குரங்கு கூட்டம் 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இன்னும் மூன்று நாட்கள்தான் இருந்தது திருமணத்திற்கு. காலை வேளையில் எழும்போதே சிபிக்கு மனம் கவலையாக இருந்தது.

குளித்து முடித்து அலங்காரம் செய்துக் கொண்டவள் நேராக பிரேம்மைதான் தேடி சென்றாள்.

"சின்னம்மா இந்த பக்கம் எங்கே போறிங்க?" தடுத்து நின்று கேட்ட தடியாளை நிமிர்ந்து பார்த்தவள் "கெட்ட கனவு கண்டேன். சாமியார்கிட்ட சொல்லி திருநீறு வாங்கிக்கலாம்ன்னு போறேன்.!" என்றாள்.

அடியாள் நகர்ந்ததும் பிரேம்மின் அறைக்கு சென்றாள். கதவை தட்டினாள். கால் நிமிடத்திற்கு பிறகு கதவை திறந்தான் பிரேம்.

"சிபி.."

உள்ளே வந்தவள் கதவை தாழிட்டாள். "பயமா இருக்கு பிரேம்.!" என்றபடி அவனை அணைத்துக் கொண்டாள். அவளின் முதுகை வருடி விட்டவன் "சரியா போயிடும் பேபி.!" என்று அவளின் காதோரம் முணுமுணுத்தான்.

"மூணு நாள்தான் இருக்கு.!" என்றவளின் குரலில் பயம் அதிகமாக இருந்தது.

தாடையை பற்றி அவளின் முகத்தை நிமிர்த்தியவன் "நாம போயிடலாம்.‌ நம்பு.!" என்றபடியே அவளின் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

ஸ்வேதா உறக்கத்தில் புரண்டுக் கொண்டிருந்தாள். கண்கள் எரிவது போலவே இருந்தது அவளுக்கு. வாசம் நெருடும் மூக்கை தேய்த்து விட்டுக் கொண்டாள். உள்ளங்காலில் யாரோ கிள்ளினார்கள்.

"விஜி அமைதியா விடு. எனக்கு தூக்கம் பயங்கரமா வருது.!" என்றவளின் கன்னத்தில் மூச்சுக் காற்று படர்ந்தது.

"தள்ளி போ பேயே.!" கையை தூக்கி விரட்டினாள். ஆனால் அவளின் கையை அந்தரத்திலேயே பற்றியது ஒரு கரம்.

அதிர்ச்சியோடு கண்களை திறந்தாள். எதிரே பார்த்தாள். அரிந்து வைத்த வெங்காயம் ஒரு ஆளாக மாறி வந்தது போல அர்விந்த் அவளின் அருகே அமர்ந்திருந்தான்.

"அம்மா.." பயந்து கத்தியபடி எழுந்தவள் பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.

"யா.. யார் நீ?" எனக் கேட்டாள் நடுங்கிய கரத்தை உயர்த்தி நீட்டியபடி.

முத்து முத்தாக வியர்த்திருந்த அவளின் முகத்தை ஆச்சரியமாக பார்த்தவன் "ஹாய் திருடி.!" என்று கையை அசைத்தான்.

ஸ்வேதா பேயடித்தது போல அதிர்ந்துப் போனாள். விழிகளை பெரியதாக விரித்தாள். வியர்க்கும் அளவு கூடியது.

"எ..‌என்.. ன.. சொல்.." அவளின் திணறலை ரசித்தவன் தனது கன்னங்களில் இரு கரங்களையும் பதித்தபடி கை முட்டியை கட்டிலில் பதித்தபடி அவளை ஆர்வத்தோடு பார்த்தான்.

'பைத்தியமா இவன்?' ஸ்வேதாவுக்கு இயல்பாய் எழுந்தது சந்தேகம்.

"நீ திக்கி திணறுவது கூட எனக்கு கிக்காவே இருக்கு திருடி.!"

"நீங்க யாரோன்னு நினைச்சி என்கிட்ட பேசிட்டு இருக்கிங்க.."

"திருடின்னு நினைச்சி உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன். நீ ஏன் இந்த வீட்டுக்குள்ள வந்தன்னு எனக்கு தெரியும்.!" சொல்லி விட்டு கண் அடித்தான்.

ஸ்வேதாவின் இதயம் இரு மடங்காய் துடிக்க ஆரம்பித்தது. ஜன்னலின் வெளியே தெரிந்த சூரிய கதிர்களை அளந்தவள் சுவரின் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டை தாண்டி விட்டிருந்தது.

விஜி எங்கே போனான் என்று சுற்றும் முற்றும் பார்த்து தேடினாள்.

"உன் அல்லக்கை இந்த வீட்டு பாட்டிக்கு பணிவிடை பண்ணிட்டு இருக்கான்.!" என்ற அர்விந்த் அமைப்பு மாறாமல் அமர்ந்திருந்தான்.

ஸ்வேதா எழுந்து நின்றாள். இந்த முகத்தை எங்கே பார்த்தோம் என்று இவ்வளவு நேரமும் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதான் அடையாளம் பிடிப்பட ஆரம்பித்தது.

"நான் போறேன்.." என்றவள் கதவை நோக்கி நடக்கும் முன் அவளுக்கு முன்னால் வந்து நின்றான் அர்விந்த்.

"நோ டார்லிங்.. நாம பேசவே இல்ல இன்னும்.!"

"சமையல்காரன்தானே நீ? இங்கே என் ரூம்ல உனக்கு என்ன வேலை? நான் போய் பாட்டிக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.!" கஷ்டப்பட்டு வரவழைத்த தைரியத்தோடு சொன்னாள்.

"நானும் அதே பாட்டிக்கிட்ட சொல்வேன், நீ எப்படியெல்லாம் ப்ளான் பண்ணி திருடுறன்னு.!" சொல்லி விட்டு நாக்கின் ஒரு ஓரத்தை கடித்தபடி அவளை வெறித்தான். தூங்கி எழுந்த ஒரு முகத்தை இவ்வளவு பேராசையோடு பார்ப்போம் என்று ஒருநாள் கூட நினைத்தது இல்லை அவன்.

பொம்மை போலவே தெரிந்தாள் அவனின் கண்களுக்கு.

"நீங்க என்ன சொல்றிங்கன்னே எனக்கு.." அவள் மேலே சொல்லும் முன் தனது போனை நீட்டினான் அவன். அதில் அவளும் விஜியும் நேற்றிரவு பேசிய விசயங்கள் படமாக ஓடிக் கொண்டிருந்தது.

முன்பை விட அதிகம் பயந்தாள் ஸ்வேதா.

"நான் சொல்றபடி நீ கேட்டா உன்னை நான் போட்டு தராம இருக்கேன்.!" என்றவனை விந்தையாக பார்த்தாள். என்ன சொல்ல போகிறானோ என்று கவலையாக இருந்தது.

"ஐ லவ் யூ. நீ என்னை திருப்பி லவ் பண்ணுவ. அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. ஆனா நீ உன் திருட்டை விட்டுடணும். அதை விட முக்கியமா நீ இவ்வளவு நாளும் திருடிட்டு இருந்தன்னு என் வீட்டுல சொல்லவே கூடாது.!" என்றவனுக்கு அம்மாவிடம் துடைப்பத்தால் அடி வாங்கும் காட்சி கண் முன் வந்துப் போனது.

பத்து நிமிடத்திற்குள் எத்தனை அதிர்ச்சி என்றுத் தோன்றியது ஸ்வேதாவிற்கு.

"நீங்க சொன்னது எனக்கு புரியல.!"

"இந்த முறை மெதுவா சொல்றேன். நல்லா கேட்டுக்கோ.. ஐ லவ் யூ.. அதாவது இதுக்கு மீனிங் என்னன்னா உன்னை என் காதல் வலையில் விழ வச்சி, உன்னை மேரேஜ் பண்ணி, நாம ஆசைப்படும் அளவுக்கு பாப்பாஸ் பெத்து வளர்த்து அப்புறம் வயசாகி இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சிக்கிட்டே செத்து போறதுன்னு அர்த்தம்.!"

"விளையாட்டு போதும். ப்ளாக்மெயில் பண்ணதானே வந்திருக்கிங்க? எவ்வளவு ஷேர் வேணும்ன்னு கேட்டா விஜிக்கிட்ட கேட்டு வாங்கி தந்துடுவேன் நான்.!" என்றாள் எரிச்சலை மறைத்தபடி.

அர்விந்த் நக்கலாக அவளை நோட்டம் விட்டான். "என்னை நம்பல நீ.. நான் வேணா என் குரங்கு பிரெண்ட்ஸை கூட்டி வந்து நிரூபிக்கட்டுமா?"

ஸ்வேதா குழப்பத்தோடு நெற்றியை சுருக்கினாள்.

"நீ எப்படி இங்கே திருட வந்தியோ அதே போலதான் நானும் ஒரு காரியமா வந்திருக்கேன். நீ ஓகே சொன்னா நாம லவ் பண்ணலாம். இல்லன்னா நீ ஓகே சொல்லும் வரை நான் உன்னை இம்சை பண்ணிட்டு இருப்பேன். ஆக்சுவலா நான் ஒரு குரங்கு மாதிரி.." என்றான் வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க.

ஸ்வேதாவுக்கு அறையை விட்டு வெளியே போக வேண்டிய அவசரம் இருந்தது. இவனை பார்க்கையில் பயமாக இருந்தது.

"நீ உன் அழகால என்னை மெஸ்மரைஸ் பண்ற.. அப்படியே மடங்கி விழுந்து உனக்கு பூசை செய்யணும் போல இருக்கு.." என்றவன் முகத்தை சுளித்தபடி இடம் வலமாக தலையசைத்தான்.

"இது கொஞ்சம் ஓவரா இருக்கு. இரு நான் இந்த முறை உனக்கு பிடிச்ச மாதிரி சொல்றேன்.. நீ உன் கண்களால் என்னை களவாடுற.. என் காதல் காப்பால் உன்னை பிடிச்சி என் மன சிறையில் உன்னை அடைச்சி வைக்கணும்னு ஆசையா இருக்கு.." என்றவன் தான் சொன்னதற்கு தன்னையே மனதுக்குள் பாராட்டிக் கொண்டு அவளை பார்த்தான். "இது ஓகே.." என்றான்.

"இந்த வெங்காய பையன் இன்னும் என்ன பண்றானோ? வயித்தை கலக்குதுன்னு சொல்லிட்டு வந்தான். ஆளை அட்ரஸையே காணோம்.." ஸ்வேதாவின் அறைக்கு வெளியே யாரோ இருவர் பேசிக் கொண்டு செல்வது கண்டு அர்விந்த் அலார்ட் நிலைக்கு வந்தான்.

"சாரி பேபி.. அவசர வேலைகள் காத்து கிடக்குது.. நாம அப்புறம் பார்க்கலாம். நீ இந்த முகத்தை பார்த்துட்டு ரிஜெக்ட் ஏதும் பண்ணிடாத.. உண்மையில் நான் ரொம்ப ஹேண்ட்சம். என் பிரெண்ட்ஸ் கூட்டத்துலயே நான்தான் ரொம்ப ஹேண்ட்சம்.. இதெல்லாம் வெங்காய கறையால் வந்த பிரச்சனை!" என்றவன் அங்கிருந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே நடந்தான்.

ஸ்வேதா சிலை போல நின்றாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவளை ஒருவன் காதலிப்பது என்பது கனவில் கூட அவள் எதிர்ப்பார்க்காத விசயம். ஆனால் தான் ஒரு திருடி என்று அறிந்த பிறகும் இவன் காதலிப்பது கண்டு அவளுக்கு சந்தேகம்தான் வந்தது. இந்த காதல் கத்தரிக்காயில் அவளுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. இவன் ஏதோ ஏமாற்று வேலையில் இறங்கியுள்ளான் என்றே நினைத்தாள்.

முத்தம் படுக்கை வரை தொடர்ந்து, ஆசை பேராசையாய் மாறி உடைகளை களைந்துக் கொண்டிருந்த நேரத்தில் பிரேமின் அறை கதவு தட்டப்பட்டது. சிபியின் மேலிருந்தவன் அவசரமாக எழுந்தான்.

சிகப்பு மஞ்சள் சட்டையும், துண்டும் தரையில் தாறுமாறாக கிடந்தது. எடுத்து அவசரமாக உடுத்திக் கொண்டான்.

சிபி அங்கிருந்த குளியலறை நோக்கி நடந்தாள். மாலைகளை எதற்காக கழட்டினோம் என்ற குழப்பத்தோடு அவைகளை எடுத்து அணிந்துக் கொண்டான். பதறியது மனம்.

"பொறுமை பிரேம்.." தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான். கைத்தடியை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தான். கதவை திறந்தவன் வெளியே நின்றிருந்த மிருத்யூவை கண்டு நெஞ்சில் கை வைத்தான்.

"நீதானா?" எனக் கேட்டான் நிம்மதியுடன்.

அவனை முறைத்தான் மிருத்யூ. "நானா இருக்கவும்தான் நீ இன்னமும் இப்படியே இருக்க. வேறொருத்தன் பார்த்திருந்த இன்னேரம் உனக்கு சமாதி கட்டியிருப்பான்.!" மூக்கு சிவக்க கோபத்தோடு சொன்னவனை குழப்பமாக பார்த்தான் பிரேம்.

"ஏன்டா மிருத்யூ?" எனக் கேட்டான் புரியாமல்.

மிருத்யூ வராண்டாவின் இரு புறமும் கவனித்து விட்டு நண்பன் புறம் திரும்பினான்.

"வேட்டி எங்கேடா நாயே? இது என்ன கருமத்தை இடுப்புல கட்டிட்டு இருக்க?" எனக் கேட்டான் கடுப்போடு.

பிரேம் அவசரமாக இடுப்பின் கீழ் பார்த்தான். சிபியின் ஜல்லடை துப்பட்டா இடுப்பில் இருந்தது. முட்டி வரை கூட வரவில்லை அந்த துப்பட்டா. அவசரத்தில் வேட்டிக்கு பதிலாக இதை எடுத்து கட்டிக் கொண்டு உள்ளதை கண்டவன் நண்பனை பார்த்து பல்லை காட்டினான்.

"ஏதோ சின்ன சிறுசுங்க.. கண்டுக்காதடா.." வெட்கத்தில் சிணுங்கியபடி தரை பார்த்து கால் கட்டை விரலால் கோலம் போட்டான்.

"என்ன கன்றாவியோ? சீனியரும் அந்த மிருது குரங்கும் ஏதோ வேலையா இன்னைக்கு பிசியாம். அவங்களா கூப்பிடும் வரை நான் வெளியே எங்கேயும் வர கூடாதுன்னு ஸ்டிரிக்ட் ஆர்டர். அந்த ரூம்ல இருந்தா அந்த சித்து ஹல்க் வந்து என்னை தூக்கிட்டு போயிடுவானோன்னு பயமா இருக்கு. அதான் உன் ரூம்ல ஒளிஞ்சிக்க வந்தேன். ஆனா நீ.." மேலே சொல்லாமல் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"நீ பீல் பண்ணும் அளவுக்கு ஒன்னும் இல்ல. சிவ பூசை ஆரம்பிக்கும் முன்னாடியே கரடியா வந்து தொலைஞ்சிட்ட.. அதனால ஹேப்பியாவே உள்ள வந்து தொலை.." என்று எரிச்சலாக சொன்னவன் கதவை நன்றாக திறந்து விட்டான்.

"ஒன்னரை வயசுல பாப்பாவை வச்சிருக்கும் நீயெல்லாம் இந்த டோன்ல பேசலாமா?" உள்ளே வந்து கதவை சாத்தி விட்டு நண்பனின் தலையில் கொட்டு ஒன்றை வைத்தபடியே கேட்டான் மிருத்யூ.

பிரேம் கரகரவென்று தலையை தேய்த்துக் கொண்டான்.

கட்டிலின் கீழே கிடந்த மஞ்சள் வேட்டியை கால் விரல்களால் எடுத்த மிருத்யூ அதை கையில் பற்றி பிரேமிடம் வீசினான்.

"பிக்னிக் வந்துருப்பதா நினைப்பு போல.!" என்றபடியே பழத்தட்டில் இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்து கடித்தபடியே கட்டிலின் மீது அமர்ந்தான்.

மிருத்யூவின் குரலில் குளியலறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் சிபி. இவன் மட்டும் இருப்பதை கண்டவள் மூச்சை இழுத்து விட்டபடி வெளியே வந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN