அத்தியாயம் 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குணவதி காந்திமதியின் போனுக்கு அழைத்தாள். ஸ்விட்ச் ஆஃப் என்று‌ வந்தது.

வீட்டுக்குள் வந்த வருண் அம்மாவின் முயற்சியை கண்டுவிட்டு தலையை அசைத்தான்.

"அவங்க காத்தவராயனோடு ஓடி போயிட்டாங்க.." என்றான்.

அதிர்ச்சியில் போனை நழுவ விட்டவள் "என்ன சொன்ன.?" என்றாள்.

"இவ்வளவு ஷாக்கிங் எதுக்கும்மா? அவங்க ஓடி போயிட்டாங்க.." என்றவன் சலிப்போடு அம்மாவை தாண்டிச் சென்று சோபாவில் அமர்ந்தான்.

இதுவரை நடந்த அத்தனையையும் அம்மாவுக்கு தெளிவாக சொன்னான் வருண். குணவதிக்கு தலை மட்டும்தான் சுற்றவில்லை.

"என் தங்கச்சியா இப்படி செஞ்சா?" எனக் கேட்டாள்.

"ஆமா.. அநியாயமா ஒரு பொண்ணை கொன்னு, இன்னொரு பொண்ணை சித்திரவதை செஞ்சி.. இனியாவது ஆதீ நல்லாருப்பான்.." என்றான்.

குணவதி தலையை பிடித்தாள். தன் தங்கையின் புத்தி ஏன் இப்படி போனது என்று குழம்பினாள். குணவதியும் காந்திமதியும் பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வருண் மட்டும்தான் அவ்வப்போது அந்த வீட்டிற்கு போய் வருவான். காந்திமதியோடு எப்போதாவது போனில் பேசினாலே பெரிய விசயம் குணவதிக்கு.

"ஹல்வா செஞ்சிருக்கேன்.." என்றபடி சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் தாரணி.

ரத்த நிறத்தில் ஏதோ போல இருந்தது அல்வா.

"இது என்ன அல்வா?" கை தொடும் முன்பே எச்சரிக்கையோடு கேட்டான் வருண்.

"பீட்ரூட் ஹல்வா.."

"அதென்ன ஹ.. அ சொல்லி பழகு.." என்றவன் சுட்டு விரலில் கொஞ்சமாக தொட்டு நாக்கில் வைத்து பார்த்தான்.

"உவ்வேக்.." வயிற்றை பிடித்துக் கொண்டு குமட்டியவன் "எதுக்கு இவ்வளவு உப்பு போட்டு வச்சிருக்க பேயே?" எனக் கேட்டான்.

விழித்தவள் "அம்மாதான் எந்த ஸ்வீட்டா இருந்தாலும் கொஞ்சமா உப்பு போடணும்.. அந்த உப்பு டேஸ்டை எடுத்து தரும்ன்னு சொன்னாங்க.." என்றாள்.

குணவதி சந்தேகத்தோடு கொஞ்சமாக எடுத்து உண்டுவிட்டு உடனே ஜன்னல் வழி வெளியே துப்பி வந்தார்.

"கால் சிட்டிகை போடணும். நாலு ஸ்பூன் போட கூடாது.." என்றாள் கோபத்தோடு.

"நாலு கப் சர்க்கரை போடும்போது நாலு ஸ்பூன் உப்பு போட கூடாதா?" எனக் கேட்டாள் இவள் ரோசமாக.

குணவதி நெற்றியில் அடித்துக் கொண்டாள். தான் பெற்ற செல்லம் எங்கே சென்று புருசனின் உயிரை ஊஞ்சலில் வைத்து தாலட்ட போகிறாளோ என்று கவலையாக இருந்தது.

"தயவுசெஞ்சி நீ ஏதும் சமைக்காத தாரணி.." என்று தங்கையிடம் கேட்டுக் கொண்டான் வருண்.

அவள் உதடு சுழித்து காட்டிவிட்டு வேறு எதையோ முயற்சிக்க ஓடினாள்.

"இவளுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை செய்யணும்.." என்ற குணவதி தனது மற்ற வேலைகளை பார்க்க கிளம்பினாள்.

குந்தவி போனை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். சூர்யாவின் எண்ணுக்கு ஓராயிரம் முறை அழைத்திருப்பாள். ஆனால் அழைப்பு போய் சேரும் முன்பே துண்டித்து விடுவாள்.

"உங்களோடு எப்படி பேசுறது? இது என்ன உறவுன்னே எனக்கு தெரியலையே.." என்று தலையணையோடு புலம்பியவள் தனது இடையில் ஊறும் விரல்களை தள்ளி விட மனமில்லாமல் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாட்களும் அவனது யோசனையோடுதான் சென்றது. அதன் பிறகு தன்னையே நிலைப்படுத்திக் கொண்டு அவனுக்கு அழைத்தாள். அவனுக்காக மட்டுமே அழைத்தாள்.

தலைமை இயக்குனர்களுடனான போர்ட் மீட்டிங்கில் நடந்த பேச்சுவார்த்தை சரியான முறையில் செல்லவில்லை. அந்த எரிச்சலில் இருந்தான் சூர்யா. ஜேம்ஸும் இவனும் முழுதாய் யோசித்தும் உழைத்தும் கூட நிறுவனத்தின் லாபம் ஒரு பர்சண்ட் அதிகரிக்கவில்லை. புது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துக் கொண்டிருந்தன.

சூர்யா தன் தந்தையை அளவுக்கு அதிகமாக நேசித்தான் இந்த நேரத்தில். அப்பாவின் செயல்பாடுகள் எப்போதும் தனிரகம் என்று புரிந்து ஆச்சரியப்பட்டான்.

தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவன் போன் ஒலிக்கவும் எடுத்து காதில் வைத்தான். குழப்பத்தில் யாரென்று கூட பார்க்கவில்லை.

"ஹலோ.. வூ இஸ் தட்.?" என்றான் முடிந்த அளவு குரலின் எரிச்சலை அடக்கியபடி.

ஆனால் அவளுக்கு இவனின் எரிச்சல் தெளிவாய் புரிந்தது. அத்தனை முறை இந்த எண்ணுக்கு அழைத்தவன் இன்று யாரது என்று கேட்டு விடவும் மேலும் தயங்கினாள். பேசும் தைரியம் வரவில்லை. இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

சூர்யா குழப்பத்தோடு போனை பார்த்தான். செல்லா என்று இருந்தது. நெற்றியில் அடித்துக் கொண்டு அவசரமாக அவளுக்கு அழைத்தான். 'குந்தவியிடம் உன்னை பற்றி சொன்னேன்' என்று மூன்று நாட்கள் முன்பே இவனிடமும் சொல்லி விட்டான் யஷ்வந்த். குந்தவி அழைப்பாள் என்று மூன்று நாட்களாய் காத்திருந்தவன் இன்று அவள் அழைத்தும் தானே துண்டித்து விட்டதற்காக தன்னையே திட்டிக் கொண்டான்.

தயங்கிவிட்டு எடுத்தாள் அவள்.

"செல்லா.."

அவனின் அந்த ஒற்றை அழைப்பில் மொத்தமாய் கரைந்தது மனது. அந்த குரலில் இருந்த ஆர்வமும் காதலும் அவளை ஏதோ செய்தது.

"செல்லா.. இட்ஸ் யூ.? ரியலி.?" தயங்கி கேட்டான்.

மிடறு விழுங்கியவள் "ஹ.. ஹ..ஹலோ.." என்றாள். எவ்வளவு முயற்சித்தும் அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது.

"செல்லா.!!" கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான். உடம்புக்குள் புது சக்தி பாய்வது போலிருந்தது அவளின் குரல் கேட்டு.

"ஹவர் யூ செல்லா.?"

"ப.. ப.. பைன்.." தந்தியடிக்கும் குரலை சரி செய்யும் வழி தெரியவில்லை அவளுக்கு.

"என்னாச்சி செல்லா.? ஏன் திக்கற.?" பதறிப்போய் கேட்டான்.

நெற்றியின் வியர்வையை துடைத்துக் கொண்டவள் "இ.. இல்ல. நான் நல்லா.. இருக்கேன்.. பே.. பேச தயக்கமாக இ.. இருக்கு.." என்றவள் இடது கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.

சூர்யா தனக்குள் சிரித்தான்.

"நாம பிரெண்ட்ஸா இருக்கலாமா செல்லா.?" அவளின் தயக்கம் கண்டு கேட்டான்.

"ம்.‌.‌ ம்.. சரி.." என்றவள் அதற்கு மேல் முடியாமல் மேஜையிலிருந்த தண்ணீரை எடுத்து கடகடவென குடித்தாள்.

அவளின் பயமும் தயக்கமும் சூர்யாவுக்கு சுத்தமாக புரியவில்லை.

"ஆர் யூ ஓகே.?"

"நல்லாருக்கேன்.." என்றவள் வெகுவாக சிரமப்பட்டு "நீங்க எப்படி இருக்கிங்க?" என்றுக் கேட்டாள்.

"குட்.." என்றவனுக்கு குரல் மிருதுவாய் மாறியிருந்தது.

எவ்வளவோ பேச நினைத்தாள். ஆனால் முடியவில்லை.

"நா..‌ நான் அப்புறமா கால் பண்றேன்.." என்றவள் அவன் பதில் சொல்லும் முன்பே இணைப்பை துண்டித்து விட்டாள்.

எதிர் முனையிலிருந்த சூர்யா சிரித்தான். போனை நெற்றியில் அடித்துக் கொண்டவன்‌ தன்னை மறந்து சிரித்தான்.

"ஹேவ் எ நைஸ் டே.." என்று அவளுக்கு மெஸேஜ் அனுப்பி வைத்தான்.

குந்தவிக்கு குளிர் ஜுரம் மட்டும்தான் வரவில்லை.

"என்ன நினைச்சிருப்பான்.?" என்று யோசித்தே மனதில் நோய் கொண்டாள்.

மறுநாள் காலையில் வேலைக்கு புறப்பட்டவளுக்கு வழக்கம்போல நிறைய வேலைகளை தந்தாள் ஷீலா.

"இரக்கமே இல்ல உங்களுக்கு.." சிணுங்கியவளிடம் இடம் வலமாக தலையசைத்த ஷீலா "எனக்கு ஐஸ் வைக்காத.. போய் வேலையை பாரு.." என்று அனுப்பினாள்.

மதிய உணவுக்கான நேரம் வரும் முன்பே யஷ்வந்த் வந்து அவளை அழைத்துக் கொண்டு போனான்.

"நான் உருப்படாம போக நீங்கதான் காரணம்.." என்றவளை கண்டு கலகலவென நகைத்தவன் "வேணும்ன்னா நைட் ஷிப்ட்ல கூடவே இருந்து கூட ஷீலாவோடு டிரைனிங் எடு.." என்றான்.

அவன் விட மாட்டான் என்று அவளுக்கு தெரியும். அப்பாவையும், காதலனாய் அறிமுகமான ஆதீரனையும் தவிர வேறு எந்த ஆண்களோடும் அதிகம் பழகாதவள் இவனுடைய நட்பு கண்டும், சகோதர உரிமை கண்டும் குழம்பினாள். சரியான முறையில் நடந்துக் கொள்ளாமல் போகிறோமோ என்று கூட பயந்தாள்.

வழக்கம்போல அவளுக்கு உணவை பரிமாறினான்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தான்.

"குந்தவி.." அழைத்தான்.

நிமிர்ந்தவளின் கண்களை பார்த்தவன் "ஐ வாண்ட் சம் இன்பர்மேஷன்.." என்றான்.

குந்தவியின் முகம் வெளுக்க ஆரம்பித்தது.

"பர்ஸ்ட் விசயம் ஐ பிலீவ் யூ. இதை மறக்காத. ஐ ரெஸ்பெக்ட் யூ. அன்ட் ஐ வாண்ட் டூ ஹெல்ப் யூ.." என்றான்.

குந்தவி பதிலே பேசவில்லை.

"உங்க ஊர் எது.?"

மௌனமாய் இருந்தாள்.

"ஓகே. நீ ஏன் அந்த மாதிரி தொழில் செய்ய இறங்கினன்னு தெரிஞ்சிக்கலாமா? நீ உண்மையில் பி..பிராஸ்டியூட்டா.?" தயக்கமாக கேட்டான்.

தரையை பார்த்தவள் இல்லையென தலையசைத்தாள்.

"தென்.?"

"நான் என் யோசனையில் இல்ல அன்னைக்கு. ரொம்ப குழப்பம். ரொம்ப டிப்ரஷன். என்ன செய்றதுன்னு தெரியல. ஏன் வாழுறேன்னு புரியல. சூஸைட் பண்ணிக்கலாம்ன்னு ரோட் சைட் போனேன். ஆனா லாரியை கண்டும் பயம். அப்பதான் அவர் வந்தாரு.." என்றவள் முகத்தை பொத்திக் கொண்டாள்.

"ஐயாயிரம் ரூபாய் தரேன்னு சொன்னாரு. ஆனா ஐநூறு போதும்ன்னு சொல்லிட்டு அவரோடு போனேன் நான். அதை வச்சி விஷம் வாங்கலாம், சாக பிரச்சனை இருக்காதுன்னு நினைச்சேன்.." என்றவளுக்கு குரல் உடைந்து விட்டிருந்தது. யஷ்வந்தின் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலும் கை தவறி விட்டது.

"பைத்தியமா நீ?" என்றவனுக்கு குரல் சத்தமாக ஒலிக்க மறுத்தது.

"என் குடும்பம் அழிஞ்சி போச்சி சார். என்னால அழிஞ்சிடுச்சி. நான் ஏன் இருக்கணும்? வாழ தகுதியே இல்லாதவ நான்.." என்று குலுங்கியவளை பரிதாபமாக பார்த்தான் அவன்.

"தற்கொலை தப்பு குந்தவி. வாழ நமக்கு ஆயிரம் ரீசன் உண்டு.."

ஆமென தலையசைத்தவள் "லேட்டா புரிஞ்சது. ஆனா சூர்யாவை மீட் பண்ண பிறகு எந்த பக்கம் எப்படி மூவ் பண்றதுன்னு எனக்கு தெரியல. லைஃப் ஏதோ ஒரு சுழலுக்குள்ள சிக்கிட்ட மாதிரி, எந்த பக்கம் பார்த்தாலும் முட்டுசந்து இருக்கற மாதிரி, வாழ்க்கைக்குள்ள ப்ரீஸ் ஆகி நின்ன மாதிரி ஆகிடுச்சி.." என்றாள் சோகமாக.

யஷ்வந்துக்கு முதல் முறையாக தன் அத்தை மகனை பாராட்ட தோன்றியது. மரணத்தை நிறுத்தி விட்டவளுக்கு மேற்கொண்டு நகர வழியில்லாமல் போய் விட்டதை புரிந்துக் கொண்டான். அவள் சொன்னதை கேட்டு பரிதாபமாக இருந்தது. முட்டாளோ என்றும் தோன்றியது.

அவளின் கையை பற்றினான். முகத்தை விட்டு நகர்த்தினான். அவளின்‌ கண்ணீரை கண்டு கர்ச்சீப்பை எடுத்து நீட்டினான்.

"இட்ஸ் ஓகே.. இன்னைக்கு பயணத்தை தொடங்க முடியலன்னா நோ பிராப்ளம். கொஞ்ச நேரமே கொஞ்ச நாளோ தள்ளி போடலாம்.." என்றான்.

"ம்ம்.. அது லேட்டாதான் புரிஞ்சது.." என்றவள் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"ரொம்ப தேங்க்ஸ் சார். வாழ்க்கையே முற்றுப்புள்ளியா போச்சின்னு நினைச்சேன். நீங்க எனக்கு பண்ற ஹெல்ப்க்கு எப்படி கைமாறு செய்ய போறேன்னே தெரியல.." என்றாள்.

"ஜஸ்ட் பிரெண்டா இரு என்னோடு.." என்று கையை‌ நீட்டினான்.

அவனின் முகம் பார்த்தவள் சிறு புன்னகையோடு கைப்பற்றி குலுக்கினாள்.

"அவன்கிட்ட பேசலாமே.." மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்.

மீண்டும் முகம் வாடி போனாள்.

"பிரெண்ட்ன்னு சொல்லியிருக்க குந்தவி.. முதல்ல என்னை நம்பு. அப்புறம் உன் பிரச்சனையை சொல்லு. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு அறிவுரையோ, ஆப்சனோ சொல்றேன்.." என்று தைரியம் சொன்னான்.

உதட்டை கடித்தபடி தலை குனிந்தாள்.

"எ.. எப்படி சொல்றதுன்னு தெரியல சார்.." என்றவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

"அ.. அவர்.. அந்த நாள்.. நைட்க்கு பிறகு என்னால அவரை மறக்க முடியல. எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல. எனக்கே டிபிகல்டா இருக்கு.." என்றவள் தயக்கமாக அவனை பார்த்தாள். உதட்டை கடித்தவள் எப்படி சொல்வது என்று புரியாமல் தவித்தாள்.

"கொஞ்சம் பர்சனலா.." என்றவள் அவனின் முகம் பார்க்க தயங்கினாள்.‌‌ விசயத்தை அவனிடம் சொல்லவும் தயங்கினாள்.

"ஓ.. ஓகே.. ஓகே.. உனக்கு இஷ்டமில்லன்னா சொல்ல வேணாம். அவன்கிட்டயே பேசிக்க.." இடை மறித்து சொன்னான் யஷ்வந்த்.

அவனிடம் மட்டும் எப்படி சொல்வாள்?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN