மணி ஒன்பதை தாண்டி விட்டிருந்தது. அம்ருதா பாலாஜிக்கு கைபேசியில் அழைத்து சலித்துப் போனாள். இதுவரை நூறு முறையாவது அழைத்திருப்பாள். அவன் அழைப்பேற்கவே இல்லை.
"இவனுக்கு என்னதான் வந்ததோ? அந்த சைக்கோ இவனை அத்தனை முறை அடிச்சி மூஞ்சியை உடைச்சி வச்சான். கை காலை உடைச்சி வச்சான். அப்பவும் வெட்கமே இல்லாம அவனுக்கேதான் சப்போர்ட் பண்ணிட்டு திரியறான். பைத்தியம் பிடிச்சிருக்கு இவனுக்கும்.." என்று கைபேசியின் திரை பார்த்து திட்டினாள்.
அழுது சிவந்த கண்கள் நெருப்பாக எரிந்தது. பைக்கை செலுத்தவே முடியவில்லை. ஆனாலும் எப்படியோ வீடு வரை வந்து சேர்ந்து விட்டான் வெற்றி.
பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நடந்தான்.
அப்பா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.
ஹாலின் சோபாவில் அமர்ந்து தேனீரை அருந்திக் கொண்டிருந்த பாலாஜி இவனை கண்டதும் தேனீர் கோப்பையை வைத்து விட்டு எழுந்து வந்தான்.
"வெற்றி.."
வெற்றி பற்களை கடித்தான்.
"மரியாதையா வெளியே போ.." கர்ஜித்தான்.
"அவ அப்படி செஞ்சதுக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல.."
கண்களை மூடியபடி நெற்றியை பிடித்தான் வெற்றி. கழுத்தில் இருந்த சங்கிலி அவனின் நெஞ்சோடு உரசிக் கொண்டிருந்தது.
"உன்கிட்ட கெஞ்சி கேட்கறேன். இங்கிருந்து போ.."
அப்பா சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.
"சாப்பிட்டு போகட்டும்டா. உன்னால ஒரு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கான்.."
நிமிர்ந்து தந்தையை பார்த்தான்.
"ஓகே.." என்றவன் திரும்பினான். வெளியே நடந்தான்.
அப்பா பெருமூச்சு விட்டார். தனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டகாலம் என்று நினைத்தார்.
பாலாஜி ஓடி சென்று வெற்றியின் கைப்பிடித்து நிறுத்தினான்.
"நான் இனி வர மாட்டேன். ஆனா புரிஞ்சிக்க.. அவ இப்படி செஞ்சதுக்கும்.."
அவன் மேலே பேசும் கை காட்டி நிறுத்தினான்.
"அவளை பத்தி நீ பேசாதே. அனாவசியமா எதுவும் என்கிட்ட பேசாதே.. சாப்பிட வந்தா போய் சாப்பிடு. என்னை ஏன் நிறுத்தி வைக்கற?" என்றவன் அவனின் கையை உதறிவிட்டு வெளியே நடந்தான்.
"வெற்றி ப்ளீஸ்.."
வெற்றி பதில் பேசவில்லை. கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் கதவோரம் இருந்த செருப்பு ஸ்டேன்டை கீழே தள்ளி விட்டான். ஷுக்களும், செருப்புகளும் பல திசைகளில் பறந்தன. பாலாஜியின் முட்டியிலும் ஒன்று வந்து மோதியது.
"என்னை கூப்பிடாத.. என்னோடு பேசாத. என் வீட்டுக்கு வராத." என்றவன் கடைசி சொல்லை மட்டும் ஒலி குறைத்துச் சொன்னான்.
பாலாஜி சாயம் போன முகத்தோடு அவனை பார்த்து நின்றான்.
"சாரி.." அவன் சொல்லியது தன் காதில் விழும் முன்பே வெளியேறி பைக்கில் ஏறி விட்டான் வெற்றி.
எங்கே செல்வது என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சுடுகாட்டிலேயே கூட இரவு முழுக்க தங்கி விட்டு வந்திருப்பான்.
"அவன் சாப்பாடு சாப்பிடணுமாம்.." பற்களை கடித்தான்.
வீட்டை விட்டு அரை கிலோமீட்டர் தாண்டி இருப்பான். கீர்த்தனா அழைத்தாள்.
பைக்கை ஓரம் கட்டி விட்டு எடுத்துப் பேசினான்.
"தாத்தா உன்னை வர சொல்லி இருக்காரு.."
"நான்தான் அப்புறமா வரேன்னு சொன்னேனே.." சலிப்போடு கேட்டான் இவன்.
"இன்னைக்கு ஒருநாளைக்கும் இந்த வீட்டுக்கு வந்து தங்கிக்கோ.."
பற்களை கடித்தபடி அமைதியை கட்டுப்படுத்த முயன்றான்.
"அவன்தான் போன் பண்ணி நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்னு சொன்னானா?"
மறுமுனையில் அமைதியாக இருந்தாள் கீர்த்தனா.
"கீது.. எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்னால அங்கே வர முடியாது. ஐ லாஸ்ட் மை கன்ட்ரோல். அங்கே வந்தா ஏதாவது பண்ணிடுவேன். என்னால நீங்க ஏற்கனவே நிறைய கஷ்டப்படுறிங்க.. அது இன்னும் அதிகமாக வேணாம். இன்னைக்கு ஒரு நாளைக்கும் என்னை விட்டுடுங்க.." என்றவன் யோசனை வந்தவனாக "தயவுசெஞ்சி அவன்கிட்ட சொல்லு, இனி எப்பவும் என்கிட்ட வந்து பேச வேண்டாம்ன்னு.. இல்லன்னா சத்தியமா நான் அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்.." என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.
போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு முகத்தை தேய்த்தான். இந்த ஒரு இரவு மட்டும் இருளாகாமல் விடிந்து விட்டால் நன்றாக இருக்குமென்று தோன்றியது.
விளக்கொளியில் நகரமே பளிச்சென்று இருந்தது. இருளை மனம் முழுக்க சுமந்தபடி பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான் வெற்றி.
விடாத ரீங்காரமாய் அம்ருதாவின் குற்றச்சாட்டு வேறு காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
போனை எடுத்தவன் நண்பனுக்கு அழைத்தான். "முத்து.. நான் உன் வீட்டுல இன்னைக்கு நைட் ஸ்டே பண்ணிக்கலாமா?" என்றுக் கேட்டான்.
"வாடா.. இதுக்கெல்லாம் கேட்டுட்டு இருக்க.. இந்த பேச்சிலர் பாயோட ரூம் உனக்காக எப்பவும் காத்துட்டு இருக்கும்.." என்றவன் "அப்புறம் மறக்காம சாப்பிட்டுட்டு வந்துடு. நான் எனக்கு மட்டும்தான் சமைச்சேன். அதுவும் இப்ப காலி.." என்றான் ஏப்பம் விட்டபடி.
நண்பனின் வீடு நோக்கி பைக்கை திருப்பினான் வெற்றி.
அம்ருதா மணி பதினொன்றாகியும் உறங்காமல் அமர்ந்திருந்தாள். பாலாஜி உண்மையிலேயே கோபித்துக் கொண்டானா என்று தெரியவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தாள். ரிங் ஆனதே தவிர பதில் இல்லாமல் போய் விட்டது. பொறுத்து பார்த்தவள் உடையை மாற்றிக் கொண்டு வெளியே கிளம்பினாள்.
வீடு நிசப்தமாக இருந்தது. சத்தமில்லாமல் வெளியே வந்தாள். காரை கிளப்பியவள் பாலாஜியின் வீடு நோக்கி புறப்பட்டாள்.
அப்போதுதான் தனது வீட்டிற்கு வந்து சேர்த்திருந்தான் பாலாஜி. அது ஒரு சிறிய வீடு. குடும்பத்தார் எவ்வளவோ திட்டி பார்த்து விட்டார்கள். வீட்டோடு இணையாமல் தனியாய் இருந்தான்.
சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டினான். அருகே இருந்த கண்ணாடியை பார்த்தான். பனியன் அணிந்திருந்தவனின் மேல் நெஞ்சிலும் கையிலும் இருந்த காயங்களின் வடு தெரிந்தது.
கையிலிருந்த பன்னிரெண்டு தையலுக்கே குழந்தையை கலைத்த தோழி இந்த உடம்பில் இருக்கும் ஒட்டுமொத்த தழும்புகளையும் கண்டால் வெற்றியை கொன்று விடுவாளோ என்று கூட தோன்றியது.
பனியனையும் கழட்டி வீசினான். வயிற்றில் இரண்டு இடங்களில் தையல் போட்ட தடம் இருந்தது. நெஞ்சில் மட்டுமே ஏழெட்டு தழும்புகள். அது என்னவோ எப்போதும் நெஞ்சில்தான் காயப்படுத்த வேண்டும் வெற்றிக்கு. அப்போதும் கூட ஆத்திரம் தீருவதே இல்லைதான்.
கண்ணாடியை கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தவன் தலையை பற்றினான். காயம்பட்டதையும், காயத்தின் காரணமான வெற்றியையும் பற்றி அம்ருதாவிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. வேண்டுமென்று சொல்லவில்லை. ஒரு மாதமாய் ஏன் வேலைக்கு வரவில்லை என்று அவள் தினமும் கேள்வி கேட்டு தொல்லை செய்ததால் உளறி விட்டான். நொடி நேரம் தவறி விட்டான். அவள் எடுக்கும் முடிவு பற்றி தெரியாமல் சொல்லி விட்டான்.
அவள் காதலையும், குழந்தையையும் அழிக்க காரணம் தான்தான் என்று தெரிந்தால் வெற்றி மறுபடி என்ன செய்வானோ என்று கலக்கமாக இருந்தது.
வயிறு நிறைந்திருந்தது. தூங்கலாம் என நினைத்து படுக்கையறை நோக்கி அடியெடுத்து வைத்தவன் கதவு தட்டப்படும் சத்தத்தில் நின்றான். இந்த நேரத்தில் யாரென்று குழப்பம் வந்தது. வெற்றியாய் மட்டும் இருக்க கூடாது என்று வேண்டிக் கொண்டான். மருத்துவமனை விட்டு வெளியே வந்த ஒரு சில நாளிலேயே திரும்பி செல்ல ஆசையில்லை அவனுக்கு.
கதவை திறந்தான். கீர்த்தனா தலை குனிந்தபடி நின்றிருந்தாள். அவள் நின்றிருந்த தோரணை கண்டு இதழ் விரிந்தது அவனுக்கு.
"என் கையில் எந்த தாலியும் இல்ல.."
திகைத்து நிமிர்ந்து பார்த்தாள். குழப்பம் அவளின் விழிகளில் சூழ்ந்திருந்தது.
"வெட்கப்பட்டு தலைகுனிஞ்சி இருந்தியே.. அதான் சொன்னேன்.."
வெட்கத்தில் சிவந்த கன்னங்களோடு மீண்டும் தரை பார்த்தாள்.
கடிகாரத்தை ஒருமுறை திரும்பி பார்த்தவன் "இந்த டைம்க்கு வந்திருக்க.?" என்றான் சந்தேகத்தோடு.
வாசலில் நின்றிருந்த அவளின் ஸ்கூட்டி அவள் தனியாய் வந்ததாக சேதி சொன்னது.
"சாரி. நான் நேத்தே வரணும்ன்னு நினைச்சேன்."
அவளின் விழியை மறைத்த கூந்தலை ஓரம் ஒதுக்கி விட்டான். அவன் விரல் தீண்டியதில் சிலிர்த்தாள். மேலும் சிவந்தது கன்னங்கள்.
"குளிருல ஏன் நிக்கற?" என்றான் சுற்றும் முற்றும் பார்த்து. அவனுக்கே குளிர் தாக்கிக் கொண்டுதான் இருந்தது.
"நீதான் வாசல்படியை மறிச்சி நிக்கற.." அவள் நிமிராமல் சொல்லவும் சிரித்தபடியே அவளுக்கு வழி விட்டு நின்றான்.
கதவை தாழிட்டு விட்டு வந்தவன் அவள் சமையலறை நோக்கி செல்வதை கண்டு விட்டு "ஆல் த பெஸ்ட்.." என்றான்.
திரும்பியவள் குழப்பமாக இவனை பார்த்தாள். அவனின் கண்களை விட்டு ஒரு சென்டி மீட்டர் கூட பார்வையை கீழிறக்கி விட கூடாது என்று வைராக்கியமாக இருந்தாள்.
"எதுக்கு?"
"மாப்பிள்ளை பிக்ஸ் பண்ணிட்டதுக்கு.."
கீர்த்தனாவின் முகம் பேயறைந்தார் போல் ஆகிவிட்டது.
"இல்ல.. நான்.. அது.." தன் பக்க நியாயத்தை சொல்ல தயங்கினாள். எப்படியொரு சூழ்நிலையிலும் வந்திருக்க கூடாத வார்த்தைகள்தான் அவை.
"உனக்கு வெற்றி ரொம்ப பொருத்தமா இருப்பான்.."
இதயம் வலித்தது அவளுக்கு. அவனின் முகத்தில் எந்த ஏமாற்றமும் இல்லாதது இன்னும் அதிகமாக வலித்தது.
கலங்கும் விழிகளை மறைத்தபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.
"மா.. மாத்திரை சாப்பிட்டியா.?"
"ம்ம்.."
அவனின் முகம் பார்க்க முடியவில்லை அவளால். பிரிட்ஜை திறந்து தண்ணீரை எடுத்தாள். குடிக்க முடியவில்லை. மனதின் பாரம் அந்த அளவிற்கு தாக்கியது.
கண்களை மூடியபடி நெஞ்சத்தின் பாரத்தை விரட்ட முயன்றாள்.
"நான் சத்தியமா மீன் பண்ணி சொல்லல.." என்றபடி திரும்பியவள் தன் முன்னால் நின்றிருந்தவனை கண்டு மிடறு விழுங்கினாள். நெருக்கத்தில் இருந்தான். மிகவும் நெருக்கத்தில்.
அவனின் விழிகளை சில நொடிகள் பார்த்தவளுக்கு கண்கள் இரண்டும் தானாய் கலங்கியது.
"நீ மீன் பண்ணாலும் பண்ணலன்னாலும் என்ன போச்சி.? எனக்கும் அதுக்கும் சம்பந்தம் உண்டா.? இது உன் லைஃப். நான் யார் சம்மதம் கேட்க?" உணர்ச்சிகளை மறைக்க முயன்றான். ஆனால் குரலில் வருத்தமும், ஏமாற்றமும் கலந்து விட்டது.
உள் உதட்டை கடித்தாள் கீர்த்தனா.
"ரைட்.? உனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?" என கேட்டவள் மீண்டும் தலை குனிந்தாள்.
அவனிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை அவள். 'யாரை கேட்டு இப்படி சொன்னாய்.?' என்று திட்டியிருக்கலாம். 'யார் உன்னை இப்படி ஒரு முடிவை எடுக்க சொன்னது.?' என கேட்டு அடித்து கூட இருக்கலாம். அவனின் பதில் உடைத்து விட்டது அவளை.
அவன் முன் அழுவதற்கு அவளுக்கு துளியும் விருப்பமில்லை. இப்போது மட்டும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால் கதறி விடுவோம் என்று அவளுக்கு தெரியும். ஆனால் முடியவில்லை. மனமும் விழிகளும் அவளின் பேச்சை கேட்கவில்லை. எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அவளின் கண்கள் மௌனமாய் கண்ணீரை சிந்தி விட்டன.
அவளின் மறுமொழி கேட்ட பிறகு விலகலாம் என்றுதான் நினைத்தான் அவன். ஆனால் அதற்குள் அவளின் கன்னங்களில் கோடிட்ட கண்ணீரை கண்டு விட்டான்.
அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான். தன் கன்னங்களை துடைக்க முற்பட்டாள் கீர்த்தனா. அவளின் கையை தடுத்தான். அவளின் முகத்தை ஆராய்ந்தான். ஏன் இந்த கண்ணீர் என்று கண்டறிய முயன்றான்.
அவனின் முகத்தை இரண்டு நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை அவளால். கண்ணீரை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விழிகளை மூடிக் கொண்டாள்.
"ஏன் என்னை டார்ச்சர் பண்ற பாலா? நிஜமா உனக்கு என்னை பிடிக்கலையா? நான் ஜாடை மாடையா எத்தனையோ முறை என் லவ்வை சொல்லிட்டேன். கண்டுக்கவே மாட்டேங்கற.. பயமா இருக்கு பாலா. என் ஃபீலிங் என்னை கொல்லுது. உனக்கு என்னை பிடிக்கலையோன்னு நினைச்சி உள்ளுக்குள்ள உடையுறேன் நான். ஒரு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருந்த.. என் உயிரே என்கிட்ட இல்ல.. ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த ஹாஸ்பிட்டல் ரூம் வரை வந்து உள்ளே வர தயங்கி திரும்பி இருப்பேன் தெரியுமா? உள்ளே வந்த நேரத்திலெல்லாம் உன் கட்டுக்களை கண்டு மனசுக்குள்ள எவ்வளவு அழுதிருப்பேன் தெரியுமா? அவன்கிட்ட நீ ஒவ்வொரு முறை அடிவாங்கும்போதும் சாகறேன் நான். உன் வலியை பார்க்கறதுக்கு பதிலா நானே செத்துடலாம்ன்னு தோணுது. ரொம்ப வலியா இருக்கு.." என்றவள் விழிகளை திறந்தாள். கண்ணீர் அருவியாய் கீழிறங்கியது.
"ஏன் பாலா என் மனசு உனக்கு புரியல. இந்த டைம்க்கு உன்னை தேடி வந்திருக்கேனே!? என்னை புரியலையா? இதுக்கு மேலயும் இந்த மௌன போராட்டத்தை தாங்க முடியும்ன்னு தோணல பாலா. எனக்கு இன்னைக்கு ஒரு பதிலை சொல்லிடு. வாழ்வோ சாவோ இன்னைக்கே தெரியட்டும். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து உன்னை பிடிக்கும். உன்னை லவ் பண்றேன். மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுறேன். இதுக்கு என்ன பதில் சொல்ற?" எனக் கேட்டாள் அவனின் கண்களைப் பார்த்து.
மௌனமாய் இருந்தான். அவனின் அசையாத இதழ்கள் கண்டு ஏமாற்றம் வந்து சேர்ந்தது.
கண்ணீர் அதிகமாய் பெருகியது. அவனின் கண்களை விட்டு பார்வையை திருப்பினாள்.
"ஐ யம் சாரி.." என்றாள் இடது கையால் விழிகளை துடைத்தபடி. ஆனால் கண்ணீரின் வழிப்பாதை மூடுவதாய் தோன்றவில்லை.
"உன்கிட்ட நான் இதை சொல்லி இருக்க கூடாது.. நான்தான் நம்பிட்டேன். உரிமை இருக்கு, லவ்வும் இருக்கும்ன்னு நினைச்சிட்டேன். ரியலி ரியலி சா.." என்றவளின் கன்னங்களை பற்றியது அவனின் இரு கரங்களும்.
குழப்பத்தோடு நிமிர்ந்தாள். அவனின் முகத்திலிருந்து எதையும் படிக்க முடியவில்லை. "பா.." அவளை அடுத்து பேச விடாமல் அவளின் இதழ் மீது தன் உதடுகளை பதித்தான் அவன்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW