குரங்கு கூட்டம் 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இருள் மட்டும்தான் தெரிந்தது மிருதுளாவுக்கு. அவளின் கையை பற்றி இருந்தவர்கள் அவளை நாற்காலி ஒன்றில் அமர வைத்து கைகளை பின்புறமாக கட்டினார்கள்.

"என்னை ஏன்டா கடத்தி இருக்கிங்க? என்னை கடத்தி வச்சி மிரட்டினாலும் சரி.. எங்க அப்பா பத்து பைசா கூட உங்களுக்கு தர மாட்டாரு.. அவர் எனக்கே காசு தர மாட்டாருடா லூசுங்களா.." என்றவளின் இடது கன்னத்தில் விழுந்தது சிறு குத்து. அதுவே அவளின் பற்களை தனியே பிரித்து எடுத்து விடுமோ என அவள் நினைக்கும் அளவிற்கு வலியை தந்தது.

"திட்ட கூட உரிமை இல்லாம போயிடுச்சி.." அவள் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் யாரோ அவளின் முகத்திலிருந்து சாக்கை உருவி எறிந்தார்கள். கண்களை சிமிட்டி நேரே பார்த்தாள். ரவுடிகள் நான்கைந்து பேர் இருந்தார்கள்.

ஒருவன் அவளின் முகத்தையே குறுகுறுவென்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னொருவன் அவனின் நகத்தில் சொத்து தேடிக் கொண்டிருந்தான்.

அவளுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவனை அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனின் நிழல் தன் முன்னால் விழுவதை கண்டாள் அவள்.

அவளுக்கு முன்னால் நின்றிருந்தவன்தான் அந்த கூட்டத்திற்கு தற்காலிக தலைவன் போல தென்பட்டான்.

அவர்களின் கைகளில் இருந்த தேள் வடிவிலான டாட்டூவை கண்டவள் ' இது அந்த பொறுக்கி சம்பத்தோட கையாள்கள்.. இவனுங்க எதுக்கு என்னை கடத்தி வந்திருக்காங்க?' என நினைத்துக் குழம்பினாள்.

அவளுக்கு முன்னால் நின்றிருந்தவன் மிருதுளாவுக்கு பளீரென ஒரு அறையை தந்தான். அதிர்ச்சியோடு அவனை வெறித்தாள் மிருதுளா. "பைத்திய கூந்தலாடா நீ? எதுக்குடா என்னை அடிச்ச?" எனக் கேட்டாள் கடுப்போடு. கன்னம் எரிந்தது அவளுக்கு. ஏற்கனவே குத்து வாங்கிய கன்னம் அது. திருமண விழா. எத்தனையோ பேர் வந்திருக்கும் இடம். இந்த இடத்தில் தன் முகம்‌ காயம்பட்ட நிறத்தோடு இருப்பதை விரும்பவில்லை அவள். ராகுல் ரசிக்க வேண்டும் என்பதற்காகவாவது தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

கை மட்டும் அவிழ்ந்து இருந்திருந்தால் அவனை புரட்டி எடுத்திருப்பாள். அவ்வளவு வன்மம் உண்டாகி இருந்தது மனதுக்குள்.

"நான் கேட்கற கேள்விக்கு நீ சரியான பதிலை சொல்லணும். அதுக்குதான் இந்த அறை.." என்றான் அவன் கண்களை உருட்டி.

மிருதுளா அவனை திட்ட தொடங்கும் முன் துப்பாக்கியை எடுத்து அவளின் நெற்றியில் வைத்தான் அவன். டிரிக்கரில் பதிந்திருந்த அவனின் விரலை கண்டவள் பயத்தில் மிடறு விழுங்கினாள்.

"கேட்டு தொலைடா சனியனே.." என்று முனகினாள். அவன் கையில் இருந்த துப்பாக்கி அவளுக்கு தாழ்வு மனப்பான்மையை தந்தது. அவள் அப்படி உணரும் நேரத்தில் எல்லாம் எரிச்சலின் உச்சத்தில் இருப்பாள். இப்போதும் அப்படிதான் இருந்தாள்.

"சரத் சார் டெத் டைம்ல நீ அங்கே இருந்தியா?" எனக் கேட்டான் அவன்.

மிருதுளாவின் ஆறாம் அறிவு இந்த கேள்விக்கு பிறகே இன்றாவது தான் வேலை செய்யலாம் என நினைத்து கண் விழித்தது.

"நோ.." என்றாள் சட்டென்று. எப்போது சம்பத் சித்துவை கொல்லாமல் விட்டானோ அப்போதே இவர்களின் திட்டத்திலும் மாற்றம் வந்து விட்டது.

'கருமம்.. கருமம்.. பிளான் ஏ சொதப்பி, பி சொதப்பி, இப்ப பிளான் சியில் இருக்கோம்.. விளங்காத ரவுடி பசங்க. ஒருத்தனுக்காவது சூடு சொரணை இருக்கா? எல்லாரும் பிசினஸ் பிசினஸ்ன்னே சாகுறானுங்க.. விக்கிறது துப்பாக்கியும் வெடி மருந்தும். அதுல பெருமை டேஷ் வேற..' என்று மனதுக்குள் காய்ந்தாள்.

"அப்படின்னா உனக்கு எப்படி சரத் சார் இறந்தது தெரியும். நடந்த எல்லாத்தையும் தெளிவா சொல்லு.." என்ற அவனின் கையில் இருந்த துப்பாக்கி அவளின் நெற்றியில் காயப்படுத்துவது போல பதிந்தது.

"ஓகே ஓகே.. சொல்றேன் ரவுடி சார்.. இந்த துப்பாக்கியை மட்டும் நகர்த்துறிங்களா? நெத்தியில் இப்படி எதையாவது வச்சா எனக்கு மூளை வேலை செய்யாது.." என்றாள் சிறு குரலில் சிணுங்கல் போல. ஆனால் எதிரில் இருந்தவனோ அவளை முறைத்தான்.

'ஆ.. முறைக்கும் போது பூதம் போலவே இருக்கானே.!' என்று கவலைக் கொண்டாள்.

'ஓ.. நம்ம கதை சொல்ற திறமையை இப்ப காட்டிட வேண்டியதுதான்..' என்று தன்னை தானே தயார் படுத்திக் கொண்டாள்.

"பர்ஸ்ட் சீன் என்னன்னா சித்து பன்னி பையன் இருக்கான் இல்லையா.. அவன் என்ன செஞ்சான்னா.. நீங்க இப்ப எப்படி என்னை கடத்தினிங்களோ அதே போல நேத்து என்னை கடத்தினான். நீங்க நாற்காலியில் என்னை உட்கார வச்சிங்க. ஆனா அந்த நாய் என்னை கொண்டுப் போய் கட்டில்ல தள்ளிடுச்சி.." என்றவள் தாமத நினைவு வந்தவளாக இமைகளில் ஈரத்தை வரவழைக்க முயன்றாள்.

'கன்றாவி.. அழுகாச்சியே வர மாட்டேங்குது..' வருத்தப்பட்டாள். 'அழுகை வந்தா என்ன.. வரலன்னா என்ன.. பெர்பாமன்ஸை தொடரலாம்..' தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டாள்.

"நான் வேண்டா வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா அவன் என்னை கதற கதற ரேப் பண்ணிட்டான்.." என்றாள். அவளின் வெகுவான சிரமத்திற்கு பிறகு அவளின்‌ விழிகளில் இருந்து வெளியேறிய ஒற்றை துளி கண்ணீர் இமைகளை தாண்டி கீழே குதித்தது.

"உடம்பெல்லாம் வலி.. ஆனா அதை விட அதிகமா மனசுல வலி.. என்ன பண்றதுன்னே தெரியல. அந்த டைம்லதான் சரத்துக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னேன். சரத் உடனே என்னை பார்க்க வந்தாரு. நேர்ல பார்த்ததும் ரொம்ப கோபம் வந்துடுச்சி அவருக்கு. ஆனா என்னை சமாதானம் செஞ்சாரு.. சம்பத்தோட மேரேஜ் முடிஞ்சதும் இந்த விசயத்தை பத்தி நான் பார்க்கறேன்னு சொன்னாரு. அவர் ரொம்ப நேரம் எனக்கு அட்வைஸ் பண்ணாரு. அதனால நானும் சரின்னு விட்டுட்டேன். வீடு வரைக்கும் வந்துட்டேன். நான் போய் அந்த பொறுக்கியை பார்த்துட்டு வரேன்னு போனாரு.. ஆனா அதுக்கப்புறம் திரும்பி வரவே இல்ல.. கொஞ்ச நேரம் கழிச்சி நான் போன் பண்ணேன். ஆனா அவர் வரல. அவருக்கு போன் பண்ணிக்கிட்டே வராண்டாவை கிராஸ் பண்ணி போகும் போது ஒரு ரூம்ல அவர் போன் ரிங் ஆச்சி. போய் பார்த்தா.." மேலே சொல்லாமல் குலுங்கினாள். கொஞ்சமாக கண்ணீர் கசிந்தது.

"அவர் செத்து கிடந்தாரு.." என்றாள் மூச்சு வாங்குவது போல சிறிது நேரம் நடித்துவிட்டு.

அங்கிருந்த நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவன் தன் பாக்கெட்டில் இருந்த போனை கையில் எடுத்தான்.

மிருதுளா ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். போனை பரிசோதித்து விட்டு நிமிர்ந்தான் அவன்.

"ஒரே ஒரு முறைதான் நீ அவருக்கு கால் பண்ணி இருக்க.? நடந்த உண்மையை கரெக்டா சொல்லு.." என்று மிரட்டினான்.

'டெக்னாலஜி யுகம் ஒழிக.!' என்று மனதுக்குள் சாபமிட்டவள் "கொலை பண்ணவங்க கால் ஹிஸ்டரியை அழிச்சி இருக்கலாம் இல்லையா?" எனக் கேட்டாள் விழிகளை சிமிட்டியபடி.

எதிரே இருந்தவன் பற்களை நரநரவென அறைத்தான். அதே வேகத்தில் அவளின் கன்னத்தில் அறைந்தான்.

"உண்மையை சொல்லுடி.. இல்லன்னா உன்னை இங்கேயே கொன்னுடுவேன்.." என்றான் அவன்.

'பிளான் சியும் சொதப்பல்.. பிளான் டி.' மிருதுளா‌ யோசிக்க முயன்றாள்.

"உண்மை என்னன்னா.." தயங்கியவள்‌ "சித்துதான் எல்லாத்துக்கும் காரணம்.." என்றாள்.

எதிரில் இருந்தவனின் முகம் மாறியது. சுற்றி இருந்தவர்களின் முகத்தை யோசனையோடு பார்த்தான்.

"சரத்துக்கு போன் பண்ணி வர சொல்லுன்னு என்னை டிமான்ட் பண்ணான் அவன். அதான் நான் சரத்துக்கு போன் பண்ணேன். சரத் வந்ததும் என்னை அந்த ரூம்ல இருந்து வெளியே அனுப்பிட்டான் சித்து. ரொம்ப நேரமா சரத் வரவே இல்ல. அப்புறம்தான் போய் பார்த்தேன். சரத் இறந்து கிடந்தாரு. நான் உடனே சம்பத்துக்கு போன் பண்ணிட்டேன்.." என்றவளை முறைத்தான் அவன். அவளின் அதே கன்னத்தில் மீண்டும் விழுந்தது அறை.

'எதுக்குடா இத்தனை அறை? கன்னம் என் கன்னத்தை பர்பில் கலர்ல மாத்துறதுல உனக்கு என்னடா சந்தோசம்?' என வருந்தினாள்.

"அப்புறம் ஏன்டி சம்பத் சார்கிட்ட உன்னை ரேப் பண்ணிட்டதா பொய் சொன்ன? உன் மூலமாக சரத் சாரை இங்கே வர வச்சது சித்துன்னா அப்புறம் ஏன்டி நீ சம்பத் சாருக்கு போன் பண்ண?" எனக் கேட்டான்.

'இரண்டு லாஜிக் மிஸ்டேக்..' மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டாள் மிருதுளா.

'ஓகே.. இன்னைக்கு நமக்கு டெத் டே கன்பார்ம்.. அடேய் பிரேம்.. உனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தா என் பேரே வைடா.. நான் செய்ற தியாகத்துக்கு அதாவது ஒரு பரிசாக இருக்கட்டும்..' என்றபடி கண்களை மூடினாள்.

"கேட்டதுக்கு பதில் சொல்லுடி.." எதிரில் இருந்தவன் அவளின் காதுக்கு வலி வரும்படி கத்தினான்.

'பதில்.?? என்ன பதிலுக்கு போவேன் இனி? கதை சொல்றது ரொம்ப கஷ்டம்தான் போல..' என்று கவலைப்பட்டவள் "எனக்கு மறதி வியாதி இருக்கு. அம்னீஷியா.. கால் மணி நேரத்துக்கு ஒரு முறை எல்லாமே மறந்துடும்.. நீங்க இன்னும்.." என்றுச் சொல்லி முடிக்கும் முன் மீண்டும் அவனின் கரம் அவளின் கன்னம் தொட வந்தது.

மிருதுளா கண்களை மூடினாள். அதே வேளையில் அவளை அறைய இருந்தவன் பொத்தென்று அவள் மீது விழுந்தான். குழப்பத்தோடு கண்களை விழித்தாள். அவனின் தோளை தவிர வேறு ஏதும் தெரியவில்லை. ஆனால் அவளின் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப் பகுதி வரை ஈரம் பரவியது.

என்னவோ சத்தங்கள் சில கேட்டது. ஷூவின் சத்தம் கேட்டது.

"லேட்டா வந்ததுக்கு சாரி சிஸ்டர்.." என்ற குரல் ஒன்று கேட்டது. குரலுக்கு சொந்தக்காரரை மிருதுளா இனம் காண முயலும் முன்பே அவளின் மீதிருந்த ரவுடி கீழே விழுந்தான். அவனின் நெஞ்சு பகுதியில் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அந்த ரத்தம்தான் அவளின் வயிற்றிலும் ஈரத்தை தந்திருந்தது.

எதிரில் பார்த்தாள். யாரையும் காணவில்லை.

"ஆர் யூ ஓகே சிஸ்டர்?" பின்னிருந்து ஒரு குரல் திடீரென்று கேட்கவும் பயத்தில் துள்ளி விழுந்தாள். அவளின் கை தட்டுகளை அவிழ்த்து விட்டுவிட்டு முன்னால் வந்து நின்றான் ஜீவன்.

"மை காட்.. நீங்களா? நான் கதை சொல்லும்போது கூடவா போலிஸ்‌ லேட்டா வரணும்?" எரிச்சலாக மொழிந்து விட்டு எழுந்து நின்றாள். அவளின் சுடிதாரிலிருந்து கீழே சொட்டியது ரவுடியின் ரத்தம். ரத்த வாசம் குடலை புரட்டுவது போலிருந்தது அவளுக்கு.

"இன்னும் இரண்டு நிமிசம் லேட்டா வந்திருக்கலாமோன்னு நான் நினைக்கும்படி செய்யாதிங்க சிஸ்டர்.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"அது பாத்ரூம்ன்னு நினைக்கிறேன். போய் இந்த பிளட் ஸ்டெயினை கிளீன் பண்ணிட்டு வாங்க.. நாம இங்கிருந்து கிளம்பலாம்.." என்றான்.

"இவங்களை சுட்டுட்டிங்களே.. இனி என்ன செய்ய.?" கலவரமாக கேட்டாள்.

"துப்பாக்கி சித்துவோடது.. பிரச்சனை இல்லாம இங்கிருந்து போயிட்டா அப்புறம் நான் மாட்ட மாட்டேன்.!" என்றான்.

"ஓ..ஓகே.." என்றவள் தன்னை பார்த்துக் கொண்டாள். "ஆனா வேற டிரெஸ்.?" குழப்பமாக கேட்டாள்.

ஜீவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"இப்படியே நீங்க இந்த ரூமை விட்டு வெளியே வர முடியாது.. நீங்க போய் குளிங்க.. நான் இந்த பாடிகளை மறைச்சி வச்சிட்டு உங்களுக்கு வேற டிரெஸ் எடுத்துட்டு வரேன்.." என்றான்.

மிருதுளா அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்தாள். கதவை சாத்த முயன்றவள் யோசனையோடு அவனைப் பார்த்தாள். "இப் யூ டோண்ட் மைன்ட்.. அந்த மாத்து டிரெஸ்ஸை சீனியர்கிட்ட கொடுத்து விடுறிங்களா?" எனக் கேட்டாள்.

ஜீவன் தன் உதட்டின் ஓரத்தை கடித்தபடி அவளை நக்கலாக பார்த்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN