குரங்கு கூட்டம் 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அர்விந்த் எழுந்து நின்று கை காலை அசைத்தான்.

"தம்பி.. நாலு டீ எடுத்துட்டு வாப்பா.!" மிருதுளாவின் குரலில் திரும்பிப் பார்த்தான்.

அவன் பதில் சொல்லும் முன்பே அவன் கையில் தேனீர் கோப்பைகளால் நிறைந்த தட்டு வைக்கப்பட்டது.

எடுத்துக் கொண்டு அவள் பின்னால் நடந்தான். மாடியின் அனாதை வராண்டாவில் வந்ததும் அர்விந்தின் கையை பற்றினாள் மிருதுளா.

"அர்வி.. நான் ஒரு விசயம் சொல்ல போறேன்.. நீ நம்பவே மாட்ட.." என்றாள்.

"என்ன?" சலிப்பாய் கேட்டான் அவன்.

"நான் அந்த சரத்தை கொன்னுட்டேன்." அவள் பெருமையொடு சொன்னதை கேட்டு கரம் நழுவியது.

"என்ன?"

"ஆமா.. சீனியரோட துப்பாக்கியை வச்சி டிஸ்யூல்ன்னு சுட்டுட்டேன். எனக்கு துப்பாக்கி சுட தெரியும்ன்னு இன்னைக்கேதான் தெரிஞ்சது அர்வி. கையெல்லாம் பரபரன்னு இருக்கு. இந்த நாட்டுல உள்ள மொத்த ரவுடிகளையும் என்கவுண்டர் பண்ணனும்ன்னு ஆசையா இருக்கு.!" என்றாள்.

"போதும் நிறுத்து.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"நீயெல்லாம் விளங்கவே மாட்ட.. உன்கிட்ட அப்புறம் பேசுறேன். நாம இங்கே நின்னு பேசினா நமக்குதான் ஆபத்து. நான் போன் பண்றேன்.!" என்றவன் தட்டை அவள் கையில் திணித்து விட்டு திரும்பி நடந்தான்.

சித்து பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

"சம்பத்.. சரத்தை யாரோ கொன்னுட்டாங்க.!" என்றான்.

"என்ன?" அதிர்ச்சியில் கத்தினான் அவன்.

சித்து தன் முகத்தை துடைத்துக் கொண்டான். நெற்றியில் வியர்வை பூத்துக் கொண்டே இருந்தது.

"ஆமா சம்பத். யார்ன்னு தெரியல. ஆட்களை தேட சொல்லி இருக்கேன். இவ்வளவு பாதுகாப்பான வீட்டுல ஒரு கொலையாளி புகுந்ததை என்னால நம்பவே முடியல. சரத்தை கொன்னது யாரா இருந்தாலும் சரி. அவங்க சாவு என் கையாலதான்." என்று சூளுரைத்தான்.

மறு முனையில் சற்று நேரம் மௌனமாக இருந்தான் சம்பத்.

"நான் நேர்ல வந்து பார்க்கறேன். விசயம் வெளியே போக வேண்டாம். ஆட்களையும் வெளியே அனுப்பாத.!" என்று சொல்லி‌விட்டு போனை வைத்தான்.

சம்பத்தின் அருகில் நின்றிருந்த கையாள் அவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.

"ஏன் சார் இப்படி? அது உங்க சொந்த பிரதர். அவரை கொன்ன சித்துவை தேடி போய் சாகடிப்பிங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க இவ்வளவு அசால்டா இருங்கிங்க.!" என்றான்.

சம்பத் நகைத்தான்.

"ஏனா இந்த கல்யாணம் முக்கியம். கல்யாண நாள் அன்னைக்கு பண்ண போற ப்ராஜெக்ட் சைன்ஸ் அவ்வளவு முக்கியம்.. எல்லாம் முடியட்டும். அப்புறம் அந்த வீட்டுல ஒரு உயிரை கூட உயிரோட விட போறது இல்ல நான்.." என்றவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தான் அருகில் இருந்தவன்.

"நீ என் பிரதர் மேல ரொம்ப பாசமாக இருக்க. அது தப்பு இல்ல. ஆனா என்னை எதிர்த்து கேள்வி கேட்கறது.." அருகில் இருந்தவனின் முகம் யோசனையில் சுருங்கியது. அதே நேரத்தில் சம்பத்தின் கை துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு அவனின் நெற்றியில் துளைத்தது. "ரொம்ப தப்பு.!" என்றான் சம்பத். உயிரற்று கீழே விழுந்தவனை காலில் உதைத்து தள்ளி விட்டு நடந்தான்.

"இந்த பாடியை டிஸ்போஸ் பண்ணுங்க. என்கிட்ட கேள்வி கேட்க ஆசைப்படுறவங்க நாளைக்கு வந்து கேளுங்க. நான் இன்னைக்கு பிசி.!" என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.

சித்துவின் வீட்டின் முன் வந்து நின்றது இரண்டு கார்கள். கேட் திறந்த உடன் சம்பத்தின் கார் உள்ளே சென்றது. ரோஜா குழந்தையோடு கீழே இறங்கி நின்றாள். டிரைவரிடம் தலையசைத்து விட்டு உள்ளே நடந்தாள்.

"யாரு நீ?" வாசலிலேயே இரண்டு தடியர்கள் மறித்து கேள்வி கேட்டனர்.

"நான் சிபியோட பிரெண்ட்.!" என்றவள் தன் போனை நீட்டினாள். போனில் பேசிய சிபி அவளை உள்ளே அனுமதிக்குமாறு சொன்னாள்.

தடியர்கள் இருவரும் நகர்ந்து நின்றனர். ரோஜா வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த அது நேரத்தில் அவளோடு சேர்ந்து உள்ளே நடந்தான் சம்பத்.‌

வீடு பரபரப்பாக இருந்தது. கல்யாண வீடு இப்படிதானோ என்று ரோஜா நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவளின் கையை பற்றியது ஒரு கரம். நிமிர்ந்துப் பார்த்தாள். மிருதுளா நின்றிருந்தாள்.

"மிருது.." ஆசையாய் அழைத்தவளை கண்டுக் கொள்ளாமல் உள்ளே இழுத்துச் சென்றாள் அவள். மாடியின் அறைக்குள் சென்றதும் அவளை விட்டுவிட்டு கதவை தாழிட்டாள்.

நெஞ்சை பிடித்தாள்.

"மிருதுளா.." குழந்தையை ஒற்றை கையால் அணைத்திருந்த ரோஜா மிருதுளாவையும் மறுகரத்தால் அணைத்துக் கொண்டாள்.

மிருதுளாவின் கரங்களும் அவளை தழுவியது.

"இப்பதான் முகம் கழுவிட்டு வந்தேன். அதுக்குள்ள இப்படி ஒரு கன்றாவி ஹக்கை பார்க்கணுமா?" மிருதுளாவின் குரலில் திகைத்து விலகி நின்றாள் ரோஜா. குளியலறை வாசலில் நின்றிருந்தாள் மிருதுளா. இது யார் என்ற சந்தேகத்தோடு நிமிர்ந்துப் பார்த்தாள். குழப்பமாக இருந்தது.

"ஹாய் ரோஜா.." மிருத்யூவின் குரலில் விழிகள் இரண்டும் விரிந்தது அவளுக்கு.

"ம்ம்.." தயங்கியவளை கண்டு சிரித்தவன் "நான்தான்.. சில நாளைக்கு ராணி கெட்டப்.. ஆனா எப்பவும் நான் சிறந்த ராஜாதான்.!" என்றான் தலை சாய்த்து கூந்தலை ஒரு புறம் வருடி விட்டபடி.

"ரைமிங்ன்னு நினைச்சி கழுதை எதையோ பேசிட்டு இருக்கு.. நம்ம காது தீயாம இருந்தா சரிதான்.!" என்று முனகியபடியே அவர்களின் அருகே வந்த மிருதுளா "குழந்தையை கொடு.." என்று கையை நீட்டினாள்.

"தூங்கிட்டா.." என்றபடியே குழந்தையை தந்தாள் ரோஜா.

"வாவ்.. அழகா இருக்கு பாப்பா.." வியந்தாள். குழந்தையின் கன்னங்களில் முத்தமிட்டாள். குழந்தையை தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தாள். போர்வையை போர்த்தி விட்டாள்.

"சிபி எங்கே?" சுற்றம் முற்றும் பார்த்துவிட்டு கேட்டான் மிருத்யூ.

"நிலவரத்தை தெரிஞ்சிட்டு வர போயிருக்கா.!" என்றவள் விசிலடித்தபடியே குழந்தையின் முகத்தை பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ரோஜாவுக்கு தண்ணீரை நீட்டினான் மிருத்யூ. "தாகமா இருப்ப.!" என்றான் கரிசனத்தோடு.

"ச்சே.. பிரேமுக்கு இவ்வளவு அழகா குழந்தை பிறக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா நான் அவனையே கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டு இருந்திருப்பேன்.!" மிருதுளா சொன்னது கேட்டு குடித்த தண்ணீர் முழுக்க தலையில் ஏறிக் கொண்டது ரோஜாவுக்கு. அருகில் இருந்த மிருத்யூ மெதுவாக அவளின் தலையை தட்டினான்.

"இட்ஸ் ஓகே பேபி.." என்றான்.

அதை காணுகையில் மிருதுளாவுக்குதான் வாந்தி வருவது போலிருந்தது. ஆனால் அவள் சொன்னது கேட்டு இவர்கள் இருவருக்கும் இதய நோயே வந்து விட இருந்தது.

"பைத்தியக்கார பக்கி.. இதை மட்டும் சீனியரும், சிபியும் கேட்டாங்கன்னா ஏற்கனவே இருக்கும் பிரச்சனை இன்னும் பெருசாகும்.!" என்றான் மிருத்யூ.

"ஆனா இந்த பாப்பாவை பாரு.. அவ்வளவு க்யூட்டா.. அவ்வளவு அழகா இருக்கா.." விழிகளை சிமிட்டியபடி சொன்னாள் அவள்.

"எல்லா குழந்தைகளும் அழகுதான் மிருது.." என்றபடி வந்து கட்டிலில் அமர்ந்தாள் ரோஜா. அறையை சுற்றி பார்த்தாள். அழகாய் இருந்தது. பெரிய அறை. புகைப்படத்தில் இருந்த சிபியும் கூட பேரழகாகதான் இருந்தாள். பிரேமுக்கு ஏற்ற ஜோடியாகதான் தெரிந்தாள்.

ராகுல் நிமிர்ந்தபடி நின்றிருந்தான். அவன் முன் இருந்த ரூபாவதி "போலிஸ்தானே நீ? வீட்டுல கொலை நடந்திருக்கு.. என்ன மேன் பண்ணிட்டு இருந்த நீ? உனக்கு இருக்கற வேலையை உன்னால சரிய செய்ய முடியாதா?" என்றுக் கத்தினாள்.

"நீங்க சொன்னிங்கன்னுதான் நானும் ஜீவனும் பேஸ்மண்டுல இருந்த பொருட்களை சுத்தம் செய்திட்டு இருந்தோம் மேடம்.!" என்றான் அமைதியாக. அந்த நேரத்தில் அவர்களுக்கு அந்த வேலைதான் தந்திருந்தாள் அவள். ஆனால் இவர்கள் இருவரும் அந்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டு வந்து சரத்தின் கதையையும் முடித்து விட்டனர்.

"எனக்கு என்னவோ இவன் மேலதான் சந்தேகம். சிபியோட பிரெண்ட் இவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணுன்னு பிரச்சனை கூட பண்ணான். அந்த பகையில் ஏதாவது செஞ்சி இருப்பானோ?" அடியாள் ஒருவன் தன் சந்தேகத்தை சொன்னான்.

அறையின் நடுவில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த சித்து எழுந்தான். ராகுலின் அருகே வந்தான்.

"அந்த அளவுக்கு இவனை பார்க்காத.. இவன் சரியான தத்தி.. கொலை பண்ற அளவுக்கு மூளை கிடையாது.!" என்றாள் ரூபாவதி.

ராகுல் கடித்த உதட்டை பற்களில் இருந்து விடுவிக்கவில்லை. அவனுக்கு கொலை வெறி வந்தது.

"சித்தி.." ரூபாவதியை தனியே வர சொல்லி சைகை காட்டினான் சித்து. அருகில் வந்தவளிடம் "எது என்னவோ.. இப்ப சம்பத் வந்து கேட்டா பழி போட ஓர் ஆள் வேணும். இவன்தான் நல்லா வசமா காரண காரியங்களோடு சிக்கி இருக்கான். இவனையும் விட்டுட்டா அப்புறம் நான் சம்பத்க்கு யாரை கை காட்டுவது?" எனக் கேட்டான்.

ரூபாவதி யோசித்துவிட்டு ராகுலை பார்த்தாள். "சரி.. இவன்தான் அந்த பியான்சி கோபத்துல கொன்னுட்டான்னு சொல்லிடு. நிஜ கொலையாளி கிடைச்சதும் அவனை என் கையாலயே அடிச்சிக் கொல்றேன் நான். யார் வீடுன்னு வந்து இப்படி ஒன்னை பண்ணியிருக்கான்?" என்றாள் ஆத்திரத்தோடு.

ராகுலும் ஜீவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நேரத்தில் அந்த அறைக்குள் வந்தான் சம்பத்.

அறையின் நடுவில் தரையில் கிடந்தான் சரத். அவனை சுற்றி ரத்தம் வெள்ளம் போல கிடந்தது. சித்துவின் ஆட்கள் பலர் அந்த அறைக்குள் இருந்தார்கள். சம்பத்தின் சொந்த மருத்துவமனையை சேர்ந்த சில மருத்துவர்களும், சம்பத்தின் ஆட்கள் சிலரும் சரத்தின் உடலையும் அந்த இடத்தையும் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள்.

"என்ன ஆச்சி?" ரோபோட் குரலில் கேட்டான் சம்பத்.

"இந்த போலிஸ் பண்ண வேலை இது. இவனோட பியான்ஸியை சரத் கட்டிக்க நினைச்சான். அதுக்காக இவன்தான் திட்டம் போட்டு பழி வாங்கிட்டான்.." என்றான் சித்து.

ராகுலுக்கு அதிர்ச்சியில் இதயம் உறைந்தது. கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயந்தான்.

"சரத்தோட மரணத்துக்கு நான் இப்பவே பழி வாங்குறேன்.." என்ற சித்து தன் துப்பாக்கியை எடுத்து ராகுலின் நெற்றியில் வைத்தான்.

'இப்படியா நமக்கு விதி வந்து சேரணும். இந்த டைம்லயாவது குமரன் சார் ஹீரோ மாதிரி வந்து என்னை காப்பாத்த கூடாதா?' என்று நினைத்தான்.

ஆனால் சித்துவின் கரத்தை பற்றினான் சம்பத். தன் கையில் இருந்ததை காட்டினான். பிளாஸ்டிக் டப்பாவிற்குள் இருந்த துப்பாக்கி குண்டு அது.

"இது போலிஸ் துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு இல்ல சித்து. வேற யாரோ பண்ணி இருக்காங்க. தெளிவா விசாரிக்கணும்.!" என்றான்.

சித்து சரியென தலையசைத்து விட்டு ராகுலை விட்டு நகர்ந்தான்.

'நீயே கொன்னுட்டு என்கிட்ட நாடகம் ஆடுறியாடா? உன் துப்பாக்கி குண்டுக்கும் போலிஸ் துப்பாக்கி ‌குண்டுக்கும் கூட வித்தியாசம் தெரியாதவன் நான்னு நினைச்சியா? உன் சாவு இன்னைக்கே எழுதப்பட்டுடுச்சி சித்து. என் பிரதரோட சாவோடுதான் உன் சாவும் பிணைக்கப்பட்டு இருக்கு.. எனக்கு மரணம் ஆரம்பம்.!' என்று மனதுக்குள் சவால் விட்டான்.

'நாசமா போனவனுங்க.. வந்த இடத்துல வம்பு மேல வம்பு இழுத்து வச்சி தொலையிறானுங்க. ஒரு காதலை வாழ வைக்க வந்து கடைசியில் எல்லோரும் ஒன்னா சாக போறோம் போல.!' மனதுக்குள் புலம்பியபடியே வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தான் அர்விந்த்.

கொலுசு சத்தம் கேட்பது போலவே இருந்தது. 'நானே டென்சன்ல இருக்கேன். இந்த டைம்ல கொலுசு சத்தத்தை ஞாபகம் பண்றியே மூளையே.. உனக்கு அறிவு இருக்கா?' என திட்டிக் கொண்டான். ஆனால் கொலுசின் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது.

குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தான். ஸ்வேதா தூரமாக நின்றபடி இவனை பார்த்து புன்னகைத்தாள்.

'அடடா.. வசந்தம் வந்து வாசல் கதவை தட்டுதே!' அவசரமாக எழுந்து நின்றான்.

"ஏன்டா?" பக்கத்தில் அமர்ந்து பூண்டு உரித்துக் கொண்டிருந்தவன் கேட்டான்.

"வயித்தை கலக்குது அண்ணா.." என்றான்.

"ஒரு நாளைக்கு எத்தனை தடவைடா?" சலிப்போடு கேட்டவனிடம் "இரண்டு டைம்தான் அண்ணா.." என்று விட்டு ஓடினான்.

'வெங்காய ஸ்மெல்லே பரவால்ல. பூண்டு ஸ்மெல் ரொம்ப மோசம்!' என நினைத்தபடியே ஸ்வேதாவை பின் தொடர்ந்தான்.

வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தின் ஒரு புதரின் பின்னால் சென்று சாய்ந்து நின்றவள் "நாங்க திருட வந்திருக்கோம் சரி.. ஆனா நீங்க கொலை செய்ய வந்திங்கன்னு சொல்லவே இல்ல.!" நக்கலாக கேட்டாள்.

அர்விந்த் விழித்தான். எப்படி தப்பிப்பது என்று யோசித்தான்.

"என்ன உளறுற?" என்று சிறு குரலில் கர்ஜித்தான்.

"நான் கேட்டேன்.. நீயும் ஒரு பொண்ணும் பேசிக்கிட்டதை.."

அர்விந்த் மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN