குரங்கு கூட்டம் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஸ்வேதா சுவருக்குள் ஒளிய முயன்றாள். ஆனால் சுவருக்குள் எப்படி ஒளிய முடியும்?

"நீ ரொம்ப டிரை பண்ற போல.. ஆனா நான் உன்னை விடுவதா இல்ல? சொல்லு உனக்கு என்னை பிடிச்சிருக்குதானே?" எனக் கேட்டான் அர்விந்த் அவளின் காதோரம் கிசுகிசுப்பாக.

ஸ்வேதாவுக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. இதயம் ஒரு பக்கம் கோளாறு செய்வது போலிருந்தது. மயக்கம் வருவது போலவும் இருந்தது.‌ இது போல என்றுமே உணர்ந்தது இல்லை அவள்.

"சொல்லு பேபி.!" என்றவன் மீண்டும் முத்தம் தந்தான்.

"தள்ளி.. நின்னு.. பேசுறிங்களா?" தடுமாறி வெளி வந்தது வார்த்தைகள்.

"ஏன் ஸ்வீட் ஹார்ட்? நான் பக்கத்துல இருக்கும்போது உனக்கு ஹார்மோன்ஸ் நெருப்பா கொதிக்குதா?"

"இ.. இல்ல.. ஆனியன் ஸ்மெல்.. மூக்கு செத்துப் போனது போல இருக்கு.!" அவள் சொன்னது கேட்டு பட்டென்று பின்னால் நகர்ந்தான். முகமே செத்து விட்டது போலிருந்தது அவனுக்கு.

'பிரேம் நாய்.. அந்த நாய்க்கு சப்போர்ட் பண்ண வந்துதான் இப்படி வெங்காய வாடையோடு இருக்கேன்.!' நண்பனை மனதுக்குள் திட்டி தீர்த்தவன் "இப்ப ஓகேவா?" என்றான் நாலடி தள்ளி நின்று.

"ஓ..ஓகே!" என்றவள் முன்னும் பின்னும் பார்த்து விட்டு "ஏன் இங்கே மட்டும் கரெண்ட் இல்ல.?" என கேட்டாள்.

"நான்தான் விளக்கை அணைச்சேன்.." என்றவன் ஸ்விட்சை தட்டி விட்டான்.

விளக்கு பளிச்சென்று எரிந்தது.

"ஏன் லைட் ஆஃப் பண்ணிங்க?" சந்தேகமாக கேட்டவளை பெருமூச்சோடு பார்த்தவன் "மங்கலான வெளிச்சத்துல ரொமான்ஸ் பண்ணா கொஞ்சம் கிக்கா இருக்குமேன்னு நினைச்சேன். ஆனா எல்லாம் வீணா போயிடுச்சி.!" புலம்பினான். அவனை கண்டு அவளுக்கே சற்று வருத்தமாகதான் இருந்தது.

"ஏன் வெங்காயம் வெட்டுறிங்க? அதுக்கு பதிலா உளவு பார்க்க வேண்டியதுதானே?" எனக் கேட்டாள்.

'ஒரு திருடிக்கு இவ்வளவு அறிவா?' ஆச்சரியப்பட்டவன் "வெங்காயம் வெட்டும் நேரம் தவிர மீதி நேரத்துல அதைதான் செய்றேன்.. சரி நீ சொல்லு, என்னை பார்க்கதானே வந்த?" எனக் கேட்டான்.

ஸ்வேதா இடம் வலமாக தலையசைத்தாள். "தாகத்துக்கு தண்ணீர் எடுத்துட்டு போக வந்தேன்.!"

"பொய் சொல்றதுல டாக்டர் பட்டம் வாங்கிடுவ நீ.!" என்றவன் "சரி கிளம்பு.. அதுதான் வெங்காய ஸ்மெல் வருதுன்னு சொல்லிட்டியே.. இனிமே என்ன ரொமான்ஸ் பண்ணி என்ன செய்ய?" என்றுக் குறைப்பட்டான்.

ஸ்வேதா தயங்கினாள். திரும்பி செல்ல நினைத்தாள்.

"உன் போன் நம்பர் கொடு.." அவனின் கேள்வியில் படபடவென்று நம்பரை சொன்னாள்.

'எப்ப கேட்பேன்னு காத்திருந்து இருப்பா போல..' என நினைத்துக் கொண்டவன் "உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லையே.!" என்றான்.

"நான் திருடி. நீங்க போலிஸ். என்னை மிரட்டி லவ் பண்ண சொல்றிங்க. நான் லவ் பண்ணிதானே ஆகணும்? இல்லன்னா ஜெயில்ல போட்டுடுவிங்கதானே!?"

வியந்தான் அர்விந்த். "மிரட்டலுக்காக வந்த காதலா இது.!! அப்படின்னா இது வேணாம் எனக்கு. உனக்கு நிஜமா என்னை பிடிக்கணும்.."

ஸ்வேதா நிமிர்ந்தாள். பைத்தியமா இவன் என்ற கேள்வி அவளின் கண்களில் இருந்தது.

"பழகாம எப்படி காதல் வரும்? ஹேண்ட்சமா இருக்கிங்க. அதுக்கு சைட் வேணா அடிக்கலாம். ஆனா லவ் பண்ண முடியாது இல்லையா?" என்றவள் அவனுக்கு மேலும் மேலும் வியப்பை தந்துக் கொண்டிருந்தாள்.

"எங்க குரங்கு கூட்டத்துக்குள்ள ஜாயினாக போற முதல் புத்திசாலி நீதான்.!" என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.

"நீ கிளம்பு.. நாளைக்கு நிறைய வேலை இருக்கும். அடுத்த நாள் கல்யாணம். அது வரைக்கும் நாம மீட் பண்ண டைம் கிடைக்காது. அப்புறமா நாளான்னைக்கு மேல நாம மீட் பண்ணி பேசி பழகிக்கலாம்.." என்றவன் அங்கிருந்து நடந்தான்.

அவன் இரண்டடி எடுத்து வைக்கும் முன்பே அங்கிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. திரும்பியவனின் இதழோடு ஒட்டியது ஒரு ஜோடி இதழ்கள்.

'வெங்காய வாடைன்னு சொன்னா..' குழம்பியவனை விட்டு விலகி நின்ற ஸ்வேதா "சாரி.. நாளான்னைக்கு மேல நாம மீட் பண்ண முடியும்ன்னு எனக்கு தோணல. இதெல்லாம் ரயில் பயண நட்பை போல ஒரு காதல். நான் ஒரு திருடி. இந்த வீட்டுல திருடியதுக்கு மாட்டினா கூட ஜெயில்தான். உங்களை யார்ன்னு கூட எனக்குத் தெரியாது. ஆனா ஏனோ உங்க காதலை மட்டும் நம்ப தோணுது. உங்களோட காதலுக்கு உண்மையா இருந்து காலம் முழுக்க கை கோர்த்து நடக்க விதியில்ல எனக்கு. இது லாஸ்ட் குட் பை.!" என்றவள் திரும்பினாள்.

நடந்தவளின் கையை பற்றி தன்னோடு அணைத்தான் அர்விந்த். அவளின் கன்னங்களை பற்றினான். அவள் என்னவென்று யோசிக்கும் முன்பே தன் பங்கு முத்தத்தை தர ஆரம்பித்து விட்டான்.

வெங்காய வாடை உலகத்தின் ஆக சிறந்த வாசம் என்று அவள் நம்ப ஆரம்பித்த நேரத்தில் அவளை விட்டு விலகினான்.

"குட் பை கிஸ் இல்ல. இது நம்ம லவ்வுக்கான வெல்கம் கிஸ்.. உன்னை நான் விட மாட்டேன். எனக்கு எத்தனையோ லவ் ப்ரபோசல் வந்திருக்கு. ஆனா யாரையும் பிடிக்கல. உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னோடு இருந்தா சந்தோசமா இருப்பேன்னு தோணுது.. நீ எங்கேயும் ஓட முடியாது. இன்னும் இரண்டு நாள். அப்புறம் நீ என்னுடையவ. இது ப்ராமிஸ்.." என்றவன் திரும்பி நடந்தான்.

அந்த வராண்டாவின் எல்லையை தாண்டும்போது ஒரு தரம் திரும்பிப் பார்த்தான். ஸ்வேதா அதே இடத்தில் சிலையாய் நின்றிருந்தாள். இருட்டில் அவளின் முகம் தெரியவில்லை. ஆனாலும் அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தையும் சந்தோசத்தையும் அவனால் உணர முடிந்தது.

'சூழ்நிலையால் திருடி ஆனவளுக்கு ஒரு மறு வாய்ப்பு தரதா நினைக்கல. பிடிச்சவ எப்படி இருந்தாலும் ஏத்துப்பேன்னு சொல்லிக்கலாம்.!' மனதோடு சொல்லியபடி சென்றவன் சாம்பார் ஸ்பெஷலிஸ்ட் சங்கரின் அருகே படுத்தான். சங்கர் கரடி பொம்மை கை சேர்ந்தது போலெண்ணி அவனை தன்னோடு அணைத்துக் கொண்டார். கால்களை அவன் மீது போட்டுக் கொண்டார். அவரை விலக்கி தள்ளும் மூளை வேலை செய்யவில்லை அவனுக்கு. மனம் முழுக்க பட்டாம் பூச்சிகளும், மூளை முழுக்க தும்பி பூச்சிகளும் பறந்துக் கொண்டிருந்தன.

சிபி நல்ல உறக்கத்தில் இருந்தாள். நிலாவின் ஒரு கால் சிபியின் மீதும் மறு கால் மிருதுளாவின் மீதும் இருந்தது. அறை நிசப்தமாக இருந்தது. அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்தார்கள்.

கதவு இடி போல் இடிக்கப் படவும் அனைவரும் பதறியடித்து எழுந்து அமர்ந்தனர்.

சிபி கண்களை தேய்த்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கி நின்றாள்.

"யார் அது இந்த ராத்திரியில்?" என்று முனகினாள். கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு எரிச்சலாக இருந்தது. மீண்டும் தூங்கி விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். ஏனெனில் எப்போதெல்லாம் இப்படி கண் எரிச்சலோடும், அரை கிறுகிறுப்போடும் எழுந்து நாளை துவங்குகிறாளோ அன்று அவளின் நாள் மோசமாகதான் அமையும்.

கடிகாரத்தை பார்த்தாள். மணி விடியற்காலை நான்கை தொட்டுக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலின் வழியே வீசிய காற்றின் காரணமாக குளிர் அறை முழுக்க நிரம்பி இருந்தது.

தூக்கத்திலேயே எழுந்த மிருதுளா அறையின் விளக்குகளை எரிய விட்டாள்.

மிருத்யூ எழுந்து சென்று கதவை திறந்தான். கலைந்த தலையும், கொட்டாவி விட்டு வாயுமாக கதவை திறந்தவன் எதிரில் இருந்த சிபியின் பாட்டியை கண்டு விட்டு 'என்ன'வென்று கேட்க இருந்தான். ஆனால் தான் ஓர் ஊமை என்பது திடீரென்றுதான் நினைவிற்கு வந்தது. சட்டென்று வாயை மூடிக் கொண்டவன் நகர்ந்து நின்றுக் கொண்டான்.

உள்ளே வந்த பாட்டி அங்கிருந்த கூட்டத்தை ஆச்சரியமாக பார்த்தாள்.

"யார் இந்த குழந்தை?" என்றாள்.

நிலா இந்த கலவரத்திலும் எழாமல் புரண்டு கவிழ்ந்துப் படுத்தாள்.

"என் குழந்தைதான்.." ரோஜா தலையை சரி செய்தபடி சொன்னாள். குழந்தையின் அருகே சென்று அமர்ந்தாள்.

பாட்டி சிபியையும் ரோஜாவையும் மாறி மாறி பார்த்தாள்.

"படிக்க போனவ நீ. உனக்கு எப்படி இப்படி ஒரு பிரெண்ட்?" எனக் கேட்டாள்.

'குழந்தை உங்க பேத்தியோடது பாட்டி.!' என்று மனதுக்குள் குமுறினான் மிருத்யூ.

"கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்க வந்தா பாட்டி.!" தன் பின்னங்கழுத்தை தடவியபடியே சொன்னாள் சிபி.

"என்ன காலேஜோ? என்ன புள்ளைங்களோ?" என்று சலித்துக் கொண்ட பாட்டி "சரி நீ வா சிபி.. நலங்கு வைக்கணும்.." என அழைத்தாள்.

"இந்த டைம்க்கா?" அதிர்ச்சியோடு கடிகாரத்தை பார்த்தாள் பேத்தி.

"நான் உனக்கு ஏழு முறை நலங்கு வைக்க ஆசைப்பட்டேன். ஆனா உங்க அப்பாவும் அண்ணனும் எதுக்கும் ஒத்து வரல. மூணு முறையாவது நலுங்கு வைக்கலாம் சிபி.. வா என்னோடு.!" என்று பேத்தியின் கை பிடித்து இழுத்தாள்.

"பாட்டி.. நான் குளிச்சிட்டு வரேன்.." என்றவளின் கையை விட்டவள் "சீக்கிரம் வா." என்றாள்.

சுடு நீரில் குளித்தும் கூட சிபிக்கு உடல் நடுங்கியது. ஏறக்குறைய இன்னும் இருபத்தி ஆறு மணி நேரத்தை கடந்தாக வேண்டும். அதிகமாக பயந்தாள்.

சிபியின் பின்னால் வந்தாள் மிருதுளா.

ஹாலில் ஒரு மூலையில் அலங்கார மேடை போடப்பட்டு இருந்தது. விடிய விடிய வேலை செய்து உள்ளார்கள் என்பதை புரிந்துக் கொண்டாள் மிருதுளா.

மேடையில் இருந்த இருக்கையில் சிபியை அமர வைத்தாள் பாட்டி. வெள்ளை‌ நிற சோளியை அணிந்திருந்தாள். பாவாடைக்கும் ரவிக்கைக்கும் இடையே ஏழெட்டு இன்ச் இடைவெளி இருந்தது. அது போல் ஓர் உடையை அணிய மிருதுளாவுக்கும் ஆசை வந்தது. ஊருக்கு சென்றதும் இதே போல ஒரு உடை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆனால் அம்மாவிடம் எப்படி சமாளிப்பது என்பதைதான் அப்போது யோசிக்காமல் போய் விட்டாள்.

சந்தனமும் மஞ்சளும் வெள்ளி கிண்ணங்களில் வைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த பெண்கள் பலரும் அந்த இடத்தில்தான் கூடி இருந்தார்கள்.

ரூபாவதி முதலில் வந்தாள். சந்தன கிண்ணத்தை கையில் எடுத்தாள். சிபியின் கன்னங்களிலும் தோளிலும் பூசினாள். குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைத்து விட்டு நகர்ந்தாள்.

'பாவம்டா அவ.. ஏற்கனவே குளிர்.. இந்த குளிர்ல அவளுக்கு சந்தனத்தை பூசி இன்னும் அதிகமா குளிர வைக்கிறிங்களே.!' என்று பரிதாபப்பட்டாள் மிருதுளா.

"மாம்மா.." ரோஜாவின் கைகளில் இருந்த நிலா சிபியை பார்த்து கை நீட்டி அழைத்து குதித்தாள்.

ரோஜா சிரமப்பட்டு குழந்தையை கட்டுப்படுத்தினாள்.

"மாம்மாவா? குழந்தைக்கு பேச கத்து கொடும்மா.!" சிபியின் பெரியம்மா ரோஜாவிடம் அறிவுரை சொன்னாள்.

ரோஜா சரியென்று தலையசைத்த நேரத்தில் நிலா கையை நீட்டி சிணுங்க ஆரம்பித்தாள். இங்கே இருந்தால் காரியம் கெட்டு விடும் என பயந்த ரோஜா குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். கால் போன திசையில் நடந்தவள் வாயை திறந்தபடி வானம் பார்த்து படுத்திருந்த அர்விந்தின் முன்னால் வந்து நின்றாள்.

'ஒரு காதலுக்கு பாவம் இவங்க எவ்வளவு கஷ்டபடுறாங்க!' என நினைத்து பரிதாபம் கொண்டாள்.

"பால் வேணுமா தங்கச்சி?" என்ற ஒருவரின் கேள்வியில் திரும்பியவள் வேண்டாமென்று தலையசைத்தாள். அர்விந்தின் அருகில் சென்று அவனின் காலில் மிதித்தாள். படக்கென்று எழுந்து அமர்ந்தவன் நிலாவின் புன்னகையில் கண் விழித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN