பௌர்ணமி 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"என் அப்பாவுக்கு சபலம் மாமா.. சறுக்கல் எல்லோருக்கும் உண்டு.! அவர் கொஞ்சம் சறுக்கியதுக்கு என் அம்மா செத்துப் போய் அவருக்கு தண்டனை தந்திருக்காங்க. நீங்க எல்லாம் ஒதுக்கி வச்சிருக்கிங்க. அவர் அனாதையா இருந்து அனாதையாகவே செத்துப் போயிருக்காரு.!" என்றாள் பூர்ணிமா கோபத்தோடு.

"உன்னை மாதிரி ஒரு முட்டாளை நான் எங்கேயும் பார்த்ததே இல்ல பூரணி.. உனக்கு ஏன் இந்த அளவுக்கு.." மேலே சொல்லி முடிக்கும் முன் அவளின் புடவை முந்தானையில் பற்றி எரிய ஆரம்பித்த நெருப்பை பார்த்துவிட்டான் பூமாறன். எழுந்து ஓடி வந்தான்.

"பொய்யை கண்டுபிடிக்க தெரியாதவங்க நீங்கதானே தவிர.." எழுந்தோடி வந்தவனை கண்டு குழம்பினாள் பூர்ணிமா. சேலையின் நெருப்பை அப்போதுதான் பார்த்தாள் அவள்.

"அம்மா.. அம்மா.." பயந்து கத்தினாள்.

"கத்தாதே.. முக்கியமா அசையாத பூரணி.." எச்சரித்தபடியே அருகே வந்தவன் தரையில் கிடந்த அழுக்குத் துணியை இரு கைகளிலும் சுற்றிக் கொண்டு அவளின் புடவை நெருப்பை இரு கைகளால் தட்டினான். அதை அணைக்க முற்பட்டான். அந்த அழுக்கு துணியை விளக்கிற்கு எண்ணெய் விட்டு பிறகு கை துடைக்க பயன்படுத்திக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. அதனால் அவனின் கைகளும் சுட்டது. ஆனாலும் எப்படியோ அவனின் போராட்டத்தில் நெருப்பு அணைந்து விட்டது. கொஞ்சம்தான் நெருப்பு என்றாலும் கூட அதிகம் பயந்து விட்டாள் பூர்ணிமா.

பெருமூச்சோடு தரையிலிருந்து எழுந்து நின்றான் பூமாறன். கைகளில் கொப்புளங்கள் எழுந்து விட்டது. எண்ணெயால் ஆங்காங்கே நனைந்திருந்த துணி என்பதால் கைகளில் எரிச்சல் கூடியது.

"ஓ மை காட்.!" தலையை உதறியபடி எதிரே நின்றிருந்தவளை பார்த்தான். பயத்தில் உறைந்து அழுதுக் கொண்டிருந்தாள்.

"பூரணி.." அவளின் தோளில் தட்டினான். கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரோடு அவனைப் பார்த்தவள் தீராத பயத்தின் காரணமாக அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"மாறா மாமா.." என்று அழ ஆரம்பித்தாள்.

'சின்ன வயசுல அழுத மாதிரியே ஓவர் ரியாக்ட் பண்ணுவாளோ.!' பூமாறன் யோசித்து முடிக்கும் முன்பே அவளின் அழுகையின் சத்தம் அதிகமானது.

மொத்த வீட்டுக்கும் கேட்கும் படி அழுதாள்.

'ஆத்தி.. இவ அழுது ஊரை கூட்டிடுவா போலிருக்கே.!' என நினைத்தவன் அவளின் முதுகை வருடினான்.

"ஒன்னும் இல்ல.. நெருப்பு அணைஞ்சிடுச்சி. பயப்படாத.." என்றான்‌ சிறு குரலில்.

"ஆனா நான் பயந்து போயிட்டேன்.!" ராகமாக இழுத்து அழுதாள்.

'யார்தான் பயப்பட மாட்டாங்கன்னு இவ சொல்லிட்டு இருக்கா?' என நினைத்தவன்‌ "அதான் நெருப்பு அணைஞ்சிடுச்சே.. உனக்கும் ஒன்னும் ஆகல இல்ல.. அமைதியா இரு.!" என்றான்.

அவளை சமாதானம் செய்து முடிக்க அவனுக்கு அரை மணி நேரம் ஆனது.

அவளை உடை மாற்ற வைத்து படுக்கையில் படுக்க வைத்தான். அருகில் அமர்ந்து கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருந்தான். அவளின் பயத்தையும் கண்ணீரையும் நிறுத்துவது பெரும்பாடாக இருந்தது அவனுக்கு.

"எனக்கு பயமா இருக்கு மாமா.. இங்கேயே இருக்கிங்களா?"

தன் கையை பார்த்தான். இவளால் இன்னும் மருந்து போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

"சரி.!" என்றான். கையை கொஞ்ச நேரம் பச்சை தண்ணீரில் வைத்தால் கூட போதும் என்றிருந்தது அவனுக்கு.

'அத்தனை பேச்சு பேசுறா.. ஆனா இப்படி அழறா.. புதுசா யாராவது பார்த்தா சுத்தமா நம்பவே மாட்டாங்க இவளை.!'

அழுது அழுதே தூங்கிப் போனாள் அவள்.

அவளது அறையை விட்டு வெளியே வந்தான். கடைத்தெரு வரை சென்று விட்டுத் திரும்பி வந்த அல்லி பூமாறனின் முக சோர்வு கண்டு என்னவென்று கேட்டாள். நடந்ததை விவரித்தான்.

"கையை இப்படி சுட்டுக்கிட்டியே தம்பி.." வருந்தினாள் அல்லி.

"உங்களுக்கு கூட தெரியுது. ஆனா அவளுக்கு சுத்தமா கண் தெரியல.!" புலம்பியவன் "நான் கிளம்பறேன்.. அவளை பார்த்துக்கங்க.!" என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பாலாவுக்கு அழைத்தான். விசயத்தை சொன்னான். பதறினான் அவன்.

"அவளுக்கு துளி கூட காயம் ஆகல அண்ணா.. பயப்படாத.. எனக்குத்தான் கையில் காயம்.!" என்றான்.

"ஹாஸ்பிட்டல் போய்ட்டு வாடா.." அக்கறையாக சொன்னான் அவன்.

"ம். போறேன்.. ஆனா உன் பொண்டாட்டி மேல எனக்கு பயங்கர கோபம். அவங்க அப்பாவுக்கு எப்படி சொம்பு தூக்கறா தெரியுமா? அவளோடு பேசவே பிடிக்கல எனக்கு. ஐ ஹேட் ஹேர்.. இவளை மாதிரி ஒருத்தியை எதுக்கு நீ கல்யாணம் செஞ்ச? மலர் அத்தை சாவு, முல்லை அத்தையோடு இத்தனை வருச போராட்டம் எல்லாத்தையும் ஒரே வார்த்தையில் சிதைச்சிட்டா அண்ணா.. சபலம் வந்தா தப்பு கிடையாதாம். அவங்க அப்பனுக்கு நாமதான் கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி புத்தி சொல்லி இருக்கணுமாம்.!" என்றான் எரிச்சலாக. கையில் இருந்த எரிச்சலை விட மனதின் எரிச்சல் அதிகமாக இருந்தது.

அவனும் பெருமூச்சு விட்டான். "எனக்கும் அதான் கடுப்பு. அங்கிருந்து வந்ததுல இருந்து நான் அவக்கிட்ட சரியா பேசவே இல்ல மாறா.." என்று பாலாவும் புலம்பி தீர்த்தான்.

பூமாறன் அழைப்பை துண்டித்துக் கொண்ட பிறகு மனம் கேட்காமல் பூர்ணிமாவுக்கு அழைத்தான் பாலா.

தூக்கத்திலிருந்து எழுந்து போனை எடுத்தாள்.

"ஹலோ பாலா.." என்றாள். அதற்குள் பயம் சற்று குறைந்து விட்டிருந்தது.

"எப்படி இருக்க?"

"ம்.!"

"அதான் ஒன்னும் ஆகல இல்ல. பயப்படாம இரு.. நம்ம வீட்டுக்கு போ.. நான் வரும் வரையாவது நம்ம வீட்டுல இரு.!" என்றான் கனிவோடு. எத்தனை மனத்தாங்கல் இருந்தாலும் அவளின் நலம் தேவைப்பட்டது அவனுக்கு.

"மூணு மாசம் முடியாம நான் எங்கேயும் வர மாட்டேன் பாலா.." அதே பழைய பல்லவியை பாடினான்.

"கொஞ்சமாவது யோசி பூர்ணி.. இதே மாறன் அந்த டைம்ல அங்கே இருந்ததால ஆச்சி. அவன் இல்லன்னா என்னாகியிருக்கும்?" என்றுக் கேட்டான்.

"ஆனா இவர் என் அப்பா.."

"லூசு மாதிரிதான் பேசுவியா நீ? அவர் செத்துட்டாரு. நான் இல்லன்னு சொல்லல‌. நீ அவருக்கு ரெஸ்பெக்ட் தர நினைச்சா எனக்கு அது பிரச்சனை இல்ல.. ஆனா அவர் பொய் சொல்லி இரண்டு அத்தை வாழ்க்கையையும் அழிச்சிருக்காரு.."

"செட் அப் பாலா.. ஒரு மனுசன் பொய் சொன்னா கூட அதை கண்டுபிடிக்க முடியாதா உங்களால? அவர் இத்தனை வருசமும் மனசுல எவ்வளவு வெந்திருப்பாருன்னு ஒரு செகண்டாவது யோசிச்சியா? தப்பு செஞ்சது நீங்க. ஆனா தண்டனை அவர் தனியா அனுபவிச்சிருக்காரு. இதுக்கு நீங்க.." அவள் மேலே சொல்லும் முன் இணைப்பை துண்டித்துக் கொண்டான் அவன்.

"இவளை இந்த அளவுக்கு நான் வெறுப்பேன்னு கனவுல கூட நினைக்கவே இல்ல.!" போனை தூக்கி படுக்கையின் மீது எறிந்தான்.

தலையை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தான். யோசிக்கவே பிடிக்கவில்லை.

போன் ஒற்றை பீப் சத்தத்தில் நின்றுப் போனது. எடுத்தான். அவனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருக்கும் வாட்சப் குரூப்பில் புகைப்படங்கள் சில பதிவேற்றப்பட்டு இருந்தன.

பூமாறனும் பூர்ணிமாவும் அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் அது‌. ரோசினிதான் பதிவேற்றி இருந்தாள்.

"பாலா மாமாவை தேடி போனேன். ஆனா அவர் இல்ல. திரும்பி வந்தேன். ஆனா கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் தாகமாக இருந்தது. திரும்பிப் போய் பார்த்தா இப்படியொரு கன்றாவி.." என்று எழுதியிருந்தாள்.

பாலா பற்களை அரைத்தான்.

"அந்த குடும்பமே அப்படிதான்.. இப்ப கூட பாரு.. பாலா மெஜேஸை பார்த்த பிறகு என்ன சொல்வான் தெரியுமா 'இரண்டு பேருக்கும் நடுவுல எந்த தப்பான உறவும் இல்ல.. சும்மாதான் கட்டிப்பிடிச்சிட்டு இருந்தாங்க'ன்னு சொல்வான்.!" என்றான் பெரியப்பா மகன்.

"ஆமா அண்ணா‌.. சரியான *** குடும்பம்.. அவங்களுக்கு அதெல்லாம் சாதாரணம்.." என்றான் சித்தப்பா மகன்.

பாலா ரோசினிக்கு அழைத்தான்.

"ஹலோ மாமா.." என்றவளின் குரலில் எகத்தாளம் கொஞ்சம் இருந்தது.

"உனக்கு எதுக்கு எங்க வீட்டு வேலை? இன்னும் அஞ்சி நிமிசத்துல மொத்த போட்டோவையும் டெலிட் பண்ற.. அந்த போட்டோஸ் யார் யார் போன்ல சேவ் ஆகியிருக்கோ அத்தனை இடத்துலயும் அழிஞ்சி போகணும். யார்க்கிட்டயாவது போட்டோ இருப்பது தெரிஞ்சதுன்னா அப்புறமா நான் உன்னை சும்மா விட மாட்டேன்.!" எச்சரித்தான்.

"ஆனா மாமா.. பெரிய மாமா சொன்ன மாதிரி இவ்வளவு சொரணை கெட்டு இருக்கணுமா நீங்க? நானா இருந்திருந்தா இரண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்பேன்.!"

"பிடிச்சவங்களை வெட்டிட்டு ஜெயில்ல உட்கார்ந்து நினைச்சி சாவ.. ஆளையும் மூஞ்சியையும் பாரு.. உனக்கு என்ன தெரியும்ன்னு இப்படி தேவையில்லா ரூமரை பரப்பி விட்டுட்டு இருக்க?" என்று எரிந்து விழுந்தான்.

"நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்றிங்க.!?" வியப்பாக முணுமுணுத்தாள்.

"என் பேமிலி மேட்டர் உங்களுக்கு தேவையில்லாத ஒன்னு.. அதனால மரியாதையா எல்லா போட்டோஸையும் அழி.. இல்லன்னா நான் போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன். என்னை பத்தி உனக்கு கொஞ்சமாவது தெரியும்ன்னு நினைக்கிறேன்.!" என்றான்.

"அப்படியெல்லாம் அழிக்க முடியாது.. இருங்க நீங்க மிரட்டியதை இரண்டு தாத்தாக்கள்கிட்டயும் சொல்றேன்!" என்றவள் அத்தோடு இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

குரூப்பில் அதற்குள் எழுபத்தியெட்டு செய்திகள் நிறைந்து விட்டது. இத்தனை நாளாக செத்திருந்த சொந்தங்கள் கூட வசைப்பாட உயிர்பெற்று வந்திருந்தன.‌

பாலாவுக்கு கோபம் தலைக்கேறியது. பூமாறன் அழைத்தான்.

"அண்ணா.. இவங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? முக்கியமா ரோசினிக்கு எதுக்கு இவ்வளவு வன்மம்?"

"யோக்கியம் மாதிரி பேசாத மாறா.." பாலா நஞ்சாய் சொன்னது கேட்டு பூமாறனுக்கு இதய துடிப்பு நின்றது.

"அண்ணா.." என்றான் தயக்கமாக.

அதிகாலை குயில் கூவும் சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள் பூர்ணிமா. குளித்து விட்டு வந்ததும் அப்பாவின் புகைப்படத்தின் முன் விளக்கேற்றினாள். மண்டியிட்டு வணங்கினாள். எழுந்தாள்.

சொல்லப்படாத வலி மனதுக்குள் நிரம்பி நின்றது. அறைக்கு திரும்பினாள். நாகேந்திரனின் கடிதங்களில் ஒன்றை எடுத்தாள்.

"பூரணி.. நான் செஞ்ச தப்பு இந்த அளவுக்கு எனக்கு தண்டனை தரும்ன்னு நான் நினைக்கவே இல்ல.. மலர் ஒத்தை வார்த்தை சொல்லி இருந்தா உயிரையே விட்டிருப்பேன். நான் இருப்பதே வேஸ்டுன்னு தோணுது. நான் பிறந்ததே தண்டம்.. உன்னை நான் ரொம்ப நேசிக்கிறேன் பூரணி.. உன் வாழ்க்கை நல்லா அமையணும்.. இந்த அப்பாவை உன்னால மன்னிக்க முடியுமா?"

வழிந்த தன் கண்ணீரை துடைத்தாள். "நான் மன்னிக்கிறேன்ப்பா.. ஏனா நீங்க எந்த தப்பும் செய்யல.." என்றாள் அழுதபடி.

"பூரணி.." பூமாறனின் குரலில் நிமிர்ந்தாள்.

"மாமா.!" எழுந்து நின்றாள்.

நெற்றியை பிடித்தபடி அவளருகே வந்தான். கோபமும் பயமும் அவன் கண்களில் இருந்தது. அவனின் கை காயத்தை இப்போதுதான் பார்த்தாள் பூர்ணிமா.

"என்னாச்சி மாமா?" என்றாள் பதட்டமாக.

நேற்று நடந்ததை சொன்னான். அதிர்ந்தாள் அவள்.

"நீங்க ஏன் நேத்தே சொல்லல இதை‌‌.." என்று கோபப்பட்டாள். அவனின் கையை ஊதி விட்டாள்.

கண்களில் மீண்டும் நீர் திரை கட்டியது. "சாரி மாமா.!" என்றாள் நிமிர்ந்து.

"இட்ஸ் ஓகே பூரணி.." தலையை வருடி தந்தான். அவனின் நெஞ்சில் சாய்ந்து அழுதவள் "உங்க கையை நான் நேத்து பார்க்கவே இல்ல.." என்றாள்.

"பூரணி இதை விடு நீ. நான் வேற ஒரு விசயம் பேச வந்திருக்கேன்.!" அவன் சொல்வதை கேட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.

"இதுக்குதான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்னு சொன்னியா?" பாலாவின் குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN