ஒரு ஆசை பழி வாங்க வந்தது.
பாவம் ஒன்று பகை தீர்க்க வந்தது. செய்யும் தவறுக்கு தண்டனையை தாராளமாக அனுபவிக்கலாம். ஆனால் யாரோ செய்த தவறுக்கு பூர்ணிமா அனுபவிக்க முடியுமா?
பூர்ணிமாவுக்கும் பாலாவுக்கும் திருமணம் நடந்தது. பாலாவை நேசித்தபடியே வெறுத்தாள் பூர்ணிமா.
இப்படி ஒரு மாமன் இருப்பதும் இத்தனை நாளாக அவளுக்கு தெரியாது. இப்படி ஒரு மாமன் மகன் இருப்பதும் அவளுக்கு தெரியாது. தாய் மட்டுமே அவளுக்கு. சொந்தங்கள் இல்லாத அனாதை தாங்கள் என்று நினைத்திருந்தாள் அவள். திடீரென்று ஒருநாள் மாமன் மகனென்று வந்தான் பாலா. அவளை மணம் முடித்தான்.
மாமனின் வீட்டை பிடித்திருந்தது. ஆனால் மாமன் மகனின் மனதை பிடிக்கவில்லையே அவளுக்கு! பாலா பாசம் காட்டினான். ஆனால் அவளால் அந்த பாசத்தை சந்தேகம் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே!
அவளின் தாயோ இவளின் திருமணத்திற்கு பிறகு இந்த வீட்டு பக்கம் வரவில்லை. அந்த வீட்டில் இருந்தவர்களும் நாயகியின் தாயார் மீது அன்பு காட்ட முயலவில்லை.
நாயகியின் புகுந்த வீட்டில் ஓர் வேலைக்காரன். ஐம்பத்து ஐந்து வயதை தாண்டியவன். அவனை பார்க்கும் போதெல்லாம் நம் நாயகிக்குள் ஏதோ ஓர் உணர்வு. அந்த வேலைக்காரனோடு நாயகி பேசினால் அந்த வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் நாயகியின் மீது எரிச்சல்..
அவள் தன் காலை சுற்றும் வலையை கண்டறிவது எப்போது? தன் கழுத்தை நெருக்க இருக்கும் பழியிடம் இருந்து தப்பிப்பது எப்படி?
என்னதான் பிரச்சனை அங்கே.? ஒரு காதல் இன்னொரு காதலை அழிக்குமா.? இங்கே அழித்ததே.. அழிக்க முயன்றுக் கொண்டும் இருந்ததே..
ஒருவனின் ஆசை. மூன்று பெண்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கியது.
விட்டது முழுதாய் விலகவில்லை. யார் செய்த தவறு.? ஏன் நாயகிக்கு இந்த வலி.? பாவங்கள் அனைத்தும் இவள் தலையில் இறங்க வேண்டுமா.? இதை அவளின் கணவன் சரி செய்வானா.? பிறந்த வீடு சரி செய்யுமா.? இல்லை.. அவளின் தாய்தான் சரி செய்வாளா.? புரிதல் எல்லோருக்கும் உண்டு. ஆனால் பழி பாவங்கள் பலன் தருகையில் அதை ஏற்கதான் மனம் வருவதில்லை.
நன்றிகளுடன் உங்கள் CRAZY WRITER