குரங்கு கூட்டம் 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆற்றின் கரையை தொட்டும் தொடாமல் ஓடிக் கொண்டிருந்தது நண்பர்களின் கூட்டம்.

"மிருத்யூ கால் வலிக்குது.." ரோஜா புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

"உன்னை தூக்கி போக ஆசைதான். ஆனா இப்ப முடியாது தங்கம். இவன்கிட்ட மாட்டினா நமக்கு நாளைய நாளே இருக்காது. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி ஓடி வா.." என்றவன் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு ஓடினான்.

"சத்தியமா இதுக்கு மேல என்னால முடியாது.." என்ற ஸ்வேதா அர்விந்திடம் இருந்து தன் கையை உருவிக் கொண்டாள். இடுப்பை பிடித்தபடி மூச்சு வாங்கினாள்.

"கொஞ்ச தூரம் பேபி.." என்ற அர்விந்திடம் முடியாதென தலையசைத்தவள் "என்னை விட்டுடுங்க.." என்றாள்.

அவன் மறுத்து சொல்லும் முன் "இல்லன்னா அவனோடு சண்டை போடுங்க.." என்றாள்.

அர்விந்த் திகைத்து நின்றான்.

ரோஜாவின் மூளைக்குள் பளிச்சென்று விளக்கு எரிந்தது.

"இந்த நாய்தான் மிருதுளாவோட கன்னத்தை பஞ்சர் பண்ணது.." என்றாள்.

ஸ்வேதாவை இழுத்துக் கொண்டு ஓட இருந்த அர்விந்த் சட்டென்று நின்றான்.

"என்ன சொன்ன?" என்றுக் கேட்டான்.

"அவ மேக்கப் போட்டு மறைச்சிட்டா. அதனால உங்களுக்கு தெரியல. இந்த சித்து அவளை கன்னம் கன்னமா அறைஞ்சிட்டான். அவளோட இரண்டு கன்னமும் பன்னு மாதிரி இருக்க காரணம் இவன்தான்.." என்றாள் கைகளை விரித்தபடி.

அர்விந்தின் நாடி நரம்புகள் அனைத்திலும் கோபமும் குரோதமும் எக்கச்சமாக பரவ ஆரம்பித்தது.

"மாட்டினிங்களா?" எனக் கேட்டபடி தன் துப்பாக்கியில் குறி பார்த்த சித்துவை ஓடி வந்து உதைத்தான் அர்விந்த்.

"டேய்.. உன்னை.." அர்விந்தின் கைகள் மாறி மாறி அவனின் முகத்தை குத்த ஆரம்பித்தது. அவனின் முதல் உதையிலேயே துப்பாக்கியை தவற விட்டு விட்டான் சித்து. அதை ஓடி வந்து எடுத்தான் மிருத்யூ.

"உங்களை கொல்லாம விட மாட்டேன்.." என்ற சித்துவின் வார்த்தைகள் வாயை விட்டு ஒவ்வொரு சொற்களாக வெளியில் வந்து விழுந்தது. அவ்வளவு அடியை தந்தான் இவன்.

"எங்க மிருதுளா என்னதான் ஒரு குரங்கா இருந்தாலும் அவ எவ்வளவு அப்பாவி தெரியுமா?" எனக் கேட்டவன் இப்போது அவனின் கழுத்தில் குத்த ஆரம்பித்தான். தலைக்கு செல்லும் ரத்த நாளங்கள் அனைத்திலும் அடைப்பு வந்தது போலுணர்ந்தான் சித்து.

"கொன்னுட போறாரு.." ஸ்வேதா பயத்தோடு சொல்ல "அப்படிதான்
சாகட்டுமே.. சீனியருக்கு நாம ஹெல்ப் பண்ண மாதிரி ஆகட்டும்.. இதே இடத்துல எனக்கு அடி விழுந்ததுன்னு சொல்லி இருந்தாவோ, இல்ல உனக்கு அடி விழுந்ததுன்னு சொல்லி இருந்தாவோ அவன் இப்படி அடிப்பான்னு நினைக்கிறியா.. கிடையவே கிடையாது. பிரெண்ட்ஷிப் பைத்தியங்கள் இவைகள். இதுங்களோட ரூட் தனி ரூட். ஆனாலும் கரெக்டா முயற்சி பண்ணா இதுங்களை நாம நினைச்ச மாதிரி கைட் பண்ணலாம்.." என்றாள் தன் உள்ளங்கையில் இருந்த தூசியை ஊதியபடி.

ஸ்வேதா ஆச்சரியப்பட்டாள்.

"போலாம்.." மூச்சிரைக்க எழுந்து நின்ற அர்விந்த் ஸ்வேதாவின் கையை பற்றி அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

"எங்க மிருது மேலயே கை வச்சிருக்கான். இது அப்பவே தெரிஞ்சிருந்தா அவனை அவனோட வீட்டுல வச்சே சங்கை கடிச்சி வச்சிருப்பேன்.." என்று புலம்பினான்.

"போதும்டா நண்பா.." கேலியாய் முணுமுணுத்த ரோஜா தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாடுவது கண்டு அருகே ஓடினாள்.

"வாவ்.. மிரு இங்கே வந்துப் பாரேன். எவ்வளவு அழகா இருக்கு இந்த மீன்கள்.." என்று அழைத்தாள்.

மிருத்யூ அலட்சியமாக அருகில் வந்தான்.

"எங்க வீட்டுல மீன் தொட்டி இருக்கு.." என்றான்.

"ஊர்ல கூடதான் எத்தனையோ ஆயிரம் ஆண்கள் உண்டு.." விளக்கத்தை சொல்லவே தேவையில்லை என்பது போல ரோஜாவின் அருகில் வந்து அமர்ந்த மிருத்யூ மீன்களை ரசிக்க ஆரம்பித்தான்.

"உன்னை போலவே அழகு இந்த மீன்கள்.." என்றான்.

அர்விந்தின் கை விரல் முட்டிகளில் இருந்த காயங்களை துடைத்து விட்டாள் ஸ்வேதா.

"எவ்வளவு காயம்.? உங்களுக்கு இவ்வளவு கோபம் வரும்ன்னு எனக்கு தெரியவே தெரியாது.!" என்றாள்.

புன்னகையோடு அவளின் தாடையை பற்றிய அர்விந்த் "நான் முரடு போல தெரியலாம். ஆனா நான் உனக்கு மட்டும் அந்த பஞ்சு மேகம் போல.!" என்றான்.

இதை‌ கேட்டு ரோஜா களுக்கென்று சிரித்தாள். "அது எப்படி.. உங்க‌ கூட்டத்துல எல்லோருமே இப்படி மொக்கை‌யாதான் பேசுவி.." மீதியை சொல்லாமல் மிடறு விழுங்கியவளின் பார்வை தூரமாக சென்றது.

பயத்தோடு‌ பார்த்தாள். பதினைந்தடி தொலைவில் நின்றிருந்த சித்து தன் பின் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து இவர்களுக்கு குறி பார்த்துக் கொண்டிருந்தான்.

"எழுந்து ஓடலாம்.." மிருத்யூ சொன்ன அதே நேரத்தில் குண்டு ஒன்று அவனின் துப்பாக்கியை விட்டு புறப்பட்டு விட்டது. அடுத்த நொடியே தரையில் கவிழ்த்து விழுந்தான் அவன்.

"ஆஆஆ" பயத்தில் அலறினாள் ரோஜா.

தரையில் விழுந்த சித்துவின் பின்னால் நின்றிருந்தான் விஜி. அவனின் கையில் ரத்தம் ஒழுகும் கடப்பாரை இருந்தது. அதை வைத்துதான் சித்துவை அடித்திருந்தான் அவன்.

கடப்பாரையை தூக்கி தண்ணீரில் எறிந்தவன் "கை ரேகை இல்லை.. நான் இவனை எதுவும் செய்யவும் இல்லை.!" என்றான். நேராய் பார்த்தவன் அவசரமாக ஓடி வந்தான்.

அர்விந்த் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான். அவனின் நெஞ்சோடு சாய்ந்திருந்த ஸ்வேதாவின் தோளிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. சீரற்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

"ஸ்வேதா.." அருகில் ஓடி வந்து அவளை எழுப்பினான் விஜி. ஒரு அசைவும் இல்லை.‌ ரத்த போக்கினாலும், பயத்தினாலும் மயங்கி விட்டிருந்தாள் அவள்.

"சீக்கிரம் ஹாஸ்பிட்டல் தூக்கி போகலாம்.." என்று அவளை தூக்கினான் விஜி.

ஸ்வேதாவை பேருந்தின் இருக்கை ஒன்றில் படுக்க வைத்தான். மிருத்யை பேருந்தை இயக்கினான். அதே நேரத்தில் மற்ற நால்வரும் வந்து பேருந்தில் ஏறினர்.

"சம்பத் காலி.." என்ற மிருதுளா அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்வேதாவை கண்டு வாயடைத்துப் போனாள்.

"என்னாச்சி?" என்று விசாரித்தவள் நடந்ததை அறிந்து திகைத்தாள்.

"வேகமா போ.." என்று மிருத்யூவிடம் சொன்னவள் தலை கிறுகிறுக்கவும் இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்‌. தலையை‌ சாய்த்துக் கொண்டாள்.

நிலா ஸ்வேதாவின் ரத்த காயத்தை கண்டு விட்டு வெப்பி அழ ஆரம்பித்தாள். அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்ட பிரேம் "நீ அங்கே பாரு செல்லம்.." என்று வேடிக்கை காட்டினான்.

கிறுகிறுப்பு மறைந்த பிறகு ராகுலுக்கு போன் செய்தாள் மிருதுளா. சித்துவும், சம்பத்தும் இருக்கும் இடத்தை தெளிவாக சொன்னாள். ஸ்வேதாவின் நிலையையும் சொன்னாள்.

"நீங்க அவளை கொண்டுப் போய் பக்கத்துல இருக்கும் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துடுங்க. அங்கே நாங்க பேசிக்கிறோம்.." என்றான் அவன்.

அறுவை சிகிச்சை அறைக்குள் ஸ்வேதாவை அனுப்பிய பிறகு அங்கிருந்த நாற்காலிகளில் கவலையோடு அமர்ந்தனர் நண்பர்கள்.

"அவ நல்லாகிடுவா.." என்று அர்விந்துக்கு நம்பிக்கை சொன்னான் பிரேம்.

அதே நேரத்தில் டெல்லியில் இருந்து கடும் கோபத்தோடு திரும்பி வந்துக் கொண்டிருந்தாள் ரூபாவதி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN