கனவே 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது‌.

"மீராவை ரேப் பண்ணது நான்தான்.!" என்று தங்கை கேள்வியை கேட்கும் முன்பே சொன்னான் வினய். சாரதி அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தான். வினய்யின் அப்பாவும் அம்மாவும் மகனை குழப்பத்தோடுப் பார்த்தார்கள்.

"நான்தான் செஞ்சேன்.. எனக்கு இன்னும் அதிகமான தண்டனை கொடுங்க.. ப்ளீஸ்!" என்று குலுங்கி அழுதான். மகனின் அழுகையை முதல் முறையாக கண்டு அவனின் தாயும் தந்தையும் அதிர்ந்து நின்றனர்.

ஆராதனா இன்னமும் வன்மம் குறையாமல் நின்றிருத்தாள்.

சாரதியை பார்த்தார் நீதிபதி. அவன் திருதிருவென்று விழித்தான். அவர்கள் சார்பாக வாதாட இருந்த வக்கீல் குழம்பி போனார்.

வினய்யின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு அவனுக்கு பழைய தண்டனையே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. சாரதியின் வழக்கு தனி வழக்காக பதிவு செய்யப்பட்டு ஒத்திப் போடப்பட்டது.

வினய் ஜீப்பில் ஏறும் முன் அவனின் முன்னால் வந்து நின்றாள் ஆராதனா‌.

"சாரி!" என்றான் தலையை குனிந்தபடி.

ஆராதனா தலையசைத்தாள்.

"ப்ளீஸ்.. இனியாவது நீ ஆசைப்பட்டது படி.!"

மீண்டும் தலையசைத்தாள்.

"சாரி.. ஏஜ் முடிஞ்சிடுச்சி. இனி முடியாது. பரவால்ல விடு. நீ சின்ன வயசுல இருந்து என்ன தப்பு பண்ணாலும் நானும் சேர்ந்துதானே தண்டனை அனுபவிச்சிருக்கேன். இதுவும் அதுல ஒன்னா இருந்துட்டு போகட்டும்.!" என்றாள்.

வினய்யின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம் ஆரூ.. சத்தியமா நான் வெளியே வர ஸ்டெப் எடுத்திருக்க மாட்டேன்!"

அலட்சியமாக உதடு வளைத்தாள்.

"அதெல்லாம் சும்மா.. நான் சொன்னா நீ கேட்டிருக்க மாட்ட‌.. இப்ப இருப்பது போல அப்ப உனக்கு உறைச்சிருக்காது. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். பதினாலு வயசுல நான் ஏஜ் அட்டென்ட் பண்ணும் வரை உன்னை கட்டிப்பிடிச்சிட்டு தூங்கியிருக்கேன். நீ மீராவை அப்படி செஞ்ச நாளுக்கும் முன்னால் நாள் வரை உன் எச்சில் தட்டுல சாப்பாடு அள்ளி சாப்பிட்டுருக்கேன். உன்னை திட்டிக்கிட்டே உனக்கு எண்ணெய் தேய்ச்சி முதுகும் கூட தேய்ச்சி விட்டிருக்கேன். எனக்கு தேவையான இன்னர்வேர்ஸை நீதான் வாங்கிட்டு வந்து தந்திருக்க.. ஒவ்வொரு மாசமும் சானிடரி பேட்ஸ் வாங்கிட்டு வந்து தந்திருக்க.. நீ எனக்கு செகண்ட் ஃபாதர் மாதிரி இருந்திருக்க.. என்னை உன் செகண்ட் மதர் மாதிரியும் உன் பர்ஸ்ட் டாட்டர் மாதிரியும் நடத்தியிருக்க.. ஆனா அத்தனையும் உடைச்சிட்ட.. என் நெஞ்சில எரியற நெருப்பு எந்த அளவுன்னு உனக்கு தெரியாது. உன் முழு தண்டனையும் முடிஞ்சி நீ வெளிவரும்போது என்னோட பழைய அண்ணனா வருவன்னு நம்பி கிளம்பறேன். என்னை மறுபடியும் உடைச்சிடாத.. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!" என்றவள் அருகில் இருந்த ஸ்கூட்டியில் ஏறி கிளம்பினாள்.

வினய் இப்படி ஒரு திருப்பம் வருமென்று எதிர்பார்க்கவே இல்லை. தான் வெளிவராமல் போனது அவன் மனதில் இல்லவே இல்லை‌. ஆராதனா ஆசைப்பட்டது படிக்க முடியாமல் போனதை எண்ணி அதிகம் உடைந்துப் போனான். 'நான் பண்ண தப்பை தப்புன்னு சொல்லி அம்மா திட்டியிருந்தா இப்படி ஒரு நிலமை வந்திருக்காது. அம்மா எனக்கு சப்போர்ட் பண்ணாம விட்டிருந்தா ஆராதனா லைஃப்பை கோட்டை விட்டிருக்க மாட்டா.. அம்மா.. நீ உன் முட்டாள்தனமான பாசத்தால அவளையும் சேர்ந்து இழந்துட்ட!' என்று தலையில் அடித்துக் கொண்டான்.

***

ரோகித் சிறையின் அனைத்து இடங்களிலும் ஷோபாவை கண்டான். அவளோடு தினமும் பேசினான். அவளின் உடல் காயங்களை வருடி தந்தான். அவளின் சிரிப்பை ரசித்தான்.

***

சாரதியின் வழக்கு நடந்தது. அவன் மட்டும் அந்த இடத்தில் இல்லை என்றும் அதிகாலையில் நண்பன் அழைத்ததால் அந்த வீட்டிற்க்கு சென்றதாகவும் மீண்டும் வழக்கின் போக்கை மாற்றி வாதாடினார்கள்.

லஞ்சம் என்பதை முவ்வேளை உணவாக எடுத்துக் கொள்ளும் புது நீதிபதி சாரதியின் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய்யென்று சொல்லி அவனது தண்டனையை ரத்து செய்தார்.

மகிழ்ச்சியோடு வெளியே வந்தான் சாரதி.

"இனி என் சந்தோசத்துக்கு தடையில்ல!" என மனதுக்குள் துள்ளிக் குதித்தான்.

அம்மா வகை வகையாக சமைத்து பரிமாறினாள். அவனின் அப்பா மகன் வெளியே வந்து விட்டான் என்று வீட்டில் விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அதிகப்படி பணமா, இல்லை கையிலிருந்த பதவியா, இல்லை பேரும் புகழுமா என்று தெரியவில்லை. ஆனால் மகனின் தவறு தவறு என்று புரிந்துக் கொள்ளாத மன நிலையில் இருந்தனர் அவனின் பெற்றோர்கள்.

விழா நல்லபடியாக நடந்தது. வந்த நண்பர்கள் கூட்டம் சாரதியை புகழ்ந்தது.

"மீராவை அப்படியே விட்டிருக்க கூடாதுடா!" என்றான் அதில் ஒருவன்.

"இப்பதானே வெளியே வந்திருக்கேன்.. இனி இருக்கு அவங்களுக்கு!" என்றான்.

அன்றிரவு சல்லாபத்திற்கு என்று பெண் ஒருத்தியை வர சொல்லி ‌தனது படுக்கையறைக்கு அழைத்துக் கொண்டுச் சென்றான் சாரதி.

வெகுநாள் ஆகி விட்டது போலிருந்தது. ஆனாலும் மீராவின் வனப்பு கண்களை விட்டு மறைய மறுத்தது.

"அவ தனி ரகம்.!" என்றுச் சொல்லிக் கொண்டான்.

தன் அறைக்கு வந்த பெண்ணின் உடைதனை கலைக்க ஆரம்பித்தான். ஜன்னல் வைத்த அவளின் ரவிக்கையின் கொக்கிகளை கழட்டினான். அவளை தன் புறம் திருப்பினான்.

"நல்ல நாட்டுக்கட்டை நீ!" என்றான் அவளின் தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு.

புன்னகைத்தவள் "உங்ககிட்ட என்னைப்‌ பத்தி ஒரு அறிமுகம் செய்யலாமா?" எனக் கேட்டாள் கவர்ச்சி புன்னகையோடு.

"ம்.." என்றவனின் சட்டை பட்டன்களை கழட்ட ஆரம்பித்தவள் "என் பேர் மைத்ரேயி*. என் பிரெண்ட் கே.கேன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவள்ன்னா எனக்கு உயிர். அவ சொன்னா எதையும் செய்வேன். ஆனா அவளுக்கு போன வாரத்துல இருந்து பெரிய வருத்தம். அவ ஒரு மாதிரி பெமினிஸ்ட். எனக்கு பெமினிசம் பத்தி அவ்வளவா தெரியாது. ஆனா அவ வருந்திட்டா. ஏன்னா மீராங்கற ஒரு பொண்ணை ரேப் பண்ண ஒருத்தன் தண்டனையை அனுபவிக்காம வெளியே வந்துட்டான். அந்த நியூஸ் கேட்டதுல இருந்த அவளுக்கு மூட் அப்செட். நான் என்னென்னவோ சொன்னேன். ஆனா அவளுக்கு மூட் சரியாகல. ஆனா நீ செத்துட்டா அவ சரியாகிடுவா!" என்றவளைக் கேலி சிரிப்போடுப் பார்த்தான்.

"வெளியே எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? இப்ப நான் கூப்பிட்டா கூட பாடிகார்ட்ஸ் வந்து துப்பாக்கியால் உன்னை ஜல்லடையா.."

சாரதி மேலே பேசும் முன் அவனின் தொண்டையில் ஊசியை குத்தினாள் மைத்ரேயி. நீளமான ஊசி. ஆனால் மெலிதாய் இருந்தது. அவனின் பின்னங்கழுத்து வரை எட்டிப் பார்த்தது அந்த ஊசி. அவனால் வாய் திறக்க முடியவில்லை.

கையின் வளையல்களோடு பிணைந்திருந்த அடுத்த ஊசியை எடுத்து அவனின் நெஞ்சில் இறக்கினாள்.

அவனின் வாயில் ரத்தம் வந்தது. மெள்ள கீழே சாய்ந்தான்.

"சாரி ப்ரோ.. நீ செஞ்சது பெரிய தப்பு. என்னை மாதிரி ரோட்டுல போகும் யார் வேணாலும் உன்னைக் கொல்லலாம். பொது சொத்து மாதிரி நீயும் பொது குற்றவாளி. வந்த வேலை முடிஞ்சது. நான் கிளம்பறேன்.. டாடா!" என்றவள் ஜன்னலின் அருகே சென்றாள். ஜன்னலை திறந்து கீழே குதித்தாள். இருட்டில் புகுந்து மதில் சுவர் ஏறி ரோட்டோடு மறைந்துப் போனாள்.

மறுநாள் காலையில் கே.கே செய்தி சேனலை பார்க்கும்போது சாரதி இறந்துப் போனான் என்று வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. யாரோ ஒரு மர்ம பெண் சாரதியை கொன்றுவிட்டு சென்றாள் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.

மைத்ரேயி காப்பி தயாரித்து கொண்டு வந்து கே.கேவிடம் ஒரு கோப்பையை நீட்டினாள்.

"மர்ம பெண்.!? வாவ்.. எனக்கு என்னவோ போல இருக்கு. அந்த மர்ம பெண்ணை பார்த்து லவ் யூ சொல்லணும் போல இருக்கு!" என்றாள் கே.கே.

மைத்ரேயி அருகில் அமர்ந்து தோழியின் தோளில் சாய்ந்தாள்.

"கார்டூன் பார்க்கணும் நான்!" என்றாள்.

கே.கே அவளின் முகம் பார்த்துவிட்டு கார்ட்டூன் சேனலை மாத்தினாள். கார்ட்டூனை கண்டு புன்னகைத்தாள். அவளின் புன்னகையை மைத்ரேயி தன் முகத்தில் பிரதிபலித்தாள்.

***
ஆண்டுகள் ஓடியது.

சாரதியை கொன்றது யாரென்று கண்டறியவே முடியவில்லை. மகிழன் மீதோ மீராவின் குடும்பத்தின் மீதோ அவர்களால் சந்தேகப்பட முடியவில்லை. ஏனெனில் சாரதி இறந்த அன்று மீராவும் மகிழனும் நாட்டிலேயே இல்லை. சாரதியின் விடுதலைக்கு அடுத்த இரண்டாம் நாள் வேலை விசயமாக வெளிநாடு சென்ற மகிழன் மீராவையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். மூன்று மாதங்களுக்கு பிறகுதான் இருவருமே நாடு திரும்பி இருந்தார்கள். அதனால் அவர்கள் மீது யாராலும் பழி போட முடியவில்லை. அவர்கள் பழி போட்டாலும் காது கொடுத்து கேட்கும் நிலையில் மகிழனோ மீராவோ இல்லை.

***
ஆண்டுகள் கடந்ததை ரோகித்தால் நம்பவே முடியவில்லை.

தண்டனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தவனை பார்க்க அவனின் சித்தப்பா வந்திருந்தார். ரோகித்தின் தந்தை ஆறு மாதங்கள் முன்னால் இறந்து விட்டதாகவும் சொத்து முழுவதையும் ரோகித்தின் பெயரில் எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார் அவர்.

ரோகித் வருத்தமாக நகைத்தான்.

"எனக்கு தேவையான பாசம் தர மனசு இல்லாதவர் ஏன் இந்த சொத்தை தரணும்?" என்றுக் கேட்டான்.

"என்னை அடிச்சி, எனக்கு தினமும் சூடு வைக்காம இருந்திருந்தா என் லைப் இந்த அளவுக்கு மோசமாகி இருக்காது. அவர் தந்த ரொம்ப பெரிய சொத்தால நான் என் லைப்பை தொலைச்சி, எனக்கானவளையும் அழிச்சிட்டேன். இனியும் எதுக்கு இந்த சொத்து?" என்றுக் கண்ணீர் ததும்ப கேட்டான்.

அப்பா எழுதி வைத்த சொத்தை அதே ஊரில் இருந்த டிரஸ்ட் ஒன்றிற்கு எழுதி வைத்தான்.

***

வீட்டின் கதவு தட்டப்பட்டும் சத்தம் கேட்டு சென்று கதவை திறந்தான் ஜீவா.

வெளியே தாடியோடு ரோகித் நின்றிருந்தான். யாரென்று ஜீவா கேட்கும் முன்பே அவனின் முகத்தில் குத்தினான் ரோகித்.

ஜீவா அதிர்ந்துப் போனான். அவன் திருப்பித் தாக்கும் முன் ரோகித் அவனை தாக்க ஆரம்பித்து விட்டான். ஜீவாவின் நெஞ்சிலும் அடி வயிற்றிலும் கழுத்திலும் மாறி மாறி குத்தும் உதையும் விழுந்தது. வலி தாங்காமல் அலறினான் ஜீவா. அறை ஒன்றிலிருந்து ஓடி வந்த பெண் ஒருத்தி குறுக்கே விழுந்தாள். ரோகித்தின் கரம் அவள் மீதும் விட்டு விட்டது. ஆனால் அடி வாங்கிய பிறகும் அவனைப் பார்த்துக் கை கூப்பி கெஞ்சினாள்.

"ப்ளீஸ்.. டோன்ட் ஹர்ட் ஹிம்!" என்றாள்.

அவளின் கண்களில் தெரிந்த பயத்தையும், ஜீவாவின் சட்டையை பற்றியிருந்த அவளின் கரங்களையும் வெறித்தவன் ஜீவாவின் புறம் திரும்பினான்.

"லவ் பண்ணுங்க.. தப்பு இல்ல. ஆனா உங்க காதலோட பிரிவுக்காக அப்பாவி பெண்ணை பழி வாங்கிக் கொல்லாதிங்க!" என்றான்.

ஜீவா குழப்பத்தோடு அவனைப் பார்த்தான்.

ரோகித் கசிந்த தன் கண்களை துடைத்துக் கொண்டான்.

"நீ உன் இஷ்டத்துக்கு குப்பை போல அப்யூஸ் பண்ண ஷோபா எனக்கு சாமிடா! அவ படிப்பு கெட்டுச்சின்னு சம்பந்தமே இல்லாத இரண்டு பேரை கொலை பண்ற வரைக்கும் போனவன் நான். உன்னை கொன்னா கூட என் ஆத்திரம் தீராது. ஆனா நான் மறுபடியும் தப்பு பண்ணி அதனால என் ஷோபாவோட மனசு கஷ்டப்பட கூடாதுன்னு விடுறேன் உன்னை. என் தேவதை அவ. அவ முகத்தை பார்த்த பிறகும் அவளை அடிக்கவும், அவளை கொடுமை செய்யவும் உனக்கு எப்படிடா மனசு வந்தது? அவளை தினம் பட்டினி போட்டதுக்கு பதிலா அவளுக்கு நீ விஷம் தந்திருக்கலாம். அஞ்சறிவு ஜீவனை விடவும் அதிகமா அவளைக் கொடுமை பண்ணிட்ட நீ. நாங்க இரண்டு பேரும் பிறந்ததே பாவம்.. உனக்கு எங்க கஷ்டம் புரியாது. மிருகத்தை போல துன்பப்படும் யாரோ ஒருத்தரையும் கூட உயிரா காதலிக்கறவங்க உண்டுடா இங்கே. என்ன சொல்ல இனி? அவ போயிட்டா.. நான் பண்ண தப்புக்கு அவளால தண்டனை அனுபவிக்க முடியாதுன்னு தப்பிச்சி போயிட்டா. நீ செஞ்ச எல்லா கொடுமையையும் தாங்கிக்கிட்டவ என்னை ஜெயில் கம்பிக்கு பின்னாடி பார்க்க முடியலன்னு செத்துப் போயிட்டா.." என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறினான்.

ஜீவாவும் அவனின் மனைவியும் இவனை பைத்தியமோ என்று நினைத்தப்படி பார்த்தார்கள். ஆனால் இவன்தான் ஷோபாவின் காதலன் என்பது ஜீவாவிற்கு புரிந்தது.

அழுது முடித்துவிட்டு நிமிர்ந்தான் ரோகித்.

"ஸ்ரேயா எங்கே?" என்றான் வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்டபடி.

ஜீவா மௌனமாய் இருந்தான். அவனை மீண்டும் அடிக்கப் பாய்ந்தான் ரோகித்.

ஜீவாவின் மனைவி கை கூப்பினாள்.

"ஷோபா செத்த விசயம் கேட்டு வந்த அவளோட அப்பா ஸ்ரேயாவை கூட்டிப் போயிட்டாரு!" என்றாள் பயத்தோடு.

"ஆடு பகை குட்டி உறவா?" எனக் கேட்டு சிரித்தவன் "அந்த ஆள் அட்ரஸ் கொடு!" என்றுக் கையை நீட்டினான்.

ஓடிச் சென்று அட்ரஸை எழுதி கொண்டு வந்து நீட்டினாள் அவள்‌.

"என் ஷோபாவை தினம் தினம் கொன்னவன் இவன்‌. தப்பானவனை கூட நேசிக்க வைக்கும்.. அந்த கருமத்துக்கு காதல்ன்னு பேரு.. ஷோபா என்னை காதலிச்ச மாதிரி.. ஆனா நீங்க இவன்கிட்ட கவனமா இருங்க சிஸ்டர்.. இவன் ஒரு மிருகம். என் தேவதையை மனுசியா கூட பார்க்காம தினமும் ரேப் பண்ண மிருகம்!" என்றவன் ஜீவாவை வெறுப்பாக பார்த்துவிட்டு வெளியே நடந்தான்.

மறுநாள் ஷோபாவின் தந்தை குடியிருக்கும் வீட்டின் முன் வந்து நின்றான் ஜீவா.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான். ஷோபாவின் வாழ்வை கெடுத்ததற்காக இந்த மனிதனுக்கு நல்ல பதிலடி தர வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் அந்த பெரிய வீட்டில் கூட்டமும் பெரியதாக இருந்தது.

"யார் நீங்க?" எனக் கேட்டு வந்தாள் ஒரு பெண்.

"ஸ்ரேயா.?"

"அவ கொல்லைப்புறத்துல துணி துவைச்சிட்டு இருக்கா.. நீங்க யார்?" எனக் கேட்டாள்.

"நான் ஸ்ரேயாவோட அப்பா!" என்றவனை வெறித்தவள் "நாங்க அன்னைக்கே போன்ல தெளிவா சொல்லிட்டோம்.. எங்க பெரியப்பாவோட சொத்து ஸ்ரேயாவுக்கு சேருது. உங்களுக்கு எவ்வளவு பங்கு வேணுமோ வாங்கிக்கோங்க.. ஆனா சொத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு. அதனால ஸ்ரேயாவுக்கு பதினெட்டு வயசாகி அவ கையெழுத்துப் போடும்வரை அவ எங்களோடுதான் இருக்கணும்ன்னு சொல்லிட்டோம்!" என்றவளை கேலியாக பார்த்தான் அவன். ஷோபாவின் தந்தை இறந்துப் போனதில் அவனுக்கு சிறு மகிழ்ச்சி என்றே சொல்லலாம்.

"என் ஷோபாவுக்கு ஒருவேளை சோறு போட வக்கில்ல.. சொத்துக்காக சொந்தமாகிட்டிங்களா?" எனக் கேட்டான்.

எதிரே இருந்தவள் விசித்திரமாக அவனைப் பார்த்தாள். வீட்டில் இருந்த மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

"யார் நீங்க?" எனக் கேட்டான் ஒரு இளைஞன்.

ரோகித் பெருமூச்சோடு அங்கிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தான்.

"நான் ரோகித். ஷோபாவோட எல்லாமும் நான். ஷோபாவோட அப்பாவை தூக்கிப் போட்டு மிதிச்சிட்டு எங்க பொண்ணை என்னோடு கூட்டிப் போக இருந்தேன். ஆனா அவர் போய் சேர்ந்துட்டாரு.. நிறைய பன்னிகள் வீட்டுல நிரம்பி இருக்கு!" என்றவனை அடிக்க பாய்ந்தான் ஒருவன்.

ரோகித் பாக்கெட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து வெளியே வைத்தான். அடிக்க வந்தவன் தயங்கி நின்றான்.

"நான் முந்தாநாள்தான் ஜெயில்ல இருந்து வெளியே வந்தேன்!" என்றவனை அனைவரும் பயத்தோடுப் பார்த்தனர்.

"உங்களுக்கு இந்த வீடு வேணும்ன்னா எடுத்துக்கோங்க.. என் ஷோபாவின் பசி தீர்க்க முடியல உங்களுக்கு. நான் உங்களுக்கு இந்த சொத்தை பிச்சையா தரேன்.." என்றவன் எழுந்து பின்வாசலை நோக்கி நடந்தான்.

ஸ்ரேயாவை பார்த்த உடன் அடையாளம் காண முடிந்தது. பதினொரு வயது சிறுமி. ஷோபாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். அவளருகே துணிகள் நிரம்பிய பெரிய பக்கெட் ஒன்று இருந்தது. சேலை ஒன்றை தூக்க முடியாமல் தூக்கிச் சிரமப்பட்டு துவைத்துக் கொண்டிருந்தாள்.

'சொத்தும் எடுத்துக்கிட்டு சொத்துக்கு சொந்தக்காரியை வேலைக்காரியா யூஸ் பண்ண இவங்களாலதான் முடியும். எனக்கும் ஷோபாவுக்கும் மட்டும் ஏன் இப்படி ஒரு விதி? எங்களை நேசிப்பவர் அனைவரும் இந்த சொந்தங்களை தாண்டிதான் இருப்பார்களா?' என்று மனம் வெம்ப எண்ணினான்.

"ஸ்ரேயா?" இவனின் அழைப்பில் திரும்பினாள். கன்னத்தில் சிறு தடிப்பு இருந்தது. 'எங்க விதி முடியாம நீளுமா?' என கேட்டது அவனின் உள்ளம். சட்டென்று கண்களில் கண்ணீரும் தளும்பி விட்டது.

"யார் நீங்க?" எனக் கேட்டபடி கையை சுத்த தண்ணீரில் நனைத்து எடுத்துக் கொண்டு அருகே வந்தாள்.

"நா..‌நான் உன் அம்மா!" என்றவனை விசித்திரமாக பார்த்தாள் ஸ்ரேயா.

"ஆனா நீங்க மேன்!" என்றவளை பார்த்துச் சிரித்தவன் "ஏன்.. மேன் அம்மாவாக முடியாதா?" எனக் கேட்டான்.

ஸ்ரேயா குழம்பினாள்.

"ஆனா என் அம்மா செத்துட்டாங்கன்னு சொன்னாங்களே!"

"இல்ல.. அவ சாகல.. அவ உன்னில் பாதியும் என்னில் பாதியும் கலந்திருக்கா.." என்றான். ஸ்ரேயாவுக்கு புரியவில்லை. ஆனால் இவனை பிடித்திருந்தது. பார்த்த நொடியில் நம்பிக்கை பிறந்து விட்டது. அம்மாவின் அருகே இருந்தால் இப்படிதான் தோன்றுமா என்று தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

அவளின் உயரத்திற்கு குனிந்தான் ரோகித்.

"இந்த வீடு நமக்கு வேணாம் ஸ்ரேயா.. நாம வேற எங்காவது போயிடலாமா? யாரும் நம்மை துன்புறுத்த முடியாத ஒரு இடத்துக்கு போயிடலாம். இவங்க எல்லாம் கெட்டவங்க!" என்றான் வீட்டை நோக்கி கை காட்டி.

ஸ்ரேயா வீட்டைப் பார்த்தாள்.

"நி.. நிஜமா என்னைக் கூட்டிப் போக போறிங்களா?" எனக் கண்கள் மின்ன கேட்டவளின் கன்னத்தில் உள்ளங்கையை பதித்தான். அவள் எரிச்சலில் முகம் சுளித்தாள். கையை சற்று பின்னால் நகர்த்திக் கொண்டான்.

"ஆமா.. நீ எங்கே இருந்தாலும் உன்னை கூட்டிப் போறதுதான் என்னோட திட்டம். என்னோடு வரியா?" எனக் கேட்டான்.

ஸ்ரேயா யோசித்தாள்.

"ப்ளீஸ்.. வா ஸ்ரேயா‌.. நீயும் இல்லன்னா நான் வாழ்றதுல அர்த்தம் இருக்காது. நீ எனக்காக இருக்கும் ஒரே ஒரே ஜீவன்‌. உன்னை விட்டா எனக்கு யாருமே இல்ல! உன் ஒருத்திக்காகதான் இத்தனை வருசமா உயிரை கையில பிடிச்சி வச்சிருக்கேன்.." என்றவனின் விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டியது.

ஸ்ரேயா அவனின் முகத்தை சிமிட்டாமல் பார்த்தாள். கையை நீட்டி அவனின் கண்ணீரை துடைத்தாள்.

"அங்கே எனக்கு வேலை வைக்காம இருப்பிங்களா? அடிக்காம இருப்பிங்களா?" எனக் கேட்டவளை அள்ளித் தூக்கியவன் "என்னோட இளவரசி நீ. உனக்கு எப்படி நான் வேலை வைப்பேன்? என் செல்ல தேவதை. உன்னை என்னால அடிக்க முடியுமா?" எனக் கேட்டவன் அவளை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான்.

"போலிஸ்க்கு போன் பண்ணலாம்!" என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஒருவன்.

ரோகித் அவனின் பேச்சை கேட்டு சிரித்தான்.

"பண்ணுடா.. பேரண்ட்ஸ் அப்யூஸ் பண்றாங்கன்னு அன்னைக்கே நானும் என் ஷோபாவும் போலிஸ்க்கு போன் பண்ணி இருந்தா இன்னைக்கு எங்க லைஃப் நல்லா இருந்திருக்கும். இந்த முறை என் ஸ்ரேயாவுக்காக நானே போன் பண்றேன்!" என்றவன் "உன் போனை கொடு!" என்று அங்கிருந்தவனிடம் கையை நீட்டினான். அவன் ஓரடி பின்னால் நகர்ந்தான்.

"இவ்வளவு பயம் இருந்தா இனியும் எங்களை பின் தொடர மாட்டிங்கன்னு நம்புறேன்!" என்றவன் முன் கதவை நோக்கி நடந்தான்.

"என் டிரெஸ்.. புக்ஸ்!" என்றாள் ஸ்ரேயா.

"இந்த பிச்சைக்காரங்களே அதையும் எடுத்துக்கட்டும்!" என்றவன் அவளை தூக்கியபடியே வெளியே சென்றான்.

***

வருடங்கள் கடந்து விட்டது.

"அப்பா.. சீக்கிரம்‌‌.. ஸ்கூல் டைம் ஆச்சி!" அவசரத்தில் கத்தினாள் ஸ்ரேயா.

"ஒரே நிமிசம்!" ரோகித் டிபன் பாக்ஸை பைகளில் வைத்தான். தண்ணீர் கேனையும் ஸ்னேக்ஸ் பாக்ஸையும் வைத்தான். "ஸ்பூன்.." தேடி எடுத்து பையில் போட்டான்.

ஹாலில் பரபரப்பு குறையாமல் நின்றுக் கொண்டிருந்தாள் பதினேழு வயது ஸ்ரேயா. இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு.‌

"நான் பட்டினியா ஸ்கூல் போறேன்!" என்றவள் சொல்லி முடிக்கும் முன் ஓடி வந்து விட்டான் ரோகித்.

"பட்டினி கூடாது.." என்றவன் பையை நீட்டினான். "முழுசா சாப்பிடணும்.. இல்லன்னா அடி பிச்சிடுவேன்!" என்று பொய்யாய் மிரட்டியவன் அவளின் தலை காலியாக இருப்பது கண்டு "ஒரு நிமிசம்!" என்று உள்ளே ஓடினான். ஈர கர்ச்சீப்பில் சுற்றியிருந்த கனகாம்பர சரத்தை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். அவளின் தலையில் சூட்டி விட்டான்.

"வா போலாம்!" என்று நடந்தவன் அவள் ஷூவின் கயிறு கழண்டு இருப்பது கண்டுக் குனிந்தான். அவசரமாக கயிறை நன்றாக கட்டினான்.

கதவின் ஓரம் இருந்த ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். வாசலில் ஆட்டோ இருந்தது. வீட்டை பூட்டினான்.

ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். ஸ்ரேயா பின்னால் அமர்ந்தாள்.

ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான் ரோகித். அவனுக்கும் ஸ்ரேயாவுக்கும் இந்த வருமானம் போதுமானதாக இருந்தது. ஸ்ரேயாவோடு வாழும் இந்த சில வருடங்களில் நிம்மதியாக இருக்கிறான். ஷோபாவை நினைத்து அழ கூட நேரம் இல்லாத அளவிற்கு ஸ்ரேயாவும் இவனும் ஒருவர் மீது ஒருவர் அன்பைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இருவருக்கும் சிறு உலகம். அந்த உலகத்தில் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அன்பு இருந்தது.

வீட்டின் நடுவில் இருக்கும் ஷோபாவின் புகைப்படம் அவள் அந்த வீட்டிலேயே வாழ்வது போன்ற உணர்வை இருவருக்கும் தந்தது. ரோகித் பல நேரங்களில் ஸ்ரேயாவுக்கு தந்தையை விட தாயாகதான் இருந்தான்‌.

தான் யார் என்றும், தான் செய்த தவறு பற்றியும் தானும் ஷோபாவும் அனுபவித்த கொடுமைகளை பற்றியும், தங்களின் அறியா பருவ காதல் கூடாமல் போனதை பற்றியும் சில மாதங்கள் முன்புதான் ஸ்ரேயாவிடம் சொன்னான் ரோகித்.

ஸ்ரேயா அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள்.

"உங்களை பிடிச்சிருக்கு அப்பா.. உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கும் நீங்க மட்டும் போதும். நீங்க செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டிங்க. அதை இப்ப மறந்துடுங்க. எனக்காகவாவது மறந்துடுங்க!" என்று அழுதாள்.

"நீ இல்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்ல ஸ்ரேயா!" என்று அவனும் அவளை அணைத்தபடி அழுதான்.

அன்றிலிருந்து ஸ்ரேயாவும் அவனிடம் தந்தை சாயலை விட தாய் சாயலைதான் அதிகம் பார்த்தாள்.

பள்ளியின் முன்பு ஆட்டோவை நிறுத்தினான் ரோகித். ஸ்ரேயா கை கடிகாரத்தை பார்த்தபடியே இறங்கினாள்.

ரோகித் கீழே இறங்கினான். அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். எல்லாம் சரியாக இருப்பது போலிருந்தது.

"ஸ்கூல்ல பத்திரமா இருக்கணும்.. இந்த ஸ்ரேயா கனவு டாக்டர் கனவா மட்டும்தான் இருக்கணும்!" என்றான்.

ஸ்ரேயா எட்டி நின்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"பத்திரமா ஆட்டோ ஓட்டணும். இந்த அப்பா கனவு ஸ்ரேயாவை டாக்டராக்குவதா மட்டும்தான் இருக்கணும்!" என்றாள்.

பள்ளியை பார்த்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"பத்திரம்டா!" என்றுவிட்டு ஆட்டோவில் ஏறினான். ஸ்ரேயா கையை அசைத்து விட்டு பள்ளியின் கேட்டை தாண்டி நுழைந்தாள்.

"வாம்மா.. அப்பா பொண்ணு!" என்று கேலியாக கேட்டபடி அவளோடு இணைந்து நடந்தான் சிவா.

"நீ உன் அம்மா பையன்தானே?" இவளும் கேலியாக கேட்க, "விடு.. என்ன இருந்தாலும் நாம பெஸ்ட் பிரெண்ட்ஸ்.. நாம இப்படிதானே இருப்போம்!" என்றான்.

"அடுத்த வருசம் நீ எந்த காலேஜ்?" ஸ்ரேயா அவனிடம் கேட்ட நேரத்தில் அவர்களின் முன்னால் வந்து நின்றான் அவர்களின் வகுப்பு தோழன் ஒருவன்.

கடிதம் ஒன்றை ஸ்ரேயாவிடம் நீட்டினான்.

"லவ் லெட்டரா?" எனக் கேட்டபடி அதை பறித்தான் சிவா.

"அன்பே.. ஆருயிரே.. என் இதயமே.." கடிதத்தில் இருந்து பார்வையை உயர்த்தினான்.

"ரொம்ப மொக்கை.. உனக்கு பதிலா நானே ரிஜெக்ட் பண்ணிடட்டா ஸ்ரேயா?" எனக் கேட்டான் சிவா.

"சிவா நீ குறுக்க வராதே!" என்றான் முன்னால் நின்றிருந்தவன்.

ஸ்ரேயா நண்பனின் முன்னால் வந்து நின்றாள்.

"சாரி.. இந்த லெட்டர் எனக்கு வேணாம்.." என்றபடி சிவாவின் கையில் இருந்த கடிதத்தை பிடுங்கி இவனிடம் தந்தாள்.

"எனக்கு இந்த காதல் இப்போது தேவை இல்ல. நீ இனியும் தொந்தரவு செய்ய மாட்டேன்னு நம்புறேன். இல்லன்னா பிரின்சிபால்கிட்டயும், என் அப்பாக்கிட்டயும் சொல்லிடுவேன்!" என்றாள்.

"நீ என்னை விட்டுட்ட!" என்று சோகமாக சொல்லியபடி அவளின் தோளில் கை போட்டான் சிவா.

"இவளுக்கு பிடிக்கல.. நீ இனியும் தொந்தரவு பண்ணா என் அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்.. என் அப்பா டி.எஸ்.பி இனியனை உனக்கும் தெரியும் இல்ல?" எனக் கேட்டான் சிவா.

"பிடிக்கலன்னா விடுங்கப்பா. நான் கம்பல் பண்ணவா போறேன்?" எனக் கேட்டபடியே அவன் ஓடி விட்டான்.

"சின்ன பையன்!" என்ற சிவாவின் விலாவில் குத்தினாள் ஸ்ரேயா.

"நீயும் சின்ன பையன்தான் பையா!" என்றாள்.

"பையா சொல்லாத ஸ்ரேயா..!" சிணுங்கியபடி அவளின் காதை பற்ற இருந்தான். ஆனால் அதற்குள் ஸ்ரேயாவை அவனை விலகி வகுப்பறை நோக்கி ஓடினாள். "உன்னை பிடிச்சேன்னா காம்பஸால உனக்கு காது குத்தி விட போறேன்!" என்று பொய்யாய் மிரட்டியபடியே அவளை துரத்திக் கொண்டு ஓடினான் சிவா.

***

குழந்தைகள் இருவரும் வீட்டுப் பாடம் செய்து முடித்த பிறகு அவர்களை உறங்க வைத்துவிட்டு வந்து தனது அறையை திறந்தாள் மீரா. அவர்களுக்கு இரு குழந்தைகள். பையன் ஐந்தாம் வகுப்பு.‌ பெண் நான்காம் வகுப்பு.

மகிழன் கட்டிலில் அமர்ந்திருந்தான். இவளை கண்டதும் கையை விரித்து அழைத்தான். மீரா அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"உன் வொர்க் முடிஞ்சதா?" எனக் கேட்டாள்.

"ம்!" என்றவன் அவளை தன் மேல் சாய்த்தபடியே கட்டிலில் விழுந்தான்.

மீரா அவனின் நெஞ்சில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டாள்.

மௌனங்கள் கூட இப்போது பிடித்திருந்தது அவளுக்கு.

அவனின் இதழில் விரல் பதித்தாள். மெதுவாக வருடினாள்.

நுனி கரும்பில் இருந்து அடி கரும்பு வரை செல்லும் இனிப்பின் அதிகரிப்பை போலவே தங்களின் காதலும் அதிகரித்துக் கொண்டிருப்பதை இருவரும் புரிந்திருந்தார்கள்.

"நீ என் வரம் மகி!" என்றாள் மீரா இயல்பாக.

"நீயும் எனக்கு அப்படிதான்!" என்றவன் அவளின் கூந்தலில் விரல் நுழைத்து அளந்தான்.

மீரா யோசனையோடு நிமிர்ந்தாள்.

"உன்னை எனக்கு அப்போதிருந்து இப்ப வரை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு எப்ப இருந்து என்னை பிடிச்சது? ஐ மீன் எப்ப இருந்து‌ என் மேல உனக்கு லவ்?" எனக் கேட்டாள் சந்தேகமாக.

மகிழன் யோசித்தான். "எப்ப இருந்து லவ்ன்னு தெரியல. ஆனா பார்த்த பர்ஸ்ட் டைம்ல இருந்தே பிடிச்சிருந்தது!" என்றான்.

"பொய் சொல்ற!" சிணுங்கலாக நெஞ்சில் முகம் புதைத்தவளை அணைத்துக் கொண்டவன் "உண்மைதான்.. இங்கே ஸ்கூல்ல நான் நிறைய பிரச்சனை பண்ணியிருக்கேன் இல்லையா.. அதனால பசங்களே என்னோடு சேர மாட்டாங்க. பொண்ணுங்களை பத்தி சொல்லவே தேவையில்ல. எல்லோரும் என்னைக் கண்டாலே பயப்படுவாங்க. ஒரு மாதிரி அவங்க என்னை ஒதுக்கி வச்ச மாதிரி இருந்தது. ஆனா அங்கே நீ என்னைப் பார்த்த பர்ஸ்ட் செகண்ட்ல என் மேல பதிச்ச கண்ணை இன்னைக்கு வரைக்கும் எடுக்கல. பேசணும் பழகணும்ன்னு கூட அப்ப தோணல. நீ என்னைப் பார்த்தாலே போதும்ன்னு தோணுச்சி. நீ கவனிக்கறன்னு தெரிஞ்சதாலேயே என் பிகேவியர் தலைகீழா மாறிப் போச்சி. அம்மா முன்னாடி எப்படி நல்ல புள்ளையா நடந்துக்கணும்ன்னு தோணுச்சோ அது மாதிரியே உன் முன்னாடி நடந்துக்க தோணுச்சி.!" என்றவனின் காதை திருகியவள் "அப்புறம் ஏன்டா இங்கே உன் அம்மா பக்கத்துல மட்டும் பசங்களை அடிச்ச?" எனக் கேட்டாள்.

அவளின் கையை பற்றி முத்தமிட்டவன் "அவங்க இல்லாத போதுதான் அடிச்சேன்!" என்றான் சிரிப்போடு.

மீரா முறைத்தாள்.

"ப்ராமிஸ் பேபி. அங்கேயும் கூட நீ பக்கத்துல இல்லாதபோது பசங்களை மிரட்டி இருக்கேன். பெரிய பிரச்சனை வராத மாதிரி அடிச்சும் கூட இருக்கேன். ஆனா அந்த வினய் நாயை லேசா இரண்டு தட்டி தட்டியது.." பற்களை கடித்தவனின் கழுத்தில் முகம் புதைத்தாள்.

"விடு.. யார்கிட்ட மைனஸ் பாயிண்ட் இல்லாம இருக்கு? நீ எப்படி இருந்தாலும் எனக்கு இப்படியேதான் பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இதெல்லாம் விதி பேயே!" என்றாள் அவனின் கழுத்தில் பற்களை பதித்த வண்ணம்.

"நோ.. ஆபிஸ்ல அகி பார்த்தான்னா என்னைக் கிண்டல் பண்ணியே சாவடிப்பான்.!"

அவன் சொல்லி அவ கேட்டு.. அட போங்கப்பா.. நான் என்ட் கார்ட் போடுறேன்.

முற்றும்.

இதுவரை இந்த கதைக்கு ஆதரவு‌ தந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள். நீங்க தந்த ஒவ்வொரு ஸ்டாருக்கும், ஒவ்வொரு கமெண்டுக்கும், ஊக்குவிப்பு ஸ்டிக்கருக்கும்(பிரதிலிபி) எனது நன்றிகள்.

சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நாளையிலிருந்து பாலாற்றில் விழுந்த பௌர்ணமி கதை அப்டேட் ஆகும்.

அந்த கதைக்கு வரும் முன்னாடி இந்த கதை எப்படின்னு நீங்க ஒரு வார்த்தை சொன்னா நானும் ஹேப்பி ஆவேன். கதை எழுதுறது நீங்க படிச்சி கருத்துச் சொல்லதான். நீங்க சொன்னாதான் கதை எப்படி‌ இருக்குன்னு எனக்கு தெரியும். எங்காவது சொதப்பல் இருந்தா சொல்லுங்க. ரொம்ப சொதப்பல் இருந்தா இன்பாக்ஸ்ல வந்துச் சொல்லுங்க.

கதை ரொம்ப பிடிச்சி உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க பிரெண்ட்ஸோடு ஷேர் பண்ணுங்க.

எனது கதையின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை உடனுக்குடன் பெற பாலோவ் பண்ணுங்க..

நன்றிகளுடன் உங்கள் CRAZY WRITER..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN