குரங்கு கூட்டம் 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சிபி வெளியே வந்து பார்த்தபோது மொத்த வீடும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. போலிஸ் படை ஒரு பக்கமும், ரவுடிகள் ஒரு பக்கமும் ஓடி கொண்டிருந்தனர்.

"எங்க அப்பா எங்கே?" எனக் கேட்ட சிபியை முறைத்த மிருதுளா "இப்ப அதுதான் முக்கியமா? அவரை அப்புறம் பார்த்துக்கலாம்.. நீ வா, இதை விட்டா நமக்கு நல்ல சான்ஸ் கிடைக்காது. இங்கிருந்து தப்பிச்சி போயிடலாம்.." என்று அழைத்தாள்.

சிபி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தாள். மாடியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

"சைலன்சர் யூஸ் பண்ணல. இது போலிஸ் துப்பாக்கிதான்.. வா நாம போகலாம்.." என்று முன்னே ஓடினான் மிருத்யூ.

அர்விந்த் அமர்ந்து சாவகாசமாக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தான். அவனின் முன்னால் வந்து நின்றாள் ரோஜா.

"என்ன வேணும்?" எனக் கேட்டான். வீட்டுக்குள் நடந்துக் கொண்டிருந்த கலவரம் இன்னும் இவர்களுக்கு வந்து சேரவில்லை.

"போலிஸ்கும் ரவுடிகளுக்கும் நடுவுல சண்டை‌. நாங்க எஸ்கேப்.. நீ வரியா இல்ல இங்கேயே வெங்காயம் நறுக்க போறியா?" புருவம் உயர்த்திக் கேட்டாள் ரோஜா.

கையிலிருந்த கத்தியை தூர எறிந்து விட்டு எழுந்து நின்றான் அர்விந்த்.

"போலிஸ்க்கும் ரவுடிக்கும் சண்டையா?" அங்கிருந்த மற்றவர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர்.

"ஆமா. இந்த கல்யாணம் நடக்காது. நீங்களும் உங்க வேலைக்கான சம்பளத்தை வாங்கிக்கிட்டு கிளம்புங்க.." என்றவன் மாஸ்டரை பார்த்தான். "மாஸ்டர் உங்க போனுக்கு என் பேங்க் அக்கவுண்ட் டீடெயில் அனுப்பி வைக்கிறேன். என் பேலன்ஸை போட்டு விட்டுடுங்க.!" என்றான்.

ரோஜா அவனை‌ விசித்திரமாக பார்த்தாள். "அல்பம்.!" என்றுத் திட்டினாள்.

"உழைச்சி இருக்கேன். உனக்கென்ன தெரியும்?" எனக் கேட்டவன் ரோஜாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினான். சுற்றி இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. இவன் ஏன் ஓடுகிறான் என்றும் தெரியவில்லை.

சிபி அங்கிருந்த காரை திறந்தாள். "இது ஆறு பேருக்கு பத்தாது.." என்றான் அங்கே ஓடி வந்த பிரேம்.

"இந்த நாயை இங்கேயே விட்டுட்டு போகலாம்ன்னு நான் இருந்தேன். யார் இவனுக்கு தகவல் சொன்னது?" விளையாட்டாக கேட்ட தோழியை முறைத்த பிரேம் "மித்ர துரோகத்தை உங்கிட்டதான் கத்துக்கணும் பேயே.. சிபிதான் மெஸேஜ் அனுப்பினா.. என்ன இருந்தாலும்‌ லவ்வர் உயிர் அவளுக்கு முக்கியம் இல்லையா?" எனக் கேட்டவன் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த மற்ற வாகனங்களை நோட்டமிட்டான்.

"அந்த ஆம்னி வேன் ஓகேவா?" கை நீட்டி கேட்டான் பிரேம்.

மற்றவர்கள் சரியென்று சொல்ல இருந்த சமயத்தில் அங்கே மூச்சிரைக்க ஓடி வந்த அர்விந்த் "இது பத்தாது.. அந்த மினிபஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி வைங்க.." என்று அங்கிருந்த சிற்றுந்து ஒன்றை கை காட்டினான்.

"அவ்வளவு பெருசு எதுக்குடா?" எனக் கேட்ட மிருத்யூவுக்கு பதில் சொல்லாதவன் "என் மைனாவும் அவளோட பிரதரும் நம்மோடு வர போறாங்க.." என்றவன் மற்றவர்கள் கேள்வி கேட்க தொடங்கும் முன் அங்கிருந்து ஓடினான்.

நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"பொண்ணு தூக்க வந்த இடத்துல எதுக்கு இவனுக்கு ரொமான்ஸ்?" கோபத்தோடு கேட்ட மிருதுளாவை நக்கலாக பார்த்த பிரேம் "அதை கொஞ்சம் கண்ணாடியை பார்த்தும் கேட்டுக்கோம்மா.." என்றான்.

மிருதுளா அவன் புறம் பார்த்து நாக்கை நீட்டி பழித்தாள்.

"நான் போய் வண்டியை ஸ்டார்ட் பண்றேன்.." என்று ஓடிச் சென்று பேருந்தில் ஏறினான் மிருத்யூ.

ஸ்வேதாவும் விஜியும் கட்டிலில் மடங்கி அமர்ந்திருந்தனர். துப்பாக்கி சூடு தொடர்ந்துக் கேட்டுக் கொண்டே இருந்தது. எப்படி வெளியே செல்வது என்றுக் கூட தெரியவில்லை.

"சின்ன திருட்டுன்னு வந்தா இங்கே சமாதி ஆக போறோம் போல.." என்று விஜி பயந்துக் கொண்டிருந்த நேரத்தில் கதவினை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் சிபியின் பாட்டி.

"பாட்டி.." பதட்டத்தோடு எழுந்து நின்றாள் ஸ்வேதா.

"இங்கே என்னன்னவோ நடக்குது.. உங்களை எப்படி பாதுகாக்குறதுன்னு எனக்கு தெரியல.." என்று புலம்பினாள் பாட்டி.

"என் பையன் மேல ஊழல் வழக்கு போட்டிருக்காங்க. என் பேரனையும் அவனோட ஆட்களையும் அரெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா அப்புறம் என் அக்கா என்னை எப்போதும் மன்னிக்கவே மாட்டா.." என்று வருந்தியபடி வந்து கட்டிலின் மீது அமர்ந்தாள்.

"என் உயிரை தந்தாவது உங்களை நான் காப்பாத்துறேன்.." என்றாள் அவள்.

ஸ்வேதாவும் விஜியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே இப்போதுதான் குற்ற உணர்வு வேலை செய்ய ஆரம்பித்தது.

ஓரத்தில் கிடந்த தன் பேக்கை பார்த்தாள் ஸ்வேதா. அதில்தான் கொள்ளையடித்த நகைகளை வைத்திருந்தனர். ஏகப்பட்ட சவரன். ஒவ்வொரு அறையாக நுழைந்து வெளியேறியதில் தேறியது அது.

அவர்கள் இருவரும் யோசனையில் இருந்த நேரத்தில் "ஸ்வேதா.." என்று அறை கதவை தட்டினான் அர்விந்த்.

அவனின் குரல் கேட்டு அவசரமாக எழுந்து நின்றாள் ஸ்வேதா. வெங்காய போலிஸ் தன் வேலையை முடித்து விட்டாரோ என்ற சந்தேகத்தோடு வந்து கதவை திறந்தாள்.

"உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?" எனக் கேட்டவள் அவனை தலை முதல் கால் வரை பார்த்தாள். நன்றாகதான் இருந்தான் அவன்.

"நாங்க இங்கிருந்து கிளம்ப போறோம்.. நீயும் உன் பிரதரும் எங்களோடு வாங்க.." என்று அழைத்தான்.

பாட்டி எழுந்து வந்தாள். "நீங்க ஏன் தம்பி இவங்களை கூப்பிடுறிங்க?" எனக் கேட்டாள் புரியாமல்.

இதற்கு மேல் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதை புரிந்துக் கொண்ட அர்விந்த் "என் பிரெண்டும் சிபியும் லவ் பண்றாங்க பாட்டி.. நாங்க அவளை இங்கிருந்து கடத்திட்டு போகதான் வந்திருக்கோம்.!" என்றான். இவன் சொன்னதை கேட்டு ஸ்வேதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"என் பேத்தி காதலிச்சாளா?" எனக் கேட்டு சிரித்த பாட்டி அர்விந்தின் சட்டையை பிடித்தாள்.

"எதுக்கு பொய் சொல்ற? யார் நீ? எதுக்கு என் பேத்தியை பத்தி இல்லாத பழி சொல்ற?" எனக் கேட்டாள் கோபத்தோடு.

பாட்டியின் கையை மெள்ள விலக்கி விட்டான் அர்விந்த்.

"உங்க பேத்தியும் மனுசி. ஒரு பொண்ணு. அவளுக்கும் அறிவு உண்டு. வேலை செய்யும் ஹார்மோன்கள் உண்டு. அவளும் காதலிப்பா.." என்றவன் பாட்டியின் அதிர்ச்சிக் கண்டுக் கேலி சிரிப்பு சிரித்தான்.

"இதுக்கே இப்படியா? உங்க பேத்திக்கு ஒன்னரை வயசுல குழந்தை கூட இருக்கு.." என்றான்.
அதே நேரத்தில் பாட்டி அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டிருந்தாள்.

"என்ன பேசுற நீ? அவளே ஒரு குழந்தை.." என்று வாதாடினாள். ஆனால் அவனுக்குதான் பாட்டியின் வாதம் நியாயமாக தோணவில்லை.

"அவ ஒன்னும் குழந்தை இல்ல. அவளுக்குதான் குழந்தை இருக்கு. அதுவும் இல்லாம அவளை குழந்தைன்னு சொல்ற நீங்க ஏன் அவளுக்கு ஒரு மாஃபியா லீடரோடு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்திங்க? அந்த நாய் இவ செத்தா கூட பரவால்லன்னு சொல்றான். மனசாட்சியே இல்லாம அவளை மாஃபியா லீடருக்கு கூட கல்யாணம் பண்ணி வைப்பிங்க. ஆனா அவ ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ விட மாட்டிங்க.." என்று உரத்த குரலில் அதட்டினான் அவன்.

அதே நேரத்தில் அவனை தாண்டிக் கொண்டு ஓடினான் ஒரு ரவுடி. அவனை துரத்தி வந்த ஜீவன் இவனை கண்டுவிட்டு "நீங்க இன்னும் கிளம்பலையா?" எனக் கேட்டான்.

"அஞ்சி நிமிசம் சார்.." என்றவன் விஜியின் புறம் பார்த்தான். "இப்ப நீங்க வரிங்களா? இல்ல நான் விட்டுப் போகட்டா? இங்கேயே இருந்தா எந்த துப்பாக்கியும் உங்களை சுடும்.." என்று எச்சரித்தான்.

விஜி அவசரமாக ஓடி அர்விந்தின் அருகே நின்றுக் கொண்டான். ஸ்வேதாவை நோக்கி தன் கையை நீட்டினான் அர்விந்த்.

ஸ்வேதா பாட்டியை தயக்கமாக பார்த்தாள். "சீக்கிரம் வா ஸ்வேதா.." விஜி அவளை அவசரப்படுத்தினான்.

"சாரி பாட்டி.." என்று முணுமுணுத்தவள் அறையை விட்டு வெளியே நடந்தாள்.

"சிபியை நாங்க உங்களை விட ரொம்ப நல்லா பார்த்துப்போம்.." கடைசியாக சொல்லிவிட்டு கிளம்பினான் அர்விந்த்.

"ஸ்வேதா.." பாட்டியின் குரலில் திரும்பினாள் இவள். வாடி வதங்கி இருந்த முகத்தோடு இருந்த பாட்டி உள்ளே சென்றாள். அவர்களின் பேக்கை கொண்டு வந்து தந்தாள்.

விஜி அவசரமாக பேக்கை வாங்கிக் கொண்டான். வெளியே சென்றதும் முதல் வேலையாக இந்த நகைகளைதான் விற்க வேண்டும் என்று நினைத்தான்.

"உங்க பேத்தி அடிக்கடி போன் பண்ணுவா.. தைரியமா இருங்க.." என்ற அர்விந்த் கீழே ஓடினான்.

மினி பஸ் தயாராக இருந்தது. கடைசி இருக்கையில் சிபியும் பிரேமும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

"இந்த டைம்ல கூட ரொமான்ஸ் தேவைன்னு பேக் சீட் போயிருக்காங்க.." என்று கிண்டலடித்தான் மிருத்யூ. ஓட்டுனர் இருக்கையின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் ரோஜா. அவளின் மடியில் இருந்த நிலா லாலிபாப் ஒன்றை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

நிலாவை திரும்பிப் பார்த்த மிருத்யூ அவளின் லாலிபாப்பை பிடுங்கி தன் வாயில் வைத்துக் கொண்டான்.

"சும்மா ஸ்வீட்டா சாப்பிடாத.. அப்புறம் உங்க அப்பனை போல உனக்கும் பத்து வயசுலயே பல் கட்ட வேண்டி இருக்கும்." என்றான் அதட்டலாக.

நிலா தன் லாலிபாப்பை கண்டுவிட்டு உதட்டை பிதுக்கியபடி அழ ஆரம்பித்தாள்.

மிருத்யூவின் தலையில் நச்சென்று கொட்டிய ரோஜா தன்னிடமிருந்த மற்றொரு லாலிபாப்பை நிலாவிடம் தந்தாள். "குழந்தைக்கிட்ட பிடுங்கி திங்கற பழக்கத்தை‌ நீ விடவே மாட்டியா?" எனக் கேட்டாள்.

"குழந்தைகளோட எச்சில் மிட்டாய் செம டேஸ்டா இருக்கும்.. டவுட்டா இருந்தா நீயே சாப்பிட்டு பாரு.." என்று தன்னிடமிருந்த மிட்டாயை நீட்டினான் மிருத்யூ.

ரோஜா சந்தேகத்தோடு வாயை திறந்தாள். மிட்டாயை அவளின் வாயில் வைத்தான் அவன்.

"உவ்வேக்.. கருமம்.. கருமம்.. இதையெல்லாம் கண் கொண்டு பார்க்கவா என்னை படைச்சி விட்ட ஆண்டவா?" என்று ரோஜாவுக்கு பக்க எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த மிருதுளா சலித்துக் கொண்டாள்.

ரோஜா குழப்பத்தோடு அவளை பார்த்தாள். "ஏன் என்னாச்சி?" எனக் கேட்டாள்.

நெற்றியில் அடித்துக் கொண்ட மிருதுளா "தயவு செஞ்சி குழந்தையை போல நடிக்கறதை நிறுத்து. அந்த மிட்டாய்ல நிலா எச்சில் இல்ல.. அந்த நாயோட எச்சில்தான் இருக்கும்.. அறியா பிள்ளை போல முகத்தை வச்சிருக்கற.. உன்னையெல்லாம் எங்க அம்மா எப்படிதான் சமாளிக்க போறாங்களோ?" என்றாள்.

மிருத்யூ அப்படியே திரும்பி அமர்ந்துக் கொண்டான். விசயத்தை தன் சகோதரி இப்படி உடைத்து விட்டாளே என்று பதறினான்.

ரோஜா தன் வாயிலிருந்த மிட்டாயை துப்பவும் முடியாமல் சுவைக்கவும் முடியாமல் தவித்தாள். அவளின் முகம் போன போக்கு கண்டு மிருதுளாவுக்கே பரிதாபமாக இருந்தனர். சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று நினைத்தாள்.

"போகலாம்.." என்று‌த் கத்தியபடியே வந்து பேருந்தில் ஏறினான் அர்விந்த்.

ஸ்வேதாவின் கைப்பிடித்து தன் அருகிலேயே அமர வைத்துக் கொண்டான் அர்விந்த்.

விஜி ஏறியதும் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. வாசலில் நின்றிருக்கும் அடியாட்கள் இப்போது இல்லை. ஆளுக்கொரு மூலையில் மயங்கி விழுந்து கிடந்தனர்.

"இனி நாம ஃப்ரீ பேர்ட்ஸ்.." என்று கத்தினான் மிருத்யூ.

மிருதுளா அந்த வீட்டை கவலையாக பார்த்தாள்.

"சீனியர் பத்திரமா வந்திடணும்.." என்று சொல்லிக் கொண்டாள்.

அதே வேளையில் ராகுலின் முன்னால் நின்றிருந்த சித்து அப்படியே பின்னால் நகர்ந்தான். அறையிலிருந்த ஒரு கருப்பு பொத்தானை தன் முதுகின் மூலம் தட்டினான். பொத்தான் அழுத்தப்பட்டதும் கருப்பு புகை அந்த அறை முழுக்க பரவியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN