குரங்கு கூட்டம் 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அர்விந்தின் வீட்டில் தொலைக்காட்சி சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது‌. ஹாலில் இருந்த மின்விசிறியும் மெதுவாய் சுழன்றுக் கொண்டிருந்தது. தொலைக்காட்சியின் முன்னால் இருந்த சோஃபாவில் சாய்ந்து படுத்திருந்த பிரேமின் அம்மா அரை தூக்கத்தில் இருந்தாள். சுகந்த காற்றும், மெல்லிசையும் அவளை எவ்விடத்திலும் உறக்கத்தில் ஆழ்த்தி விடும். அவளை போல ரசித்து உறங்க அந்த வட்டத்தில் ஆளே இல்லை என்றும் கூட சொல்லலாம்.

அர்விந்தின் அம்மா சமையலறையில் இருந்த பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்தாள். அருகில் சமையல் மேடையில் அமர்ந்திருந்த மிருதுளாவின் அம்மா "இந்த வாரம் சக்தி கோவிலுக்கு போகலாமா?" எனக் கேட்டாள். தன் கையில் இருந்த பாதி கேரட்டை மீண்டும் ஒரு கடி கடித்தாள்.

பாத்திரங்களை கவிழ்த்து விட்டு இவள் புறம் திரும்பிய அவள் "போகலாம்.. இந்த வாண்டுங்க வந்தா ஆகும். புள்ளைங்க இல்லாம தெருவா காலியான மாதிரி இருக்கு.." என்றாள் கவலையாக.

"எனக்கும்.." என்றவள் கேரட்டின் வேர் பகுதியை மட்டும் குப்பை தொட்டியில் போட்டு விட்டு ஹாலுக்கு வந்தாள்.

பத்தாம் நிமிடத்தில் காப்பி கோப்பைகளோடு அங்கே வந்தாள் அர்விந்தம்மா.

"பிரேமம்மாவை எழுப்பு.." என்றவள் மிருதும்மாவுக்கு காப்பியை தந்தாள்.

தன்னை யாரோ பலமாக உலுக்கவும் மொத்த தூக்கமும் கலைந்து எழுந்து அமர்ந்தாள் பிரேமம்மா. முகத்தை துடைத்துக் கொண்டாள். நேரத்தை பார்த்தாள். பத்து நிமிடம்தான் கடந்திருந்தது. இப்படியே விட்டிருந்தால் விடியும் வரை உறங்கியிருப்பாள் அவள்.

காப்பியை சூடாய் உறிஞ்சியவள் தொலைக்காட்சியின் சத்தத்தை கூட்டி வைத்தாள்.

"முன்னால் அமைச்சர் வெங்கட்டின் வீட்டில் போலிஸ் சோதனை.." என்று வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

"நமக்கு சம்பந்தமில்லா நியூஸ். சம்பந்தம் இல்லாத மாவட்டம்.. நீ சீரியலை போடு.." என்று சொல்லி விட்டு தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்த அர்விந்தம்மா தொலைக்காட்சியின் பிண்ணனியில் ஓடி வந்துக் கொண்டிருந்த தன் மகனை கண்டு வெடுக்கென்று நேராய் எழுந்து அமர்ந்தாள்.

"இது அர்விந்தன் இல்ல.. இவன் என்ன பண்றான் அங்கே? இது யார் இந்த பொண்ணு?" என்று அவனின் கை பிடித்து ஓடி வந்த ஸ்வேதாவை பார்த்து சந்தேகமாக கேட்டாள் பிரேமின் அம்மா.

அர்விந்தம்மா அவசர அவசரமாக தனது போனை எடுத்து மகனுக்கு அழைத்தாள். ஆனால் போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது.

"இந்த பையன்.." என்றபடி பற்களை அரைத்தவள் திரையை கண்டு விட்டு அதிர்ந்தாள்.

மிருதுளா இரட்டை வேடத்தில் எங்கோ ஓடிக் கொண்டிருப்பதும் அதில் தெரிந்தது.

"இது மிருதுளா.. அது யார்?" தலையை சொறிந்தபடி தன் சந்தேகத்தை கேட்டாள் அர்விந்தின் அம்மா.

"எனக்கென்னவோ மிருத்யூவை போல இருக்கு? பையன் எப்ப பொண்ணா மாறினான்?" என பிரேமின் அம்மா கேட்ட அதே நேரத்தில் தொலைக்காட்சி திரையில் இருந்த மொத்த காட்சிகளும் மாறி விளம்பரம் ஓட ஆரம்பித்தது.

"இந்த புள்ளைங்க பிக்னிக் போறேன்னுதானே சொன்னாங்க?" யோசனையோடு நிமிர்ந்த பிரேமின் அம்மா "என்ன கோல்மால் பண்றாங்களோ?" என்றாள்.

"வீட்டுக்கு வரட்டும் அவங்களுக்கு இருக்கு கச்சேரி.." என்று சூளுரைத்தாள் மிருதுளாவின் அம்மா.

"அர்விந்த் ஏதோ ஒரு புள்ளை கையை பிடிச்சிட்டு வந்தான்.." என்று இழுத்த பிரேமின் அம்மாவை மற்ற இருவரும் சந்தேகமாக பார்த்தனர்.

"அவனை பத்தி அப்பவே தெரியும். எவளையாவது இழுத்துட்டுதான் ஓடி வருவான்னு நினைச்சேன். ஆனா பையன் இப்பவே ரெடியாகிட்டு இருக்கான்.." என்றாள் காப்பி டம்ளரை கீழே வைத்தபடி.

இவள் சொன்னது கேட்டு மற்ற இருவருக்கும் கோபம் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டவில்லை இருவருமே.

ஸ்வேதாவின் கையை பிடித்துக் கொண்டு ஓடினான் அர்விந்த். ரோஜாவின் கையை பற்றியிருந்தது மிருத்யூவின் கரம். அவளின் கரம் பிடிக்கும் யோகம் மரணம் வரை தனக்கு வாய்க்க வேண்டும் என்று அவன் நினைத்த அதே நேரத்தில் அவனை மோதியும் மோதாமல் பறந்துச் சென்றது துப்பாக்கி குண்டு.

"எனக்கு பயமா இருக்கு.." ஓடிக் கொண்டே சொன்னாள் ஸ்வேதா.

"நான் இருக்கும் வரை உனக்கு ஒன்னும் ஆகாது.. பயப்படாத.." என்றான் அர்விந்த்.

ஆள் உயரத்திற்கும் மேல் இருந்தது சோளதட்டுகளின் உயரம். பச்சை வாசனையை ரசிக்க கூட விடாமல் துரத்தி வந்தான் சித்து.

மிருத்யூவின் துப்பட்டா போன திசை தெரியவில்லை. அவன் அணிந்திருந்த வளையல்கள் கூட அத்தனையும் உடைந்து சிதறிப் போனது.

"தனி தனியா ஓடி தொலைஞ்சிட வேணாம்.!" என்ற மிருத்யூ பின்னால் திரும்பிப் பார்த்தான். வெறி கொண்ட வேங்கையென துரத்தி வந்துக் கொண்டிருந்தான் சித்து. சுட்ட குண்டு தான் எய்த இலக்கை மோதாமல் தாண்டி பறந்தது கண்டு கடுப்பானவன் மிருத்யூவை ஆத்திரத்தோடு முறைத்தான்.

"நேத்து வரை லவ் லவ்வுன்னு சாவடிச்சான்.. ஆனா இப்ப நிஜமாவே சாவடிக்க கிளம்பிட்டான்.!" என்று திட்டிக் கொண்டே ஓடிய மிருத்யூ சோள காட்டின் எல்லையில் வந்ததும் மூச்சடைத்து நின்றான்.

எதிரே சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது ஆறு ஒன்று. இவ்வளவு நேரம் பயத்தோடு ஓடி வந்ததில் ஆறு ஓடும் சத்தம் அவர்களுக்கு கேட்காமல் போய் விட்டது.

"இனி என்ன செய்ய?" கவலையோடு கேட்டாள் ஸ்வேதா.

"இப்படி சைடா ஓடலாம். இல்லன்னா ஆத்தை நீந்தலாம்.." ரோஜா சொன்னதற்கு மறுப்பாக தலையசைத்தவள் "எனக்கு நீச்சல் தெரியாது.." என்றாள் ஸ்வேதா. அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு ஓரமாக திரும்பி ஓடினான் அர்விந்த்.

சித்துவுக்கு மூச்சிரைத்தது. இடுப்பில் கையை பதித்தபடி நின்றான். அங்கே தரையில் கிடந்த வளையல்களை கண்டான். மிருத்யூ மீது அவன் கொண்ட காதலையும், அவனின் பொய்யால் தனக்கு உண்டான காயத்தையும் நினைத்து வருந்தினான்.

சம்பத் கரும்பு காட்டின் நடுவில் நின்றான். சுற்றிலும் பார்த்தான். சலசலப்பு எந்த பக்கத்தில் இருந்தும் வரவேயில்லை. அவர்கள் எந்த பக்கம் சென்றார்கள் என்று அவனால் யூகிக்கவும் முடியவில்லை. திரும்பி நின்று பார்த்தான். சிறு சத்தம் வந்தாலும் பழி தீர்த்து விடலாம் என்று காத்திருந்தான்.

"மாம்மா.." குழந்தையின் குரலில் திரும்பினான். அதே நேரத்தில் அவனின் முகத்தின் மீது வந்து மோதியது கரும்பு. இரட்டை கரும்பு விசையோடு வந்து மோதியதில் தடுமாறி பின்னால் நகர்ந்தான். ஆனால் அவனை யோசிக்கவும் விடாமல் மேலும் மேலும் அடிகள் விழுந்துக் கொண்டே இருந்தது.

"பிரேம்.. அந்த கரும்பை கொடு.." தன் கையில் இருந்த கரும்பு துகளாய் சிதறி போகவும் அவன் நீட்டிய கரும்பை அவசரமாக பிடித்துக் கொண்டாள். மேலும் மேலும் விழுந்தது அடி. கொஞ்ச நேரத்தில் தலை சுற்றி மயங்கி விழுந்தான் அவன்.

"வாவ்.. மிருது.. இரண்டாவது கொலை பண்ணிட்ட.." என்று கூப்பாடு போட்டான் பிரேம்.

"கத்தி தொலையாதடா.‌" என்றவள் சம்பத்தின் துப்பாக்கியை கையில் எடுத்தாள். அவனின் பேண்ட் பாக்கெட்டுகளை சோதித்தாள். பின் பாக்கெட்டில் ஒரு துப்பாக்கி இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டாள்.

"ஓகே.. இனி நாம சேப்.." என்றவள் தனது துப்பாட்டாவை எடுத்து அவனின்‌ கைகளை சேர்த்துக் கட்டினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN