காதல் கணவன் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மணி மாலை நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. குளித்து புது உடை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள் கீர்த்தனா.

கட்டிலில் இருந்தபடியே அவளின் கையை எட்டி பிடித்த பாலாஜி "கீர்த்தனா.." என்றான் சிணுங்கலாக.

"கொலை பண்ணிடுவேன் பார்த்துக்க.. அப்பாவி பையன் மாதிரி மூஞ்சியை வச்சிக்கிட்டு இல்லாத சேட்டையெல்லாம் செய்ற.." என்றாள் பொய் கோபத்தோடு.

உடம்பில் எங்கெங்கோ வலிப்பது போலவே இருந்தது.

"ஒரே ஒரு முத்தம் கொடு.." அவளின் கையை விடாமல் கேட்டான்.

அவனை முறைத்தாள்.

"உன்னை பத்தி எனக்கு தெரியாதா? ஒரு முத்தம் கேட்ப.. பக்கத்துல வந்தா அது நூறு முத்தமா மாறி போகும். எனக்கு இந்த விளையாட்டே வேணாம்.."

"நான் உன் புருசன்டி.. தாலியெல்லாம் கட்டி குங்குமமெல்லாம் வச்சி விட்டிருக்கேன்.."

அவன் இதை சொன்ன பிறகு உண்மையாகவே முறைத்தாள்.

"செருப்பு பிஞ்சிடும் பார்த்துக்க.. உன் கொஞ்சலுக்கு தடையா இருக்குன்னு தாலியை கழட்டினவன்தானே நீ? கல்யாணமான முதல் நாளே தாலியை கழட்டிட்ட.." என்றவள் கோபத்தோடு இடது கையால் தலையணையை எடுத்து அவனை அடித்தாள்.

"கழட்டும் போது சும்மா இருந்துட்டு இப்ப அடிக்கற பார்த்தியா நீ?" என கேட்டு சிரித்தவன் அவள் கையிலிருந்த தலையணையை பிடுங்கி தூர எறிந்தான். அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

"நீதான் கிஸ் பண்ணி என்னை டைவர்ட் பண்ணிட்ட.." தன் மீது பழியை தூக்கிப் போட்டவளை கண்டு நகைத்தவன் "நீ ஒரு கிஸ் கொடு. நான் தாலியை தரேன்.." என்றான்.

"நீ என்ன ரகமோ? மாலையை கூட கழட்ட கூடாதுன்னு சொன்ன.. ஆனா தாலியை கழட்டிட்ட.. எனக்கு மனசே சரியில்ல போ.." என்றவள் அவனை விட்டு விலக முயன்றாள்.

"நானே இருக்கேன். உனக்கு தாலி முக்கியமா போச்சா.?" என்றவன் அவளின் கன்னங்களை பற்றினான்.

தாடையில் முத்தமிட ஆரம்பித்தவன் எப்போது இதழுக்கு வந்தானோ.? அவள் அறியவேயில்லை. அவன் மீது இருந்தவளின் பின்னந்தலை எப்போது தலையணையை தொட்டதோ? அதையும் அறியவேயில்லை அவள். குளித்து விட்டு வந்திருந்தவளை மீண்டும் அழுக்காகினான் அவன். தன் நினைவை மறந்தவள் அவனின் மோகத்திற்குள் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.

ஐந்து மணிக்கு மீண்டுமொரு குளித்து விட்டு வந்த கீர்த்தனா தன் கணவனின் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு தாலியை பிடுங்கி கழுத்தில் போட்டுக் கொண்டாள்.

"இன்னொரு முறை நீ என் தாலியை கழட்டினா உன் கையை வெட்டிடுவேன்.." என்று மிரட்டி விட்டு வெளியே நடந்தாள்.

அவளை வெளியே விடமால் அவளுடைய முதுகை அணைத்துக் கொண்டவன் "நான் விட மாட்டேன் உன்னை.." என்றான் பிடிவாதமாக.

ஒரு காலத்தில் காதலிப்பாளா என்று ஏங்கி கிடந்தவன் இன்று உரிமையாய் மனைவியாகி விடவும் அவளை விலக்கவும் மனம் வராமல் இருந்தான்.

"உனக்கு என் மேல எவ்வளவு ஆசைன்னு புரியுது பாலா. நிஜமா எனக்கும் உன் மேல இதே ஆசைதான். ஆனா விசயம் என்னன்னா எனக்கு பசிக்குது. காலையில் மண்டபத்துல எங்க அப்பா முறைப்பை பார்த்தபடி கொஞ்சமா சாப்பிட்டது.. இப்ப ரொம்ப பசிக்குது.. நீ வேற என் மொத்த எனர்ஜியையும் திருடிக்கிட்ட.. நிற்கவே முடியல. அவ்வளவு பசி.."

அவசரமாக அவளை விட்டு விலகியவன் "சாரி கீர்த்தனா.. நான் இதை யோசிக்கல.. நான் போய் உனக்கு ஏதாவது சமைக்கிறேன்.." என்று நடந்தான்.

அவசரமாக அவனை எட்டி பிடித்து நிறுத்தியவள் "தயவு செஞ்சி மத்த நேரத்துல இதே மாதிரி பெட்ரூமை விட்டு வெளியே வந்துடாத. எதிர்காலத்துல திடீர் கெஸ்டுங்க கூட ஹால்ல இருப்பாங்க.. நம்ம பேமிலிக்குன்னு ஒரு மானம் மரியாதை இருக்கு. குளிச்சிட்டு மறக்காம டிரெஸ்ஸையும் போட்டுட்டு வெளியே வா.." என்றாள் கண்டிப்போடு.

"சொந்த வீட்டுல கூட நினைச்சபடி சுதந்திரமா நடமாட முடியாது போல.." முனகிக் கொண்டே குளியலறை நோக்கி நடந்தவனை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

அவன் குளித்து விட்டு வந்தபோது சாப்பாடு சுடசுட தயாராய் இருந்தது.

அப்போதும் அவளை இம்சை செய்து ஊட்டி விட்டால்தான் உணவு இறங்கும் என்று சொல்லி அவளுக்கு அவனே ஊட்டி விட்டான். அவள் பாவம் பார்த்து ஊட்டி விடுகையில் அவளின் விரல்களை பிடித்து கடித்து வைத்தான்.

"நீ இன்னொரு முறை என் விரலை கடிச்சி வச்சா அப்புறம் நான் உன் கண்ணை தோண்டிடுவேன்.." என்று எச்சரித்தாள். அவன்தான் அதை காதில் வாங்காமல் போனான்.

உணவு தட்டுகளை சுத்தம் செய்து கவிழ்த்தவளின் தோளில் வந்து முகம் பதித்தான்.

இடுப்பில் ஊறிய அவனின் கையை கிள்ளி வைத்தவள் "என்னை கொஞ்சம் நேரம் விடு பாலா.." என்றாள் சிறு சலிப்போடு.

"உன் பசி தீர்ந்துடுச்சி இல்லையா.? அப்புறமும் உனக்கு என்ன பிரச்சனை.?" எனக் கேட்டவன் அவளின் ஈர கூந்தலை விலக்கி அவளின் பின்னங்கழுத்தில் உதடு பதித்தான்.

'இன்னும் இரண்டு செகண்ட் போனா ஸ்லிப் ஆகிடுவேன்‌..' என்று தனக்குள் புலம்பியவள் அவசரமாய் பின்னால் திரும்பி அவனை தள்ளினாள்.

"நான் போய் வெற்றிக்கு போன் பண்ணி பேசிட்டு வரேன்.." என்று கிளம்பினாள்.

"அப்ப நான்.?" என கேட்டவனை திரும்பிப் பார்த்தாள். தொலைந்த நாய் குட்டி யாராவது தத்தெடுத்துக் கொள்வார்களா என்றுக் கண்களை உருட்டி பார்ப்பதை போல பார்த்தான் அவன்.

"அரை மணி நேரம் லீவ்.." என்றவள் அவன் அருகில் வருவது கண்டு அவனிடமிருந்து ஓடினாள்.

"ஓடி பிடிச்சி விளையாடலாமா கீர்த்து.? அப்புறம் தோத்துட்டா நீ ரொம்ப பீல் பண்ணுவ.." என்றவனை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டவள் "மொத்தமா மாறிட்ட பாலா.. எனக்கே பக்குன்னு இருக்கு.. லவ் சொல்றதுக்கே வக்கில்லாதவன்தானே நீ.? உனக்கு எதுக்கு இப்ப ரொமான்ஸ் மட்டும்?" எனக் கேட்டவள் ஹால் டீப்பாயின் மீதிருந்த தனது போனை எடுத்தாள்.

"அதுதான் எனக்கும் சேர்த்து நீயே லவ்வை சொல்லிட்டியே.. இப்ப உனக்கும் சேர்த்து நான் ரொமான்ஸ் பண்றேன்.." என்றவன் அவளின் முந்தானையை வலது கையால் சுருட்ட ஆரம்பித்தான்.

போனில் ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருப்பதை கண்டவள் குழப்பத்தோடு கணவனின் புறம் திரும்பினாள்.

"வீட்டுல இருந்து மொத்தமா எழுபத்தியெட்டு மிஸ்டு கால் வந்திருக்கு.." என்றாள்.

அவளின் போனை கண்டு அதிர்ந்தவன் "எதுக்கு இத்தனை.?" என்று குழம்பியடி சென்று தனது போனை எடுத்தான். அதிலும் ஐம்பதுக்கு மேற்பட்ட மிஸ்ட் கால்கள் இருந்தன.

"மக ஓடிப் போன துக்கத்துல உங்க‌ அப்பா‌ ரயில் முன்னாடி பாஞ்சிட்டாரோ.?" எனக் கேட்டவனின் தலையில் அடித்தவள் "வாயை பெட்ரோல் வாஷ் பண்ணு.." என்று‌ திட்டினாள்.

வெற்றிக்கு அழைத்தாள்.

"இத்தனை மிஸ்ட் கால் வந்தும் ஒரு முறை கூட காதுல கேட்காம போச்சே.." சந்தேகத்தோடு சொன்னவனை முறைத்தாள் அவள்.

"சனியனே.. எந்த சத்தத்தை காதுல கேட்க விட்ட நீ.?" என்று‌த் திட்டி தீர்த்தாள்.

"கீர்த்தனா.." வெற்றியின் குரலில் கவலை இருந்தது. "என்னாச்சி கீர்த்தனா.? ஏன் போன் எடுக்கல.? அவன் உன்னை ஏதாவது திட்டிட்டானா.?" கவலையோடு கேட்டான்.

"அதை விடு.. ஏன் எனக்கு இத்தனை மிஸ்ட் கால் வந்திருக்கு.?"

"கனி பாப்பா ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா கீர்த்தனா.. அதை சொல்லதான் கால் பண்ணேன் நான். மத்தவங்களும் பண்ணியிருக்காங்க போல. முடிஞ்சா வந்துட்டு போ கீர்த்தனா.." என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.

அதற்குள் பாலாஜியும் வளர்மதிக்கு அழைத்து விசயத்தை தெரிந்துக் கொண்டான்.

சந்தோசத்தோடு மனைவியை அணைத்தான்.

"என் பாப்பாவை யாரும் இனி ஸ்கூல்ல கிண்டல் பண்ண மாட்டாங்க.." என்றான் நிம்மதியோடு.

"இந்த சமூகம் ரொம்ப வித்தியாசம்.. எது வேணாலும் கேலி இவங்களுக்கு.." என்ற கீர்த்தனா தலையை வார ஆரம்பித்தாள்.

"நான் வீட்டுக்கு போறேன் பாலா. நீயும் வரியா.?" எனக் கேட்டாள். தயக்கமாகதான் கேட்டாள். அவன் வர மாட்டான் என்பது தெரிந்திருந்தும் கடமைக்காக கேட்டாள்.

"போலாம் கீர்த்தனா.." என்றவன் தனது பைக் சாவியை தேடி எடுத்தான்.

ஆச்சரியத்தோடு அவனை பார்த்தவள் "நிஜமா வரியா?" எனக் கேட்டாள்.

"ம்ம். கனிம்மா வாழ்க்கையில் இன்னைக்கு ஒரு முக்கிய நாள். நான் போகணும்.. மத்தவங்களை விட அவ எனக்குதான் செல்லம்.. நைட்ல அங்கே தூங்க முடியாது. கொஞ்ச நேரம் பார்த்துட்டு திரும்பி வந்துடலாம்.." என்று கிளம்பினான்.

"இத்தனை நாளா லவ் பண்ணேன். படுபாவி.. இன்னைக்கு புது ஆளா தெரியறான்.." தலையை சொறிந்தபடி அவனை பின்தொடர்ந்து ஓடினாள்.

பைக்கில் அமர்ந்தவன் அவளின் இரு கைகளையும் பற்றி தன் நெஞ்சின் குறுக்கே கட்டினான்.

"வீடு போய் சேரும் வரை இப்படியே‌ வரணும்.." என்றான் அவள் பக்கம் கழுத்தைத் திருப்பி.

"ரொம்ப‌ பண்ற பாலா.." என்றவளுக்கு பதில் சொல்லாமல் சிரித்தான்.

அவர்கள் வரும் வரையிலும் கூட மொத்த வீடும் பரபரப்பு குறையாமல்தான் இருந்தது. வாசலின் திண்ணையிலேயே பெரியதாக பச்சை ஓலை குடிசை வேயப்பட்டுக் கொண்டிருந்தது. சக்தி கடுப்போடு தோட்டக்காரர் சொல்வதை போல செய்துக் கொண்டிருந்தான்.

தேன்மொழிக்கு இப்படி எதுவுமே செய்யவில்லை. இவள் நாள் கழித்து பெரிய மனுசியானதால் இப்படி சடங்கு செய்துக் கொண்டிருந்தாள் பாட்டி. தாய்மாமன் இல்லாத பெண் என்பதால் சக்தியைதான் குடிசை அமைக்க சொன்னார்கள். தோட்டக்காரர்தான் முழுதாய் செய்துக் கொண்டிருந்தார். இவன் ஒப்புக்கு சப்பாணியாய்தான் இருந்தான். அப்படி இருந்தும் எரிச்சலாக இருந்தது.

மூன்று புறமும் பச்சை ஓலை அடைத்து கூரைக்கும் ஓலை வேய்ந்து குடிசை தயாரானது.

எறும்பு சாக்பீஸை குடிசையை சுற்றி ஐம்பது கோடு கிழித்து விட்டான் வெற்றி.

"ஒரு எறும்பு கூட கனி பக்கத்துல வர கூடாது.." என்றான்.

"அதுக்கு ஏன்டா இப்படி பண்றிங்க.? அவளை அவ ரூம்லயே தூங்க விட்டா வேலை முடியுது.." புலம்பினான் சக்தி.

"உனக்கு ஒரு வெங்காயமும் தெரியாது.. சொந்தக்காரங்க ஒவ்வொரு முறையும் எப்படியெல்லாம் கேட்டாங்க தெரியுமா.? தப்பு தப்பா கூட பேசினாங்க.. அவ நமக்குதான் குழந்தை. ஆனா ஊருக்கு பொண்ணு. அவளும் பெரிய மனுசியாகிட்டான்னு சொன்னாதான் இவங்களோட கேள்விகள் இனி குறையும்.." என்றவன் ஒன்று விட்ட அத்தைகள், மாமாக்களுக்கு அழைத்து விசயத்தை தெரிவித்தான்.

"ஆமா அத்தை.. எங்க கனி பாப்பாதான்.. இன்னைக்கு மதியம்தான்.. இல்ல.. அடுத்த வாரம்தான் பங்சன்.." என்று போன் பேசியபடி சென்றவனை விந்தையாக பார்த்த சக்தி தலையை இடம் வலமாக அசைத்தான்.

கீர்த்தனாவும் தேன்மொழியும் பெரிய மனுசி ஆனார்களா என்று கூட யாரும் இவனுக்கு சொல்லவில்லை. புதிதாக இருந்தது இவர்கள் செய்வது.

நல்ல நேரம் பார்த்து கனிமொழியை அழைத்து வந்து குடிசைக்குள் அமர வைத்தார்கள். தாவணிதான் அணிந்து இருந்தாள். வெற்றியையும் பாலாஜியையும் பார்த்து புன்னகைத்தவள் மறந்தும் சக்தியின் புறம் திரும்பவில்லை. அவளின் செய்கையே அவனுக்கு ஏகப்பட்ட எரிச்சலை தந்தது.

உறவுகள் ஒன்றிரண்டு பேர் மாலையில் வந்தார்கள். கனிமொழிக்கு ஏதேதோ வாங்கி தந்து விட்டு போனார்கள்.

"டேய் சக்தி.. இந்த கடலையையும் மிட்டாயையும் பாப்பா மடியில் கொட்டிட்டு வாடா.." என்று தட்டு நிறைய பொட்டுக்கடலையையும் மிட்டாயையும் கலந்து தந்தாள் அவனின் அம்மா.

"நிஜமா இப்படி செய்யணுமா?" தயக்கமாக கேட்டான்.

"நீதான் முதல்ல கொட்டியிருக்கணும்.. அதுக்குள்ள அவளோட சின்ன தாத்தா பசங்க வந்துட்டாங்க.. உரிமையே விட்டு போன மாதிரி இருக்கு எனக்கு. நீ போய் இதை கொட்டிட்டு வா.. அவ இது எல்லாத்தையும் சாப்பிடணும்ன்னு மிரட்டி சொல்லிட்டு வா.." என்றாள்.

பேந்த பேந்த விழித்தவன் அம்மா நீட்டிய தட்டை வாங்கினான்.

"குழந்தை புள்ளை.. அவளை போய் இந்த டார்ச்சர் பண்றாங்களே.." என புலம்பியபடி நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN