பௌர்ணமி 41

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தான் அணிந்திருந்த உடையை மற்றொரு முறை பார்த்தாள் பூர்ணிமா.

"இன்னைக்கு ஒருநாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க பூரணி.. அவனா நம்ம வீடு தேடி வந்திருக்கான்.. ஆசையா வாங்கிட்டு வந்திருக்கான். நல்லாருக்கு உனக்கு. சண்டை போடாத.. எனக்காகவாவது சண்டை போடாம இரு.." என்றாள் முல்லை.

அம்மாவின் கெஞ்சலை கண்டு எரிச்சலாக இருந்தது. அவனுக்காக இவ்வளவு இறங்குகிறார்களே என்று கவலைப்பட்டாள்.

"உங்களுக்காக.." என்றவள் "அவனை ஏன் என் ரூமுக்கு விட்டிங்க?" என்றாள்.

"இதுக்கு நான் பொறுப்பு இல்ல. அவனையே நீ கேட்டுக்க.." என்ற முல்லை அங்கிருந்து அமைதியாக நகர்ந்தாள்.

மாலை முடிந்துக் கொண்டிருந்தது. பூர்ணிமாவின் மற்ற தோழிகளும் தோழர்களும் வந்துச் சேர்ந்தனர். அந்த கூட்டத்தில் பிரகீதனும் வந்திருந்தான்.

பாலா அனைத்தையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆனால் எதற்கும் சம்பந்தம் இல்லாதவன் போல இருந்தான்.

"ரொம்ப படபடப்பா இருக்கு பாஸ்‌.." ஸ்டெல்லா இவனின் அருகில் அமர்ந்து தனது பிரச்சனையை சோகமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

"கண்ணை மூடிக்கிட்டு சொல்லிடுங்க.."

"பழைய டயலாக்கா இருந்தாலும் யூஸ் பண்ணலாம்தான். ஆனா நான் கண்ணை மூடின நேரம் ஆள் மாறிட்டா என்ன செய்றது?" எனக் கேட்டாள் குழப்பத்தோடு.

"சரி.. நீ போய் அவனோட கண்ணை மூடிட்டு சொல்லிடு.." என்றான்.

அவனை கிண்டலாக பார்த்தவள் "நிஜமா நீங்க இப்படிதான் பூரணியை கரெக்ட் பண்ணிங்களா? நிச்சயமா அவ இதுக்காகவே வெறுத்து ஓடி வந்திருப்பா.." என்றாள் சிரித்தபடி.

பாலாவும் சேர்ந்து சிரித்தான். "கிறுக்குதனமா இருந்தா ரொம்ப நல்லாருக்கும் லைஃப். ஆனா அதுக்கு எதிராளியும் அதே கிறுக்கோட இருக்கணுமே.!" என்றான்.

"அட போங்க பாஸ்.. எனக்கு ஏதாவது வழி சொல்விங்கன்னு பார்த்தா இப்படி ஏதேதோ குழப்புறிங்க.." என்றாள்.

"இந்தா இதை குடி.. நீ தேடும் தைரியம் உனக்கு கிடைக்கும்.‌" என்று தன் கையிலிருந்த பெப்சியை நீட்டினான்.

குளிர்பானத்தை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தவள் "சாதா ஜூஸ்தானே?" எனக் கேட்டாள் சந்தேகத்தோடு.

பாலா ரகசியமாக சிரித்தான். "இல்ல.. இது தைரிய டானிக் கலந்த ஜூஸ்.." அவன் சொன்னதும் பாட்டிலை அப்படியே கீழே விட்டாள். பாட்டிலை சட்டென்று பிடித்தவன் "ஏன்?" எனக் கேட்டான்.

"சரக்கு அடிச்சா எங்க அம்மா தோசை கரண்டியில் சூடு வைப்பாங்க பாஸ்‌‌.. வேணாம்.." என்றாள் சோகமாக.

"அச்சோ பாவம்.‌." உச்சு கொட்டியவன் "அப்படின்னா இனி நீதான் போராடியாகணும்.." என்றுவிட்டு பெப்ஸியை அருந்தினான்.

"பாஸ்.. இப்படி நடு வீட்டுல உட்கார்ந்து குடிக்கிறிங்களே.. இது மட்டும் பூரணிக்கு தெரிஞ்சதுன்னா உங்களை பிச்சிடுவா.."

"இது சரக்கு இல்ல.. உனக்கு தைரியம் வரவைக்க தைரிய டானிக் கலந்ததுன்னு சொன்னேன். நீ நம்பல. ஆனா அவ வந்து எதுக்கு என்னை அடிக்கணும்? அவதான் என்னை வேணாம்ன்னு விட்டு வந்தவளாச்சே.!" என்றான் சோகமாக.

"நீங்களும் நானும் இப்போதைக்கு ஒரே மாதிரி பேச்சுலர் சகோ.." என்றவள் அங்கு வந்திருந்த கூட்டத்தை கண்டு விட்டு "பத்து பர்த்டே பார்ட்டி அட்டென்ட் பண்ணாதான் நாலு பேராவது நம்ம பர்த்டேவுக்கு வராங்க.." என்றாள்.

சிரித்தான் பாலா. "நீ பேசுற மாதிரி அவளும் சாதாரணமா பேச மாட்டாளான்னு ஏக்கமா இருக்கு. ஆனா அவளால கடைசி வரை மன்னிப்பு கேட்கவே முடியாது.!" என்றவன் தீர்ந்து போன குளிர்பான பாட்டிலை கீழே வைத்தான்.

"சீனியர் நீங்க செம ப்யூட்டி. அதுவும் இந்த டிரெஸ் சான்ஸே இல்ல.." என்று பாராட்டினான் உதயா.

பூர்ணிமாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் கொஞ்சம் வெறுப்பாகவும் இருந்தது. அவள் பாலாவை முறைத்துக் கொண்டுத் திரிந்த நேரத்தில் உதயா அவளை விட்டு விலகாமல் நிழலாய் சுற்றிக் கொண்டிருந்தான்.

இந்த முறை பையன் வீடு வரை வந்ததில் அவனுக்கும் துளியும் உடன்பாடில்லை.

"எல்லோரும் வாங்கப்பா.. கேக் வெட்டலாம்.." என்று அழைத்தாள் முல்லை. குழந்தையை போல அம்மா தன் பிறந்தநாளை கொண்டாடுகிறாளே என்ற வெட்கம் வந்தாலும் கூட அம்மாவுக்காக வந்து மேஜையின் முன்னால் நின்றாள்.

சுற்றிலும் அவளது தோழியரும் தோழர்களும் இருந்தனர். பாலாவை மட்டும் கூட்டத்தில் காணவில்லை. அவனை தேடவே கூடாது என்ற எண்ணத்தோடு மெழுகுவர்த்தியை ஊதினாள். சுற்றி இருந்தவர்களின் பாட்டு சத்தம் அவளுக்கு கேட்கவே இல்லை. இந்த நேரத்தில் பாலா எங்கே சென்றான் என்ற நினைவு மட்டும்தான் தலைக்குள் பூரான் போல ஓடிக் கொண்டிருந்தது.

கேக்கில் கத்தியை பதித்தவள் சிறு துண்டை கையில் எடுத்து தாய்க்கும் தந்தைக்கும் ஊட்டினாள். சுற்றி இருந்தவர்கள் கை தட்டிக் கொண்டிருந்தனர். பூரணியின் இடது பக்கம் ஸ்டெல்லாவும், வலது பக்கம் உதயாவும் நின்றுக் கொண்டிருந்தனர்.

தோழிக்கு கேக்கை ஊட்டி விட எண்ணி கையை தூக்கினாள். ஸ்டெல்லா இடம் வலமாக தலையசைத்து விட்டு பூர்ணிமாவின் பின்னால் நின்றிருந்தவனை நோக்கி கையை காட்டினாள்.

பூர்ணிமா குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தாள். பாலா அங்கேதான் நின்றிருந்தான். தோழி சைகை செய்த பிறகு இவனை புறக்கணித்தால் பிறகு அது தவறாகி போய் விடும் என்று எண்ணினாள். ஆனால் இருக்கும் கோபத்திற்கு அவனுக்கு ஊட்டி விடவும் மனம் இடம் தரவில்லை.

அவளின் கையை பற்றினான் பாலா. அது அவள் எதிர்பார்த்ததுதான்.

அவளுக்கு ஊட்டி விட்டவன் மீதியை தானும் உண்டான். அவளின் கையை விட்டவன் புன்னகைத்து விட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான். அனாதையை போலவே உணர்ந்தாள் பூர்ணிமா.

'ஐ ஹேட் யூ பாலா..' என மனதுக்குள் திட்டினாள்.

வீட்டிற்கு வந்த அனைவரையும் அமர வைத்து விருந்து பரிமாறிக் கொண்டிருந்தனர் முல்லையும், ராஜாவும். ஸ்டெல்லாவும் பாலாவும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். அவ்வப்போது பூர்ணிமாவை திரும்பி பார்த்தான் பாலா.

"சீனியர்.. எங்க வீட்டுக்கு வரிங்களா? பத்தே நிமிசம்.." விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறிக் கொண்டிருந்த பூர்ணிமாவை அவசரமாக அழைத்தான் உதயா.

கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே மேஜையின் மீது வைத்தவள் "ம். சரி.." என்றுவிட்டு அவனோடு நடந்தாள்.

அவனின் வீடு இருட்டாக இருந்தது. அவனது பெற்றோரோ இவளது வீட்டில் இருந்தார்கள். சாத்தியிருந்த கேட்டை திறந்து உள்ளே ஓடியவன் வீட்டை திறந்து விளக்கை எரிய விட்டான்.

"ஈவினிங்ல இருந்து அங்கே இருந்ததால இங்கே லைட் கூட போடல சீனியர்.." என்றவன் அவசரமாக அவனது அறையை நோக்கி ஓடினான்.

ஒரு பெரிய பெட்டியோடு திரும்பி வந்தான். அவளிடம் நீட்டினான். அவனின் வெட்கம் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது.

பெட்டியை திறந்தாள். உள்ளே அடுக்கடுக்காய் காகிதங்கள் இருந்தன. எடுத்தாள். அவளின் கையிலிருந்து தரை வரை நீண்டது அந்த காகித பின்னல்கள். ஏதோ அலங்கார காகிதம் போல தென்பட்டாலும் கூட அதை உற்று கவனிக்கையில் அவளின் முகம் அடுக்கடுக்காக இருந்தது. ஆவலோடு அவனைப் பார்த்தாள். அதே நேரத்தில் அவளின் முகத்தை தன் கைகளில் பற்றியவன் அவளின் இதழில் தன் இதழ் பதித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN