குரங்கு கூட்டம் 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிருதுளாவின் கையை இறுக்கமாக பற்றி இருந்தான் ராகுல். அவளின் முகத்தில் குட்டி குட்டி வியர்வைகள் இருந்தது‌. அந்த வியர்வைக்கு அவசரமாக ஒரு உவமை சொல்ல வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.

"சீனியர்..!" குரல் நடுங்கியது அவளுக்கு. அதரங்களின் மீது அழுத்தமாக முத்தம் பதிக்க சொல்லி தூண்டியது அவனுக்குள் சமீபமாக வேலை செய்ய தொடங்கியிருந்த ஹார்மோன்கள்.

தரை தொடும் சுடிதாரில் மிருதுளா சிலை போலவே தோன்றினாள் அவனின் கண்களுக்கு. அலை பாயும் விழிகள் கடிகாரத்தின் பெண்டுலமென அவனுக்கு நினைவுக்கு வந்தது. அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அவனுக்கு தன் மூளைக்குள் தோன்றிய உவமைகள் அனைத்தும் கவிதை போலவே இருந்தது.

அவள் பயத்தோடு தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் இங்கே வந்த காரியத்திற்கு மனதை திருப்பினான்.

"நான் இங்கேயேதான் இருப்பேன் மிருது. உனக்கு ஒன்னும் ஆகாது. என்னை நம்பு. நம்ம ப்ளான் சூப்பரா வொர்க் அவுட் ஆகும்.!" என்றவன் அவளின் தலையை வருடி தந்தான். தலையை வருடுவதே ஏதோ ஓர் வானத்தின் நட்சத்திரங்களை பறித்து முத்தமிடுவது போல் தோன்றியது.

மிருதுளா மின்னும் கண்களோடு அவனின் முகத்தை ஆராய்ந்தாள்.

"நீங்க நிஜமாவே என்னை லவ் பண்றிங்களா?" தனக்குள் இருந்த சிறு சந்தேகத்தை கேட்டாள்.

கேலியாக அவளின் கன்னம் கிள்ளியவன் "பார்த்தா வேற எப்படி தெரியுது?" என்றான் ஒரு மாதிரி கொஞ்சல் குரலில். வாய்ப்பு மட்டும் கிடைத்தால் இப்போதே மனைவியாக்கி பிறக்க போகும் குழந்தைகளுக்கு பெயர் தேடி இருப்பான்.

"அப்படி இல்ல சீனியர்.. பசங்க என்னையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் லவ் பண்ண மாட்டாங்க இல்லையா? நான் பசங்களை போலவே நடந்துக்கறேன்னு கூட சிலர் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க.!" கண்களை அந்த பக்கமும் இந்த பக்கமும் உருட்டி சொன்னாள். அவளுக்குள் இருந்த சிறு மன வாட்டம் வார்த்தைகளாக வெளி வந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை நிறைய முறை கடந்து வந்தவள் அவள்.

"மூணு பசங்களோடு பழகினா நீயும் பையன் ஆகிடுவியா? உங்களோடது குரங்கு கூட்டம்ன்னு பார்த்த எனக்கு தெரியாதா?" எனக் கேட்டவனை மூக்கு விடைக்க முறைத்தாள் அவள்.

'வாயை விட்டுட்டமோ.!' ராகுல் இதை நினைத்த நேரத்தில் அவனின் கழுத்தில் கீறி வைத்தாள் மிருதுளா.

"ஸ்‌. அப்பா.!" அவளிடமிருந்து பின்னால் நகர்ந்தவன் எரியும் கழுத்தை தொட்டுப் பார்த்தான். சின்ன சின்ன ரத்த பொட்டுகள் கை விரல்களில் ஒட்டியிருந்தது.

"மெண்டல்.." முறைத்தான். 'பூனையை போல கீறி வச்சிட்டா..'

"நாங்க குரங்குகளாவே இருந்தாலும் அதை நீங்க சொல்ல கூடாது.!" என்றாள் அவள் அதே கோபத்தோடு.

"தெரியாம சொல்லிட்டேன். நீ எனக்கு இப்ப கொஞ்சம் கோப்ஆப்ரேட் பண்ணு. அவன் வந்துடுவான்.." என்றவன் அவள் பேச வேண்டியதை மீண்டும் ஒருமுறை சொல்லி தந்தான்.

"முக்கியமான விசயம். பயப்படவே பயப்படாத.. நீ எவ்வளவு பெரிய டிராமா குயின்னு எனக்கு நல்லா தெரியும். அதை இன்னைக்கேதான் நீ உருப்படியா யூஸ் பண்ண போற.." அவள் முறைப்பதை கவனிக்காமல் மேலும் சொன்னான் அவன். அவனுக்கு அவனது காரியம் கண்ணாக இருந்தது.

"பக்கத்துல இருப்பேன் நான்.." என்றவன் அவளை விட்டுவிட்டு நகர்ந்தான். கொஞ்சம் பயந்தாள். நிறைய எதிர்பார்த்து காத்திருந்தாள்.

மிருதுளா கை விரல் நகங்களை கடித்தாள்.

மிருத்யூவின் முன்னால் வந்து அமர்ந்தாள் சிபி. "ஹாய் ப்ரதர்.!" என்று கையை ஆட்டினாள். 'நல்லவேளை இவளாவது முழுசா டிரெஸ் போட்டிருக்கா.!' என நினைத்தவன் அவளின் கசங்கிய பூக்களையும், கழுத்தில் ஒட்டியிருந்த பொட்டையும் கண்டுவிட்டு மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"எரிமலை மேல டேன்ஸ் ஆடுனவளை* கூட நான் பார்த்திருக்கேன். ஆனா உங்களை மாதிரி சுத்தியும் ரவுடி பசங்களை வச்சிக்கிட்டு ரொமான்ஸ் பண்ணவங்களை பார்த்ததே இல்ல.!" என்றான் கேலியாக. அவனால் இவர்களை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு இப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உயிரோடு தப்பி விட்டால் போதும் என்று மட்டும்தான் நினைத்திருப்பான்.

"அதையே பேசாத.!" என்ற பிரேம் கொய்யா காயை எடுத்து தின்றபடி நண்பனின் அருகே அமர்ந்தான்.

"நானும் இவளும் கிட்டத்தட்ட இரண்டு வாரம் பிரிஞ்சி இருந்துட்டோம். எங்களை போல லவ்வர்ஸ் பீலிங்லாம் உனக்கு புரியாதுடா.!" நண்பனின் தோளில் தட்டிச் சொன்னான் பிரேம்.

'இரண்டு வாரம் பிரிஞ்சி இருந்ததா.?? அந்த பன்னி பையன் வந்தான்னா இரண்டு மணி நேரம் பிரிஞ்சி இருந்துட்டோம்ன்னு சொல்லி என்னை கசக்கி பிழிவான்.. இதுல உங்க லவ் ஒன்னுதான் குறைச்சலா?' கடுப்போடு நினைத்தான் மிருத்யூ. தனக்கும் சித்துவுக்கும் இடையில் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

பிரேம் நண்பனின் கூந்தலில் சூட்டியிருந்த மல்லி சரத்தை எடுத்து நுகர்ந்துப் பார்த்தான். "வாழ்க்கையிலயே இன்னைக்குதான்டா உன் மேல இருந்தும் வாசம் வந்திருக்கு.!" கண்களை மூடியபடி பூ வாசத்தை சுவாசித்தபடி அனுபவித்து சொன்னான்.

பற்களை கடித்தபடி திரும்பிய மிருத்யூ நண்பனுக்கு நச்சென்று ஒரு கொட்டு வைத்தான்.

"அச்சோ.." என கத்திய சிபி பிரேமின் வலியை தான் உணர்ந்ததாக நினைத்தாள்.

"ஓ.. ஸ்விட்ச் இங்கே போட்டா லைட் அங்கே எரியுதா.? கொன்னுடுவேன் உங்களை.." விரல் நீட்டி எச்சரித்த மிருத்யூ "என் மேல இருந்து இன்னைக்காவது ஒரு வாசம் வந்திருக்கு. கழுதை நீ. உன் மேல இருந்து இதை வரை என்ன வாசம் வந்திருக்கு.?" எனக் கேட்டான் நண்பனிடம்.

பிரேம் பதில் சொல்ல இருந்த நேரத்தில் சிபியின் போன் ஒலித்தது.

"ஹோம்ல இருந்து கால் பண்றாங்க.." என்றாள் வருத்தமாக.

மிருத்யூ போனை வாங்கினான். அழைப்பேற்று பேசினான்.

"ஹலோ.. மேடம் எத்தனை முறைதான் போன் பண்றது? உங்க குழந்தை அழுதுட்டே இருக்கா.. பார்க்கவே பாவமா இருக்கு. தூங்கற நேரம் தவிர மத்த எல்லா டைம்லயும் அழறா.. எங்களால கன்ட்ரோல் பண்ணவே முடியல. இப்படியே போனா அப்புறம் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போயிடும்.!" மறுபக்கம் நடுத்தர வயது பெண்மணி ஒருவரின் குரல் கோபமாக ஒலித்தது.

"அரை மணி நேரத்துல போன் பண்றோம் மேடம்.!" என்ற மிருத்யூ அழைப்பை துண்டித்தான். கோபத்தோடு எதிரே பார்த்தான்.

"கொஞ்சமா விஷம் வாங்கி தரேன். இரண்டு பேரும் குடிச்சிட்டு செத்து போயிடுங்க.!" என்றான் எரிச்சலாக.

சிபியும் பிரேமும் அமைதியாக தரை பார்த்தனர்.

"உங்களுக்கு இந்த வயசுல எதுக்குடா குழந்தை? அதுவும் இப்படி ஒரு பேமிலியை வச்சிக்கிட்டு.?" கோபமாக கேட்டபடி எழுந்து நின்றான். கை விரல்களை மடக்கினான்.

"ஏதோ கவன குறைவா இருந்துட்டோம்.!" தலையை கோதியபடி சொன்ன பிரேமின் காலில் உதைத்தான் மிருத்யூ. "நீங்க கவன குறைவா இருந்ததுக்கு அந்த குழந்தை ஏன்டா கஷ்டப்படணும்.? ஆமா குழந்தை பேர் என்ன?" எனக் கேட்டான் நினைவு வந்தவனாக.

"நிலா.." சிபியும் பிரேமும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

"அந்த ஹோமோட அட்ரஸை சொல்லுங்க.." என்றவனை குழப்பமாக பார்த்த சிபி "எதுக்கு?" என்றாள்.

"ஹோம்ல இருந்தா அந்த குழந்தை அழுதே செத்துடும். பேசாம இங்கே கூட்டி வரலாம்.!"

பிரேம் அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.

"பைத்தியமா நீ?" என்றான். இருக்கும் பிரச்சனைகளில் குழந்தை ஒன்றேதான் பாக்கியா என்று எண்ணியது அவனின் மனம்.

"வேற என்ன பண்றது? கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தி அந்த குழந்தை சாகணுமா? நாம இங்கே அஞ்சாறு பேர் இருக்கோம். யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி குழந்தையை பார்த்துக்கலாம்.." நம்பிக்கையோடு சொன்னான் மிருத்யூ.

"வேணாம்.." பயத்தில் இடம் வலமாக தலையசைத்தாள் சிபி.

"வேற வழியே இல்ல சிபி.!" மிருத்யூ அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

"ஆனா எப்படி? கல்யாணம் முடியாம நாம இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது.‌!" பிரேம் சொன்னதை கேட்டு அவனை முறைத்தவன் "இவதானே போக கூடாது.. நான் போகலாம் இல்ல?" எனக் கேட்டான்.

"முடியாதுடா.. டைட் செக்யூரிட்டி. கல்யாணத்துக்குன்னு உள்ளே வந்தவங்க கல்யாணம் முடியாம இந்த குடும்பத்தை விட்டு வெளியே போகவே முடியாது. அதுதான் இந்த மாஃபியா கேங்கோட ரூலே.!" என்றான்.

மிருத்யூ நகத்தை கடித்தபடி யோசித்தான். "ஓகே.. நாம ரோஜாவை வர சொல்லலாம்.!" என்றபடி தன் போனை எடுத்தான். அவசரமாக அவனின் போனை பிடுங்கினான் பிரேம்.

"எந்த ரோஜா?" குழப்பமாக கேட்டான் பிரேம்.

"என் எக்ஸ் லவ்வர்.!"

"சாவடிப்பேன். அது எக்ஸ் கிரஷ்.!" மறுத்து வாதாடினான்.

"ஏதோ ஒன்னு.. அவளைதான் வர சொல்ல போறேன். அவக்கிட்ட விசயத்தை சொன்னா அவ நமக்கு ஹெல்ப் பண்ணுவா.!" என்ற மிருத்யூவின் தாடையை பற்றி உயர்த்திய பிரேம் "உண்மையை சொல்லு.. இதே சாக்கா வச்சி அந்த புள்ளையையும் அவ புருசனையும் பிரிச்சி விட்டுட்டு நீ சந்துல சிந்து பாட நினைக்கல இல்ல.?" எனக் கேட்டான் சந்தேகமாக. அவனுக்கு இந்த விசயத்தில் நண்பன் மீது துளியும் நம்பிக்கை இல்லை.

மிருத்யூ விழித்தான். யோசித்தான். "ச்சே.. ச்சே.. அப்படி இல்ல.. அதுவும் இல்லாம நான் அப்படி மெனக்கெட அவசியமும் இல்ல. அவ டைவர்ஸ் வாங்கி ஒரு வாரம் ஆச்சி.!" என்றான் தோளை குலுக்கியபடி.

பிரேம் அதிர்ந்தான். "ஒரு வாரம்.. அது எப்படிடா உனக்கு மட்டும் தெரியுது?" மேலும் சந்தேகம் வலுத்தது அவனுக்கு.

"ஏனா நானும் அவளும் பிரெண்ட்ஸ்டா..‌ தினமும் பேசிட்டு இருக்கோம். இரு நான் அவளுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லிட்டு வரேன்.!" என்றவன் போனோடு குளியலறைக்குள் நுழைந்தான்.

"அதை ஏன் அவன் இங்கே நின்னு பேசல.. சம்திங்.!" முனகினான் பிரேம்.

மேல் தளத்தில் இருந்த அறை ஒன்றின் கதவை தட்டினான் சரத். மிருதுளா சொன்ன அறை இதுதானா என்று சந்தேகித்தான்.

அவனது சந்தேகம் மேலும் வளரும் முன் அறை கதவை திறந்தாள் மிருதுளா. கசங்கிய சுடிதாரில் கண்ணீரோடு இருந்தாள். அவளின் பூக்கள் கூட வாடிப் போய் இருந்தது.

சரத் உள்ளே வந்தான்.

"என்னாச்சி பேபி?" கவலையாக கேட்டபடி அவளின் முகம் நிமிர்த்தினான். மிருதுளா தேம்ப ஆரம்பித்தாள். கண்ணீர் கொட கொடவென கொட்டியது. அப்போதும் கூட அவனின் உயரமும் பருமனும் அவளின் மனதாங்கலை அதிகம் செய்தது.

"பேபி.." அவளின் கண்ணீர் கண்டு பதறினான் அவன். அவனின் பதற்றம் அவளின் மனதுக்குள்ளும் சிறு சலனத்தை ஏற்படுத்தியது. ஆனால் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டவள் கண்ணீரோடு அவனை ஏறிட்டாள்.

"என்னாச்சி தெரியுமா?" திணறலாக கேட்டவளை கவலையாக பார்த்தான் அவன்.

"யாராவது உன்னை ஏதாவது சொல்லிட்டாங்களா? சொல்லு அவங்களை இப்பவே கண்டம் துண்டமா வெட்டி போடுறேன்.!" என்று ஆக்ரோஷமானான். அவனின் கோபம் அவளுக்கு சிறு தைரியத்தை தந்தது‌.

"சி.. சித்து என்னை ரேப் பண்ணிட்டான்.!" அழுகையின் இடையே சொன்னவள் அரை கண்களை திறந்து அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனின் புருவம் சுருங்கியது. அவளை சந்தேகமாக பார்த்தான்.

"என்ன சொல்ற?" உருமினான். அவள் பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தாள். அவன் இப்படி காதோரம் கத்தா வைப்பான் என்று நினைக்கவே இல்லை அவள்.

"ஆமா.. அவன் என்னை ரேப் பண்ணிட்டான். நான் அவன்கிட்ட கெஞ்சி கதறுனேன், நான் சரத்தை லவ் பண்றேன், என்னை விடுன்னு சொன்னேன்.. ஆனா அவன் கேட்கவே இல்ல. அவன் என்ன பெரிய பருப்பான்னு கேட்டுட்டு என்னை.." மேலே சொல்லாமல் சத்தமாக அழுதாள்.

"அவன்.." சரத் குழம்பி போனான்.

"நான் சொன்னா கூட நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரியும். அவன் என்னை ரேப் பண்ணதை வீடியோவா எடுத்தான். அவன் தூங்கிய பிறகு அதுல கொஞ்சத்தை நான் என் போனுக்கு மாத்திட்டு வந்துட்டேன்.!" என்றவள் தன் போனை அவனிடம் நீட்டினாள். ராகுல் எடுத்த வீடியோ அதில் இருந்தது.

சித்து முத்தம் தரும் காட்சி அது. மிருத்யூதான் சித்துவின் முத்தத்தை வாங்கினான் என்பதை சரத் கண்டறிய மாட்டான் என்று முழுமையாக நம்பினாள் மிருதுளா.

"இப்பவாவது நம்புறிங்களா?" என கேட்டவளின் தலையை வருடியவன் ஆமென்று தலையசைத்தான். முகம் வாடியிருந்தது அவனுக்கு.

'அப்படின்னா சொன்ன மாதிரியே போய் சித்துவை கண்டம் துண்டமா வெட்டுடா.!' மிருதுளா மனதுக்குள் அலறினாள்.

"இட்ஸ் ஓகே பேபி. நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்.. இனி அவன் உன்னை தொட மாட்டான்.!" அவன் சொன்னது கேட்டு மிருதுளாவிற்கு அதிர்ச்சி தாக்கியது. அவள் எதிர்பார்த்தது இதையல்ல.

"பே.. பேச போறிங்களா?" நன்றாகவே நடித்தாள்.

சரத் அவளின் முகம் பார்த்தான். தலையை இன்னும் வருடி தந்தான்.

"அவனும் நானும் நிறைய முறை பொண்ணுங்களை ஷேர் பண்ணியிருக்கோம் பேபி. அவன் அதே மாதிரி உன்னையும் நினைச்சிருப்பான். நான் அவன்கிட்ட பேசுறேன். விடு.!"

மிருதுளா விழிகளை மூடி திறந்தாள்.

'நல்லா வருவிங்கடா நீங்க எல்லாம்.!' என்று நினைத்தாள்.

"ஆனா நீங்க என்னை மேரேஜ் பண்ணிக்க போறதா சொன்னிங்க.!" நாடகம் திசை திரும்பிய நிலையில் வேறு என்ன சொல்வது என்று அவளுக்கு பிடிபடவில்லை.

"அப்கோர்ஸ் பேபி.. உன் அழகு அப்படி. ஆனா உனக்காகவெல்லாம் நான் என் பத்து வருச பிரெண்ட்ஷிப்பை முறிச்சிக்க முடியாது.." என்றவனின் கரங்கள் சற்று கீழே இறங்கியது.

மிருதுளா நெளிந்தாள். அவனின் பிடியிலிருந்து விலக முயன்றாள்.

"அவன் ரேப் பண்ணது தப்புதான். என்கிட்ட கேட்டிருக்கலாம். ஆனா இனி அப்படி நடக்காது. பிலீவ் மீ.!" என்றவனை விட்டு ஓரடி பின்னால் விலகி நின்றாள்.

"ஒருவேளை நமக்கு மேரேஜ் ஆனா அப்புறம் உன் பிசினஸ் சரக்கு நல்லபடியா வளர உன் பார்ட்னர்ஸ்க்கு என்னை ஊறுகாயா தொட்டுக்க தருவதானே நீ?" சந்தேகமாக கேட்டவளை கண்டு சிரித்தான் அவன். அவனின் சிரிப்பே சொன்னது அவளின் சந்தேகம் உண்மை என்று.

'பெரிய மனுசன் மாதிரி இருக்கறவனெல்லாம் பெரிய மனுசன்தான்னு நம்புறவங்களை சொல்லணும்டா.!' அவள் முழுதாய் பீல் செய்து முடிக்கும் முன்பே அவளின் அருகே வந்து அவளின் பின்னங்கழுத்தை பற்றினான் சரத். அவன் தொட்ட இடம் நெருப்பாக எரிந்தது அவளுக்கு.

"அவன்தான் டேஸ்ட் பார்த்துட்டான் இல்ல.. இனி எனக்கு தடை சொல்ல மாட்டன்னு நினைக்கிறேன்.!" என்றவன் அவளை நிழல் போல நெருங்கி நின்றான். அவளின் கைகளை மேலும் கீழுமாக வருடினான். அருவெறுப்பு அதிகமானது மிருதுளாவுக்கு. வாந்தி வரும் போலிருந்தது. இதை விட கேவலமாக இதுவரை அவள் உணர்ந்ததே இல்லை‌.

"நான் பார்த்ததுலயே கேடு கெட்ட ஜென்மம் நீதான்டா.!"

"வாட் யூ மீன்.!" என்றவன் அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.

"நான் கெட்ட வார்த்தை பேச ஆரம்பிச்சா அப்புறம் எனக்கு நிறுத்த தெரியாதுடா.. ரொம்ப கேவலமா திட்டுவேன். என் வருங்கால கணவன் காதுல நான் பேசுற கெட்ட வார்த்தை விழ கூடாதுன்னும், அதனால அவன் என்னை சீப்பா நினைச்சிட கூடாதுன்னும் ரொம்ப கஷ்டப்படுறேன்.." என்றாள் பற்களை கடித்தபடி. அவளை அள்ளி அணைக்க முயற்சித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் சொன்னது புரியவே இல்லை.

சிரித்தான் சரத். "இட்ஸ் ஓகே பேபி.. எனக்கு கெட்ட வார்த்தை பிடிக்கும். நீ பேசு.. ஆனா இங்கே வேணாம்.. அங்கே பேசு.!" என்றவன் கை காட்டிய திசையை பார்த்தாள் மிருதுளா. கட்டில் இருந்தது. அவனை சாகடிக்க தோன்றியது அவளுக்கு.

"அங்கே போன பிறகு மீதியை பேசலாம்.." என்றவன் அவளை தூக்கினான். மிருதுளா அவனிடமிருந்து விடுபட முயன்றாள். ஆனால் அவன் நாலே எட்டில் நடந்து அவளை கட்டிலில் வீசினான்.

"அப்பா இடுப்பு வலிக்குது.." அவசரமாக எழுந்து அமர்ந்து இடுப்பை பிடித்தவள் எதிரில் இருந்தவனை முறைத்தாள்.

"கெடா மாடு மாதிரி ஆள் வளர்ந்திருக்கியே தவிர மூளை கொஞ்சமாவது வளர்ந்திருக்கா ***? உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு பதிலா ஆயிரம் பேரை தலைகீழா தூக்குல மாட்டி கொன்னுட்டு ஜெயிலுக்கு போவேன்டா நாயே.!" என்றாள் ஆத்திரத்தோடு.

சரத் ஆச்சரியமாக அவளை பார்த்தான். "வாவ் பேபி.. ரொம்ப அழகா பேசுற.. என்னை நீ கல்யாணம் பண்ணிதான் ஆகணும். ஆக வைப்பேன் நான்.!" என்றவன் அவளின் மீது பொத்தென்று விழுந்தான். நொடி நேரத்தில் பக்கத்தில் உருண்டு எழுந்து அமர்ந்து விட்டாள் மிருதுளா. கபடி ஆடுகிறானா என்று கூட சந்தேகம் வந்தது அவளுக்கு.

"*** *** மாதிரியே நடந்துக்கறான்.. இவனை மாதிரி ஒரு ***யை பெத்துதுக்கு பதிலா இவங்க அம்மா‌ இரண்டு குடும்பத்துக்கு வாடகை தாயா போயிருக்கலாம்.."

"நீ சொன்ன மாதிரியே உன் ஆளு டேஞ்சரான லூசேதான்ப்பா.." ஒளிந்தபடி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜீவன் அருகே இருந்த ராகுலிடம் இதை சொன்னான்.

"இது அவ காதுல விழுந்தா அவனுக்கு முன்னாடி நீதான் முதல் டெட்பாடி. வசதி எப்படி?" நக்கலாக கேட்டான் ராகுல்.

மிருதுளா பேசுவது அனைத்தும் சரத்துக்கு காமெடியாகவே இருந்தது. அனைத்தையும் ரசித்தான். "அப்புறம் பேசலாம் பேபி.!" என்றபடி கை பிடித்து இழுத்தான்.

"அம்மாவை பத்தி பேசினாலும் அமைதியா இருக்கான். கட்டிக்கற போற பொண்ணை இன்னொருத்தன் ரேப் பண்ணிட்டான்னு கேட்டும் அமைதியா இருக்கான். நீ ஏதோ கிராஸ்ன்னு நினைக்கிறேன். உன் அம்மா உன்னை ஜூவுல இருந்து எடுத்துட்டு வந்திருப்பாங்க.‌ கண்டிப்பா நீ பாதாள லோகத்து பைத்தியக்காரனுக்கு பிறந்தவனாதான் இருப்ப.." பேசிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் விழுந்தது ஒரு அறை.

"ஓவரா பேசுற.. இதையெல்லாம் அப்புறம் கேட்கறனேன்னு சொன்னேன் இல்ல.!" என்றவன் அவளை கட்டிலில் தள்ளினான். பற்களை கடித்தாள் மிருதுளா. அவனின் காலின் இடையே ஓங்கி ஒரு உதை விட்டாள்‌. அமர்ந்த வண்ணமே அவனின் தாடைக்கு ஒரு உதையை தந்தாள். அடுத்த உதை கழுத்துக்கு விழுந்தது.

தடுமாறி பின்னால் நகர்ந்து நின்றான்‌ அவன். அவளை அதிர்ச்சியோடு பார்த்தான். என்னவோ சரியில்லை என்று இப்போதேதான் அவனுக்கு தோன்றியது. பெண் விசயத்தில் எப்படி வேண்டுமானாலும் இருப்பவன்தான் அவன். ஆனாலும் இவள் வருங்கால மனைவிதானே என்ற உரிமையில் சற்று அதிகமே நம்பி விட்டான்.

"பைத்தியம்.!" எழுந்து நின்றவள் சண்டை போடுவது போல கையை முன்னால் கொண்டு வந்தாள்.

"உன்னை இப்படியே வெளியே விட்டேன்னா என் பேரை மாத்திக்கிறேன்டா.!" என்றவளின் கண்களில் கோபம் மின்னியது.

சிரித்தான் சரத். தன் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை மெள்ளமாக எடுத்தான்.

"நீ ரொம்ப மோசம். நீ எனக்கு வேணாம். உன்னை போட்டு தள்ள போறேன்.!" என்றான். அவனின் துப்பாக்கி இருந்த கரத்தில் வந்து துளைத்தது ஒரு தோட்டா. சரத் வாய் திறந்து கத்த நினைத்த நேரத்தில் தன் துப்பட்டாவை எடுத்து அவனின் வாயில் வைத்து அழுத்தினாள் மிருதுளா. அவளை தாக்க நினைத்து தனது இடது கையை உயர்த்தினான் சரத். அந்த கையிலும் வந்து பதிந்தது இன்னொரு குண்டு. அவனின் காலில் உதைத்து கீழே தள்ளினாள் மிருதுளா.

"யோவ் லூசு சீனியர்.. நீயெல்லாம் ஏன்ய்யா போலிஸான? இந்த நாய் உள்ளே வந்த உடனே சுடாம நடக்கறதை ரசிச்சி பார்த்துட்டு இருக்க?" கடுப்பாக கேட்டபடி ராகுல் நின்றிருந்த இடத்தை திரும்பிப் பார்த்தாள்.

துப்பாக்கியோடு முன்னால் வந்தான் ராகுல். "இது சவுண்ட் ப்ரூஃப் ரூம். இந்த வீட்டுல எல்லா ரூமும் அப்படிதான்.!" அவள் சொன்னது காதிலேயே விழாதது போல சரத்தின் அருகே வந்தான்.

சரத்தின் வாயிலிருந்த தன் துப்பட்டாவை பிடுங்கினாள் மிருதுளா. "இதை பெட்ரோல் ஊத்தி கொளுத்த போறேன்.!" என்றாள்.

"யாருடி நீ? இங்கே என்னவோ தப்பா இருக்கு.!" என்றவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுக்க முயன்றான்.

"துப்பாக்கியை கொடுங்க சீனியர்.." ராகுலின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கியவள் எதிரில் இருந்தவனின் கழுத்தில் துப்பாக்கியை பதித்தாள்.

"இவன் செத்தா மேரேஜ் நின்னுடும். தேங்க் யூ சீனியர்.." என்றாள். ராகுல் அவளின் கையை பிடிக்க முயலும் முன் டிரிக்கரை இழுத்து விட்டாள் மிருதுளா.

"வாவ்.. எனக்கும் துப்பாக்கி யூஸ் பண்ண தெரியுது. சீனியர் ப்ளீஸ் இதை என் குரங்கு கூட்டத்துக்கிட்ட சொல்லுங்க.. நீங்க சாட்சியா இருந்தேன்னு சொன்னாதான் அவங்க நம்புவாங்க.." என்றவள் துள்ளி குதித்து சின்னதாக நடனமாடினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

*எரிமலையின் மீது நடனமாடியது வெதின்ஸா சீரிஸ்ல வந்த சனேத்விப்பா.😁
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN