காதல் கணவன் 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மச்சான்கள் இருவரையும் எகத்தாளமாக பார்த்த சக்தி "கேட்ட உங்களுக்கே இவ்வளவு கோபம்ன்னா அந்த இடத்துல இருந்த எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்.?" எனக் கேட்டான் எரிச்சலாக.

வெற்றியின் முகத்திலிருந்த கோபம் நெருப்பாக மாறும் சக்தியை‌ பெற்றிருந்தால் அந்த பாரே எரிந்திருக்கும்.

"சட்டையிலிருந்து கையை எடுடா பால்வாடி‌ சாத்தானே.."

ஆனால் பாலாஜியின் கை இறுகியது. கண்கள் இடுங்கியது. இடது கையை ஓங்கினான். அவனின் முகத்தில் அறை தர முயன்றான்.‌ சட்டென்று கையை பற்றி விட்டிருந்தான் சக்தி.

"நான் இருக்கும் ஆத்திரத்துக்கு திருப்பி கை வச்சேன்னா அப்புறம் என் தங்கச்சி விதவையாவே ஆகிடுவா.. அவ்வளவு காண்டு.. என்னை சீண்டாம இரு நீ.." என்றவன் அவனின் கையை பின்னால் தள்ளி விட்டான். அப்போதும் கூட அவனின் சட்டையிலிருந்த கையை எடுக்கவில்லை பாலாஜி. வெற்றி கடித்த பற்களை நகர்த்தாமல் இரும்பு சிலையாக அமர்ந்திருந்தான். மனதுக்குள் கோடி யோசனை அவனுக்கு.

"எங்க பாப்பா ரொம்ப நல்லவ.. அவ அப்படி பண்ணியிருக்கான்னா நீ போர்ஸ் பண்ணியிருப்ப.." என்ற பாலாஜியை சில நொடிகள் குறுகுறுவென பார்த்தான் சக்தி. "உனக்கு மாட்டு மூளைதானே இருக்கு.?" எனக் கேட்டான்.

பாலாஜி முறைத்தான்.

"லூசு ***டா நீ.? நீயும் இவனும் அவளை என்ன கண்ணோட்டத்துல பார்க்கறிங்களோ அதே கண்ணோட்டத்தோடுதான் நானும் பார்க்கறேன்.. அந்த கழுதைக்கு கழுத்து வரை திமிர். உச்சி முதல் பாதம் வரைக்கும் கொழுப்பு.." என்று புலம்பினான்.

பாலாஜியின் தோளில் கை பதித்தான் வெற்றி. "அமைதியா உட்கார்.." என்றான்.

பாலாஜி அண்ணனுக்காக அமைதியானான்.

"என்ன பிரச்சனைன்னு ஆரம்பத்துல இருந்து சொல்லு.." எனக் கேட்டான் வெற்றி.

ரம்மை குடித்தபடியே விசயத்தை சொல்ல தொடங்கினான் சக்தி.

"இரு ஒரு நிமிசம்.." தடுத்த வெற்றி "ப்ரோ இங்கே ஒரு ஆப் பாட்டில் பிராந்தி கொண்டு வாங்க.." என்றான். தம்பியின் பக்கம் பார்த்தவன் "பியர் குடிப்பியா.?" எனக் கேட்டான். அவசரமாக மறுத்து தலையசைத்தவன் "ஆனா நான் உங்க வாயை பார்த்துட்டு உட்கார்ந்திருப்பேனா.? ஆல்கஹால் இல்லாத சரக்கா எனக்கும் சொல்லு.." என்றான்.

வெற்றி கண்களை சுழற்றினான். பக்கத்தில் வந்து நின்றிருந்த பார் வேலையாளிடம் பணத்தை நீட்டினான். "கோக் இரண்டு.." என்றான்.

"ஆனா எனக்கு ஒன்னு போதுமே.." வேலையாள் சரக்கை எடுத்து வர சென்ற இடைவெளியில் கேட்டான் பாலாஜி.

"எனக்கு ஒன்னுடா.. ராவாவா அடிச்சி வயிறு வெந்து சாக முடியுமா?" என எரிந்து விழுந்தவனின் முகத்தை பார்த்தபடியே தன் கையிலிருந்ததை குடித்தான் சக்தி. வெறும் மதுவை அருந்தியே ஒரு சொரணையும் உள்ளே நிகழவில்லை.

கேட்ட அனைத்தும் வந்ததும் சக்தியை பார்த்து புருவம் உயர்த்தினான் வெற்றி. சக்தி சொல்ல ஆரம்பித்தான். கனிமொழி தன்னோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கூட சொன்னான்.

பாலாஜிக்கு முகம் கறுத்து விட்டது. வெற்றியின் முகத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லை. தலையை பிடித்துக் கொண்டான். ஏன் அவள் இப்படி செய்திருப்பாள் என்று யோசித்துப் பார்த்தான்.

"உங்களை தவிர வேற யார்கிட்டயும் இந்த விசயத்தை என்னால சொல்ல முடியாது. நான் அவ மேல பாசம் வச்சிருக்கேன். அவ உருப்படணும்ன்னு ஆசைப்படுறேன். என்னை ஏன்டா அவ லவ் பண்றா.? நான் அவளை எந்த பீலிங்கோடும் பார்த்ததே இல்ல. குழந்தைடா அவ.." என்றான் சக்தி முகத்தை தேய்த்தபடி.

"ஈர்ப்பா இருக்கும். அவ புரிஞ்சிக்கல.." என்ற வெற்றியிடம் "அதேதான் நானும் சொன்னேன். ஆனா அவ என் பேச்சை கேட்க மாட்டேங்கறா.. அவ இம்மெச்சூர் கேர்ள்.. நாம ராங்கா மூவ் பண்ணா அவளோட மூவ் ரொம்ப ராங்கா இருந்துடும். கொஞ்சமாவது யோசிச்சி செய்யணும் நாம.." என்ற சக்தி காலியான பாட்டிலை கீழே வைத்தான்.

"நீ சொல்வதும் சரிதான்.. அவகிட்ட நாம நேரா போய் பேச முடியாது. அவளுக்கு மெச்சூர் வர வைக்கும் அவளை டைவர்ட் பண்ணி வைக்கணும்.." என்ற வெற்றி யோசித்தான். "நான் என் டிரெயினிங்கை கேன்சல் பண்ணிட்டு வரேன். அவளுடைய மொத்த டைம்லயும் நானே பேசி பழகி அவளோட மைன்ட்ல உன்னை பத்தி எந்த யோசனையும் வராத மாதிரி பார்த்துக்கறேன்.." என்றான்.

பாலாஜி வேண்டாமென்று தலையசைத்தான். "நானே வீட்டுக்கு போறேன். நீ உன் டிரெயினிங்கை முடி.. சக்தியும் அவளும் பேசிக்க கூட டைம் தராத அளவுக்கு அவளோட டைம்மை நானே ஆக்கிரமிச்சிக்கிறேன்.. அதுவும் இல்லாம அவளுக்கு உன்னை விட நான்தானே குளோஸ்.." என்றான்.

"உன்னால அந்த வீட்டுல சமாளிக்க முடியாது.." வெற்றி எரிச்சலாக சொன்னான்.

"ஐ கேன் மேனேஜ்.."

"என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத.." என்ற வெற்றி சைட் டிஷ்ஷாக இருந்த சிக்கனை எடுத்து கடித்தான்.

"நான் போவேன்.. என்னால முடியும். கனிக்காக நான் எதுவும் செய்வேன்.." என்று அடம் பிடித்தான் அவன்.

"நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு செத்துடாதிங்கடா.. இரண்டு மூனு மாசம் மட்டும். அப்புறம் நான் வெளியே போயிடுவேன். உங்க தங்கச்சிக்கு மேரேஜ் நடக்கும் வரை அந்த வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்க மாட்டேன்.." என்றான்.

பாலாஜி யோசித்தான். "நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது.. ஒரு நல்ல பொண்ணை பார்த்து கட்டிக்க.. கனிமொழியோட லைஃப் கெடாது.." என்றான்.

சக்தி பெருமூச்சு விட்டான். வெற்றி குடித்து விட்டு வைத்திருந்த பாட்டிலில் மீந்திருந்த மதுவை அருந்தினான்.

"அது என்னவோ இன்ட்ரஸ்ட் இல்லடா.. லவ் பண்ணணும் மேரேஜ் பண்ணணும்ன்னு ஒரு ஆசையும் வர மாட்டேங்குது.."

அண்ணனும் தம்பியும் சக்தியை ஆராய்ந்துப் பார்த்தனர்.

"ஒரு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம். அவங்களை பார்த்து பீலிங்க்ஸை வளர்த்துக்க.." ஐடியா தந்தான் பாலாஜி.

"சரி அதையாவது செய்றேன்.. அந்த முட்டாளுக்காக‌‌.." என்றவன் எழுந்து நின்றான். பெரிய ஏப்பமாக விட்டான். பாலாஜி மூக்கின் முன்னால் காற்று விசிறினான். சக்தி அவனை முறைத்தான்.

"நான் கிளம்பறேன்.. வேலைக்கும் லீவ் போட்டாச்சி. தாத்தாவும் பாட்டியும் என்னை காணமேன்னு தேடுவாங்க.." என்றவன் வெளியே நடந்தான்.

வெற்றியும் பாலாஜியும் அதன் பிறகும்‌ கூட நிறைய பேசினார்கள்.

சக்தி வீட்டிற்கு வந்ததும் யாருக்கும் சொல்லாமல் அமைதியாக வந்து தனது அறையில் படுத்துக் கொண்டான். தூங்கியவன் இரவு பதினொன்றுக்குதான் எழுந்தான். நடுவில் அம்மா ஒரு முறை போனில் அழைத்து சாப்பிட வர சொன்னாள். வரவில்லை என்று சொல்லிவிட்டிருந்தான். இப்போது தொண்டையில் காரமாக இருந்தது. எரிந்தது. வாழ்நாளில் முதல்முறையாக நிறைய குடித்து விட்டிருந்தான். வயிற்றில் புண் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வரண்டு போன நாக்கோடு தண்ணீர் தேடியவன் தண்ணீர் கிடைக்காமல் போகவும் வெளியே நடந்தான். இவனின் அறை கதவு திறந்த சில நொடிகளில் மறு வரிசையில் இரண்டு அறைகள் தள்ளி இருந்த கனிமொழியின் அறை கதவும் திறக்கப்பட்டது.

கதவை திறந்தவள் இவனை கண்டதும் ஓடி வந்தாள். "மாமா.." என்றாள் வருத்தமாக. அறைகளுக்கு இடையே இருந்த நடைப்பாதையில் பச்சை விளக்கு ஒளி வீசிக் கொண்டிருந்தது.

"ஏன் மாமா நைட் சாப்பிட வரல.?" வருத்தமாக கேட்டவளின் கண்களை அரை வெளிச்சத்தில் பார்த்தவன் கையை நீட்டி அவளின் கன்னம் பற்றினான்.

"போய் தூங்கு கனி.." என்றான்.

"என் மேல கோபமா இருக்கிங்கன்னு தெரியும் மாமா. ஆனா ப்ளீஸ் சாப்பிடாம இருக்காதிங்க.." என்றாள் கெஞ்சலாக.

புன்னகைத்தான். போதை இப்போதுதான் கொஞ்சமாக பிடித்திருந்தது.

"பசிக்கல.. எல்லாம் சரியா போயிடும்.. நீ போய் தூங்கு.." என்றவன் அவளை தாண்டி நடந்தான். தலை சுற்றியது. பக்கத்திலிருந்த சுவற்றை தாங்கி பிடித்தான். கனிமொழி ஓடி வந்தாள். அவனின் தோளை பற்றினாள்.

"என்னாச்சி மாமா.?" என்றவள் அவன் மீதிருந்து வந்த வாசம் கண்டு அதிர்ந்துப் போனாள்.

"குடிச்சிருக்கிங்களா மாமா.?" அதிர்ச்சி மாறாமல் கேட்டவளிடம் ஆமென்று தலையசைத்தவன் நிற்க முடியாமல் சாய்ந்தான். அவனை தாங்க முயன்றாள் கனிமொழி. அவனே தடுமாறி நேராக நின்றான். கனிமொழியின் முன்னால் கை காட்டி நிறுத்தினான்.

"என்னை டச் பண்ணாதே.. என்னோடு பேசாதே.. என் முன்னாடி கூட வராதே.." என்றவன் கைகளை பின்னால் இழுத்தபடி பின் நகர்ந்து நின்றான்.

"என்னை வெறுக்காதிங்க மாமா.." கெஞ்சியவளிடம் கையெடுத்துக் கும்பிட்டான். "நான் வெறுக்கல.. தண்ணீர் தாகம்ன்னு வந்தேன். உன்னை பார்த்ததும் அந்த தண்ணீர் மேல கூட ஆசை வரல.." என்றவன் திரும்பினான். தன் அறையை நோக்கி நடந்தான். அவசரமாக தனது அறைக்கு ஓடிய கனிமொழி தண்ணீர் சொம்பை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

"ப்ளீஸ் மாமா வாங்கிக்கங்க.." கெஞ்சினாள். தாகமே பெரிய வேதனையாக இருந்தது. தண்ணீரை குடித்ததும் சொம்பை அவளிடமே நீட்டினான்.

"தேங்க்ஸ்.." என்றவன் தடுமாறியபடி தனது அறைக்கு வந்தான். அவன் பின்னால் வந்தாள் அவள். "என் ரூம்க்குள்ள வராதே.. எப்பவும் நோ என்ட்ரிதான் உனக்கு.." என்றவன் கதவை சாத்தி தாழிட்டான்.

மறுநாள் காலையில் கீர்த்தனாவும் பாலாஜியும் வீடு வந்தார்கள். அவளுக்கு‌ தன் கணவனின் செய்கைக்கான காரணம் தெரியவில்லை. அன்று இந்த வீட்டில் அவன் அழுததை பார்த்த பிறகு எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவனை இங்கே அழைத்து வந்து விட கூடாது என்று நினைத்திருந்தாள். ஆனால் அவன் இன்று அடம்பிடித்து அவளையும் சேர்த்து இழுத்து வந்திருந்தான்.

வீட்டிற்கு வந்த பேரனை அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்தாள் தாயம்மா.

கதிரேசன் மகளை பரிதாபமாக பார்த்தார். கனிமொழி ஓடிச் சென்று அண்ணனை கட்டிக் கொண்டாள்.

"வாடா.." அவசரமாக உள்ளே அழைத்தாள் வளர்மதி.

"ஏதாவது முக்கிய விசயமா பாலா.? இவ்வளவு தூரம் வந்திருக்க.." தாத்தா தயக்கமாக கேட்டார்.

"எங்க இரண்டு பேர் ஜாதகத்தையும் ஒரு சோசியர்கிட்ட காட்டினேன். மூனு மாசத்துக்கு இரண்டு பேரும் சேராம இருக்கணுங்கற மாதிரி என்னவோ சொன்னாங்க. மீறி இணைஞ்சா இரண்டு பேர் உயிருக்கும் ஆபத்துன்னு சொன்னாங்க." என்ற பாலாஜியை அதிர்ச்சியோடு பார்த்தாள் கீர்த்தனா. அவன் இத்தனை நாளாக தன்னை சுற்றி வந்ததையும் இப்போது சோசியர் சொன்னதை நம்பியதாக சொன்னதையும் ஒப்பிட்டு பார்த்ததில் ஒரு இடத்திலும் ஒத்துப் போகவில்லை‌.

"ஐயையோ.. அப்புறம்.." பதறினாள் அர்ச்சனா.

"அந்த வீட்டுல இருந்தா சோசியர் சொன்னது போல என்னால இருக்க முடியாது. அதனாலதான் இரண்டு மூனு மாசத்துக்கு இங்கே இருக்கலாம்ன்னு வந்துட்டோம்.." தலைகுனிந்து சொன்ன பாலாஜியை வெறித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

நிமிர்ந்தவன் தேன்மொழியையும் கனிமொழியையும் மாறி மாறி பார்த்தான்.

"கனி நீ கீர்த்தனாவை உன் ரூம்ல தங்க வச்சிக்கிறியா.?" எனக் கேட்டான்.

ஹால் சுவரில் சாய்ந்து நின்றிருந்த சக்தி கனிமொழியின் பதிலுக்காய் காத்திருந்தான்.

"நான் என் ரூம்ல கூட இருந்துப்பேன்.." விருப்பு வெறுப்பில்லாத குரலில் சொன்னாள் கீர்த்தனா.

"சாரி கீர்த்தனா.. எனக்கு அவ்வளவு கட்டுப்பாடு இருந்திருந்தா உன்னை இந்த வீடு வரை கூட்டி வந்திருக்க மாட்டேன்.." அவன் சொன்னது கேட்டு அவளுக்கு மொத்த முகமும் சிவந்து போனது. ஏன் இங்கே நின்றோம் என்றிருந்தது கதிரேசனுக்கு. 'மானங்கெட்ட பைய..' என்று மனதுக்குள் திட்டியபடியே போனார் அவர்.

"கீர்த்து நீ என் ரூம்லயே இரு.. ப்ளீஸ்.. என் அண்ணன் உயிருக்கு ஏதாவது ஆகிடுச்சின்னா அப்புறம் என்னால தாங்கிக்கவே முடியாது.." என்றாள் கனிமொழி.

"பாலா.." சக்தியின் அழைப்பில் நிமிர்ந்தான் அவன். "உனக்கு விருப்பம் இருந்தா நீ என் ரூம்ல தங்கிக்கலாம்.. நான் உன்னை பத்திரமா பார்த்துப்பேன். உன் மேல உள்ள அக்கறை இல்ல. என் சிஸ்டர் மேல உள்ள பாசம்.." என்றவன் தனது வேலைகளை பார்க்க கிளம்பினான்.

கீர்த்தனாவுக்கு மட்டும்தான் தலையும் புரியவில்லை.‌ வாலும் புரியவில்லை. புரிய வரும்போது அவள் மனநிலை என்னவாக இருக்கும்.?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN