பௌர்ணமி 60

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமாவின் அருகே அமர்ந்திருந்தான் பாலா. அவளின் வலது கையை பற்றியிருந்தான்.

"பூர்ணி.. சாரி.." என்றான். அதை சொல்லும்போதே அவனுக்கு குரல் கரகரத்து விட்டது.

"எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் உன் வலி போகாதுன்னு எனக்கு தெரியும். இப்படி நடக்கும்ன்னு நான் நினைக்கவே இல்ல. உன்னை மனசார காதலிக்கிறேன் பூர்ணி. நீன்னு நினைச்சிதான் இந்த உடம்பை தொட்டேன். உனக்கு வலிக்கறதை விட எனக்கு ரொம்ப வலிக்குது பூர்ணி. உன் முகத்துல எப்படி விழிக்கிறதுன்னு கூட தெரியல. அப்படியே எங்காவது போய் செத்துடலாமான்னு தோணுது.. இந்த குற்ற உணர்ச்சியையெல்லாம் எப்படி வார்த்தையால விவரிக்கிறதுன்னு கூட தெரியல.." என்றான்.

அவள் வயிற்றோரம் முகம் புதைத்துக் கொண்டு வருத்தத்தில் மூழ்கினான்.

பூர்ணிமா கண்களை திறந்தாள். தன் அருகே இருந்தவனின் தலை முடியை கொத்தாக பிடித்து தூக்கினாள். பாலா திகைப்போடு நிமிர்ந்தான்.

"பூர்ணி.. ரோசினி.." குழம்பினான்.

"நான் பூரணிதான்.. ஆனா உனக்கு புத்தி வரதான் ரோசினி மாதிரி நடிச்சேன்.!" என்றாள் முகத்தை கோணியபடி.

பாலா அதிர்ச்சியில் வியர்த்த தன் முகத்தை துடைத்துக் கொண்டான்.

"பூரணி.." என்றான் நம்பிக்கை இல்லாமல்.

"என் அம்மாவை இழந்ததால என் அப்பா உணர்ந்த அதே குற்ற உணர்வை நீ அனுபவிக்கணும்.. என் அப்பாவை இழந்ததால நான் அனுபவிச்ச அதே குற்ற உணர்வை நீ அனுபவிக்கணும். அதுக்காகதான் நான் இத்தனை நாளா நடிச்சேன்.." என்றாள் பேய் போல சிரித்து.

பாலாவின் விழிகளில் நீர் தளும்பியது.

"ஏன் பூரணி இப்படி செஞ்ச? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா? உன் நடிப்பு என்னை முழுசா சிதைச்சிடுச்சி. சாரி பூரணி.. இனி நீ எனக்கு வேணாம்.." என்றவன் அங்கிருந்து எழுந்து நடந்தான்.

(("எக்ஸ்க்யூஸ்மி ரைட்டர்.. கனவு ரொம்ப லாங்கா போகுது.. இங்கேயே கட் பண்றிங்களா? இல்ல டைவர்ஸ் வாங்கி தந்து இரண்டு பேருக்கும் வேற வேற கல்யாணம் பண்ணி வச்ச பிறகு கனவுன்னு சொல்ல போறிங்களா?"

"யாருப்பா அது என் மனசாட்சிதானா? கொஞ்ச நேரம் விடக் கூடாதா? அதுக்குள்ள வந்து கட் பண்ணிட்ட.. உன் ஆசைப்படியே கட் பண்றேன். நீ போய் தூங்கு சாமி.." ))

சிறைக்குள் இருந்த பூர்ணிமா தன் எண்ணத்திற்குள் தோன்றியதை நினைத்து தனக்குள் சிரித்தாள். தன்னால் எழ முடிந்திருந்தால் இவனிடம் இப்படி சொல்லி பார்த்திருக்கலாம் என்று நினைத்தாள்.

"பூர்ணி" பாலா மீண்டும் அழைத்தான்.

"நீ உன் இதய சிறைக்குள்ள இருக்கறதா சொன்னாங்க. அப்படின்னா ஏன் பூரணி உன்னால வெளிய வர முடியல. அது உன் மனசுதானே? உன்னால உன் மனசை உடைச்சி வெளியே வர முடியாதா? என்கிட்ட என்ன பேச்சு பேசுவ. ஆனா நீ உயிர் இல்லாத, உடம்பு இல்லாத ஒரு ஆன்மாக்கிட்ட சிறைப்பட்டு இருக்க.. உன் தைரியமெல்லாம் அவ்வளவுதான்னு நினைக்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு பூர்ணி.." என்றான்.

பூர்ணிமாவுக்கு அழுகையாக வந்தது. முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.

அவனை கட்டியணைத்து அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் அவன் எப்படி இங்கே வருவான்?

"என்னை காப்பாத்து பாலா.." என்றாள் அழுகையின் இடையே.

சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தாள். அதே சிறையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ரோசினி "யாரும் உன்னை காப்பாத்த மாட்டாங்க. என்னையும் காப்பாத்த மாட்டாங்க.. இரண்டு பேரும் சேர்ந்து சாகலாம் பூரணி.." என்றாள்.

பூர்ணிமா அழுதபடியே எழுந்து நின்றாள்.

"உனக்கு கொஞ்சமும் மனசாட்சி இல்லையா? நீ செத்துட்டா நானும் சாகணுமா? நீ காட்டுற நன்றிக் கடன் கண்டு எனக்கு புல் அரிக்குது.!" என்றாள் எரிச்சலோடு.

ரோசினியின் கண்களிலும் கண்ணீர் கொட்டியது.

"உனக்கு சொந்த பந்தம் இருக்கு. உனக்குன்னு உடம்பு இருக்கு. உயிர் இருக்கு. ஆனா நான் நிர்கதியா இருக்கேன் பூரணி. உனக்கு என் கஷ்டம் புரியாது. எங்கேயும் என்னால வாழ முடியல. எங்கேயும் என்னால போக முடியல. அது இல்லாம என் பாப்பாவோட அழுகுரல் வேற.. பைத்தியக்கார ஆன்மா நான்.!" என்றாள் மீண்டும் சிரித்தபடி.

பூர்ணிமா தலையை பற்றியபடி அமர்ந்தாள். "பைத்தியம்தான் நீ. அதனால்தான் இப்படி பண்ற. எல்லா தப்பும் பாலா மேலதான். நீ உதவி கேட்டு வந்தபோது அவன் உன்னை துரத்தி விட்டிருக்கணும். உன் குழந்தை மேல இரக்கப்பட்டு உன்னை வீட்டுக்குள்ள சேர்த்தியிருக்க கூடாது.. உன் குடும்பம்தானே உன்னை கொன்னாங்க. அவங்களை போய் பிடிச்சி தொலைய வேண்டியதுதானே? உன் அம்மாவை, உன் அண்ணியை பிடிக்க வேண்டியதுதானே? சம்பந்தமே இல்லாம என்னை பிடிச்சி வச்சிருக்க.." என்றவள் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"இந்த இரண்டு மாசமா நீ எனக்கு செஞ்ச துரோகம் எல்லா இரக்கத்துக்கும் அப்பாற்பட்டது. உன் மேல இரக்கம் இல்ல. ரொம்ப கோபமா வருது. உன் மனசின் காரணமாதான் நீ செத்திருக்க.. உன்னை மாதிரி ஒரு குணமுள்ளவள் வாழ்றதுக்கு தகுதியே இல்லாதவ.." என்றாள் கோபத்தோடு.

ரோசினிக்கும் கோபம் வந்தது.

"எவ்வளவு வேணாலும் பேசு. ஆனா இந்த உடம்போடு சேர்த்து நீயும் நானும் சாக போறோம். இது மட்டும் உறுதி. மாமா மேல நான் கொண்ட காதல் எவ்வளவுன்னு உனக்கு தெரியாது. எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சது.. அதான் அவரோடு வாழ்ந்தேன். மறுபடி சான்ஸ் கிடைச்சாலும் அதேதான் செய்வேன்.‌ அருள் இல்ல, இந்த உலகத்துல எனக்கு யாருமே இல்லன்னா நான் மாமாவைதான் சுத்தி வருவேன். காதல் தாண்டிய ஓர் உரிமை இது. உனக்கு கடைசி வரை புரியாது.."

"பைத்தியம்.." மீண்டும் அதையேதான் முனகினாள் பூர்ணிமா.

தோட்டத்தின் ஒரு ஓரத்தில் கிளை பரப்பி நின்றிருந்தது ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தின் அடியில் கொண்டு வந்து மண் சிலையை வைத்தான் பூமாறன்.‌ அவனின் கழுத்து வரை வந்தது சிலை. இரும்பில் கூட சிலை வடிவத்திருப்பான் பாலா. ஆனால் இவன்தான் மண்சிலைதான் தேவை என்று இதையே வடித்தான்.

பூசாரி வந்து பார்த்தார். அழகான பெண் சிலை. வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது.

"இந்த சிலையில் அந்த சக்தியை கொண்டு வந்து நிலை நிறுத்த நிறைய பூஜை செய்யணும். நேரம் தேவை. நீங்களும் பொறுமையா இருக்கணும்." என்று எச்சரித்தார்.

பூமாறன் சரியென்று தலையசைத்தான்.

சிலையை அங்கேயே பத்திரமாக நிறுத்தி விட்டு நகர்ந்தான் பூமாறன்.

மறுநாள் பூஜை ஆரம்பித்தது. பூர்ணிமா மருத்துவமனையிலேயே இருந்தாள். அவளருகே பாலா இருந்தான்.

இங்கே பூமாறனும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

பூசாரி‌ பூஜையை செய்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் பாலா அங்கே "ப்ளீஸ் பூர்ணி.. நீதான் உன்னை சுத்தி இருக்கும் கட்டை உடைக்கணும்.. உனக்கு நான் வேணாமா பூர்ணி? நான் இடியட்டா இருந்தாலும் கூட என்னை நீ லவ் பண்றதானே? அப்புறம் ஏன் முயற்சி செய்ய மாட்டேங்கிற.! உன்னால எல்லாமே முடியும். இந்த உடல் உனக்கு சொந்தம். இந்த உயிரும், சிந்தனையும் உனக்கு மட்டுமே சொந்தம். நீ நினைச்சா எழுந்து வரலாம் பேபி.. ப்ளீஸ் கண்ணை திற.." என்று அவளை கண் விழிக்க செய்யும் செயலில் இறங்கி இருந்தான்.

அடுத்த இரு நாட்களுக்கு யூடி வராது. சாரி நட்புக்களே

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN