நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...06

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

06.காற்றுக்கென்ன வேலி


படுக்கையில் அமர்ந்திருந்த அவளுக்கு நேற்றைய பொழுது நடந்ததே நினைவில் வந்து அவளை ஆத்திரம் மூட்ட கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த அறையில் இருந்த விலையுள்ள பொருட்களை எல்லாம் எடுத்து தூக்கி போட்டு உடைத்தாள்.


அவளின் கோபம் அப்போதும் மட்டு அடையாமல் இருக்கவே கையில் கிடைத்த அனைத்தையும் தூர எரிந்தால். அந்த சத்தத்தை கேட்டு அவள் அன்னை ஓடி வர


" அங்கேயே நில்லு மம்மி இன்னும் ஒரு ஸ்டெப்பு எடுத்து வச்சா கூட நான் சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்கோ " என்று கை நீட்டி எச்சரிக்கை விடுத்தவள் அவளது வேலையை செய்தாள்..


" ஏன் நித்தி இப்படி பண்ற சொன்னா கேளு எதையும் உடைக்காத " என்று கெஞ்சாத குறையாக அவர் அன்னை கெஞ்ச


" மம்மி உன்னால தான் எனக்கு இவளோ பிரச்சினை ஒழுங்கா மாமா கிட்ட பேசுற இல்லன்னா உன்ன கொன்டுட்டு போய்ட்டே இருப்பேன் பாத்துக்கோ " என்று மிரட்டி விட்டு அந்த இடத்தை காளி செய்தாள்.


செல்லும் மகளையே பார்த்துக் கொண்டிருந்தவர் வேலையாலை
அழைத்து " இதெல்லாம் க்ளீன் பண்ணிடுங்க சீக்கிரமா " என்றவர் லேட்டிஸ் க்ளபிற்கு செல்ல தயாரானார்...


அழகிய அந்த காலை பொழுது குளிரான காற்று அவள் தேகத்தை தீண்டிச் செல்ல அவள் உடலில் ஏனோ இனம் புரியாத உணர்வு அவளுள் வந்ததது. அதனை ஆராய விரும்பாமல் அதனை முழுவதுமாக அனுபவிக்க தொடங்கினாள்.


அவளை சுற்றி ஏனோ நல்லதாகவே நடப்பது போல் ஒரு பிரம்மை. கண்களை அப்படியே வானத்தின் மீது பதித்தவள் கண்டது அதன் கூட்டத்தோடு பறந்து கொண்டிருந்த பறவைகளை தான். தாய் பறவை அதன் குட்டியை அழகாக பாதுகாத்த படியே பறந்தது. ஏனோ இதனை கண்ட அவளுக்கு அவளின் அன்னையின் ஞாபகம் வந்து கண்ணீர் ஊற்றெடுத்தது. எழுந்த நொடியில் கிடைத்த புத்துணர்ச்சி இப்போது அவளிடம் பறித்து சென்றது .


உதித்த சூரியனை கண்டவள் " என்னோட வாழ்க்கையில உன்ன மாதிரி வெளிச்சமா இருக்க விடாம பண்ணிட்டல . இருட்ட பாத்து பயந்த காலங்கள் போய் இப்போலாம் வெளிச்சத்த பாத்து பயப்பட வேண்டியாத பொயிடுச்சி. என்னோட வாழ்க்கையில அந்த மாதிரி ஒரு நிகழ்வு நடக்கலெனா இன்னைக்கு நானும் அந்த பறவைகள் மாதிரி சந்தோஷமா என் அம்மாவோட அரவணைப்பில இருந்துருப்பேன் . ஆனா இப்போ யாரும் இல்லா அனாதையா உங்க முன்னாடி நின்னு புலம்பி கிட்டு இருந்துருக்க மாட்டேன் " என்று கதிரவனை கண்டு பினாத்தியவள் மணி ஆகுவதை அறிந்து அடுத்த வேலைகளை செய்ய தொடங்கினாள்...


வாசலிற்கு வந்து கோலம் போட்டவளின் கண்ணில் பட்டது அந்த எதிர் வீடு..


" யாரு புதுசா வந்துருக்கா " என்று சிந்தித்தவள் யோசனையுடனே வீட்டிற்கு சென்றாள்..


அப்போதே அவளின் பாட்டி எழுந்திருக்க அவரிடம் சென்றவள் " பாட்டி நம்ம எதிர் வீட்டுக்கு யாரு குடி வந்திருக்கா "என்று கேட்க


" தெரியலடி மா ஏதோ ரெண்டு பசங்க வரப் போரதா பக்கத்து வீட்டு கிழவி சொல்லுச்சி " என்றவர் பல் துலக்க சென்றுவிட்டார்.


" ஆமா பக்கத்து வீட்ல இருக்கிறது பாட்டி னா நீங்க மட்டும் ஹீரோயின்னா என்ன "என்று சத்தமிட்ட படி சமையலறைக்கு சென்றாள்...


" போடி நீ சொன்னாலும் சொல்லாட்டினாலும் நான் ஹீரோயின் தான் டி " என்று கத்தினார் அங்கே இருந்தே...


" போ பாட்டி காமெடி பண்ணிக்கிட்டு" என்றவள் சமையல் வேலையை தொடங்கினாள். சிறிது நேரத்திலேயே தேங்காய் பால் சாதம் செய்து முடித்தவள் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்...


சிறிது நேரத்திலே கிளம்பி வந்தவள் தனக்கென்ன மதிய உணவை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றாள்..


போகும் வழியில் தான் அவளுக்கு நேற்று நடந்தது ஞாபகத்திற்கு வர எப்படி அவரை ஃபேஸ் பண்ணுவது என்று தெரியாமல் குழம்பிய நிலையிலேயே கல்லூரியை அடைந்திருந்தாள்.


அவளுடைய டிபார்ட்மெண்ட் இருக்கும் ப்ளோருக்கு வந்தவள் அவனின் கேபினை கடக்கும் போது பார்வையால் அவன் இருக்கிறான்னா என்று பார்த்த படியே சென்றாள். கதவு சாத்தி இருக்கவும் உள்ளே இருப்பான் என்றெண்ணி விட்டு விட்டாள். ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்ததை அவள் கவணிக்க வில்லை..


அவள் இடத்திற்கு வந்தவள் அமைதியாக பாடம் பற்றிய குறிப்புகளை எடுத்தாள். மணியும் தன்னை காண வராததால் அமைதியாக இருந்தாள்.


வகுப்பிற்கு சென்றவள் வகுப்பை முடித்து விட்டு வெளியே வர அதிரூபனிடம் மாட்டிக் கொண்டாள்..


" ஹலோ மொழி மேம் " என்று குழையாக செல்ல பெயராக மொழி என்று அழைக்க அதில் வெறுப்புற்றவள் " சார் நான் ஒன்னும் உங்க வீட்டில வளர்க்குற நாய் குட்டி இல்ல இப்படி கூப்பிடுறதுக்கு அதுவும் இல்லாம இன்னொரு தடவ என்ன மொழின்னு சொல்லி கூப்பிட்டிங்க அவ்வளவு தான்" என்று எகிற


" எதுக்கு மேம் இவ்வளவு கோபம் உங்களுக்கு இனி மொழின்னு கூப்பிட மாட்டேன் " என்றான் கைகளை விரித்து காண்பித்து அவன் மீண்டும் மொழி என்று சொல்ல அவனை கண்டு ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்...


" கூல் மேம் கூல் இப்படி அழகா இருக்கிற பொண்ணுங்க எல்லாம் கோப பட்டா நல்லாவா இருக்கும் சொல்லுங்க . நீங்க இப்படி கோபப்பட்டா பாவம் ஸ்டுடன்ஸ் பயந்துருவாங்க " என்று அவளை கண்டு நக்கலடித்தாலும் அவளின் மேனியின் மீது கண்களாலேயே மேய விட்டிருந்தான்.


அவனின் பார்வை அவளுக்கு எரிச்சலை ஊட்ட " செருப்பு பிஞ்சிரும் பாத்துக்கோ " என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..


அவள் சென்ற திசையை குரோதத்துடன் நோக்கியவன் " எனக்கு எதுவும் ஈசியா கிடைச்சா பிடிக்காது. உன்ன மாதிரி பப்பாளி பழம் மாதிரி இருக்கிற உன்ன சாதாரணமா எடுத்துக்க முடியுமா என்ன.. உன்ன சீக்கிரமே என் வழிக்கு கொண்டு வரேன் டி " என்று குரோதத்துடன் தனக்குள்ளே பேசிவிட்டு சென்றான்...


நிலா வேகமாக வாஷ் ரூமிற்கு வந்தவளுக்கு கண்ணில் கண்ணீர் குளக்கட்டியது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுது தீர்த்தாள்.‌ ஏனோ அந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை கண்டவளுக்கு ஏன் டா பெண்ணாக பிறந்தோம் என்றிருந்தது. இந்த உடம்பை எரித்து சாம்பல் ஆக்கி விடலாமா என்பது போல் இருந்தது அவளுக்கு. ஏனோ நிலாவின் மனம் அவளின் நாயகனை தேடியது..


மணிமேகலை நிலாவின் இடத்திற்கு வந்தவள் அவள் இல்லாமல் போகவே அவளுக்காக அழைப்பு விடுத்தாள்..


மணியின் அழைப்பே நிலாவை சுயநினைவிற்கு கொண்டு வந்தது..


மொபைலை எடுத்து உயிர்பித்தவள் " சொல்லு மணி " என்ற குரலில் ஏனோ அவளுக்கு தவறாக தோன்ற " எங்க இருக்க நிலா நீ உன்னோட ப்ளேஸ்க்கு வந்து பார்த்தேன் நீ இல்ல அதான் கால் பண்ணேன் " என்று மணிமேகலை அவளின் அறிந்து சகஜமாக பேச


" வாஷ் ரூம்ல தான் இருக்கேன் இப்போ வந்தறேன் வெயிட் பண்ணு " என்றவள் மணிமேகலையின் பதிலை கூட எதிர்பாராது அழைப்பை அணைத்தாள்..


முகத்தை நன்கு அழம்பியவள் மணியை காண சென்றாள்...


மணியிடம் வந்த நிலா சிரித்த முகத்தோடு " சொல்லு டி எதுக்கு கூப்பிட்ட " என்க


" ஆங் யார அடுத்து போட்டு தள்ளலாம்னு ப்ளான் போடத்தான் உனக்கு கால் பண்ணேன் " என்றாள் கடுப்புடன்..


" அத எதுக்கு டி இவ்வளவு சௌண்டா சொல்ற மெதுவா சொல்லு இல்லன்னா நம்ம ப்லான்ன யாராவது கேட்டு கிட்டு எக்ஸிக்குய்ட் பண்ணிட போறாங்க " என்று சீரியான முக பாவனையுடன் சொன்னாள் நிலா..


அவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தவள் " நான் கோபமா இருக்கேன்னு உனக்கு தெரியாது " என்று அதே முறைப்பை வைத்த படி கேட்டாள் மணி..


" எனக்கு உண்மையா தெரியல டி நீ சீரியசா இருக்கேன்னு பாத்தா நல்லா தான் இருக்க " என்று அவளை மேலையும் கீழேயும் பார்த்தாள் யாழ்மொழி.


" அடியேய் இப்பவே மணி என்னாகுதுன்னு தெரியுமா " என்று கேட்க


" அத நீ தான் சொல்லனும் உன்னோட பேரு தான மணி " என்று வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவளிடம் வம்பிழுத்தாள்..


" போடி உன் கூட சாப்பிடறதுக்கு வெயிட் பண்ணேன் என்ன சொல்லனும் சாச்சா இருந்திருந்தா கூட அவரு கூட சாப்பிட பொயிருக்கலாம் அவரும் இன்னைக்கு வரல " என்று புலம்பிய படி சென்ற மணியை கண்டு சிரித்த நிலா அவரும் இன்னைக்கு வரல என்ற வார்த்தையில் வந்த சிரிப்பும் அதன் இடம் காணாமல் சென்றிருந்தது...


அதை நொடி பொழுதில் மறைத்தவள் " உனக்கு பிடிச்ச தேங்காய் பால் சாதம் கொண்டு வந்துருக்கேன் வேண்டாம்னா சொல்லு நானே சாப்ட்டுக்கிறேன் " என்று சொல்லிவிட்டு பையை எடுக்கச் செல்ல


" எதுக்கு இப்படி கோப படுற நிலா செல்லம் வாங்க நாம சாப்பிட போலாம் " என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.‌ அவளின் சிறு பிள்ளை தனத்தை கண்டு சிரித்தாள் நிலா.


அவளின் சிரிப்பை கண்டு சிறிது நிம்மதி அடைந்தவளின் மனதில் " நிலாவுக்கு இனி எந்த ஒரு கஷ்டமும் வராம நீ தான் பாத்துக்கணும் கடவுளே " என்று அவரிடம் அப்ளிக்கேஷன் போட்டு வைத்தாள்...


பின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு தத்தமது வேலையை தொடங்கி இருந்தனர்.


ஏனோ அவளுக்கு விஷ்வாவை காணாதது மனதில் பாரத்தை ஏற்படுத்தியது நிலாவிற்கு. அவளின் அந்த அவனை காயபடுத்திற்கும்மோ என்ற பயம் எழுந்தது அவளுக்குள். அப்படியே அந்த நாலும் முடிந்தது..


அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நிலாவும் மணியும் ஷாப்பிங் சென்றனர். மணி தான் ஏதேதோ வாங்க வேண்டும் என்று சொல்லி அவளை அழைத்து இல்லை இல்லை இழுத்துச் சென்றிருந்தாள்..


கோவையில் பிரசித்தி பெற்ற டௌன்ஹாலிற்கு வந்தவர்கள் ஒவ்வொரு ரோட்டு கடையாக சென்று பார்த்து விட்டு வந்தனர்..


மதியம் வரை அழைந்து திரிந்தவர்களின் கையில் வெறும் இரண்டு பைகள் கொண்ட துணிகளே வாங்கி இருந்தனர்.


அங்கே இருந்த பண்ணானா லீஃப் ( Banana leaf ) ரெஸ்டாரன்ட் சென்றவர்கள் ஆளுக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஆட்டர் செய்தவர்கள் அது வருவதற்காக காத்திருக்க தொடங்கினர்..


" நிலா நேத்து என்ன நடந்துச்சி " என்று மணிமேகலை கேட்க நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை..


" என்ன டி தலையும் புரியாம வாலும் புரியாத மாதிரி கேள்வி கேக்குற " என்று நிலா அவளின் எண்ணம் அறிந்து எதுவும் தெரியாதது போல் கேட்டாள்..


" உனக்கு உண்மையா நான் என்ன கேக்க வரேன்னு தெரியாது அப்படி தானே" என்று சற்று கோபத்துடனே கேட்க


" உண்மையா எனக்கு நீ என்ன சொல்ல வரேன்னு தெரியல " என்றாள்..


" நான் நேராவே கேக்குறேன். நேத்து மதியம் என்ன நடந்துச்சி எதுக்காக நீ உன்ன கண்ணுக்கு கீழ வீக்கம் வர அளவுக்கு அழுத "என்று நேராகவே கேட்க நிலாவிற்கு தான் எப்படி இந்த சூழ்நிலையை மாற்றுவது என்று தெரியாமல் போனது...


" என்ன சொல்லி ஏமாத்தலாம்னு யோசிக்கிறியா " என்று உற் என்று முகத்தை வைத்து கேட்க


" அப்படிலாம் ஒன்னும் இல்ல டி " என்று சொன்னவளை ஏகத்துக்கும் முறைத்து பார்த்த மணி " நான் உன்னோட உயிர் தோழியா இருந்தா சொல்லு . இல்லன்னாலும் எனக்கு கண்டு பிடிக்க தெரியாதா என்ன " என்று சரியாக அவளின் வீக்னெஸ் அறிந்து அடித்தாள் மணி..


அவளின் கூற்று நிலாவிற்கு தற்ம சங்கடத்தை ஏற்படுத்த நேற்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் நிலா..


அவளை ஆறுதலாக அணைத்தவள் " செருப்பு பிஞ்சிரும்னு சொல்லி இருக்க கூடாது அத செஞ்சி காட்டிருக்கனும் டி " என்றாள் கோபத்தில். அதற்குள் சாப்பாடு வர இருவரும் சாப்பிட்டு விட்டு சென்றனர்...


அதன் பின் இருவரும் மாலை வரை அங்கிருந்த கடைகளிற்கு சென்று பார்வை இட்டவர்கள் வானம் இருட்ட தொடங்கவும் வீட்டிற்கு சென்றனர்.


அன்று வெயில் சென்று வந்த காரணத்தினால் சோர்வாக இருக்க சீக்கிரமே உறங்கச் சென்றாள். ஆனாலும் அவளின் நாயகன் அவளின் நினைவில் வந்து இம்சித்து சென்றான்..


அடுத்தநாள் காலை எழுந்தவள் தத்தமது வேலையை செய்து முடித்து வெளியே வந்து கோலம் போட்டவள் சமையல் வேலையை செய்ய தொடங்கினாள்..


தீடிரென்று ஒரு பால் வந்து அவள் வீட்டினுள் வந்து விழுக அதை கண்ட நிலா அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அந்த பந்தை எடுத்தாள். அதில் ஒரு பேப்பர் சுற்றி இருக்க அதை பிரித்து பார்த்தவளின் கண்கள் விரிந்தது...


தொடரும்....

 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top