அத்தியாயம் 42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"போலிஸ் கம்ப்ளைண்டா.?" சந்தேகமாக கேட்ட யஷ்வந்திடம் "பொம்பள புள்ளை திடீர்ன்னு காணாம போனா போலிஸ் கம்ப்ளைண்ட்தானே செய்வாங்க.?" எனத் திருப்பிக் கேட்டாள் தாரணி.

"முட்டாள்.." என திட்டியவன் நெற்றியை பிடித்தபடி யோசித்தான்.

"போன் பண்ணு உன் வீட்டுக்கு.." என்று போனை நீட்டினான்.

மறுப்பாக தலையசைத்தாள். "எங்க அப்பா என்னை கொன்னுடுவாரு.." என்றாள்.

"ஏன்டி அதுக்குன்னு இப்படியே இருக்க போறியா.? சரி விடு. நீ போன் பண்ணாத.. நாளைக்கு காலையில் நாம உங்க வீட்டுக்கு போகலாம். நான் பேசிக்கிறேன்.." என்றவன் வெளியே செல்ல நடந்தான்.

அவசரமாக அவனின் கையை பற்றி நிறுத்தியவள் "வேணாம்.. எங்க அப்பா நம்ம இரண்டு பேரையும் கண்டம் துண்டமா வெட்டிப் போட்டுடுவாரு.." என்றாள் பயத்தோடு.

கண்ணாடியை பார்த்துக் கொண்டான்.

"இந்த பேஸை விட ஒரு நல்ல பேஸை எங்கே போய் தேடுவார் உங்க அப்பா.?" எனக் கேட்டான்.

அவனை முறைத்தாள் தாரணி.

"நான் பேசிக்கிறேன் டார்லிங்.. நீ பீல் பண்ணாம என் கூட வா.." என்றவன் "இப்ப பசி.. வா போய் சாப்பிடலாம்.." என்று அவளை இழுத்துச் சென்றான்.

குந்தவி கைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவனுக்கு அழைக்க தோன்றியது. தினமும் செய்திகளை தேடி தேடி படிக்கிறாள். அவனது நிறுவனத்தின் சந்தை மதிப்புகள் தினமும் கீழ் இறங்கிக் கொண்டே இருக்கிறது. அவன் தனது அயர்ச்சியை உணர்ந்தானோ இல்லையோ இவள் உணர்ந்தாள்.

வெகுநேரம் தயங்கி விட்டு அவனுக்கு அழைத்தாள்.

"செல்லா.." என்றான் எடுத்தவுடன்.

"நல்லாருக்கிங்களா.?"

"பைன் செல்லா.. நீ எப்படி இருக்க.? என்ன பண்ற.?" இயல்பாய் ஆரம்பித்தான் உரையாடலை.

குந்தவிக்குதான் முள்ளாய் ஏதோ குத்தியது. ஆதீரனை காதலித்த கணங்களும், காந்திமதியின் மிரட்டலும் கண் முன் வந்து போயின.

"நான் பிரெண்டா மட்டும்தான் உங்களோடு பேசுறேன்.." என்று ஆரம்பித்தாள்.

கலகலவென சிரித்தான். "இட்ஸ் ஓகே செல்லா.." என்றான்.

"ரொம்ப ஸ்ட்ரெஸ்டா பீல் பண்ணுவிங்க.. ஆனா தைரியமா இருங்க.. உங்களால எதுவும் முடியும். உங்களோட தோழி நான். ஏதாவது மனம் விட்டு பேசணும்ன்னா தாராளமா பேசுங்க.. நிறுவனத்தோட மதிப்பு சரிவதுக்காக பீல் பண்ணாதிங்க.."

"ம்ம்.. ஓகே செல்லா.." என்றவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். தலைக்கு மேல் வேலை இருந்தது. கால்களுக்கு ஓய்வு கொடுக்கவும் நேரம் இல்லை. ஆனாலும் இவளோடு பேசுவது தனது பணியை விடவும் முக்கியம் போல தோன்றியது.

"உங்களுக்கு ஏதாவது குட்டி ஹெல்ப் வேணும்ன்னா கூட கேளுங்க. என்னால முடிஞ்சதை செய்றேன்.." என்றாள்.

"இப்ப என் கை உன் மேல எங்கே இருக்கு.?" அவன் கேட்டதும் திகைத்தவள் கண்களை மூடியபடி "பாதத்துல.." என்றாள். பெருமூச்சை மறைத்துக் கொண்டாள்.

"எனக்கு இப்ப உன்னை கிஸ் பண்ணணும் போல இருக்கு.. ஸ்ட்ராங்கா.."

"நாம வெறும் பிரெண்ட்ஸ்ன்னு சொன்னேன்.. இப்படி தப்பா பேசாதிங்க.." கோபித்துக் கொள்வதை போல பேசினாள். அவன் அதற்கும் சிரித்தான்.

"மனசு விட்டு பிரெண்டா பேச சொன்ன. அதான் பேசினேன்.. பிரெண்டு நான் ஒரு விசயம் சொல்லட்டா.‌? நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். ஆனா அவ எனக்கு கிஸ் கூட தர மாட்டேங்கிறா.. பாவம் பார்த்து போன்ல கூட தரலாம்தான். ஆனா மனசு வரல அவளுக்கு.." என்றான் சோகமாக.

"உங்க பிரெண்டுக்கு வேலை இருக்கு. அதனால போனை கட் பண்றா.." என்றவள் சட்டென்று அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

மறுமுனையில் போனை பார்த்துக் கொண்டிருந்த சூர்யா தனது காலை உணவை உண்டபடி கலகலவென சிரித்தான்.

"சாப்பிடும்போது சிரிக்காதே.. அப்புறம் புரை ஏறும்.." என்று கண்டித்த பூங்கொடி கணவனுக்கு உணவை எடுத்துக் கொண்டு அவர் இருந்த அறைக்கு கிளம்பினாள்.

மனைவியை கண்டதும் புன்னகைத்தார் அலெக்ஸ்‌.

"ஆ காட்டுங்க.." என்று உணவை ஊட்டி விட ஆரம்பித்தாள் பூங்கொடி.

"குழந்தை போல ட்ரீட் பண்ற.." என்றவரை முறைத்தவள் "வாயை மூடிட்டு சாப்பிடுங்க.. வருசம் முழுக்க குறை சொல்லணுமா.?" என்று சீறினாள்.

"நீ மனுசியே இல்ல.. எங்க பாட்டி ஏமாந்துப் போய் உன்னை மாதிரி ஒரு பைத்தியத்தை எனக்கு கட்டி வச்சிட்டாங்க.." என்றவரின் காதை திருகினாள்.

இரவு உணவு உண்ண மனைவியோடு வந்த யஷ்வந்த் குந்தவி அங்கே இல்லாததை கண்டு "இவ ஒருத்தி. சாப்பிட கூட வெத்தலை பாக்கு வைக்கணும் போல.." என்று திட்டினான்.

யாரை சொல்கிறான் என்று புரியாத தாரணி அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்தாள். ஒருவரும் நிமிரவில்லை. மனோகர் மட்டும் தண்ணீரை எடுத்து பருகினார்.

"உட்காருங்க அண்ணி.." யவனா தன்னருகே இருந்த இருக்கையை கை காட்டினாள். தயங்கியபடி அமர்ந்தாள் தாரணி.

"சாப்பிட வா.." குந்தவியின் போனுக்கு மெஸேஜை அனுப்பிவிட்டு அமர்ந்தான் யஷ்வந்த்.

பரிமாறுபவர்கள் வந்தார்கள். தாரணியை தயக்கமாக பார்த்தபடியே உணவை பரிமாறினார்கள்.

"அவளுக்கு கொஞ்சம் சேர்த்து வைங்க.. வஞ்சனை இல்லாம சாப்பிடுவா.." என்ற யஷ்வந்த் தனது உணவை உண்ண ஆரம்பித்தான்.

யஷ்வந்த் சொன்னது கேட்டு கன்னங்கள் சிவந்து போனது தாரணிக்கு. ஆனால் அவன் சொல்வது உண்மைதான். வீட்டார் முன்னால் தயங்கி விட்டால் பிறகு இரவு முழுக்க இவள்தான் பட்டினியாக உருளுவாள். காலையிலிருந்து வேறு சாப்பிடவில்லை. மூன்று வேளைக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டும்.

யவனா தன் அண்ணியின் கை பற்றினாள். நிமிர்ந்தவளை பார்த்து புன்னகைத்தாள். சினேக புன்னகை தாரணிக்கு பிடித்திருந்தது.

குந்தவி போனை பார்த்தபடியே வந்து சேர்ந்தாள்.

"பிசியா.?" எனக் கேட்ட யஷ்வந்தின் மறு பக்கத்தில் அமர்ந்தவள் "இல்லைங்க சார்.. சும்மாதான்.." என்றாள்.

தன் கணவன் குந்தவியோடு மட்டும் தனி நெருக்கம் காட்டுவதை தாரணி புரிந்துக் கொண்டாள். என்னவோ உறுத்தல் போல தோன்றியது அவளுக்கு.

மனோகர் முதலில் சாப்பிட்டு விட்டு எழுந்தார்.

"வர வர இந்த வீடு அன்ன சத்திரம் போல மாறிடுச்சி.." என்றார் எரிச்சலாக.

உணவை கையில் எடுத்த குந்தவி மீண்டும் தட்டிலேயே உணவை வைத்து விட்டாள். தலை குனிந்துக் கொண்டவளுக்கு விழிகள் கலங்கியது.

"என்னைதானே சொல்றிங்க.?" தாரணி முறைப்போடு கேட்டாள். "வேணாம் தாரணி.." எச்சரித்தான் யஷ்வந்த்.

அவளை ஏற இறங்க பார்த்த மனோகர் "ஆமா அதுக்கு என்ன.?" எனக் கேட்டார்.

"இன்னொரு முறை இப்படி சொல்லாதிங்க.. அப்புறம் நான் உங்க பையனை இழுத்துட்டு வெளியே போயிடுவேன். ஆசை மகனை இழந்துட்டு கடைசியில் சோறு இருந்தும் சாப்பிட முடியாத நிலைக்கு நீங்கதான் போவிங்க.." என்ற தாரணி உணவை அள்ளி வாய் நிறைய நிறைத்தாள்.

"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்னையே எதிர்த்தா பேசுவ.?" எனக் கேட்டவரை வெறித்தவள் "யஷூங்கறது உங்க பிராண்ட்.. ஆனா யஷூங்கறது இப்ப என் புருசன். பிராண்ட் நேமை காப்பாத்திக்கவாவது உங்க வாயை மூடிட்டு இருங்க.. தேவையில்லாம என்னை சீண்டாதிங்க.. நான் ஒன்னும் உங்க வீட்டுக்கு பிச்சைக்காரியா வரல. உங்க மகனுக்கு வொய்ப்பா வந்திருக்கேன். உங்க மனைவிக்கு இருக்கும் அதே ரைட்ஸ், உங்களுக்கு இந்த வீட்டுல இருக்கும் அதே ரைட்ஸ் எனக்கும் இருக்கு.. அதனால சமமானவங்களை சமமா நடத்த பழகுங்க.." என்றாள்‌.

"முடிஞ்சது.." இடது கையால் நெற்றியில் அடித்தபடி தலை குனிந்தான் யஷ்வந்த்.

மனோகரின் முகம் மட்டுமல்ல அங்கிருந்த மொத்த பேரின் முகமும் கூட கறுத்து விட்டது. மனோகரின் நேர் நின்று கூட யாரும் பேசியதில்லை. ஆனால் இவள் இப்படி பேசி விட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டது.

"பஜாரியை கட்டி வந்திருக்கான்.. இவளை ஏன் கட்டினோம்ன்னு நீ பீல் பண்ணுவ.." என்றவர் இவளை எப்படி கவிழ்ப்பது என்ற யோசனையோடு அங்கிருந்து நகர்ந்தார்.

"உங்க வொய்ப் பண்ணாத பீலா என் ஹஸ்பண்ட் பண்ணிட போறாரு.?" என்று சத்தமாக கேட்டவளை திரும்பிப் பார்த்து முறைத்தார்.

அன்று இரவு யாருக்குமே உணவு சரியாய் இறங்கவில்லை. குந்தவியும் கூட பாதியில் எழுந்துக் கொண்டாள். தாரணி மட்டும் முழுதாய் உண்டு விட்டு எழுந்தாள்.

"எங்க அப்பாவை கோபப்படுத்தாத தாரணி.. என் கல்யாணத்தை வச்சி நிறைய கனவுகள், டீலிங்க்ஸை யோசிச்சி வச்சிருந்தாரு. அது கலைஞ்சதுல பீல் பண்றாரு.. நீ கொஞ்ச நாள் டைம் கொடு.. எல்லாம் சரியா போயிடும்.." என்றான்.

குளிர் காட்டின் நடுவே நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. காந்திமதியை அணைத்தபடி அமர்ந்திருந்தார் காத்தவராயன். ஜீப் முழுதாய் கீழே விழாமல் ஒரு சரிவில் இருந்த பெரிய மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து மரத்திற்கு மாறி அங்கிருந்து அருகே இருந்த சமதளம் ஒன்றிற்கு தாவினார்கள் இருவரும். ஜீப்பிலிருந்த அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டாலும் கூட எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்று இருவருக்குமே புரியவில்லை.

உயிர் பிழைத்தது பெரிய விசயமாக தோன்றியது அவருக்கு. பாக்கெட்டிலிருந்த லைட்டரை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கி விட்டார். ஆனாலும் அந்த அடர்காட்டில் தங்கியிருக்க சற்று பயமாகத்தான் இருந்தது.

காந்திமதியின் அருகே நெருப்பில் வெந்த காட்டு பறவை ஒன்று உணவாக இருந்தது. பசிப்பது போல இருந்ததால் பறவையை கையில் எடுத்து கடித்து இழுக்க ஆரம்பித்தாள். கணப்பில் கையை காட்டி குளிர் நீங்க செய்த காத்தவராயன் "அவன் நிஜமாவே என் பையன் இல்லையா.?" எனக் கேட்டார்.

உண்ணுவதை நிறுத்தி விட்டு அவரை பார்த்தாள் காந்திமதி. கண்கள் கலங்கியது அவளுக்கு. தலையை குனிந்தவள் இல்லையெனும் விதமாக தலையை அசைத்தாள்.

"என்ன ஆச்சின்னு சொல்ல மாட்டதானே.?"

அவள் பதில் சொல்லவில்லை.

பெருமூச்சு விட்டுக் கொண்டவர் நெருப்பை வெறித்தார்.

"நெஞ்செல்லாம் வலிச்சிட்டே இருக்கு மதி.. ரொம்ப வருசமா வலிக்குது.. காரணம் தெரிஞ்சா வலி குறைய கொஞ்சம் வாய்ப்பு இருக்கும்.."

"என்னை விட்டுடு.. நான் போறேன்.." என்றவள் எழ முயன்றாள்.

அவளின் கையை பற்றி இழுத்து அமர வைத்தவர் "நான் எதையும் கேட்கல.." என்றார்.

காந்திமதி மௌனமாக கையிலிருந்த சுட்ட மாமிசத்தை பார்த்தாள். அவரிடம் நீட்டினாள்.

"எனக்கு வேணாம் நீயே சாப்பிடு.." என்றவரிடம் மறுப்பாக தலையசைத்தாள். பெருமூச்சோடு வாங்கிக் கொண்டார்.

அருகே இருந்த தண்ணீரை நீட்டினார். கையை சுத்தம் செய்துக் கொண்டாள்.

மனம் பாரமாக இருந்தது.

"நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா.?"

முட்டியை கட்டியபடி அமர்ந்திருந்தவர் மண் தரையில் சம்மணமிட்டார். கையை தலைக்கடியில் தந்தபடி அவரின் மடி சாய்ந்தாள். அவரின் கால் நகத்தை நிரண்டினாள்.

அவளின் தலையை வருடி விட்டார் காத்தவராயன். எப்போது கேட்டாலும் இப்படியேதான் மனம் வாடி போனாள். அவரால் எதையும் யூகிக்க முடியவில்லை. அப்படி என்ன நடந்ததென்று கண்டறியவும் முடியவில்லை. அதட்டி கேட்டால் அழுதாள். கெஞ்சிக் கேட்டாலும் அழுதாள்.

அவளின் காதலை முதலும் முடிவுமாக அறிந்து வைத்திருப்பவர் அவர். அவள் தனக்கு துரோகம் செய்வாள் என்பதை கனவிலும் நினைக்க முடியவில்லை அவரால். எது எப்படியோ அவள் எதை காரணம் காட்டி முடங்கினாலும் அவரும்தான் வலியை உணர்ந்தார்.

காலை விடிந்ததும் வீட்டில் சொல்லிக் கொண்டு தனது மாமியார் வீடு புறப்பட்டான் யஷ்வந்த்.

அவன் காரில் ஏறியதும் அவசரமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டனர் யவனாவும் தர்ஷினியும்.

"நீங்க ஏன்.?" டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த யஷ்வந்த் தங்கைகளை திரும்பிப் பார்த்து கேட்டான்.

"உன் சேப்டிக்கு பையா.. இவங்க வீட்டுல யாராவது ஏதாவது பண்ணிட்டாங்கன்னா.?" என்று தலை சாய்த்து கேட்டாள் யவனா.

அவனுக்கு முன்னால் இருந்த ஜீப்பில் அவனது பாடிகார்ட்ஸ் ஏற்கனவே நிரம்பி இருந்தனர். அப்படி இருக்கையில் இவர்கள் எதற்கு என நினைத்தவன் பதில் பேசாமல் காரை எடுத்தான்.

எள்ளோடு காயும் எலி புழுக்கையாக கிளம்பிய யவனா இந்த பயணத்தில் தனது வருங்கால கணவனை பார்ப்போம் என்று அறிவாளா.?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN