குரங்கு கூட்டம் 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்றைக்கான வெங்காயம் வெட்டும் பணி முடிந்து போனது. அர்விந்த் எழுந்து நின்று இடுப்பை பிடித்து விட்டுக் கொண்டான். கைகள் மரத்துப் போனது போல இருந்தது. வெங்காயத்தின் வாசம் இன்று பிடித்துப் போனது.

"சாப்பிட்டியாடா வெங்காய பையா?" கேள்விக் கேட்டவனை பார்த்து "ம்.!" என்றான்.

"வா.. வந்து தூங்கு.." என்ற அந்த நடுத்தர வயது மனிதன் தனது படுக்கையில் அர்விந்த்க்கும் கொஞ்சம் இடம் தந்து ஒதுங்கிப் படுத்தான்.

அர்விந்த் முகத்தை சுத்தம் செய்துக் கொண்டு வந்து படுத்தான்.

'என்ன நண்பன்டா என் நண்பன்? கொடுமை பண்றதுக்கு பேர்தான் நட்பா?' புலம்பியபடியே கண்களை மூடினான்.

பத்து நிமிடம் கடந்திருக்கும். அவனுக்கு இன்னமும் உறக்கம் வரவில்லை.

புரண்டு படுத்தான். கொலுசொலி காதில் விழுந்தது. தலை தூக்கி பார்த்தான். யாரையும் காணவில்லை. மீண்டும் கொலுசொலி கேட்டது. எழுந்து அமர்ந்தான். பக்கத்தில் இருந்தவன் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்த பாதி பேர் உறங்கி விட்டிருந்தனர். சிலர் மட்டும் இரவு நேரத்திலும் தேனீரை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

கொலுசு ராகமாய் ஒலிப்பதை மீண்டும் கேட்டான் அர்விந்த். "கொலுசுன்னா சத்தம் கேட்பது போலதானே இருக்கும். இது என்ன புதுசா பாட்டிசை போலவே கேட்குது!?"

"மோகினியா இருக்காதுன்னு நம்புவோம்!" என நினைத்தபடியே எழுந்து நின்றான். சத்தம் வரும் திசையை நோக்கி குத்துமதிப்பாக நடந்தான். கீழே படுத்திருக்கும் யாரையும் மிதித்து விடாமல் நடக்க சிரமப்பட்டான்.

"டேய் வெங்காய பையா.. எங்கேடா போற?" தேனீர் டபராவில் சர்க்கரையை கொட்டிக் கொண்டிருந்தவன் கேட்டான். திரும்பிப் பார்த்தவன் சுண்டு விரலை காட்டிவிட்டு திரும்பி நடந்தான்.

"அதுக்கேன்டா அந்த பக்கம் போற? தோட்டத்தோட கடைசியில் இருக்கும் புதருக்கெல்லாம் போகாத.. அங்கே பாம்பு இருந்தாலும் இருக்கும்.!"

'எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி டீக்கார அண்ணா..' மனதுக்குள்ளேயே நன்றியை சொல்லிவிட்டு நடந்தான்.

தோட்டத்திற்கு செல்லும் புல் பாதையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அந்த வண்ண விளக்கொளியில் மின்னல் பெண் போல நடந்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.

"என் செல்லம்.. இங்கே என்ன பண்றா?" குழப்பமாக யோசித்தபடியே அவளை பின்தொடர்ந்தான் அர்விந்த்.

தன் பின்னால் ஏதோ சத்தம் வருவது கேட்டு திரும்பிப் பார்த்தாள் ஸ்வேதா. அர்விந்த் சட்டென்று புதர் ஒன்றின் பின்னால் ஒளிந்துக் கொண்டான்.

தோட்டத்தின் இடையே புகுந்து நடந்தாள் ஸ்வேதா. வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே வந்தது.

'பாம்புங்க ரொமான்ஸ் பண்ற இடத்துக்கு இவ ஏன் போறா?' குழப்பம் தீராமலேயே பின் தொடர்ந்த அர்விந்த் ஒவ்வொரு அடியையும் பார்த்து வைத்து நடந்தான்.

ஸ்வேதா அந்த தோட்டத்தின் ஒரு மூலைக்கு வந்தாள். எதிரே இருந்த மதில் சுவரையும் தோட்டத்தையும் பார்த்தாள்.

"விஜி.." மெல்லிய குரலில் அழைத்தாள்.

ஒரு புதரின் உள்ளிருந்து வெளியே வந்தான் விஜி.

"யார் இவன்?" முனகியபடி பற்களை அரைத்தான் அர்விந்த்.

"ஸ்வேதா.. நீ ஏன் இங்கே வந்த? அமைதியா ரூம்ல இருக்க வேண்டியதுதானே?" கோபத்தோடு கண்டித்தான் அவன்.

"தனியா இருக்க பயமா இருக்கு. திடீர்ன்னு அந்த கிழவி வந்து ஏதாவது கேட்டா என்ன செய்ய?"

விஜி தன் போனை எடுத்து நேரத்தை பார்த்தான்.

"பதினொன்னே கால்.. இந்த டைம்ல அந்த கிழவி வராளா? லூசு. கொஞ்ச நேரம் ரூம்ல இருக்க முடியுதா உன்னால? என் ப்ளான் முழுக்க உன் ஒருத்தியாலயே சொதப்பிடும்.." என்று திட்டினான்.

"சாரி.." தரையை பார்த்தபடி சொன்னாள் ஸ்வேதா.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.." என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த பபிள்கம் ஒன்றை எடுத்து அவளுக்கு நீட்டினான்.

பபிள்கம்மை மென்றவள் "நீ சொன்ன ஆள் வந்துட்டானா?" எனக் கேட்டாள்.

"ம்.. வந்துடுவான்.!" என்றவன் தன் கையில் இருந்த பெட்டியை பார்த்தான். அது சிபியின் பாட்டி தந்த நகைப்பெட்டி.

"என்ன பண்றாங்க இவங்க இரண்டு பேரும்?" யோசனையோடு அங்கே ஒளிந்து நின்றான் அர்விந்த்.

விஜியின் போன் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.

"ம். இருக்கேன்.." என்ற விஜி மெல்லிய குரலில் விசிலடித்தான்.

மதில் சுவரின் அந்த பக்கமிருந்து பதில் விசில் சத்தம் கேட்டது. பிறகு சிறு பெட்டி ஒன்றை சுமந்தபடி ட்ரோன் ஒன்று அந்த பக்கமிருந்து பறந்து வந்தது. விஜி சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு அந்த ட்ரோனோடு இணைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு தன் கையில் இருந்த பெட்டியை அதில் இணைந்தான். சற்று நேரத்தில் அந்த ட்ரோன் அங்கிருந்து எழும்பி மறுபக்கம் சென்று மறைந்து விட்டது.

விஜி போனை எடுத்தான்.

"அரை மணி நேரத்துல பணம் எங்க அக்கவுண்டுக்கு மாறிடணும். அப்பதான் அடுத்த நகைப்பெட்டி உனக்கு கிடைக்கும்.!" என்றான்.

விஜி போன் அழைப்பை துண்டித்துக் கொண்டு ஸ்வேதாவை பார்த்தான்.

"அந்த கிழவி கொடுத்த தங்க நகை பணமா மாறிடும். இதுல அதே டிசைன் கவரிங் நகைகள் இருக்கு. இதை நீ போட்டுக்கோ. அந்த கிழவி வரும்போது இந்த டிசைன் பிடிக்கலன்னு சொல்லி வேற டிசைன் வாங்கிக்கலாம். இன்னும் நாலு நாள் இருக்கு. அதுக்குள்ள இன்னும் நாலு பெட்டி நகைகளை ஆட்டைய போட்டுடணும். போகும்போது நல்லா லம்பா அடிச்சிட்டு போகணும்.." என்றான்.

ஸ்வேதா சரியென்று தலையசைத்தாள்.

"அட களவாணிகளா.. இவ்வளவு நேரம் ஒரு களவாணியையா காதலிச்சிட்டு இருந்தேன்.. இது என்னடா அர்வி உனக்கு வந்த சோதனை?" கவலையோடு நினைத்தான்.

விஜியும் ஸ்வேதாவும் அங்கிருந்து கிளம்பினர். அர்விந்த் பொறுத்திருந்து விட்டு அவர்களை பின்தொடர்ந்து நடந்தான்.

அதன் பிறகு அர்விந்துக்கு உறக்கமே வரவில்லை. இவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று உண்மையை சொல்வது போலவும், அவனின் அம்மா வாசல் கூட்டும் விளக்குமாறால் துரத்தி துரத்தி அடிப்பது போலவுமே கற்பனை வந்தது.

இருளாய் இருந்த சித்துவின் அறைக்குள் சப்தமில்லாமல் உள்ளே நுழைந்தனர் ராகுலும் ஜீவனும்.

"ஒரே இருட்டா இருக்கு.." என்ற ஜீவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஹால் போல இருந்த இடத்தில் மிருத்யூவையும் காணவில்லை. சித்துவையும் காணவில்லை.

"லெப்ட் சைட் ரூம்ல இருந்து சத்தம் வருது. அவங்க அங்கேதான் இருப்பாங்க போல. வா நாம நம்ம வேலையை பார்க்கலாம்.." என்ற ராகுல் அந்த இடத்தை சுற்றி நோட்டம் விட ஆரம்பித்தான். அங்கிருந்த அலமாரிகளையும், மேஜைகளையும் சத்தமில்லாமல் திறந்து ஏதாவது கிடைக்குமா என்று சோதனை செய்ய ஆரம்பித்தனர் இருவரும்.

மிருத்யூ கத்த கூட வழியில்லாமல் சித்துவிடம் சிக்கிக் கொண்டிருந்தான். மிருத்யூவிற்கு ரொம்ப பக்கத்தில் இருந்தான் அவன்.

"என்னை விட்டு இருக்க முடியலதானே உன்னால? நானும் மிருணா.. தூக்கமே வரல. உன் ஞாபகம் சுண்டெலி போல என் காலை சுத்தி வருது.!" என்றவனின் கரம் மிருத்யூவின் முன்னங்கழுத்தை வருடிக் கொண்டிருந்தது.

'கையை மட்டும் கீழே இறக்கிடாதடா.. அப்புறம் எனக்கு இன்னைக்கே சமாதி ரெடியாகிடும்!' பயந்தபடியே சித்துவின் கரத்தை மெல்ல நகர்த்தினான் மிருத்யூ.

"நீ ரொம்ப கூச்சப்படுற.!" என்றபடியே அவனின் கரத்தை மேலிருந்து கீழாக நீவினான்.

'சீனியர் நல்லாவே இருக்க மாட்டாரு.. இப்படி கொண்டு வந்து மாட்டி விட்டுடாரு.!' மனதுக்குள் கத்திக் கொண்டிருந்தான்.

"மதியம் தொடங்கினோமே.. முடிக்காம போயிட்டோமேன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தேன் மிருணா.!" என்றவன் மிருத்யூ அணிந்திருந்த டாப்பின் கீழ் நுனியை பற்றி மேலே உயர்த்தினான்.

'வெளங்காதவனே.. என்னை சாகடிக்காதடா.!' மனதுக்குள் திட்டியபடியே அவனின் கையை தட்டி விட்டான் மிருத்யூ.

சித்து சிவந்த கண்களோடு நிமிர்த்து அவனை பார்த்தான்.

மிருத்யூ நாடகதனமாக சிரித்தபடியே எழுந்து நின்றான். தன் முன் நின்றிருந்த சித்துவை கட்டிலின் மீது தள்ளினான்.

சித்துவின் புருவம் உயர்ந்தது. ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தான் அவன். முன்பு வரை வெட்கமும், பயமுமாக இருந்தவள் இப்போது தனக்கும் முன்னால் பாய்ந்தோடுகிறாளே என்று ஆச்சரியப்பட்டான்.

மிருத்யூ அவன் மீது படர்ந்தான். இடது கையை கட்டிலில் ஊன்றியவன் வலது கையை சித்துவின் சட்டைக்குள் நுழைத்தான். இடுப்பில் வருட ஆரம்பித்தவன் அப்படியே மேலே நகர்ந்தான்.

கண்களை மெள்ள மூடினான் சித்து. "உன் கைகள் மந்திரம் தெரிஞ்சது!" முனகினான்.

'எல்லாம் என் தலையெழுத்துடா தடி பயலே!' என நினைத்தவன் தனது உள்ளங்கையால் சித்துவின் மேனியை வருடினான். நொடிக்கொரு முறை நறுக் நறுக்கென்று கிள்ளி வைத்தான். ஆனால் இவனின் கிள்ளல் அவனுக்கு மேலும்தான் ஆசையை கூட்டிக் கொண்டிருந்தது.

'போலிஸ் மச்சான் எப்ப வந்து என்னை காப்பாத்த போறாறோ தெரியலையே.!' கவலையோடு நினைத்தவன் சித்துவின் கழுத்தில் உதடு பதித்தான்.

ராகுலும் ஜீவனும் தங்களால் முடிந்த அளவுக்கு வேகமாக ஆதாரங்களை தேடிக் கொண்டிருந்தனர்.

"ராகுல்.." ஜீவனின் குரலில் ஓடி வந்தான்.

அலமாரியின் கதவிற்குள் கை காட்டினான். ராகுல் எட்டிப் பார்த்தான். அது அலமாரி அல்ல. ஒரு அறை போலவே இருந்தது. இருவரும் உள்ளே நடந்தனர். வெள்ளை வெளிச்சம் வீசிக் கொண்டிருந்தது உள்ளே. விதவிதமான ஆயுதங்கள் அங்கே இருந்தன.

"இப்ப என்ன செய்றது?" ஜீவன் யோசனையோடு கேட்டான்.

ராகுல் அவசரமாக தன் போனை எடுத்து அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தான்.

"எப்படியாவது சித்துவையும், சம்பத்தையும் பிடிச்சாகணும்!" என்றவன் அங்கிருந்த கையடக்க துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து தன் இடுப்பில் சொருகி கொண்டான்.

"ராகுல் என்ன பண்ற நீ?"

"இந்த வீட்டுக்குள்ள அவ்வளவு சீக்கிரத்தில் நுழைய முடியாது. இங்கே சோதனை செய்ய அனுமதி கடிதம் கூட சீக்கிரத்தில் நம்மால வாங்க முடியாது. முடிஞ்ச அளவுக்கு இங்கிருக்கும் ரவுடிகளை போட்டு தள்ளணும் ஜீவன். அதுக்கு நம்ம துப்பாக்கி உதவாது. அதனாலதான் இது.!" என்றவன் இன்னொரு துப்பாக்கியை எடுத்து மறு பக்க இடுப்பில் சொருகி கொண்டான்.

இந்த யோசனை ஓரளவுக்கு உதவ கூடியதாகதான் இருந்தது. ஜீவனும் இரண்டு துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டான்.

"வீடியோவை என்ன செய்ய போற? குமரன் சாருக்கு அனுப்பி வச்சா அவர் பார்த்துப்பாரு இல்ல.?"

"ம்.. நமக்கு ஐடியா தந்து அனுப்பி வச்சவரே அவர்தானே.. இப்பவும் அவர்தான் எதாவது செஞ்சாகணும்.!" என்றவன் ஓசையின்றி வெளியே நடந்தான்.

தன் மேலிருந்த மிருத்யூவை புரட்டினான் சித்து. படுக்கையில் விழுந்த மிருத்யூவின் மேலே படர்ந்தான். ஒரு பக்கம் கை முட்டியை ஊன்ற தந்ததால் அவனின் உடல் எடையில் மிருத்யூ பஞ்சர் ஆகாமல் இருந்தான்.

"யூ ஆர் மேக்கிங் மீ கிரேஸி.!" என்றவன் சட்டென்று மிருத்யூவின் இதழில் தன் உதடுகளை பதித்தான்.

மிருத்யூ இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டான்.

அந்த படுக்கையறையின் கதவை மெள்ள திறந்த ராகுல் எதிரே நடப்பதை கண்டு அவசரமாக விழிகளை மூடினான். ஆனாலும் கூட கடமையே முக்கியம் என்று நினைத்தவன் தனது போனை எடுத்து இதையும் வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்தான்.

மிருத்யூவுக்கு யோசனையே வரவில்லை. தன் மீது இருப்பவனை தள்ளி விடும் வழியும் தெரியவில்லை. மிருத்யூவின் மூச்சை திருடிக் கொண்டிருந்தான் சித்து. ஒற்றை முத்தத்தில் தனது உயிரை அவன் எடுத்து விடுவானோ என்று பயமாக இருந்தது மிருத்யூவுக்கு.

"செம ஹாட்டா இருக்கு இல்ல?" ராகுலின் காதில் கிசுகிசுத்தான் ஜீவன்.

ராகுல் திரும்பிப் பார்த்து முறைத்தான். "அது என் மச்சான்.!"

மிருத்யூவுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. போன வருடத்தில் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தான். ஆனால் முதல் முத்தத்தில் அந்த காதல் முடிவு பெற்று விட்டது. 'உனக்கு ஒழுங்கா கிஸ் கூட பண்ண தெரியல.!' என்று சொல்லி விட்டு பிரிந்து சென்று விட்டாள் அவள். அதை நினைத்த மிருத்யூவுக்கு இப்போது எண்ணங்கள் வேறு மாதிரி இருந்தன.

'இனி இந்த உலகத்துலயே பெஸ்ட் கிஸ்ஸர் நானாதான் இருப்பேன். இந்த காட்டெருமைக்கிட்ட மாட்டியதுக்கு ஒரே உருப்படி அது மட்டும்தான்.!' என்று எண்ணினான்.

அரை மயக்கத்தில் யோசித்துக் கொண்டிருந்தவன் தன் மீதிருந்தவன் விலகுவது கண்டு கனவோ என நினைத்து கண்களை திறந்தான்.

"மறுபடியும் யாரோ இடைஞ்சல்.. இரு ப்யூட்டி வரேன்.!" என்ற சித்து எழுந்தான். வெளியே நடந்தான்.

மிருத்யூ எழுந்து அமர்ந்தான். டாப் மேலேறியிருந்தது. பேண்ட் கொஞ்சம் கீழிறங்கி இருந்தது. முத்த மயக்கத்தில் இதை கவனிக்கவே இல்லை அவன். உள்ளாடையில் செக்ஸி மென் என்ற எழுத்துகளோடு மேல் பட்டை தெரிவது கண்டு அவசரமாக பேண்டை மேலேற்றிக் கொண்டான்.

தலையை நீவிக் கொண்டு எழுந்து நின்றான்.

கதவை திறந்த சித்து வெளியே நின்றிருந்த ராகுலை கண்டு ஆத்திரமடைந்தான்.

"என்ன?" என்றான் அதட்டலாக.

"காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு யாரோ இந்த ரூம்ல இருந்து கத்துற மாதிரி காது கேட்டுச்சி.!" என்றான்.

சித்து புருவம் சுருக்கினான்.

"அப்படி யாரும் கத்தல.. கிளம்பு.." என்றவன் கதவை மூட இருந்த நேரத்தில் அவனின் தோளில் வந்து சாய்ந்தான் மிருத்யூ.

சித்து திரும்பிப் பார்த்தான். கோபத்தில் சிவந்திருந்த கண்கள் இப்போது ஆசையில் நிரம்பியது.

"வெயிட் பண்ணு பேபி.. இப்ப இவனை அனுப்பிட்டு வரேன்.!" என்றான் கொஞ்சலாக.

மிருத்யூ இடம் வலமாக தலையசைத்தான். கைகளில் சைகை காட்டியபடி பின்னால் நகர்ந்தான். அவனின் கை சைகைகள் புரியாமல் குழம்பினான் சித்து.

"என்ன சொல்ற மிருணா?" என்றான்.

"என் அக்கா என்னை தேடுவா.. நான் அவக்கிட்ட சொல்லாம உங்களை பார்க்க ஓடி வந்துட்டேன். நான் இப்ப போயாகணும். நாம நாளைக்கு மீட் பண்ணலாம்.." மிருத்யூவுக்கு பதிலாக ராகுல் சொன்னான்.

சித்து ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தான்.

"ஊமைகள் பாசை எனக்குத் தெரியும் சார். என் தங்கையும் வாய் பேச முடியாதவதான்.!" என்றான்.

"ஓ.." என்ற சித்து மிருத்யூவின் உதட்டில் ஒரு முத்தத்தை பட்டும் படாமல் தந்து விட்டு விலகி நின்றான்.

"நாளைக்கு பார்க்கலாம்.!" என்றான்.

மிருத்யூ வெட்கத்தில் தலை குனிந்தபடி அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்.

அறையின் கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டு திரும்பியவன் "ஹப்பாடா.!" என்று நெஞ்சில் கை வைத்தான். பிறகு ராகுலின் புறம் திரும்பி இரு கைகளாலும் அவனின் தோளில் அடிக்க ஆரம்பித்தான்.

"வாட் ஆர் யூ டூயிங் மேன்? அடிக்கறது கூட பொண்ணுங்களை போலவே பண்ற.." என்றான்.

அவசரமாக கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்ட மிருத்யூ "ஏன் சீனியர் அவ்வளவு நேரம்? நான் எவ்வளவு பயந்துப் போனேன் தெரியுமா?" எனக் கேட்டான்.

"முத்தத்தை ஆழ்ந்து அனுபவிச்சி முனகினியே.. அந்த சத்தம் இன்னமும் என் காதுல நாராசம் போலவே கேட்டுட்டு இருக்கு‌. அதனால நீ சீன் போடாம வரியா?" எனக் கேட்டான் எரிச்சலோடு அவன்.

மிருத்யூ அவசரமாக உதட்டை கடித்துக் கொண்டான். அவன் புறம் திரும்பிப் பார்த்த ராகுல் "அந்த உதட்டை கடிக்காத.. சத்தியமா பார்க்க முடியல. அவனும் நீயும் பண்ணிக்கிட்ட ரொமான்ஸ்தான் எனக்கு ஞாபகம் வருது.."

"ஆனா உங்களுக்கு எப்படி தெரியும்?"

நடந்ததை சொன்னான் ராகுல்.

"அடப்பாவி சீனியர்.. அந்த முத்த காட்சியை நெட்ல போட்டு விட்டு என் லைப்புக்கு ஆப்பு வைக்க போறியா?" அதிர்ச்சியோடுக் கேட்டான்.

"இல்லடா.. இது வேற ப்ளான்.."

இருவரும் சிபியின் அறைக்கு வந்து சேர்ந்தபோது மிருதுளாவும் சிபியும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

"படுபாவிங்க.. ஒரு குழந்தை பையனை பூச்சாண்டி பிடிச்சிட்டு போச்சே.. அந்த குழந்தை பையன் பத்திரமா திரும்பி வரும் வரையாவது விழிச்சிருப்போம்ன்னு தோணுச்சா இவங்களுக்கு?" என்று குமைந்தான் மிருத்யூ.

"அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம போய் தூங்கு மிருத்யூ.. மீதியை நாளைக்கு பேசிக்கலாம்.!" அவனின் தோளில் தட்டி தந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் ராகுல்.

நடு இரவு பன்னிரெண்டு. மணி அடித்து விட்டு ஓய்ந்தது. ராகுல் தனது உயரதிகாரி குமரனின் அழைப்புக்காக காத்திருந்தான்.

"அவர் நினைச்சிருந்தா இந்த ரூபாவதி பொம்பளையை எப்பவோ ஜெயில்ல போட்டிருக்கலாம்.!" எரிச்சலாக மொழிந்தான் ஜீவன்.

"அவர் மட்டும் என்ன செய்வார்? அவருக்கும் ஆதாரம் தேவை. ரூபாவதி கெட்டவன்னு சொல்லி நாம கொண்டு போய் கோர்ட்ல நிறுத்தினா ஜட்ச்சும் ஆதாரம்தான் கேட்பாரு.!" என்றான்.

போன் ரிங் ஆனது. ராகுல் அவசரமாக எடுத்து காதில் வைத்தான்.

"ஹலோ சார்.." என்றான்.

"இவ்வளவு வெப்பசன்ஸ்.. அந்த வீட்டுல கண்டிப்பா ரெய்ட் பண்ணியே ஆகணும்.." என்றார் அவர்.

"ஆமா சார்.. எப்படியாவது பர்மிசன் வாங்கிட்டு வாங்க சார்.!" என்றவன் அவர் பேசி முடித்த பிறகு கட்டிலில் விழுந்தான்.

"பொழுது இனிதே விடிந்தது‌"

"பின்ன கசந்துக்கிட்டா விடியும்?" மிருதுளாவை கேலி செய்தபடியே எழுந்து அமர்ந்தான் மிருத்யூ.

"பிரதர்.. அதுக்குள்ள வந்துட்டியா?" ஆச்சரியத்தோடு கேட்ட சகோதரியின் மீது தலையணையை தூக்கி எறிந்தான் மிருத்யூ.

"நீ நிஜமாவே என் கூட பிறந்தியா? இல்ல உன்னை மட்டும் தத்துக்கு எடுத்து வந்தாங்களா? என் மேல உனக்கு துளியும் பாசம் இல்ல.!" என்றான் கோபமாக.

சிரித்தாள் மிருதுளா. "சாதாரண கூட பிறந்தவ இல்ல.. கூடவே உன் கையை பிடிச்சிட்டு பிறந்தவ.!" என்றவள் கொட்டாவி விட்டபடியே எழுந்து நின்றாள்.

ஜன்னல் திரைகளை விலக்கி விட்டாள்.

"உன் மொகரைக்கு இரண்டு எருமைங்க சண்டை போடுதேன்னு பெரு மகிழ்வுல இருக்க நீ.." நக்கலாய் சொன்னான் மிருத்யூ.

"இந்த வீட்டை விட்டு இரண்டு பேரும் உயிரோடு போகணும். அதனால நீ என்கிட்ட வம்பு வளர்க்காம இரு. அவ்வளவுதான்.!" என்றவள் "நானே சீனியர் பர்ஸ்ல என் போட்டோ எப்படி வந்துச்சின்னு யோசிச்சிட்டு இருக்கேன்.!" என்றாள்.

"சீனியரோட தங்கச்சி அந்த ஊமை பொண்ணு உன் பிரெண்டாச்சே.. அவ தந்திருப்பா.!" மிருத்யூ சொன்னது கேட்டு மிருதுளாவின் முகம் மாறி போனது.

ராகுலின் தங்கையை நினைத்து காலை வேளையிலேயே கண்கள் கலங்கியது மிருதுளாவுக்கு. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வின் முடிவு வரும் முன் அந்த தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டவள் அவள். சில வருடங்களில் அவ்வப்போது நினைத்துள்ளாள் மிருதுளா. ஆனால் மனம் நோகிறது என்று அடிக்கடி நினைக்க மாட்டாள்.

மிருத்யூ சொன்ன பிறகு புகைப்படம் கூட நினைவுக்கு வந்தது மிருதுளாவுக்கு. அவளும் ராகுலின் தங்கையும் தேர்வுக்கு முன்னால் நடந்த ஆண்டு விழாவின் போது சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம்தான் அது. பர்ஸில் இருந்து பாதி தெரிந்த புகைப்படத்தின் மீதி பாதி பர்ஸின் உள்ளே மறைந்து இருந்திருக்க கூடும் என்றும் புரிந்துக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN