நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

Review - என்னுள் மாயம் செய்தாயோ...

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் லட்டூஸ்,


படிக்க ரொம்ப பிடிக்கும் அதை விட விமர்சனம் கொடுக்க ரொம்ப பிடிக்கும்...
விமர்சனம் என்பது சாதரணமா சூப்பர்,அருமை என்றில்லாமல் கதையுடன் நாமும் பயணம் செய்து நமக்கு தோன்றியதை கூறுவது...
அதனாலே எனக்கு விமர்சனம் கூற பிடிக்கும்...


இன்னைக்கு நம்ம ஒரு கதையை பத்தின விமர்சனத்தை பாக்கலாம்....


கதை : என்னுள் மாயம் செய்தாயோ...
ஆசிரியர் : அஸ்வதி


என்னுள் மாயம் செய்தாயோ...
உண்மையில் மாயம் தான் செய்துவிட்டனர் இருவரும்.
நீர்த்திகா இதுவரை நான் கேட்டிராத பெயர்...பெயரே என்னை படிக்கத் தூண்டியது எனலாம்.


இயற்கையோடு ஆரம்பித்த பயணம் இன்னும் அழகு சேர்த்தது கதைக்கு.


அவள் அவனுக்கான வெளிச்சமாய் இருந்ததும் இவன் அவளுக்கான துணையாய் இருந்ததும் இன்னும் அழகு.


உற்ற துணையே வாழ்க்கைத் துணையாய் அமைவது வரம்...
அது கிடைக்கப்பெற்றால் வாழ்க்கை அற்புதமானது.


சில இடங்களில் அவர்களின் நட்பு என்னை பொறாமை கொள்ளவும் செய்தது...
இப்படி ஒரு நட்பு நமக்கு கிடைக்கவில்லையே என்று...


பணம் என்ற நோய் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் ஆசிரியர்...
இன்னும் வடிவு போன்றோர் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
அவர்களாய் திருந்தினால் தான் உண்டு...


நாம் நம் கதாநாயர்களைப் பற்றி காண்போம்...
அவளுக்காக யோசித்த அவளின் தீரன் அவளை மட்டுமல்லாது எங்களையும் கவர்ந்துவிட்டான்.


இடையிடையே வந்த கதாபாத்திரங்களும் அழகாக தங்கள் பணியை செய்து முடித்தனர்.
தொய்வே இல்லாமல் அழகான ஒரு காதல் கதை.
கொஞ்சம் டிவிஸ்ட் செய்து சில இடங்களில் கலங்கடித்து விட்டார்.
தியா செய்யும் அட்டூழியங்கள் அழகு...


கதையிடையே வரும் கவிதைகள் அந்த நிகழ்வை ஒட்டிய கதை மாந்தர்களின் மனதை படிப்பது போலவே இருந்தது அது கதையை இன்னும் மெருகேற்றியது.


இன்னும் அவர்களின் காதல் பயணத்தை தந்திருக்கலாமே என்ற ஏக்கம் எழத்தான் செய்தது முற்றும் பார்த்ததும்...


அழகான, அற்புதமான படைப்பு...


வாழ்த்துகள் ❤
 

Attachments

  • FB_IMG_1595307875149.jpg
    FB_IMG_1595307875149.jpg
    83.2 KB · Views: 11

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Thank you so much for this review akka...kanaellam verkudhuuuuu 😥 idha paakumbodhu.. thank you so much thanks a lot akka.. idha padikum bodhu inum niraya stories bestaa kuduka try pandren..love you so much akka🤩🤩🤩🤩
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top