அத்தியாயம் 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாமதத்துக்கு சாரி மக்களே.. கொஞ்சம் வொர்க்..சற்று நேரத்திற்கு முன்பு..

தன் தோழன் ஒருவனோடு போனில் பேசிக்கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தான் வருண்.

அதே நேரத்தில் மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்தாள் சங்கவி. இவனை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை அவள். ஆனால் அவளின் அழுது வீங்கிய முகம் இவனுக்கு தெளிவாகதான் தெரிந்தது. அவளின் கைகள் இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டுதான் இருந்தன.

"சங்கவி.!" அவளை நிறுத்தினான். எதிரே சென்று நின்றவன் அவளின் பிரச்சனையை கேட்டறிய முயன்றான்.

தரை பார்த்து நின்றிருந்தவள் "எ..எனக்கு வேலை இருக்கு.." என்றாள் அழும் குரலில்.

அவளின் கரகரத்த குரல் சொன்னது ஏதோ தவறு நடந்துள்ளது என்று. அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான்.

அவனிடமிருந்து விலக முயன்றாள் சங்கவி. ஆனால் அவளால் முடியவில்லை. அவளின் இரு கன்னங்களையும் திருப்பி திருப்பி பார்த்தான். ஒருவேளை ஆதீரன் அடித்திருப்பானோ என்றுதான் அவனுக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் கன்னங்களில் எந்த தடயமும் தெரியவில்லை.

நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் அதன் பிறகுதான் எதேச்சையாக அவளின் கழுத்தில் சிவந்து போய் இருந்த இடங்களை கவனித்தான்.

ஏதோ புரிந்தும் புரியாத ஒரு உணர்வு உண்டானது.

அவனின் பார்வையை உணர்ந்துவிட்டாள் சங்கவி. அவசரமாக அவனிடமிருந்து விலகி நின்றாள். தனது கழுத்தை ஒற்றைக் கையால் மறைத்துக் கொண்டாள்.

"வேலை இருக்கு.!" என்று சமையலறை நோக்கி வேகமாக ஓடினாள்.

வருணுக்கு ஆத்திரமாக வந்தது கணவன் மனைவிக்குள் இது போன்ற அடையாளங்கள் தவறில்லை. இது ஒன்றும் பெரிதும் இல்லைதான்.

ஆனால் சங்கவியின் கண்ணீர் அவனுக்கு வேறு கதை சொன்னதே.!

ஆதிரன் வலுக்கட்டாயமாக சங்கவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான் என்பதை புரிந்து கொண்டான்.

அவன் கோபத்திலிருந்த அதே நேரத்தில் மாடியில் இருந்து வேகமாக இறங்கிய காந்திமதி "அடியே பிச்சைக்காரி.!" என்று கத்தி அழைத்தாள்.

சமையல் கட்டிலிருந்து வேகமாக ஓடி வந்தாள் சங்கவி. மாமியாரை கண்டதும் தயங்கி நின்றாள். அருகில் வந்த காந்திமதி சங்கவியின் கன்னத்தில் பளாரென ஒரு அறையை தந்தாள். அதிர்ந்தான் வருண்.

சங்கவியின் தலைமுடியை கொத்தாக பிடித்த காந்திமதி "என்னடி புதுசா திட்டம் போடுறியா.? என் பையனை மயக்க பாக்கறியா.?" எனக் கேட்டபடி அவளை வேகத்தோடு தரையில் தள்ளினாள்.

அவள் தள்ளிய விசையில் அருகே இருந்த சோபாவின் மீது மோதி விழுந்தாள் சங்கவி. மோதியதில் அவளின் தோளில் அடிபட்டுவிட்டது.

தோளை பற்றியபடி எழுந்து நின்றவள் "சாரி மேடம்.. ஆனா நான் எதுவும் பண்ணல.. என்னை நம்புங்க.." என்றாள் கெஞ்சலாக.

"என்கிட்டயே பொய் சொல்றியாடி.?" எனக்கேட்ட காந்திமதி அவளை அறைய கையை ஓங்கிக் கொண்டு வந்தாள். ஆனால் இந்த முறை சுதாரித்து விட்டான் வருண்.

வேகமாக ஓடிவந்து இருவருக்கும் இடையில் நின்றான்.

"ஆன்ட்டி என்ன பண்றிங்க நீங்க.? இவ இந்த வீட்டு மருமக.. உங்களால இவளுக்கு சந்தோசத்தை தர முடியலன்னாலும் குறைந்தபட்சம் கஷ்டத்தையாவது தராம இருங்க.." என்றான்.

நகைத்தாள் காந்திமதி.

"உனக்கு எதுவும் தெரியாது வருண்.. இவ குடும்பமே ஒரு பித்தலாட்ட குடும்பம். இவங்களுக்கு ஏமாத்த மட்டும்தான் தெரியும். இவங்க அக்கா ஆதியை நம்ப வச்சு ஏமாத்தினா. இவளும் நம்பவைக்க முயற்சி பண்றா.. ஆனால் இரண்டு பேருமே ஒரே இரத்தம் தான். இரண்டு பேருக்குமே ஆதியை ஏமாத்துற எண்ணம் மட்டும்தான்.." என்றாள் கோபமாக.

விம்மியபடி நின்றிருந்த சங்கவியை பார்க்கவே பரிதாபமாக இருந்தது வருணுக்கு.

"இதோ பாருடி.. இதுவே உனக்கு லாஸ்ட் வார்னிங்.. இனி ஒருமுறை என் பையனை மயக்கற வேலை வச்சுக்கிட்ட, அப்புறம் நான் உன்னை தொலைச்சி கட்டிடுவேன்.." என்று எச்சரித்த காந்திமதி அங்கிருந்து நகர்ந்தாள்.

சங்கவியின் அருகே வந்த வருண் "அழாதிங்க.. எல்லாம் ஒருநாள் சரியாகிடும்.." என்று சொன்னான்.

சரியாகும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கு நின்று கொண்டிருந்த வேலைக்காரர்கள் இவளை பரிவோடு பார்த்தனர். அவர்களின் கண்களில் இருந்த இரக்கம் இவளை உயிரோடு கொன்றது. தாயும் தந்தையும் தன்னை இந்நிலையில் மட்டும் பார்த்திருந்தால் உயிரையே விட்டிருப்பார்கள் என்று நினைத்தாள். அதன் பிறகுதான் ஏற்கனவே இழந்துவிட்ட தாயைப் பற்றிய நினைவு வந்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என தன்னையே கேட்டுக் கொண்டவள் விழிகளைத் துடைத்துக்கொண்டு தனது வேலையை கவனிக்கச் சென்றாள்.

அவளின் கழுத்தில் இருந்த தடயத்திற்கும் அவளுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இருக்காது என்று அருண் முழுமையாக நம்பினான். அதனாலேயே அவனுக்கு ஆதீரன் மீது அதிகமாக கோபம் வந்தது. அவனைத் தேடிச் சென்றான்.

குளித்துவிட்டு வெளியே வந்த ஆதீரனின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

தடுமாறி நின்றான் அவன். "என்னடா ஆச்சு உனக்கு.?" என கேட்டான் தன் முகத்தை பற்றியபடி.

"உன்னை கொல்லணும் போல இருக்கு.." என சொன்ன வருண் மீண்டும் ஒரு குத்து விட்டான்.

ஆதிரனுக்கும் கோபம் வந்தது. தனது மூக்கை பற்றியவன் மறு கையால் இவனை நோக்கி கையை நீட்டினான். ஆனால் சட்டென்று அவன் கையை மறித்து அவனது காலில் ஒரு உதையை விட்டான் வருண்.

"எல்லாம் உன்னாலதான்.!" என்று கத்தினான்.

அவனின் கோபம் ஆதிக்கு புரியவில்லை.

"என்ன நடந்துச்சின்னு சொல்லித் தொலை.!" எரிச்சலாக கேட்டான்.

"நீ பண்ண தப்புக்கு உங்க அம்மா சங்கவியை அடிச்சிட்டாங்க.."

புரியாமல் பார்த்தாள் ஆதீரன்.

"எங்கம்மா அடிச்சாங்களா.? சங்கவியையா.? ஆனா ஏன்.?" குழப்பமாக கேட்டான் ஆதீரன்.

நடந்ததை விளக்கமாக சொல்லாமல் வருண்.

ஆதீரனுக்கு அம்மாவின் செயல் கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனாலும் அம்மா தன் மீதிருக்கும் அன்பினால்தான் அப்படி செய்கிறாள் என்று நினைத்தான் அவன்.

"நான் அம்மாகிட்ட பேசுறேன்.." என்றான் ஆதீரன்.

"தப்பு உங்கிட்டதான் முக்கியமா இருக்கு.!" என்று முறைத்த வருணை புரியாமல் பார்த்தான் ஆதீரன்.

"ஒரு பொண்ணை விருப்பமில்லாமல் தொடுவது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.?" என்றவனை சந்தேகமாக பார்த்தான் ஆதீரன்.

"இதை உனக்கு அவ சொன்னாளா?" எனக் கோபமாக கேட்டான்.

"அவ என்ன சொல்றது.? நீ பண்ண லட்சணம்தான் அவளை பார்க்கற எல்லாருக்குமே தெரியுமே.?" என்றான். "நீ ஆரம்பத்துலயிருந்து செஞ்ச எல்லாமே தப்பு தான் ஆதி. உன் காதலி உன்னை விட்டு போனதுக்காக அநியாயமா ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு இருக்க.. தயவு செஞ்சு அவளை விட்டுடு.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

அடிபட்ட முகத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டான் ஆதீ. ஆத்திரமாக வந்தது. வருண் மேல் அல்ல‌. சங்கவியின் மீது வந்தது.

அதேசமயம் வருணின் கோபத்தை மேலும் தூண்டிவிட வேண்டும் என்று தோன்றியது. அடித்த அவனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் உருவானது.

தனக்குள் சிரித்தபடியே தயாராகி கீழே நடந்தான்.

"சங்கவி." என்று அழைத்தான். சமையல் கட்டிலிருந்து ஓடிவந்தாள் அவள்.

அவளை தலை முதல் கால்வரை பார்த்தான். அவளின் கழுத்தில் இருந்த தடயங்களை கண்டு குற்ற உணர்வாக இருந்தது. ஆனால் சோபாவில் அமர்ந்தபடி தன்னை முறைத்துக் கொண்டிருந்த அருணை காண்கையில் வெறியாக வந்தது.

"நீ உன் அப்பாவை பார்க்க போகணும்ன்னு கேட்ட இல்ல?" சங்கவியை பார்த்து கேட்டான் ஆதீரன்.

தயக்கத்தோடு ஆமென்று தலையசைத்தாள் அவள்.

"சாப்பிட்டுட்டு கிளம்பு.. நான் உன்னை கூட்டிப் போய் விடுறேன்.." என்றான்.

அவனின் திடீர் அக்கறையும், அவனது குரலில் இருந்த கனிவும் அவளுக்கு பயத்தைத் தந்தது. ஆனால் அவளால் மறுத்துப் பேச முடியவில்லை. தரையை பார்த்த வண்ணமே "சரி" என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

"குட் கேர்ள்.." என்று அவளின் கன்னம் தட்டினான். அவனின் தீண்டுதலில் தடுமாறிப் போனாள் அவள்.

ஆதீரன் வேண்டுமென்றே செய்வது போல தோன்றியது வருணுக்கு. வருணின் அருகில் அமர்ந்திருந்த காந்திமதிக்கும் வயிறு நெருப்பாக எரிந்தது.

ஆதீரனுக்கு உணவை பரிமாறினாள் சங்கவி. அவளை நிமிர்ந்து பார்த்தவன் "நான் சொன்னது உனக்கு புரியலையா.? சீக்கிரம் ரெடியாகி வா.!" என்றான்.

தன்னைத் தானே பார்த்துக் கொண்டாள் சங்கவி. "நான் ரெடியாகிதான் இருக்கேன்.!" என்றாள் மெதுவாக.

வேலைக்காரியின் புடவையில் இருந்தவளை மேலும் கீழுமாக பார்த்தவன் தன் அம்மாவின் புறம் திரும்பினான்.

'இவளோட சேலைகளை கொடுக்க அம்மாவுக்கு என்ன கஷ்டம்.?' என நினைத்தவன் அதை வாய்விட்டு கேட்காமல் அமைதியாகி கொண்டான்.

ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு எழுந்தவன் 'சரி வா என்று அவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

ஆனால் அவள் இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை. அது அவனுக்கு தேவையுமில்லை. வழக்கம்போல கொண்டு வந்த காரில் தள்ளினான். அவசரமாக சீட் பெல்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டாள் சங்கவி.

அவளை கேலியாக பார்த்தபடியே காரை இயங்கினான். இடுப்பில் முடிந்து வைத்திருந்த பணம் வீட்டிற்கு திரும்பி வர போதும் என்று எண்ணிக் கொண்டவள் அப்பாவை எப்போது பார்ப்போம் என்று இப்போதே ஆவலானாள்.

வருணுக்கு என்னவோ உறுத்தியது. ஆதீரன் அவ்வளவு சீக்கிரத்தில் எந்த விசயத்தையும் விட்டு விடுபவன் அல்ல. சங்கவியை கொண்டுச் சென்று விபத்தில் ஏதும் சிக்க வைக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

மருத்துவமனையின் வாசலில் கார் நின்றதும் அவசரமாக இறங்கி ஓடினாள் சங்கவி. "

அவங்க அப்பாவுக்குதான் ஆபரேசன் முடிஞ்சு போச்சி இல்ல? அப்புறம் ஏன் இவ இப்படி ஓடுறா.?" என்று சிரிப்போடு கேட்டவன் அங்கேயே அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

சங்கவி தன் அப்பாவின் அருகில் அமர்ந்தாள். மெஷின்களில் உதவியோடு உயிரோடு இருந்தார் அவர். அழுகையாக வந்தது அவளுக்கு. அவரின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள். "எப்படியாவது எழுந்து வந்துடுங்க அப்பா.." என்று கெஞ்சினாள். அப்பா கண்விழித்து பார்க்க மாட்டாரா என்று ஏங்கினாள்.

அவளின் அப்பாவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் மருத்துவரின் வாயால் அதை கேட்டு அறிந்து கொண்ட பிறகே அங்கிருந்து கிளம்பினாள் சங்கவி.

அவள் அந்த மருத்துவமனைக்குள் புகுந்து முக்கால் மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. கால் மணி நேரத்திற்குள் வீட்டிற்குச் சென்று விடலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டு நடந்தவள் ஆதீரனின் வாகனம் அங்கேயே நிற்பது கண்டு ஆச்சரியப்பட்டாள். இவன் ஏன் இன்னும் செல்லாமல் இருக்கிறான் என்று குழம்பியவள் சந்தேகத்துடன் காரின் அருகே வந்தாள்.

காரின் கண்ணாடியை இறக்கி விட்டான் ஆதீரன். அவளுக்காக மறுபக்க கதவை திறந்துவிட்டான். "வந்து உட்காரு.." என்றான்.

தயக்கத்தோடு காரில் ஏறினாள் சங்கவி.

"சீட் பெல்ட்.." என்றவன் காரை வளைத்து ஓட்டினான்.

கார் வீடு நோக்கி செல்வதை பார்த்தவள் "நீங்க இன்னைக்கு வேலைக்கு போகலையா.?" என்றுக் கேட்டாள்.

நாக்கை சுழித்தபடி அவளை பார்த்தவன் "இந்த கேள்வி உனக்கு அவசியமா.?" என கேட்டான். தன்னையே கொட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

"சாரி.." என்றாள் அவசரமாக.

வீட்டின் முன்னால் வந்து நிற்கும்வரை காரில் மௌனம் மட்டுமே நிலவியிருந்தது. அவன் வீட்டிற்குள் நுழையாமல் சாலையிலேயே நிற்பதைக் கண்டவள் தன்னை இறக்கி விட்டுவிட்டு வேலைக்கு செல்வான் போல என எண்ணினாள்.

காரிலிருந்து இறங்க நினைத்து சீட் பெல்ட்டை கழட்ட முயன்றாள். ஆனால் அவளின் கைகளிரண்டையும் ஒன்றாக சேர்த்து பிடித்த ஆதீரன் சட்டென்று அவளின் உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான்.

தன்னை கேள்வி கேட்கும் உரிமை வருணுக்கு இல்லை என்பதைக் காட்ட நினைத்தவன் அதற்கு ஆதாரமாக சங்கவியை மாற்ற நினைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN