நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...08

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காற்றுக்கென்ன வேலி...08

ஞாயிற்றுக்கிழமை விடியலே நிலாவிற்கு அதிரடியாக பிறந்திருந்தது. காலை எழுந்ததில் இருந்தே ராஜேஸ்வரி பாட்டி அவளுக்கு வேலை கொடுத்தே அவளை ஒரு வழி ஆக்கி விட்டார்.


காலையில் எழுந்தவள் சோம்பல் முறித்த படி படுக்கையில் அமர‌ " அக்கா " என்று குரல் அவள் வீட்டின் வாசலில் இருந்து கேட்டது..


" யாரு டா அது இப்படி காலங்காத்தலையே நம்ம வீட்டு மணி அடிக்கிறது " என்று சிந்தனையில் இருந்த படியே கூந்தலை அடக்கி கொண்டை போட்டு கிளிப் குத்தியவள் எழுந்து வெளியே வந்தாள்..


" என்னடா காலங்காத்தலையே இந்த பக்கம் " என்று வந்திருந்தவனிடம் கேட்டாள் நிலா..


" அட நீ வேற யாழ் அந்த கிழவி தான் பால் வச்சி விளையாடிட்டு இருந்த என்ன கூப்பிட்டு ஒரு சீட்டையும் கையில காசையும் கொடுத்து கரி கடைக்கு பொய்ட்டு வர சொல்லி அனுப்பி விட்டுச்சி அக்கா " என்றவாறே அந்த பதினாங்கு வயதான பையன் விஷ்ணு கூறினான்.


தன் பாட்டியை மனதிலே அர்ச்சித்தவள் " சரி கொடு டா " என்று அதை வாங்கிக் கொண்டாள்..


" அக்கா அந்த கிழவி கொடுத்த காசுல மிச்சம் ஐம்பது ரூபாய் வந்துச்சி இத புடி கா " என்று அவளின் கையில் அதை தந்தான்..


" சரி டா நீ போய் விளையாடு " என்று விட்டு உள்ளே நகர பார்த்த நிலாவை " யாழ் " என்று அழைத்து நிப்பாட்டினான்.


" சொல்லு டா விஷ்ணு " என்றே அவனை ஏறிட்டு பார்க்க,


விஷ்ணுவோ " உங்க வீட்ல இருக்கிறதே ரெண்டு பேரு தான் இதுல எதுக்கு அக்கா கிழவி இவ்வளவு வாங்கி வர சொல்லுச்சி " என்றே தன் சந்தேகத்தை அவளிடம் கேட்க


" அதைய ஏன் டா கேக்குற யாரோ ரெண்டு மடையணுங்க இந்த பாட்டி கிட்ட வந்து பேசி நட்பு பாராட்டிருக்காணுங்களாம் டா அதுங்க ரெண்டும் இன்னைக்கு மதியம் சாப்பாட்டுக்கு வர சொல்லி இருக்காங்க பாட்டி அதுக்காக தான் இதெல்லாம் " என்று சலித்து கொண்டே கூறினாள் நிலா.


" சரி அக்கா நான் கிளம்புறேன் இன்னைக்கு மதியம் மேட்ச் இருக்கே அப்போ நீ வர மாட்டியா அக்கா " என்று கேட்டு அவளை நோக்க


" இல்ல டா இன்னைக்கு வர முடியாது அடுத்த வாரம் வரேன் " என்று வருத்தத்துடன் சொன்னாள் நிலா.


" சரி பாய் அக்கா " என்று விட்டு விசில் அடித்த படியே சென்றான் விஷ்ணு அவர்களின் பக்கத்து வீட்டு பையன்..


அவன் விடை பெற்றதும் வீட்டிற்குள் வேக நடையுடன் உள்ளே வந்த நிலா பாட்டி என கத்த


" எதுக்குடி இந்த கத்து கத்துற இப்படியே புகுந்த வீட்டுக்கு போய் இப்படிலாம் கத்திட்டு இருந்தின்னா என்னைய தான் டி சொல்லுவாங்க எப்படி புள்ளைய வளர்த்து வச்சிருக்கன்னு " என்று ஏகத்துக்கும் ராஜேஸ்வரி பாட்டி சொல்ல


நிலாவின் முகம் க்ரையிண்டரில் மாவை தண்ணீர் ஊற்றாமல் அறைத்து கெட்டியாக இருப்பது போல் இறுகி போய் இருந்தது...


அவளை கண்ட பாட்டி அவளிடம் வாங்க வேண்டிய திட்டை மாற்றும் பொருட்டாக " கையில என்ன டி வச்சிருக்க " என்று கேட்க


" ஆங் உனக்கான பாயாசம் தான் புடி " என்று விட்டு கோபமாக அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்...


அவள் கதவை அடைத்த விதத்திலேயே அவளின் கோபம் முழுவதும் தெரிய வர அமைதியாக அமர்ந்துக் கொண்டார் .


சிறிது நேரத்திலேயே வெளியே வந்த நிலா குளித்திருக்க மஞ்சள் மற்றும் ஊதா நிறத்தில் இருந்த அழகிய வேலைப்பாடுகள் கொண்ட காட்டன் புடவை உடுத்திருந்தாள். அவளை பார்க்கவே அவ்வளவு பாந்தமாக இருந்தது. தலை குளித்து இருந்ததால் ஈரக் கூந்தலை டவலை வைத்து கொண்டை போட்டு இருந்தாள்.


நேராக சாமி அறைக்கு சென்று சாமி கும்பிட்டவள் தன் அம்மாவின் புகை படத்திற்கு முன் விளக்கை ஏற்றிவிட்டு சமையலறைக்கு சென்று வேலையை தொடங்கினாள்...


இட்லி பாத்திரத்தில் இட்லியை வேக வைத்தவள் அதற்கு தகுந்தாற்போல் இருக்கவே சாம்பார் மற்றும் பரங்கிக்காய் சட்னி அறைத்து வைத்தாள்...


இட்லி வெந்து முடிக்கவும் பாட்டிக்கு அதை கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு மதியத்திற்கு தேவையானவற்றை செய்ய தொடங்கினாள்..


பதினொரு மணி அளவில் வீட்டில் காலிங் பெல் அடிக்க சமையல் வேலையை பாதியில் விட்டுவிட்டு கதவை திறந்த அவளுக்கு ஆச்சிரியம் அதிர்ச்சி கோபம் என அனைத்து விதமான உணர்வுகளும் அவள் முகத்தில் வந்து போனது அங்கிருந்தவர்களை கண்டு....


அப்படியே சிலையென நிலா நிற்க " ஹே மூன் கொஞ்சம் தள்ளி நின்னா என்னாலையும் அண்ணாவாலையும் உள்ள வர முடியும் " என்று சிரித்த முகத்துடன் கூறினான் அவளால் பால் டப்பா என்று அழைக்கப்படும் சக்திதரன்.


அவள் அப்பவும் அப்படியே நிற்க அவளை ஓரமாக தள்ளி விட்டவன் "ப்யூட்டி எங்க இருக்கீங்க "என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான்.


விஷ்வாவோ அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க அவனின் பார்வை அறிந்து அவள் வேகமாக உள்ளே சென்று விட்டாள். குருஞ்சிரிப்புடனே உள்ளே நுழைந்தான் விஷ்வா.


" ப்யூட்டி" என்று மீண்டும் கத்த


" நான் இங்க தான் டா இருக்கேன் இரு வரேன் " என்று படி உள்ளே இருந்து வந்தார் ராஜேஸ்வரி பாட்டி...


பாட்டியை கண்ட சக்தி " ஹே ப்யூட்டி இன்னைக்கு என்ன ரொம்ப அழகா இருக்கீங்க "என்று கேட்டு அவர் கண்ணத்தை கிள்ளினான் சக்தி..


" அப்படியா சொல்ற இத கொஞ்சம் சத்தமா சொல்லு டா உள்ள இருக்கிறவுங்களுக்கும் நல்லா கேட்கட்டும் " என்று ஓர பார்வையால் பேத்தியை காண்பித்து சொன்னார் ராஜேஸ்வரி...


" பாட்டி அந்த மாதிரியான ஓல்ட் லேடிஸ்க்கு எல்லாம் எங்க தெரிய போகுது இந்த யூத்தோட பெருமை " என்று நிலாவை மறைமுகமாக கிண்டல் செய்ய விஷ்வா அவனை கண்டு முறைப்பதை பார்த்து "வா ப்யூட்டி இப்படி உட்காந்து பேசலாம் இங்க ஒரே புகையிர ஸ்மெல் வருது " என்று விட்டு அவனும் அமர்ந்து பாட்டியையும் அமர வைத்தான்..


நிலா கோபத்தின் உச்சியில் இருந்தாள் அதுவும் சக்தியை கண்டதும் இன்னும் கோபம் தலைக்கேறியது...


அவளின் கோபத்தை பாத்திரத்தில் மீது காட்டத் தொடங்கி இருந்தாள். சமையலறையில் இருந்து பாத்திரம் உடையும் சத்தம் கேட்க விஷ்வாவிற்கு அந்த பாத்திரத்திற்கு பதிலாக சக்தியை நினைத்து பார்த்தான்.


" அய்யோ மூன் அடிக்காத வலிக்குது " என்று கதற


" அப்படி தான் டா பால் டப்பா அடிப்பேன் " என்று மேலும் அடிகளை பரிசாக கொடுத்தாள்.


வலி தாங்க முடியாத சக்தி அவளின் காலில் விழுந்தே விட்டான்.


இப்படி நினைத்து விஷ்வா சிரிக்க அவனின் மனநிலையை அறிந்த சக்தி கொஞ்சம் நிறுத்துறீயா நானாவது இன்னைக்கு ஒரு நாள் தான் நீ தான் தம்பி வாழ்க்கை முழுக்க அடிவாங்கனும் " என்றான் மெதுவான குரலில்...


" அவளோட அடிய கூட நான் சுகமா தாங்குவேன் டா " என்றான் விஷ்வா காதல் அரும்பில்


" சகிக்கில டா ப்ளிஸ் ரியாக்ஷன் சேஞ்ச் பண்ணு " என்று விட்டு ப்யூட்டியுடன் கடலை போட தொடங்கினான் அவர்களுடன் விஷ்வாவும் கலந்துக் கொண்டான்.


ஆனால் நிலாவுக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை எப்படி வெளிநாடு சென்ற ஒருத்தர் இங்கே வந்திருக்க முடியும் என்ற யோசனையிலேயே எதையோ அறுத்துக் கொண்டு இருந்தவளின் கையை கத்தி பதம் பார்த்தது...


பேச்சு எல்லாம் அவர்களிடம் இருந்தாலும் அவனின் பார்வை முழுவதும் அவள் மீதே இருந்தது..


கத்தி அவள் கையை மெதுவாக பதம் பார்க்க " ஸ்ஸ் " என்று கத்தலில் விஷ்வா பதறிக் கொண்டு சமையலறைக்கு வந்தான்.


வந்தவன் கண்டது வெட்ட பட்டிருந்த இடத்தில் இரத்தம் கசிவதை தான்...


உடனே அவள் கையை தன் கைக்குள் கொண்டு வந்தவன் அவளின் கையில் வெளியே எட்டி பார்த்த உதிரத்தை தன் நாவினால் உறுஞ்சி எடுக்க ஆரம்பித்தான் இதெல்லாம் நொடி பொழுதில் நடந்திடவே நிலா எதுவும் பண்ணாமல் அமைதியாக நின்றிருந்தாள்..


அவளின் இந்த அமைதியை கலைக்கும் விதமாக தண்ணியில் கையை கழுவி விட்ட விஷ்வா பக்கத்தில் இருந்த செல்ஃபில் தேடி மஞ்சள் டப்பாவை எடுத்து வந்தான்.


அவளது கையில் அந்த மஞ்சளை வைக்க மீண்டும் ஸ்ஸ் என்று முகத்தை அஷ்ட கோனலாக்கினாள் .


அவனிடமிருந்து கையை வெடுக்கென்ன புடுங்கியவள் "என்ன பண்றீங்க " என்று கோபமாக கேட்க


" லூசா டி நீ என்ன நினைப்புல வேலை பாத்துட்டு இருக்க அதுவும் கையில கத்திய வச்சிகிட்டு. ஏதோ சின்ன கீறலோட விட்டுருச்சி இதுவே பெருசா எதாவது ஆகி இருந்தா " என்றவன் முடிக்க முடியாமல் தொண்டை அடைக்க


" என்ன செத்து போவேன் அவ்வளவு தான நான் வாழ்ந்து இங்க யாரும் எந்த ப்ரோயஜனும் இல்ல அதுக்கு சாகுறதே .." என்று சொல்லிக் கொண்டே போனவளின் கூற்று பாதியிலேயே தடை செய்யப்பட்டது விஷ்வாவின் அடியால்...


" என்ன உனக்கு அப்படி ஒரு பிரச்சினை கேக்குறேன். ஒவ்வொரு பிரச்சனையோட முடிவுக்கும் சாவுதான் தீர்வு கிடையாது சரியா . அப்படி சாவு தான் தீர்வுன்னா இங்க யாருமே உயிரோட இருக்க முடியாது. உனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கா ஏன் மத்தவுங்களுக்குலாம் இல்லையா இங்க பல பேரோட வாழ்க்கை பிரச்சனையில தான் பொயிட்டு ஏன் அதுக்காக அவுங்க சாவையா தேடிக்கிட்டு இருக்காங்க. நீ தான் உன் வாழ்க்கைகாக ஃபைட் பண்ணணும். உனக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்காமா நீ மத்த பொண்ணுங்களுக்கு சப்போர்டிவா இருந்திருக்கனும் ஆனா நீ பயந்து ஓடுற . இவ்ளோ சொல்லியும் சாகுறது தான் உன் குறிக்கோள்னு சொன்னா உன்ன காதலிக்கிற பாவத்துக்கு நானும் உன்கூடவே வரேன் "என்று வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.


நிலா பேய்ரைந்தார் போல நின்றிருக்க அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தது குக்கர் சௌண்ட்...


அதன்பின் நிலா எதுவும் யோசிக்காமல் வேலையில் கவனத்தை செலுத்தி இருந்தாள் அந்த பாவையவள்.


மதியம் பனிரெண்டு போல் சமையல் வேலையை முடித்த நிலா அனைவரையும் சாப்பிட அழைக்க சக்தியோ " கொஞ்சம் நேரம் ஆகட்டும் மூன் " என்றான் .


அவனை கண்டு ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள் நிலா.


" அய்யோ மம்மி இந்த பூதம் கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க மம்மி . பாருங்க பாருங்க அந்த காண்டா மிருகம் இன்னும் என்னை பார்த்து முறைத்துக் கொண்டு தான் இருக்கிறது " என்று மேலே வசித்து கொண்டிருந்த ரஞ்சினியை கண்டு தன்னை காப்பாற்றும் படி கோரிக்கை விடுத்துக் கொண்டான்.


" இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சது நீ செத்த டா மவனே "என்று அவனது மூலை எச்சரிக்கை விடுத்து சென்றது..


அதன் பின் மூவருமாக பேசிக் கொண்டு இருந்தனர். நிலா தனித்து விட பட்டாள்.


ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் சாப்பிட அழைத்தாள் நிலா.


அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக மூவரும் சாப்பிட அமர்ந்தனர் .நிலா அவர்களுக்கு பரிமாறினாள்.


மட்டன் குழம்பு சிக்கன் வறுவல் வேக வைத்த முட்டை என அனைத்தையும் அவள் டேபிளிலிருந்து அவர்களது இலையில் வைத்தாள்.


விஷ்வாவோ தன்னவள் கையால் செய்யப்பட்ட சாப்பாட்டை இரசித்து ருசித்து சாப்பிட்டான்.


ஆனால் சக்தியோ அவளின் சாப்பாட்டை குறை கூறியபடியே சாப்பிட்டு முடிக்க அதற்குள் குட்டி வாண்டுகள் அவளின் வீட்டின் முன்பு ப்ரேவேசித்தனர்.


"அக்கா " என்று குரல் வந்தது.


அடுத்ததாக " நிலா அக்கா " என்று குட்டி வாண்டுவின் குரல் வந்தது..


" இருங்கடா வரேன் " என்றவள் அவர்களுக்கு தேவையானவற்றை வைத்து விட்டு வெளியே வந்தாள்...


அதற்குள் விஷ்வா சாப்பிட்டு முடிக்க அவனும் அவள் பின்னாடியே சென்றான்..


"சொல்லுங்க டா " என்று நிலா அங்கே இருந்த அவளது நட்பு வட்டாரத்திடம் கேட்க


"என்ன நிலா சொல்லுங்கன்னு சொல்லுற இன்னைக்கு மேட்ச் இருக்குன்னு தெரியும்ல அப்புறம் இன்னமும் வராம இருக்க " என்று பத்து வயது சிறுவன் கேட்க அவன் கூட இருந்த வாண்டுகளும் தலையாட்டியது..


" இன்னைக்கு என்னால வர முடியாது டா. வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்க நீங்க போங்க நான் அடுத்தவாரம் வரேன் " என்று முகத்தை தொங்க போட்டு படி சொன்னாள்.


அப்போது அங்கே வந்தவன் " ஹலோ குட்டிஸ் உங்களுக்கு எல்லாம் என்ன வேணும் " என்று கேட்டான் விஷ்வா .


அவனை பார்த்து யார் என்று கண்ணாலேயே அந்த பத்து வயது வாண்டை பார்த்து சிரிப்பு வர தன்னை தானே அவர்களுக்கு அறிமுக படுத்திக் கொண்டான்.


" நான் விஷ்வேந்தர் எல்லாரும் என்ன விஷ்வான்னு கூப்பிடுவாங்க ஒருத்தவுங்க மட்டும் என்ன தருன்னு பாசமா கூப்பிட்டு வாங்க உங்க அக்கா கூட தான் வேலை பார்க்கிறேன் " என்ற படியே ஓரப் பார்வையால் நிலாவை பார்த்தான்.


அவளோ எதுவும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தாள்.


" சரி இப்போ சொல்லுங்க என்ன வேணும் உங்களுக்கு" என்று கேட்க


" எனக்கு இப்போ நிலா தான் வேணும் " என்றான் அந்த வாண்டு.


அவனை கண்டு முறைக்க " அது அவுங்க க்ரிக்கேட் மேட்ச் விளையாட கூப்பிடுறாங்க " என்றாள் வேகமாக...


" க்ரிக்கெட்டா " என்றபடி சக்தியும் அங்கே வந்தான்...


" ஆமா டா " என்றவன் " சரி இன்னைக்கு நாங்களும் வரோம் எங்களையும் சேத்துக்கிறீங்களா பாய்ஸ் " என்று கேட்க


அவன் நிலாவை பார்க்க அவளோ சம்மதம் போல் தலையசைத்தாள்.


" ஓகே நீங்களும் வரலாம் " என்று சொல்ல அவனை இழுத்து முத்தத்தை கண்ணத்தில் முத்தத்தை பதித்தான் விஷ்வா.


பின் ,நிலா புடவை கட்டியிருந்ததால் உடை மாற்றிவிட்டு வந்தவள் இருவரையும் அழைத்துக் கொண்டு க்ரௌண்ட் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.


கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் விளையாடியவர்கள் களைத்து போய் வீட்டிற்கு வந்தனர் மூவரும்..


மூவருக்கும் குடிக்க ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தார் பாட்டி ராஜேஸ்வரி.


விஷ்வா அதை வாங்கி குடிக்க சக்தி செய்த கலாட்டாவில் விஷ்வா குடித்துக் கொண்டிருந்த ஜுஸ் அவனின் மேல் விழுந்தது.


அவனை கண்டு முறைத்தவன் பாட்டியை பார்க்க " நிலா தம்பிய உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ " என்றார்.


விஷ்வாவுக்கு உள்ளுக்குள் ஏகபோக சந்தோஷம் மனதிலே பாட்டிக்கு ஒரு நன்றியை தெரிவித்தவன் அமைதியாக அவள் பின்னாடியே சென்றான்..


நிலா அறைக்குள் வந்தவன் குளியலறை சென்று ட்ரெஸை க்ளீன் செய்து வெளியே வர நிலா தயக்கத்துடனே " விஷ்வா " என்று அழைக்க


அவனும் அவளை திரும்பி பார்த்து என்னவென்று புருவத்தை மேல் உயர்த்தி கேட்க


" அது வந்து என்ன மனிச்சிடுங்க விஷ்வா நான் அப்படி உங்க கிட்ட நடந்திருக்க கூடாது " என்று மெல்லிய குரலில் திக்கி திணறி கூற


" எனக்கு இந்த மாதிரியான மன்னிப்பு எல்லாம் வேணாம் அதுவும் உன்கிட்ட இருந்து " என்றவன் எதையோ நினைத்து சொல்ல


" அப்போ எந்த மாதிரியான மன்னிப்பு வேணும் " என்று தயங்கியவாறே நிலா கேட்க இதற்காகவே காத்திருந்த அவன் அவளின் பக்கத்தில் வந்து அவளில் இடையில் கைவைத்து தன்னிடம் இழுக்க தொப்பென்று அவன் மீதே மோதி நின்றாள்.


" இந்த மாதிரியான மன்னிப்பு மட்டும் தான் உன்கிட்ட இருந்து எனக்கு வேணும் " என்றவன் நொடி பொழுது தாமதிக்காமல் அவளின் இதழை சிறை செய்தான்...

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN