குரங்கு கூட்டம் 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
'அண்டர்கவர் ஆபிசர்ஸா.?' என்று யோசித்த சம்பத் "ரொம்ப கேவலமான பொய்யா இருக்கு.. எந்தவொரு அண்டர்கவர் ஆபிசரும் தான்தான் ஆபிசர்ன்னு சொல்ல மாட்டங்க.." நக்கலாக சொன்னான்.

"இதென்ன வம்பா போச்சி.? ஒரு போலிசை கூட நம்ப மாட்டேங்கிறிங்க.. இதுக்காக நான் உங்க மேல தனி கேஸ் போட போறேன்.." என்றாள் மிருதுளா கோபமாக.

'எவனாவது வந்து காப்பாத்தும் வரை இந்த உயிரை பிடிச்சி வைக்கணுமேன்னு இவ எப்படியெல்லாம் நேரத்தை கடத்திட்டு இருக்கா.? ஆனா இவ சொல்ற பொய்யை பார்த்தாதான் ரொம்ப பயமா இருக்கு. இவ சொல்ற உடான்ஸ்கெல்லாம் அவனுங்க யோசிக்காம சுட்டுடுவாங்களே.!' என்றுப் பயந்தான் மிருத்யூ.

'சீக்கிரம் யாராவது வந்து தொலைங்களேன்டா.!' மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தான் அவன்.

"உண்மையை சொல்லுங்க.. உங்களை பார்த்தா போலிஸ் மாதிரி தெரியல. ஏதோ டபுள் ஏஜென்ட் வேலை பார்க்கற மாதிரி இருக்கு.!" என்றான் சம்பத் சந்தேகத்தோடு.

அதே நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் ‌ஜீவன்.

"ஹாய் பாஸ்.." என்று கையை அசைத்தபடி வந்தவன் தன் போனை அவன் முன் நீட்டினான்.

சம்பத் குழப்பத்தோடு போனைப் பார்த்தான். "சார்.. நம்ம குடோனுக்கு வெளியே போலிஸ் படை இருக்கு.." என்றான் எதிர் முனையில் ஒருவன்.

சம்பத் போனை பிடுங்கிக் கொண்டான்.

"அருண்.. என்ன நடக்குது?" என்று கத்தினான் போனில்.

"பாஸ்‌.. போலிஸ் கூட்டம் வந்திருக்கு. நம்ம குடோனை சுத்தி வளைச்சிருக்காங்க.. வீட்டையும் சோதனை பண்ணிட்டு இருக்காங்க.. என்னென்னவோ நடக்குது.." என்றான் அவன் பயத்தோடு.

சம்பத் தன் துப்பாக்கியை எடுத்து ஜீவனின் முன்னால் நீட்டினான்.

"என்னை கொன்னா உன் மேல கொலை வழக்கு பதியும்.!" என்ற ஜீவன் தன் பாக்கெட்டில் இருந்த மற்றொரு போனை எடுத்துக் காட்டினான்.

நடப்பதை வீடியோ லைவ்வில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தான். எதிரில் திரையில் ஒரு பெரிய அறையும், அதற்குள் இருந்த பல காவல் துறை அதிகாரிகளும் சம்பத்தை பார்த்து முறைத்தார்கள்.

"உன்னை அரெஸ்ட் பண்ண போறோம். மரியாதையா ஜீவன் கூட வந்துச் சேரு.." என்றார்கள்.

இணைப்பைத் துண்டித்து விட்டு போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஜீவன் "நான் உன்னை அரெஸ்ட் பண்ண போறேன்.." என்று விலங்கை எடுத்துக் காட்டினான்.

கேலியாக நகைத்த சம்பத் "என்னை அரெஸ்ட் பண்றது அவ்வளவு சுலபம் இல்லை." என்றபடி தன் துப்பாக்கியின் டிரிக்கரை விடுவித்தான்.

துப்பாக்கியின் குண்டு ஜீவனை தீண்டும் முன் அவனின் கழுத்தில் வந்து பாய்ந்தது ஒரு ஊசி.

பிடுங்கிப் பார்த்தான். ரத்தம் சொட்டியது ஊசியின் நுனியில். அதே வேளையில் அவனை சுற்றி இருந்த மற்ற ரவுடிகளின் உரசியபடி சென்று சுவற்றை மோதியது நிஜ துப்பாக்கி குண்டுகள்.

"எல்லோரும் உங்க வெப்பன்ஸை கீழே போட்டுட்டு சரணைஞ்சிடுங்க. இல்லன்னா உங்களை நான் சுட்டுடுவேன்.!" என்று‌ மிரட்டிய ராகுலை நக்கலாக பார்த்தார்கள் அவர்கள்.

தங்களின் கையிலும் துப்பாக்கி இருக்கையில் தாங்கள் ஏன் சரணைடைய வேண்டும் என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. ஆனால் அவர்கள் யோசிக்கும் முன் நான்கைந்து பேரின் காலிலும் கையிலும் குண்டுகளை இறங்கி விட்டுவிட்டான் ராகுல். உடனே மற்ற அனைவர் கையில் இருந்த துப்பாக்கிகளும் கீழே விழுந்தன.

அதே வேளையில் சம்பத்தின் கையில் இருந்த துப்பாக்கியும் நழுவி கீழே விழுந்தது. அவனும் மயங்கி தரையில் சாய்ந்தான்.

அறை கதவின் அருகே நின்றிருந்த ராகுல் சித்துவிற்கும் ஒரு ஊசியை விசிறிவிட்டு கதவோடு சாய்ந்து நின்றான். ரவுடிகள் சிலர் ரத்த வெள்ளத்தோடு தரையில் கிடந்தனர்.

"சீனியர் ஏன் லேட்டு?" அழுகாத குறையாக கேட்ட மிருதுளா ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

மிருத்யூவிற்கு கை தந்தான் ஜீவன்.

மிருதுளாவின் கன்னத்தை தடவிய ராகுல் "சாரி.." என்றான்.

"ம்.." என்றவள் அவனின் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

அவளை விலக்கி நிறுத்தியவன் குண்டடி படாதவர்கள் அனைவரின் கையையும் கட்டிப் போட ஆரம்பித்தான்.

"குமரன் சார் இங்கே வர கொஞ்ச நேரம் ஆகலாம்.. அதுவரை இவங்களை பார்த்துக்கிட்டாகணும் நாம.!" என்றான் ஜீவனிடம்.

அவன் புரிந்ததாக தலையசைத்துவிட்டு சித்துவின் கழுத்தில் விரல்களை வைத்து சோதித்துப் பார்த்தான்.

"இந்த மருந்து எவ்வளவு நேரம் தாங்கும்?" எனக் கேட்டான்.

"டூ ஹவர்ஸ்..‌‌ அதுவரை இவங்களை யார் விட போறா?" என்றவன் தன் போனை எடுத்து குமரனுக்கு அழைத்தான்.

அதே வேளையில் மிருதுளா அங்கிருந்து ஓடினாள்.

சிபியின் அறைக்குள் நுழைந்தவள் தனது பயண பையை தயார் செய்தாள். "நாம கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சி.. சித்துவும் சம்பத்தும் அரெஸ்டட்.!" என்றாள்.

சிபி சோகமாக அவளைப் பார்த்தாள்.

"என் அப்பாவையும், சித்தியையும் எப்படி தாண்டி போக?" எனக் கேட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN