மைதிலி இருக்கையிலிருந்து இறங்க முயன்றாள். ஆனால் தூக்க கலக்கத்தில் அங்கேயே விழுந்தாள். இப்போது இன்னும் அதிகமாக அழுதாள்.
"ச்சை.. எப்ப பார்த்தாலும் அழுது தொலையுது.." என்ற பூர்ணிமா குழந்தையின் முதுகில் பட்டென்று ஒரு அறையை விட்டாள். குழந்தை வீறிட்டு கத்தியது. அவள் குழந்தையை அடித்த அதே நேரத்தில் செண்பகம் குளித்து விட்டு வந்து விட்டாள். பூமாறனும், பிரியாவும் தங்களின் வேலை முடிந்து வந்து விட்டனர். மூவரும் நடந்ததை கண்டு அதிர்ந்தனர்.
பிரியா ஓடி சென்று மகளை தூக்கினாள். குழந்தையின் அழுகை அவளுக்கும் கண்ணீரை தந்தது. கலங்கிய விழிகளோடு குழந்தையின் முதுகை வருடி தந்தவள் "ஒன்னுமில்லடா.." என்று கொஞ்சினாள். பூர்ணிமாவின் புறம் திரும்பியவள் "எதுக்கு குழந்தையை அடிச்ச?" என்றாள் கோபத்தோடு.
பூர்ணிமா விலுக்கென்று எழுந்து நின்றாள்.
"காதோரம் கத்திட்டே இருக்கு.. கருமம்.. அழாதன்னு சொன்னா கேட்கவே இல்ல.."
பூர்ணிமாவின் வெறுப்பான வார்த்தைகளை கேட்கையில் பிரியாவுக்கு தன் கைகளில் இருந்து குழந்தை நழுவுவது போல இருந்தது.
பூமாறன் அருகில் வந்து மனைவியை அணைத்துக் கொண்டான். "இவளுக்கு எகத்தாளம் அதிகமா இருக்கு பிரியா. நீ குழந்தையை கூட்டிப் போய் சமாதானம் செய்.. நான் இவளோடு பேசிட்டு வரேன்." என்றான்.
பிரியா குழந்தையோடு அங்கிருந்துச் சென்றாள். பூமாறன் மூக்கு சிவக்க இவளை முறைத்தான்.
"உனக்கு என்ன வந்து தொலைஞ்சிருக்கு பூரணி? இவ்வளவு வெறுப்பு ஏன்? என் குழந்தையை ஏன் அடிச்ச? உனக்கு அவ அழறது பிடிக்கலன்னா நீ தூரமா போக வேண்டியதுதானே?" என்று கத்தினான்.
பூர்ணிமா துள்ளி விழுந்தாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவனை முறைத்தாள்.
"அழுதது அவ தப்பு.." என்றாள்.
"ஆனா அவ குழந்தையாச்சே பூரணி." மனம் பொறுக்காமல் கேட்டாள் செண்பகம்.
பூர்ணிமாவின் பிடிவாதம் பற்றி அவளுக்கும் தெரியும். ஆனால் இப்படி ராட்சசியாய் இருப்பாளென்று அவளால் நினைக்க முடியவில்லை.
"இப்ப நீங்களும் என் மேல தப்பு சொல்றிங்களா?" என கேட்டவள் பூமாறனையும் மாமியாரையும் மாறி மாறி பார்த்தாள்.
"எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சி. உங்களுக்கு என்னை பிடிக்கல. அதுக்காக தேவையில்லா பழி போட்டு என்னை இங்கிருந்து விரட்ட பார்க்கறிங்க.." என்றாள்.
பூமாறனுக்கு மனம் விட்டுப் போனது. ஓரடி பின்னால் விலகி நின்றான்.
நெற்றியை தேய்த்தான். அவள் எந்த குணமுடையவளாக இருந்தாலும் சரி. அவளை தன் அண்ணனிடமிருந்து மறுபடியும் பிரித்து விட விரும்பவில்லை பூமாறன்.
யோசனை செய்ததில் தலை வலிக்க ஆரம்பித்தது அவனுக்கு.
"இதை பத்தி அண்ணன்கிட்ட சொல்லாதிங்கம்மா.." என்றவன் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.
இதன் பிறகு செண்பகம் மருமகளிடம் உரையாடவே இல்லை.
பூமாறன் தன் அறைக்கு வந்தபோது மைதிலி அழுதுக் கொண்டே இருந்தாள்.
"இவளுக்கு என்னாச்சி? ரொம்ப அழறா. மறுபடியும் ஹாஸ்பிட்டல் கூட்டி போகலாமா?" என்றுக் கேட்டான் பூமாறன்.
கன்னம் தாண்டி வழிந்த கண்ணீரோடு இருந்த பிரியா வேண்டாமென்று தலையசைத்தாள். குழந்தையின் சட்டையை கழட்டினாள். குழந்தையின் முதுகை பூமாறனிடம் காட்டினாள்.
பூமாறன் அதிர்ச்சியோடு ஓடி வந்தான். குழந்தையை கையில் வாங்கினான். மைதிலி முதுகில் ஐந்து கை விரல்களும் அச்சு போல பதிந்திருந்தது. தடிப்பாக சிவந்திருந்தது.
"இதனால்தான் ரொம்ப அழறா.. குழந்தைன்னு கூட பார்க்காம இப்படி அடிச்சிருக்கா. அவளுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?" அழுதபடி கேட்ட மனைவியை ஒற்றை கையால் அணைத்துக் கொண்டவன் "அவ ரொம்ப வித்தியாசமா இருக்கா. கொஞ்ச நாளைக்கு குழந்தையை அவ பக்கத்துல அனுப்பாத.." என்றான்.
பிரியா சரியென்று தலையசைத்தாள். முன்பு போலிருந்தால் கோபத்தில் பூர்ணிமாவின் குடுமியை பிடித்து சண்டையிட்டு இருப்பாள். ஆனால் இப்போது கொஞ்சம் பக்குவப்பட்டு விட்டிருந்தாள். அதனால்தான் அமைதியாய் இருந்தாள்.
பூர்ணிமா பாலாவை எதிர் நோக்கி வாசலுக்கு சென்றாள். அவன் வரும்வரை இங்கேயே காத்திருக்கலாம் என்றெண்ணி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.
அடுத்த நொடி தரையில் விழுந்தாள்.
பாலா வீடு வந்தான். பூர்ணிமாவை ஹாலில் காணவில்லை. அம்மா வாடிய முகத்தோடு ஒரு புறம் அமர்ந்திருந்தாள். பூமாறன் தொலைக்காட்சியில் பார்வையை வைத்திருந்தான்.
வீடே நிசப்தமாக இருப்பது போலிருந்தது.
தனது அறைக்கு வந்தான். உள்ளே நுழைந்தவனின் முதுகை அணைத்தாள் பூர்ணிமா.
"மாமா.." என்று விசும்பி அழுதாள்.
பாலா பதறி அவள் புறம் திரும்பினான். "என்னாச்சி பூரணி?" என்று விசாரித்தான்.
அழுது அழுது சிவந்திருந்தது கண்கள். இரு கன்னங்களிலும் யாரோ அறைந்ததற்கான தடம் பதிந்திருந்தது.
"என்னாச்சி பூரணி? யார் உன்னை அடிச்சது?" ஆவேசமாக கேட்டான். அவனின் உள்ளத்தில் கோபம் பொங்கியது.
பூர்ணிமா கண்களை துடைத்துக் கொண்டாள். விசும்பினாள். "மாறன்தான் அடிச்சிட்டான்.." என்றாள்.
பாலாவுக்கு ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது. வேகமாக ஹாலுக்கு ஓடினான்.
"மாறா.." கர்ஜனையோடு அழைத்தான்.
பூமாறன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மெள்ள எழுந்து நின்றான். என்னவென்பது போல அண்ணனை பார்த்தான்.
"எதுக்கு பூர்ணியை அடிச்ச?" கோபத்தோடு தம்பியின் சட்டையை பிடித்தபடி கேள்வி கேட்டான்.
பூமாறனுக்கும் கோபம் வந்தது. அண்ணனின் கையை தட்டி விட்டான்.
"நான் எதுக்கு அவளை அறைய போறேன்? அவ பிராடு. பொய் சொல்லி இருக்கா.." என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே பூர்ணிமா வந்து பாலாவின் அருகே நின்றாள். அவளின் கன்னத்தில் இருந்த கை தடங்களை கண்டு குழம்பிய பூமாறன் "நான் இவளை அடிக்கல அண்ணா.!" என்றான்.
"ஏன் பொய் சொல்ற?" என கேட்டு அழுதவள் தன் கணவனிடம் "என் கை தவறி இவன் பொண்ணு மேல பட்டுடுச்சி மாமா. நான் என்னமோ வேணும்ன்னே அடிச்சிட்ட மாதிரி என் மேல பழி போட்டான். அது கூட பரவால்ல. ஆனா என் பொண்ணை அடிக்க நீ யார்ன்னு கேட்டு அறைஞ்சிட்டான்.." என்றாள்.
மனைவியின் அழுகை அவனை கரைத்தது.
"இவ பொய் சொல்றா அண்ணா.. இவளை நான் அடிக்கவும் இல்ல. ஒன்னும் இல்ல. உன்னையும் என்னையும் பிரிக்க பார்க்கற. சம்பந்தமே இல்லாம டிராமா பண்றா.." என்றான்.
பாலாவுக்கு தம்பியை நம்ப வேண்டும் என்று ஆசையாகதான் இருந்தது. ஆனால் பூர்ணிமாவின் கன்னங்களை கண்ட பிறகு அவனின் மூளை சகோதரனை சந்தேகப்பட சொல்லியது.
"போதும் பாலா. என் பொண்டாட்டி டிராமா பண்றா, பிரிக்க பார்க்கறான்னு சொல்லாத. எதுக்காக என் முன்னாடியே இவ்வளவு பழி போடுறன்னு தெரியல. இவ இத்தனை வருசம் கழிச்சி இப்பதான் வீடு வந்திருக்கா. ஆனா இவளை கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணி போக முடியாதா உன்னால?" எனக் கேட்டான்.
பூமாறன் கவலையோடு அண்ணனை பார்த்தான்.
"இவதான் பழி வாங்கறான்னு நினைக்கிறேன்.." என்றான் சிறு குரலில்.
பாலா புரியாமல் பார்த்தான்.
"உன்னை பழி வாங்கறா.. அவளை நீ கஷ்டப்படுத்தியதுக்காக இப்ப பழி வாங்க வந்திருக்கா. இவளுக்கு காதல் இல்லை. பழி வாங்குவது மட்டும்தான் குறி.!" என்றான் தம்பி.
பூர்ணிமா அதிர்ச்சியோடு மறுத்து தலையசைத்தாள்.
"நான் உங்களை ரொம்ப லவ் பண்றேன் மாமா. நீங்க இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல. இவனுக்கு நான் இங்கே வந்தது பிடிக்கல. அதனாலதான் இப்படி சொல்றான்.." என்றவள் வழியும் கண்ணீரை துடைத்தபடியே தனது அறையை நோக்கி ஓடினாள்.
பாலா தம்பியை முறைத்தான். "நீயும் அவளும் பிரெண்டுன்னு நினைச்சிட்டு இருக்கேன் மாறா.. இனியும் அவளை தொந்தரவு செய்யாதே.." என்றவன் பூர்ணிமாவை தேடி ஓடினான்.
பூர்ணிமா படுக்கையில் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். அவன் வராண்டாவில் நடக்கும் போதே அவளின் விசும்பல் சத்தம் கேட்டது. அவசரமாக ஓடி அவளை அள்ளியெடுத்து மடியில் வைத்துக் கொண்டான்.
"சாரி பூர்ணி. அவனுக்காக நான் சாரி கேட்கிறேன். அழாதே ப்ளீஸ்.. அவனுக்குத்தான் பைத்தியம்.." என்று சமாதானம் செய்தான்.
பூர்ணிமா அவனின் நெஞ்சில் முகம் புதைத்து விம்மிக் கொண்டே இருந்தாள். இரவு உணவு உண்ணுவதற்கு வர மறுத்து விட்டாள். அவளால் அவனும் சாப்பிட செல்லவில்லை.
இரவு வரையிலுமே அழுதுக் கொண்டேதான் இருந்தாள். அவனும் எவ்வளவோ சமாதானம் சொல்லி பார்த்து விட்டான்.
"இங்கே இருக்கவே பயமா இருக்கு மாமா.." என்று இரவில் அழுதாள்.
"அப்படி நினைக்காத பூரணி. பூமாறனுக்கு புத்தி குழம்பியிருக்கு. அதனால்தான் அடிச்சிட்டான். இனி எதுவும் செய்ய மாட்டான். என்னை நம்பு.." என்றான்.
"ம்ஹூம்.. என்னை வேற வீட்டுக்கு தனி குடித்தனம் கூட்டி போங்க மாமா.. இங்கே இருக்க சுத்தமா பிடிக்கல.."
பாலாவுக்கு அதிசயமாக இருந்தது. அவளோடு திருமணமான புதிதில் தனி குடித்தனம் அழைத்தான் அவன்.
'மரியாதையா போயிடுடா.. என் அம்மா உன்னை நம்பி கட்டி வச்சாங்கன்னு சொல்றதை விட இந்த வீட்டை நம்பியும், இந்த வீட்டு மனுசங்களை நம்பியும்தான் கட்டி வச்சாங்கன்னு சொல்லலாம். உன் கூட தனி குடித்தனம் வந்து இரண்டு பேர் தலையிலும் மாவு கட்டு போட்டு ஆளுக்கொரு மூலையில் படுத்திருந்தா நமக்கு சோறு சமைச்சி தர கூட ஆள் இருக்காது.. நம்ம நல்லதுக்காகவாவது நாம இங்கேயே இருக்கணும்..' என்றாள் அன்று.
நான்கு வருடத்தில் நிறைய மாறி விட்டாள் என்றுதான் நினைக்க தோன்றியது.
"ஆனா.." தயக்கமாக இழுத்தான் பாலா.
"ப்ளீஸ் மாமா.. தனியா போயிடலாம். இங்கிருந்தா இவங்க நம்மை பிரிச்சிடுவாங்க. நம்மோட அந்த சின்ன வீட்டுக்கு போகலாம். அங்கே யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டாங்க.." என்றாள் அவனின் நெஞ்சில் சாய்ந்தபடி.
பாலா பெருமூச்சு விட்டான். அந்த வீட்டை பற்றி நினைத்தாலே ரோசினியின் நினைவுதான் வந்தது. ஆனால் மனைவியின் பயத்தையும், கண்ணீரையும் பார்க்கையில் அந்த வீட்டிற்கு செல்வதே பரவாயில்லை என்று தோன்றியது.
"சரி பூர்ணி.!" என்றான் சில நிமிட யோசனைக்கு பிறகு.
பூர்ணிமாவுக்கு அதன் பிறகுதான் அழுகையே நின்றது. அவனை இறுக்கமாக அணைத்தபடி கண்களை மூடினாள்.
பூமாறன் குழந்தையின் வயிற்றின் மீது கரத்தை பதித்தபடி உறங்கிக் கொண்டிருந்தான். இரவு வெகு நேரத்திற்கு பிறகுதான் உறங்கி இருந்தான். குழந்தையும் இப்போதுதான் நிம்மதியாக உறங்க ஆரம்பித்து இருந்தது.
"மாறா மாமா.." பூர்ணிமாவின் குரலில் பட்டென்று எழுந்து அமர்ந்தான் பூமாறன். பூர்ணிமா எப்படி அறைக்குள் வந்தாள் என்ற குழப்பத்தோடு அவள் புறம் பார்த்தான். ஆனால் சத்தம் வந்த திசையில் அவள் இல்லை.
கதவை பார்த்தான். உள் தாழிட்டு இருந்தது. பிரமை என்று நினைத்து மீண்டும் படுத்தான். ஆனாலும் அந்த 'மாறா மாமா' என்ற வார்த்தை ஒற்றை மணியின் ஓசையை போல பளிச்சென்று மனதில் பதிந்திருந்தது.
குழப்பத்தோடே குழந்தையை பார்த்தான். மைதிலி திரும்பி படுத்தாள். அவளின் முதுகில் இருந்த கை அச்சு முழுதாய் மறைந்திருந்தது. கடிகாரத்தை பார்த்தான். உறங்க ஆரம்பித்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. அரை மணி நேரம் முன்பு வரை இருந்த தடிப்பு இப்போது மறைந்து விட்டது அவனுக்கே ஆச்சரியத்தை தந்தது.
மாலை நடந்ததை நினைத்துப் பார்த்தான். குழந்தையையும், பிரியாவையும் சமாதானம் செய்து விட்டு பால்கனிக்கு வந்தான். வீட்டின் எதிரே பார்த்தான்.
சிமெண்ட் பெஞ்சின் அருகே நின்றிருந்த பூர்ணிமா இரு கன்னங்களையும் பற்றியிருந்தாள். நிமிர்ந்து இவனை முறைத்தாள். அப்போது கூட அவளின் விழிகள் கலங்கிதான் இருந்தது. இவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டாள்.
தான் அறைந்து விட்டதாக பொய் சொன்னவளை யாரோ உண்மையிலேயே அறைந்து இருக்கிறார்கள் என்பதை இப்போது பூமாறனால் யூகிக்க முடிந்தது.
"ஆனா அவளை அறைஞ்சது யாரு?" என்றான் முணுமுணுப்பாக.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே