பௌர்ணமி

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா‌ வெறியோடு பாலாவின் புறம் திரும்பினாள். அதே வேகத்தில் அவனின் நெஞ்சில் கை பதித்து அவனை பின்னால் தள்ளினாள். இரண்டடி பின்னால் வந்து நின்றான் அவன்.

"உனக்கு என்னடா நான் துரோகம் பண்ணேன்?" எனக் கேட்டாள் ஆத்திரத்தோடு.

அருகில் வந்து அவளின் வாயை பொத்தியவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளை இழுத்துக் கொண்டு அருகே இருந்த தொழிற்சாலைக்குள் நுழைந்தான்.

"என்னை விடுடா.." என்றபடி அவனிடமிருந்து விலக முயற்சித்தாள். ஆனால் அவனின் பிடி தளரவில்லை. மதிய நேரத்தில் தொழிலாளர்கள் அனைவரும் உறங்க சென்றிருந்தனர். அவன் காரணமாக மற்றவர்கள் யார் கண்களுக்கும் தெரியாமல் அவளை தனது அலுவலக அறைக்கு இழுத்து வந்தவன் கதவை தாளிட்டு விட்டு இவள் புறம் திரும்பினான்.

"என்னை எதுக்குடா இங்கே கூட்டி வந்திருக்க? இன்னும் என்ன பேச வேண்டி இருக்கு?" எனக் கேட்டாள் அழுகையும் ஆத்திரமுமாக.

அறையை சுற்றி இருந்த ஜன்னல் திரைகளை இழுத்து சாத்திவிட்டு இவளிடம் வந்தான்.

"பேசலாம்.." என்றவனின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை தந்தாள்.

"பேசணுமா? என்ன பேசணும்? நீ எவளையாவது மறு கல்யாணம் பண்ணிக்க நினைச்சா முதல்ல எனக்கு டைவர்ஸை தர வேண்டியதுதானே? என்னை பார்த்தா உனக்கு என்ன அவ்வளவு இளக்காரம்?" என்றவள் தன் கழுத்தில் இருந்த தாலியை கையில் எடுத்துக் காட்டினாள்.

"பைத்தியம் மாதிரி இதை நான் இத்தனை வருசமா கழுத்துல போட்டுட்டு இருக்கேன்.. என்னை மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க இல்ல?" என்றாள் புத்தி கெட்டவளை போல.

"பூர்ணி.!" அவளின் தோளை பற்றினான்.

"என்னை கொஞ்ச நேரம் பேச விடு.." என்றான்.

அவனின் கையை தட்டி விட்டவள் "இன்னும் என்ன இருக்கு?" என்றாள். கோபத்தை தவிர வேறு எதையும் காட்ட கூடாது என்று நினைத்தாள். ஆனால் கண்ணீர்தான் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது‌.

"ரோசினி என் பொண்டாட்டி இல்ல.." என்றான் கத்தலாக.

பூர்ணிமா நம்பிக்கை இல்லாமல் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"சத்தியம். உன் மேல சத்தியம்." என்று அவளின் தலையில் கை பதித்தவன் "அவளோட குடும்பம் அவ லவ்வரை அடிச்சி போட்டுட்டாங்க. சாக கிடக்கறான் அவன். அவன் எழுந்து வரும் வரை ரோசினியையும், அவ வயித்துல வளரும் குழந்தையையும் பாதுகாக்க வேண்டிதான் நான் தாலியை கட்டினேன். தாலியை கட்டினேன் என அவன் சொன்னபோது அவளின் இதயம் இரண்டாய் துண்டான வலியை அனுபவித்தது.

"எனக்கும் அவளுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா அவளோட வீட்டை பொறுத்தவரை நான்தான் அவளுக்கு புருசன். அதனாலதான் அங்கேயே என்னால உண்மையை சொல்ல முடியல.." அவளிடம் தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்தான் பாலா.

"இதை நான் நம்பணுமா?" வெற்றுப் பார்வையோடு அவனிடம் கேட்டாள்.

இந்த கேள்விக்கு எப்படி பதில் தருவது என்று புரியவில்லை.

"உ.. உ.. உன் இஷ்டம்.!" என்றான்.

கவலையோடு சிரித்தவள் "உன்னை நம்பிய பாவத்துக்கு நல்ல பரிசு கிடைச்சிடுச்சி.." என்றாள்.

அழுத விழிகளை துடைத்துக் கொண்டு வெளியே செல்ல நினைத்து நடந்தாள். அவளின் முன்னால் வந்து நின்றான் அவன்.

"என்னை நம்பவே மாட்டியா?" எனக் கேட்டான் வலியோடு.

"ஆதாரம் கொடு.." என்று கையை நீட்டியவளை பயத்தோடுப் பார்த்தான்.

"எவளோ ஒருத்திக்கு தாலி கட்டியிருக்க. அவ முழுகாம இருக்கா. கேட்டா நீ அப்பா இல்ல, புருசன் இல்லன்னு சொல்ற.. உனக்கு எதிரா இத்தனை ஆதாரங்கள் இருக்கும்போது மனசார உன்னை எப்படி நான் நம்புவது? நீ நம்பும்படி எதையும் செய்யலையே!" என்றாள்.

அன்று அத்தையிடம் இதையேதான் அவன் கேட்டான். அத்தைக்கு எப்படி வலித்திருக்கும் என்பதை இப்போதுதான் உணர்ந்தான்.

"நேத்து நைட் அந்த பையன் உனக்கு கிஸ் தந்தான்.." என்றவனை பற்களை கடித்தபடி வெறித்தவள் "அதுவும் இதுவும் ஒன்னுன்னு சொல்றியா? அவன்தான் தந்தான். நான் தரல. அது ஒரு ஆக்ஸிடென்ட் போல. ஆனா நீ தெரிஞ்சே தப்பு செஞ்சிருக்க. அவன் கிஸ் தந்த போது நீ அங்கேதானே இருந்த? உன் மனசுல கள்ளம் இல்லன்னா அப்பவே வந்து என்கிட்ட என்னன்னு கேட்க வேண்டியதுதானே?" எனக் கேட்டாள்.

அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான். அவளோடு நிறைய பேச இருந்தது. ஆனால் ஏனோ வாய் வார்த்தை வர மறுத்தது.

"அப்பவெல்லாம் என்னை எங்க அப்பா மாதிரின்னு சொல்லி சொல்லி சாகடிச்ச.. இப்ப அம்மா மாதிரியா? என்னை பரிசோதிக்கதான் இரண்டாம் கல்யாணம் செஞ்சியா?" என்றாள்.

எவ்வளவு வேதனைகளை தாங்க முடியும் என்று நினைத்து வெந்தாள். "நான் கிளம்பறேன் பாலா.. நேத்து அந்த கிஸ்னாலதான் இவ்வளவு தூரம் வந்தேன்.. நீ என்னை தப்பா நினைக்க கூடாதுன்னு முதல்ல இருந்து பயந்தேன். அந்த பயம் எந்த அளவுக்கு மனசுக்குள்ள ஊறியிருந்ததுன்னு உனக்கு புரியாது. அப்பா போல அப்பா போலன்னு நீயும் என் அம்மாவும் சொல்லி சொல்லியே என்னை நொறுக்கிட்டிங்க.. அந்த ஒத்த காரணம்தான் என்னை உன்கிட்ட இருந்து ஓட வச்சது.." என்றாள் சுவற்றைப் பார்த்தபடி.

பாலா அதிர்ச்சியில் உறைந்தான்.

"பூரணி.." என்றான் கையை பிடித்தபடி.

"கையை விடு.." என்றவளுக்கு குரல் உடைந்திருந்தது.

"என்னை எவ்வளவு ஓட வைக்க முடியுமோ அவ்வளவு ஓட வச்சிட்ட.. இனி எப்பவுமே நெருங்க முடியாது. நீ உன் இரண்டாம் பொண்டாட்டியோடு நல்லா வாழு.." என்றாள்.

அவனை விட்டுவிட்டு நடந்தாள். கதவை திறக்க இருந்தவளிடம் "பூர்ணி.. மூணு மாசம் எனக்கு டைம் கொடு. அப்புறம் நான் உனக்கு முழு ஆதாரத்தோடு என்னை நல்லவன்னு நிரூபிக்கிறேன். நீ என் மனைவி. உன்னை நம்ப வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.." என்றான்.

பதில் சொல்லாமல் கதவை திறந்து வெளியே நடந்தாள்.

அன்று மாலையில் பூர்ணிமா வந்து போனதை பற்றித் திட்டி தீர்த்தாள் ரோசினியின் பாட்டி.

"இனி அவ எப்பவும் இந்த வீட்டு பக்கம் வரவே கூடாது. நீ உன் புருசனை கைக்குள்ள போட்டுக்க பாரு.." என்று பாடம் எடுத்தாள் அவளின் அம்மா.

"அடுத்தவன் புள்ளையை வயித்துல வச்சிருக்க. அப்புறம் எப்படி அவன் மட்டும் உன் பேச்சை கேட்பான்? இந்த குழந்தையை அப்பவே அழிக்க சொன்னேன்.. அவன்தான் இவ உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டான். புருசன் வேணும்ன்னா உயிரை கூடதான் விட்டாகணும்.." சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொண்டிருந்தாள் பாட்டி.

பாலா வீட்டிற்கு வந்த பிறகும் கூட ரோசினிக்கு அர்ச்சனைகள் விழுந்துக் கொண்டே இருந்தது.

பாலாவால் ஒரு அளவுக்கு மேல் எதையும் காது கொடுத்து கேட்க முடியவில்லை.

"கொஞ்சம் அமைதியா எழுந்து போறிங்களா இரண்டு பேரும்.. நான் அவளைதானே கல்யாணம் பண்ணி இருக்கேன்? அப்புறம் ஏன் நீங்க இரண்டு பேரும் வந்து உட்கார்ந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்கிங்க? என் பொண்டாட்டி இவளே அமைதியா இருக்கா. நீங்க ஏன் தினமும் கத்திக்கிட்டு இருக்கிங்க? உங்களுக்கு உங்க வீட்டுல ஏதும் வேலையே இல்லையா? நாள் முழுக்க இங்கேயே உட்கார்ந்திருக்கிங்க! நானே ஒவ்வொரு பைசாவையும் பார்த்து பார்த்து செலவு பண்ணிட்டு இருக்கேன். நீங்க வந்து இரண்டு வேளை சோறு சாப்பிட்டே என் சொத்து முழுக்க அழிச்சிடுவிங்க போல.." என்று கத்தி வைத்தான்.

ரோசினியே அதிர்ந்து விட்டாள் இவனின் திட்டுகளை கேட்டு. பாட்டியையும் அம்மாவையும் பற்றி சொல்லவும் வேண்டுமா? இருவரும் முறைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். போகும்போது கூட என்னவோ முனகிக் கொண்டேதான் போனார்கள். அவர்கள் இனி திரும்ப மாட்டார்கள் என்று நம்பினான் பாலா‌.

ரோசினி ஆச்சரியம் குறையாமல் நிற்பதை கண்டவன் "இவ்வளவு நாளா இவங்களை துரத்தணும்ன்னு தோணவே இல்ல‌.. சாரி ரோசினி.." என்றான்.

ரோசினி சிரித்தாள். "தேங்க்ஸ் மாமா.." என்றாள்.

"ம்.." என்றவன் சமையல் நேரம் ஆரம்பித்தது கண்டு சமைக்க கிளம்பினாள்.

பூர்ணிமா வீட்டிற்கு வந்த பிறகு பேயடித்தது போல இருந்தாள். "என்னாச்சி?" எனக் கேட்டு சலித்தாள் முல்லை.

"ஒன்னும் இல்லம்மா.." என்றாள்.

ஆனால் மகளின் ஜீவன் செத்து முகமே என்னவோ நடந்து விட்டதை அவளுக்கு சொல்லியது. அதன் பிறகே பூமாறனுக்கு அழைத்து விசயத்தைக் கேட்டாள். நடந்ததை அறிந்த பிறகு அவளால் சுய சிந்தனையோடு கூட இருக்க முடியவில்லை.

"என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான்.." என்றாள் புலம்பலாக.

பூர்ணிமாவின் அருகில் அமர்ந்து அவளுக்கு நிறைய சமாதானம் சொன்னாள்.

"நாம போலிஸ் போகலாம் பூரணி.. இல்லன்னா லோக்கல் ரவுடிங்ககிட்ட சொல்லலாம்.." என்றாள். மனைவி பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ராஜா பொய்யாய் அதிர்ந்தார்.

"உன் அம்மா வில்லி மாதிரியே பேசுறா.." என்றார்.

"அவனை நம்பி கட்டி வச்சது என் தப்புதான்.. முழுசா என் நம்பிக்கையை அழிச்சிட்டான்.!" என்று கதறினாள். அவளையும் மீறி அழுதாள்.

"அழாத முல்லை.. நம்ம புள்ளைக்கு நல்ல வாழ்க்கை அமையணும்ன்னு விதி இருந்தா யார் என்ன செய்ய முடியும்?" எனக் கேட்டார் ராஜா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN