பௌர்ணமி 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா வீட்டிற்கு வந்த பிறகு தனது போனை எடுத்தாள். பூமாறனுக்கு அழைத்தாள்.

"மாமா.. நான் தியேட்டர்ல இருந்தேன். அதனாலதான் அங்கே பேச முடியல.." என்று காரணத்தை விவரித்தாள்.

"சரி பூரணி.." என்றவன் விசயத்தை சொல்ல தயங்கினான்.

"இந்த டைம்க்கு தியேட்டர் போயிருக்க.. பார்டியா?" எனக் கேட்டான்.

"இல்ல மாமா.. எதிர் வீட்டு பையன், ஸ்டெல்லா நான் மூணு பேரும் போனோம்.." என்றவள் பார்த்து வந்த திரைப்படம் பற்றி அவனிடம் விவரித்தாள்.

இவ்வளவு துள்ளலாய் இருப்பவளிடம் நடந்ததை சொல்லி மனம் உடைக்க விருப்பமில்லை அவனுக்கு.

'இப்பவே சொல்லிட்டா கூட அவ அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க வாய்ப்பு இருக்கு.!' என்றது அவனது மனசாட்சி.

'இன்னும் ஒரு வருசம் இருக்கு அவ காலேஜ்ல முடிக்க. இப்பவே சொன்னா அவ பழி வாங்குறேன்னு கிளம்புவா. அப்புறம் அவ படிப்பும் போய், வாழ்க்கையும் போய், நிம்மதியும் போய்.. ஏன் அவசரப்படணும்? கொஞ்ச நாள் போகட்டும்..' என்று முடிவெடுத்தான்.

"எதுக்காக மாமா போன் பண்ணி இருந்திங்க?" விசயத்திற்கு வந்தாள் அவள்.

"சும்மா பேசதான் கூப்பிட்டேன் பூரணி.. லைப்பெல்லாம் எப்படி போகுதுன்னு கேட்க நினைச்சேன்.." என்றுச் சமாளித்தான்.

பூர்ணிமா நகைத்தாள். "இங்கே என்ன மாமா குறை? செமையா போகுது லைஃப்.. அம்மாவும் அப்பாவும் இருக்காங்க.. பிரெண்ட்ஸ் இருக்காங்க. இன்னும் என்ற தேவை?" எனக் கேட்டவளுக்கு நெஞ்சின் ஓரத்தில் பாலாவின் முகம் வந்துப் போனது.

"சரி பூரணி.. குட் நைட்.!" என்றவன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டான்.

பூர்ணிமா உறங்க முயன்றாள். வெட்கப்பட்டு பேசிய உதயாவின் நினைவு வந்தது. அவனையே வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்த தோழியின் நினைவும் வந்தது.

பாலா ரோசினியிடம் மாத்திரைகளை தந்தான். விழுங்கியவள் "அருள் நல்லாகிடுவானா மாமா?" எனக் கேட்டாள். அதை கேட்கும் போதே அவளின் கண்கள் கலங்கியது.

அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

"நல்லாயிடுவான். நம்பிக்கையா இரு.." என்றவன் அவளை தூங்க விட்டுவிட்டு தனது அறைக்கு வந்துச் சேர்ந்தான். கீழே உறங்குகிறானே என்று பூமாறன் கட்டில் ஒன்றை வாங்கிப் போட்டுச் சென்றிருந்தான். கட்டில் இருந்தும், பஞ்சு மெத்தை இருந்தும் உறக்கம்தான் வர மறுத்தது.

இரண்டு வாரங்கள் ஓடி விட்டது. அந்த வார ஞாயிற்றுக் கிழமையில் முல்லையும் ராஜாவும் ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

செண்பகமும் மரிக்கொழுந்தும் அவர்கள் இருவரையும் வரவேற்றனர். அல்லி இருவருக்கும் விருந்து தயார் செய்தாள். மரிக்கொழுந்து சந்தைக்கு சென்று கோழி வாங்கி வந்தார். முல்லைக்கே தான் ஒரு புதுப்பெண்ணோ என்ற சந்தேகம் வந்தது.

பூமாறன் வாடிய முகத்தோடு இருந்தான். அத்தையோடு அவ்வளவாக பேசவில்லை அவன். பிரியாவும் ஒதுங்கியே இருந்தாள்.

அவர்களின் குழந்தை விவேகாவை எடுத்துக் கொஞ்சினாள் முல்லை. தன் மகளுக்கு இது போல ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டாள். தன் பேரனோ பேத்தியோ கை சேரும் நாள் என்றோ என்று ஏங்கினாள்.

குழந்தையை கொஞ்சி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு பிரியாவிடமே குழந்தையை தந்தாள்.

"என்னாச்சி.. உன் முகம் ஏன் இப்படி இருக்கு?" பூமாறனிடம் கேட்டாள்.

"சும்மாதான் அத்தை.." என்றவன் வலுக்கட்டாயமாக புன்னகைக்க முயன்றான்.

"நான் போய் பாலாவை பார்த்துட்டு வரேன்.!" பிற்பகல் வேளையில் எழுந்து நின்றபடி சொன்னாள் முல்லை.

இதை கேட்டு அங்கிருந்த அனைவருமே பதறினர். அனைவருக்குமே தாங்கள் ஏதோ தப்பு செய்வது போல இருந்தது. ஆனாலும் இவள் இப்போது பாலாவை பார்க்க சென்றால் பிரச்சனை பெரிதாகும் என்பது மட்டும் புரிந்தது.

"அவன் வேலை விசயமா கல்கத்தா போயிட்டான்.." அவசரமாக சொன்னான் பூமாறன்.

"ஓ.. அவன்கிட்ட இன்னும் கொஞ்சம் பேசி பார்க்கலாமேன்னு நினைச்சேன்.!" வருத்தமாக சொன்னாள் முல்லை. இதுவரை எத்தனையோ முறை பேசியும் இறங்கி வர மறுத்த மருமகன் இப்போது இறங்கி வந்து விடுவான் என்று எண்ணியது இந்த தாய் மனம்.

பூர்ணிமா அடுப்பில் இருந்த உணவை கொண்டு வந்து மேஜையின் மீது வைத்தாள். இரு பக்கமும் அமர்ந்திருந்தனர் ஸ்டெல்லாவும், உதயாவும்.

உணவை அனைவரும் பரிமாறிக் கொண்டனர்.

"உங்க சமையல் செம டேஸ்ட்.." உணவை ருசித்தபடியே சொன்னான் உதயா.

பூர்ணிமா தலையசைத்தாள்.

"என் சமையல் இதை விட சூப்பரா இருக்கும்.." இடை புகுந்துச் சொன்னாள் ஸ்டெல்லா.

"ஓ.." என்றவன் வேறு சொல்லவில்லை.

"உனக்கு வேற என்னவெல்லாம் பிடிக்கும்? சொல்லு நான் தினமும் செஞ்சி காலேஜ்க்கு கொண்டு வரேன்.." என்றாள் அவள் ஆவலாக. அவளின் கண்களில் தெரிந்த காதலை வெளிப்படையாகவே காண முடிந்தது பூர்ணிமாவால்.

"சிக்கன்.. மட்டன்.. பிஷ்.. இன்னும் நிறைய வகையில் விதவிதமா செய்வேன்.." என்று இவள் சொல்லவும் அவன் அவசரமாக இரும்பினான். இடது கையால் தலையை தட்டிக் கொண்டான்.

"நான் ப்யூர் வெஜிடேரியன்.." அவன் சொன்னது கேட்டு ஸ்டெல்லாவின் முகம் வாடியது. அவளுக்கு புலால் இல்லாமல் உணவு இறங்காது.

"பரவால்ல.. நான் வெஜ் சமைச்சி கொண்டு வரேன்.." என்றாள் தன் தட்டில் இருந்த உணவை அளக்க ஆரம்பித்தாள். ஆரம்பத்திலேயே தடுப்பணை உருவானது போல இருந்தது அவளுக்கு. உணவுதான் வாழ்க்கைக்கு முகாந்திரமே. அதிலேயே ஒற்றுமை இல்லாவிட்டால் பிறகு எதில் ஒற்றுமையை காண முடியும் என்று நினைத்தாள்.

பூர்ணிமா அவளின் உள்ளத்தை படித்தது போல தோழியின் தோளில் கை பதித்து கண் சைகையில் ஆறுதல் சொன்னாள்.

"உனக்கே வேற என்னவெல்லாம் பிடிக்கும்?" தோழிக்கு பதில் பூர்ணிமாவே கேட்டாள்.

அவன் தனக்கு பிடித்தது எல்லாம் வரிசை கட்டி சொல்ல அதை தன்‌‌ மனதில் குறிப்பெடுத்துக் கொண்டாள் ஸ்டெல்லா‌.

மறுநாளில் இருந்து அவனுக்கு பிடித்த நிறத்தில்தான் உடைகளை அணிய ஆரம்பித்தாள் ஸ்டெல்லா. அவனுக்கு பிடித்தது அனைத்தும் இவளுக்கும் பிடித்துப் போனது. அவனைப் பிடிக்கும் என்பதை வெளிப்படையாகவே காட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

பூர்ணிமா தினமும் பாலாவின் புகைப்படம் பார்த்தபடி உறங்குவதும், பாலா தினம் காலையில் பூர்ணிமாவின் புகைப்படம் பார்த்தபடி கண் விழிப்பதும் இயல்பாகி விட்டிருந்தன.

ரோசினியின் வயிற்றில் இருந்த குழந்தை நன்றாக வளர்ந்துக் கொண்டிருந்தது. அவளை மாதா மாதம் பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்றான் பாலா.

அருளின் உடலில் இருந்த காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிக் கொண்டிருந்தன.

ரோசினியின் குடும்பம் அவனின் பிணம் பற்றிய பேச்சுகள் இன்னும் பரவாமல் இருப்பதை கண்டு குழம்ப ஆரம்பித்தனர். பிணம் பற்றிய பேச்சு வந்து, அதை தாங்கள்தான் செய்தோம் என்று விசயம் வெளியே தெரிய வந்தால் அப்போது காவல்துறையிடம் சரணைடய எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் இந்த விசயம் வெளியில் சுத்தமாக வராமல் போகவும் புதிதாய் சந்தேகம் வந்தது அவர்களுக்கு. அவன் உயிரோடு பிழைத்து விட்டானோ என்று‌க் கூட யோசித்துப் பயந்தார்கள்.

பாலாவிற்கு இப்போதெல்லாம் இந்த‌ வீட்டிற்கு வரவும் கூட பிடிக்கவில்லை. ரோசினியின் வீட்டு பெண்கள் அனைவரும் இந்த வீட்டிற்கு வந்துதான் வெகு நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார்கள்.

பாலா மாலை நேரத்தில் வீடு வந்தால் நைநையென்று பேசினார்கள்.

"இந்த குழந்தைதான் நம்ம குழந்தை இல்லையே.. இதை ஏன் இன்னமும் விட்டு வச்சிருக்கிங்க?" என்று அவனிடம் வந்து பொரிந்தாள் ரோசினியின் தாய்.

"இந்த குழந்தையை அழிச்சா தாயோட உயிரும் போயிடும்ன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.. இவளை கொல்ல என்னால முடியாது.." என்று விட்டான் அவன்.

அவன் சொன்னதை அவர்கள் நம்பினார்கள். ஏனெனில் ரோசினியும் மசக்கையில் தினமும் அவ்வளவு துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

ரோசினியின் பாட்டி தினமும் ஒரு பலகாரத்தை கொண்டு வந்து பேத்தியிடம் தந்தாள். அதை கையில் தொட பாலாவுக்குதான் பிடிக்கவில்லை. அவனை இப்போது நன்றாகவே புரிந்துக் கொண்டாள் ரோசினி. அதனால் அவனை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை அவள்.

பிறந்த வீட்டு மனிதர்களை இங்கே வர விடாமல் தடுக்க அவளும் முயற்சித்தாள். ஆனால் அவர்கள்தான் இவளின் குறிப்பை அறிந்துக் கொள்ளும் அளவிற்கு இல்லாமல் போய் விட்டனர்.

"இவ்வளவு தொல்லை பண்றேன்.. சாரி மாமா. அருள் குணமாகி வந்ததும் நாங்க இங்கிருந்து கிளம்பிடுறோம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.." என்றாள்.

"ம்.." என்ற பாலா அதை தவிர வேறு பேசவில்லை. ஆறுதலாக நான்கு வார்த்தைகளாவது சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தாள் அவள்.

நாட்கள் அப்படியே சென்றுக் கொண்டிருந்தது.

ரோசினி பாலாவின் வீட்டிற்கு வந்து முழுதாய் நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. பாதுகாப்பிற்காக கட்டிய தாலி என்றாலும் தினமும் மஞ்சள் பூசி குளித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அன்றைய நாள் வழக்கம் போல பாலாவின் நினைப்புடனேயேதான் கண் விழித்தாள் பூர்ணிமா.

கல்லூரிக்கு வந்தவள் வாசலில் காத்திருந்த பாலாவை கண்டு தடுமாறி நின்றாள். இவன் ஏன் இங்கே வந்தான் என்ற குழப்பம் அவளுக்கு.

தயக்கம் நிறைந்த மனதில் கோபத்தை வரவழைத்துக் கொண்டு அவனின் அருகே சென்றாள்.

"இங்கே ஏன் வந்திருக்க?" எனக் கேட்டாள் மூக்கு சிவக்க.

நான் அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை கழட்டி சட்டையின் இரண்டாம் பட்டனின் மீது மாட்டிக் கொண்டான்.

"ஹேப்பி பர்த்டே.!" என்றான்.

பூர்ணிமா கோபத்தோடு சுவர் புறம் திரும்பினாள்.

"நீ ஒன்னும் வாழ்த்து சொல்ல வேண்டியது இல்ல.." என்றாள் கோபத்தோடு.

"ஹஸ்பண்ட் ஆச்சே நான்.." என்றவனின் புறம் வெடுக்கென திரும்பி பார்த்தவள் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டுவிட்டு அவனின் காலில் ஓர் உதையை விட்டாள்.

"இந்த மாதிரி பொய்யா பேசாதன்னு எத்தனை முறை சொல்வது? நீ என் ஹஸ்பண்ட் கிடையாது. நீ ஒரு பொறுக்கி.." என்றவளை நெருங்கியவன் "பொறுக்கின்னு சொல்லாத.. அப்புறம் நான் பொறுக்கி மாதிரி செஞ்சாலும் செய்வேன்.." என்றான் சாந்தமான குரலில்.

அவனின் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளியவள் "ச்சீ.. இப்படி பேசினா நான் மயங்கிடுவேனா? பொறுக்கி மாதிரி நீ பேசினாலே எனக்கு காண்டாகும். பொறுக்கி மாதிரி செய்ய வேற ஆசையா? உயிரோடு ஊர் போய் சேர ஆசை இல்லையா என்ன?" என அவள் கேட்ட நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தான் உதயா.

"யார் இது சீனியர்?" என்றவன் அருகே வந்து அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

நெருப்பு உடல் முழுக்க எரிவது போலிருந்தது பாலாவுக்கு.

"யார் இவன்?" என்றான் கர்ஜனையாக.

பதில் சொல்ல கூடாது என்று நினைத்தாள். ஆனால் "காலேஜ் ஜூனியர்.." என்றாள்.

"அளவோடு பேசி பழகு.." என்றவனை பற்களை கடித்தபடி பார்த்தவள் "அதை நீ சொல்லாத.. உன்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது.." என்று விட்டு கல்லூரியை நோக்கி நடந்தாள்.

கேட்டிற்குள் நுழையும் முன் இவன் புறம் திரும்பி பார்த்தாள். அதே இடத்தில் நின்றிருந்தான். முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே நடந்தாள்.

"யார் இது?" என கேட்ட உதயாவிடம் "என் முறை பையன்.." என்றாள் உண்மையை முழுதாய் மறைக்காமல்.

"ஓ.." வாடிய குரலில் உதடு வளைத்தவன் "உங்களுக்கு ரூட் விட்டுட்டு இருக்காரா?" எனக் கேட்டான்.

"அவன் என்ன ரூட் விட்டாலும் நான் மடங்க போறது இல்ல.. நீ அவனை பத்தி பேசுவதை நிறுத்து‌.." என்றவள் தனது வகுப்பறை நோக்கி ஓடினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN