காதல் கணவன் 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மணி மாலை நான்கு.

கனிமொழி தனியாய் குடிசைக்குள் அமர்ந்திருந்தாள். கவனத்தோடு கேம் விளையாடிக் கொண்டிருந்தவள் தன் அருகே வந்த சக்தியை கவனிக்காமல் போய் விட்டாள்.

"என்ன பாப்பா பண்ற?" அவளருகே குத்துக்காலிட்டு அமர்ந்தபடி கேட்டவனின் குரலில் துள்ளி விழுந்தவள் அவனின் முகம் பார்த்ததும் சட்டென்று தலை குனிந்துக் கொண்டாள்.

"இங்கே வர கூடாது மாமா.. வெளியே போ.." என்றாள் அவசரமாக.

"பள்ளிக்கூடம் லீவ் போட்டுட்டு சும்மா உட்கார்ந்திருக்க.. இப்பவும் கூட கேம்தான் ஆடுற.. உனக்கு பொறுப்பே இல்லையா பாப்பா..?"

"வெண்ணை மகனே.." என்று எரிச்சலாக முணுமுணுத்தவள் "ஒரு வாரம் சேர்ந்து படிச்சா மட்டும் நான் நெப்டீயூனை ஆராய்ச்சி செய்ய போற குரூப்ல ஃப்ரீ ஜாயின் ஆக போறேனே.? அதே மார்க்குதான்.. மிஞ்சி போனா இரண்டு நாலு மார்க் குறைஞ்சி போகும். அதுக்காக ஏன் என்னை இம்சை பண்ற.? மரியாதையா வெளியே போ.. இல்லன்னா நான் பாட்டியை கூப்பிடுவேன்.." என்றாள்.

"வீட்டுல யாரும் இல்ல.. எல்லோரும் உனக்கு பண்ற விசேசத்துக்கு ஏதேதோ வாங்கிட்டு வரவும், சொந்தக்காரங்ககிட்ட சொல்லிட்டு வரவும் போயிருக்காங்க.." என்றவன் அவளருகே இருந்த ஸ்வீட் தட்டிலிருந்து லட்டு ஒன்றை எடுத்து கடித்தான்.

"அதையெல்லாம் நீ சாப்பிட கூடாது மாமா.." அழாத குறையாக சொன்னாள்.

"நீ ஒருத்தியே திங்கணுமா.? ஒண்டித்தீனி கழுதை.." என்றவன் முழு லட்டையும் ஒரே வாயில் போட்டுக் கொண்டான்.

"ஆமா நீ ஏன் என்னை நேரா பார்க்க மாட்டேங்கிற.? உன் அண்ணனுங்களை வேற மாதிரியும் என்னை வேற மாதிரியும் ட்ரீட் பண்ற.?" சந்தேகமாக கேட்டான்.

"என்ன இருந்தாலும் நீ எனக்கு மாமா முறைதானே.?" என்றவளை காணுகையில் எரிச்சல்தான் வந்தது.

"என்னடி மாமன்.?" என்றவனை நிமிர்ந்து முறைத்தவள் "என் அண்ணனுங்க என்னை டி போட்டு கூப்பிட மாட்டாங்க மாமா.. அதுலயே வித்தியாசம் இருக்கு.." என்றாள்.

சக்தி தலையை சொறிந்துக் கொண்டான்.

"இத்தனை நாளா அப்படிதான் கூப்பிடுறேன்.." என்றவனை நன்றாக புரிந்துக் கொண்டாள், சில விசயங்களை இவனாய் புரிந்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று

"அவங்க என் அண்ணன்ங்க. நீ என் மாமன். முறை மாமன். அவங்க இடத்துக்கு நீ வர முடியாது. உன் இடத்துக்கு அவங்களும் வர முடியாது.." என்றாள்.

சில நொடிகள் அவளை குறுகுறுவென பார்த்தவன் "அட மெண்டலே.." என்று சிரித்தான்.

"அவங்களை விட நான் எந்த விதத்திலும் மாறுபடல.." என்று சொல்லியபடி இரு கைகளாலும் அவளின் தலையை பற்றினான். அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"பெரியவங்க ஏதேதோ சொல்வாங்க.. நீயா கண்டதையும் நினைச்சி குழம்பிக்கிட்டு இருக்காத.. நாம எப்பவும் அதே சக்தி கனிதான்.." என்றான்.

'அடப்பாவி.. சடங்கான பொண்ணு பக்கத்துல உன் நிழல் கூட விழ கூடாதுன்னு துரத்தி விட்டாங்க.. முத்தம் கொடுத்து வச்சிட்டியேடா..' என்று தனக்குள் புலம்பினாள். இது மட்டும் வீட்டில் யாருக்காவது தெரிந்தால் பஞ்சாயத்து நிச்சயம் என்று புரிந்து பயந்தாள்.

அவனோ எதுவும் நடக்காதது போல இன்னொரு லட்டை கையில் எடுத்தான்.

"போனை கீழே வச்சிட்டு ஹோம்வொர்க் பண்ணு.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனான்.

கனிமொழி நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

இரவு நெருங்கியது. தாமதமாக வீடு வந்தான் வெற்றி. கனிமொழியிடம் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை நீட்டினான்.

"குட் நைட்.." என்றவன் சாப்பிடாமல் யாரிடமும் எதுவும் பேசாமல் கட்டிலில் படுத்தான்.‌ தலையோடு போர்த்திக் கொண்டான்.

"வெற்றி வாடா சாப்பிடுவ.." வளர்மதி வந்து அழைத்தாள்.

"சாப்பிட்டு வந்துட்டேன் சித்தி.." என்றவன் கவிழ்ந்து படுத்தான். சற்று நேரத்தில் உறங்கி போனான். அவனை மீண்டுமொரு முறை சாப்பிட அழைக்கலாம் என்று வந்த தேன்மொழி அவன் மீதிருந்து வந்த மது வாசம் கண்டு பற்களை அரைத்தாள். அவனின் தலையில் கொட்டு வைக்க போனாள்.

"இப்ப வேணாம்.. வலிக்காது இவனுக்கு.." என்று திட்டிவிட்டு திரும்பி போனாள்.

காலை விடிந்தது. கீர்த்தனா பாத்ரூமில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு கண் விழித்தான் பாலாஜி.

குழப்பத்தோடு எழுந்தவன் அவளின் அருகே சென்றான்.

"என்னாச்சி கீர்த்தனா.? ப்ரகனென்டா இருக்கியா.? கல்யாணமான மூனு நாள்லயே பாப்பா வந்துடுச்சா. நிஜமாவா.? ஐஐஐ... ஜாலி.." என்று மகிழ்ந்தவன் "ஐயா கிங்குன்னு இப்பவாவது தெரிஞ்சதா.?" என்று தலையை கோதி விட்டுக்கொண்டு கேட்டான்.

அவனை ஆத்திரத்தோடு பார்த்தவள் வாயை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"லூசாடா நீ.? மூனு நாள்ல யாராவது பிரகனென்ட் ஆக முடியுமா.? அப்படி ஆனாலும் கூட சிம்டம்ஸ் தெரியவே சில வாரங்கள் ஆகும்.." என்றவளை சந்தேகமாக பார்த்தவன் "அப்புறம் ஏன் வாமிட் பண்ண.?" எனக் கேட்டான்.

"அஜீரண கோளாறு பக்கி.. நைட்டெல்லாம் தூங்கவே விடுறது இல்ல.. நைட் முழுக்க விழிச்சிருந்தா எனக்கு இப்படிதான் ஆகும்.." என்றாள் வெளியே வந்து.

"ஓ.." என்றவன் அவளின் தலையை‌ வருடி தந்தான்.

"நான் கூட சீக்கிரத்துல சந்தோசப்பட்டுட்டேன்.. சரி விடு.. சில வாரம்தானே.?" என்றவனை விழிகள் விரித்து திகிலாய் பார்த்தாள்.

"இனி நைட்ல என்னை டிஸ்டர்ப் பண்ணாத.. நான் தூங்கணும்.."

"அநியாயமா பேசாத கீர்த்து.. ஹனிமூன்க்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கேன் நான்.. கனியோட பங்ஷன் முடிஞ்சதும் இரண்டு பேரும் ஊட்டி போறோம்.." என்றான் கண்ணடித்து.

"நீ இப்ப இந்த அளவுக்கு என்னை டார்ச்சர் செய்வன்னு அப்ப யாராவது சொல்லியிருந்தா சிரிச்சிரிப்பேன்.." என்றவள் தலையை பிடித்தபடி வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சுடு தேனீர் கோப்பையை கொண்டு வந்து அவளிடம் நீட்டினான் பாலாஜி.

"கொஞ்சம் கருணையாவது இருக்கே.." என்றபடி வாங்கி தேனீரை பருகினாள்.

தேனீரை குடித்து முடித்தவள் கோப்பையை தரையில் வைத்தாள். தனது கோப்பையையும் கீழே வைத்தவன் அவளை நெருங்கினான்.

"என்ன பண்ற?" சலிப்பாக கேட்டாள்.

"டீ போட்டு தந்தேனே.. அதுக்கு பதில் வசூல்.." என்றவன் அவளின் இதழோடு தன் இதழை பதிய செய்தான்.

கனிமொழியின் குடிசைக்கு வெட்டிய தென்னங்கீற்றின் அடிப்பாக மட்டை திண்ணையின் ஓரத்தில் அனாதையாக கிடந்தது. மூக்கு சிவக்க மட்டையை கையில் எடுத்தாள் தேன்மொழி.

தன்னை மறந்து பொழுது விடிந்ததும் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த வெற்றியின் அருகே வந்தவள் அவனின் காலில் மட்டையை வைத்து தட்டினாள்.

"என்ன பண்ற.?" சந்தேகமாக கேட்டாள் கனிமொழி.

"ஷ்ஷ்." வாயின் மீது சுட்டு விரல் வைத்து எச்சரித்தவள் வெற்றி எழும் வரை அவனின் காலில் தட்டிக் கொண்டிருந்தாள்.

கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தான் வெற்றி. தன் முன் இருந்த தங்கையை பார்த்தவன் "குட் மார்னிங் தேனு.." என்றான்.

அவனின் கை மீது ஒரு அடியை போட்டாள். விசையாய் இல்லைதான். ஆனால் அதுவும் அடிதான்.

"அம்மா.." கையை உதறிக் கொண்டவன் "ஏன் பாப்பா.?" எனக் கேட்டான்.

"நைட்டு ஏன் குடிச்சிட்டு வந்த.?" எனக் கோபமாக கேட்டாள்.

"என்னது.? வெற்றி குடிச்சிட்டு வந்தானா.?" சத்தமாக கேட்ட கனிமொழியின் புறம் திரும்பியவன் "கத்தாத பாப்பா.. வீட்டுல யாருக்காவது கேட்டுட போகுது.." என்றான் கெஞ்சலாக.

மீண்டும் அவன் கையில் அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தான். தேன்மொழி முறைப்போடு நின்றுக் கொண்டிருந்தாள்.

"வீட்டுக்கு பெரிய பையன்.. கொஞ்சமாவது உனக்கு மெச்சூரிட்டி இருக்கா.? யாரை கேட்டு குடிச்ச நீ.? அந்த டப்பா வாய் பிரதர் முத்துராம் அண்ணாதானே உன்னை குடிக்க வச்சி கெடுக்கறது.? அவன் வரட்டும் இரு.. அவன் வாயை உடைச்சி வைக்கிறேன்.." என்று மிரட்டியவள் அவனின் கையில் இன்னொரு அடியை சேர்த்து தந்துவிட்டு நகர்ந்தாள்.

'நண்பன் ஒருவனாவது வேணும்.. தப்பு நாம பண்ணாலும் பழி மட்டும் அவங்களை போய் சேரும்.. என் பிரண்டை போல யாரு மச்சி..' என்று மனதுக்குள் பாடியபடி கீழே இறங்கிய வெற்றியை நெருப்பு கண்களை கொண்டு முறைத்தாள் கனிமொழி.

"அவ அடிச்சதே வலிக்குது பாப்பா.." என்று கைகளின் முட்டிகளை காட்டினான்.

"நேத்து ஸ்ட்ரெஸ் அதிகம். அதான் சும்மா ஒரு கால் கிளாஸ் குடிச்சேன்.." என்றவன் போர்வையை மடித்து வைத்துவிட்டு கனிமொழியின் கண்களை சந்திக்காமலேயே வீட்டுக்குள் ஓடினான்.

நேரம் நகர்ந்தது.

கனிமொழியை குளிக்க அழைத்துப் போனாள் தேன்மொழி. வீட்டின் பின்னால் தென்னந் தடுக்கால் வேயப்பட்ட பாத்ரூம் அது.

"நான் வெளியே நிற்கறேன் கனி.." என்று சொல்லிவிட்டு அவளை உள்ளே அனுப்பினாள் தேன்மொழி.

அவள் குளித்து விட்டு வந்தபோது தேன்மொழி அங்கே இல்லை. தோட்டத்தில் ஓரிடத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தாள்.

ஈர தலை முடியை ஒற்றை கையால் வருடி விட்டபடி வீட்டை நோக்கி‌ நடந்தாள். தன் காரின் அருகே நின்று கண்ணாடியை துடைத்துக் கொண்டு இருந்தான் சக்தி.

தயக்கமாக அவனருகே சென்றாள்.

"மாமா.." என்றாள்.

திரும்பியவன் இவளை கண்டதும் புன்னகைத்தான்.

"பரவால்ல கனி.. மாமா வேணாம்.. பழையபடி நீ சக்தின்னே கூப்பிடு.." என்றான்.

தயக்கத்தோடு தரை பார்த்தவள் "இனி நான் வாங்க போங்கன்னு கூப்பிடலாம்ன்னு இருக்கேன் மாமா.." என்றாள்.

அதிர்ச்சியோடு அவளை பார்த்தவன் சில நொடிகளுக்கு பிறகு கலகலவென சிரித்தான். அவள் ஜோக் செய்யவில்லை என்பதை தாமதமாகதான் புரிந்துக் கொண்டான்.

"பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டியா.? சூப்பர் முடிவு.. உன் அண்ணனுங்களும் கூட சந்தோசப்படுவாங்க.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் "இல்ல.. உங்களுக்கு மட்டும் மரியாதை தரலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.." என்றாள்.

உதடு பிதுக்கினான். "என்னவோ செய்.." என்றுவிட்டு மீண்டும் காரை துடைக்க ஆரம்பித்தான்.

"மாமா.."

"ம்.."

"ஐ லவ் யூ.."

குழப்பத்தோடு அவள் புறம் திரும்பியவன் புரியாமலேயே அவளை பார்த்தான்.

"எனக்கு உங்களை பிடிச்சிருக்கு மாமா.. ரொம்ப நாளா சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனா பயமா இருந்தது. உங்களை லவ்வரா லவ் பண்றேன்.." என்றவளின் இரு பக்க தோளிலும் கை பதித்தான்.

"பாப்பா.. உனக்கு என்ன ஆச்சி.? குழந்தை நீ. குழந்தை மாதிரி இரு.. உனக்கு தெரியாத விசயமெல்லாம் பேசிட்டு இருக்காத.." என்றான் மென்மையாக.

"இல்ல மாமா.. எனக்கு தெரியும், நான் உங்களை லவ் பண்றேன்.." என்றவளை அறைய கையை நீட்டியவன் பொறுமை காத்து கையை பின்னால் இழுத்தான். பழைய புன்னகையை முகத்தில் கொண்டு வந்தான்.

"சொன்னா புரிஞ்சிக்கணும்.. குழந்தை மாதிரி நடந்துக்க.. என்னை விட பத்து வயசு சின்ன பாப்பா நீ.. என்கிட்ட பேசுற பேச்சா இது.? உன் அம்மாகிட்ட சொன்னேன்னா தோலை உறிச்சிடுவாங்க.. செல்லம் கொடுத்து வளர்த்தியது தப்பா போச்சி.. 'என் அண்ணனுங்க வேற, நீ வேற'ன்னு நேத்து நீ அளந்தபோதே கன்னத்தை கட்டி நாலு விட்டிருக்கணும். நான்தான் புரிஞ்சிக்காம அசால்டா இருந்துட்டேன்.. மரியாதையா போய் ஸ்கூல் புக் எடுத்து படி.. இன்னொரு முறை இப்படி ஏதாவது விளையாடிட்டு இருந்தா பல் எல்லாத்தையும் தட்டிடுவேன்.." என்று எச்சரித்தான்.

கனிமொழியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"என் லவ் ட்ரூ மாமா.. உங்களுக்கு என்னை ஏன் பிடிக்கல.?"

கை விரல்களை இறுக்கியபடி கண்களை மூடினான்.

"மரியாதையா போயிடு.. இன்னும் ஒரு செகண்ட் இங்கே நீ நின்னா கூட அப்புறம் நான் உன் காலை முறிச்சிடுவேன்‌.." என்றவனின் கன்னத்தில் பதிந்தது ஈர உதடுகள்.

நெருப்பாய் விழிகளை திறந்தான். பற்களை கடித்தபடி அவளின் செவிலில் ஓங்கி ஒரு அறையை தந்தான். விசேஷத்தின் காரணமாக பெரிய கம்மலாக போட்டிருந்தாள். அவன் அறைந்த அறையில் கம்மல் அறுந்து அவளின் காலடியில் விழுந்தது.

முன்னாடியே மென்சன் பண்ண முடியாம போனதுக்கு சாரி. கனி லவ் ஒரு மாதிரி லைட்டா toxic ரிலேசன்ஷிப் மாதிரி போகும்.. கதை தொடர விருப்பம் இல்லாதவங்க இப்படியே திரும்பிடுங்க. நன்றிகள்

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN