நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...04

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff memberகாற்றுக்கென்ன வேலி...04

அந்திமாலை வானம் இருட்டினை கொடுத்து கொண்டு வர மழை பெய்வதற்காக மேக மூட்டங்கள் இருட்டடைந்து கொண்டு இருந்தது..


இங்கு நிலாவோ அமைதியாக அவனது இருக்கையில் தலையில் கை வைத்தவாறு அமர்ந்து கொண்டு இருக்க அவளை கண்ட மணி " ஏன் டி இப்படி உக்காந்துட்டு இருக்க வீட்டுக்கு கிளம்பளையா நிலா " என்றபடி காலையில் அவளிடம் வாங்கிச் சென்ற டிஃபன் பாக்ஸை கொடுக்க வந்தாள்..


" இதோ கிளம்ப போறேன் டி அதுக்கு முன்னாடி ஹெச்சோடி சார பாக்க போகனும் அதான் இங்க உட்காந்துட்டு இருக்கேன் " என்றாள் விட்டேத்தியாக


" அடியே நீயெல்லாம் எப்படி அசிஸ்டன்ட் ப்ரோஃபசர் ஆனா உனக்கெல்லாம் எந்த மடையன் வேலை போட்டு குடுத்துச்சி " என்று அவளின் பதிலில் அவளை கலாய்க்க


" உனக்கு எந்த மடையன் வேல போட்டு கொடுத்துச்சோ அதே மடையன் தான் எனக்கும் வேலை போட்டு கொடுத்தான் " என்று கடு கடுத்தாள் நிலா .


" இப்போ எதுக்கு உனக்கு இந்த டவுட் " என்று நிலா அவளை கேள்வியாய் நோக்க


" விச்சு சாச்சாவ பாக்கனும்னா நீ அவரோட ரூம் முன்னாடி வெயிட் பண்ணனும்.அது என்ன இங்க உன்னோட ப்ளேஸ்ல வெயிட் பண்றது . இது தான் நீ சாச்சாவுக்கு கொடுக்கிற மரியாதையா டி .அவரு இப்போ நம்மளோட ஹெச்சோடி சோ மேடம் நீங்க தான் அங்க போய் வெயிட் பண்ணனும் அவரு உன்ன தேடி வர மாட்டாரு " என்றாள் மணிமேகலை.


" பச்ச் அது எனக்கும் தெரியும் டி எருமை ஹெச்சோடிக்கு எல்லாம் மீட்டிங்ன்னு சார் பொயிருக்காரு அதான் இங்க உட்காந்துருக்கேன் "என்றாள்..


" சரி சீக்கிரமா பாத்துட்டு வா நான் கிளம்புறேன் இன்னைக்கு வேற எங்க மம்மி சிக்கன் வாங்கிட்டு வர சொன்னாங்க வாங்கிட்டு சீக்கிரமா போலைன்னா என்னையவே சமைக்க விட்டுருவாங்க அதுனால நான் கிளம்புறேன் " என்று விட்டு வெளியே சென்றாள்.


போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிலா எந்திரித்து அவனது அறைக்கு முன்பு சென்று நிற்பதும் மீண்டும் தன் இடத்திற்கே வரவும் என நடை பயிற்சி பயின்று கொண்டிருந்தாள்..


அவள் முதல் முறை கதவு அருகே வந்ததை கவனித்து விட்டான் விஷ்வேந்தர் . ஆனாலும் அமைதியாக இருந்தான் அவளே கதவை திறந்து வரட்டும் என்று ஆனால் நொடிகள் நிமிடங்களாக கடந்ததே தவிர அவள் வர மாதிரி தெரியவில்லை.


அதனால் அவனே கதவை திறந்து உள்ளே அழைத்து வரலாம் என்று முடிவெடுத்து கதவருகே சென்றான்.


கதவருகே வந்தவன் கதவை திறக்க அதேநேரத்தில் நிலாவும் கதவை திறந்ததால் பேலன்ஸ் மிஸ்ஸாகி இருவரும் கீழே விழுந்தனர்.


வீழுந்த வேகத்தில் விஷ்வா கீழேயும் அவளின் உடல் முழுவதும் அவனின் மீதும் இருந்தது...


விஷ்வா அவளை கீழே அவள் மேல் நூல் அளவு இடைவேளி விட்டு படர்ந்திருந்தான்.


நிலாவிற்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. அவளால் ஒழுங்காக மூச்சு கூட விட முடியவில்லை. ஆனாலும் அவன் விழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்..


" மொழி " என்று விஷ்வா மெல்லிய குரலில் அழைக்க


நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.


" மொழி " என்று மீண்டும் அழைக்க அதில் சுயநினைவு பெற்ற நிலா அவனை தள்ளி விட்டு எழுந்து நின்றாள்..


" இப்ப எதுக்கு டி என்ன தள்ளி விட்ட " என்று எழுந்த நின்ற படி விஷ்வா கேட்க


" இங்க பாருங்க சார் மொதல எதுக்கு கூப்பிட்டிங்கன்னு சொல்லுங்க " என்று அவனிடமிருந்து சிறிது தள்ளி நின்றாள்..


" இங்க பாரு மொழி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் " என்று பக்கத்தில் வர


" சார் மொழின்னு யாரும் கூப்பிட தேவை இல்லை கால் மீ யாழ் சார் " என்று சிறிது பின் தள்ளி நின்று கூற


" எனக்கு நீ எப்போதுமே மொழி தான் சரியா நான் உன்ன விட்டுட்டு பொயிருக்க கூடாது தான் அதுக்கு போய் எதுக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை கொடுக்கிற " என்க


" சார்! நீங்க என்ன பேசுறீங்க எனக்கு உங்கள இதுக்கு முன்னாடி தெரியவே தெரியாது நான் உங்கள பார்த்தது கூட அப்படி இருக்கும்போது விட்டுட்டு பொயிருக்க கூடாது அது இதுன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது " என்றாள் நிலா அவன் பேசியது புரியாமல்...


" மொழி " என்று கோபத்தில் கத்த


" யாழ்மொழி " என்று திருத்தி சொன்னாள்..


" எதுக்கு கூப்பிட்டிங்க சார் எனக்கு லேட்டாகுது வீட்ல பாட்டி தனியா இருக்காங்க " என்று கடிகாரத்தை பார்த்த படி கேட்க


" நாம கல்யாணம் பண்ணிக்கிலாமா மொழி " என்றான் பட்டென்று..


இவனின் பதிலில் நிலா உறைந்தே போய்விட்டாள். அதுவும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் அவன் இப்படி கேட்டதை நினைத்து கூனி குறுகி போய் நின்றாள்..


அவனின் கேள்வியில் அப்படியே கீழே அமர்ந்து விட்டாள்.


" மொழி " என்று பயந்து அவளின் பக்கத்தில் செல்ல


" அங்கேயே நில்லுங்க சார் ப்ளிஸ் பொண்ணுன்னா உங்களுக்கு எப்படி இருக்கு அவளுக்குன்னு ஒரு மனசு இருக்காதா எந்த தைரியத்துல நீங்க என்ன பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டீங்க " என்று கோபத்தில் கத்த


" மொழி அமைதியா இரு நான் ஒன்னும் தப்பா ஏதும் கேக்கலகல கல்யாணம் பண்ணிக்கிலாமான்னு தான் கேட்டேன் " என்று அவளின் தோலினை பற்றி கூறினான்..


" என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது அந்த வார்த்தைய சொல்லிகிட்டு திரும்ப என் கண்ணு முன்னாடி வராதீங்க " என்றவளின் கண்ணில் அவள் பட்ட வேதனைகள் தெரிய , நிலாவுக்கு அனைத்தும் ஞாபகத்துக்கு வர பித்து புடித்தவள் போல் " வராதீங்க வராதீங்க ப்ளிஸ் வராதீங்க " என்று கைகளை ஆட்டியவாறு கெஞ்சினாள்.


" மொழி மொழி உன்ன யாரும் ஒன்னும் பண்ணல டா பயப்புடாத " என்று நிலாவை சமாதானம் படுத்த முயன்றான் விஷ்வேந்தர்.


" வராதீங்க என்னால முடியாது வராதீங்க " என்று விஷ்வாவை தள்ளி விட்டு ஓட முற்பட


கீழே விழுந்த விஷ்வா வேகமாக அவளிடம் சென்று அவளின் செயலை கண்டு ஓங்கி அறைந்தான்.


கையில் வைத்திருந்த கண்ணாடி குவளை கீழே விழந்தது.


அறைந்த வேகத்திலேயே அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தினான்..


இதனை இரு ஜோடி கண்கள் பார்த்தது. அதில் ஒரு ஜோடி கண்கள் குரோதத்துடன் பார்த்து விட்டு மறைந்தது. மற்றொரு ஜோடி கண்கள் சிரித்து விட்டு சென்றது..


" ஒன்னும் இல்ல மொழி மா உனக்கு எதுவும் இல்லை இப்படி பயப்புடாத " என்று அவளின் முதுகை தட்டி கொடுத்தவாறே சொன்னான்..


அவனின் அந்த அணைப்பு அவளுக்கு பாதுகாப்பு உணர்வை தொடுக்க அவளுக்கு அது பலத்தையும் தந்தது. அவனை விட்டு விலகி நின்றவள் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்...


வீட்டிற்கு போக பிடிக்காமல் நிலா அவள் வீட்டிற்க்கு பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்றாள்..


மணிமேகலை சிக்கன் வாங்கிட்டு வர சிறிது தாமதமானதால் அவளது அன்னை பார்வதி " ஏன் டி இன்னைக்கு லேட்டு " என்று கேட்க


" அம்மா சிக்கன் வாங்கிட்டு வர லேட்டாயிடுச்சி மா" என்றவள் "இந்தா பிடி மா எனக்கு இன்னைக்கு பட்டர் சிக்கன் செஞ்சி கொடு மா " என்று அவளது அறைக்குள் செல்ல


" நில்லு டி உனக்கு என்ன வேணுமோ அத இப்ப நீயே பண்ணிக்கோ . எனக்கு இப்போ டைம் இல்ல நான் போய் சீரியல் பாக்கணும் " என்று அவள் கொடுத்த கவரை அவளிடமே கொடுத்து விட்டு டிவி பார்க்க சென்றுவிட்டார்.


அவரையே முறைத்து பார்க்க " என்னடி முறைப்பு ஒழுங்கா செய்றியா இல்ல நைட்டுக்கு திரும்பவும் உப்புமா செஞ்சி போடவா " என்று அதட்ட


" அய்யோ அம்மா நீ சீரியல் பாரு மா நானே இன்னைக்கு சமைக்கிறேன் " என்றாள் கை எடுத்து கும்பிட்டு விட்டு....


சிக்கனை வைத்தவள் அவளது அறைக்கு சென்று ரெஃப்ரெஷ் ஆகி வந்தாள்..


பின் சமையலறைக்கு சென்று சமைக்க தொடங்கினாள். சமையல் வேலை பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க நடு நடுவில் தன் அன்னையை திட்டுவதையும் மறக்க வில்லை.


" அங்க என்ன டி சத்தம் " என்று பார்வதி ஹாலில் இருந்து கத்த


" சும்மா பாட்டு தான் மா பாடிட்டு இருக்கேன் " என்றாள்..


அப்போது அவளது அன்னை யாரையோ வா டா என்று அழைக்கிற குரல் வர


" அய்யோ ராமா இந்த நேரம் பாத்து வந்து தொலைஞ்சாங்களோ இன்னைக்கு புல்லா சமையல் கட்டு தான் போல மணி " என்று புலம்பிக் கொண்டு இருக்க


" எதுக்கு இப்படி சமையல் வேலை எல்லாம் பாத்துட்டு யார கொல்ல பாக்குற டி " என்ற குரல் வர


அந்த குரலை கேட்டதும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தியவள் குரல் வந்த திசையை பார்க்க அங்கே சிரித்த முகத்துடன் சக்தி நின்றிருந்தான்.


சக்தியை கண்டவள் அப்படியே நிற்க " என்ன ஆச்சி பெல் என்ன பாத்து அப்படியே நிக்கிற " என்க


" உன்ன பாத்த ஷாக்கா தான் இருக்கும் " என்றபடி உள்ளே வந்தான் விஷ்வேந்தர்.


" அப்படியா பெல் " என்று கேட்டு கண்ணடிக்க கையில் வைத்திருந்த கரண்டியை கொண்டு அடிக்கத் தொடங்கினாள்..


" அடிக்காத பெல் வலிக்குது " என்று ஓட்டமெடுக்க


" நில்லு டா எங்க ஓடுற " என்று அவன் பின்னே மணி துரத்த


" ஆல் வழந்தாலும் இந்த அடிய விடமாட்டேங்கிறீங்களே டி " என்று பார்வதி பின்னே ஒழிந்து கொண்டான்..


" ஏன் டி இப்படி தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய அடிக்கிற " என்று பார்வதி கேட்க


"அம்மா இவனெல்லாம் எதுக்கு மா வீட்டுக்குள்ள விட்டீங்க . நட்பு நட்புன்னு மட்டும் சொல்லிட்டு சுத்துன்னா பத்தாது எங்கள பார்க்கவும் வந்துருக்கனும் சரியா இப்படி இவ்வளோ வருஷம் கழிச்சு நட்புன்னு சொல்லிகிட்டு இங்க வந்துருக்க " என்று கோபமாக கத்தினாள் மணி..


அவளை சமாதானம் படுத்த பெரிதும் உழைத்தான் சக்திதரன். இதனை எல்லாம் சிரித்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.மொழியும் இங்கிருந்தாள் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும் என அவன் மனம் ஏங்கியது..


பின்பு மணிமேகலையின் சமையலில் இரவு உணவை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றனர்...


நிலாவும் சிறிது நேரம் பூங்காவில் இருந்து தன்னை மீட்டெடுத்தவள் கிளம்பி வீட்டிற்கு சென்றாள்...


இரவு உணவை உணவகத்தில் இருந்து வாங்கி வந்து இருவரும் அதை சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்.


நிலா மட்டும் அவளது அறையில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தாள்.


இங்கே வீட்டிற்கு வந்த விஷ்வேந்தர் அவனது அறையில் படுத்திருக்க அவனுக்கு இன்று பயந்த முகத்தோடு இருந்த நிலாவே நினைவில் ஓடிக் கொண்டிருந்தாள்.


அவனுக்கு அவளின் சிறுவயது சிரித்த முகமே ஞாபகம் வந்தது...


தொடரும்..

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN