குரங்கு கூட்டம் 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"என்னை கூப்பிட்டிங்களா சார்?" எனக் கேட்டாள் குமரனின் முன்னால் வந்து நின்ற ரூபாவதி.

"யெஸ் மேடம்.. கொஞ்சம் முக்கியமான வொர்க்.. அது பத்தி பேச உங்களை டெல்லிக்கு வர சொல்லி இருக்காங்க.." என்றவர் ஒரு பைலை எடுத்து அவளின் முன்னால் வைத்தார்.

பைலை தொடாமல் அவரை முறைத்தாள் அவள்.

"சாரி சார்.. எங்க பேமிலியில் பங்ஷன்.." என்றாள்‌ கைகளை கட்டியபடி.

குமரன் எழுந்து நின்றார்.

"இந்த நாட்டுக்குள்ள வெப்பன் சப்ளை பண்றவங்களை பத்தி பெரிய விசயம் கிடைச்சிருக்கு. அதை பத்தி விசாரிக்க இருக்கும் கமிஷன்க்கு உங்களைதான் ஹெட்டா போட போறாங்க.. நீங்க இப்ப போகலன்னா அப்புறம் நான் போக வேண்டி இருக்கும். எனக்கு இங்கேயே நிறைய வொர்க் இருக்குன்னு உங்களுக்கே தெரியும் இல்லையா?" எனக் கேட்டார் பரிதாபமாக.

இவர் நினைத்தது போலவே 'வெப்பன் சப்ளை' என்ற வார்த்தையை கேட்டதுமே ரூபாவதியின் முகம் மாறி விட்டது. அவள் நிச்சயம் இங்கிருந்து கிளம்புவாள் என்று அவருக்குத் தெரியும்.

"பரவால்ல சார்.. நானே போறேன்.. நம்ம டிபார்ட்மெண்ட்க்காக இதை கூட செய்யலன்னா எப்படி?" என்றவள் பைலை எடுத்துப் பார்த்தாள்.

"இன்னைக்கு ஈவினிங் மீட்டிங்ன்னு போட்டிருக்கு.!" என்றாள் அதிர்ச்சியோடு.

"நான் உங்களுக்கு நேத்து மதியத்துல இருந்து கால் பண்ணிட்டு இருக்கேன். நீங்கதான் வரல.." என்றவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.

"ராகுலும் ஜீவனும் எங்கே மேடம்? இரண்டு பேரும் எனக்கு ரைட் ஹேன்ட் மாதிரி இருந்தாங்க.. உங்களுக்கு முக்கியமான வேலைன்னு சொல்லி கூட்டி போனிங்க.. இன்னுமா வேலை முடியல?" எனக் கேட்டார் எதுவும் தெரியாதவர் போல.

"பங்சன்ல ரொம்ப முக்கியமான வேலை சார். அவங்கதான் கூடமாட இருந்து எனக்கு ஒத்தாசை செஞ்சிட்டு இருக்காங்க. அவங்க இல்லன்னா எனக்கு ரொம்ப சிரமம் சார்.. ரொம்ப நல்ல பசங்க.." என்று பொய்யாய் ஒரு பாராட்டை தெரிவித்து விட்டு வெளியே நடந்தாள் அவள்.

அடுத்த அரை மணி நேரத்தில் விமானம் ஏறி விட்டாள் ரூபாவதி. தன்னால் திருமணத்தில் கலந்துக் கொள்ள முடியாது என்று ஏற்கனவே வீட்டிற்கு போன் செய்து சொல்லி விட்டிருந்தாள்.

ஸ்வேதா நடுங்கிக் கொண்டே இருந்தாள்.

"பயப்படாத.." தைரியம் சொன்ன விஜி அவளுக்கு தேனீரை தந்தான்.

சுட சுட தேனீரை அருந்தியவள் "இந்த வீட்டுல ஒரு போலிஸ் கூட்டம் இருக்கு. அவங்கதான் இதை பண்ணியிருப்பாங்க.." என்றாள்.

விஜி மறுப்பாக தலையசைத்தான். "அந்த இரண்டு போலிஸையும் பார்த்தா காமெடி போலிஸ் மாதிரி இருக்கு. அவங்க இதை பண்ணியிருக்க சான்ஸ் இல்ல.." என்றான்.

ஸ்வேதா குழம்பினாள். பிறகு "அவங்க இல்ல.." என்றாள்.

"வேற யார்?"

வெங்காய போலிஸை பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் அவனிடம் விவரித்தாள் அவள்.

"இந்த வீட்டுல என்னவோ நடக்குது ஸ்வேதா.." என்றான் அவனும் சந்தேகத்தோடு.

"நம்மால இப்ப வெளியே தப்பிச்சி போக முடியாது.." என்றவள் கவிழ்ந்துப் படுத்தாள்.

"இந்த மேரேஜ் முடியும் வரை நாம இந்த ரூமை விட்டு வெளியே போக வேணாம். நீயும் போகாதே.!" என்றவள் போர்வையை எடுத்து தலையோடு போர்த்திக் கொண்டாள்.

தன் சட்டையிலிருந்த மிருதுளாவின் கையை தூர தள்ளினான் சித்து.

"யார்கிட்டடி நடிக்கற?" எனக் கேட்டவன் அவளின் முகத்தை நோக்கி தன் மயங்கிய கை விரல்களை நீட்டினான்.

மிருதுளா அவனுக்கும் முன்னால் அவனின் அடி வயிற்றில் எட்டி உதைத்து விட்டு பின்னால் நகர்ந்தாள். முகம் மாறியது அவனுக்கு. அவனுக்கு மட்டுமல்ல சுற்றி இருந்த அனைவருக்குமே அப்படிதான் மாறி இருந்தது.

"சம்திங் ராங்.." என்ற சம்பத் தன் துப்பாக்கியை எடுத்து குறிப் பார்த்தான்.

"ஹலோ பாஸ்.. கொஞ்சம் நிப்பாட்டுறிங்களா?" அவன் புறம் திரும்பி தன் கையை காட்டி தடுத்தபடி கேட்டாள்.

சம்பத் அவளை நக்கலாக பார்த்தான்.

"இப்ப நீங்க என்னை கொன்னுட்டா ரொம்ப முக்கியமான பல உண்மைகள் உங்களுக்கு தெரியாமலேயே போயிடும்.. நீங்க நினைக்கற மாதிரி நான் சாதாரண ஆள் இல்ல.!" என்றாள்.

சம்பத் அவளை நோக்கி நடந்தான். அசையாமல் நின்றாள் மிருதுளா. அவளை தாண்டி நடந்தவன் தரையில் கிடந்த மிருத்யூவின் தலையில் துப்பாக்கியின் முனையை பதித்தான்.

"நீ சொல்ல வேண்டிய எல்லாத்தையும் இன்னும் இரண்டு நிமிசத்துக்குள்ள சொல்லி முடிக்கற.. இல்லன்னா உன் சிஸ்டரை கொன்னுடுவேன்!" என்றான்.

மிருதுளா அப்போதுதான் தரையில் கிடந்த தன் சகோதரனைப் பார்த்தாள். அறையின் சுவர் கருப்பாய் இருந்ததாலும், விளக்குகள் ஒன்றிரண்டு மட்டும் ஒளிர்ந்துக் கொண்டிருந்ததாலும் இதுவரையுமே அவள் அவனை கவனிக்கவில்லை.

"சீக்கிரம் சொல்லு. இல்லன்னா இவ சீக்கிரம் செத்துடுவா.!" என்ற சம்பத்தை யோசனையோடு பார்த்தவள் "கொன்னுக்கோ.." என்றாள்.

'அதானே பார்த்தேன்.. இவதான் எப்ப எப்பன்னு என் இழவுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காளே.. சான்ஸ் கிடைச்சா சும்மா விடுவாளா? இவனுங்க சும்மா கேட்டிருந்தா கூட ஏதாவது கதை சொல்லி இருப்பா. இப்ப வாயே திறக்க மாட்டாளே.!' மிருத்யூ கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

"இந்த நாயாலதான் என் திட்டம் பாழா போச்சி.. கல்யாணத்துக்கு வந்தா மூணு வேளை மூக்கு பிடிக்க தின்னுட்டு அமைதியா இருக்கணும்.. ஒரு ரவுடி பையனை லவ் பண்ணி அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க கூடாது.. இவளை என் கையாலயே கொன்னிருப்பேன்.. நீ என் வேலையை ஈஸியாக்குவதால நான் உன்னை என் அசிஸ்டென்டா சேர்த்துக்கறேன்.!" என்றாள் மிருதுளா சம்பத்திடம். இதை கேட்டு சித்துவுக்கு முகம் மாறியது. மயங்கி கிடந்த மிருணாளினியை வெறித்துப் பார்த்தான்.

'இவ சொல்றதை பார்த்தா மிருணா மேல தப்பு இல்லன்னுதான் தோணுது.. சம்பத்தான் தேவையில்லாம இவ மேல கையை வச்சிட்டான்!' என்று கடுப்பானான்.

'என்னை காப்பாத்தி விட இப்படியொரு திட்டமா? நம்ப முடியவில்லையே..' மிருத்யூ சந்தேகமாக நினைத்தான்.

"நான் உனக்கு அசிஸ்டென்டா?" எனக் கேட்டபடி இரண்டே எட்டில் அவளிடம் வந்துவிட்ட சம்பத் ஓங்கி அறைந்தான். இந்த முறை மிருதுளா சற்று அலட்சியமாக நின்றிருந்ததால் இவனின் அறை பட்டு தரையில் விழுந்தாள்.

கன்னத்தை பிடித்தபடி எழுந்து நின்றவளை முறைத்தவன் "ஜவ்வு மாதிரி எதுக்கு இழுத்துட்டு இருக்க?" எனக் கேட்டு உதைக்க சென்றான்.

மிருதுளா தான் வாங்கிய அறையின் காரணமாக ஏற்கனவே கோபத்தில் இருந்தாள். இவன் மீண்டும் உதைக்க வரவும் அவனுக்கு முன் பாய்ந்து அவனின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டாள்.

சம்பத் ஆச்சரியத்தோடு புருவம் உயர்த்தினான்.

"ஐ லைக் யூ பேபி.. பொண்ணுங்க கையில் துப்பாக்கி இருந்தா எனக்கு ரொம்ப பிடிக்கும்.!" என்றவனை பார்த்து நக்கலாக சிரித்தவள் "உன்னை மாதிரி ஆட்களை சுடுவது எனக்கும் ரொம்ப பிடிக்கும் ரவுடி.!" என்றாள்.

"சவாலை ஏத்துக்கறேன் பேபி.." என்ற சம்பத் தன் இரு கைகளையும் நீட்டியபடி அவளைப் பார்த்தான்.

"ஷூட் மீ.!" என்றான் கர்ஜனையோடு.

"சிக்கினடா மகனே.!" என்றபடி டிரிக்கரை இழுத்தவள் குண்டு பாயாமல் வெறும் டொப்பென்று சத்தம் கேட்கவும் அதிர்ச்சியும் கோபமுமாக அவனைப் பார்த்தாள்.

"வெடிக்காத துப்பாக்கியை தந்து ஏமாத்துறியா? நீ சரியான ஆம்பளையா இருந்தா வெடிக்கற துப்பாக்கியை கொடுடா.!" என்றாள் கோபத்தோடு.

சுற்றி இருந்த ஆட்கள் அனைவரும் சிரித்தனர்.

"டேவிட்.!" சம்பத் கையை நீட்டினான். அருகே இருந்தவன் தன் துப்பாக்கியை தூக்கி இவன் கையில் எறிந்தான்.

"யூ ஆர் வெரி வொர்ஸ்ட்.." என்றவன் டிரிக்கரை இழுத்து விட்டான்.

ஆனால் அவன் டிரிக்கரை இழுக்கும் முன்பே பக்கத்தில் இருந்த தூணை நோக்கி ஓடி விட்டாள் மிருதுளா. குண்டு வெறும் காற்றில் பறந்து சென்று சுவற்றில் பாய்ந்தது.

மிருதுளா தூணின் பின்னால் நின்றிருந்தாள். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இந்த அறையிலிருந்து வெளியே செல்வது சுலபமில்லை என்பதை புரிந்துக் கொண்டாள்.

'பிரேம் நாய்.. உயிரோடு வெளியே போயிட்டேன்னா அந்த நாயை உதைச்சே சாகடிக்க போறேன்..' பயத்தோடு திட்டிக் கொண்டிருந்தவளின் அருகே சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். சம்பத்தின் ஆட்கள் இருவரும் நக்கலாக நகைத்தபடி அவளை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

"பெரிய நம்பியார்.. சிரிக்கிறானுங்களாம்.!" முணுமுணுத்தவள் வந்தவர்களை நோக்கி கையை மடக்கி நீட்டினாள்.

"சண்டை செய்யலாமா?" எனக் கேட்டாள்.

அவர்கள் இருவரும் தங்களின் துப்பாக்கிகளை பார்த்துக் கொண்டனர். இவளை பார்த்து கழுத்தை ஆட்டினர்.

"நேர்மையா சண்டை போடலாம்.." என்றவளின் தலைமுடியை கொத்தாய் பிடித்தான் ஒருவன். "போடலாமே.!" என்றான் அவளின் காதோரத்தில்.

அவளை இழுத்துக் கொண்டு வந்து சம்பத்தின் காலடியில் தள்ளினான்.

"ரொம்ப பேசுறா சார்.." என்றான் அவன்.

"பேசும் வாயை உடைச்சிடு.!" என்றான் சம்பத் மெதுவாக.

நச்சென்று ஒரு குத்து மிருதுளாவின் வாயில் விழுந்தது. வாய் உடையவில்லை என்றாலும் வலி சற்று அதிகமாகவே இருந்து விட்டது.

"அம்மா.." கத்தியபடியே அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றாள். அடியாள் மீண்டும் ஒரு முறை குத்த முயல அவனின் கையை பற்றியது மற்றொரு கரம்.

"பாவி.. பரதேசி.. என்னை கொன்னுட்டு என் அம்மா அப்பாவோட மொத்த லவ்வையும் இவன் ஒருத்தனே ஆட்டைய போட பார்த்திருக்கான்.!" என்று முனகியபடி கண்களை திறந்தாள் மிருதுளா. அவளின் முகத்துக்கு நேரே குனிந்திருந்த மிருத்யூ "நான் வேணா மீண்டும் போய் படுத்துக்கட்டுமா?" எனக் கேட்டான் உதட்டை சுழித்தபடி.

"நோ நோ.. காப்பாதுடா.. துப்பாக்கி வெடிக்கும்போதே நான் உன்னை எதிர்பார்த்தேன்.." என்றாள்.

தன் கை முட்டியில் ரவுடி ஒருவனின் முகத்தை குத்திய மிருத்யூ "நீயும் என்னை லேட்டாதானே பார்த்த?" என்றான்.

"அட நாயே.. பழிக்கு பழி வாங்க இதான் நேரமா?" எனக் கேட்டபடி தனக்கு மறுபக்கம் இருந்தவனின் வயிற்றில் உதைத்தாள் மிருதுளா.

எழுந்து நின்றாள். அவளருகே மிருத்யூ நின்றான்.

சம்பத்தும் சித்துவும் அவர்களுக்கு எதிரே நின்றிருந்தார்கள். அவர்களை சுற்றி பதினைந்து பதினாறு ரவுடிகள் இருந்தார்கள்.

"மெண்டல்.." என்று சித்துவை திட்டினான் சம்பத்.

சித்து வானமே இடிந்தது போல நின்றிருந்தான். மிருத்யூவிற்கு ஆண் குரலா இல்லை அவனே ஆணா என்ற குழப்பத்தில் இருந்தான் அவன்.

"மிருணா.." தயக்கமாக அழைத்தான்.

"மிருத்யூ.. இவன் பேர் மிருத்யூ. இவன் கே கிடையாது. அதனால இவன் உனக்கு நிச்சயமா கிடையாது." என்றாள் மிருதுளா.

வாயில் இருந்து ரத்தம் கொஞ்சம் வழிந்தது அவளுக்கு. ஏற்கனவே வாங்கியிருந்த குத்தில் பல் கன்னத்து தோலில் பட்டு, அந்த தோல் கிழிந்ததில் இந்த ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.

"இன்ட்ரஸ்டிங்.. ஒரு ஆண் பெண்ணாக வேஷம் போட்டு வீட்டுக்குள்ள வந்திருக்கான். என்ன காரணம்?" தனக்கு தானே கேட்டுக் கொண்ட சம்பத் "யார் நீங்க?" எனக் கேட்டான் அவர்களிடம்.

மிருத்யூவும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"நாங்க அன்டர்கவர் ஆபரேஷன்ல இருக்கும் போலிஸ்.." என்றாள் மிருதுளா.

சம்பத்தின் கண்கள் சிவக்க ஆரம்பித்தது.

"அப்படியே விட்டிருந்தா கூட அவனுங்க நம்மை விடுறதுக்கு சான்ஸ் இருக்கு. இவ இப்படி ஒரு பொய்யை சொல்லி இன்ஸ்டன்டா சவ குழி தோண்டிட்டாளே.!" என்று நெற்றியில் அடித்துக் கொண்டான் மிருத்யூ.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN