நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...09

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காற்றுக்கென்ன வேலி...09


அவனின் இந்த செயலில் திகைத்து போய் இருந்தாள் நிலா. ஆனால் அவனோ அவளிடம் உள்ள தேனை முழுவதும் இன்றே சுவைத்தாக வேண்டும் என்பது போல் அவள் இதழை விடாமல் சிறை செய்து வைத்திருந்தான்.


அவள் மூச்சு விடுவதற்கு சிரமபடுவது அறிந்து மெதுவாக அவளின் இதழை விடுத்தான் . ஆனால் அவள் இடையை மேலும் இறுக்கி தன்னுடன் ஒட்டி நிற்க வைத்தான் விஷ்வா..


அவனுடைய செயலிற்க்கு நிலா ஏதோ பொம்மை போல் இசைந்து போனாள்..


" நம்ம வாழ்க்கையில சாரி இப்படி தான் கேக்கணும் சரியா அது நான்னா இருந்தாலும் சரி நீயா இருந்தாலும் சரி நம்ம கேக்குற சாரி இப்படி தான் இருக்கனும் " என்று அவளை விடுவித்தவன் " இவ்ளோ நாள் சிடு மூஞ்சி உம்முன்னா மூஞ்சி தருவ தான பாத்துருப்ப இனி இந்த மொழியோட தருவ பார்த்தது இல்லையே இனி பாப்ப மொச குட்டி " என்று பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு வெளியேறினான்.


நிலாவோ அவன் விட்ட இடத்திலேயே சிலைப் போல் நின்றிருக்க அவளின் நிலை அறியா பாட்டி " அடியேய் கொஞ்சம் வெளிய வா பசங்க கிளம்புதுங்க பாரு " என்றதும் தான் நினைவு பெற்றவள் அவர்களை வழி அனுப்பச் சென்றாள்..


" சரிங்க பாட்டி நாங்க கிளம்புறோம் " என்று சக்தியும் " நாங்க வரோம் பாட்டி " என்று விஷ்வாவும் கூறிவிட்டு கிளம்பிச் சென்றனர்.


நேராக அவர்கள் இருவரும் சென்றது எதிர் வீட்டிற்கு தான்..


அவர்களை கண்டு குழம்பி போன நிலா பாட்டியை அழைத்து " அவுங்க ரெண்டு பேரும் எதுக்கு எதிர் வீட்டுக்கு போறாங்க பாட்டி " என்று தன் சந்தேகத்தை முன் வைக்க


" அவுங்க வீட்டுக்கு அவுங்க போகாமா வேற எங்க போவாங்க சொல்லு " என்றவர் அறைக்குள் தன்னை புகுத்திக் கொண்டார்.


"எனது அப்போ இவுங்க ரெண்டு பேரும் இங்க தான் இருக்காங்களா. அப்போ இந்த லெட்டர் அனுப்புற வேலைய பாக்குறது வேற யாரும் இல்ல விஷ்வேந்தர் வேலை தானா சும்மாவே விட கூடாது "என்று மனது பொறிந்தாலும் அவனின் மன்னிப்பு செயலை எண்ணி தானாகவே கால்கள் அவள் அறைக்குள் சென்றது..


வீட்டிற்கு வந்த விஷ்வா ஹாயாக அமர்ந்து கால்களை நீட்ட அவன் பக்கத்தில் வந்த சக்தி " விஷ்வா " என்று அழைக்க


"சொல்லு டா " என்றான் கண்களை முடி இருந்த நிலையிலே..


" எனக்கு ஒரு டவுட் " என்றான் அவன்.


" என்ன டவுட் உனக்கு சொல்லு என்னால முடிஞ்சா க்ளியர் பண்றேன் " என்றான் விஷ்வா.


" அது வந்து நீயும் மூனூம் வேற வேற இடத்துல தான் இருந்தீங்க அப்புறம் எப்படி உனக்கு அவ மேல லவ் வந்துச்சி அதுவும் இல்லாம எப்போ இருந்து நீ நிலாவ காதலிக்க ஆரம்பிச்ச " என்று தன் சந்தேகத்தை அவனின் கேட்டான் சக்தி.


" இந்த பதிலுக்கான விடைய முதல நான் என்னோட மொழி கிட்ட தான் சொல்வேன். ஆனா இப்போ அவ கேக்குற நிலமையில இல்ல. அவள நான் என்னோட மொழியா மொதல மாத்தனும் டா. அதுக்கப்புறம் இந்த விஷ்யத்த உன்கிட்ட சொல்றேன். இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு உனக்காக அம்மா காத்திட்டு இருப்பாங்க " என்றான்.


" சரி டா அண்ணா பாத்து பத்திரமா இரு சரியா நான் கிளம்புறேன் " என்று கிளம்பிச் சென்றான் சக்தி.


சமைலறைக்கு சென்ற விஷ்வா பாத்திரத்தை எடுத்து பால் காய்ச்சி ஒரு க்லாசில் மாத்தி எடுத்து வந்து குடிக்க தொடங்கினான்.


அதன் பின் அவனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.


அவனுக்கும் தன் அன்னையிடம் தன் காதலை கூறிய நாள் ஞாபகத்துக்கு வந்தது..


*****************


ராஜசேகர் அவரது அறையில் அமர்ந்து இருக்க சாவித்திரி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அவர்களது அறைக்கு வந்தார்.


உள்ளே வந்த சாவித்திரி அமைதியாக ட்ரெசிங் டேபிளில் அமர்ந்து அணிகலன்களை கலட்டி வைத்துக் கொண்டு இருக்க " சாவி மா " என்று அழைத்தார் ராஜசேகர்.


"சொல்லுங்க ராஜு " என்று அவள் வேலை செய்தவாறே கேட்க


" இங்க வந்து கொஞ்சம் பக்கத்துல உக்காரு மா " என்று சொல்லி அவர் கையில் இருந்த மடிக் கணினியை ஆஃப் பண்ணி வைத்தார்.


"சரிங்க " என்று விட்டு அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தார்..


" இப்போ சொல்லுங்க என்ன ஆச்சி உங்களுக்கு " என்று கேட்க அவரை பார்க்க


" நம்ம பசங்க ரெண்டு பேரும் வளர்ந்துட்டாங்க சாவி மா அவுங்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்ல " என்று விஷ்வாவின் கல்யாணத்துக்கு அடித்தளம் போட்டார்.


" ஆமாங்க நானும் யோசிச்சிட்டே தான் இருந்தேன் விஷ்வா கிட்ட பேசணும்னு நினைச்சேன் ங்க "


" நம்ம நித்திக்கும் இது கல்யாண பண்ற வயசு தான் நீ அவன் கிட்ட பேசிட்டு என்னென்னு சொல்லு அப்போ தான் நாம மஞ்சு கிட்ட பேச முடியும் " என்று தனது ஆசையை சொல்லாமல் சொன்னார். இவர் இப்போது பேசக் காரணம் நம் நித்தியே தான்.


ராஜசேகருக்கு மாலையில் நடைபயணம் செய்யும் பழக்கம் உள்ளது. அதனால் எப்போதும் அவர் மாலையில் பூங்காவிற்கு வந்து கிட்ட தட்ட ஒரு மணிநேரம் நடைபயணம் மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு செல்வார். அதேபோல் இன்றும் அவர் அந்த பூங்காவிற்கு வந்து நடக்க தொடங்க , சரியாக அந்த நேரம் அவர் கண்ணில் படுமாறு நின்றிருந்தாள் நித்திலா .


அவர் அருகில் வரும்போது அவள் முன் ஒரு இளைஞன் வந்து நிற்க அவரது நடை அப்படியே தடைப்பட்டது..


நித்திலா முன் முட்டி போட்டு அவளின் முன் பூக் கொடுத்து ப்ரோப்பஸ் செய்ய அதனை வாங்கினாள் நித்திலா. அவன் சிரிப்புடன் எழுந்து நிற்க ஓரக்கண்ணால் தன் மாமாவை பார்க்க அவரோ அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்தார்.


அவனிடமிருந்து வாங்கிய பூவை கீழே பொட்டவள் ஓங்கி ஒரு அறை அவனை அறைந்தாள்.


" ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிக்கோ மேன் நான் ஆல்ரெடி கமிடட் கேர்ள். என்னோட ஆள் பேரு விஷ்வேந்தர் சரியா அவன் கிட்ட சொன்னேன்னு வச்சிக்கோ நீ உயிரோடவே இருக்க முடியாது. இந்த உயிரும் உடலும் எப்போதும் என்னோட விஷ்வாக்கு தான் மைண்ட் இட் என்னோட கண்ணு முன்னாடியே இனி முலிக்காத கெட் லாஸ்ட் " என்று விட்டு வேகமாக அந்த இடத்தை காளி செய்தாள்..


இதனை கண்ட ராஜசேகருக்கு தன் மருமகள் தன் மகன் விஷ்வா மீது அன்பையும் நேசத்தையும் கண்டு வியந்து போனார். சீக்கிரமே இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சி கண் குளிர பாக்கணும் என்று நினைத்தவர் அவள் பார்க்கா வண்ணம் நகர்ந்து சென்றார்...


அவர் உருவம் மறையும் வரை அமைதியாக இருந்த நித்திலா அவர் மறைந்ததும் அந்த இடத்தையே சுற்றினால்.


" ஹே சாரி டா பலமா அடிச்சிட்டேன்னா வலிக்கிதா என்ன " என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க


" வலி இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனாலும் லைட்டா வலிக்குது " என்றான் அந்த புதியவன் கண்ணத்தை தேய்த்தவாறே..


" பரவால்ல விடு டா மச்சி எல்லாம் என்னோட லவ்காக தான டா அவன் அவன் நண்பனுக்காக உயிரையே விடுறாங்க நீ என்ன ஒரு அடி தான வாங்கின அப்புறம் என்ன " என்றாள்.


" அடி வாங்குன எனக்கு தான் டி வலி தெரியும் உனக்கு எங்க தெரிய போகுது " என்று சொல்ல


" சரி வா டா வந்த வேல முடிஞ்சது போலாம் " என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள் நித்திலா.


" ஹோ நித்திய மனசுல வச்சி தான் இப்படி பேசுறீங்களா "என்று எண்ணிய சாவித்திரி தன் கணவனிடம் " பேசுறேங்க அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல அவனுக்கு புடிக்கிற பொண்ணையே நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் ங்க " என்று விட்டு படுத்துக் கொண்டார்.


அவரும் சாவித்திரியின் முதுக்கு புறம் திரும்பி படுத்துக் கொண்டார்.


அடுத்தநாள் முதல் வேலையே சாவித்திரி தன் மகனை காணச் சென்றார்.


அவனது அறைக்குள் வந்த சாவித்திரி மகனை அழைக்க " சொல்லுங்க மா " என்றான்.


" நானும் அப்பாவும் நேத்து உன்ன பத்தி தான் பா பேசிட்டு இருந்தோம் " என்க


" ஓஓஓஓஓ " என்று ராகம் இழுத்தவன் அதன் பின் எதுவும் பேச வில்லே அமைதியாகவே தான் இருந்தான்.


" உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கனும் உங்க அப்பா ஆச படுறாரு டா அதுவும் அந்த நித்திலா கூட உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா டா " என்றார் சாவித்திரி..


" அம்மா எனக்கு கல்யாணம் பண்றதுள்ள ஒரு பிரச்சனையும் இல்ல ஆனா அது நான் காதலிக்கிற என்னோட மொழியா இருந்தா எனக்கு நல்லா இருக்கும் " என்றான் தலை குனிந்து...


" பாரு டா என்னோட பையனுக்கு காதல் லாம் இருக்கா யாருடா அந்த பொண்ணு " என்று சிரித்த படியே சாவித்திரி கேட்க


" அம்மா " என்றவனின் கண்கள் கலங்கி இருந்தது..


அவன் கண்ணத்தை தாங்கியவர்" எனக்கு எப்போதுமே என்னோட மகன் ஆசை தான் எனக்கு முக்கியம். சரி இப்ப சொல்லு யாரு அந்த பொண்ணு " என்று கேட்க


" என்னோட யாழ்மொழி மா சக்தியோட ஸ்கூல் ஃப்ரேண்ட் " என்றான் சிறிது வெட்க பட்டுக்கிட்டே..


" என்ன டா சொல்ற யாழையா காதலிக்கிற அவள நாம பாத்தே பல வருஷம் ஆச்சே டா " என்று ஆச்சிரிய பட


" ஆமா மா அதுப் போல தான் என்னோட காதலும்" என்றான் புன்னகையுடன்


" சரி சரி எப்போ என் மருகள கண்ணுல காட்ட போற " என்க


" அம்மா நான் இன்னும் அவள போய் பாக்கல மா நம்ம காலேஜ்ல தான் ஒர்க் பண்றா இனி தான் அவள என்னோட வழிக்கே நான் கொண்டு வரனும் அதுக்கப்புறம் நான் உங்க மருமகள உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன் " என்றான்.


" சரி டா கண்ணா சீக்கிரமா அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு இல்லன்னா அவளுக்கு ஹெவி காம்பெட்டிஷன் வந்துர போகுது டா " என்று விட்டு சென்றார்...


இதை நினைத்தவன் அப்படியே உறங்கி போனான்.


அடுத்தநாள் கல்லூரிக்கு விரைவாகவே வந்திருந்தான் . ஏனென்றால் அவர்கள் கல்லூரியில் இன்டெர்னல் எக்ஸாம் நடக்க இருந்தது.


அனைவரும் கல்லூரிக்கு வந்துவிட காலையிலேயே ஒரு சிறிய மீட்டிங் வைத்துவிட்டு தேர்வு நடக்கும் வகுப்பிற்கு ஆசிரியர்களை அனுப்பி வைத்தான்..


மாணவர்களும் என்றும் இல்லாத நாளை பரிட்சைக்கு பிப்பர் செய்து கொண்டு இருந்தனர்.‌ அதற்கு முழு காரணமும் நம் விஷ்வாவே...


மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் "இந்த எக்ஸாம்ல எல்லாரும் நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிங்கன்னா உங்கள கண்டிப்பா நான் ஐவீக்கு கூட்டிட்டு போறேன் " என்றிருந்தான் விஷ்வா.


அதற்காகவே மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி இருந்தனர்..


நிலாவோ விஷ்வாவை முழுவதும் தவிர்த்தும் முறைத்தும் வந்தாள். இவளின் செயலிற்கு விஷ்வாவோ ஒன்னு முறைத்திருக்க வேண்டும் இல்லையேல் திட்டியாவது இருந்திருக்க வேண்டும் ஆனால் அவனோ மாறாக அவளிடம் காதல் வசனங்களை அள்ளிவிட்டுக் கொண்டு இருந்தான். அவளுக்கு தான் காதில் புகை வராதா குறையாக இருந்தது..


நேராக எக்ஸாம் செல்லுக்கு மணியுடன் சென்றவள் அவளுக்கு கொடுக்க பட்ட அறைக்கு ஏற்ற வினாத்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துக் கொண்டு சென்றாள்..


சரியாக அவர்கள் இருவரும் வெளியே வரவும் அவளை கண்டு முறைத்தவாறே கையில் கட்டுடன் வந்தான் அதிரூபன்..


அவளை கடந்து சென்ற அதிரூபன் அவளை திரும்பி பார்த்து " என்ன இந்த நிலைமைக்கு ஆக்குன்ன உன்ன கண்டிப்பா சும்மாவே விட மாட்டேன் டி. உன்ன எந்த அளவுக்கு கஷ்ட படுத்துறேன்னு பாரு " என்று வன்மத்துடன் கூறியவன் அறைக்குள் சென்றான்.....

தொடரும்....
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top