குரங்கு கூட்டம் 38

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திருமண மண்டபம் களை கட்டி இருந்தது. கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. மூன்று குடும்பங்களும் ஆளுக்கொரு வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

நிலா அங்கேயும் இங்கேயுமாக ஓடிக் கொண்டிருந்தாள். இப்போது இன்னும் கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தாள். அவளை பார்த்துக் கொள்ளவே ஓர் ஆள் தேவைப்பட்டது.

மிருதுளாவும், ஸ்வேதாவும் மணமகள் அறையில் தயாராகி காத்திருந்தனர்.

"என் பாஸ்டை பத்தி தெரிஞ்சா அத்தையும் மாமாவும் திட்டுவாங்களா?" கவலையோடு கேட்டாள் ஸ்வேதா.

குச்சி மிட்டாயை சுவைத்தபடி அவளின் அருகில் அமர்ந்திருந்த ரோஜா "உன் பாஸ்டை நாங்களே மறந்துட்டோம். நீ ஏன் நினைச்சி பயப்படுற? உன் மேல எந்த கேஸூம் இல்ல. உனக்கு எதிரா உன் வாயை தவிர வேறு ஆதாரமும் இல்ல. அப்புறம் ஏன் பயப்படுற?" என்றுக் கேட்டாள். அவள் வாயில் இருந்த மிட்டாய் சற்று முன்தான் நிலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு இருந்தது.

"அதுதானே? ஆன்டிக்கு தெரிஞ்சா அதை அப்புறம் பார்த்துக்கலாம். எல்லாம் தெரிஞ்சி கல்யாண மேடை வந்த அர்வி எருமையை மிதிச்சா பிரச்சனை தீர்ந்துடும்.." என்று தன் பங்கிற்கு ஆறுதல் சொன்னாள் மிருதுளா.

மேடையின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த மங்கள வாத்தியம் மண்டபம் முழுக்க பரவிக் கொண்டிருந்தது. மூன்று வீட்டு சொந்தங்களும் கூடியிருந்தது. திருமணம் முடிந்ததும் வரவேற்பு. அந்த வரவேற்பில் போனால் போகிறது என்று மூன்றாவது ஜோடியாக பிரேமையும், சிபியையும் நிற்க வைக்க முடிவு செய்திருந்தார்கள் பிரேமின் பெற்றோர்.

இந்த நாட்களுக்குள் பிரேமின் சொந்தங்கள் அனைவருக்குமே நிலாவை பற்றிய சேதி போய் சேர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் கூட சொந்தங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறினான் பிரேம். சிபியை மட்டும் அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அவளின் அழகா, குணமா, இல்லை தாய் என்ற ஸ்தானமா என்று பிரேமுக்கு புரியவில்லை. எப்படியோ அவள் ஒருத்தியாவது தப்பி விட்டாளே என்று நிம்மதியடைந்தான்.

மிருதுளாவையும், ஸ்வேதாவையும் அழைத்து வந்து மணமக்களின் அருகே அமர வைத்தார்கள். ராகுல் காதலோடு மிருதுளாவை பார்த்தான். மனம் பூரிக்க அவளின் கழுத்தில் தாலியை அணிவித்தான். அர்விந்த அவசரக்காரனை போல தாலியை கையில் எடுத்து காதலி கழுத்தில் கட்டினான்.

"ரொம்ப அழகா இருக்க." என்று அவளிடம் கிசுகிசுத்தான். வெட்கத்தில் ஏற்கனவே தலை நிமிரவில்லை அவள். இப்போது இன்னும் அதிகம் வெட்கினாள்.

உணவை முடித்து கொண்ட வந்த நட்பு கூட்டம் மேடையில் இருந்த தங்களின் ஜோடி நாற்காலிகளில் அமர்ந்தனர். புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

"சீனியர்.. ஒரு டவுட்.." அவனை அணைத்து போட்டோவிற்கு காட்சி தந்தபடி இவனிடம் பேச ஆரம்பித்தாள்.

"சொல்லு.‌"

"நான் ஒரு கொலைக்காரி.. உங்களுக்கு என்னை பார்த்தா பயமா இல்லையா? ஒருவேளை எதிர்காலத்துல என்னை கைது செய்ய போறிங்களா?" என்றுக் கேட்டாள்.

"ச்சே.. அருமை தங்கம்." என்று அவளின் தாடையை பிடித்து கொஞ்சியவன் "என்ன ஒரு அறிவு? இந்த மாதிரி ஒரு இடத்துல வந்து நின்ன பிறகு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கு பார்த்தியா, இதுக்கே உனக்கு அவார்ட் தரலாம்.." என்றான்.

மிருதுளா முறைத்தாள்.

"டென்சன் ஆகாதே. போட்டோ நல்லா இல்லாம போயிடும்." என்றவன் "நீ எப்படி கொலைக்காரியோ அது போலதான் நானும் கொலைக்காரன். நீயாவது வெறும் ஒருத்தனை. நான் இந்த ஆபரேசன் டைம்ல மட்டும் இருபத்தியிரண்டு பேரை என்கவுண்டர் பண்ணியிருக்கேன். ஆனா அதை செஞ்சது ரவுடி குரூப்ன்னு கேஸ்ல நானேதான் எழுதியிருக்கேன். இதை பத்தி இரண்டு பேருமே வெளியே சொல்லிக்க வேணாம்.. ஓகேவா?" எனக் கேட்டான்‌. அவளின் இடுப்போடு வளைத்து கன்னத்தில் முத்தமிடும்படி போஸ் தந்தான்.

"உங்க சார் நம்மை ஏன் முறைச்சிட்டே இருக்காரு?" சந்தேகமாக கேட்டாள். அவளின் பார்வை சென்ற திசையில் பார்த்த ராகுல், மேடையின் கீழே இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த குமரனை பார்த்து புன்னகைத்தான். அவரும் இவனுக்கு புன்னகையை பரிசளித்தார்.

"அவர் அப்படிதான். சரியான ரோபோட். அவர் சிரிக்க மாட்டாரு. நீ தப்பா நினைக்காதே.." என்ற ராகுல் புகைப்படம் எடுத்து முடிந்ததும் களைப்போடு தனது இருக்கையில் அமர்ந்தான். அவன் கையில் இருக்க வேண்டிய பூ செண்டை கையில் தந்தான் மிருத்யூ.

"மேடையிலேயே ரொம்ப கொஞ்சிக்காதிங்க மச்சான்.." என்றுவிட்டு அடுத்த ஜோடிக்கு செண்டு தர நகர்ந்தான் அவன்.

பிரேமும், சிபியும்தான் அந்த ஜோடிகளில் ரொம்பவும் அமைதியாக இருந்தனர். அவர்களின் சொந்தங்கள் மேலே வந்து தங்களின் பரிசு பொருட்களை தந்து சென்றனர். அவர்களின் கழுத்தில் இருந்த மாலையை பார்த்த நிலா தனக்கும் மாலை வேண்டும் என்று அழுதாள். கீழே ஓரத்தில் அவளை வைத்தபடி அமர்ந்திருந்த விசாலாட்சி கோபத்தோடு மகனையும் மருமகளையும் முறைத்தாள்.

"உங்களை கொல்ல நாங்க தேவையில்ல. உங்க பொண்ணே போதும்." என்று சிரித்தான் மிருத்யூ.

"இந்த செண்டையாவது அவக்கிட்ட கொடு.." என்று தன் கையில் இருந்ததை தந்தான் பிரேம்.

மேடை ஏறிய விஜி ஸ்வேதாவின் கையில் நகை பெட்டி ஒன்றை தந்தான். "நம்ம சூப்பர் மார்கெட்ல வந்த லாபத்தை வச்சி வாங்கினேன்.." என்றான் அவன். ஸ்வேதாவுக்கு அழுகையாக வந்தது. சிறு வயதில் இருந்து எல்லாமுமாக இருப்பவன்.

அவளின் தலையை வருடி விட்டவன் "உனக்காகதான் நான் திருட்டை விட்டேன். நீ கவலைப்படாதே. இனி நமக்கு எந்த பயமும் இல்ல. நம்ம வாழ்க்கை நிலையா இருக்கும்‌. உனக்கு ஒரு நல்ல சகோதரனா நான் இருப்பேன்.. ஓகேவா?" என்றான்.

விழிகளை துடைத்தபடியே சரியென்று தலையசைத்தாள் ஸ்வேதா.

"என் மருமகளோட அண்ணன். இரண்டு பேர் மட்டும்தான். அதனால் ரொம்ப பாசம்.." என்று அர்விந்தின் அம்மா தன் சொந்தக்காரர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சிபியின் பாட்டியும் விழாவுக்கு வந்திருந்தாள். சிபியின் பெரியம்மாவையும் உடன் அழைத்து வந்திருந்தாள். இருவரும் இவளையும், பிரேமையும் மனதார வாழ்த்தினார்கள்.

"குழந்தை இருக்குன்னு எங்ககிட்டயாவது சொல்லி இருக்கலாம்.." என்றாள் பாட்டி.

சிபி "சாரி.." என்றாள்.

"இனியாவது நீ சந்தோசமா இருக்கணும். உன் அப்பன் உன் பக்கம் வராம இருக்க நாங்க பார்த்துக்கறோம்.." என்றுவிட்டு கிளப்பினார்கள் அவர்கள்.

மொத்த விழாவும் நல்லபடியாக நடந்து முடிந்தது.

பிரேம் கட்டிலில்‌ படுத்திருந்தான். அவனின் புஜத்தில் தலை சாய்த்தாள் சிபி. நிலா தாத்தா பாட்டியோடு உறங்கிக் கொண்டிருந்தாள்.

"நிலாவோட அப்பா எப்ப வெளியே வருவாரு?" என்றுக் கேட்டாள் சிபி.

பெருமூச்சு‌ விட்டான் பிரேம். "இன்னும் முழுசா ஏழு வருசம் ஆகும்.. அதுவரை நிலா நம்மோடுதான் இருப்பா.." என்றான்.

சரியென்று தலையசைத்த சிபி தனது போனில் இருந்த புகைப்படங்களை பார்த்தாள். ஒன்றில் நிலாவின் அம்மாவும் அப்பாவும் குழந்தை நிலாவை கையில் வைத்தபடி நின்றிருந்தார்கள்.

டெல்லியில் சிபியும் பிரேமும் ஒரு காம்பவுண்ட் வீட்டிற்குள்தான் வசித்து வந்தார்கள். அதே காம்பவுண்டிற்குள் இருந்த ஒரு ஜோடிதான் நிலாவின் பெற்றோர்.

ஒருநாள் நிலாவின் அப்பா வெளியூர் போயிருந்த நேரத்தில் திருடன் ஒருவன் காம்பவுண்டிற்குள் வந்துவிட்டான். பிரேமால் அவனை தடுக்க முடியவில்லை‌. கையில் கத்தி வைத்திருந்தவன் பிரேமையும் சிபியையும் தாக்கி விட்டு நிலாவின் வீட்டிற்குள் புகுந்தான். நிலாவின் அம்மாவை கொடூரமாக கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துக் கொண்டுச் சென்று விட்டான்.

வீடு திரும்பிய நிலாவின் அப்பாவிற்கோ கடும் கோபம். திருடனை கண்டுபிடிக்க முடியாத போலிஸாரும் கேஸ் பைலை ஒரே மாதத்தில் பரணில் தூக்கி போட்டு விட்டனர். ஆனால் நிலாவின் அப்பாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. திருடனை தேடி அலைந்தார். எப்படியோ கண்டும் பிடித்து விட்டார். ஆனால் அங்கே நடந்த சண்டையில் திருடனையும், அவனது கூட்டாளியையும் எதிர்பாராத விதமாக கொன்று விட்டார் இவர். உணர்ச்சி மிகுந்து, ஏதோ வேகத்தில் செய்து விட்டார். பிறகுதான் நிலாவின் நினைவே வந்தது இவருக்கு. ஆனால் காலம் கடந்த பிறகு என்ன செய்ய முடியும்?

அவர்களோ பெற்றோரை விட்டு ஓடி வந்து மணம் புரிந்த தம்பதி. இரு வீட்டாருக்கும் இவர்கள் இருக்கும் இடம் கூட தெரியாது. இப்போது இவன் என்ன செய்வான்? சிபியிடம் அரை மணி நேரம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு சென்றவன் கொலைக்காரனாக ஜெயிலுக்கு சென்றுச் சேர்ந்தான்.

அவன் வந்து விடுவான் என்று நம்பிக்கையில் சிபியும், பிரேமும் குழந்தையை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் நெருங்கி பழகியதில் இவர்களுக்கு காதல் வந்து சேர்ந்தது.

கல்லூரி முடிந்த அதே நேரத்தில் சிபிக்கு திருமணம் என்றும் தகவல் வந்தது. என்ன செய்வது என்ற குழப்பத்தோடு குழந்தையோடு ஊர் வந்தவர்கள் கடைசியில் அவளுக்கு பெற்றோராகவே ஆகி விட்டனர். குழந்தை உள்ளது என்று சொன்னால் நண்பர்களின் உதவி அதிகமாக இருக்கும் என்று பிரேம் எதிர்பார்த்தான். அது போலவேதான் குரங்கு கூட்டம் நிலாவுக்காகவே சிபியின் திருமணத்தை‌ நிறுத்தியது.

ஆனால் விந்தை என்னவென்றால் நிலாவை இவர்களும் தங்களின் குழந்தையாகவே எண்ண ஆரம்பித்து விட்டனர். இடையில் இரண்டு மூன்று முறை பிரேம் சென்று நிலாவின் அப்பாவை பார்த்து வந்தான். நிலாவை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் அவருக்கு நம்பிக்கை அளித்தான். அவரும் இவனுக்கு நன்றியை சொன்னார். ஆனால் நீதிமன்றத்தில் இவரின் கொலைகள் உறுதி செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஏழு வருடங்களுக்கும் நிலா தங்களின் குழந்தைதான் என்று உறுதியாக நம்பினார்கள் பிரேமும், சிபியும்.

மண்டபத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் சீர்படுத்தி வைத்துவிட்டு சோர்வாக நாற்காலி ஒன்றில் அமர்ந்தான் மிருத்யூ. குளிர்பான‌ பாட்டிலை அவனிடம் நீட்டினாள் ரோஜா. அவனருகில் அமர்ந்தாள்.

"தேங்க்ஸ்.. இவ்வளவு நேரம் என்னோடு இருந்ததுக்கு.." என்றவனின் கையை பற்றியவள் "காலம் முழுக்க இருக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.." என்றாள்.

நம்பிக்கை இல்லாமல் பார்த்தவனிடம் "முதல் கல்யாணம் தோத்தா இரண்டாவது காதலும் தோத்து போகணுமா? அதனாலதான் எனக்கு நானே ஒரு சான்ஸ் கொடுத்துக்க போறேன்.." என்றாள்.

அவளின் புறங்கையில் முத்தமிட்டவன் "இந்த முடிவுக்கு நீ எப்பவும் சந்தோசப்படுவ.." என்றான்.

அர்விந்தின் அறையில் அமர்ந்திருந்த ஸ்வேதாவுக்கு உறக்கம் வருவது போலிருந்தது. ஆனால் அவனோ பிக்பாக்கெட் அடிப்பது எப்படி என்று அவளிடம் கேட்டு அறிந்துக் கொண்டிருந்தான்.

"தூக்கம் வருது.."

"கொஞ்ச நேரம்.. எப்படி ஆட்களுக்கு தெரியாம பர்ஸ் அடிக்கிறது.. சொல்லி கொடு.!" என்றான்.

"இந்த மாதிரி பர்ஸ்ட் நைட்டை நான் எங்கேயும் கேள்விப்பட்டதே இல்ல.!" கொட்டாவி விட்டபடியே சொன்னவள் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு முழுதாய் கண் விழித்தாள்.

அவசரமாக எழுந்து ஜன்னலை திறந்துப் பார்த்தாள்.

எதிர் வீட்டு பால்கனியில் நின்றிருந்த மிருதுளாவின் கையில் துப்பாக்கி இருந்தது. அவளின் கை பிடித்து அணைத்து நின்றிருந்த ராகுல்தான் அவளுக்கு குறி பார்த்து சுட சொல்லி தந்துக் கொண்டிருந்தான். தோட்டத்தில் இருந்த மாமரத்தில் இருந்த ஒரு கொத்து மாங்காய்களை சுட்டு வீழ்த்தியிருந்தனர் இருவரும்.

"நாங்க தூங்கறதா வேணாமா சீனியர்?" கடுப்போடு கேட்டான் இந்த பக்கத்து வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த பிரேம்.

"சாரிப்பா.. இனி சத்தம் வராது.." என்ற ராகுல் "பகல்ல சுடலாம் மிருது.." என்றான் மனைவியிடம். அவள் தயங்கி நின்றாள்.

"இன்னும் நிறைய நேரம் இருக்கு. வா.!" என்றபடி அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

மற்றவர்களும் உறங்க சென்றனர். சற்று நேரத்திற்கு பிறகு வானத்து நிலா மட்டும் விழித்திருந்தது. பிரேமின் வீட்டில் இருந்த குட்டி நிலாவும், மற்ற குரங்கு கூட்டமும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

முற்றும்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN