குரங்கு கூட்டம் 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சிபி குளிக்க சென்ற நேரத்தில் அலங்கரிக்கும் பெண் அங்கே வந்து சேர்ந்தாள். மிருதுளாவை பார்த்து புன்னகைத்தாள்.

"ஆர் யூ ஓகே?"

மிருதுளா ஆமென்று தலையசைத்தாள். அலங்கரிக்கும் பெண் கன்னத்தை தொட்டுக் காட்டினாள்.

மிருதுளா கன்னத்தை மென்மையாக தேய்த்தாள். 'போட்டிருந்த மேக்கப் மறைஞ்சிடுச்சா?' கவலைப்பட்டாள்.

"சுவத்துல மோதிக்கிட்டேன் சிஸ்டர்!" என்றாள். அலங்கரிக்க வந்த பெண் கவலையாய் பார்த்தாள். அவள் மேலும் கேள்விகளை கேட்கும் முன் சிபி குளித்து முடித்து வந்து விட்டாள்.

"இப்படி வந்து உட்காருங்க.. நான் அலங்காரத்தை ஆரம்பிக்கிறேன்!" என்றாள்.

சிபி வந்து அமர்ந்தாள். அவளின் தலையை உலர்த்த ஆரம்பித்தாள் அலங்கரிக்கும் பெண்.

"குழந்தையும் அந்த பெண்ணும் புதுசா இருக்காங்க.."

"ஆமாங்க சிஸ்டர்.. இவ எங்களோட பிரெண்ட். இது அவளோட குழந்தை!" என்று நிலாவை தூக்கிய மிருதுளா "இவளுக்கும் அலங்காரம் பண்ணி விடுங்க!" என்றபடியே நிலாவின் குட்டி மின்னலை அவிழ்த்தாள். நிலா விட முடியாது என்று தலையை இடம் வலமாக அசைத்து சேட்டை செய்தாள்.

"இப்ப நீ அமைதியா இல்லன்னா உன்னை கொண்டுப் போய் குரங்குங்க கையில் தந்துட்டு வந்துடுவேன்!" மிருதுளாவின் மிரட்டலில் களுக்கென்று சிரித்தாள் சிபி.

"மாம்மா.." என்ற நிலா மிருதுளாவின் காயம் பட்ட கன்னத்திலேயே தன் கையை வைத்து தேய்த்தாள்.

"வலிக்குது.!" சிணுங்கியவள் நிலாவின் குட்டி கையை நகர்த்தி விட்டாள்.

"இவளை சமாளிக்க நாலு ஆள் வேணும்.. பாவம் ஆன்டியும் அங்கிளும்.!" பிரேமின் பெற்றோரை கவலையோடு நினைத்தாள்.

"மிரு எங்கே?" யோசனையாக கேட்டாள் ரோஜா. அவள் கேட்ட பிறகுதான் மிருத்யூ இங்கே இல்லை என்பதையே கவனித்தாள் மிருதுளா.

"அந்த நாய் எங்கே போச்சி?" குழப்பமாக கேட்டாள். "எங்கே போனா என்ன? வரும்போது வந்து சேரட்டும்.!" என்று பதிலையும் அவளே சொல்லிவிட்டு தான் செய்துக் கொண்டிருந்த வேலையின் பக்கம் கவனத்தை திருப்பினாள்.

அதிர்ந்து‌ நின்றிருந்த விஜியின் தோளில் கை வைத்து அந்த பக்கம் பார்த்தாள் ஸ்வேதா. உடனே "ஆ.."வென கத்த வாயை திறந்தாள். சட்டென திரும்பி அவளின் வாயை அடைத்த விஜி "வாயை மூடு!" என்று மிரட்டினான்.

ஸ்வேதாவின் விழிகள் பெரியதாக விரிந்தது.‌ கண்கள் கலங்கியது.

"ஒன்னும் இல்ல.. பயப்படாத.." தைரியம் சொன்னவன் கதவை இருந்தது போலவே சாத்தினான்.

"நாம இங்கிருந்துப் போயிடலாம்.." என்று அவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

கதவை திறந்து சில அடிகள் நடந்திருப்பார்கள். அதற்குள் அந்த கதவு மீண்டும் திறக்கப்படும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். சித்துவின் ஆட்கள் கதவை திறந்து உள்ளே சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே. சாரி.😔
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN