பௌர்ணமி 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
போனில் இருந்து ஒலித்த பிரகீதனின் குரலை கேட்ட பூர்ணிமா போனை கைகளில் வாங்க முயன்றாள். தன் கையை பின்னால் இழுத்தான் பாலா.

"யார் இது? அசிங்கமா மெஸேஜ் அனுப்பிட்டு இருக்கான். நீ அவன் நம்பரை சேவ் பண்ணி வச்சிட்டு இருக்க.." என்று கத்தினான்.

பூர்ணிமா எரிச்சலோடு போனை பிடுங்கினாள்.

"கிளாஸ்மேட். அவன் நம்பர் சேவ் கூட பண்ணாம இருப்பேனா? அந்த குரங்கு என்ன அனுப்பியிருக்கான்னு இப்படி கத்திட்டு இருக்க நீ?" எனக் கேட்டவள் மீண்டும் மெஸேஜை ஓட விட்டாள்.

பிரகீதன் பேசியிருந்ததை கேட்டு விட்டு போனை அணைத்தாள்.

"பைத்தியம்.." என்று திட்டினாள்.

"அவன் உன்னை லவ் பண்ணானா?" பாலா எதிரில் நிற்பது அதன் பிறகுதான் அவளின் கவனத்திற்கு வந்தது. நிமிர்ந்தவள் "எனக்கு இப்பதான் தெரியும்.. முன்னாடியே சொல்லி இருந்தா அட்லீஸ்ட் கூட சுத்த ஒரு துணையாவாவது அவனை யூஸ் பண்ணி இருப்பேன்.." என்று கவலையோடு சொன்னாள். அவளின் முகத்தில் உண்மையிலேயே வருத்தம் இருந்தது. எதையோ இழந்த ஒரு சோகம்.

பாலா பற்களை கடித்தான். "இப்படி நீ நினைக்கிறது தப்பு பூர்ணி. லவ் ப்யூரா இருக்கணும். அதை தப்பா யூஸ் பண்ண கூடாது.." என்று பாடம் எடுத்தான்.

தூவாலையால் முடிந்திருந்த அவளின் கூந்தலில் இருந்த தண்ணீர் துளிகள் சில அவளின் கழுத்தில் வழிந்துக் கொண்டிருந்தது. அவனின் கரம் அனிச்சையாக அவளின் கழுத்தில் பதிந்தது.

அவனின் கையை தூர தள்ளினாள். "கொஞ்சம் விடு.. நான் அந்த எருமைக்கு ஒரு அர்ச்சனையை பண்ணிட்டு வரேன்.." என்றவள் பிரகீதனுக்கு அழைத்தாள்.

"ஹலோ.." எதிர் முனையில் தயக்கமாக ஒலித்தது அவனின் குரல்.

"டேய் எருமை.. என்ன இழவு மெஸேஜ் இது?" கடுப்போடு கேட்டாள்.

"பூரணி.." எதிர் முனையில் குலுங்கி அழுதான் அவன்.

"ஐ ரியலி மிஸ் யூ.. நீ இப்படி கல்யாணம் பண்ணி போவன்னு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன்கிட்ட என் லவ்வை சொல்லி இருப்பேன்.." என்றான் அழுகை குரலில்.

"ச்சீ அழாத.. நம்ம ஜூனியர் ரேவதி உன்னை ஒரு வருசமா ரூட் விட்டுட்டு இருக்கா. அவளை பத்தி நினை.. அவ உனக்கு பொருத்தமா இருப்பா. நீ என்னை நிஜமாவே லவ் பண்ணன்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா அப்பவே சொல்லி இருப்பேன்.." என்றாள் கட்டிலில் அமர்ந்தபடி.

பாலாவும் அவளின் அருகிலேயே அமர்ந்தான்.

"ஆனா எப்படி? மாடி அறையின் வேஸ்ட் ரூம்ல.."

"ரேவதியை அந்த ரூமுக்கு கூட்டி போய் 'உன் மேக்கப் கேவலம்'ன்னு சொல்லு.. அவ என்னை விட அதிக ஸ்ட்ராங்கா அறைவா.. படிக்கட்டோட கீழ் ரூம்க்கு அவளையும் கூட்டிப் போய் பேய் பிசாசுன்னு என்னை பயமுறுத்திய மாதிரியே பயமுறுத்து. நான் லெஃப்ட் லெக்ல உதைச்ச மாதிரி அவ ரைட் லெக்ல உதைப்பா.. அப்புறம் நீ என்னை முழுசா மறந்துடலாம்.." என்று எடுத்துச் சொன்னாள்.

தப்பி தவறி எந்த கேனத்தனமான கேள்வியையும் கேட்டு விடாமல் விட்டதற்காக மகிழ்ந்தான் பாலா.

அவளின் இடையில் கரம் பதித்தவன் அவளின் கழுத்தில் முத்தம் பதித்தான்.

பூர்ணிமா அவனை முறைத்தாள்.

"நிஜமா அவ என்னை லவ் பண்றாளா? உன்னை மாதிரியே அவளும் இருப்பாளா?" என்றுக் கேட்டான்‌ பிரகீதன்.

"ஒரு அறை, இரண்டு உதைக்கு நீ இம்ப்ரஸ் ஆகியிருப்பன்னு தெரிஞ்சிருந்தா நிச்சயம் நான் உன்னை அடிச்சிருக்கவே மாட்டேன் பிரகீ.. யூ ஆர் டூ இன்னசென்ட்.. உன்னை மிஸ் பண்ணிட்டேன்னு நானும் பீல் பண்றேன்.. ஆனா பாரு எனக்கு மேரேஜ் ஆகிடுச்சி. நீ உன் வாழ்க்கையை பாரு.." என்றாள்.

அவன் தயக்கத்தோடு அழைப்பை துண்டித்தான்.

பாலாவின் புறம் பார்த்தாள் பூர்ணிமா. "நீ சரியான எருமை மாடு. உன்னாலதான் நான் இவனை மிஸ் பண்ணிட்டேன்.!" சிணுங்கலாக சொன்னாள்.

பாலா சிரித்தபடியே அவளின் கன்னத்தில் தன் கன்னம் தேய்த்தான்.

"அவன் உனக்கு செட் ஆகி இருக்க மாட்டான்.." என்றான்.

பூர்ணிமா உதடு சுழித்தாள். அவளின் துப்பட்டாவை தன் கைகளில் எடுத்தான் பாலா.

"எனக்கு பசிக்குது.. நான் சாப்பிட போறேன்.. இந்த துப்பாட்டாவை நீயே வச்சிக்க.." என்றவள் தன் மீதிருந்த மீதி துப்பட்டாவையும் அவன் மீதே வீசி விட்டு அங்கிருந்து நடந்தாள். ஓரெட்டு வைத்தவள் அவன் வேகமாக தன் புறம் இழுக்கவும் அவன் மீதே வந்து விழுந்தாள்.

"லூசு.." அவனின் தோளில் அடித்தாள். அவளின் கன்னங்கள் சிவந்திருப்பதை கண்டவன் "உனக்கு நிஜமா என்னை பிடிக்கல.. இதை நான் நம்பணும்.?" எனக் கேட்டான்.

பூர்ணிமா பார்வையை தாழ்த்தினாள். அவளின் இமைகள் ஓவியம் போலவே இருந்தது. அவள் தன் கண்களை மூடி திறக்கையில் முத்து சிப்பியை போலிருந்ததை உணர்ந்தான் பாலா. ஆனால் இதை சொன்னால் அவளுக்கு பிடிக்காது என்று நினைத்தான்.

"நாளைக்கு நீ என் ரூமுக்கு ஷிஃப்ட் ஆகிக்கிறியா?" கிறங்கிய குரலில் அவளின் தலையில் இருந்த துண்டை கழட்டி அங்கிருந்த நாற்காலி ஒன்றின் மீது வீசியபடியே கேட்டான்.

பூர்ணிமாவுக்கு முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிவந்தது. அவளின் ஈர கூந்தலில் அலை பாய்ந்தது அவனின் விரல்கள். இடது கையால் அவளின் முகத்தை தன் புறம் திருப்பினான்.

"உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு பூர்ணி.." என்றவன் அவளின் கன்னத்தில் மெதுவாய் இதழ் பதித்தான். மெல்ல நகர்ந்தான். அவளின் உதடுகளை அவன் தீண்ட இருந்த நேரத்தில் குக்கரின் விசில் சத்தம் கேட்டது.

அவனை தன்னிடமிருந்த மெதுவாய் விலக்கி தள்ளினாள் பூர்ணிமா.

"வேணாம் பாலா.. என் அம்மா தனியா சமைக்கிறாங்க.. நாம நாளைக்கு கிஸ் பண்ணிக்கலாம்.." என்றவள் எழுந்து நின்றாள்.

அவனின் தோல்வி முகம் சட்டென்று மாறி போனது.

ஈர கூந்தலை அலை பாய விட்டபடி கதவை திறந்து நடந்தவளை கண்டபடி எழுந்து நின்றான்.

மேஜை மீது அவர்களின் பைகள் தயாராக இருந்தன. நாளைக்கு வீடு திரும்ப போகிறோம் என்று சிறு நிம்மதி வந்தது. விட்டு வந்த வேலைகள் ஏகப்பட்டதாக இருந்தன. ஓய்வின் கடைசி நிமிட சுகம் சிறு பயத்தையும் சேர்த்து தந்தது.

பூர்ணிமா தன் அம்மாவின் தோளில் முகம் பதித்தாள். முன்னால் இருந்த குழம்பு வாணாலியை பார்த்தாள். "பாலா பாஸ்ம்மா.." என்றாள்.

முல்லை குழப்பத்தோடு அவளை திரும்பிப் பார்த்தாள்.

"என் பிரெண்ட் ஒருத்தன் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பி இருந்தான். என்னை லவ் பண்ற மாதிரி. ஆனா அதை பாலா தப்பா எடுத்துக்கல.!" என்றாள்.

முல்லை அதிர்ச்சியோடு மகளை வெறித்தாள். "பைத்தியமா நீ? எவன் அவன் உனக்கு மெஸேஜ் அனுப்பியது? அவன் அட்ரஸை சொல்லு. நான் போய் துடைப்பத்தால நாலு சாத்து சாத்திட்டு வரேன்.." என்றாள்.

பூர்ணிமா சிரித்தாள். அம்மாவின் கன்னம் கிள்ளினாள்.

"லவ் பண்ணா தப்பு கிடையாது. அதை சொன்னாலும் தப்பு கிடையாது.." என்றாள்.

"ஆனா கல்யாணமான என் பொண்ணுக்கிட்ட அப்படி சொல்றது தப்புதான்.." முல்லையும் எதிர்வாத பதில் சொன்னாள்.

"அவன் குட் பாய்ம்மா.."

"அன்னைக்கே சொன்னேன், இந்த மாதிரி நீ நடந்துக்க கூடாதுன்னு. ஏன் பேட் கேர்ள் மாதிரி இருக்க.. உனக்கு ஹஸ்பண்ட் இருக்கான்.. நீ கொஞ்சமாவது பொறுப்பா இரு.." முல்லை கோபத்தோடு அறிவுரை சொன்னாள்.

பூர்ணிமா அம்மாவை அணைத்துக் கொண்டாள். அவளின் கரங்கள் முல்லையின் வயிற்றை கட்டிக் கொண்டன.

"இப்ப எதுக்கு பல்லி மாதிரி என் முதுகுல நீ ஒட்டிட்டு இருக்க?" வாணாலியில் உள்ள காய்களை வதக்கி விட்டபடியே கேட்டாள் முல்லை.

"நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் அம்மா. நீங்க இங்கே தனியா இருக்கிங்க. என்னை மிஸ் பண்ணுவிங்க. ப்ளீஸ் என்னோடு வாங்க. அந்த வீட்டுல நிறைய ரூம்ஸ் இருக்கு. உங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம நான் பார்த்துக்கறேன்.."

முல்லை முடியாதென தலையசைத்தாள்.

"ப்ளீஸ்ம்மா.. எனக்கு அங்கே தூக்கம் கூட வர மாட்டேங்குது.. நீங்க இங்கே தனியே என்ன பண்ணுவிங்கன்னு யோசிச்சிட்டே இருக்கேன். எனக்கு நீங்க வேணும்.."

முல்லை இடது கரத்தால் மகளின் தலையை வருடி விட்டாள்.

"செண்பகம் அண்ணி உன்னை நல்லா பார்த்துப்பாங்க.."

அம்மாவின் இந்த பதிலால் பூர்ணிமாவுக்கு வருத்தம் மேலோங்கியது.

"பட் ஐ வாண்ட் யூ மம்மி.." முல்லையிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பூர்ணிமாவை ஹாலில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் பாலா. அவனுக்கு அத்தையின் மீதுதான் கோபம் வந்தது. அவர்கள் தன் மகள் மீது பாசமாக இல்லை என்று எண்ணினான்.

"நைட்ல யாராவது திருடன் வந்தா நீங்க என்ன செய்விங்க? திடீர்ன்னு பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா.. தலைவலி அதிகமாகி காப்பி கூட போட முடியாம போயிட்டா.. நினைச்சி நினைச்சி பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும்மா. இப்படியே போனா நான் லூசு மாதிரி முடிவெடுப்பேன். ஒன்னு நீங்க அங்கே வாங்க.. இல்லன்னா பாலா கூட சண்டை போட்டுட்டு நான் இங்கே வந்துடுறேன்.." என்றாள் பூர்ணிமா.

முல்லை கரண்டியை தூக்கி காட்டினாள். "அடி பிச்சிடுவேன். எனக்காக நீ ஒன்னும் சண்டை போட்டுக்க வேணாம். இது என் லைஃப். என்னால பார்த்துக்க முடியும். என்கிட்ட போன் இருக்கு.. ஏதாவது தேவைன்னா முதல் போன் உனக்குத்தான் வரும். கவலைப்படாதே.."

பூர்ணிமாவுக்கு சமாதானம் ஆகவில்லை. ஆனாலும் வேறு என்ன செய்வாள் அவள் மட்டும்?

மறுநாள் ஊருக்கு கிளம்புகையில் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள் பூர்ணிமா. அவளின் அழுகை கண்டு பாலாவுக்கு குற்ற உணர்வு உண்டானது. திருமணம் என்று பெயரில், காதல் என்ற பெயரில் அவளை பிரிக்கின்றோமோ என்று எண்ணினான்.

வீட்டுக்கு செல்கையில் கலங்கிய விழிகளோடுதான் வந்தாள் பூர்ணிமா. "எல்லாம் உன்னால வந்தது. நீ திடீர்ன்னு வானத்துல இருந்து குதிச்சவனை போல வந்துட்ட. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நான் என் அம்மாவை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா? ஐ ஆல்ரெடி மிஸ் ஹேர்.." என்றாள் முகத்தை மூடியபடி.

பாலா உதட்டை கடித்தான். அவளை தன் அருகே இழுத்து அணைத்துக் கொண்டான். அவனின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள்.

"இவ்வளவு அழணுமா?"

"ஆமா.." அழுதபடி சொன்னவள் சில நிமிடங்கள் கடந்த பிறகு அப்படியே உறங்கி விட்டாள். பாலா பெருமூச்சோடு அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

வீட்டை நெருங்குகையில் பூர்ணிமாவே கண் விழித்து விட்டாள்.

வாசல் காலியாக இருந்தது. மனம் பாரமாக இருந்தது பூர்ணிமாவுக்கு.

"நீ ஒரு சேடிஸ்ட்.." என்று திட்டியபடி வீட்டுக்குள் சென்றாள்.

பூமாறன் அவளை கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

"உன்னை மிஸ் பண்ணேன் பூரணி.." என்றான்.

"மீ டூ மாறா மாமா.." என்றவள் அவனிடமிருந்து விலகி மாமியாரின் அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

"கண் சிவந்திருக்கு.. வர வழியிலயும் சண்டையா?" பூமாறன் அண்ணனை பார்த்தபடி கேட்டான்.

பூர்ணிமா கணவனை முறைத்தாள். பின்னர் தனது அறைக்கு சென்று விட்டாள். அவளின் கோபம் சிறுபிள்ளை தனமாக தோன்றியது பாலாவுக்கு.

பூர்ணிமா அம்மாவுக்கு போனில் அழைத்தபடியே கட்டிலில் விழுந்தாள். முல்லை போனை எடுக்கவில்லை. ஏதோ வேலையாக இருக்கிறாள் என்பது புரிந்தது. போனை கட்டிலின் ஓரமாக வீசியவள் தலையணை ஒன்றை அணைத்தபடி ஒருக்களித்து படுத்தாள்.

ஐந்து நிமிடம் கடந்திருந்து. அவளின் முதுகு பக்கத்தில் இருந்த கட்டிலின் பகுதியில் அரவம் கேட்டது. திரும்ப முயலவில்லை அவள். ஆனால் அவளை மறு பக்கம் திருப்பியது ஒரு கரம். பாலா அமர்ந்திருந்தான்.

"பூர்ணி.." கெஞ்சலோ கொஞ்சலோ என்னவோ இருந்தது அவனின் குரலில்.

"இன்னும் சில மாசம்.. அப்புறம் நீ அங்கேயே போய் படிக்க போற‌.. உண்மையில் நான்தான் பீல் பண்ணணும்.!" என்றான்.

பூர்ணிமாவின் முகம் வாடியது. அவனின் மடியில் தலை சாய்த்தாள்.

"ஆனாலும் மிஸ் பண்றேன்.."

"சரி.. நான் அவங்களை இங்கே கூட்டி‌ வரேன்." என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"நிஜம்.. நீ என்னை நம்பு.." என்றவன் அவளின் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தான்‌. சட்டென்று முகம் சிவந்தாள் பூர்ணிமா.

"கதவு.." சம்பந்தம் இல்லாத கேள்வி போலதான் தோன்றியது அவளுக்கு.

"லாக்டு.." என்றவனின் விழிகளை நேராய் பார்க்கவில்லை அவள். அந்த விழிகளை பார்த்தால் தனது இதயம் அவனோடு பூட்டிக் கொள்ளும் என்று எண்ணினாள்.

இரவை வெறித்தபடி தனது அறையின் பால்கனியில் நின்றிருந்தான் பாலா. தானாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவளை விட்டு வேறு எதையும் யோசிக்கவே முடியவில்லை. அவளை நினைக்கையில் அவனுக்கு உடம்பு சிவப்பது போலிருந்தது. அவளின் இதழ்கள் இன்னமும் தன் உதடுகளோடு ஒட்டிக் கொண்டிருப்பது போலிருந்தது. அவளை விட்டு விலகி வரவே முடியவில்லை அவனால். அவளின் மேனியை நினைக்கையில் மீண்டும் உடம்பு சிலிர்த்தது. இயல்பாய் அமைந்தது அனைத்தும். மனதால் மட்டுமல்லாமல் உடலாலும் இருவரும் நெருங்கி விட்டது அவனுக்குள் மேலும் மகிழ்ச்சியை கொண்டு வந்து தந்தது‌. இரவு உணவுக்கான நேரம் வந்தது என்பதாலேயே அவளை தன் சிறையில் இருந்து விடுவித்திருந்தான் பாலா.

"அண்ணா.." மாறனின் அழைப்பில் திரும்பினான்.

"அவங்க வந்திருந்தாங்க அண்ணா.." என்றவனை கேள்வியாக பார்த்தான்.

"பூரணியோட மொத்த பேமிலியும் வந்திருந்தாங்க. அவளோடு பேசணும்ன்னு சொன்னாங்க. அவளையும் உன்னையும் விருந்துக்கு கூட்டி போகணும்ன்னு சொன்னாங்க."

நக்கல் சிரிப்பு சிரித்தான் பாலா.

"அவங்களுக்குள்ள என்ன எண்ணம் ஓடுதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியும்.!"

"ம்.. அவங்க வேற ஏதாவது ப்ளான் பண்ணி இருப்பாங்க. நீங்க இங்கே இல்லன்னு சொன்னதும் அவங்க திரும்பி போயிட்டாங்க. ஆனா மறுபடியும் வருவாங்க அண்ணா.."

"வரட்டும்.. பூர்ணிக்கிட்ட கொஞ்சம் கொஞ்சம் உண்மையை சொல்ல டிரை பண்றேன் நானும்.." என்று பாலா சொன்னதும் மாறன் அங்கிருந்து கிளம்பினான்.

பாலா இருளில் கலந்து வந்த இயற்கை வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான். கோபம் அனைத்தும் குறைவது போலிருந்தது.

அறைக்குள் திரும்பலாம் என்று அவன் நினைத்த நேரத்தில் அவனின் முதுகோடு அணைத்தாள் பூர்ணிமா.

"ஆர் யூ ஆல் ரைட்?" கவலையோடு கேட்டான்.

"ம்.. மச் பெட்டர்.." என்று சிரித்தவளின் கையை பற்றியவன் அவளை தனக்கு முன்னால் வரவழைத்து நிறுத்தினான்.

"பூர்ணி.." அழைத்தபடியே அவளின் கையை பற்றினான்.

"ம்.." என்றவள் அவனின் முகத்தை ஆராய்ந்தாள். கவலையாக இருந்தான். கேட்டால் சொல்லவே மாட்டான்.

அவளின் கை விரல்களுக்கு சொடுக்கு எடுத்து விட்டான். "டூ யூ டிரஸ்ட் மீ?"

'சத்தியமா நம்பல..' என்று சத்தமாக சொல்ல நினைத்தாள். ஆனால் மௌனமாக ஆமென்று தலையசைத்தாள்.

"உன் அப்பா வீட்டுல இருந்து யாராவது வந்து உன்னை அவங்களோடு கூட்டி போக டிரை பண்ணா என்ன செய்வ?" தயக்கமாக கேட்டான்.

"என் அம்மாக்கிட்ட கேட்பேன்.." சாதாரணமாக சொல்லி விட்டாள்.

"உன் அப்பாவை பத்தி உனக்கு என்ன தெரியும்?"

உரையாடல் முக்கிய கட்டத்தில் நகர்கிறது என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு மனது‌ உடையும் விசயங்களை கேட்பதில்தான் விருப்பம் இல்லாமல் இருந்தது.

அவளின் காதோரத்து தலை முடிகளை ஓரம் ஒதுக்கி விட்டான். அவனின் தீண்டல் மீண்டும் அவளுக்கு வேறு சில உணர்வுகளை கொண்டு வந்து தந்தன.

"என் அப்பா இறந்துட்டாருன்னு மட்டும் தெரியும். என் அம்மாவுக்கு அவரை சுத்தமா பிடிக்காதுன்னு தெரியும்.!" பூர்ணிமாவின் பதிலுக்கு மொத்தமாக தலையசைத்தான்.

"ஒருவேளை அவர் உயிரோடு இருந்தா.‌? உன் அம்மாவுக்கு அவர் மேல ரொம்ப வெறுப்பு இருந்து அதனால அவங்களை விட்டு போயிருந்தா.." சொல்லும்போது அவனுக்கே இதயம் சுட்டது. 'அவர் மேல வெறுப்பு இருந்ததால முல்லை அத்தை விட்டு போனாங்களா.? இல்ல மலர் அத்தை சாவினால் குற்ற உணர்ச்சி தாங்காம ஓடி போனாங்களா?' குழம்பியது அவனுக்கு.

பூர்ணிமா திகிலோடு அவனின் முகம் பார்த்தாள். அவன் தன்னை சோதிக்கிறான் என்பது புரிந்தது‌. ஆனால் என்ன காரணத்துக்காக சோதிக்கிறான் என்று தெரியவில்லை. உண்மையிலேயே தந்தை உயிரோடு இருக்கிறாரா என்று யோசித்தாள். தன்னை சுற்றி நடக்கும் கண்ணாமூச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள் அவள்.

"அவர் இருந்தாலும் இல்லன்னாலும் எனக்கு ஒன்னுதான் பாலா. என் அம்மா என்ன சொல்றாங்களோ அதை செய்ய வேண்டியதுதான்.." உடைந்து விடாத புன்னைகையோடு சொன்னாள்.

பாலாவின் முகத்தில் கவலை மிகுந்தது.

அவளை அமைதியாக அணைத்துக் கொண்டான். பூர்ணிமா தனக்குள் சிரித்தாள். இன்னும் எத்தனை நாளுக்கு நீளும் இந்த விளையாட்டு என்று யோசித்தாள்.

"உன் அம்மா கெட்டவங்களா இருந்தா?"

அவன் முழுதாய் கேட்டானோ இல்லையோ அவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினாள்.

"இன்னொரு வார்த்தை சொல்லாதே.. கொன்னுடுவேன் உன்னை.." மிரட்டி விட்டு அறைக்குள் சென்றாள்.

அவள் அந்த அறையை விட்டு வெளியே செல்லும் முன் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டவன் "நீ இனி இந்த ரூம்லயே தங்க போறதா சொல்லி இருந்த.." என்றான்.

பூர்ணிமா வியப்போடு அவனை பார்த்தாள். இவனால் மட்டும்தான் இப்படியெல்லாம் நடந்துக் கொள்ள முடியும் என்று நினைத்தாள்.

கைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. முல்லை அரை தூக்கத்தோடு போனை எடுத்தாள்.

"ஹலோ.." என்றாள் கண்களை மூடியபடியே.

"பூர்ணிக்கு பீவர். நேத்து காலையிலிருந்து அப்படியே இருக்கு ஜுரம். டாக்டர்ஸ் வந்து ஊசி போட்டும் சரியாகல. அம்மா அம்மான்னு அணத்திட்டு இருக்கா.." பாலாவின் குரல் கேட்டு துள்ளி எழுந்து அமர்ந்தவள் கடிகாரத்தை பார்த்தாள். மணி அதிகாலை நான்கு. அவசரமாக எழுந்து நின்றாள்.

"டாக்டர் என்ன சொன்னாங்க பாலா?" பதட்டமாக கேட்டாள். கால்கள் இரண்டும் நடுங்கியது அவளுக்கு. தனது ஒற்றை பெண். உயிரையே அவள் மீதுதான் வைத்திருந்தாள்.

"டாக்டர் நாலஞ்சி ஊசி போட்டாங்க. ஆனா எதுவும் முன்னேற்றம் இல்ல.."

"நான் உடனே வரேன். அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்க.. நீ வேணாம். அண்ணியை பார்த்துக்க சொல்லு ப்ளீஸ்.." என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு அவசரமாக அலமாரியை திறந்தாள். பணத்தையும் மாற்று உடையையும் எடுத்தாள்.

மணி பகல் பதினொன்றை தாண்டி விட்டது. தென்னந்தோப்பின் வழியே வேர்த்து விறுவிறுத்து வந்து சேர்ந்தாள் முல்லை. வீட்டின் கேட்டருகே கட்டிப்போடப்பட்டு இருந்த நாய் அவளை பார்த்து குரைத்தது. கண்டுக் கொள்ளாமல் வீட்டை நோக்கி நடந்தாள்.

பழைய அவமானங்கள் சென்ற இடம் தெரியவில்லை. இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் எதிரி என்பதையும் மறந்து விட்டாள்.

"பூரணி.." பாதியாய் திறந்திருந்த கதவை முழுதாய் திறந்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

ஐஸ்கீரிமை சுவைத்தபடி ஹாலின் இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த பூர்ணிமா அம்மாவின் குரலில் திரும்பினாள். ஆச்சரியப்பட்டாள்.

"அம்மா.." எழுந்து நின்றாள்.

பூர்ணிமா முல்லையை நோக்கி ஓடி வந்தாள். முல்லை அவளை தாண்டிக் கொண்டு நடந்தாள். படிக்கட்டுகளில் இறங்கி வந்துக் கொண்டிருந்த பாலா அப்போதுதான் சரியாய் கீழே வந்து நின்றான். அதே நேரத்தில் அவனின் கன்னத்தில் ஒரு அறையை விட்டாள் முல்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN