அத்தியாயம் 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆதீரனின் முன்னால் குனிந்தாள் சங்கவி. அவனின் கன்னங்களை பற்றினாள். அவனது கண்ணீரை துடைத்து விட்டாள்.

"அழாதிங்க.. ப்ளீஸ்.." என்றாள்.

"உங்களால அவளை மறக்க முடியலன்னா பரவாயில்ல. எவ்வளவு வேணாலும் டைம் போகட்டும். இல்ல அவளை மறக்க நான் தேவைன்னாலும் யூஸ் பண்ணிக்கங்க. நான் ஏதும் சொல்லமாட்டேன். ஆனா மறுபடி எந்த முட்டாள்தனமான முடிவையும் எடுத்துடாதிங்க.." என்றாள். சொன்ன வார்த்தைகளே சில சமயங்களில் பெரும் எதிரியாய் மாறும் என்பதை இவள் அறிவாளா?

அவளின் முகத்தை பார்த்தவனுக்கு கண்ணீர்தான் வந்தது. "சாரி சங்கவி.." என்றான்.

இடம் வலமாக தலையசைத்தவள் "சாரி‌ வேணாம்.." என்றாள்.

அவளின் வலது கையை எடுத்தவன் அவளின் கையில் முத்தமிட்டான்.

"சாப்பிடலாமா?" சில நிமிடங்களுக்கு பிறகு அவனின் அழுகை ஓய்ந்த பிறகு கேட்டாள்.

எழுந்து நின்றவன் அவளை ஒரு முறை அணைத்தான்.

"தேங்க்ஸ்.." என்றான் சிறு மன நிம்மதியோடு.

இருவரும் உணவை ஒன்றாய் சேர்ந்து அமர்ந்து உண்டார்கள்.

சூர்யா தனது அப்பாவின் அறை முன்னால் நின்றான். தயக்கத்தை களைந்தெறிந்துவிட்டு உள்ளே நடந்தான்.

"டேட்.." என்றவனை நிமிர்ந்து பார்த்தவர் பைல் ஒன்றை எடுத்து மேஜையின் இந்த புறம் வைத்தார்.

"டேட்.. ஐ வாண்ட் டூ கோ டூ இன்டியா.."

அலெக்ஸ் நிமிர்ந்து பார்த்தார்.

"ரீசன்?"

"பார் யஸ்வேந்த் பர்த்டே பார்டி.."

முறைத்தார் அவர்.

"யுவர் ஆர் நாட் எ சைல்ட்.. வீ ஹேவ் வொர்க்.." என்றார் கோபமாக.

"பட் ஐ வாண்ட்.." என்றவன் தயங்கி விட்டு "ஐ லவ் எ கேர்ள்.." என்றான்.

அலெக்ஸ் அவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தார்.

"டோன்ட் வேஸ்ட் மை டைம்.." என்றவரிடம் "டாட். இட்ஸ் ட்ரூ. ஐ மீட் எ கேர்ள் இன் இன்டியா. அன்ட் ஐ லவ் ஹேர். ஐ வாண்ட் ஹேர்.." என்றான். தனது போனின் புகைப்படத்தை எடுத்து அவரிடம் காட்டினான். நேற்றைய நாளில் யஷ்வந்த் அனுப்பி வைத்திருந்த குந்தவியின் புகைப்படம் அது.

"ரியலி.?" சந்தேகமாக கேட்டார்.

"ப்ராமிஸ்.."

யோசித்தார். இந்த சில வாரங்களாக மகனின் கண்கள் நிலைகொள்ளாமல் அலைந்ததற்கான காரணத்தை இப்போது புரிந்துக் கொண்டார்.

"கால் ஹேர். ஐ வில் ஸ்பீக் வித் ஹேர்.."

"டாட். நோ. ஐ டோன்ட் டெல் மை லவ் யெட்.."

தலையை சொறிந்தார் அவர்.

அவளை தான் இந்தியாவில் பார்த்ததாகவும், பார்த்தவுடன் அவள் மீது காதல் கொண்டதாகவும், அவள் இருக்கும் இடத்தை இப்போதுதான் அறிந்ததாகவும், இந்தியா சென்று பார்த்து அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்றும் தந்தையிடம் விளக்கிச் சொன்னான்.

அலெக்ஸ் யோசித்தார்.

"ஓகே. ஐ வில் கிவ் பைக் டேஸ் லீவ். பட் யூ வில் கம் வித் ஹேர். டோன்ட் வேஸ்ட் அவர் டைம்.." என்றார் கண்டிப்போடு.

சூர்யாவுக்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அதெப்படி ஐந்து நாட்களில் ஒரு பெண்ணின் காதலை பெற்று அவளை இங்கே அழைத்துக் கொண்டும் வர முடியும் என்று குழம்பினான். அவளிடம் பாஸ்போர்ட் இல்லாமல் போனால் என்ன செய்வது? விசா கிடைக்கவே இன்னும் நாட்கள் ஆகுமே என்றும் குழம்பினான்.

தந்தை தந்த ஐந்து நாட்களில் அவளின் காதலை பெற்று விடலாம். பிறகு வந்து தந்தையிடம் அடுத்த சாக்கு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

"தேங்க் யூ டாட்.." என்றவன் அவருக்கு காற்றிலேயே ஒரு அணைப்பை அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மதிய வேளை. குந்தவி தனது வேலையில் கண்ணாக இருந்தாள். வேலை பளு இருந்தது. ஆனால் கற்றுக் கொள்ளும் முனைப்பு அவளை நிமிர விடாமல் வைத்திருந்தது.

"குந்தவி.." அவளை அழைத்துக் கொண்டு வந்தான் யஷ்வந்த்.

'இம்சை..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அவளின் வேலை கெடுவதற்கு முக்கிய காரணமாக அவன்தான் இருந்தான் சம்பந்தமே இல்லாத விசயங்களை கேட்டு மொக்கை போட்டான். அவளோடு உரையாடுவது மட்டுமே தனது முக்கிய வேலை என்பது போல செய்துக் கொண்டிருந்தான்.

அவளின் அருகில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தவன் "ரொம்ப பிசியா?" எனக் கேட்டான்.

"ம்.." என்றவள் அவனின் புறம் பார்த்தாள்.

"உங்களுக்கு வேலை இல்லையா?"

"இருக்கு. நிறைய இருக்கு. என்னோட பிரஷர் மாத்திரை உன் கண்ணுல இருக்கு. அதனாலதான் அப்பப்ப வந்து மருந்து எடுத்துட்டு போறேன்.." என்றான்.

ஷீலா களுக்கென்று சிரித்தாள்.

"எனக்கு ரூட் விடுறிங்களா?" அவனின் காதோரம் கிசுகிசுப்பாக கேட்டாள். டைம் பாஸ்க்கு கடலை போட தான் என்ன அவ்வளவு வேலை வெட்டி இல்லாமலா இருக்கிறோம் என்று தோன்றியது அவளுக்கு. ஷீலா பயிற்சி என்ற பெயரில் சக்கை பிழிந்துக் கொண்டிருந்தாள்.

"நானா.? உன்னையா? ச்சீ.. ச்சீ.. யூ ஆர் மை பிரெண்ட்.. லைக் எ சிஸ்டர்.." என்றான். அத்தை மகனின் மனைவியாக போகும் பெண். எப்படி பார்த்தாலும் தங்கை முறைதான். அதனாலதான் இப்படி சொன்னான்.

"இன்னைக்கு ஈவினிங் வரியா ஷாப்பிங் போகலாம்.." என அழைத்தான்.

மறுப்பாக தலையசைத்தவள் "நான் வரல.. எனக்கு வொர்க் இருக்கு.." என்றாள்.

"அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் தோளை குலுக்கியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

மாலை வேளையில் வீடு வந்தவளை வழக்கம் போல சூழ்ந்துக் கொண்டார்கள் அந்த வீட்டில் இருந்த அவள் வயது பெண்கள். யஷ்வந்திற்கு சகோதரிகள். அனைவரையும் அவளுக்கு பிடித்திருந்தது.

அவளை இழுத்துச் சென்று தங்களது கேமிங் அறைக்குள் நுழைந்தனர்.

"விளையாடலாம்.." என்று ஆரம்பித்தார்கள்.

"உங்களுக்கு எங்க அண்ணனை பிடிச்சிருக்கா?" நேரம் கொஞ்சம் கடந்த பிறகு அவளிடம் கேட்டாள் யஷ்வந்தின் சித்தப்பா மகள்.

"பிரெண்டா பிடிச்சிருக்கு.." என்றவள் விளையாட்டில் கவனமாக இருந்தாள். சுற்றி இருந்தவர்கள் தங்களுக்குள் ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்.

அவளை அவர்களுக்கு பிடித்திருந்தது. அவளோடு யஷ்வந்த் காட்டிய நெருக்கம் அவர்களுக்கு சந்தேகத்தை தந்தது. அவன் அவ்வளவு சீக்கிரத்தில் யாரோடும் நெருங்கி பழகுபவன் இல்லை. இவளோடு சிரித்து சிரித்து பேசுகிறானே என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

"ஐ வில் கம் இன் த்ரீ டேஸ்.." சூர்யா போனில் சொன்னது கேட்டு பெருமூச்சு விட்டான் யஷ்வந்த்.

"வாடா ராசா.. இதுக்கு மேலாவது போட்டோ அனுப்பு, அவளை அப்படி பார்த்துக்கோ, இப்படி பார்த்துக்கோன்னு என்னை இம்சை பண்ணாம இருப்ப.." என்று நிம்மதி குரலில் சொன்னான்.

"ஐ நோ தமிழ்.."

"அதுதான் சொல்லாமலேயே தெரியுமே.." என்றவனிடம் "நோ.. ஐ கேன் ஸ்பீக் தமிழ்.." என்றான் அவன்.

யஷ்வந்துக்கு ஆச்சரியமாக இருந்தது.

"பேசுடா.." என்றான்.

"நோ.. ஐ வாண்ட் டூ ஸ்பீக் வித் ஹேர் பர்ஸ்ட்.. பிகாஸ் ஐ லியர்ன்ட் தமிழ் ஒன்லி பார் ஹேர்.."

"நல்லா பேசுறடா மச்சான் நீயும்.. ஆனா தமிழை எப்படி கொல்ல போறன்னுதான் தெரியல.." என்று சிரித்தான் யஷ்வந்த்.

"ஐ வில் ஸ்பீக் பெட்டர்.."

"என் பேரை சொல்லு ஒரே ஒரு முறை.."

"யஸ்வேந்த்.."

நெற்றியில் அடித்துக் கொண்டான் யஷ்வந்த். "இத்தனை வருசமா என் பேரையே ஒழுங்கா சொல்ல முடியல. நீ செம்மொழியை சிறப்பு குறையாம உச்சரிக்க போறியா.?" எனக் கேட்டான்.

"ஐ கேன் மேனேஜ்.." ரோசத்தோடு அவன் சொல்ல "என்னவோ பண்ணுடா.." என்றான் இவன்.

சங்கவி தினமும் பகலில் தந்தையின் அருகிலேயே காவல் இருந்தாள். அவரோடு தன்னால் முடிந்த அளவுக்கு உரையாடினாள்.

"அப்பா.. அவரை பிடிச்சிருக்குப்பா. தப்புன்னு தெரியுது. ஆனா அவரை வெறுக்க முடியல. அவரோட குணமும் பேச்சும் பிடிச்சிருக்கு. நீங்களாவது சீக்கிரம் எழுங்கப்பா.. என்னோட குழப்பத்துக்கு ஒரு முடிவு சொல்விங்க.. ஏதோ ஒரு கம்பர்ட்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இது வேற மாதிரி போகுதுப்பா. அவரை பார்த்தாலே என் மனசு ரொம்ப இளகுது. அவரை பத்தியே யோசிக்க தோணுது. குழப்பம் மிகுதியான ஒரு காதலா இருக்கு. இதுதான் காதலான்னு தெரியல. ஆனா எப்போதும் அவரோட பக்கத்துல இருக்கணும்ன்னு தோணுது.." என்றாள்.

தந்தையின் கையை பற்றினாள். அவரின் விரல்களை உருவி விட்டாள். புறங்கையின் தோல்கள் வறண்டு போயிருந்தது அவருக்கு. கையை மென்மையாக வருடி விட்டாள்.

"சீக்கிரம் கண் விழிங்கப்பா.."

வழக்கம்போல அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான் ஆதீரன்.

கார் சீரான வேகத்தில் சென்றது. வழக்கம் போல அவளின் தந்தையின் உடல்நிலை பற்றி விசாரித்தான். அவளின் நாள் எப்படி போனதென்று கேட்டான். மதியம் சாப்பிட்டாளா என்றும் கேட்டறிந்தான்.

அனைத்திற்கும் பதில் சொன்னாள். அவனுக்குதான் ஏதோ குறைந்தது போல இருந்தது. வீட்டின் முன் கார் நின்றதும் கீழே இறங்க எத்தனித்தாள். வழக்கமான பூக்களை அவளிடம் நீட்டினான்.

"தேங்க்ஸ்.." என்றவளை தயக்கமாக பார்த்தவன் "மாமான்னு கூப்பிட பிடிக்கலையா சங்கவி?" எனக் கேட்டான்.

கொஞ்சமாக அதிர்ந்துப் போனாள். அன்று தன்னை மறந்து அழைத்திருந்தாள். அவனை இயல்பாய் அப்படி அழைக்க இயலுமா என்று குழம்பினாள்.

"பி.. பிடிச்சிருக்கு.." என்றாள் தடுமாற்றமாக.

பூக்களை சுமந்திருந்த அவளின் கையை பற்றியவன் "அப்படியே கூப்பிடு சங்கவி.. எனக்கும் பிடிச்சிருக்கு.." என்றான்.

"ச.. சரி.." தலை குனிந்தபடி சொன்னாள்.

நடு இரவு நேரம் கடந்தது. சங்கவி தண்ணீர் தாகத்தில் கண் விழித்தாள். தண்ணீர் குடுவை காலியாக கிடந்தது. எழுந்தவள் வெளியே நடந்தாள்‌. ஆதீரனின் அறையிலிருந்து மெல்லிய வெளிச்சம் வந்துக் கொண்டிருந்தது. தயக்கத்தோடு கதவை தள்ளினாள். ஜன்னலின் அருகே நின்றபடி இருளை வெறித்துக் கொண்டிருந்தான் அவன். காலடியில் கிடந்த போன் அனாதை போல இருந்தது.

இவ்வளவு நேரமும் தன் அம்மாவிற்கு அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் போன் வழக்கம்போல ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. மனது வெற்றிடமாக இருந்தது. அம்மா தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று நினைத்தான்.

"ம்ம்.. தூங்கலையா?" சங்கவியின் குரலில் திரும்பினான்.

இரவு உடையாய் தொளதொளப்பான ஒரு சட்டையையும் பேண்டையும் அணிந்திருந்தாள். இரண்டு வாரங்கள் முன்பே அவளின் வீட்டிலிருந்த உடைகளை எடுத்து வந்து விட்டிருந்தாள். கொஞ்சமாக கலைந்த தலைமுடி, அரை உறக்கத்தில் இருந்த கண்களும் கூட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மிகவும் பழகியவள் போல அவனின் கண்களுக்கு தென்பட்டாள்.

"தூக்கம் வரல சங்கவி.." என்றவன் அவளருகே வந்தான். அவளின் கையில் இருந்த தண்ணீர் குடுவையை பார்த்தவன் தனது மேஜையின் மேல் இருந்ததை அவளிடம் நீட்டினான்.

"தேங்க்ஸ்.." அவள் தண்ணீர் குடிப்பதை பார்த்தபடி நின்றான்.

அவனிடமே பாட்டிலை நீட்டி விட்டு திரும்பினாள்.

அவளின் கையை பற்றினான் ஆதீரன். குழப்பத்தோடு திரும்பினாள்.

"இன்னைக்கு ஒருநாள் இங்கே தூங்குறியா சங்கவி? நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சி. நான் உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்ய மாட்டேன். ப்ராமிஸ்.."

சங்கவி யோசித்துவிட்டு சரியென்று தலையசைத்தாள்.

அவனின் கட்டிலில் தலை சாய்ந்திருந்தனர் இருவரும். இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளி இருந்தது.

படுத்ததும் சற்று நேரத்தில் உறங்கி விட்டாள் சங்கவி. அவளின் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தான் ஆதீரன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN