பௌர்ணமி 57

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இருளாய் இருந்த சிறையின் நடுவே அரை மயக்கத்தில் படுத்திருந்தாள் பூர்ணிமா. தனக்கு இறப்பு வந்து சேராதா என்று ஆண்டவனை கேட்டாள்.

பாலாவுக்கு எப்போது உண்மை தெரிய வரும்? தன்னை எப்போது காப்பாற்றுவான் என்று காத்திருந்து சோர்ந்து விட்டாள். கர்ப்பம் என்பதை கேட்ட பிறகு தனக்கு இதற்கு மேல் வாழ்க்கை இல்லை என்று புரிந்து அழுதாள்.

அவள் அழுதுக் கொண்டிருந்தபோது சிறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் அவள்.

"பூரணி.." அவளின் குரல் விஷம் போல கசந்தது.

"எனக்கு பாப்பா பிறக்க போறா.." என்றவள் பூரணியின் முகத்தை வருடி விட்டாள்.

"உன்னாலதான் பூரணி. நீ எனக்கு செஞ்ச உதவிக்கு என்ன கைம்மாறு செய்றதுன்னு தெரியல." கொஞ்சலாக சொன்னாள்.

அவளை தூர தள்ளிய பூர்ணிமா "இது உதவி கிடையாது. நீ என்கிட்டயிருந்து பிடுங்கிகிட்டது. என் உடம்பை எனக்கே திருப்பி கொடு‌‌.." என்றாள் கோபமாக.

எதிரில் இருந்தவள் எழுந்து நின்றாள். கேலியாய் சிரித்தாள்.

"அது மட்டும் நடக்காது.." என்றவள் கிளம்பினாள்.

***

மித்ராவின் முன்னால் அமர்ந்திருந்த பாலா "உனக்கு பேய் மேல நம்பிக்கை இருக்கா?" எனக் கேட்டான்.

"ஒரு டாக்டர்கிட்ட.."

"டாக்டரா இருந்தாலும் கூட நீயும் மனுசிதான். உன் தனிப்பட்ட நம்பிக்கையை நான் கேட்கிறேன். உன் நம்பிக்கையை பத்தி சொல்லு.."

"எனக்கு நம்பிக்கை இல்ல. ஆனா சுகனுக்கு இருக்கு. அவங்க அம்மா இப்பவும் அவரோடு இருப்பதா நம்புறாரு. எந்த விசயம் செய்றதா இருந்தாலும் அவங்க அம்மாக்கிட்ட கேட்பாரு. அவங்க அம்மா ஏதாவது ஒரு முறையில் சம்மதம் சொல்வாங்க. சம்மதம் இல்லன்னு சொல்வாங்க. நான் நம்புறேனான்னு கேட்டா எனக்கே தெரியலன்னுதான் சொல்வேன்." என்றாள்.

இந்த விசயத்தில் அவள் ஓர் அரை வேக்காடு என்பதை புரிந்துக் கொண்டவன் "பூரணிக்கு பேய் பிடிச்சிருக்கு. ரோசினியோட ஆன்மா.." என்றான்.

கேட்டதும் பெருங்குரலில் சிரித்தாள் மித்ரா.

"என்ன சொல்ற? பேயா?"

அவளின் சிரிப்பு கண்டு அவனுக்கு எரிச்சலாக வந்தது. வேறு யாராவது வந்து விடுவார்களோ என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளையாக பூர்ணிமா பரிசோதனைகள் எடுக்க சென்றிருந்தாள்.

"நான் ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கேன். ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்." என்றான்.

சிரிப்பை நிறுத்திக் கொண்ட மித்ரா "நிஜமாவா பாலா? ஆனா எப்படி? ஏன்?" என்றாள் குழப்பமாக.

"உண்மைதான். எனக்கே புரியுது. என்ன செய்றதுன்னு தெரியல. பூர்ணிமா உடம்புல இருந்து இந்த பேயை ஓட்டணும்.." மேஜையில் கை ஊன்றி இருந்தவன் உள்ளங்கையில் தாடையை பதித்தபடி சொன்னான்.

அதே நேரத்தில் அவனின் கைபேசி ஒலித்தது. "அண்ணா, ரோசினியோட கல்லறையை சுத்தி கட்டுப் போட்டாச்சி.." என்றான் பூமாறன்.

"ஓ..‌நல்ல வேலை செஞ்ச. தேங்க்ஸ்!" என்றவன் "மாமா.." என்ற குரலில்‌ அதிர்ந்து‌ திரும்பினான். கையில் சில பைல்களோடு வந்தாள் பூர்ணிமா.

அனைத்தையும் மித்ராவிடம் தந்துவிட்டு எதிரில் அமர்ந்தாள். மித்ரா மிடறு விழுங்கினாள். பயத்தோடு பைல்களை புரட்டினாள்.

"அவ இன்னமும் உன்னை மாமான்னுதான் கூப்பிடுறா.." பூமாறன் குழப்பத்தோடு சொல்ல, "ஆமா.." என்றவன் போன் இணைப்பை துண்டித்தான்.

"யார் மாமா போன்ல?" பூர்ணிமா அப்பாவி போல கேட்டாள்.

"பிரெண்ட்.." என்றவன் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். எதிரில் இருந்தவளை பார்த்தான்.

"எந்த பிரச்சனையும் இல்லன்னுதான் வந்திருக்கு.!" மித்ரா தயக்கமாக சொல்ல, "எனக்கும் இப்ப வயித்து வலி இல்ல.." என்றாள் பூர்ணிமா.

பைலை ஓரம் வைத்த மித்ரா "மறுபடியும் வயித்து வலி வந்தா வாங்க.." என்று சொல்லி அனுப்பினாள்.

பாலா பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டிற்கு வந்ததும் சர்க்கரை கொண்டு‌ வந்து பாலாவுக்கு ஊட்டி விட்டாள். பாலாவின் முகத்தில் புன்னகையே இல்லை. அனாதை போல அமர்ந்திருந்தான்.

"என்னாச்சி மாமா? நேத்திருந்து சோகமாவே இருக்கிங்க.. ஏன்?" எனக் கேட்டாள் பூர்ணிமா.

பாலா நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான். ஆனால் அந்த புன்னகையின் பின்னால் உண்மைத் தன்மை இல்லை.

"எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க மாமா.."

நேராய் நின்றவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"மனசு கொஞ்சம் சரியில்ல பூரணி.. உன்னோட திட்டுகளை ரொம்ப மிஸ் பண்றேன்.. ஏதாவது தப்பு செஞ்சா நீ திட்டுவியான்னு கூட யோசிச்சிட்டேன்.. நீ உருகி உருகி காதலிக்கிற.. ஆனா எனக்கு உன் திட்டை நினைச்சி ஏக்கமா இருக்கு.." என்றான்.

பூர்ணிமாவுக்கு விந்தையாக இருந்தது. திட்டுகளை வாங்க விரும்பும் ஒருவனை இன்றுதான் பார்த்தாள்.

அவனின் நெஞ்சில் தலை சாய்த்தவள் "இன்னும் கொஞ்ச நாள் மாமா அப்புறம் அந்த திட்டுக்களை விட இந்த அன்பு உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும். இப்பதான் பர்பெக்டா இருக்கோம் நாம.." என்றாள்.

பாலா பெருமூச்சு விட்டான். அந்நியமானவளை அணைத்து நிற்பது போலவே இருந்தது.

"சரி நீ ரெஸ்ட் எடு. நான் வேலைக்கு கிளம்பறேன்.." விலகி நடக்க முயன்றவனின் கையை பற்றியவள் "அதுக்குள்ள என்னை விட்டு போக போறிங்களா மாமா? என்னோடவே இருங்க.. நாளைக்கு வேலைக்கு போவிங்க.." என்று சிணுங்கினாள்.

அவளாய் இருந்திருந்தால் அடித்து துரத்தியிருப்பாள் என்று நினைவு வந்ததும் கசப்பாக புன்னகை உருவானது.

பூர்ணிமாவின் நெற்றியில் முத்தமிட்டவன் "ரொம்ப முக்கியமான வொர்க்‌.. நீ ரெஸ்ட் எடு.. நான் அப்புறம் போன் பண்றேன்.." என்று கிளம்பினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் பூமாறனின் முன்னால் அமர்ந்திருந்தான் பாலா. அம்மாவும் அப்பாவும் கவலையோடு இருந்தனர்.

"பேய் போகலையா அண்ணா?" எனக் கேட்டவனிடம் இல்லையென தலையசைத்த பாலா "அதே மாமா.. அதே கொஞ்சல்.. என் பூரணி அப்படியெல்லாம் செய்யவே மாட்டா.." என்றான் கவலையோடு.

"சொரணை கெட்டு இதை சொல்லாத.. இத்தனை மாசம் அவளோடு குப்பை கொட்டினியே.. அப்ப தெரியலையா வித்தியாசம்?" என எரிந்து விழுந்தான் தம்பி.

பாலாவுக்கு குற்ற உணர்வாக இருந்தது. "அவ என் மேல பாசமா இருக்கான்னு நினேச்சேன்.."

"கொன்னுடுவேன் உன்னை. அவ எங்கே பாசமா இருப்பா? அவளும் நீயும் எலியும் பூனையும் போல. அதை மறந்துட்டியா?"

பாலா தலையை பிடித்தபடி சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

"முடிஞ்சதை விடு. இனி நடக்க போறதை பேசு."

"வேற மாந்திரீகரா பார்க்கலாம்.."

"அவ பிரகனென்டா இருக்கா.." பாலா சொன்னது கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்தது.

"இது எப்ப? ஏன்?" கத்தினான் பூமாறன்.

அவனின் தோளில் அடித்தாள் பிரியா. "எதுக்கு சவுண்ட்? மெதுவா பேசுங்க.. என்ன கத்தினாலும் முடிஞ்ச விசயம் திரும்பி வராது.." என்றாள்.

பாலா மருத்துவமனை போய் வந்ததை பற்றி சொன்னான்.

"உடனே நாம ஏதாவது செஞ்சாகணும். இல்லன்னா இது பெரிய பிரச்சனை ஆகிடும்." என்றார் மரிக்கொழுந்து.

"என் பொண்டாட்டி எனக்கு பத்திரமா வேணும்.." கவலையோடு சொன்னவனின் கையை பற்றிய பூமாறன் "எதுவா இருந்தாலும் சமாளிச்சிடலாம் அண்ணா.. தைரியமா இரு.." என்று நம்பிக்கை தந்தான்.

பாலா சரியென்று‌ தலையாட்டினான்.

அன்று மாலை வரையிலுமே இங்கேதான் இருந்தான் பாலா. மனதே இல்லாமல் வீடு சென்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN