அத்தியாயம் 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை மணி ஆறு. குந்தவி வானம் பார்த்தபடி ஹோட்டலின் ஜன்னல் பக்கத்தில் நின்றிருந்தாள். அதே நேரத்தில் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான் யஷ்வந்த்.

ஹோட்டலின் வரவேற்பில் நின்றிருந்த பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் அடுத்த பத்தாம் நிமிடத்தில் மேனேஜர் அறையில் இருந்தான்.

அவனை அமர வைத்து குளிர்பானத்தை வழங்கினார் அவர். யஷூ பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் கால் பதிக்காத தொழிலே இல்லையென்று சொல்லலாம். அனைத்திலும் நம்பர் ஒன்னாக இல்லைதான். ஆனால் அவர்களின் நிறுவனத்திற்கும் தனித்துவமான பெயர் இருந்தது.

யஷ்வந்த் கேட்டு வந்த உதவியை கண்டு குழம்பினார் ஹோட்டலின் மேனேஜர். இருந்தாலும் சரியென்று அடுத்த அரை மணி நேரத்தில் அவன் கேட்ட வீடியோ பதிவுகளை தேடி எடுத்தார்.

தேதியையும் நேரத்தையும் சொன்னான் யஷ்வந்த். இயக்கினார் அவர். ஹோட்டல் நுழைவாயில் வந்து நின்ற காரையும், இறங்கிய பெண்ணையும் கண்டவன் கண்களை சுருக்கினான்.

அவசரமாக தனது போனை எடுத்தான். அழைத்தான்.

"டேட் கரெக்டாதான் சொன்னியா?" சந்தேகத்தோடு கேட்டான்.

"யெஸ்‌‌.."

"ஆனா இந்த பொண்ணான்னு சந்தேகமா இருக்கு.. எத்தனை பொண்ணுங்களை இங்கே கூட்டி வந்த?" சந்தேகம் தீராமல் கேட்டான்.

"டோன்ட் டாக் டூ மீ லைக் தட். ஐயம் நாட் எ ப்ளேபாய். ஐ ஷேர்ட் மை நைட் வித் ஒன்லி ஒன் கேர்ள். தட் ஸீ.."

"அப்படின்னா பகல்ல மேஞ்சி இருக்கன்னுதானே அர்த்தம்.." என்றபடி எழுந்தவன் மேனேஜரை விட்டு சற்று தள்ளி வந்தான்.

மறுமுறையில் இருந்தவன் பற்களை அரைத்தான்.

"செட்டப். ஐயம் நாட் லைக் யூ.. அன்ட் டூ வாட் ஐ சே.. ஐ வாண்ட் ஹேர்.. ஐ வாண்ட் ஹேர் நேம், அட்ரஸ் அன்ட் எவ்ரிதிங்.."

யஷ்வந்த் போனிலேயே கலகலவென சிரித்தான். 'நாட் லைக் யூவா? அடிங்கொப்பன் மகனே.. மறுபடி நீ கையில கிடைச்சா சங்கை கடிச்சி வைக்க போறேன்..'

"வாட்.?" எரிச்சல் வழிந்தது அவனின் குரலில்.

"அவளை எனக்கு தெரியும்.." இவன் சாதாரணமாய் சொல்ல எதிரில் பேசியவனுக்கோ இதயம் அதன் இடத்தை விட்டு ஓரடி எகிறி குதித்து மீண்டும் அதே இடத்தில் விழுந்தது.

"ஹவ்?" பதட்டமாக கேட்டான். வாய்ப்பிருந்திருந்தால் போனுக்குள் புகுந்து இந்த பக்கம் வந்திருப்பான்.

"அவ பேர் குந்தவி.. அன்னைக்கு எனக்கு வெட்டு விழுந்தபோது ஒரு தேவதையை மீட் பண்ணேன்னு சொன்னேனே.. அது அவதான். வேலை தேடி நம்ம ஆஃபிஸ் வந்திருந்தா இன்னைக்கு. அன்னைக்கு அவ எனக்கு துணை நின்னதுக்கு வேலை தரலாம்ன்னு நினைச்சேன். அவகிட்டதான் என் கேம் மொபைல் கூட இருக்கு.."

எதிரில் இருந்தவன் சற்று நேரத்திற்கு எதுவும் பேசவில்லை.

"மச்சி.."

"இஸ் ஸீ ஓகே?" தயக்கமாக கேட்டான் அவன்.

"ஓகே போலதான் இருந்தா. ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். சர்டிபிகேட் ஏதும் இல்லன்னு சொன்னா. வீட்டை விட்டு ஓடி வந்துட்டியான்னு கேட்டதுக்கு பதிலே சொல்லல. இப்ப பார்த்தா அப்படிதான் தோணுது. ஆனா நீ பிராஸ்டியூட்ன்னு சொன்னது போல இருந்தது.."

எதிர் முனையில் இருந்தவன் தலையை கோதியபடி தனது அலுவலக நாற்காலியில் தலையை சாய்த்தான்.

"ஐ டோன்ட் நோ யஸ்வேந்த். ஐ சா ஹேர் ஆன் த ரோட். ஐ லைக்ட் ஹேர். பட் ஐ டோன்ட் நோ அபவுட் மை ஃபீலிங். ஐ தாட் ஸீ இஸ் லைக் தட் கேர்ள். சோ ஐ அப்ரோச்ட். ஐ பைன்ட் அவுட் லேட்லி தட் ஸீ இஸ் நாட் எ பிராஸ்டியூட் கேர்ள். பட் ஐ கான்ட் கன்பார்ம் மை டவுட் தட் டைம்.." என்றவன் தன் தந்தை அழைத்து விட்டதால் அங்கிருந்து கிளம்பி விட்டதையும் விரிவாகச் சொன்னான்.

"ஆக ஒரு சாதாரண பெண்ணை அப்ரோச் பண்ணி பர்ஸ்ட் கஸ்டமராகி அவளை இந்த பீல்டுக்குள்ள இழுத்து விட்டிருக்க நீ.." யஷ்வந்த் கோபத்தோடு சொன்னான்.

"நோ.. நோ.. ப்ளீஸ் டோன்ட் ஸ்பீக் லைக் தட். ஐ யம் நாட். ஐ ரியலி லைக் ஹேர்‌.." என்றவன் தயங்கிவிட்டு "ஐ திங் ஐ லவ் ஹேர்.. சோ ப்ளீஸ் ஹெல்ப் மீ.‌." என்றான் கெஞ்சலாக.

"நல்லா வாய்ச்சடா எனக்குன்னு.. அவ அந்த மாதிரி பொண்ணு இல்லன்னுதான் எனக்கும் தோணுது. எதுக்கும் விசாரிச்சிட்டு கன்பார்ம் பண்ணி சொல்றேன். ஒருவேளை அவ அந்த மாதிரி பொண்ணா இருந்தா இத்தோடு என்னை தொல்லை பண்ணாம விட்டுடுவியா?" எதற்கும் இருக்கட்டுமென்று கேட்டு வைத்தான்.

"நோ.. ஐ வான்ட் ஹேர். ஸீ இஸ் மை லைஃப். சோ ஐ வில் சேஞ்ச் ஹேர்.." என்றான் நம்பிக்கையோடு.

"என்னவோ போ‌‌.. ஆனா அவ தினம் நம்ம ஆஃபிஸ் வந்துட்டு போயிருக்கா.."

"ஐ கேவ் மை போன் நம்பர்.." வருத்தத்தோடு சொன்னான்.

"அதனால்தான் அவ ஆபிஸ் வந்திருக்கான்னு தோணுது. அவ உன்னை பத்தி விசாரிச்சி இருப்பான்னு நினைக்கிறேன். உன்னோடு பேச விரும்பல போல. ஆனா உன்னை நெருங்க நினைச்சிருக்கா.. இப்படி பார்த்தா இவ அந்த தொழில் செய்யாத பொண்ணுன்னுதான் தோணுது.."

"யூ கன்ப்யூஸ்ட் மீ.."

யஷ்வந்த் சிரித்தான்.

"டோன்ட் லாஃப். ப்ளீஸ் டெல் அபவுட் ஹேர்.. ஐ வில் கம் டூ இன்டியா இன் எ வீக்.."

"எப்ப வேணாலும் வா. மறக்காம அந்த ஹிட்லர் மாமன்கிட்டயிருந்து ப்ராப்பரா லீவ் வாங்கிட்டு வா.. இல்லன்னா நீ இங்கே வந்த பிறகும் தினம் நூறு முறை கால் பண்ணி கடுப்பேத்திட்டு இருப்பாரு.."

எதிரில் இருந்தவன் சிரித்தான். "ஹீ இஸ் மை ஹீரோ. நாட் ஹிட்லர்.." என்றவன் தொடர்பை துண்டித்தான்.

மூளையை கரையான் போல அரித்தவள் நெருங்கி விட்டாள் என்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தியா செல்ல அப்பாவிடம் அனுமதி வாங்கலாம் என நினைத்து தனது ரூமை விட்டு வெளியே நடந்தான். வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற அனைவரும் இவனை பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பி கொண்டனர்.

ஷைனிங் வேர்ல்டின் தலைமை அலுவலகம் அது. வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தையும் தயாரித்துக் கொண்டு இருக்கும் நிறுவனம் அது‌. அவர்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தொலைக்காட்சியும், ஏசியும் உலகம் முழுக்க பெயர் பெற்று இருந்தது. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் என்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் மட்டும் தயாரித்து கொண்டிருந்தவர்கள் இந்த இரண்டு ஆண்டுகளாக கணினிகளை உருவாக்கும் பணியிலும் இறங்கி உள்ளனர்.

ஷைனிங் வேர்ல்டை நிறுவியர் இவனின் தாத்தா. இப்போது அலெக்ஸ் மற்றும் அவரின் சகோதரர் ஜேம்ஸின் முழு கட்டுப்பாட்டில்தான் மொத்த நிறுவனமும் உள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகளுமே மொத்த நிறுவனமும் நட்டத்தில்தான் போய் கொண்டு இருக்கிறது‌. இந்தியாவில் இருக்கும் கிளை நிறுவனங்களை கை மாற்றி‌ விடலாமா என்ற அளவுக்கு நட்டத்தில் போய் கொண்டு இருக்கிறது.

ஆனால் அலெக்ஸ்க்கு எதையும் விற்க கூடாது. நிறைய யோசனைக்கு பிறகுதான் சற்று நாட்களுக்கு முன்பு சென்று நிறுவனத்தின் பங்கில் பாதியை மட்டும் தனது மாமன் பெயருக்கு மாற்றி விட்டு வந்திருந்தான் இவன். அப்போதுதான் அவன் குந்தவியையும் சந்தித்து விட்டு வந்திருந்தான்.

அப்பாவின் அறை கதவை திறந்தான். உள்ளே நிறுவன இயக்குனர்களுடனான சந்திப்பு நடந்துக் கொண்டிருந்தது. ஜேம்ஸ் அங்கிருந்தவர்களோடு தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார். இவன் கதவை திறந்ததும் திரும்பிப் பார்த்த அலெக்ஸ் தன் கை கடிகாரத்தை பார்த்தார்.

"டூ லேட்‌‌.." என்றார் கோபத்தோடு.

இவனோ இந்த பக்கம் திரும்பி நெற்றியில் அடித்துக் கொண்டான். பத்து நிமிடத்திற்கு முன்பே கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் இப்போதும் கூட விடுமுறை கேட்கதானே வந்திருந்தான்?

"கம் இன் சூர்யா.." என்ற ஜேம்ஸ் இவனின் தாமதத்தை பொருட்படுத்தாமல் தான் விளக்க வேண்டிய விசயங்களை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். அமைதியாய் வந்து தனது இருக்கையில் அமர்ந்தான். அவன் முன்னும் ஒரு ஃபைல் காப்பியை நகர்த்தி வைத்தார் ஒரு இயக்குனர். இப்போதைக்கு தான் தனது வார்த்தைகளை பேச முடியாது என புரிந்து தன் பெரியப்பா சொல்வதை கேட்க ஆரம்பித்தான் சூர்யா.

யஷ்வந்த் மேனேஜரிடம் விசாரிக்க ஆரம்பித்தான். அதில் தெரிந்தது குந்தவி இந்த ஹோட்டலை விட்டு அதிகம் வெளியே செல்லவில்லை. யாரும் அவளை பார்க்கவும் வரவில்லை. அவள் அது போன்ற பெண் இல்லை என அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான். எங்கே தனது அத்தை பெத்த ரத்தினம் உடலை விற்கும் தொழில் செய்பவளை காதலித்துவிட்டு, அதற்கு அவனின் ஹிட்லர் தந்தையிடம் வாங்கி கட்டிக் கொள்வானோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். நல்லவேளையாக அப்படி இல்லை.

குந்தவிக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று புரிந்துக் கொண்டவன் அடுத்து எடுத்து வைக்கும் அடியை பற்றி யோசித்தான்.

குந்தவி வானத்திலிருந்த பார்வையை கீழே இறக்கினாள். கையில் இருந்த போனை பார்த்தாள். சற்று முன் தேடி எடுத்த அவனின் புகைப்படம்‌. இந்த போனில் எக்கச்சக்கமாக அவனின் புகைப்படங்கள் இருந்தது. எவ்வளவு நேரம் வெறித்து பார்த்தும் கூட ஏன் அவனை பார்க்கிறோம் என்று அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அவன் தந்து சென்ற போன் நம்பரை வைத்துதான் அவன் யாரென்று அறிந்துக் கொண்டாள். அதுவும் இரண்டாம் நாளிலேயே அறிந்து விட்டிருந்தாள். அதற்காக கம்ப்யூட்டர் சென்டரில் ஐநூறுக்கும் மேல் செலவழித்தும் இருந்தாள்.

அவனுடைய நிறுவனத்தில் வேலை செய்ய ஏன் ஆசை வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. தினமும் அருகிலிருக்கும் அவனது நிறுவனத்திற்கு சென்றாள். அந்த கட்டிடத்தை பார்க்கும்போதே அவனை உணர்வது போலதான் இருந்தது.

யஷ்வந்துடனான சந்திப்பைதான் அவளால் நம்பவே முடியவில்லை. ஆனால் தான் ஏதோ ஒரு வழியில் சென்றுக் கொண்டிருக்கிறோம். அவனிருக்கும் இடத்தை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் புரிந்துக் கொண்டாள்.

சூர்யாவின் மீது நேசமா பாசமா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவனிடம் உதவி கேட்க அவளுக்கு சுத்தமாக மனம் வரவில்லை. ஒன் நைட் ஸ்டேன்ட் என்று கடந்தும் போக முடியவில்லை. அவனை தேடியும் ஓட முடியவில்லை. காந்திமதியையும் ஆதீரனையும் அழிக்க வேண்டும். அதற்கும் வழி தெரியவில்லை. தங்கையையும் தந்தையையும் காப்பாற்ற வேண்டும் அதற்கும் வழி எதுவென்று புரியவில்லை.

"ஸ்டக் ஆகி நிக்கற மாதிரி இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் முட்டுசந்து.." புலம்பியபடியே வந்து கட்டிலில் அமர்ந்தாள்‌. அவன் வாசம் மட்டுமே வீசுவது போலிருந்தது.

"அன்னைக்கு இவன் கூப்பிட்டான்னு கார்ல ஏறி இருக்க கூடாது. பத்து நிமிசம் பல்லை கடிச்சி நின்னுட்டு கண்ணை மூடிகிட்டு ஏதாவது ஒரு லாரியில்‌ பாஞ்சி இருக்கணும்.." என்று புலம்பிய அவளே "ஆண்டவனா பார்த்து இவனை அனுப்பி வச்சிருக்கான் போல. அந்த நேரத்துல இவன் வரலன்னா செத்திருப்பேன். குடும்பத்தை அழிஞ்சவங்களை எந்த பழியும் வாங்க கூட சந்தர்ப்பம் கிடைச்சிருக்காது.." என்று தனி ஒரு வகையிலும் புலம்பினாள். அவளின் புலம்பல் கூட அவளுக்கு எதிரியாகதான் இருந்தது.

ஆதீரன் அன்று இரவு வெகுநேரம் வரை காத்திருந்தான். ஆனால் காந்திமதி வீடு வந்திருக்கவில்லை. மனம் பாரமாய் போனது. காத்தவராயனை அடியோடு வெறுத்தான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN