பௌர்ணமி 62

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"ஆனா என்னால ஒரு சிசுவை கொல்ல முடியாது. அது பாவம்.. நீ அமைதியா போயிடு. இல்லன்னா நான் போலிஸ்க்கு போன் பண்ணுவேன்‌.." என்றாள் மித்ரா.

அவளை முறைத்த பாலா "சரி நான் பூர்ணியை டைவர்ஸ் பண்ணிடுறேன்.." என்றான் தோள்களை குலுக்கியபடி.

நெற்றியில் அடித்தபடி எழுந்து நின்றாள்‌ மித்ரா.

"ஒரு விசயத்தை மட்டும் நல்லா புரிஞ்சிக்க மித்ரா. நம்ம வாழ்க்கை நல்லா போகணும்ன்னா அதுக்கு நாம் எந்த வித குற்ற உணர்வும் இல்லாம இருக்கணும். முதல்ல நான் வாழணும். பிறகுதான் மத்த பாவ புண்ணியமெல்லாம்.." என்றான்.

"அடேய் நீ பண்ண தப்புக்கு நான் ஏன்டா பாவம் சுமக்கணும்? பேய் பிசாசெல்லாம் விடு. குழந்தை இப்ப பூரணியோட வயித்துல இருக்கு. என்ன செய்யணும்ன்னு அவளுக்குதான் முடிவெடுக்கற உரிமை இருக்கு.." என்றாள்.

பாலா சற்று நேரம் யோசித்தான்.

"இந்த விசயத்துக்கு நீ சம்மதிக்கணும்ன்னா நான் என்ன செய்யணும்?" எனக் கேட்டான்.

பற்களை கடித்தவள் "கெட் அவுட்.." என்றாள்.

அவளை முறைத்தான் பாலா. அங்கிருந்து கிளம்பினான்.

பூர்ணிமா சோர்வோடு படுத்திருந்தாள். அடுத்த வாரத்தில் அந்த முக்கிய பூஜை செய்வதாக பூசாரியோடு பேசி முடித்து விட்டிருந்தாள்.

பாலா இந்த அறைக்கு திரும்பி வந்த போது பூசாரி அங்கே இல்லை. இருக்கையில் வந்து அமர்ந்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"ஐயம் சாரி.." என்றான்.

"பரவால்ல.. எனக்கு பேய் பிடிக்கும்ன்னு நீ மட்டும் கனவா கண்ட?" எனக் கேட்டாள்.

அவளின் உதடுகளை வருடியவன் "ரொம்ப கில்டியா பீல் பண்றேன்.!" என்றான்.

புன்னகைத்தாள் பூர்ணிமா. அவனின் தலை முடியை கோதி விட்டாள்.

"என்னோட கடைசி ஞாபகம் நம்ம வீட்டு வாசல்ல காலடி எடுத்து வச்சோடு நின்னுடுச்சி. அப்புறம் பார்த்தா எங்கேயோ ஜெயில்ல இருந்தேன். நாம எப்படி ஜெயிலுக்கு வந்தோம்ன்னு பயமும் கோபமுமா இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது என் ஆன்மாவை, என் சிந்தனையை ரோசினிதான் சிறை பிடிச்சி வச்சிருக்கான்னு. அங்கிருந்து தப்பிக்க டிரை பண்ணேன் முடியல. அதே நேரத்துல இவ பண்ணிட்டு இருந்த எல்லாமே எனக்கு தெரிஞ்சது.. நரகமே தந்திருக்கலாம் போல. உன் கூட அப்படி சரசம் பண்ணா அவ. தப்பிக்கவே முடியாத ஒரு தண்டனையில் நிறுத்தி ஓராயிரம் நரகத்தை ஒட்டு மொத்தமாக காட்டிட்டா.." என்றாள் சுவற்றை வெறித்த பார்வையோடு.

அவளின் கையை பற்றினான் பாலா. "ப்ளீஸ் பூர்ணி.." என்று புறங்கையில் உதடுகளை பதித்து எடுத்தான். "அதை மறந்துடு. அதை மறக்க நான் என்ன செய்யணும்ன்னு சொல்லு. என்னால்தான் உனக்கு இந்த நிலமை. சாரி.!" என்றான்.

கையை உருவிக் கொண்டவள் "அதிலேயும் ஒரு விசித்திரம் என்ன தெரியுமா? நீ ரொம்ப ஹேப்பியா இருந்த. அவளோடு ஹேப்பியா பழகின. அது முழுமையா நான்னு நம்பி அவ்வளவு சந்தோசமா இருந்த.." என்றாள்.

பாலா முகத்தை தன் கைகளில் புதைத்தான்.

"நான் உன்னோடுதான் அதை விட அதிக சந்தோசமா இருந்தேன் பூர்ணி. நம்பு. ரொம்ப நாள் பிரிஞ்சி இருந்ததுல காதல் வெறி வந்திருக்குன்னு நினைச்சேன். கொஞ்ச நாள்ல சரியாகிடுவன்னு கூட நினைச்சேன்.!"

பூர்ணிமா அவனின் தலையை வருடி விட்டாள். நிமிர்ந்துப் பார்த்தான். லேசாய் இதழ் விரித்தாள்.

"பரவால்ல பாலா.. நீ ரொம்ப சந்தோசமா இருந்த.. ஆனா பிரச்சனை என்னன்னா சுட்டு போட்டாலும் எனக்கு அந்த மாதிரி குணம் வராது.. நீ சந்தோசமாதான் இருப்ப. ஆனா அதுக்காக என் சுயமான கோபம், சொந்த உணர்வுகளை தொலைச்சி கட்ட முடியாது.."

"வேணாம் பூர்ணி.. நீ உன் சுயத்தோடு இரு.. நீ சுயமா எனக்கு வேணும்ன்னுதான் நான் ரோசினியை துரத்தி விட்டேன்.."

பூர்ணிமா புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள்.

"நீ எவ்வளவு கோபப்பட்டாலும் சரி. எரிஞ்சி விழு. திட்டிக்கிட்டே இரு. பரவால்ல. எனக்கு நீ மட்டும்தான் வேணும்.!"

பூர்ணிமா அவனுக்கு பதில் சொல்லும் முன் அறையின் கதவு தட்டப்பட்டது.

திரும்பி பார்த்தான் பாலா. பூமாறன் உள்ளே வந்தான்.

"பூரணி.." என்று வந்தான். எழுந்து அமர்ந்தவள் இவன் அருகே வந்ததும் அவனை அணைத்துக் கொண்டாள்.

"சாரி மாமா.. அது நான் கிடையாது. சத்தியம். பாப்பாவை அடிச்சது அவதான். உங்களை மரியாதை குறைவா பேசியதும் அவதான்.. அவ என்னை ப்ளாக் மெயில் பண்ணிட்டு இருந்தா. பாலாவோடு வாழ அவளுக்கு என்னோட சில நினைவுகள் தேவைப்பட்டது. அதை நான் சொல்லலன்னா மயிலுவை கொண்டுவேன்னு மிரட்டின்னா.. சாரி மாமா.." என்றவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது.

பாலாவுக்கு இந்த செய்தி மேலும் அதிர்ச்சியை தந்தது. குழந்தையை கொல்வதாக மிரட்டியவள் எந்த விதத்திலும் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று புரிந்துக் கொண்டான். போயும் போயும் அவளுக்கு தெய்வ பதவி தந்து விட்டோமே என்று நினைத்து வருந்தினான்.

"பரவால்ல பூரணி. நீ பீல் பண்ணாத.. அவ பண்ண தப்புக்கு நீ என்ன செய்வ? முதல் நாளே வித்தியாசமாதான் இருந்தது. நான்தான் சரியா கவனிக்காம போயிட்டேன். சாரி.." என்றான்.

பிரியாவும் வந்தாள். அவளிடமும் மன்னிப்பு கேட்டாள் பூர்ணிமா.

அன்றைய நாள் மாலை வரையிலும் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுத்தாள் பூர்ணிமா.

பாலா அருகில் இல்லாத சமயத்தில் பூர்ணிமாவிடம் வந்தாள் மித்ரா.

"பூரணி.. உன் வயித்துல வளரும் கருவை கலைக்கணும்ன்னு பாலா பிரஷர் பண்றான்‌. நீ கொஞ்சம் யோசியேன். இது குழந்தைதானே? இதுக்கு என்ன தெரியும்? பேய் பிசாசெல்லாம் காரணம்ன்னு சொல்லி ஒரு உயிரை பலி தருவது எந்த விதத்துல நியாயம்?" எனக் கேட்டாள்.

பூர்ணிமா ஆச்சரிப்பட்டாள். பாலாவை தேடியது அவளின் கண்கள். அவனின் குற்ற உணர்வை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"நிஜமாவே நான் பிரகனென்டா இருக்கேனா? என்னால எதையும் உணர முடியலையே.!" என்றாள் பரிதாபமாக.

"நாளைக்கு காலையில ஸ்கேன் பண்ணி காட்டுறேன்.. அதுக்கு பிறகு நீயே அந்த சிசு மேல பரிவு காட்டு.!" என்றாள்.

பூர்ணிமா யோசனையோடு சரியென்று தலையசைத்தாள். ஆனால் மறுநாள் காலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது எந்த கருவும் வயிற்றில் இல்லை.

இந்த தகவலை பாலாவிடம் தெரிவித்தாள் மித்ரா.

"பாலா முன்ன ஸ்கேன் பண்ண பைல்ஸை கொஞ்சம் கொண்டு வாயேன்.." என்று அவசரப்படுத்தினாள்.

"அதெப்படி? நான்தானே ஸ்கேன் பண்ணேன். குழந்தை இருந்ததே.. பேய் பிசாசுன்னா எது வேணாலும் செய்யுமா? கம்ப்யூட்டர் சிஸ்டத்தை கூட மாத்தி வைக்குமா?" அரை மணி நேரத்திற்கும் மேலாக புலம்பிக் கொண்டே இருந்தாள் மித்ரா.

பாலா எடுத்து வந்து தந்த ரிப்போர்ட்டில் எந்த சிசுவும் இல்லை. ரிப்போர்ட்டே மாறி இருந்தது.

கடுப்பில் பைலை தூக்கி எறிந்தாள்.

"நான் என் இரண்டு கண்ணால் பார்த்தேன். இந்த கைகளாலதான் ஸ்கேன் பண்ணேன், டைப் பண்ணேன். அப்புறம் எப்படி ரிப்போர்ட் மாறுச்சி.?" என்று கோபத்தோடு கேட்டாள்.

"நீங்கதானே டாக்டர். நீங்களே கண்டுபிடிங்க. கண்டுபிடிச்சதும் எனக்கும் கொஞ்சம் விசயத்தை தெளிவு பண்ணி சொல்லுங்க.‌." என்று நக்கலோடு சொல்லி விட்டு பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான் பாலா.

அவளை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துக் கொண்டு நடந்தான்.

"கண்கட்டி வித்தையை போல இருக்கு.." என்று முணுமுணுத்தபடி காரை ஓட்டினான்.

ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்ந்திருந்தவள் இவனின் புலம்பல் கண்டு சிரித்தாள்‌.

"உனக்கு தெரியுமா பாலா? நான் எப்பவுமே உனக்கு பர்பெக்ட் மேட்ச் கிடையாது.!"

பாலாவுக்கு இன்னும் கடுப்பாக வந்தது‌. "நீ கொஞ்சம் வாயை மூடுறியா? அதெல்லாம் மேட்ச்தான். நீ நினைக்கிற மாதிரி இருபத்தி நாலு மணி நேரமும் பர்பெக்டா இணைஞ்சே இருக்க முடியாது. சில நொடி பர்பெக்ட் பல மணி நேர நெருடலை சமாளிக்கும். அதுதான் நிஜமான பர்பெக்ட். இத்தனை வருசம் பிரிஞ்சி இருந்தோம். அப்பவும் நான் உன்னை மறக்கல. அதுக்கு காரணம் நான் உன்னோடு வாழ்ந்த அந்த சில நாட்கள். அது அவ்வளவு பர்பெக்ட். அது மறுபடியும் அமைஞ்சா என் வாழ்க்கை சொர்க்கமா பீல் ஆகும். அதுக்காகதான் இத்தனை வருசங்களை தாண்டினேன் நான். சில உறவுகள், சில நேரங்கள், சில காதல்களுக்கெல்லாம் ரொம்ப பவர்ஃபுல் சக்தி உண்டு. அது நம்மை சில வருசம் இல்ல சில நூறு வருசத்துக்கு கூட சேர்த்து வைக்கும்.!"

கலகலவென சிரித்தவள் "நல்லா தத்துவம் பேசுற.." என்றாள்.

"இந்த சிரிப்பை போல ஒரு விசயம் பர்பெக்டா அமையுறது எல்லாம் வரம் பூர்ணி.!" என்றான்‌.

அவனின் தோளில் அடித்தாள்.

"எதுக்கு இவ்வளவு ஐஸ்.. சத்தியமா முடியலடா சாமி.." என்றவள் அவனின் சட்டை பையில் இருந்த போனை எடுத்தாள். முல்லைக்கு அழைத்தாள்.

"அம்மா‌.." ஆரம்பிக்கும்போதே சிணுங்கி இழுத்தாள்.

"அம்முக் குட்டி அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்டா.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டலுக்கு வந்துடுவேன்.!" என்றாள் முல்லை.

"இல்லம்மா வீட்டுக்குதான் நாங்களும் வந்துட்டு இருக்கோம்.." என்றவள் இணைப்பை துண்டித்தாள்.

"பாவம் அம்மா. இரண்டு மாசமா நான் சரியா பேசலன்னு மனசு வாடிப் போய் இருப்பாங்க.." என்று வருந்தினாள்.

வீட்டிற்கு சென்றதும் காரை விட்டு கீழே இறங்க எத்தனித்த பூர்ணிமா பேக்டரி அருகே இருக்கும் சின்ன வீட்டை கண்டதும் பாலாவை திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

டப்பென்று அவன் கன்னத்தில் ஒரு அறையை விட்டாள்.

"இங்கே எதுக்குடா என்னை கூட்டி வந்த?" என்று கோபத்தோடு கேட்டாள்.

பாலாவுக்கு விசயம் விளங்கவே சில நொடிகள் பிடித்தது.

"சாரி பூர்ணி.. இத்தனை நாளா இங்கேயே குடி இருந்ததுல கொஞ்சம் குழம்பிட்டேன்.. வந்தது வந்துட்டோம். நம்ம டிரெஸ்ஸையாவது பேக் பண்ணி எடுத்துட்டு போகலாமே.." என்றான் யோசனையோடு.

"இறங்கி தொலை.." என்றவள் அவன் கதவை திறக்கும் வரை காத்திருந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

அந்த வீட்டின் எந்த மூலையிலும் தன் கால் தடத்தை பார்க்கவில்லை பூர்ணிமா.

பலமில்லாத மனது உள்ளோரைதான் இது போல கெட்ட சக்திகள் ஆக்கிரமிக்கும் என்று சிறு வயதிலிருந்து கேள்விப்பட்டுள்ளாள். தானும் ஒரு பலமில்லாத மனதோடு இருப்பதற்காக தன்னையே திட்டிக் கொண்டாள். அதற்கும் பாலாவைதான் காரணமென்று நினைத்தாள்‌. அவன் சண்டையிடாமல் இருந்திருந்தால் இவன் மீதான ஏக்கம் வந்திருக்காது. அந்த ஏக்கமே பலவீனமாக மாறி இருக்காது என்று நம்பினாள்.

தனது உடமைகளை எடுத்து பெட்டியில் வைத்தாள். புதிதாக வாங்கியிருந்த புடவைகளை வெறுப்போடு பார்த்தவள் 'ஆளையும் அவ டேஸ்டையும் பாரு..' என்று எரிந்து விழுந்தாள்.

"பூர்ணி" பாலாவின் அழைப்பில் திரும்பினாள். மருத்துவமனையில் கழட்டப்பட்ட தாலி செயினை காட்டினான்.

"போட்டு விடட்டுமா?" என்றுக் கேட்டான்.

"இதுக்கு நான் மண்டியிடணுமோ?" இவள் எரிச்சலோடு திருப்பிக் கேட்கவும் அவசரமாக தாலியை அணிவித்தான்.

'இவளுக்கு அந்த பேயே பரவால்லன்னு இனி வரும் காலத்துல எத்தனை முறை நினைக்க போறேனோ தெரியலையே ஆண்டவா.!' மனதுக்குள் புலம்பிக் கொண்டான்.

அவன் தந்த பர்ஸிலிருந்த தனது காதணிகள், வளையல்கள், மெட்டிகள் என்று அனைத்தையும் எடுத்து அணிந்துக் கொண்டாள்.

அதிலிருந்த பிரேஸ்லெட்டை மட்டும் எடுத்து தூர வீசினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நட்புக்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN