம் இது. அவங்களுக்கு நம்மை கண்டா எரிச்சலாதான் இருக்கும். அதனால் எப்படி வேணாலும் பேசுவாங்க. நீ என் மனசுக்கும் நான் உன் மனசுக்கும் நேர்மையா வாழ்ந்தா போதும். அப்படி வாழ்வோம்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ உன் மூளையை சும்மா போட்டு குழப்பிக்காம இரு. ஐ லவ் யூ. இதை தவிர உனக்கு வேற என்ன வேணும்?" எனக் கேட்டான்.

மீராவிற்கு பேச ஏதும் இல்லாமல் போய் விட்டது.

இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு வசந்தை தேடிச் சென்றாள் மீரா.

வசந்தும் ரோகிணியும் தங்களது அறையில் என்னவோ பேசிக் கொண்டிருந்தனர். இவள் சென்று கதவை தட்டவும் ரோகிணி வந்து கதவை திறந்தாள்.

"என்ன மீரா?" என்றவளிடம் "மாமாகிட்ட பேசணும் அத்தை!" என்றாள் தயக்கமாக.

"உள்ளே வாம்மா!" என்று அழைத்தாள்.

மீராவை இருக்கையில் அமர வைத்தாள்.

"சொல்லு மீரா!" என்றார் வசந்த்.

"மாமா.. மகி சின்ன பையன். அவனுக்கு இன்னும் அவ்வளவா நிறைய விசயம் தெரியாது. ஆனா நீங்க சொல்லி தந்தா கற்பூரம் மாதிரி பிடிச்சிப்பான். அவன் ரொம்ப ஜீனியஸ்.!" என்றாள்.

வசந்துக்கு ஒன்றும் புரியவில்லை.

"அவன் ஜீனியஸ்தான்ம்மா. தெரியுமே எனக்கும்!" என்றார்.

"இ.. இல்ல மாமா.. இன்னைக்கு அவன் வொர்க்ல தப்பு பண்ணிட்டான்னு நீங்க திட்டி வச்சிங்களாம். ரொம்ப பீல் பண்றான். நான் இதுல தலையிட கூடாதுதான். ஆனா அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் தலைவலி வராது மாமா. ரொம்ப டென்சன் ஆனா மட்டும்தான் தலைவலின்னு சொல்வான். இனி திட்டாம இருக்கிங்களா ப்ளீஸ்!?" கெஞ்சலாக கேட்டவளை காணுகையில் ரோகிணிக்கு சிரிப்புதான் வந்தது.

'புள்ளையை நான் பெத்தேனா நீ பெத்தியாடி?' என கேட்கலாமா என்று யோசித்தாள்.

வசந்த் தலையை கீறிக் கொண்டார். என்னவோ நடந்துள்ளது. நடுவில் நாம் ஏன் ஏதாவது சொல்ல வேண்டும் என நினைத்தவராக "இ.. இனி திட்டலம்மா.. அவனுக்கு தலைவலி வரும்ன்னு தெரியாது. இனி திட்டாம நல்ல முறையா சொல்றேன்!" என்றார். 'என் புள்ளையை எனக்கே தத்துக்கு தருவா போல!' என்றது அவரின் மனம்.

"அப்புறம் இன்னொரு விசயம் மாமா.. நான் உங்ககிட்ட இப்படி சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடாதிங்க. மரியாதை குறைவா நடந்துக்கிறேன்னு திட்டுவான்.. நம்மோட தேவைகளை கேட்டு பெறுவதற்கும் மரியாதை குறைவுக்கும் கூட அவனுக்கு வித்தியாசம் தெரியல!" என்றவள் எழுந்து நின்றாள்.

"குட் நைட் மாமா.. குட் நைட் அத்தை!" என்றவள் வெளியே சென்றதும் கட்டிலில் சென்று அமர்ந்தாள் ரோகிணி.

"என் மருமக செம பொறுப்பு!" என்றார் வசந்த்.

ரோகிணி கேலியாக கணவனைப் பார்த்தாள்.

"உங்களுக்கு டீ பிடிக்குமா காப்பி பிடிக்குமான்னு நான் தெரிஞ்சிக்கவே நாலு வருசம் ஆச்சி. இவளுக்கு கொடுத்து வச்சிருக்கு.!" என்றாள் பெருமூச்சோடு.

மீரா அமைதியாய் சோஃபாவில் தலை சாய்த்தாள்.

"நிஜமா அங்கேதான் தூங்கப் போறியா?" கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்த வண்ணம் கேட்டான் மகிழன்.

"நாளைக்கு பேசிக்கலாம் மகி. எனக்கு தூக்கம் தூக்கமா வருது.." என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.

"இரண்டு வருசம் முன்னாடி ஒருத்தி சொன்னா, 'சான்ஸ் கிடைக்கும்போது என்னை கருணையே இல்லாம களவாட போறதா'.‌ இப்ப திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறா!"

மீரா தன்னிடமிருந்த தலையணை ஒன்றை எடுத்து அவன் மீது வீசினாள்.

"என்கிட்ட பேசாத.." என்றாள்.

"வம்பா இருக்கு. நீ சொன்னதைதான் நான் ஞாபகப்படுத்தினேன்!"

"அப்புறம் நான் பாட்டி கூட போய் தூங்கிப்பேன்!"

அவளை முறைத்தவன் அமைதியாக படுத்துக் கொண்டான்.

ஆனால் மறுநாள் காலையில் மீரா கண் விழித்தபோது கட்டிலில் இருந்தாள். அருகில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான் மகிழன்.

"கொரங்கு பையன்!" என்று திட்டினாள்.

"நான் நெருங்கும் போதெல்லாம் ஓடுவான். இப்ப சும்மா சீன் போட்டுட்டு இருக்கான்.!" என்று முனகியவள் அவனை விட்டு விலகி எழுந்தாள்.

அன்று பகலில் மணியம்மா கடைக்கு செல்கையில் அவளோடு கிளம்பினாள் மீரா. வீட்டிலேயே இருக்க அதிகம் சலிப்பாக இருந்தது.

சூப்பர் மார்க்கெட்டில் மணியம்மா தனக்கு தேவையானது எல்லாத்தையும் எடுத்து கூடையில் நிரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் சாக்லேட்ஸ் வாங்கலாம் என்று நகர்ந்து வந்தாள் மீரா.

"இனிப்பு சாப்பிட்டா கவலை போகுமாம்.‌ எத்தனை டன் சாப்பிட்டா கவலை போகும்னும் யாராவது சொல்லி இருக்கலாம்!" என நினைத்தபடி சாக்லேட்ஸை கைகளில் அள்ளினாள்.

அவள் எடுத்தது முழுக்க மகிழனுக்கு பிடித்த சாக்லேட்கள். "அவனுக்கு தரவே கூடாது!" என்று முடிவெடுத்தாள்.

"மீரா!" யாரோ தன்னை மென்மையாக அழைப்பது கேட்டு திரும்பினாள். அவளின் அருகில் நின்றிருந்தான் ரோகித்.

"ரோகித்.. இங்கே என்ன பண்ற?" ஆச்சரியமாக கேட்டவளின் கரங்களை நோட்டமிட்டான் அவன். நடுக்கம் ஏதுமின்றி இயல்பாய் நின்றிருந்தாள்.

'அதுக்குள்ள சரியாகிட்டியா மீரா? நீயும் அவனும் கல்லா என்ன?' என நினைத்தவன் "இங்கே என் ரிலேசன் வீட்டுக்கு வந்தேன்ப்பா. கடையில் ஏதாவது வாங்கி போகலாம்ன்னு வந்தேன். நீ இருந்த. அதனாலதான் பேசலாம்ன்னு வந்தேன்!" என்றான்.

மீரா புன்னகைத்தாள். அவனுக்கு சாக்லேட் ஒன்றை நீட்டினாள்.

"மகிழன் நல்லாருக்கானா?"

"ம். அவனுக்கு என்ன?" என்றவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தவன் பொதுவான விசயங்களை பேச ஆரம்பித்தான்.

சக தோழன் ஒருவன் தன்னையும் மதித்து பேசுகிறானே என்றெண்ணி மீராவும் மகிழ்ந்தாள்.

பாலியல் வன்கொடுமை நிகழ்வின் போது அவள் தனது பெயரை சொல்லாமல் போனதும் அவளுக்கு தன்னை தெரியவில்லை என்பதை புரிந்துக் கொண்டான் ரோகித். இப்போது அவள் தன்னோடு சாதாரணமா பேசுவதை காணுகையில் மகிழனும் இவளிடம் உண்மையை சொல்லவில்லை என்று அறிந்து நிம்மதி அடைந்தான்.

மீராவின் கையில் இருந்த சாக்லேட் பார்ஸ் இரண்டு தீர்ந்து போனது.

"இவ்வளவு இனிப்பு சாப்பிடாத மீரா!" கனிவாக சொன்னான்.

"டென்சன்ப்பா..!" என்றவளை தயக்கமாக பார்த்தவன் "மகி உன்னை ஏத்துக்கிட்டானா மீரா? அப்பவே நீதான் பின்னாடி சுத்திட்டு இருப்ப. அவன் கண்டுக்கவே மாட்டான். இப்ப அவனா வந்து உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டான்னு கேள்விப்பட்டேன். கடமைக்கு ஏதும் கல்யாணம் செய்யல இல்ல? ஏனா மேரேஜ்ன்னா லைஃப் லாங் உனக்கும் செக்யூரிட்டியா இருக்கணும்!" என்றான் கவலையான குரலில்.

அவன் எதிர்பார்த்தது போலவே மீராவின் நெற்றியில் முடிச்சிகள் விழுந்தது.

'யோசிக்க ஆரம்பிச்சிட்டா!' என்று குதூகலித்தான் அவன்.

"அப்பவெல்லாம் அவன் போக்கே உன் மேல விருப்பம் இல்லாத மாதிரிதான் இருக்கும். உனக்கு ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு பிறகு விட்டுட்டு வேற போயிட்டான்‌. உன்னை மறந்துட்டான்னுதான் நானும் நினைச்சேன். ஆனா அவன் உன்னையே கல்யாணம் பண்ணிக்கவும் ரொம்ப வருத்தமா போயிடுச்சி. ஊர் உலகத்துல நல்லவன்னு பேர் எடுக்க உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டானோன்னு நினைச்சேன்!"

மீரா அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் சோகம் வெளிப்படையாக தெரிந்தது.

"அவங்க பேமிலி கம்பல் பண்ணாங்கன்னு அவன் மேரேஜ் பண்ணிக்கல இல்ல?"

மீரா இடம் வலமாக தலையசைத்தாள்.

"மீராம்மா!" மணியம்மா அழைத்தாள்.

"இங்கேதான் இருப்பேன் மீரா.. அப்புறம் மீட் பண்ணலாம்.." என்றவன் அவள் தந்த சாக்லேட்டை சுவைத்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.

வினய் தன் சிறை அறையில் படுத்திருந்தான். அதே நான்கு சுவற்றை பார்த்து பார்த்து பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது. எப்போது வெளியே செல்வோம்‌ என்று இருந்தது.

ரோகித் எங்கே இருக்கிறான் என்று இவனுக்கும் தெரியாது. அவனாக வந்து இவர்களோடு சேர்ந்தான். மீராவை அனுபவிப்பது மட்டும்தான் இவனது திட்டமாக இருந்தது. ஆனால் வீடியோ ரெக்கார்டர் செய்தால் பிற்காலத்தில் பிரச்சனை இருக்காது என்று சொல்லி வீடியோ எடுத்தவன் அவன்தான்.

அப்போது அவன் சொன்னது சரியென்றுதான் தோன்றியது. ஆனால் இப்போது அதுவே பெரிய சாட்சி,‌ தங்களுக்கான பெரிய ஆப்பு என்பது புரிந்ததும் எரிச்சலாக வந்தது.

மகிழன் வீட்டிற்கு வந்தபோது மீராவை காணவில்லை.

அறையில் தேடி விட்டு மணியம்மாவிடம் வந்தவன் "மீரா எங்கே மணியம்மா?" எனக் கேட்டான்.

"நான் பார்க்கலையே! இரண்டு பேரும் கடைக்கு போய் வந்தோம். அவளை அதுக்கப்புறம் நான் பார்க்கவே இல்ல!" என்று கையை விரித்தாள் அவள்.

அப்பாவும் அம்மாவும் அவனை கேலியாக பார்த்தனர்.

"வர வர வீடு ரொமான்ஸ் மூவி சீன்ஸ் எடுக்கற சூட்டிங் ஸ்பாட் மாதிரி ஆயிடுச்சி!" என்று கிண்டலடித்தான் அகிலன்.

"ச்சீ.. ப்பே!" என்றவன் தோட்டத்திற்கு சென்றான். பூக்கள்தான் இருந்தது. அவனின் பூவையாள் இல்லை.

தோட்டத்தில் இருந்த மஞ்சள் ரோஜா ஒன்றை பறித்து எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தான்.

"மஞ்சள் ரோஜாவே எங்கே நீ எங்கே?" அகிலன் வெறுப்பேற்ற வேண்டும் என்றே பாடினான்.

"அமைதியா இருடா!" என்று சிணுங்கிவிட்டு மீண்டும் தனது அறைக்கே வந்தான். அவளின் போன் அனாதை போல மேஜையின் மீது கிடந்தது.

"எங்க போய் ஒளிஞ்சிட்டு இருக்கா? புருசன் வந்ததும் டீ காப்பி தரலாம், அன்பா நாலு வார்த்தை பேசலாம்ன்னு தோணுதா அவளுக்கு? குப்பாயி பாட்டிதான் இவளுக்கெல்லாம் செட் ஆவாங்க!" என்றுத் திட்டினான்.

அவளை காணாமல் எரிச்சலாக இருந்தது. "மீரா.." என்று கத்தி அழைத்தான்.

"இந்த பையன் என் காதை செவிடாக்கிடுவான்!" என்று காதை பொத்தினான் அகிலன்.

பழைய நினைவு வந்தது மகிழனுக்கு. சந்தேகத்தோடு மாடிக்குப் சென்றான். அவனின் பழைய அறையை பார்த்தான். காலியாகதான் கிடந்தது.

"மீரா!" கடுப்பாக அழைத்தபடி மொட்டை மாடிக்குச் சென்றான்.

மொட்டை மாடியிலும் அவள் இல்லை. சுற்றி பார்த்தான். தண்ணீர் தொட்டியின் மீது துப்பட்டா பறந்துக் கொண்டிருந்தது.

"மீரா."

எட்டி பார்த்தவளின் முகம் தெரிந்தது. வெயில் இல்லைதான். ஆனாலும் அந்த சின்ன இரும்பு ஏணியில் அவனே கவனத்தோடுதான் ஏற வேண்டி இருக்கும். இவள் ஏன் அங்கே ஏறி அமர்ந்திருக்கிறாள் என்று எண்ணியவன் "அங்கே என்ன பண்ற?" எனக் கேட்டான்.

"உயரமா இருந்து பார்க்கும்போது தோட்டம் அழகா தெரியுது மகி!" என்றாள் மீரா.

"முட்டாள்.. கீழே இறங்கி வாடி!" என்றான் கோபத்தோடு.

மீரா எழுந்து நின்றாள். அவள் நிற்பதை பார்க்கும்போதே அவனுக்கு பயமாக இருந்தது.

இரும்பு படிகளில் காலை வைத்தாள். அவனுக்குதான் வியர்த்தது. கைக்கு எட்டும் தூரம் வந்ததும் அவளின் இடுப்பை பற்றித் தூக்கி கீழே இறக்கி நிறுத்தினான். அவளின் நடு மண்டையில் நச்சென்று ஒரு கொட்டு வைத்தான்.

"உன்னை எவன் மேலே ஏற சொன்னது?" என்று கர்ஜித்தான்.

"கழுதை மாதிரியே கத்தாத.. நான் சும்மாதான் ஏறினேன்‌. எல்லா இடத்திலும் ஏறி பழகினாதானே ஆகும்?" என்றவளை வருத்தமாக பார்த்தவன் "என்னை டார்ச்சர் பண்ற நீ!" என்றான்.

"சும்மாதான் வந்தேன்!" சிறுகுரலில் சொன்னவளின் முகத்தை நிமிர்த்தினான்.

"மறுபடி என்னாச்சி மீரா? மறுபடியும் என்னத்தை போட்டு மனசுல வாட்டிட்டு இருக்க?"

இடம் வலமாக தலையசைத்தவள் "ஒ.. ஒன்னும் இல்ல மகி!" என்றாள்.

"மீரா!" குரலில் அழுத்தம் அதிகமாகி இருந்தது.

மீரா தூரத்து கட்டிடங்களை பார்த்தாள். கலங்கும் விழிகளை துடைத்துக் கொண்டாள்.

"உனக்கு நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா மகி?"

"டேஷ் மாதிரி கேள்வி கேட்கற!"

மீரா சிரித்தாள்‌.

சோகம் கவலையை துடைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

"சீரியஸா கேட்கறேன் மகி.. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? ஒருவேளை நமக்குள்ள இருக்கிறது வெறும் பிரெண்ட்ஷிப்போன்னு தோணுது!"

அவளை அறைய வேண்டும் போல இருந்தது.

"ஏன் இந்த திடீர் சந்தேகம்?"

"ஏ.. ஏன்னா நீ.. நீ நீயா என்னை எப்பவும் அப்ரோச் பண்ணதே இல்ல. நெத்தியில் முத்தம் கொடுப்ப.‌. அதுவும் மாசத்துல ஒரு முறை. நான் அழகா இல்லையா மகி?" எனக் கேட்டவளுக்கு குரல் உடைந்துப் போனது. கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் இரண்டு வழிந்தது.

"என் ஸ்ட்ரெச்சர் நல்லா இல்லையா மகி? உன்னைப் பார்க்கும் போது எனக்கு பீலிங்க்ஸ் வந்த மாதிரி என்னைப் பார்க்கும் போது உனக்கு பீலிங்க்ஸ் வந்தது இல்லையா? பழகிட்டமேன்னு என்னை சகிச்சிக்க வேணாம் மகி. உனக்கு நல்ல லைஃப் இருக்கு. நான் உன் லைஃப்ல எப்பவுமே குறுக்க நிற்க மாட்டேன்.. டைவர்ஸ் வாங்கிக்கலாம் ம.." அவள் மேலே பேசும் முன் அவளின் இதழ்களை கைது செய்து விட்டான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN