நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

கானல் - 7

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்
நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்"ஓய் என் காதல் கண்மணியே..." என்று கத்தியபடி அவள் பின்னால் வந்த மோகனை சிறிதும் கண்டுகொள்ளாமல் தாரா செல்ல


ஓடி சென்று அவள் முன் மூச்சு வாங்க கீழே குனிந்து நின்றவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்து
"ஹாய் கண்மணி" என்றவனை முறைத்தவள் "நான் கண்மணி இல்லை....ஐ யம் தாரா " என்று கூறி அவனிடம் வாட்டர் பாட்டிலை நீட்டினாள்.


அதை வாங்கி குடித்தவன் தனது தோள்ப்பையில் (cross body bag) போட்டுவிட்டு அவளைப் பார்த்து சிரிக்க அவள் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் சென்றுவிட
மறுபடியும் " என் காதல் கண்மணியே " எனக் கத்தியவனின் அருகில் வந்தவள் அவன் வாயின் மேல் கை வைத்து
" ஏன் என்னை கண்மணினு சொல்லுற " என்று முறைத்தவாறு கேட்க


அவள் கையை எடுத்துவிட்டு தன் தலை முடியை கோதியவன் " நான் மணிரத்னம் ரசிகன் " என்று கூறி மறுபடியும் அவள் கையை எடுத்து தன் வாயின் மேல் வைத்துக் கொண்டான்.


அதில் சிரித்தவள் அவன் தலை முடியை கலைக்க அதில் முகம் மலர்ந்தவன் "ஓ காதல் கண்மணில ஆதி தாராவை அப்படிதான் கூப்பிடுவான் " எனக் கூற


" ஓஓஓ " என்ற தாராவை
" ஓஓஓ " இல்லை கண்மணி "ஓஓ காதல் கண்மணி" என்று கூறிச் சிரிக்க
அதில் புன்னகைத்தவள் தன் தாடைமேல் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவள் " ஆனால் நீ ஆதி இல்லையே" என்று கூற


" நான் ஆதியா இல்லாம இருக்கலாம்..
எனக்கு எப்போவுமே நீ தான் தாரா" என்றவன் தன் கையை இதயத்தின் மீது வைத்துக் கொள்ள அவனைப் பார்த்து முறைத்தவள் "நீ ஆதியும் இல்லை...நான் உன் தாராவும் இல்லை" என்று கூறி முன்னே செல்ல


"டேய் தகப்பா...மோகன்க்கு பதிலா ஆதினு வெச்சுருக்கலாம் சோ சேட் " என்றவன்


" இன்றைக்கு என்ன பர்ப்பிள் கலர் போல ஏற்கனவே என்கிட்ட இந்த கலர்ல பத்து இருக்கு " என்று கேட்க


அதில் சிரித்தவள் இன்னைக்கு அதுதான் கைக்கு கிடைச்சது என்று கூறி சென்று விட்டாள்.


இது எப்போதும் நடப்பது தான்...
இவன் மூச்சு வாங்க ஓடி சென்று
தாராவின் முன் நிற்பதும் அவள் தண்ணீர் பாட்டிலை நீட்டுவதும் அதை வாங்கி அவன் தன் பைக்குள் வைத்துக் கொள்வதும்.


அந்த பாட்டில்கள் தான் அவனின் அறைக்கு அழகு சேர்ப்பவையாம்...(நான் சொல்லல...நம்ம மோகன் சொல்றாப்புல)


அவளின் நினைவுகளுடனே வகுப்பறைக்குள் நுழைந்தவன் பூஷனின் அருகில் சென்று " ஹாய் நண்பா உங்க டீம்ல தான் என் நேம் இருக்கு போல நம்ம என்ன ப்ராஜெக்ட் பண்ண போறோம் " என்று கேட்டு பூஷனின் தோள்மீது கை போட
அதை எடுத்து விட்ட கிருஷ்ணா மோகனை முறைக்க "என்ன நண்பா என்னமோ அவர் லவ்வர் மேல கையைப் போட்ட மாதிரி நெற்றிக்கண் திறக்கிறார் " என்று கேட்க
அதில் சிரித்த பூஷன் "அவன் அப்படித்தான் பாஸ் வெல்கம் டூ அவர் கேங்க் " என்று கூறினான்.


" என்ன நண்பா...நான் எவ்வளவு அழகா நண்பானு கூப்பிடுறேன்...நீங்க என்னமோ கொள்ளைகூட்ட தலைவனை கூப்பிடுற மாதிரி பாஸ்னு சொல்லுறீங்களே " என்று கூறியவனைக் கண்டு சிரித்தவன்


"இப்படித்தான் எப்போமேவா " என்று கேட்க


" எப்போமே இப்படித்தான் " என்று கூறி கண்ணடித்த மோகனை பூஷனுக்கு மிகவும் பிடித்து விட்டது.


துறுதுறுவென்று சச்சின் விஜய் போல சிரித்துக் கொண்டே அனைவரையும் வம்பிலுக்கும் அவனை யாருக்குத் தான் பிடிக்காது.
கிருஷ்ணாவிற்கு இந்த ப்ராஜெக்ட்டில் மோகனை சேர்த்துக் கொள்ள விருப்பமில்லை எப்பொழுதும் மகிழ்ச்சியின் உருவாக வலம் வருபவனை ஆபத்தில் மாட்டிவிட அவன் மனம் கேட்கவில்லை.


"இந்த ப்ராஜெக்ட்க்கு இரண்டு பேர் போதும் நீ வேற ப்ராஜெக்ட் போய்க்கோ " என்று கூறிய கிருஷ்ணாவிடம்


" இங்க வாங்களேன்" என்று கூற


என்ன என்று முறைத்த கிருஷ்ணாவிடம் " என்ன நண்பா சும்மா சும்மா முறைச்சுக்கிட்டு நான் என்ன உங்க முறைப்பொண்ணா அட வாங்க பாஸ் " என்று அவன் காதருகே சென்றவன் ஏதோ சொல்ல அதை ஒட்டு கேட்க வந்த பூஷனிடம்
"உஸ்ஸ் சீக்ரெட்" என்று கூறி விட்டதிலிருந்து தொடர அதைக் கேட்டு துருவ் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.


"சிரிக்காதீங்க நண்பா" என்றவன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தவனுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.


"அப்படி என்ன தாண்டா சொன்னான்" என்று கேட்ட பூஷனிடம்


" நண்பா எனக்கு வாய் ஜாஸ்தி...கண்டிப்பா யாரும் என்ன அவங்க ப்ராஜெக்ட்ல சேத்திக்க மாட்டாங்க.
நான் பாவம்ல நண்பா தனியா ப்ராஜெக்ட் செய்யுற அளவு என் உடம்புல தெம்பு இல்லை நீங்க தான் பாவம் பார்த்து என்னை சேத்திக்கணும்.
இப்போ நான் உங்க காதுல என்ன சொன்னேனு பூஷன் கேட்பாரு தயவு செய்து நான் கெஞ்சுனதை மட்டும் சொல்லிடாதீங்க எனக்குனு ஒரு கெத்து இருக்கு...நீங்க எதுவும் சொல்லாம இருந்தா கண்டிப்பா உங்க காரிகை கிட்ட "ஏலியன் ஏலியன் கிருஷ்ணா உங்களை லவ் பண்ணுறாரு நீங்க இல்லைனா உயிர் வாழவே மாட்டாராம்...அப்படி இப்படினு சொல்லி மாமா வேலை பாக்குறேன்" என்று அவன் கூறியதை ஒன்றுவிடாமல் சிரித்துக் கொண்டே பூஷனிடம் கூறிய கிருஷ்ணா இதுக்கும் மேல ஒன்னு சொன்னான் டா.


"அவன் ஏரியா ப்ரெண்ட் பறவை வௌவால்கிட்ட சொல்லி ஏலியனை கடத்திட்டு வந்து அது கழுத்துல என்னை தாலி கட்ட வைப்பானாம்" என்று கூறி சிரிக்க பூஷனுக்கும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


"நாங்க போற இடம் ரொம்ப ரிஸ்க்கான இடம் அதுனால தான் உன்னை வேணாம்னு சொல்லுறோம் " என்ற பூஷனைக் கண்டுகொள்ளாமல்


"எனக்கு ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி " என்று டைலாக் பேசியவனை இருவரும் முறைக்க


"ஈஈஈஈ " என்று பல்லைக் காட்டியவன்
கடமை அழைக்கிறது என்று கூறி ஓடிவிட்டான்.


"ஹாய் கண்மணி " என்று கூறிய மோகனை சாஹீ, மானு என்ன என்பது போல் நிமிர்ந்து பார்க்க
கண்டுகொள்ள வேண்டியவளோ மும்மரமாக ஏதோ வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தாள்.


"ஹாய் ஹாய் ஆன்டிஸ் " என்ற மோகனைப் பார்த்து இருவரும் முறைக்க


" உங்களை ப்யூட்டிஸ்னு சொல்ல எனக்கு மனசு வரல ஆன்டிஸ்னு சொன்னாலும் முறைக்கிறீங்க...நான் வேணா அக்காஸ்னு கூப்பிடவா இல்லைனா பாட்டீஸ் " எனக்கு எதுனாலும் ஓகே என்று தோளை குலுக்கியவனை "யார்ரா இவன் " என்ற ரேஞ்சில் இருவரும் பார்க்க


" நானும் உங்க கிளாஸ் தான் பட் உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை...எங்க அப்பா பாலோ யுவர் ட்ரீம்ஸ்னு சொன்ன ஒரே காரணத்துனால இதோ என் கண்மணியை பார்த்ததிலிருந்து இவளை பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன் " என்று கூறி தாராவைப் பார்த்தான்


"மானத்தை வாங்குறானே" என்ற ரீதியில் அவள் தலையை குனிந்து கொள்ள


" ஹாஹா அப்போ படிக்க வரல " என்று கேட்ட மானுவிடம்


"ச்ச ச்ச...அப்படினு சொன்னா நம்பிடவா போறீங்க படிக்கலனா நான் எப்படி பாஸ் பண்ணுறது எப்படி வேலைக்கு போறது எப்படி என் கண்மணியை மேரேஜ்
பண்ணிக்கிறது " என்றவனைக் கண்டு சிரித்தவர்கள்


" துருவ் கிட்ட நின்னு பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு" என்று கேட்ட மானுவிடம் "ஆமா ஆமா அவர் கெஞ்சி கேட்டதால அவரை என் ப்ராஜெக்ட் மேட்டா சேர்த்துக்கிட்டேன் " என்றவனை சாஹீ முறைக்க


ஈஈஈஈ என்று இளித்தவன்
" சும்மா சும்மா " என்று கூறி தாராவின் அருகில் அமர்ந்து கொண்டான்.


" மோகன் " என்று மானு அழைக்க


" சொல்லுங்க பாட்... " என்று அழைக்க வந்தவன் அவள் பார்வையில் சொல்லுங்க மானசா என்று கூற


"ஒரு நிமிஷம் " என்றவள் அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.


" இவ சாஹீ...ப்ளீஸ் நீங்க உங்க ப்ராஜெக்ட்ல இருந்து விலகிட்ட இவ அவங்க கூட சேர்ந்துப்பா" என்று கூற


" ஏன் அதை அவங்க கேட்கமாட்டாங்களா ? அப்புறம் அதிலிருந்து விலகிட்டா நான் என்ன பண்ணுறது ப்ராஜெக்ட்க்கு " என்று கூறி சிரித்தவன்


" ஜோக்ஸ் அபார்ட் சாஹீ உங்களை பார்த்தா எனக்கு என் சிஸ்டர் மாதிரி தான் பீல் ஆகுது அது ரொம்ப ரிஸ்க்கான இடம் ப்ளீஸ் நீங்க போக வேணாம் " எனக் கூற


"ப்ளீஸ்...அது ரொம்ப ஆபத்தான இடம்னு எனக்குத் தெரியும்.என்னால என் துருவ்வை அங்க அனுப்ப முடியாது. அவனை நான் எந்த அளவு நேசிக்கிறேனு எனக்கே தெரியாது,நான் இந்த கல்லூரியில் சேர்ந்தது கூட அவனுக்காக தான்...நான் தினமும் இங்கே வரது கூட அவனுக்காக மட்டும் தான்.
அவனை பார்க்க அவன் மூச்சுக்காற்று இல்லாம என்னால இருக்க முடியாது...
அவனோட மூச்சுக்காற்று மட்டுமே என்னை உயிர்ப்பா இருக்க வைக்குது.. அது இல்லாம என்னால இருக்க முடியாது...அவன் அங்கே போயிட்டா நான் என்ன ஆவேனு எனக்கே தெரியல.
வாழ்வோ சாவோ அது அவன் கூட இருக்கும் போது மட்டும் தான் ப்ளீஸ் " என்று கெஞ்சியவளைப் பார்க்க மனது வலித்தாலும் " ப்ளீஸ் வேண்டாமே" என்று கூறத்தான் தோன்றியது.


" ப்ளீஸ் " என்ற குரலே அவள் உறுதியைக் காட்ட


" ம்ம் சரி...ஆனால் இதுக்கு மென்டர் துருவ் ஒத்துக்கணுமே " என்று கேட்டவனை அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியவள் சென்று விட இவனுக்குத் தான் ஒரு மாதிரி இருந்தது.


" ப்ளீஸ் கடவுளே... நான் தாரா மேல காட்டுற காதல் மட்டும் தான் உலகத்துலயே சிறந்ததுனு நினைச்சுட்டு இருந்தேன் ஆனால் சாஹீ அதை ஓவர் டேக் பண்ணிட்டாங்க.
அவங்களை உன் பொறுப்பில் ஒப்படைக்கிறேன் பத்திரமா பார்த்துக்கோ " என்றவன் தாராவை தேடிச் சென்றான்.


மென்டரிடம் கெஞ்சி காலில் விழுந்து சம்மதம் வாங்கியவள் துருவிடம் கிளம்பும் போது சொல்லி கொள்ளலாம் என்று கூறி விட்டாள்.


இன்று...


தன் அருகே வந்து நின்றவளைக் கண்டு கோபம் தலைக்கேற


"இந்த வாழ்க்கையில் நான் வெறுக்கிற
ஒரே ஆளு இதோ இவ தான்..
இவ கூட நான் போகணுமா? இவ இருந்தா எனக்கு எந்த நல்லதும் நடக்காது " என்று கூறி தன் பைகளை வீசியெறிந்தவன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்.


மோகன் அந்த ப்ராஜெக்ட்டில் சேர்ந்தது பிடிக்காமல் அதை அவனிடம் கூறவும் முடியாமல் பெண்ணவள் மனதால் துடித்துக் கொண்டிருக்க இந்த நிகழ்வைக் கண்டதும் தன்னவனை விழிகளால் தேடிக் கிடைக்காமல் போக அவனைத் தேடி ஓடினாள்.


அங்கே இலைகளின் மேல் எறும்பு வரிசையாக சென்று கொண்டிருக்க அதை தன் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தவன் தன் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி வைத்து அவனுக்கு இன்று அதைக் காட்டிய கண்களோ கலங்கிய நிலையில் இருக்க


அவள் கரங்களைப் பற்றி தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டவன் " என்னாச்சு என் கண்மணிக்கு " என்று கேட்க


அவன் தலைமுடியை வேகமாக கலைத்தவள் " நீ அவங்க கூட போகப்போறேனு தெரிஞ்சதும் ரொம்ப பயந்துட்டேன்..." என்றவள் குரலே அவள் பயத்தை உணர்த்த


தனக்காக அவள் பயத்தை தன்னிடம் கூறாமல் இருந்தவள் மேல் காதல் பொங்க அவள் கைகளை எடுத்து தன் தலை மேல் வைத்தவன் ஒழுங்கா நீ கலைத்து விட்ட முடியை நீயே சரி பண்ணு என்று கூற அதில் அவனை முறைத்தவள் மறுபடியும் நன்றாக கலைத்தாள்.


" ஹலோ என்னம்மா...எனக்கு எவ்ளோ பேன்ஸ் தெரியுமா ? இப்படி என்னைப் பார்த்தா பாவம் அவங்க நிலை என்னாகுறது ? " என்றவனைப் பற்றி தெரியாதா அவனவளுக்கு..
அவளைத் தவிர எந்த பெண் அவனிடம்
வந்து பேசினாலும் அடுத்த நொடியே அவளை அக்கா இல்லை தங்கை ஆக்கி விடுவான்.


அவள் கைகளில் ஒரு லெட்டரைக் கொடுக்க " என்ன " என்று வினவியவளிடம் பிரித்து பார் என்று கூற "தான் ஒரு முறை அவனிடம் எனக்கு மெசேஜ் ,கால், நேரில் சொல்ற லவ் லாம் பிடிக்காது...லவ் லெட்டர் ரொம்ப பிடிக்கும் என்பதை நினைவு வைத்து ஒருவேளை அதுதானோ "என்று ஆசையாக பிரிக்க அதில் இவர்களது ப்ராஜெக்ட் நேம் இருக்க கீழே சாஹீயின் பெயருக்கு பதில் மோகனின் பெயர் இருந்தது.


பாவமாக அவனை ஏறிட்டவளிடம் "லவ் லெட்டர்னு நினைச்சியா ஆசை தோச அப்பள வட " என்றவன் சிரித்துக் கொண்டே சென்று விட


அவனைப் பார்த்து முறைக்க முயன்றவள் இறுதியில் சிரித்து விட்டாள்.


கோபத்தில் துருவ் சென்ற வழியையே
பார்த்துக் கொண்டிருந்த சாஹீயின் விழிகள் வெறுமையைத் தத்தெடுத்துக் கொண்டது போல் இருக்க அதைக் கண்ட மானு அவள் கரங்களைப் பிடிக்க அவளைப் பார்த்து ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்தவள் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்.


துருவிற்கு தன்னைப் பிடிக்காது என்று நினைந்திருந்த பேதை மனமோ அவன் தன்னை வெறுக்கிறான் என்பதை கேட்டு நொறுங்கி போனது.


மோகனை தேடி வந்த பூஷன் அவனிடம் கிருஷ்ணாவின் செயலைக் கூற சாஹீயின் நிலையை நினைத்தவனின் மனமோ கல்லாகி போனது.


வா நண்பா நம்ம கிருஷ்ணாவை பார்க்க போகலாம் என்று கூறி கிளம்பி சென்றவர்கள் அங்கு அவனின் செயலைப் பார்த்து கடுப்பாகினர்.


"அங்கே அப்படி கத்திட்டு வந்து எப்படி தூங்குறான் பாரு...காரிகை கூட ரொமான்ஸ் பண்ணவா இருக்கும் " என்ற பூஷன் துருவை எழுப்ப


எழுந்தவன் அவர்களை முறைக்க
" என்னடா டூயட் பாடுறப்போ எழுப்பி விட்டுட்டேனு கோவமா " என்று கடுப்புடன் கேட்ட பூஷனிடம்


" அந்த கிழவி வரதை ஏன்டா சொல்லல"


" டேய் சாஹீ வரது எனக்கும் தெரியாது" என்ற பூஷனை நம்பாத பார்வை பார்க்க


"சத்தியம் டா " என்றவனை விடுத்து இப்போது மோகனை பார்த்து முறைக்க ஆரம்பித்தான்


" நண்பா நான் சொல்லுறது கேட்டா கோவம் வரத்தான் செய்யும்.
ஆனாலும் நீ கேட்கணும்" என்றவன்


அவன் அருகே அமர்ந்து கொண்டு
" சாஹீக்கு உன்னை எந்தளவு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும்...உனக்கு அவளை பிடிக்கல, ஏன் நீ அவளா ஒரு பொருட்டாவே மதிக்கலனு எனக்கு நல்லா தெரியும்...
நீ எவ்ளோ வெறுத்தாலும் அவ உன்மேல காட்டுற காதல் எப்போவும் குறையாது டா.
காதல் இரண்டு விதத்தில ஜெயிக்கும் டா...ஒன்னு அவங்க காதல் சேரணும் இல்லை அவங்க காதலிக்கிறவங்க சந்தோஷமாக இருக்காங்க அப்படிங்கிறதை பாத்துட்டாலும் அவங்க காதல் வெற்றி பெற்ற மாதிரி தான்டா....
இதுல சாஹீ இரண்டாவது விதம்...நீ நல்லா இருக்க சந்தோஷமா இருக்கணு அவளுக்கு தெரிஞ்சாலே போதும் அவ ஹேப்பி ஆயிடுவா நண்பா.
இதுவரை எப்படியோ தெரியல...இதுக்கப்புறம் நீ அவளுக்கு பண்ணுற ஒரே நல்ல காரியம் அவளை உன்கூட கூட்டிட்டு போ, உன் கனவு காரிகையை நீ எந்தளவு காதலிக்கிறேனு சாஹீக்கு புரிய வெச்சுட்டா போதும் " என்றவனிடம்


" நான் ஏண்டா அவளுக்கு என் காதலை புரிய வைக்கணும்...நாங்க போறது ரொம்ப ஆபத்தான இடம்.
அதுனால தான் நான் உன்னையே வேணாம்னு சொன்னேன்
இதுல அவளை எப்படிடா கூட்டிட்டு போவேன்"


" பூஷனை கூட்டிட்டு போறனு சொல்லுறல அவனுக்கும் தான் இங்கே ஒரு காதல் இருக்கு...அவன் உயிர் முக்கியம் இல்லையா " என்ற மோகனிடம்


" பூஷனுக்கு ஒன்னும் ஆகாது...நான் ஆகவும் விட மாட்டேன்"
என்ற கிருஷ்ணாவிடம்


" இவ்ளோதான் சிம்பிள்...சாஹீயை உனக்கு முன்ன பின்ன தெரியாத பொண்ணா நினைச்சுக்கோ.
ஆபத்துல இருக்க ஒரு பெண்ணை அப்படியே விட்டுட்டு வர அளவுக்கு நீ கல் நெஞ்சக்காரன் இல்லைனு எனக்குத் தெரியும்...நீ தைரியமா போ...உன் காரிகையை நீ பாக்குறது எந்த அளவு உனக்கு முக்கியம்னு எனக்குத் தெரியும்.
உன் காதல் வெற்றி பெற வாழ்த்துகள் மச்சான்...என்னையும் கடைசியில் சீரியஸா பேச வெச்சுட்டியே...சரி நான் போறேன் இல்லைனா என் ஹிட்லர் என்னை நோக்கி படை எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க" என்றவன் கிளம்பி விட


கன்னத்தில் கை வைத்து அமர்ந்த கிருஷ்ணா அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.


❤❤❤❤காரிகை வருவாள்❤❤❤❤


எல்லா இடத்திலும் கிருஷ்ணா தான்...
சாஹீக்கு மட்டுமே அவன் துருவ்...
அதனால் கன்ப்யூஸ் ஆக வேண்டாம் சகோக்களே....


உங்கள் ஆதரவு மற்றும் கருத்துகளை எதிர்ப்பார்க்கும் உங்கள் அன்புத் தோழி❤
 

Author: im_dhanuu
Article Title: கானல் - 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

Sri Ram

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Deiii dhruv over ra panra da ..pakkie payale
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top