நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...07

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலையில் வேலை செய்து கொண்டிருந்த போது அவளின் வீட்டின் நடு ஹாலில் வந்து ஒரு பந்து விழுந்தது. அதை திறந்து பார்த்த நிலா விழி விரித்து நின்றிருந்தாள்…

அதனை எடுத்த பிரித்த நிலா அந்த பந்தையும் பேப்பரையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்க சொல்லிக் கொள்ளுமாறு யாரும் இல்லை. சுற்றியிலும் கண்களை சுழல விட்டவளுக்கு வெறும் சாலையே தெரிந்தது.

பேப்பரை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தவள் அதை படிக்கத் தொடங்கினாள்..

வண்ணக்கத்துக்குரியவளே..

" இந்தா புள்ள இந்த ஏரியாவுலயே நீ தான் நல்லா கோலம் போடுவியாமே ஊர்ல சொல்லிகிட்டாங்க அதுனால நீ என்ன பண்ணுறேன்னா இந்தா காகிதம் எந்த வீட்டுல இருந்து வந்ததோ அந்த வூட்டுல தான் நான் குடித்தனம் இருக்குறேன்.நீ என்ன பண்ணுறேன்னா அந்த வூட்டுக்கும் கொஞ்சம் கோலத்த போட்டுடு புள்ள கிருஷ்ணன் மாதிரி உனக்கு ஒரு நல்ல புருஷன் கிடைப்பான் பாத்துக்கோ ."

இப்படிக்கு

சொல்லிய வணக்கத்தை பெற்றுக்கொள்ளுபள்(ன்)...

என்றிருந்தது அந்த லெட்டரில் அதை படித்தவளுக்கு அது யார் எழுதினது என்று அறிய முடியவில்லை. எழுத்துக்களை வைத்து அந்த பெப்பரிலேயே ஊர் சவாரி செய்திருப்பான் போல அந்த அளவுக்கு இருந்தது. இதில் கோலி கிறுக்கு கிறுக்கல்.

அதை எடுத்து டஸ்ட்பினில் போட சென்றவள் ஏதோ அவளுக்கு தோன்ற அதை அவளது அறையில் வைத்து விட்டு வந்து வேலையை செய்தாள்..

அதன்பின் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு வேலைக்கு கிளம்பிச் சென்றாள்.

கல்லூரிக்கு வந்தவள் முதலில் கண்டது அவனது அறையையே .ஆனால் அது இன்றும் பூட்ட பட்டி இருந்தது.

அவனை மனதில் அர்ச்சித்த படியே அவளது இடத்திற்கு சென்று அமர்ந்தாள்..

அப்போது மணி அவள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் கையில் சாக்லேட்டுடன்..

" இந்தா நிலா சாக்லேட் அதுவும் உனக்கு பிடிச்ச கிட்கேட் " என்று அவள் முன்னால் நீட்ட

அதை பெற்றுக்கொண்டவள் " என்ன ஸ்பெஷல் டி செல்லம் இன்னைக்கு சாக்லேட்லாம் வாங்கி வந்து அசத்துறீங்க " என்று கவரை பிரித்த படியே கேட்டாள்.

" ஆங் அதுவா விச்சு சாச்சா வாங்கி தந்தது . அதான் உனக்கும் ஒன்னு கொண்டு வந்து கொடுத்தேன் " என்றாள் மணிமேகலை சாதாரனமாக..

சாப்பிட்டு கொண்டு இருந்த நிலா அதை துப்பிவிட்டு அவளை பார்த்து முறைக்க

" சாக்லேட் தான டி நான் கொடுத்தேன் ஏதோ நான் செஞ்ச பாயாசம் கொடுத்த மாதிரி இப்படி துப்புற " என்று சாக்லேட்டை சாப்பிட்ட படியே கேட்டாள்..

அவளின் இந்த பதிலில் கோபம் கொண்டவள் " உன்னோட பாயாசத்த கூட சாப்பிட்டு செத்தாலும் சாவேன்னே தவிர இந்த சாக்லேட்டை திங்க மாட்டேன் " என்று அவளின் கையில் அதை திணித்து விட்டு சென்றாள்…

போகும் அவளை பார்த்தவள் தனக்கு வந்ததே லாபம் என்று நினைத்து அந்த சாக்லேட்டை சாப்பிட தொடங்கியபோது நிலா வேகமாக வந்து அவளிடமிருந்து பிடுங்கி " நீயும் சாப்பிட கூடாது டி " என்று அதை குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றாள்..

" அடி சண்டாளி நீயும் சாப்பிட மாட்ட சாப்பிட வந்த என்னையும் சாப்பிட விட மாட்ட இதெல்லாம் ஒரு பொல்லப்பா டி நிலா " என்று போகும் அவளை கண்டு பொருமி கொண்டு இருந்தாள் அவளின் இடத்திற்கு சென்று அமர்ந்துக் கொண்டாள்..

அந்த நாள் முழுவதும் அப்படியே தான் சென்றது..மாலை இருவரும் ஒன்றாக தான் பேருந்து நிலையத்திற்கு நடந்தனர். ஆனால் மணிமேகலை நிலாவிடம் முகம் கொடுத்து பேச வில்லை. ஏன் அவளை ஏறெடுத்தும் பார்க்க வில்லை..

" ஏன் டி இப்படி முகத்த தூக்கி வைச்சிகிட்டு வர பாக்க சகிக்கல " என்று அவளை வம்பிழுத்தாள் நிலா.

அவள் வம்பிழுப்பதை அறிந்து " அப்படி ஒன்னும் நீங்க முகத்த பாக்கனும்னு அவசியம் இல்ல மிஸ்.யாழ்மொழி ரோட்ட பாத்து நடந்து வந்தா போதும் " என்று சிலுப்பிக் கொண்டாள்.

" அடியே உனக்கு இவ்வளவு சீன்லாம் இல்ல பாத்துக்கோ " என்று அவளை வழி மறித்து கூற

" போ டி அந்த சைடூ " என்று அவளை கடந்து சென்றாள் மணிமேகலை..

" நான் உன்ன பீசா கார்னர் கூட்டிட்டு போலாம்னு நினைச்சேன் வர விருப்பம் இல்லைன்னா சரி எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல " என்று நிலா கூறினாள்..

நிலாவின் கூற்றை கேட்ட மணி அப்படியே சடன் ப்ரேக் அடித்து நின்றாள்.

" சரி வா போகலாம் " என்று சிரித்த முகத்தோடு அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் மணி..

பின்னர் இருவரும் பீட்சா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினர். அந்த இரவு ஏனோ நிலாவிற்கு ஒரு மாதிரி சென்றது. அவளின் நினைவுகளை அவளின் கள்வனே ஆட்கொண்டிருந்தான்..

இங்கே விஷ்வேந்தர் வீட்டில் தன் அன்னை ஊட்டிக் கொண்டிருந்த நெய் தோசையை சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

அந்த நேரம் பார்த்து நித்திலாவின் அம்மா மஞ்சரி வீட்டிற்கு வர " டேய் மகனே உங்க அத்தகாரி வரா டா இன்னைக்கு ஏதோ வச்சிருக்கா உனக்காக " என்று விஷ்வாவின் காதில் ஓதினார் சாவித்திரி.

அன்னை சொல்வதை கேட்டுக் கொண்டவன் நெய் தோசையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

" வாங்க அண்ணி நித்திலா வரலையா " என்று வர வேற்றிய சாவித்திரியை கண்டு கொள்ளாமல் நேராக தன் அண்ணன் ராஜசேகரை காணச் சென்றார்..

"அண்ணா உள்ள வரலாமா " என்று ஒர்க்கிங் ரூம் அறை கதவை தட்டினார்.

" வா மா மஞ்சு இது உன்னோட வீடு எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் " என்று சொல்லி உள்ளே அழைத்தார்.

" அண்ணா எனக்கு எப்போ கல்யாணம் முடிஞ்சுதோ அப்போவே எனக்கு இந்த வீட்ல இருந்த உரிமை பொயிடுச்சி அண்ணா " என்று வருத்தத்துடன் கூற

" எதுக்கு மா இந்த மாதிரி எல்லாம் பேசுற உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா இந்த வீட்டோட உரிமை உனக்கு இல்லாம பொய்டுமா என்ன " என்று பதறிப்போய் கூறினார்..

" அப்படி இந்த வீட்ல எனக்கு ஒரு உரிமையும் அதுக்கடுத்து என்னோட பொண்ணுக்கு உங்க சொந்தமும் வேணும்னு நினைக்கிறேன் அண்ணா அது நடக்கும்மான்னு தான் தெரியல " என்று வருத்தத்தில் ஆரம்பித்து புலம்பலில் முடித்தார்..

" இப்போ எதுக்கு இந்த மாதிரிலாம் போசிட்டு இருக்க மஞ்சு " என்று சற்று கோபத்துடன் கேட்க

" அப்புறம் என்ன அண்ணா நித்திக்கும் வயசா கிட்டே போகுது .எப்போ உன் பொண்ணுக்கு கல்யாணம் பொண்ணுக்கு கல்யாணம்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க அண்ணா .அவுங்க சொல்றதுலயும் ஞாயம் இருக்கே அண்ணா அவளுக்கும் இருபத்து மூணு வயசாகிருச்சி. எல்லாரும் பொண்ணு கேட்டு வராங்க நானும் எவ்வளவு நாள் தான் தட்டி கழிக்கிறது சொல்லுங்க " என்று தன் ஆதங்கத்தை அவரிடம் வெளி படுத்தினார் மஞ்சரி.

தன் தங்கையின் கலங்கிய குரலை விரும்பாதவர் " கவல படாத மா நான் விஷ்வா கிட்ட பேசுறேன் . அவனுக்கும் நித்திலாவுக்கும் சீக்கிரமே கல்யாண ஏற்பாட்ட பண்ணுறேன். நீ எத பத்தியும் யோசிக்காத அவன் நாளைலர்ந்து ஒரு மாசத்துக்கு எங்கோ ஃப்ரண்ஸோட அவுடிங் போறான். அத முடிச்சது அவன் வந்ததும் நான் பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன் " என்று வாக்களித்தார் ராஜசேகர் தன் பிள்ளையின் மனம் அறியாது....

மஞ்சரி புன்னகையுடன் சிறிது நேரம் இருந்து விட்டு சென்றார். போகும் போது மட்டும் " பொயிட்டு வரேன் அண்ணி " என்று புன்னகையுடன் கூறிச் சென்றார்..

" இப்போ யாரு டா இவ கிட்ட இத கேட்டது " என்று வாயிலேயே முணு முணுத்தார். இதனை கேட்ட விஷ்வா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான். அவனிற்காக போடப் பட்ட ஆப்பை பற்றி அறியாமல்...

அடுத்தநாள் காலையே விஷ்வா வெளிநாட்டிற்கு சென்றான். சக்தி அமைதியாக தன் தந்தைக்கு துணையாக ஆஃபிஸ் சென்று வந்தான்..

அடுத்தநாள் காலை எப்போதும் போல் எழுந்தவளுக்கு அடுத்த பந்து ஒன்று வீசப்பட்டது...

அதை எடுத்து படிக்கத் தொடங்கினாள்...

உங்கள் கவனத்தை ஈர்க்கும் திறன் கொண்ட நான்...

" எதுக்காக வெளிய வந்துலாம் தேடுற‌ புள்ள கோலத்த மட்டும் போட்டு இந்த மாமனுக்கு உன்னோட சம்மத்த‌ சொல்லு . நானே உன் கண்ணு முன்னாடி வந்துபுடுறேன். இந்த அய்தானுக்காக சீக்கிரமா கோலத்த போட்டுடு புள்ள "

இப்படிக்கு
உன் அய்த்தான்


என்று எழுதி இருந்தது. அதை படித்தளுக்கு கோபம் மட்டு அடங்காமல் வந்தது. ஆனால் கோபத்தை அடக்கியவள் வேலையை காணச் சென்றாள்...

கல்லூரியில் மதியம் நேரம் மணியும் நிலாவும் சாப்பிட்டு கொண்டு இருக்க நிலாவே பேச்சுக் கொடுத்தாள்..

" மணி ஏன் உங்க ஹெச்சோடி இப்போல்லாம் காலேஜ்க்கு வரது இல்ல " என்று சிறு தயக்கத்துடனே கேட்டாள் நிலா..

" அவரு ஏன் வரதில்லைன்னு கேட்டா எனக்கு எப்படி தெரியும் டி நானும் உன்ன மாதிரி தான உன்கூட தான இருக்கேன் அப்போ எனக்கு மட்டும் எப்படி தெரியும் சொல்லு " என்று கடுப்பேத்தினாள் மணி.

அவளின் இந்த பதிலை கேட்டு புகை வராதா குறையாக இருந்தது நிலாவிற்கு அதனை பொறுத்துக் கொண்டவள் " சரி உங்க விச்சு சாச்சா ஏன் காலேஜ்க்கு வரதுல " என்று திக்கித் திணறி கேட்டாள்..

" ஹோ நீ விச்சு சாச்சாவ கேட்டியா அப்படி நீ தெளிவா கேட்ருந்தின்னா நான் சொல்லபோறேன் " என்றவள் " விச்சு சாச்சாவுக்கு ஏதோ மனசு சரியில்லையாம் அதான் கொஞ்ச இங்க இருக்க வேண்டாம்னு ஃபாரின்க்கு பொயிருக்காங்க " என்றாள் அவளது வேலையை செய்த படி...

இதனை கேட்ட நிலாவிற்கு முகம் சுருங்கி போனது அதன் பின் அவளுக்கு சாப்பிட முடியாமல் போக அப்படியே மூடி வைத்து விட்டாள்...

அதன் பின் அந்த வாரம் முழுவதும் அப்படியே தான் சென்றது . தனது செயலால் தான் இப்படி ஒரு முடிவெடுத்து சென்றிருக்கிறான் என்று நினைத்து கவலை பட்டுக் கொண்டிருந்தாள். ஆனாலும் சக்தியையும் இழுத்துக் கொண்டு ஒரு அழகியிடம் கடலை வருத்துக் கொண்டு இருந்தான்..

அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரிக்கு விடுமுறை அளித்திருந்தனர். அதனால் நிலா
சனி பகவானுக்கு விஷேசம் என்பதால் கோவிலுக்கு சென்று வந்தாள்..

வீட்டிற்கு வந்தவளை ராஜேஸ்வரி பாட்டி அவருக்கு கிடைத்த இளம் தோழர்களை பற்றி கூறி அவள் காதில் இரத்தம் வர வைத்தார்..

" அய்யோ பாட்டி போதும் உங்க புராணத்த கொஞ்சம் நிப்பாட்டுங்க என்னால தாங்க முடியல " என்றாள் கை எடுத்து கும்பிட்ட படி..

" போடியம்மா கழுதைக்கு தெரியுமா கற்பூறம் வாசனை உங்க எங்க புரிய போகுது இந்த யூத்தோட ஃபீலிங்க "என்று தோள்பட்டை சிலுப்பிக் கொண்டார்...

" ஆமா ஆமா நீங்களெல்லாம் யூத்து தான் நான் தான் பழைய பூத் போதுமா " என்று கோபத்துடன் சொல்ல

" அது மட்டும் பத்தாதடி நாளைக்கு அந்த ரெண்டு புள்ளையும் வரா அவுங்களுக்கு ஒழுங்கா சமைச்சி போடு " என்று விட்டு படுக்கச் சென்றார்..


நிலா அவரை முறைத்தபடியே யாரென்று தெரியாத இருவரையும் திட்டிய படி சென்று படுத்துக் கொண்டாள்...

விஷ்வாவோ அன்று முழுவதும் ஒரு தேவதையுடன் நேரத்தை செலவிட்டை எண்ணியே தூங்கி போனான்......

தொடரும்....
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top