காதல் கணவன் 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கட்டிலின் மீது கிடந்த போர்வை ஒன்றை எடுத்து பிரித்தான். கொண்டு வந்து அவள் மீது எறிந்தான். கழுத்து வரை மறைத்தது போர்வை.

குனிந்து அவளின் பின்னங்கழுத்தை பற்றி அவளின் முகத்தை நிமிர்த்தியவன் "உனக்கு நான் என்னடி பாவம் பண்ணேன்.? எதுக்கு என்னை இப்படி சித்திரவதை செய்ற.? ஏன் பாவியா மாத்துற.?" எனக் கேட்டான்.

"உங்களை பிடிச்சிருக்கு மா.."

பட்டென்று விழுந்தது அடுத்த அறை. கன்னம் சிவந்து விட்டது.

அவளை விட்டுவிட்டு வந்து கட்டிலின் மீது அமர்ந்தான். தலையை பிடித்துக் கொண்டான்.

பதறிக் கொண்டிருந்த நெஞ்சம் இன்னும் அடங்கவில்லை. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பும் சரியாகவில்லை.

கனிமொழி விம்மும் சத்தம் கேட்டது. தலையணையை எடுத்து அவள் மீது எறிந்தான்.

"கொன்னுடுவேன்டி.." அறையே தூக்கிப் போகும் அளவிற்கு கத்தினான்.

"கத்தாதிங்க மாமா.. அம்மா வந்துடுவாங்க.."

மீண்டும் ஒரு தலையணையை எறிந்தான்.

"பயப்படுறவ பண்ற வேலையாடி இது?" எரிந்து விழுந்தவன் நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டான்.

"மரியாதையா டிரெஸ்ஸை போடு.."

போர்வையை இறுக்கி பிடித்தபடி எழுந்து நின்றாள். முகத்தை திருப்பிக் கொண்டான். அழுத்தமாக முகத்தை தேய்த்தான். ஐந்து நிமிடத்திற்கு பிறகு தயக்கமாக திரும்பிப் பார்த்தான். சுடிதாரை அணிந்து இருந்தாள். இப்போதுதான் பாதி உயிர் வந்து சேர்ந்தது.

அழுது அழுதே முகத்தில் சோர்வு அதிகம்‌ வந்திருந்தது போல.

எழுந்து அவளருகே வந்தான்.

அவளை தலை முதல் கால் வரை பார்த்தான்.

"பத்து வருசம் முன்னாடி எனக்கு எத்தனை வயசு தெரியுமா.?" எனக் கேட்டவனிடம் "பதினெட்டு மாமா.." என்றாள் தயக்கமாக.

"என் பதினெட்டு வயசுல உன் உடம்புல ஒட்டு துணி இல்லாம நான் உன்னை குளிக்க வச்சிருக்கேன். உனக்கும் எனக்கும் நடுவுல இந்த பத்து வருசத்துல என்ன மாறியிருக்கு.? நான் உன்னை குழந்தையா பார்க்கறேன்னா அதை முதல்ல புரிஞ்சிக்கோ.. எனக்கு உன்னோடு எந்த அபெக்சனும் வராது. லவ் சுத்தமா வராது.. உன் அண்ணன்கள் உன்னை எப்படி பார்க்கறாங்களோ அதே போலதான் நானும் பார்க்கறேன்.. உனக்கும் கீர்த்துவுக்கும் தேனுவுக்கும் நடுவுல ஒரு வித்தியாசமும் இல்ல.. இன்னொரு முறை நீ இப்படி கிறுக்குதனம் செஞ்சா கொன்னு பொதைச்சிட்டு போயிட்டே இருப்பேன். என் கோபத்தை கிளறாம மரியாதையா வெளியே போ.. இனி என் ரூம் பக்கமோ என் முன்னாடியோ வந்தா முகத்தை பேத்துடுவேன்.." என்று மிரட்டினான்.

சிலை போலவேதான் நின்றிருந்தாள்.

"என்ன.?" சீற்றமாக கேட்டான்.

நிமிர்ந்தவள் உதட்டை கடித்து பயம் போக்க முயற்சி செய்தாள். அவளின் முகத்தை குழப்பமாக பார்த்தான்.

"தேனும் கீர்த்தனாவும் உங்களுக்கு அதே போல இருக்கட்டும் மாமா.. ஆனா என்னை அவங்க லிஸ்ட்ல சேர்த்தாதிங்க ப்ளீஸ்.. நான் வெயிட் பண்றேன்.. உங்களுக்கு எப்ப பிடிச்சிருக்கோ அப்ப சொல்லு.."

வாயின் மீது விழுந்தது அடி. அடி சுளீரென்று விழுந்து விடவும் கண்கள் கலங்கி விட்டாள்.

"மரியாதையா வெளியே போடி.." என்றான்.

"நீங்க தேனை டி போட்டு கூப்பிட்டது இல்ல.." முனங்கிக் கொண்டே அங்கிருந்து நடந்தாள்.

தலையை கோதியபடி கட்டிலில் சென்று விழுந்தான். பற்களை கடித்த சத்தம் கதவை திறந்தவளின் காது வரை சென்று ஒலித்தது.

அன்று இரவு உணவை உண்ண போகவில்லை அவன். அர்ச்சனா வந்து அழைத்தபோதும் தலைவலி என்று சொல்லித் தட்டிக் கழித்து விட்டான்.

பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தாத்தாவின் அறைக்கு வந்து கதவை தட்டினான். அரை நிமிடங்களுக்கு பிறகு வந்து கதவை திறந்தார் தாத்தா.

பாட்டி தரையில்‌ படுத்திருந்தாள். உறங்கி விட்டிருந்தாள். கட்டிலில் படுத்தால் உறக்கம் வராத உடம்பு என்று சொல்வாள். தாத்தாவின் தலையணை பாட்டியின் பாதத்தின் ஓரம் இருந்தது.

"என்ன சக்தி.?"

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் தாத்தா.." இயல்பாய் ஒலித்தது அவன் குரல். மனைவி இந்த சத்தத்தில்‌ எழுந்து விடுவாளோ என்று கதவை சாத்தினார் தாத்தா.

முன்னால் நடந்தார். தயக்கத்தோடு இவன் பின்தொடர்ந்தான்.

வீட்டின் பின்பக்க கதவை திறந்தார். ஜில்லென்று காற்று வீசியது. கதவின் மீது சாய்ந்து நின்றார். ஆழ்ந்து சுவாசித்தார்.

"சொல்லு‌ சக்தி.."

"இங்கேயிருந்து தினமும் வேலைக்கு போய்ட்டு வர கஷ்டமா இருக்கு தாத்தா.. அதனால அங்கேயே பக்கத்துல வீடு பார்த்து தங்கிக்கலாம்ன்னு இருக்கேன்.." என்றான் தயக்கமாக. கனிமொழி இப்படி செய்த பிறகு இங்கே தைரியமாக தங்க முடியுமென்று தோன்றவில்லை.

அவள் அறியாத பெண். அவள் ஏதாவது ஏடாகூடமாக செய்து வைத்து பழி இவன் மீது விழுந்தால் கூட பரவாயில்லை என்றுதான் எண்ணினான். ஆனால் அவள் வாழ்க்கை கெட்டு போவதை விரும்பவில்லை. உண்மையிலேயே அவள் மீது பாசம் கொண்டிருந்தான்.

தாத்தா பெருமூச்சு விட்டார். நடுங்கும் கரத்தோடு கழுத்தை தேய்த்து விட்டுக் கொண்டார்.

"இங்கே தங்க விருப்பமில்லன்னா போயிடுப்பா.. பரவால்ல.. எல்லோரும் சந்தோசமா ஒரே இடத்துல இருக்கணும்ன்னு இந்த வீட்டை கட்டினேன். கூட்டுக் குடும்பம் இதே போல இருக்கணும்ன்னு நினைச்சேன்.. முதல்ல பெரிய மருமக ஒரேடியா போனா. அப்புறம் சின்ன பேரன் வீட்டுல இருந்து பயந்து ஓடி போனான். அடுத்து பெரிய பேரனும் பெரிய மகனும் போனாங்க.. பெரிய பேத்தியும் காதலிச்சவனோடு போயிட்டா.. இப்ப‌ நடு பேரன் நீயும் கிளம்பற.. இன்னமும் இந்த வீட்டுக்கு தலைமை நான்தான். நான் எடுக்கற முடிவுகள் ஏதோ சரியில்லாம போகுது. அதனாலதான் எல்லோரும் கிளம்புறிங்க.." என்றார் ஆதங்கமாக.

சக்திக்கு மனம் விட்டுப் போனது. தாத்தாவின் மீது அளவுக்கடந்த மரியாதை வைத்திருந்தான். அவர் முகம் வாடுவதை விரும்பவில்லை அவன். தந்தையை விட தாத்தாவிடம்தான் நெருக்கம் அதிகம். ஏன் கேட்டோம் என்றானது அவனுக்கு.

"இப்ப போகல தாத்தா.. சம்மர் லீவ் முடிஞ்சு பிறகு போகலாம்ன்னுதான் நினைச்சேன்.."

"என்னவோ செய்.." என்றவர் உள்ளே நடந்தார். நடையில் கூட வாட்டம் தென்பட்டது.

'ஏன் கனி என்னை சித்திரவதை செய்ற?' மனதுக்குள் கேட்டுக் கொண்டு தனது அறை நோக்கி நடந்தான்.

பதினொரு மணி. அந்த மதுபான கடையை ஒட்டி இருந்த பார் ஜெகஜோதியாய் வேலை நாளிலும் கூட்டமாய் இருந்தது. (மது அருந்துதல் உடல் நலத்திற்கு மிகவும் கேடு)

வெற்றி வாசலில் பைக்கை நிறுத்தினான். அதே நேரத்தில் அவன் பக்கத்தில் வந்து நின்றது பாலாஜியின் பைக்‌.

"வெற்றி நீ.?" குழப்பமாக கேட்டான் பாலாஜி

"சக்தி வர சொன்னான்.." என்றவன் மதுபான கடையை விசித்திரமாக பார்த்தபடி பாருக்குள் நுழைந்தான்.

"மச்சீஸ்.." தூரத்து டேபிளில் அமர்ந்திருந்த சக்தி கையை உயர்த்தி அழைத்தான்.

வெற்றியும் பாலாஜியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"இவனுக்கு என்ன ஆச்சி.? எதுக்கு இப்படி பட்ட பகல்ல இங்கே வந்து தண்ணி அடிச்சிட்டு இருக்கான்.?" எரிச்சலாக கேட்டபடியே சக்தியின் முன்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் வெற்றி. பாலாஜி அண்ணனின் அருகே அமர்ந்தான். அவனுக்கு ஏதோ போல இருந்தது இந்த இடம். கீர்த்தனா விசயத்தையும் வேலை விசயத்தையும் தவிர மீதி அனைத்திலும் பால்வாடி பிள்ளையின் மனநிலையில்தான் இருந்தான் அவன். நரகத்துக்குள் வந்தது போல பயமாகவும், சாக்கடைக்குள் கால் நனைத்தது போல அருவெறுப்பாகவும் இருந்தது அவனுக்கு.

"எதுக்கு நைட் பன்னென்டு மணிக்கு போன் பண்ணி என்னை ஊருக்கு வர சொன்ன.?" என்றுக் கேட்ட வெற்றி சக்தியின் முன்னால் இருந்த காலி மதுபான பாட்டில்களை கண்டு அதிர்ந்துப் போனான்.

"இரண்டு ஆஃப்.. பிரெண்ட்ஸ் கூட பார்டிக்கு வந்தியா.? இதுக்கெல்லாம் காசு செலவு பண்ணிட்டு இருக்கியா.? தாத்தாக்கிட்ட சொல்லி உன் தோலை உரிக்க சொல்ல போறேன் நான்.." என்று மிரட்டினான்.

சக்தி கலகலவென சிரித்தான். மேஜையின் கீழே இருந்த அவனின் இடது கரம் மேலே வந்தது. அந்த கரத்தில் ஃபுல் பாட்டில் பிராந்தி இருந்தது.

"உரிக்கட்டும் உரிக்கட்டும்.." என்றவன் பாட்டிலை வாயில் வைத்தான். ஒரே விழுங்கில் பாதி பாட்டிலை காலி செய்தான். அவன் மீதியை குடிக்கும் முன் பாட்டிலை பிடுங்கினான் வெற்றி. அருகே இருந்த சுவற்றில் தூக்கி அடித்தான். பாட்டில் சுக்குநூறாய் உடைந்து விழுந்தது. அரை பாட்டில் பிராந்தி சுவரையும் தரையையும் நனைத்தது. சுற்றிருந்த கூட்டம் அவர்களை திரும்பிப் பார்த்தது. பிறகு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தது.

"என்ன ஆச்சி சக்தி உனக்கு.? எதுக்கு இப்ப மொடா குடிக்காரனா மாறிட்டு இருக்க.?" ஆத்திரத்தோடு கேட்டான் வெற்றி.

"குடிக்காரனா.? ஒன்னரை ஃபுல் அடிச்சும் கொஞ்சமும் போதை ஏறாம உட்கார்ந்திருக்கேன்டா.." என்றவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தனர் எதிரில் இருந்தவர்கள்.

"ஆல்கஹால் இல்லாத சரக்கா இது.?" பாலாஜி பாட்டிலை எடுத்து நுகர்ந்துப் பார்த்தான். "உவ்வேக்.." என்று பாட்டிலை கீழே வைத்தான்.

வெற்றிக்கு கடுப்பாக இருந்தது. தம்பியின் பின்னந்தலையில் ஒரு அடியை விட்டான்.

"அதுல என்ன வெங்காயம் இருக்குன்னா எடுத்து முகர்ந்து பார்த்துட்டு இருக்க.?" என்று எரிந்து விழுந்தான்.

மூக்கை அசக்கி விட்டுக் கொண்ட பாலாஜி "இவ்வளவு கேவலமான சரக்கடிச்சி இருக்க.. அப்பவும் ஏன் சக்தி உனக்கு போதை ஏறல.?" என்றுச் சந்தேகமாக கேட்டான்.

பாலாஜியின் பச்சைப்பிள்ளை முகத்தை சில நொடிகள் குறுகுறுவென பார்த்தான் சக்தி.

"உன்னை மாதிரிதான்டா உன் தங்கச்சியும்.. பச்சை புள்ளையாட்டம் மூஞ்சை வச்சிக்கிட்டு என் தங்கச்சியை இழுத்துட்டு போன நீ.. உன் தங்கச்சி அதுக்கு மேல பண்ற.." என்று தனக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தான்.

"என்ன விஷயம் சக்தி.? ரொம்ப வித்தியாசமா தெரியற.. லவ் பெயிலியரா.? கூட வேலை செய்ற பொண்ணு யாரையாவது லவ் பண்றியா.? அவங்க ரிஜெக்ட் பண்ணிட்டிங்களா.?" வருத்தமாக கேட்டான் வெற்றி.

தலையை கோதி விட்டுக் கொண்டான் சக்தி.

"உங்க தங்கச்சிக்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு முதல்ல தெரிஞ்சிக்கணும்.. அப்புறமா விருப்பம் இருந்தா எவளையாவது திரும்பிப் பார்க்கலாம்.." என்றவனை இருவரும் குழப்பத்தோடு பார்த்தனர்.

"புரியல சக்தி.."

"உங்க தங்கச்சி என்னை லவ் பண்றாளாம்.." என்றவன் பக்கத்தில் நடந்த இளைஞனின் கைப்பிடித்து நிறுத்தினான். பேண்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஸை எடுத்து பணத்தை உருவி அவன் கையில் வைத்தான்.

"ஸ்ட்ராங்கா இருக்கற மாதிரி ஒரு ரம் எடுத்துட்டு வாங்க.." என்றான்.

அந்த இளைஞன் சென்ற பிறகு சக்தியை பார்த்த வெற்றி "தேனா.? ஆனா அவ இதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே.." என்றான்.

அங்கும் இங்குமாக பார்வையை அலைபாய விட்டுவிட்டு மச்சான்களின் புறம் பார்வையை கொண்டு வந்து நிறுத்தியவன் "தேன் இல்ல.. கனி.. உங்க செல்ல தங்கை கனி பாப்பா.." என்றான் உதட்டை கோணியபடி.

பாலாஜியின் முகம் சட்டென்று மாறிப் போனது. வெற்றிக்கு குழப்பமாக இருந்தது.

"ஒரு குழந்தையை மயக்கிட்டு இருக்கியா நீ?" ஆத்திரமாக கேட்ட பாலாஜியை மேலும் கீழுமாக பார்த்த சக்தி "அடப்பாவி.. உன் மூளையை மட்டும் தனி டிசைனா செஞ்சாங்களாடா.? பன்னாடை அவதான்டா என்னை மயக்கறேன்னு ஏதேதோ பண்ணிட்டு இருக்கா.." என்றான்.

சகோதரர்கள் இருவருக்கும் நம்பிக்கை இல்லை.

"வீட்டை விட்டு போக இருந்தேன். ஆனா தாத்தா ரொம்ப வருத்தப்படுறாரு. அந்த வீட்டுல நான் இருந்தா அவளுக்கு புத்தி வரும் முன்னாடி நான் செத்து போயிடுவேன் போல.." என்ற சக்தி‌ ரம் வந்ததும் பாட்டிலை திறந்து குடிக்க ஆரம்பித்தான்.

"நிஜமா எங்க பாப்பாவா.?"

"ஆமான்டா பால் கொழுக்கட்டை வாயா.. லீவ் வர போகுது.. வேலையை காரணம் காட்டிதான் வீட்டை விட்டு போக இருந்தேன் நான். ஆனா நான் இப்ப கிளம்பினா தாத்தா ரொம்ப வருந்துவாரு.. வேலைக்காக இல்லாம நான் நிஜமாவே வீட்டுல இருக்க பிடிக்காம கிளம்பிட்டேன்னு நினைப்பாரு.. அதனால இந்த லீவ் முடியற வரைக்கும் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. உங்க தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணுவிங்களோ.. அறைஞ்சி புரிய வைப்பிங்களோ.? லீவ் முடியற வரைக்கும் அவ என் முன்னாடி வந்துட கூடாது.." என்றவன் மீண்டும் சரக்கை குடித்தான்.

"நாங்க பேசுறோம்.. நீ இதுக்காக இங்கே சீன் போட்டுட்டு குடிச்சிட்டு உட்கார்ந்திருக்காதே.." என்றான் வெற்றி கேலியாக.

"வெங்காயத்துல சீன் போடுறாங்க.. அவ பண்ண வேலைக்கு நைட் முழுக்க தூக்கம் வரல.. காலையிலயும் கூட பசிக்கல. மண்டைக்குள்ள சுத்துற எட்டுக்கால் பூச்சி வெளியே வரவேயில்ல.. நான் எவ்வளவு சொல்லியும் உங்களுக்கு அவ்வளவா சீரியஸ்னெஸ் புரியல.. அவ சைக்கோ பைத்தியம்.." என்றவனை முறைத்தான் பாலாஜி.

"அப்படி என்ன பண்ணா எங்க பாப்பா.?"

"நியூடா வந்து என் முன்னாடி நிக்கறா.." என்று அவன் சொல்லி முடித்த வேளையில் மேஜையில் கையை குத்தியிருந்தான் வெற்றி. சக்தியின் சட்டையை எட்டிப் பிடித்திருந்தான் பாலாஜி.

நாளைக்கு ஒரு நாளைக்கு மட்டும் யூடி வராது நட்புக்களே.. ஏனா இந்த நாள்லதான் நான் போய் தகடூர் தங்க தாரகை விருது வாங்கிட்டு‌ வந்தேன். ஆல் இன்டியா ரேடியோ தருமபுரி பண்பலையில் இளம் தென்றல் நிகழ்ச்சியில் நேரலையில் கலந்துக்கிட்டு என் எழுத்து பயணம் பத்தி இன்டர்வியூ தந்துட்டு வந்தேன்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN