பௌர்ணமி 42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"பாஸ்.. எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.." என்ற ஸ்டெல்லா பாலாவின் கையில் இருந்த மீதி பெப்சியையும் வாங்கி தானே குடித்தாள்.

"எனக்கு தைரியம் சொல்லி என் லவ்வை சொல்ல வச்சிங்கன்னா நான் பூரணிக்கிட்ட பேசுறேன்.. உங்களை பத்தி வீர தீர சாகசமா சொல்லி அவளையும் உங்களையும் சேர்த்து வைக்க டிரை பண்றேன்.!" என்றாள்.

உதவி தேவையில்லை என்று சொல்ல துடித்தது நாக்கு. ஆனால் சட்டென்று பேசி அவளின் மனதை புண்படுத்த விரும்பவில்லை அவன்.

"சரி.. என்கிட்ட இருக்கும் மொத்த தைரியத்தையும் உன்கிட்ட தரேன்.." நாடக பாணியில் சொன்னவன் அவளின் கையின் மீது தன் உள்ளங்கையை பதித்தான்.

"எங்க காத்தவராயனும், உங்க ஜீசஸும் கை கோர்த்து இப்ப உங்களோடு துணை நிக்கிறாங்க.. நீங்க நம்பிக்கையோடு போங்க.." என்றான். யாருக்காவது மறு சாப்பாடு தேவைப்பட்டால் பரிமாறலாம் என்று காத்து நின்றவனின் கையை பற்றியவள் "நீங்களும் என்னோடு வாங்க.." என்று அவனை இழுத்துச் கொண்டு வெளியே ஓடினாள்.

"இரண்டு பேரும் வெளியேதான் வந்தாங்க.." என்றுவிட்டு சுற்றி முற்றி பார்த்தாள். பூர்ணிமாவின் தாவணி எங்கேயும் தென்படவில்லை. எதிர் வீட்டில் விளக்கு எரிவதையும், ஹாலில் இரண்டு பேர் நிற்பது கர்டனில் நிழலாய் தெரியவும் இவனை இழுத்துக் கொண்டு எதிர் வீட்டுக்கு சென்றாள்.

"இங்கேதான் இருக்காங்க இரண்டு பேரும்.." என்றவள் கதவை தள்ளி
திறந்தாள். அங்கே விழிகளை மூடியிருந்த உதயா பூர்ணிமாவுக்கு ரசனையோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அதிர்ச்சியில் உறைந்தாள் ஸ்டெல்லா.

அவனின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனை இவ்வளவு மகிழ்ச்சியோடு ஸ்டெல்லா பார்த்ததே இல்லை. அவனுக்கு இதுதான் மகிழ்ச்சி என்றால் தான் குறுக்கே நிற்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.

அவள் அங்கிருந்து திரும்ப நினைத்த நேரத்தில்தான் தன் அருகே இருந்த பாலாவை பற்றி நினைத்தாள். அவனை திரும்பிப் பார்த்தாள். பூர்ணிமாவையும், உதயாவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

எத்தனை நொடிகள் கடந்ததோ.. ஆனால் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகதான் கடந்துக் கொண்டிருந்தது நால்வருக்குமே.

பூர்ணிமா இதை எதிர்பார்க்கவில்லை. நண்பனை போல, சகோதரனை போல நினைத்திருந்தாள் அவள். திடீரென்று முத்தமிடவும் மூச்சு நின்று போனது போலாகி விட்டது. ஏதேதோ எண்ணங்கள். நொடிக்குள் நூறாயிரம் எண்ணங்கள்.

அவனை மெள்ள விலக்கினாள். அறையவோ கோபப்படவோ தோன்றவில்லை. அறியா பிள்ளையின் முகம்தான் அவனிடம் இருந்தது.

"சாரி. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. எங்கேயோ நீ தப்பா நினைச்சிட்ட.." என்றாள் மென்மையாக.

உதயாவின் முகம் கறுத்துப் போனது.

"உன்னை பிரதரா பார்க்கறேன் நான், நண்பனாவும். எந்த இடத்துல தப்பான இன்ஸ்ட்ரக்சன் தந்தேன்னு தெரியல.. ரியலி சாரி." என்றாள்.

உதயா சுவர் பக்கம் பார்வையை திருப்பினான். விழிகள் இரண்டும் கலங்கியது அவனுக்கு.

"இனி லவ்வரா பாருங்களேன்.." கடைசி முயற்சி என கேட்டான்.

மறுப்பாக தலையசைத்த பூர்ணிமா "இல்ல. அது முடியாது.." என்றாள். அவனின் முகத்தை மேலும் காரிருள் சூழ்ந்தது.

அவளுக்கு பரிதாபமாக இருந்தது.

"நான் ஆல்ரெடி வேற ஒருத்தனை லவ் பண்றேன்.." இவள் சொன்னதும் படக்கென்று திரும்பினான்.

"பொய் சொல்லாதிங்க.."

நெற்றியை தேய்த்தவள் "ஐயம் சாரி. உனக்கு ஏற்கனவே தெரியும்ன்னு நினைச்சேன். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சி. எனக்கும் ஹஸ்பண்ட்ன்னு ஒரு எருமை இருக்கு. அந்த எருமையைதான் நான் லவ் பண்ணிட்டு இருக்கேன்.." என்றாள்.

அதிர்ந்தான் அவன். புதிதாய் இருந்தது செய்தி. அதை விட முக்கியமாக அதை நம்ப முடியவில்லை அவனால்.

"நிஜம் உதயா.. நீ கூட பார்த்தியே.. நான் கூட முறை பையன்னு ஒரு வளர்ந்து கெட்டவனை சொன்னேனே.. அவன்தான்.. அவன்தான் லவ்வர், ஹஸ், எதிரி எல்லாம். அவனை கொல்லணும் போல இருக்கு. அவ்வளவு கோபம். ஆனா அந்த புண்ணாக்கை விட்டுட்டு இன்னொருத்தங்களை அதே மாதிரி பீலிங்ஸோடு பார்க்கிறது எனக்கு ரொம்ப கஷ்டம். நான் உன்னோடு பழகியதில் ஏதாவது தப்பு இருந்தா தயவு செஞ்சி மன்னிச்சிடு.." என்றாள்.

உதயா இல்லையென தலையசைத்தபடி அவளுக்கு பின்னால் பார்த்தான். ஸ்டெல்லா நின்றிருந்தாள். அவனின் பார்வையை கண்டுவிட்டு பூர்ணிமாவும் மெள்ள திரும்பிப் பார்த்தாள்.

"ஸ்டெல்லா ஐயம் சாரி.." அவசரமாக இவனிடம் இருந்து நகர்ந்தாள்.

ஸ்டெல்லா பேயறைந்தது போல இவளைப் பார்த்தாள்.

"பாலா அண்ணா உங்களை பார்த்தாரு.." என்றாள் திணறலாக. அவர்கள் முத்தத்திலிருந்து விலகும் முன்பே அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தான் அவன்.

'அவன் பார்த்தா எனக்கென்ன?' என்ற கேள்வியோடு 'தப்பா நினைச்சிருப்பானோ?' என்ற கவலையும் சேர்ந்து பிறந்தது.

"ஏதாவது சொன்னானா?" எனக் கேட்டாள்.

இல்லையென தலையசைத்தாள் ஸ்டெல்லா.

பாலாவை தேடி வெளியே ஓடினாள் பூர்ணிமா. அவள் சாலையை தொடும் முன் பாலாவின் கார் அங்கிருந்து வேகத்தோடு கிளம்பியது.

"பாலா.." கத்தினாள். அவனுக்கு கேட்கவே இல்லை.

வீட்டில் இருந்த விருந்தினர்கள் உணவை முடித்துக் கொண்டு எழுந்து இருந்தனர். பூர்ணிமா தன் கண்களை விட்டு மறையும் காரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஒருவார்த்தை என்னையும் கேட்டு இருக்கலாம்.. இவன் எப்பவும் இப்படிதான்.!" என்று திட்டினாள். கண்கள் இரண்டும் கலக்குது போலிருந்தது. அன்று முதல் முறை பூமாறன் தன்னை அணைத்தபோது என்ன உணர்ந்தாலோ அதே போல இன்று உணர்ந்தாள். அவ்வளவு பயமும், குழப்பமும் மனதில் இருந்தது.

"அவர் பூரணியோட புருசனா?" தன் சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டான் உதயா.

ஆமென்று தலையசைத்த ஸ்டெல்லா "இரண்டு பேருக்கும் சண்டை. அதனால பிரிஞ்சி இருக்காங்க. இன்னைக்கு இவளுக்கு பர்த்டேன்னு அவர் வந்தாரு. ஆனா இப்படி ஆகிடுச்சி." என்றவள் கவலையோடு வெளியே நடந்தாள்.

"நிஜமா தெரியாது சீனியர். நீங்களும் சொல்லவே இல்ல.!"

"அவளோட கழுத்துல இருக்கும் சங்கிலியை வெளியே காட்டவே இல்ல அவ. உனக்கு இது அனாவசியம்ன்னு நினைச்சி அதை பத்தி சொல்லவும் இல்ல. தப்பு அவ மேலதான் அதிகம். நீ பீல் பண்ணாத." என்றவள் தன் உடைந்த மனதை வெளிக்காட்டவேயில்லை.

அன்று இரவு சிவராத்திரியாய் போய் விட்டது பூர்ணிமாவுக்கு. பட்ட காலில் படும் என்பது போல அவனோடு எந்த விசயத்தில் சண்டை வந்து விடக் கூடாது என்று ஆரம்பத்தில் இருந்து பயந்தாளோ அதே விசயத்தில்தான் பிரச்சனை உருவாகியிருந்தது இப்போது.

முதல் முறை பூமாறன் தன்னை அணைத்தபோது பாலா தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்று பயந்திருந்தாள். அந்த பயம் அவளுக்கு இயல்பாய் அமைந்து விட்டது. ஏனெனில் அந்த நாட்களில் முல்லையின் மீது பாலா சுமத்திய பழி அத்தகையது. முல்லை இவளுக்கு தந்த அறிவுரைகள் அத்தகையது. தப்பு செய்யாதே தப்பு செய்யாதே என்று சொன்ன அம்மாவும் கூட அப்போது நம்பிக்கை வைக்காமல் போய் விட்டாள். அந்த பயம்தான் கடைசியில் அவளின் பிரிவுக்கே கூட‌ காரணமா போய் விட்டது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN