கருப்பு புகை கண்களில் பட்டதும் காவல் துறையை சேர்ந்த அனைவருக்கும் கண்கள் எரிய ஆரம்பித்தன. நுரையீரல் நெருப்பை உணர்ந்தது.
கை விலங்கோடு இருந்த சம்பத்தின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே ஓடினான் சித்து.
இரும்பியபடியே வெளியே வந்து சேர்ந்தவன் "எப்படி போலிஸ்க்கு இவ்வளவு சுலபமா நாம கிடைச்சோம்.." என்று சந்தேகப்பட்டான்.
"எதுவா இருந்தாலும் சேப்பான ப்ளேஸ்க்கு போன பிறகு பேசிக்கலாம்.." என்ற சம்பத் படிகளில் இறங்கினான். எதிரில் வந்த போலிசை எட்டி உதைத்தான். தரையில் விழுந்தவனின் துப்பாக்கியை விலங்கிடப்பட்ட கையில் எடுத்தான். நேராய் பார்த்து சுட்டான்.
"குயிக்.." இருவரும் வேகமாக கீழே ஓடினர்.
போலிசிடம் மாட்டாமல் இருந்த ஒன்றிரண்டு ரவுடிகளும் மறைவிடத்தில் இருந்தபடி இவர்களுக்கு தடையாய் வந்த போலிசாரை சுட ஆரம்பித்தனர்.
எப்படியோ இருவரும் சேர்ந்து வாகன நிறுத்துமிடம் வந்து சேர்ந்து விட்டனர்.
"இந்த விலங்கோடு எப்படி நாம கார் ஓட்ட முடியும்?" என சம்பத் கேட்ட நேரத்தில் சித்துவின் ஆள் ஒருவன் எங்கிருந்தோ ஓடி வந்தான். காருக்குள் புகுந்து அதை இயக்கினான். இருவரும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு காரில் ஏறினர். அதே சமயத்தில் அங்கிருந்து புறப்பட்ட ஒரு மினி பஸ்ஸையும் பார்த்து விட்டனர். அதற்குள் இருந்த மிருத்யூவையும், மிருதுளாவையும் வெறுப்போடு பார்த்தனர். அவர்களின் பார்வை சென்ற திசைக்கு தன் பார்வையை திருப்பிய டிரைவர் "பிராடுங்க சார்.. சிபி அம்மாவை தூக்க இங்கே வந்திருக்காங்க.." என்றான்.
சம்பத் அதிர்ச்சியோடு அவனை பார்த்தான்.
"என்னன்னு முழுசா சொல்லு.." என்றான் பெரும் குரலில்.
"போலிஸ்க்கு பயந்து நான் ஓடினேன். அப்போதுதான் இவனோட ஆள் ஒருத்தன் பாட்டிக்கிட்ட பேசிட்டு இருப்பதை கேட்டேன்.." என்றவன் அர்விந்த் சொன்ன அத்தனையையும் இவர்களிடம் சொன்னான்.
"அந்த வெங்காய பையனுக்கு இவங்க இரண்டு பேரும் கூட்டு. போலிஸ்காரங்க இரண்டு பேர் இவங்க தப்பிச்சிட்டாங்களான்னு கேட்டு அவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க.." என்றான்.
அதே நேரத்தில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த சிபியையும் பார்த்து விட்டனர் இவர்கள்.
"அந்த பஸ்ஸை பாலோவ் பண்ணு.." கட்டளையிட்டான் சம்பத்.
டிரைவர் சித்துவின் ஆணைக்காக காத்திருந்தான். சித்து தலையசைத்ததும் கார் மின்னலாய் பாய்ந்தது.
"போலிஸும் இவங்களோட கூட்டு எல்லோரையும் அழிக்க போறேன் நான்.." பற்களை கடித்தபடி சபதம் எடுத்த சம்பத் தன் கையிலிருந்த விலங்கை கடுப்போடு பார்த்தான்.
"இதுக்கு கீ வச்சிருக்கியா?" எனக் கேட்டான். அதே நேரத்தில் டிரைவர் சாவியை எடுத்து சித்துவின் விலங்கில் வைத்து திருகினான். "கிளிக்" என்ற சத்தத்தோடு விலங்கின் தடை உடைந்தது. பின்னால் திரும்பி சம்பத்தின் விலங்கையும் விடுவித்தான்.
கையை உதறிக் கொண்ட சம்பத் "இன்னைக்கு நாள்ல சம்பந்தப்பட்ட எல்லோரையும் அடியோடு அழிக்க போறேன்.." என்றான்.
பேருந்தில் அமர்ந்திருந்த நிலா சிபியின் புறம் கை காட்டி அழ ஆரம்பித்தாள்.
"அவளுக்கு தூக்கம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்.." என்றாள் சிபி.
"இந்தா.. தாலாட்டி தூங்க வை." நிலாவை கொண்டு சென்று சிபியின் மடியில் கிடத்தினாள் ரோஜா.
நிலா சிபியின் கழுத்தை கட்டிக் கொண்டாள். பிரேம் அவசரமாக தனது தாடியை பிய்த்து எறிந்தான். விக்கை கழட்டி வீசினான் முகத்தை துடைத்துக் கொண்டான்.
நிலா அவனின் முகத்தை கண்ட கணம் "பாப்பா.. பாப்பா.." என்றுத் துள்ள ஆரம்பித்து விட்டாள்.
பிரேம் அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான். நிலா அவனின் தோளில் முகம் புதைத்தாள். கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
"பாப்பா.." என்றாள் சிறு குரலில்.
"ஆமா செல்லம்.. அப்பாதான். வந்துட்டேன்.." குழந்தையின் முதுகை வருடி தந்தவன் "தூங்கு செல்லம் நீ.." என்றான் கொஞ்சலாக.
நிலா கழுத்தை அப்படியும் இப்படியும் அசைத்தாள். அப்படியே கண்களை மூடினாள்.
"நிஜமாவே அது அவங்க குழந்தைதானா?" அர்விந்தின் காதோரம் கேட்டாள் ஸ்வேதா.
"ஆமா.. அதனாலதான் நாங்க எல்லோருமே ரிஸ்க் எடுத்தோம்.." என்ற அர்விந்தை வருத்தமாக பார்த்தவள் "ஆனாலும் நீங்க என்கிட்ட பொய் சொல்லிட்டிங்க.." என்றாள்.
அவளின் கையை பற்றியவன் "காரண காரியங்கள் இருந்தது சாரி.. உனக்கு எப்படி திருடு தொழிலோ அது போல எங்களுக்கு நட்புதான் தொழில்.." என்றான்.
"இதை கேட்டு எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு.." மிருதுளா கேலி செய்வது கேட்டு "இங்கே உன்னை அடிக்க எதுவும் இல்ல.. அதனால இதுக்கு அப்புறம் பதில் சொல்றேன்.!" என்றான் இவன்.
"எப்பவும் அடிச்சிப்பிங்களா நீங்க?" எனக் கேட்ட விஜியிடம் "ஆமாங்க திருடர் சார்.. எங்களோட ஒரு வேலை இது மட்டும்தான்.." என்றாள் மிருதுளா. அவள் நக்கல் செய்கிறாளா இல்லை சாதாரணமாக பதில் சொல்கிறாளா என்று அவனுக்கே புரியவில்லை.
ஒரு கிலோமீட்டர் தொலைவை தாண்டிய பிறகுதான் பஸ்ஸை ஒரு கார் பின்தொடர்வதை கண்டான் மிருத்யூ.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே