பௌர்ணமி 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"என்னடா பண்ணி தொலைஞ்சிங்க?" செண்பகம் குழம்பு கரண்டியை கையில் வைத்துக் கொண்டு இரு மகன்களையும் திட்டியபடி கேட்டாள்.

"எதுவாக இருந்தாலும் அண்ணனை கேளுங்க.." என்ற பூமாறன் உணவு தட்டில் பார்வையை பதித்தான்.

பாலா உணவை முடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

"பூரணி நேத்துல இருந்து சாப்பிடல.." செண்பகம் கவலையோடு சொன்னாள்.

'ஒருநாள் பட்டினி கிடந்தா குறைஞ்சிட மாட்டா.. அப்படியாவது திமிர் அடங்கட்டும்!' என நினைத்தான் பாலா.

அதே நேரத்தில் அழுது வீங்கிய முகத்தோடு முல்லை வந்தாள். அவளின் பின்னால் இன்னும் நிற்காத கண்ணீரோடு வந்தாள் பூர்ணிமா. பூர்ணிமாவின் புடவை கசங்கி இருந்தது. முந்தானையில் கண்ணீர் துடைத்து துடைத்து உப்பு படர்ந்து போயிருந்தது.

"இனி என்ன செய்றதா உத்தேசம் பாலா?" என்றாள் முல்லை கரகரத்த குரலில். பேசவே முடியவில்லை அவளால். அவ்வளவு சிரமமாக இருந்தது. மகளின் வாழ்க்கையை பற்றி எத்தனையோ கோட்டைகளை கட்டியிருந்தாள் அவள்.

"அதுதான் நேத்தே சொன்னேனே.." என்றவனை பார்த்து சரியென தலையசைத்தாள் முல்லை. விருப்பம் இல்லாதவர்களை வாழ வைப்பதில் அவளுக்கும் சம்மதம் இல்லை.

"என் பொண்ணுக்கு இன்னும் அவ்வளவா மெச்சூர் வரல. நான்தான் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி தந்துட்டேன். அவ சார்ப்பா என்னை மன்னிச்சிடு.!" கை கூப்பி வணங்கினாள் முல்லை.

"அம்மா இப்படி பண்ணாதிங்க.." அழுதாள் பூர்ணிமா. உடைந்த இதயம் இன்னும் எத்தனை முறை உடையும் என்று மனதுக்குள்ளும் அழுதாள் அவள். ஆனால் முல்லை மகளின் கெஞ்சலை காதிலேயே வாங்கவில்லை.

"அலை பாயும் மனசு கொண்ட வயசு அவளோடது. தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணிட்டா.. அதுக்காக நான் என் பொண்ணை வெட்டிப் போட்டுட முடியாது.. டைவர்ஸ் வாங்கிடலாம். குடும்ப பொறுப்புல தோத்தாலும் கூட என் பொண்ணுக்கு வேறு கனவுகள் உண்டு. அதிலாவது உருப்படட்டும்.." சிறு குரலில் சொன்னாள்.

செண்பகம் மகனையும் மருமகளையும் மாறி மாறி பார்த்தாள். "என்னடா ஆச்சி? இந்த புள்ளை ஏன் ஓயாம அழுது?" என்று கேட்டாள்.

"பூரணிக்கும் மாறனுக்கும் நடுவுல தப்பான உறவு இருக்குன்னு மத்த இரண்டு குடும்பமும் கண்டபடி பேசிட்டு இருக்காங்க.." என்றார் மரிக்கொழுந்து உணவை உண்டபடியே.

செண்பகம் அதிர்ந்துப் போனாள்.

"பூரணி அப்படி கிடையாது.." என்றாள்.

பூர்ணிமா நீர் நிரம்பிய விழிகளோடு மாமியாரை பார்த்தாள்.

அம்மா இந்த ஒரு வார்த்தையை சொல்லி இருக்கலாம் என்று ஏங்கியது அவளின் மனம்.

"போட்டோ பிடிச்சி போட்டு இருக்காங்க.." மீண்டும் மரிக்கொழுந்துவே பதிலை சொன்னார்.

முல்லையின் விழிகளில் மீண்டும் நீர் கொட்டியது. எவ்வளவு ஆசையாக வளர்த்த மகள்! இப்படி பெயர் கெட்டு நிற்கிறாளே என்று கலங்கியது அவள் உள்ளம்.

"பா.. லா.." கெஞ்சலாக அழைத்தாள் பூர்ணிமா.

பாலா இரும்பில் அடித்த சிலையின் முகத்தோடு நிமிர்ந்துப் பார்த்தான். அவனின் விழிகளில் எந்த உணர்வையும் காண முடியவில்லை அவளால்.

"எந்த உறவுக்கும் நம்பிக்கைதான் அடித்தளம். நீ இப்ப என்னை நம்பலன்னா அப்புறம் நான் எப்பவும் உன்னை மன்னிக்க மாட்டேன். நீயும் ரோசினியும் நான் பார்த்திருக்கவே எத்தனையோ நாள் ஒட்டி உரசி பேசி இருக்கிங்க.. ஆனா நான் உன்னை நம்பினேன்.." என்றாள் பூர்ணிமா.

"என்னை கண்டுக்காம விட்டாதான் நீ கண்டபடி இருக்கலாம்ன்னு நினைச்சி என்னை கண்டிக்காம விட்டிருப்ப நீ.!" பாலாவின் குற்றச்சாட்டில் இதயம் நிற்பது போலிருந்தது அவளுக்கு. அவன் பார்த்திருக்கதான் ரோசினியிடம் எரிந்து விழுந்தாள். அவன் காதில் விழும்படிதான் நாய்க்கு கூட அவளின் பெயரை செல்ல பெயரென வைத்து சீண்டி உள்ளாள். ஆனால் இவன் இப்படி பழி போடுவான் என்று அவள் அறியாமல் போய் விட்டாள்.

"பாலா.. ப்ளீஸ்.."

"போதும்.." முல்லையின் அதட்டலில் அமைதியானாள் பூர்ணிமா.

"உனக்கு ஒன்னும் தூக்கு தண்டனை தர போறது இல்ல.. அவனை விட்டுடு.. என்னோடு திரும்பி வா.." என்றாள் முல்லை கோபத்தோடு. எரிச்சலாக இருந்தது அவளுக்கு. ஆனால் மகள் கெஞ்சுவது அதை விட அவமானகரமாக தோன்றியது.

பூர்ணிமா மூக்கை உறிஞ்சினாள்.

பூமாறனுக்கு பரிதாபமாக இருந்தது. பூர்ணிமாவை அதிகம் நேசித்தார் அவன். பாலாவை போல ஒருநாளும் கஷ்டப்படுத்த விரும்பியதில்லை.

"போதும் அண்ணா.." என்றான் சகோதரனிடம்.

பாலா அவனை முறைத்தான். ஆனால் அவன் அதை கவனிக்கவே கூட இல்லை.

"சாரி அத்தை.. நேத்து நாங்க சொன்னதுல பாதி பொய்.. நானும் அவளும் லவ் பண்ணல.."

தம்பியை நிறுத்த முயற்சித்தான் பாலா.

"சாரி பூரணி. நேத்து நான் சொன்னது எல்லாம் பொய்.. எனக்கு உன் மேல எந்த தப்பான எண்ணமும் இல்ல.. பாலாவுக்கு குற்ற உணர்வு.."

"மாறா.." அண்ணனின் எச்சரிக்கையை காதில் வாங்கவில்லை பூமாறன்.

"முல்லை அத்தை வாழ்க்கை இப்படி ஆனதுல இவனுக்கு ரொம்ப டிப்ரஷன் ஆகிடுச்சி. என்ன செஞ்சாலும் அத்தை இத்தனை வருசம் பட்ட கஷ்டமும் தீராது. எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் தான் செஞ்ச தப்பு தீராதுன்னு நினைச்சான் இவன். அப்படியொரு நிலையில் இருப்பவனுக்கு உன் அப்பா மேல எந்த அளவுக்கு கோபம் இருக்கும்ன்னு நினைச்சிப் பாரு.. ஆனா நீ எப்ப பார்த்தாலும் உங்க அப்பாவுக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருந்த. அந்த கோபத்துல இருந்தான் இவன். நானும்தான். அந்த டைம்ல ரோசினியும் போட்டோவை போட்டு கலவரத்தை உண்டாக்கிட்டா.. உனக்கு புத்தி வர வைக்கிறேன்னு அண்ணன் இப்படி பண்ணிட்டான்.. சாரி பூரணி.." என்றான்.

முல்லை குழப்பத்தோடு பாலாவை பார்த்தாள். பாலா தன் கீழுதட்டை கடித்தபடி சுவர் புறம் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பைத்தியமாடா நீங்க?" கோபத்தோடு எழுந்து நின்று கத்தினார் மரிக்கொழுந்து.

"இவ அவங்க அப்பாவுக்கு பண்ண சப்போர்ட்டை கேட்டா இப்படி சொல்ல மாட்டிங்க அப்பா.. அவ்வளவு வக்காலத்து வாங்கினா.. இந்த மாதிரி விசயத்துல ஒரு பொய் சொன்னா அது எந்த அளவுக்கு வாழ்க்கையை பாதிக்கும்ன்னு இப்படியாவது இவளுக்கு புரியணும்ன்னுதான் அண்ணன் சொன்னபடி நான் நடந்துக்கிட்டேன்.." என்றான் அவன்.

பூர்ணிமா அசையாமல் நின்றாள். முல்லையின் கழுத்தில் இருந்த காய்ந்த கண்ணீர் தடங்கள் அவளை திரும்பிப் பார்த்து சிரிப்பது போலிருந்தது முல்லைக்கு.

"டிராமா.! இது டிராமாவா?" சந்தேகத்தோடு கேட்டாள் முல்லை.

பூமாறன் இரு கைகளையும் கூப்பினான். "சாரி அத்தை.." என்றான்.

முல்லை சிரித்தாள். "லூசாடா நீங்க இரண்டு பேரும்? இதெல்லாமா விளையாட்டு? இது என் பொண்ணோட வாழ்க்கைடா.." என்றாள்.

"ஆனா அவ அவங்க அப்பாவை ஆதரிக்கறா அத்தை.. அவர் சொன்னதை நாம விளையாட்டா எடுத்துட்டு இருந்திருக்கணுமாம்.. அவருக்கு அட்வைஸ் பண்ணி இருக்கணுமாம்.. நாமதான் தப்பு பண்ணிட்டோம்ன்னு சொல்றா.." என்றான் பாலா கோபத்தோடு.

முல்லை விழிகளை மூடி திறந்தாள்.

"என் பொண்ணுக்கு வெறும் இருபதுடா பாலா.. அவளுக்கு எப்படி உன் மைன்ட் செட் வரும்.? விசயத்தை அவ புரிஞ்சிக்க கூட உங்களால டைம் தர முடியலையா?" எனக் கேட்டவள் மகளின் புறம் திரும்பினாள்.

"பூரணி.." என்றாள் முகத்தை துடைத்தபடி. நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.

"இவனுங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு பூரணி.. நீ எதையும் மனசுல வச்சிக்காத.." என்றபடியே சென்று மகளின் கையை பற்றினாள்.

பூர்ணிமா பின்னால் நகர்ந்தாள். முல்லை குழப்பத்தோடு மகளின் முகம் பார்த்தாள். பூர்ணிமா மறுப்பாக தலையசைத்தாள்.

"வேணாம்.. யாரும்.. வேணாம்.. என்னை.. புரிஞ்சிக்க.." முழுதாய் சொல்லவும் தெம்பில்லாமல் தலையை ஆட்டினாள்.

நிமிர்ந்தாள். விழிகளை கடந்த கண்ணீரோடு பாலாவை பார்த்தாள்.

"நீ என்னை லவ் பண்றதா சொன்ன இல்ல.? ரொம்ப நம்பிட்டேன் இப்ப.." என்றாள் கசந்த சிரிப்போடு.

"பூரணி.." பூமாறன் முன்னால் வந்தான்.

"பக்கத்துல வராதிங்க.!" கை காட்டி அவனை தடுத்தாள்.

"நான் திமிர் பிடிச்சவ.. அப்படியே இருந்துட்டு போறேன்.." என்றாள்.

"நாங்க செஞ்சதுக்கு நீ இப்ப பதில் டிராமா போட போறியா?" எரிச்சலாக கேட்டான் பாலா.

"என்கிட்ட பேசாத நீ.!" என்றபடி இரு விழிகளையும் துடைத்துக் கொண்டாள்.

"ஐ.. ஐ.. ஹேட் யூ.. உங்க எல்லோரையும்.." என்று கையை காட்டியவள் வாசலை நோக்கி நடந்தாள்.

பாலா ஓடி வந்து அவள் முன்னால் நின்றான்.

"எங்கே போற?" அதட்டலாக கேட்டான்.

"உன்னை விட்டு போறேன்.!" அவளின் வெறுப்பு நிரம்பிய குரல் அவனுக்கு மேலும்தான் எரிச்சலை தந்தது.

"பூர்ணிமா‌ நான் வார்ன் பண்றேன்.."

"நீ யார்டா எனக்கு வார்னிங் தர?" பற்களை கடித்தபடி கேட்டாள் அவள்.

"போச்சி.. இந்த ஒரு வார்த்தை வந்தாவே பெரிய பிரச்சனைன்னு அர்த்தம்தானே.!" கவலையோடு முனகினான் பூமாறன்.

"பூர்ணி.."

அவனை மூக்கு சிவக்க முறைத்தவள் அங்கிருந்து திரும்பி நடந்தாள். பின்னால் ஓடி அவளின் கையை பற்றினான் அவன். திரும்பியவள் அவனிடமிருந்து கையை உருவினாள். உருவ முயன்றாள். எப்போதும் போல இறுக்கமாய் பிடித்திருந்தான் அவன்.

"எனக்கு நீ வேணாம். ஐ வாண்ட் டிவோர்ஸ். இப்ப நீ என் கையை விடலன்னா நான் போலிஸ்ல போய் கம்ப்ளைண்ட் பண்ணுவேன்.." என்றாள் மறு கையின் ஒரு விரல் நீட்டி.

பாலா அப்படியேதான் அவளை பார்த்து நின்றான்.

"ஒரு நாள் பொய் பழி போட்டதுக்கே அவ்வளவு பத்திக்கிட்டு வருது உனக்கு!? இதே இத்தனை நாள் இந்த பழிச்சொல்லோடு வாழ்ந்த உன் அம்மாவை பத்தி ஒரு செகண்ட் கூட யோசிக்கல நீ.. உனக்குன்னா ஒரு நியாயம்.. மத்தவங்களுக்குன்னா ஒரு நியாயமா?" என்று கர்ஜித்தான்.

பூர்ணிமா இமைகள் இரண்டையும் மூடினாள். மீண்டும் சூடாக வழிந்தது கண்ணீர்.

"நான் எப்படா என் அம்மாவை அநியாயம் சொன்னேன்.? நீங்க எல்லோரும் சூழ்நிலையை சரியா கையாளலன்னுதானே சொன்னேன்? என் அப்பா மேல தப்பு இல்லன்னு சொல்லவே இல்ல நான். அவரை விட இந்த வீட்டு ஆட்கள் மேல அதிக தப்புன்னுதான் சொன்னேன்.. அப்படியே தலைகீழா திருப்பற நீ. அன்னைக்கு ஒரு ஆளாவது அவர் செய்றது தப்புன்னு எடுத்துச் சொல்லி இருந்தா இன்னைக்கு எனக்கும் ஒரு அப்பாவும் அம்மாவும் இருந்திருப்பாங்க. முல்லை அம்மாவும் இத்தனை வருசமா முதிர் கன்னியா வாழ்ந்திருக்க மாட்டாங்க.. உங்க தப்பை மறைக்க என் மேல பழி சுமத்துவதா நாடகம் ஆடுறிங்க.. நான் உங்க கண்ணுக்கு முட்டாள்ன்னா அப்படியே விடுங்க.. என்னை திருத்தி என்ன பண்ண போறிங்க? உத்தமர்கள் நீங்க.. உங்களுக்குன்னு ஒரு அப்பா இதோ இங்கேயே உயிரோடு இருக்காரு.. அதனால உங்களுக்கு எந்த பீலிங்கும் இல்ல.. ஆனா அப்பாங்கற கேரக்டர் இல்லாம பதினேழு வருசம் வாழ்ந்தவ நான். அப்பா எங்கேன்னு கேட்ட ஊர் உலகத்துக்கு பதில் சொன்னவ நான். என் அப்பா கண் முன்ன இருந்தும் கூட உங்க அலட்சியத்தால அவரை தொலைச்சவ நான்.. இதே கையால அவருக்கு பழைய சாதத்தை தந்தவ நான். என் மனசு எப்படி உங்களுக்கு புரியும்? நீங்க ஒன்னும் தகப்பனில்லாதவங்க இல்லையே.!" என்றாள்.

இடது கையால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

"தயவு செஞ்சி என்னை விட்டுடு. உங்க யார் முகத்திலேயும் விழிக்க கூட விருப்பம் இல்ல எனக்கு. டைவர்ஸ் என்னைக்கு கிடைக்குமோ அன்னைக்குதான் எனக்கு நிம்மதி.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN