குரங்கு கூட்டம் 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"எப்படி அங்கே டெட்பாடிஸ் வந்தது?" நகத்தை கடித்து துப்பியபடி கேட்டாள் ஸ்வேதா.

அவளின் கையை தட்டி விட்ட விஜி "எனக்கு மட்டும் எப்படி தெரியும்? ஆனா நேத்து நான் அந்த டெட்பாடியில் ஒருத்தனை உயிரோடு பார்த்தேன். யாரோ நேத்து சாயங்காலத்துக்கு மேலதான் கொன்னிருக்காங்க.." என்றான் பதற்றம் மறைத்த குரலில்.

ஸ்வேதாவுக்கு உள்ளுக்குள் உதறியது. "யாரா இருக்கும்? நாம வந்த பிறகு உள்ளே போனாங்களே அவங்கதான் கொன்னிருப்பாங்களா?" எனக் கேட்டாள் சந்தேகத்தோடு.

"யாருக்கு தெரியும்? நாம இந்த ரூமை விட்டு வெளியே போகாம இருப்பதுதான் இப்போதைக்கு நமக்கு நல்லது. கல்யாணம் முடிஞ்ச உடனை எஸ்கேப் ஆகிடலாம்.!" என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.

'ஒருவேளை இது அந்த வெங்காய போலிசா இருக்குமா? அவர்தானே ரவுடிகளை பிடிக்க வந்திருப்பதா சொன்னாரு..' என்று குழம்பித் தவித்தாள் அவள்.

வெறி கொண்ட வேங்கை போல தனது அறைக்குள் நடமாடிக் கொண்டிருந்தான் சித்து. அப்போது திறந்திருந்த கதவின் வழியே ஓடி வந்தனர் அவனின் ஆட்கள் சிலர்.

"சார்.. சம்பத் சாரோட கையாட்கள் அத்தனை பேரும் டெத்.." என்றான் ஒருவன்.

சித்து அதிர்ந்தான். அவர்களை சந்தேகத்தோடு பார்த்தான்.

"உண்மைதான் பாஸ். யாரோ அவங்களை ஷூட் பண்ணி இருக்காங்க. பாடியை அவங்களோட ரூம் அலமாரியிலேயே மறைச்சும் இருக்காங்க.."

சித்துவின் பற்கள் அரைப்பட்டன. "யாரா இருக்கும்?" என்றவன் தன் தாடையை குத்தியபடி சுற்றும் முற்றும் நோட்டமிட்டான்.

"யாரோ இருக்காங்க.. நான் முன்னாடி இருந்து சந்தேகப்பட்ட மாதிரியே இந்த வீட்டுல யாரோ நமக்கு வேண்டப்படாதவங்க இருக்காங்க. அனேகமா அவங்களேதான் சரத்தையும் கொன்னிருப்பாங்கங்கன்னு நினைக்கிறேன்.. கேர் புல்லா இருக்கணும். ஒவ்வொரு அடியும் கவனமா இருக்கணும். இந்த கல்யாணம் முடியும் முன்னாடி நம்மோட எதிரி யாருன்னு கண்டுபிடிச்சி போட்டுத் தள்ளியாகணும்.." என்றான் வெறியோடு.

சுற்றி இருந்தவர்கள் அவனுக்கு சரியென்று தலையசைத்தார்கள்.

"பாஸ்.. இன்னொரு விசயம்.." என்றான் ஒருவன். என்னவென்பது போல பார்த்தான் இவன். "இந்த முறையும் நம்மோட கன்தான் யூஸ் பண்ண பட்டிருக்கு. தோட்டாஸ் எல்லாமே நம்மோடதுதான்.." என்றான்.

சித்துவுக்கு தலை சுழலுவது போலிருந்தது. யாராய் இருக்கும் என்று யோசித்து சலித்துப் போனான்.

"நம்ம வெப்பன்ஸ் எப்படி?" நெற்றியை பிடித்தபடி யோசித்தவன் "உங்க வெப்பன்ஸ் எங்கே?" எனக் கேட்டான்.

அனைவரும் எடுத்துக் காட்டினார்கள். "சம்திங் ராங்.!" என்றவன் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஒரு முறை நடந்தான். யோசனை வந்து விட்டது போல ஓடியவன் தனது ஆயுத அறையை திறந்தான். உள்ளே இருந்த ஆயுதங்களில் சில குறைச்சல் தென்பட்டது.

அறையின் விளக்கை அணைத்தான். அருகிலிருந்த மற்றொரு ஸ்விட்சை போட்டு விட்டான். நீல நிற ஒளியில் தரையில் இருந்த காலடிகளும், சுவரில் பதிந்திருந்த கையச்சுக்களும் தெரிந்தன.

"இந்த ரூம்க்குள்ள யார் வந்துட்டு போனதுன்னு இன்னும் ஒரு மணி நேரத்துல எனக்கு ரிசல்ட் வரணும்.." என்றவன் ஆத்திரமாக மூச்சை விட்டபடி வெளியே நடந்தான்.

இந்த அறைக்குள் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் வர முடியாது. ஆனாலும் கூட திருமணம் என்பதால் நிறைய உறவுகள் வந்திருந்தார்கள். இவனது அறையும் கூட சற்று பாதுகாப்பு இல்லாமல்தான் இருந்தது.

அவனுக்கு தெரிந்து அந்த அறைக்குள் வந்த ஒரே ஒரு அன்னிய ஆள் மிருணாளினிதான். ஊமை பெண்ணின் மீது அவனுக்கு அந்த சந்தேகமும் வரவில்லை. ஏனெனில் அவனின் ஆயுத அறைக்குள் இரண்டு ஆண்களின் ஷூ தடமும், இரண்டு பேரின் வலது கை அச்சுகளும்தான் தென்பட்டன. அதனால் மிருணாளினி மீது துளியும் சந்தேகம் வரவில்லை அவனுக்கு.

சம்பத்துக்கு போன் செய்தான். நடந்த விசயத்தை சொன்னான். எதிர் முனையில் சம்பத் ஆத்திரத்தோடு தன் முன்னால் இருந்த மணல் பையை குத்தினான்.

"நாடகம் ஆடுறான்.. என் ஆட்களை கொன்னுட்டு அதை தூக்கி இல்லாத ஆட்கள் மேல போடுறான். வெப்பன் சேம்பருக்குள்ள அன்னிய மனுசன் நுழையும் வரை இவன் சும்மா இருந்தான்னு சொன்னா யார் நம்புவா?" எனக் கேட்டு மீண்டும் மணற் பையிலேயே படபடவென்று குத்தினான்.

"தம்பி.. நலங்கு வைக்கலாம்ப்பா.." அம்மாவின் குரலில் திரும்பினான். அவனின் அம்மா சந்தன கிண்ணத்தோடு நின்றிருந்தாள்.

"நீங்களும் உங்க சடங்கும்.." என்று எரிந்து விழுந்தபடியே வந்து கூடத்தில் இருந்த மனையில் அமர்ந்தான். சுற்றியிருந்த பெண்கள் நகைத்தபடியே அவனுக்கு சந்தனம் பூசி விட்டனர்.

நலங்கு முடிந்த பிறகு எழுந்து நின்றவன் மனையை விட்டு தள்ளி நின்றிருந்த தன் முன்னாள் மாமனாரை பார்த்தான். அவர் பரிதாபத்தோடு நின்றிருந்தார். நல்ல பணக்காரர் அவர். வெளிநாட்டில் கூட அவரின் தொழிற்சாலைகள் இருந்தன. அரசியலிலும் வளர்ந்துக் கொண்டிருந்தவர். ஆனால் அத்தனையும் போய் விட்டது. எப்போது தன் ஒற்றை மகள் இறந்தாலோ அன்றே வாழ்வில் மீதான பற்றை அறுத்து விட்டு விட்டார் அவர். சம்பத்தான் தன் மகளை கொன்றது என்ற நம்பிக்கையில் துளியும் அசையாமல் இருந்தார் அவர். இவனை கொல்லவும் ஆட்களை ஏவினார். ஆனால் வாழும் எமனான அவனை தொடுவது அவ்வளவு சுலபமில்லையே! அதனால் அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. இவனை கொல்வதற்காக தனது மொத்த சொத்தையும் இழக்க தயாராக இருக்கிறார் அவர்.

சம்பத்துக்கு இவரை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் கருப்பு படருவது போலிருக்கும். காதலித்து மணந்த பெண்ணின் தந்தை அல்லவா.. அதனால் இருக்கும்.

சம்பத் குளித்து முடித்ததும் உடையை அணிந்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.

"தம்பி. நீ எங்கேயும் போக கூடாது.. நலங்கு வச்சிருக்கு.." என்றாள் அம்மா.

அவனின் அம்மா ஒரு பழங்காலம். அவன் செய்யும் கொலைகளுக்கும், அவள் பின்பற்றும் சடங்கு சம்பிரதாயத்திற்கும் இடையில் மின்தூக்கி வைத்தாலும் எட்டாது என்பதுதான் உண்மை. சரத் இறந்து போனான் என்று தெரிந்தால் திருமணத்தையே நிறுத்தி விடுவாள். அதனாலேயே இவளிடம் இன்னும் விசயத்தை சொல்லவில்லை அவன்.

"அம்மா எனக்கு அர்ஜென்ட் வேலை இருக்கு.. அஞ்சி நிமிசத்துல வந்துடுவேன்.." என்றவனின் முன்னால் இரு கைகளையும் நீட்டி மறித்தவள் "சொன்னா கேட்கணும் கண்ணா.. இரு நான் போய் ரெடியாகிட்டு வரேன்.. நீயும் நானும் போட்டோஸ்க்கு போஸ் தரலாம்.." என்றாள்.

சம்பத் சரியென்று தலையசைத்தான். அம்மா உள்ளே சென்றாள். இவன் வெளியே நடந்தான். அவனின் அம்மா தயாராகி வந்து பார்த்தபோது அவன் தனது மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்தான்.

"ரிசல்ட்.." எனக் கேட்டான் கையை நீட்டி.

அருகில் நின்றிருந்த மருத்துவர் சரத்தின் உடலை வெறித்தபடியே இவனிடம் ரிசல்ட் பைலை தந்தார்.

"இரண்டு புல்லட் கையில்.. ஒரு புல்லட் நெஞ்சில்.. நெஞ்சில் சுட்ட புல்லட் ரொம்ப பக்கத்துல இருந்து பாஞ்சிருக்கு. ஒரு பொண்ணோட தலைமுடி இவரோட கழுத்து சங்கிலியில் சிக்கி இருந்தது.." என்று மேலும் விவரித்தார் அவர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN