அத்தியாயம் 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குணவதி மகனுக்காக பலகாரம் செய்துக் கொண்டிருந்தாள்.

"உன் அப்பா‌‌ தனியா கஷ்டப்படுறாரு.. நீ ஹெல்ப் பண்ணலாம் இல்லையா.?" எனக் கேட்டாள் மகனுக்கு சீடையை தட்டில் நிறைத்து தந்தபடி.

"பண்ணலாம் அம்மா.. கொஞ்ச நாள்.." என்றவன் பலகாரத்தை ருசிக்க ஆரம்பித்தான்.

"அடிக்கடி அந்த வீட்டுக்கு போகாதே வருண்.. உங்க அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா உன் தோலை உரிச்சிடுவாரு.."

"தெரியாதும்மா.‌ பிரெண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டாதானே போறேன் நான்.? அவர் கண்டுபிடிக்க மாட்டாரு.." என்ற மகனை முறைத்தவள் "உனக்கு எதுக்கு ரிஸ்க்? இந்த வீட்டுல இருந்து அங்கே போய் வருபவன் நீ மட்டும்தான்.? இப்படி ஒரு சொந்தம் இருப்பது கூட உன் தங்கச்சிக்கு தெரியாது. நீயும் கை காலை அடக்கி வச்சிட்டு இருக்கலாம் இல்ல.?" என்று காய்ந்து எடுத்தாள்.

இங்கிருந்தால் அப்பா ஆபிஸ்க்கு அழைத்து விடுவாரோ என்று எண்ணிதான் அவன் சித்தியின் வீட்டிற்கு சென்று அடிக்கடி டேரா போட்டுக் கொண்டிருந்தான்.

"இனி போகல விடுங்க.." என்றவன் எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் அங்கே கிளம்பி விடுவோம் என்று நம்பினான்.

"ஏன் ரோஜா செடிகளை பிடுங்கி எறிஞ்சிங்க?" சோகமாக கேட்டாள் சங்கவி.

அவளின் கால் நகங்களுக்கு நெயில்பாலிஷை தீண்டிக் கொண்டிருந்த ஆதீரன் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான். அந்த புன்னகையில் இதயம் கரைந்தாள் சங்கவி. அவனின் கண்கள் சிந்தும் காதலை முழுதாய் திருடி நெஞ்சுக்குள் பூட்டிக் கொள்ள விரும்பினாள். அவனின் மீசையை திருக சொல்லி பரபரத்தது கைகள் இரண்டும். அந்த மூக்கின் நுனியை கிள்ளி அவன் வலியில் முகம் சுளிப்பதை காண ஆசை வந்தது.

"உனக்கு அலர்ஜி. பிறகு ஏன் அது இங்கே இருக்கணும்.?" எனக் கேட்டான் அவன் அப்பாவியாக.

"ஆனா இருந்திருக்கலாம். அது உங்களை எந்த தொல்லையும் செய்யல.." வருத்தமாக சொன்னாள். செடிகள் இருந்து பூ பூத்திருந்தால் அக்காவின் புகைப்படத்திற்கு படைக்கவாவது பூக்கள் இருந்திருக்கும்.

கடைசி விரல் நகத்திற்கும் வண்ணம் தீட்டி முடித்தவன் நெயில் பாலிஷை அவள் கையில் தந்தான். குதிகாலை தூக்கி நகங்களின் மீது ஊதி விட்டான்‌. அவளுக்கு வெட்கம் பூத்தது. அடம் பிடித்து நெயில் பாலிஷ் தீட்டியிருந்தான்.

"ஏன் இருக்கணும்.? ஒன்னு உனக்கு யூஸா இருக்கணும். இல்லன்னா எனக்கு யூஸா இருக்கணும். இரண்டுமே இல்லன்னா பிடுங்கி போடுறதுல என்ன தப்பு?" எனக் கேட்டவன் அவளின் காதோரத்து தலைமுடியை காதின் பின்னால் சேர்த்தி விட்டான்.

அவளின் காதுகள் மென்மையாக இருந்தன. அவளின் கம்மலை சுட்டு விரலால் தட்டி விட்டான். பின்னால் சென்று வந்த கம்மலின் மீது முத்தமிட்டான்.

"அது என்ன எப்பவும் கம்மலுக்கு முத்தம் தரது.. தாலிக்கு முத்தம் தரது.." புரியாமல் கேட்டவளின் தாடையை பற்றி நிமிர்த்தியவன் "உனக்கு வேணும்ன்னா நேரா கேளு சங்கவி.. உன் ஆபரணங்களுக்கு தர கூடாதுன்னு சொல்லாத.." என்றான்.

அவள் பார்வையை தாழ்த்தினாள். புருவங்களுக்கு மத்தியில் அழுத்தமாக இதழ் பதித்தவன் "நீ எப்பவும் ஹேப்பியா என் பக்கத்துலயே இருக்கணும்.." என்றான்.

நாளை செய்ய வேண்டிய வேலைகளுக்கான பேப்பரை பார்த்தபடி தனது அறையில் அமர்ந்திருந்தாள் குந்தவி. யஷ்வந்த் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் இருந்தால் அனைத்தையும் விரைவில் கற்றுக் கொண்டு விடலாம் என்று நினைத்தாள். ஆனால் அவன் எங்கே விடுகிறான்.?

தனது வேலையில் கவனம் பதித்து இருந்தவளை சத்தமிட்டு அழைத்தது கைபேசி. சூர்யா அழைத்திருந்தான்.

செய்யும் வேலை மறந்து தயக்கத்தோடு அழைப்பை ஏற்றாள்.

"குன்டவி சாரி.." என்றான் எடுத்த எடுப்பிலேயே.

"ஏ.. ஏன்.?" என்றவளுக்கு வார்த்தைகள் வழக்கம்போல தந்தியடிக்க ஆரம்பித்தன.

"நீ அந்த மாதிரி பொண்ணுன்னு நினைச்சி உன்னை அப்ரோச் பண்ணிட்டேன். ஆனா எனக்கு முழுசா தெரியல. சாரி. உன்னை பிடிச்சிருந்தது. பார்த்ததும் ஏதோ ஈர்ப்பு. கதைன்னு நினைப்ப. ஆனா சத்யம். மனசு உன்னை நெருங்க சொன்னது. அதனால வந்தேன். ஆனா அப்புறம் நான் என் கன்டோல்ல இல்ல. ஹோட்டல் ரூம்ல நான் நானாவே இல்ல.." குந்தவி ஏன் தனக்கு ஓகே சொன்னாள் என்பதை யஷ்வந்த் சொல்லி அறிந்துக் கொண்டவனுக்கு மனது தானாய் பதறியது. அன்று அவளை விட்டிருந்தால் பிறகு எப்போதுமே அவளை பார்த்திருக்க முடியாது என்ற விசயம் அவனுக்கு பயத்தை தந்து விட்டது.

"ம்.." என்றவளுக்கு மேலே என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"யெஸ்.. நான் உன்னோடு செக்ஸ் வச்சிக்கதான் உன்னை அப்ரோச் பண்ணேன். இல்லன்னு சொல்லல.. பட் ஐ லைக் யூ. என்னை எப்படி நீ நினைப்பன்னு தெரியல. இதை நீ நம்புவியான்னு தெரியல. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு குன்டவி. ஐ லவ் யூ.."

மௌனமாய் இருந்தாள் இவள்.‌ ஆனால் அந்த ஐ லவ் யூவில் மனம் குளிர்ந்தது.

"நீ உடனே பதில் தர வேண்டியது இல்ல.. உனக்கு எப்ப சொல்ல தோணுதோ அப்ப சொல்லு. பிடிக்கலன்னு கூட சொல்லு. உனக்கு உரிமை உண்டு.." என்றவன் சில நொடிகளுக்கு பிறகு "என்னை மறந்துட்டியா குன்டவி.? அந்த டைம்ல என்னை என்னன்னு நினைச்ச.? இப்ப என்னவா நினைக்கற.?" என்றான் இறங்கிய குரலில்.

குந்தவி பெருமூச்சு விட்டாள்.

"தெரியல.. அந்த டைம்ல என் மைன்ட் என் கன்ட்ரோல்ல இல்ல.. என்ன நடந்ததுன்னு அப்ப புரியவே இல்ல.."‌ என்றாள் உண்மையை ஒத்துக் கொள்ளும் மனதோடு.

"ஓ.." என்றவனுக்கு கேட்கமாலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.‌ அவளை‌ நினைத்து கண்ட கனவு அனைத்தும் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று புரிந்துக் கொண்டான். அவளும் தன்னை நினைப்பாள் என்ற எண்ணம் உடைந்துக் கொண்டிருந்தது.

"இப்ப.." தயங்கினாள். "நான் எப்படி சொல்வது.? என்னால ஒரு செகண்ட் கூட உங்களை நினைக்காம இருக்க முடியல.." என்றாள்.

"குன்டவி.." அதிர்ச்சியாக அழைத்தான். இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

"அன்னைக்கே முழு மனசோடு இருந்திருக்கலாம்.. இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. அன்னைக்கு நடந்தது அப்படியே ரிப்பீட் மோட்ல எனக்கு மட்டும் நடந்துட்டு இருக்கற மாதிரி இருக்கு. தோள்ல ஆரம்பிச்சிங்க முத்தத்தை.. கடைசியா நெத்தியில் முடிஞ்சது அன்னைக்கு நைட்டுகான முத்தம்..‌ இடையில் ஓராயிரம் முத்தம். உங்க கைகள் தொட்ட இடம்.. உங்களோட உதடுகள் தொட்ட இடம்.. எதுவும் மறந்து போகாம மறைஞ்சி போகாம இப்ப என்னை பழி வாங்கிட்டு இருக்கு.. இப்ப கூட உங்க கை என் ஹிப்லயும் உங்க லிப்ஸ் என் காதோரத்திலும் இருக்கற மாதிரிதான் பீல் ஆகுது. உங்களோட ஆயிரம் பெண்களில் நானும் ஒருத்தியா இருக்கலாம்.. ஆனா எனக்கு நீங்க அப்படி இல்ல.. லவ்ன்னு தோணல. இப்ப வரைக்கும் கூட லவ்ன்னு தோணல. அதே சமயம் உங்களை மறக்க முடியல.." தன் நெஞ்சிலிருந்த உண்மையை மறைக்காமல் சொல்லி விட்டாள்.

"குன்டவி அப்படி பேசாதே.. நீ ஆயிரத்துக்குள் ஒருத்தி கிடையாது.." என்றவன் யோசித்துவிட்டு "அன்னைக்கு நடந்த எல்லாமே உனக்கு ஞாபகம் இருக்கா.?" என்று அவசரமாய் கேட்டான்.

"ம்.." என்றாள். ஒவ்வொரு நொடியுமே நினைவில் இருந்தது அவளுக்கு.

"நா.. நான் த்ரீ டைம்ஸ் பெயிலானேன்.. நான் சொல்ல வருவது உனக்கு புரிஞ்சிருக்கும். அந்த பெயிலியர்ஸ்தான் நான் ஒரு.. அது என்ன பையன்..?" என்று இவளிடமே திருப்பிக் கேட்டான்.

"புரியல.."

"ம்ம்ம்.. ஆங்.. கன்னி பையன்.. யெஸ்.. நான் ஒரு குட் பாய்.. கன்னிப் பையன்ங்கறதுக்கு அந்த பெயிலியர்ஸ்தான் சாட்சி.."

அவன் சொன்னது மண்டையில் ஏறியதும் சட்டென்று போனை தூக்கி கட்டிலின் மீது எறிந்தாள் குந்தவி. நாணத்தில் மொத்த முகமும் சிவக்க தன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள்.

"சுத்தம்.. கொஞ்சமும் வெட்கமே இல்லையா.? பட்டுன்னு இப்படி சொல்லிட்டாரு.." என்று முனகியவளுக்கு ஏன் அவனோடு பேச ஆரம்பித்தோம் என்று தோன்றியது. வெட்கம் அவனுக்கு வந்ததோ இல்லையோ அவளுக்கு வந்தது.

"குன்டவி.. குன்டவி.." போனில் அழைத்துக் கொண்டிருந்தான் அவன்.

தயக்கத்தோடு போனை எடுத்தாள்.

"குன்டவி.. ஆர் யூ ஆல்ரைட்.?"

"ம்.. இ.. இப்படி ஓபனாவா பேசுவாங்க.?" என்றாள் தடுமாறிய குரலில்.

"நான் ப்ளேபாய்ன்னு நீ நம்பிட்டு இருக்க.. அப்படின்னா நான் என்னை நிரூபிக்க உண்மையை சொல்லிதானே ஆகணும்.?" பரிதாபமாக கேட்டான்.

அவள் மீண்டும் மௌனமாகி கொண்டாள்.

"உனக்கு நம்பிக்கை வரலையா குந்தவி.?" தயக்கமாக கேட்டான். ஏனோ அவள் தன்னை நம்புவது மிக முக்கியமாக தோன்றியது இப்போது.

"நா.. நான் அப்புறம் போன் பண்றேன்.." சட்டென்று இணைப்பை துண்டித்துக் கொண்டவள் போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு கட்டிலில் விழுந்தாள்.

அவன் சொல்லும் வரை அவை பெயிலியர் என்றே அவளுக்கு தெரியாது. முத்தத்தில் விருப்பம் போல, அதனால்தான் மீண்டும் முத்த போரில் ஈடுப்பட்டு உள்ளான் என்று நினைத்திருந்தாள். அதுவும் இப்போது திரும்ப திரும்ப நடக்கும் கற்பனை கூடலில்தான் அறிந்திருந்தாள்.

தோல்வியை வெளி சொல்ல யாருக்குதான் பிடிக்கும்? ஆனால் அவன் தன்னை நிரூபிக்க தனது தோல்வியையே ஆதாரமாக சொல்லி விட்டானே என்று மனம் ஏதோ போலாகி விட்டது.

"நியாயப்படி நீதான் என்னை நிரூபிக்க சொல்லி கேட்டிருக்கணும் சூர்யா.. ஆனா நீ உன் பக்க புனிதத்தை நிரூபிக்கிற.." என்று புலம்பினாள்.

இடுப்பில் பதிந்தது இதழ்கள்.

"இந்த சாபத்துல இருந்து விடுதலையே கிடைக்காதா.?" புலம்பியபடி புரண்டு படுத்தாள்.

யஷ்வந்த் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அவனின் தங்கை தர்ஷினியும் சித்தப்பா மகள் யவனாவும் குந்தவியோடு சேர்ந்து அமர்ந்து உணவை உண்டுக் கொண்டிருந்தார்கள்.

"அம்மா சாப்பாடு எடுத்து வைங்க.." கை கடிகாரத்தை அணிந்தபடி வந்து அமர்ந்தான் யஷ்வந்த்.

அவன் சப்பாத்தியை பிட்டு வாயில் வைக்க இருந்த நேரத்தில் "சார்.." என்று அழைத்தார் வாசல் காப்பாளர்.

"என்ன அண்ணா.?" என்று திரும்பினாள் யவனா.

"யஷூ சாரை பார்க்க மேடம் ஒருத்தங்க வந்திருக்காங்க.." என்று சொன்னவர் நகர்ந்தார். தாரணி தரையை பார்த்தபடி நின்றிருந்தாள்.

"தாரு.." குழப்பமாக எழுந்து நின்ற யஷ்வந்த் "இங்கே என்ன பண்ற?" எனக் கேட்டான்.

நிமிர்ந்தவள் அவனை முறைத்தாள்.

"ஏனா என்னால என் வீட்டுல இருக்க முடியல. அதனால ஓடி வந்துட்டேன்.." என்றாள் காட்டமாக.

இடது கையால் நெற்றியை பிடித்தவன் "நான்தான் ஒரு வாரத்துல வரேன்னு சொன்னேனே.?" எனக் கேட்டான் கோபத்தோடு.

"நாலு மாசம் ஆச்சி.." என்று வலது கையின் நான்கு விரல்களை காட்டியவள் "என் பயம் புரியுதா.? என் கஷ்டம் புரியுதா.? போன் பண்ணா எனி டைமும் பிசி. அங்கே என் வீட்டுல மாப்பிள்ளை பார்க்கறாங்க.. உண்மையிலேயே லவ் பண்றிங்களா என்னை.? எனக்கு‌ வேற இடத்துல மேரேஜ் நடந்தா உங்களுக்கு பரவாயில்லையா.?" எனக் கேட்டாள்‌ கலங்கும் விழிகளோடு.

வீட்டிலிருந்த மொத்த பேரும் அதிர்ச்சியோடு அவளை பார்த்தார்கள்.

யஷ்வந்துக்கு கோபம்தான் வந்தது.

"உனக்கு வேற ஒருத்தனை கட்டி வைக்க விட மாட்டேன் தாரு.. எனக்கு டைட் செட்யூல்.. எனக்கு வீட்டுல பேச கூட டைம் இல்ல.." என்றவன் தனக்கு வெட்டுப்பட்டதை பற்றி சொல்லாமல் தவிர்த்தான்.

"நான் அடுத்த வாரம் வர இருந்தேன்.." என்றவன் கை கடிகாரத்தை பார்த்தான்.

"நீ உன் ஊருக்கு கிளம்பு.. வீட்டுல தேடுவாங்க.." என்றான்.

மறுப்பாக தலையசைத்தவள் "நான் இனி போக முடியாது. நான் ஓடி வந்துட்டேன்.. நான் இப்ப திரும்பி போனா என் அப்பாவும் அண்ணனும் என்னை கொன்னு போட்டுடுவாங்க.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN