குரங்கு கூட்டம் 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தன கொடிக்காலில் இருந்த வினாயகர் கோவில் அது. மற்ற பெரிய கோவில்களில் வாசலிலேயே பெரிய பூட்டு போட்டு வைத்திருந்தார்கள். இங்கேதான் வினாயகர் 'நானே சன்னியாசி. என்னிடம் ஏதுடா சொத்து?' என்று தைரியமாக கதவில்லா அறையில் அமர்ந்திருந்தார். வாசலில் இருந்த சிறு உண்டியல் கூட பூட்டில்லாமல் திறந்துதான் கிடந்தது. அதற்குள் இருந்த கிழிந்த பத்து ரூபாய் ஒன்றை எத்தனையோ பேர் எடுத்துப் பார்த்து கடைசியில் அங்கேயே விட்டு சென்று விட்டனர்.

மிருதுளா மனம் வந்து அருகில் இருந்த பைப்பில் தண்ணீர் பிடித்து வந்து பிள்ளையாரை குளிக்க வைத்தாள். மூன்று பக்க சுற்று சுவர் மட்டும் உள்ள அந்த அறையையும் தண்ணீரால் சுத்தம் செய்தாள்‌.

பிரேம் வாங்கி வந்திருந்த வெள்ளை வேட்டியை பிள்ளையாரின் இடுப்பில் கட்டினாள்.

"பாவம்.. ஒரு பேச்சுலர் பாயை எவ்வளவு கொடுமை பண்ற நீ. நீ வேட்டி கட்டி விட்டா அவர் ஷைய்யா பீல் பண்ண மாட்டாரா?" என்றுக் கேட்ட அர்விந்தை திரும்பிப் பார்த்து முறைத்தவள் "படைச்சவனே முழு முதல் தாயும் தகப்பனும். அப்படி பார்த்தா இவனும் தகப்பன்தான்.. தகப்பனுக்கு வேட்டி கட்டி விட்டா என்னடா தப்பு? பெண் தெய்வத்தின் சிலைகளை கூட காமத்தோடு மட்டுமே பார்க்கும் சில சைக்கோக்களை போலவே என்னையும் நினைக்காத. ஐ லவ் ஹிம். இது கடவுள்ன்னு நம்பும் காதல்.. தப்பான எண்ணங்கள் கொண்ட காதல் இல்ல.." என்றவள் சந்தனைத்து கரைத்து அவரின் நெற்றியில் பட்டை தீட்டினாள். சிலையின் பின்னால் இருந்த தட்டை எடுத்து கற்பூரத்தை வைத்தாள்.

"என்னை படைச்சவனுக்கு நான் பூசை பண்ணாம வேற எவன் செய்வான்?" எனக் கேட்டவள் மிருத்யூ நீட்டிய மாலைகளில் ஒன்றை கடவுளின் கழுத்தில் இட்டாள். மீதி இரண்டை பாதத்தில் வைத்து வந்து இவர்களிடம் தந்தாள். தாலியையும் அதே போல பாதத்தில் வைத்து கொண்டு வந்து தந்தாள்.

பெற்றோர் யாருமே வரவில்லை. அதுதான் பிரேமுக்கான சரியான தண்டனை என்று நினைத்தார்கள். அதுதான் நிலாவுக்கு பாதுகாப்பு என்றும் நினைத்தார்கள்

கற்பூரத்தை ஏற்றினாள் மிருதுளா. அதே சமயம் சிபியும், பிரேமும் ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலையை மாற்றிக் கொண்டனர்.

தாலியை கட்டினான் பிரேம். நண்பர்கள் அட்சதை பூக்களை தூவினர். சிபி மகிழ்ச்சியோடு தன் காதலனை பார்த்தாள். அவனுக்கும் இப்போதும் நிம்மதி கை வந்து சேர்ந்திருந்தது.

கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம் பரவி கொண்டிருந்த அந்த இடத்தை தாண்டி நடந்த பொது மக்கள் சிலர் இவர்களை வித்தியாசமாக பார்த்து விட்டு சென்றனர்.

"வீடு முழுக்க சொந்தம் வச்சிருந்தும் அனாதை போல கல்யாணம் பண்றோம்.." என்று வருத்தப்பட்டான் பிரேம்.

"பூசாரிச்சி.. திருநீறு கொண்டு வந்து கொடும்மா.." கிண்டலோடு கேட்டான் மிருத்யூ. கற்பூர தட்டின் ஓரத்தில் கொட்டி வைத்திருந்த குங்குமத்தை மணமக்களிடம் நீட்டினாள்.

"கடவுளின் துணை எப்போதும் இருக்கும்.." என்றாள்.

"கொலைக்காரி நீ. உன் பூசையையே சாமி ஏத்துக்கும்போது இவங்களுக்கு துணை வராமலா இருப்பாரு?" நக்கலாக கேட்டான் அர்விந்த்.

மிருதுளா பற்களை கடித்தபடி மூச்சு விட்டாள். "இந்த உலகத்துல எல்லோரும்தான் கொலைக்காரங்க.. குடல்ல இருக்கும் புழுக்களை கொல்றதும் கூட கொலைதான். நம்மோட உடம்புல எத்தனை வகை பாக்டீரியா இருக்கு. அதை கொல்றது இல்லையா நாம? நூறே வருசத்துல வாழ்க்கையை பிடிங்கிக்கற கடவுளே பக்கா கொலைக்காரர்தான்.. இந்த பச்சை புள்ளை மனசை பாருடா..‌" என்றவள் சாமியை வணங்கி விட்டு வெளியே வந்தாள்.

நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தது. பிரேமின் அம்மா முகத்தை தூக்கி வைத்தபடியே ஆரத்தியை சுற்றினாள்.

"கல்யாண போட்டோவுல குழந்தையை வச்சிக்கிட்டு போட்டோ எடுக்க போறவங்க நீங்கதான்.." என்று கடிந்தார் அப்பா.

நிலா இரண்டு நாட்களில் இரண்டு சுற்று வளர்ந்து விட்டது போலிருந்தது பிரேமுக்கு. சிபியின் வீட்டில் இருந்து புறப்படும் போது தொளதொளப்பாக இருந்த அதே ப்ராக் இப்போது காற்று நுழைய கூட இடைவெளி இல்லாமல் இருந்தது.

"இவங்கக்கிட்ட விட்டா புசுபுசுன்னுதான் குழந்தையை வளர்த்துவாங்க போல.. சின்ன வயசு போட்டோவுல நீ இருந்த மாதிரியே இப்ப நிலாவும் இருக்கா.." என்று சிறு குரலில் சொன்னாள் சிபி.

இருவரையும் உள்ளே அழைத்து உணவை பரிமாறினாள் அம்மா. அவ்வப்போது முந்தானையில் மூக்கை சிந்தினாள்.

"இந்த ஆள்கிட்ட அப்பவே சொன்னேன். ஆம்பள பையன் சொல் பேச்சு கேட்க மாட்டான். இவனை யாருக்காவது தத்து கொடுத்துட்டு பொம்பள பிள்ளை பெத்துக்கலாம்ன்னு. இந்த ஆள் எங்கே என் பேச்சை கேட்டாரு?" என்று கண்ணீர் வடித்தாள்.

பிரேமுக்கு வருத்தம் மேலோங்கியது. அம்மாவின் கஷ்டத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நடந்ததை மாற்றும் சக்தி அவனிடம் இல்லையே!

"விருந்து சமைப்பிங்கன்னு நினைச்சேன் ஆன்டி.." என்றாள் மிருதுளா டைனிங் ஹால் வாசலில் நின்றபடி. அவளுக்கு அவள் கவலை.

பிரேமின் அம்மா அவளை முறைத்தாள்‌. கையிலிருந்த சாத கரண்டியை எடுத்து மிருதுளாவின் மீது வீசினாள். கரண்டி அவளின் தோளை தாண்டிச் சென்று ஹாலில் விழுந்தது.

"எவ்வளவு மொய் வச்சிருக்கேன் தெரியுமா? இவனுக்கு கல்யாணம் செஞ்சா மொய்யா தங்கம் மட்டுமே பத்து சவரனுக்கு வரும். அதெல்லாம் இனி எப்படி திருப்புவேன்?" எனக் கேட்டாள் சிவந்த கண்களோடு.

"அப்ப கல்யாணத்தை பண்ணியிருக்க வேண்டியதுதானே?"

"பைத்தியமாடி நீ? வரவங்ககிட்ட புள்ளையை என்னன்னு காட்டுறது?"

"ஏன் என் குழந்தைன்னுதான் சொல்றது?" மிருதுளா அலட்சியமாக சொல்ல, பிரேம் ஆச்சரியத்தோடு அவளை திரும்பிப் பார்த்தான். இந்த யோசனை முதலிலேயே வராமல் போனதே என்று வருத்தப்பட்டான்.

அர்விந்தின் அம்மா ஸ்வேதாவுக்கு உணவை ஊட்டி விட்டுவிட்டு எழுந்தாள்.

"நீ ரெஸ்ட் எடும்மா.." என்றாள். ஸ்வேதாவுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. இவ்வளவு பாசம் கிடைக்கும் என்று அவள் இதுவரை நினைத்ததே இல்லை.

நண்பனின் திருமணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அர்விந்த் "அம்மா.. பிரேமை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து செய்ங்க.." என்றான். அப்போதுதான் அவனது வீட்டில் இவனை அழைத்து விருந்து செய்வார்கள் என்று கணக்கு போட்டான் அவன்.

"புள்ளையை பெத்து வச்சிருக்கும் தகப்பனுக்கு விருந்து ஒன்னுதான் குறைச்சலா?" என்று சீறினாள் அவனின் அம்மா.

இந்த விசயத்தில் மட்டும் அனைவருமே பிரேமை திட்டினார்கள். நாளை வரும் நாளில் இதை காரணமாக வைத்து நிலாவுக்கு கெட்ட பெயர் வந்து விட கூடாது என்று நினைத்தார்கள்.

விஜி தனது வீட்டில் இருந்தான். ஸ்வேதாவின் அறை காலியாக இருந்தது. அவளை இப்போதுதான் அதிகம் மிஸ் செய்தான். அவள் தனக்கொரு சகோதரி போல இருந்ததை நினைத்து பார்த்தான். இனியாவது அவளுக்கு நல் வாழ்க்கை அமையும் என்று நிம்மதி அடைந்தான்.

கையில் இருந்த மொத்த நகையையும் விற்று விட்டான். அந்த பணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை வைத்தான். இனி திருட கூடாது என்று முடிவெடுத்தான். இதற்கு மேல் திருடுவது கூட பிரச்சனையாக தோன்றவில்லை அவனுக்கு. அவன் மாட்டிக் கொண்டு விட்டால் பிறகு அது ஸ்வேதாவின் புகுந்த வீட்டில் பிரச்சனையை தரும் என்று நினைத்தான்.

"எனக்கு நீ இன்னும் பதில் சொல்லல.." மிருத்யூ ரோஜாவின் வீட்டில் வந்து கேட்டான்.

தயங்கியவள் "இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. இப்பதான் டைவர்ஸ் வாங்கி இருக்கேன். அதுக்குள்ள லவ்ன்னா கொஞ்சம் கஷ்டம். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிரெண்ட்ஸா இருக்கலாமே.." என்றாள்.

சரியென்று தலையசைத்தவன் அவளின் கையை பற்றினான். "நீ மெதுவா லவ் பண்ணு.. நான் வெயிட் பண்றேன்.." என்றான். ரோஜா மகிழ்ந்த நேரத்தில் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். "ஆனா நான் உன்னை ரொம்ப வருசமா லவ் பண்றேன்.." என்றான்.

ரோஜா வெட்கத்தோடு தெரியுமென்று தலையசைத்தாள்.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு அடுத்து வரவிருந்த ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் ஸ்வேதாவுக்கும் அர்விந்துக்கும் திருமணம் என்று முடிவானது.

ராகுல் சிறை சாலைக்குள் நடை போட்டான். கடைசியாக இருந்த அறையை திறந்து உள்ளே சென்றான். கொசு கடித்து வீங்கிய கைகளோடு அமர்ந்திருந்தான் சம்பத். முகத்திலும் அடிப்பட்ட காயங்கள் இன்னும் முழுதாய் ஆறாமல் இருந்தது.

"என்ன ரவுடி சார்.. இடம் சவுகரியமா இருக்கா?" எனக் கேட்டான் நக்கலாக ராகுல்.

சம்பத் எழுந்து வந்தான். கதவின் கம்பிகளை இறுக்கமாக பற்றினான்.

"உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்.!" என்றான்.

"ரவுடி.. கொலைக்காரனுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்?" என்று லத்தியால் அவனின் நெஞ்சில் குத்தியவன் "உன்னோட மொத்த சாம்ராஜ்யத்தையும் நாங்க அழிச்சிட்டோம். வெளியே உனக்குன்னு பேர் கிடையாது. பணம் கிடையாது. மக்களின் பயமும் கிடையாது. நீ ரொம்ப ஏழை. உன்னால வெளியே வரவே முடியாது. உன் அண்ணோட மர்டரையும் சித்துவோட மர்டரையும் கூட உன் மேலதான் சேர்த்து எழுதி இருக்கோம். அப்பதானே கேஸ் ரொம்ப ஸ்ட்ராங் ஆகும்!" என்றான்.

சம்பத்துக்கு இவனை கொல்ல வேண்டும் போல இருந்தது.

"சிபிக்கு கூட மேரேஜ் ஆகிடுச்சி.. நீதான் சித்துவை கொன்னுட்டன்னு நம்பி வெங்கட்டும், ரூபாவதியும் உன் மேல கொலை வெறியில் இருக்காங்க. நான் அமைதியா இருந்தாலும் கூட இனி அவங்களே உனக்கு தண்டனை வாங்கி தந்துடுவாங்க. ஆனா சோகம் என்னன்னா அவங்க இரண்டு பேரும் கூட ஜெயில்லதான் இருக்காங்க.." என்றான்.

சம்பத் எரியும் நெருப்பாக நிற்க, அவனை கண்டுக் கொள்ளாமல் கடந்துச் சென்றான் ராகுல்.

சிபி தன் தந்தையின் முன்னால் நின்றிருந்தாள்.

"சொந்த குடும்பத்தையே ஜெயிலுக்கு அனுப்பிட்ட." என்று திட்டினார் அவர்.

"நீங்க செஞ்ச தப்புக்கு நீங்க ஜெயில்ல இருக்கிங்க. இதுல என் தப்பு எதுவும் கிடையாது.‌." என்றவள் தரையில் நின்றிருந்த குழந்தையை தூக்கி இவரிடம் காட்டினாள்.

"இது நிலா. என் பொண்ணு.." என்றாள்.

வெங்கட் அதிர்ச்சியோடு குழந்தையையும் இவளையும் பார்த்தார்.

"குழந்தை ஏது?" எனக் கேட்டார்.

"சொந்த குழந்தைப்பா. நான் பெத்த குழந்தை.." என்றவள் "சாரிப்பா. நான் செஞ்ச ஒரே தப்பு இது மட்டும்தான். சமுதாயம் பத்தி தெரிஞ்சும் கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்திருக்க கூடாது. ஆனா லேட் ஆகிடுச்சி.!" என்றாள்.

வெளியே இருந்து வந்த பிரேம் இவளின் அருகே வந்து நின்றான்.

"இதுதான் என் புருசன். ஒரு வாரம் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சி. அதனாலதான் தைரியமா என் குழந்தையை பத்தி உங்ககிட்ட சொல்றேன்.."

வெங்கட்டால் நம்பவே முடியவில்லை. இது தனது பெண்தானா என்று ஆச்சரியப்பட்டார்.

"அந்த சம்பத்துக்கு என்னை கட்டி தர நினைச்சிங்க. நீங்களாவே முடிவு எடுத்திங்க. வாழ போற என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல. தப்பு உங்க மேலதான் அப்பா.." என்றாள் வருத்தமாக.

"பரவால்ல சாரி தேவையில்ல.. நாங்க கிளம்பறோம்.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

பிரேம் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்து விட்டது.

ராகுலின் வீட்டில் இருந்து வந்து மிருதுளாவை பெண் கேட்டார்கள். யோசித்த பெற்றோர் விசாரித்துவிட்டு பிறகு சரியென்று சொன்னார்கள்.

செலவு குறையட்டும் என்று அர்விந்தின் திருமண நாளிலேயே இவர்களின் திருமணமும் முடிவு செய்யப்பட்டது. ஒரே மேடையில் திருமணம் என்பது நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN