காதல் கணவன் 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உணவு பரிமாற வந்த மனைவியை கண்களால் எரித்தான் பாலாஜி. வேண்டுமென்றே அவன் மீது மோதியபடி நின்று உணவை பரிமாறினாள்.

அவன் நெற்றியை கண்டு அவளுக்கு குளுளுவென்று இருந்தது. அப்போதும் கூட முழு ஆத்திரம் தீரவில்லை.‌

பாலாஜி மேஜையிலிருந்த மற்றவர்களின் முகம்‌‌ பார்த்தான். கீர்த்தனாவின் மாற்றம் யாரையும் எதுவும் செய்யவில்லை என்பது போல இருந்தது அவர்களின் செய்கை.

'மனசாட்சி இல்லாதவங்க.. ஒரு பையன் இங்கே இவ்வளவு கஷ்டபடுறானே.. இந்த பொண்ணை பிடிச்சி அடக்கி வைக்கலாம்ன்னு தோணுதா யாருக்காவது.?' என்று மனதுக்குள் கருவினான்.

"கீர்த்து அந்த சட்னியை எடு.." கதிரேசன் இடதுக் கையை நீட்டினார்.

கீர்த்தனா அவளே அருகில் சென்று தந்தைக்கு சட்னியை பரிமாறினாள்.

"வாவ்.." கனிமொழி வாயை பிளந்தாள். அண்ணியின் முகம் பார்த்தாள்.

"அது ஒரிஜினலா குத்தியதா.? இல்ல ஒட்ட வச்சதா.?" என்று ஒற்றை இழையாய் புடவை மறைத்திருந்த கீர்த்தனாவின் வயிற்றிலிருந்து சிறு வளையத்தை கை காட்டிக் கேட்டாள்.

கீர்த்தனா வயிற்றை பார்த்தாள். கொசுவின் வலை போல இருந்த புடவையின் துணையால் வயிற்றில் எந்த பாகமும் மறையாமல் இருந்தது.

"ஒரிஜினலா குத்திக்கிட்டேன்.." என்றவளை இன்னும் கண்கள் விரிய பார்த்தாள் கனிமொழி.

"வலிக்கலையா கீர்த்தனா.." தேன்மொழி சந்தேகமாக கேட்டாள்.

"லைட்டா.." என்று தோளை குலுக்கியவளை கண்டு ஆச்சரியப்பட்டாள் கனிமொழி.

"நானா இருந்திருந்தா வலியில செத்தே இருப்பேன்.." என்றாள்.

பாலாஜிக்கு பாவமாக இருந்தது தங்கையை பார்த்து.

"மயக்க ஊசி போட்டுதானே தோடு குத்துவாங்க.?" கன்னத்தை தட்டியபடி கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தாள் கீர்த்தனா. "சும்மா ஒரு செகண்ட் வலி. இதுக்கு போய் யாராவது மயக்க ஊசி போடுவாங்களா.?" என்றாள்.

கனிமொழிக்கு அதிர்ச்சியே தீரவில்லை. அவளின் திறந்த வாயை பார்த்தபடியே சாப்பிட்டு முடித்தான் சக்தி.

பாலாஜி வங்கிக்கு கிளம்பினான். அவன் பைக்கில் ஏறி அமர்ந்த நேரத்தில் அவனை நோக்கி ஓடி வந்தாள் கீர்த்தனா.

"சாப்பாடு.." என்று உணவு பையை தந்தாள்.

"நீயே கொட்டிக்க.." என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான். பைக் சாவியை திருகி அணைத்தாள் கீர்த்தனா.

"சாப்பாட்டு பையை வாங்கிட்டு போ.." என்றாள் புருவம் நெரித்து.

"இந்த பாச மழையெல்லாம் என்கிட்ட வேணாம்.. என்னை சாகடிக்கணும்ன்னுதானே நீ ஏதேதோ திட்டம் போட்டுட்டு இருக்க.." என்றவனை முறைத்தவள் "கட்டிய புருஷன்னு கூட பார்க்காம கெட்ட வார்த்தையில் திட்டிடுவேன்.. பாச மழையும் இல்ல.. ஒரு ஹேர் மழையும் இல்ல.. மதியத்துல கேன்டின்ல வாங்கி சாப்பிடுறியேன்னு உன் சித்தி இதை தந்து விட்டாங்க.. உன்னை சாகடிக்க நான் ஏன் திட்டம் போடணும்.? நீதானே என்னை ஏமாத்தி என் மனசை கொன்ன.." என்றுக் கேட்டாள்.

பாலாஜி அவளை முறைத்தான்.

அவளின் கையை பற்றி தன்னருகே இழுத்தான். நெருங்கி வந்தவளின் தோளில் கையை பதித்தவன் "நான் உன்னை லவ் பண்றேன்.. இதை நீ நம்பினா என்ன நம்பலன்னா என்ன.? ஒரு மனுசனோட நிலமையை புரிஞ்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமாக இருக்க தெரியல உனக்கு.. ஆனா மொத்த பழியையும் என் பக்கம் திருப்ப தெரியுது.." என்றான் எரிச்சலாக.

அவனின் கையை தட்டி விட்டாள். "என் மனசை நீ புரிஞ்சிக்கல. இனி உன் நிலமையை நான் ஏன் புரிஞ்சிக்கணும்.?" எனக் கேட்டவள் அவனை முறைத்தபடியே திரும்பி வீட்டுக்கு நடந்தாள்.

பாலாஜி தன் கையில் திணிக்கப்பட்ட உணவு பையை வண்டியில் மாட்டிக் கொண்டான். வாசல்படியில் ஏறிக் கொண்டிருந்தவளின் பாதம் பார்த்தான். கொலுசணிந்த பாதம் அவனுக்குள் வேட்கையை தூண்டி விட்டது. கண்களை மூடியபடி திரும்பியவன் பைக்கின் கண்ணாடியை பார்த்து "தூ.." என்று வெறும் காற்றைத் துப்பிக் கொண்டான்.

"அவளோட வெற்றுப் பாதம் பார்த்தெல்லாம் லஸ்ட் வர உனக்கெதுக்கு இந்த முட்டாள்தனமான வீராப்பு விலகல்.?" என்று தன்னையே கேட்டபடி பைக்கை இயக்கினான்.

"பாலா.." அவன் வங்கியின் நுழைவாயிலில் நுழைந்தபோது அழைத்தாள் அம்ருதா.

திரும்பிப் பார்த்தான். கவினின் கைப்பிடித்து‌ நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

இயல்பான முக பாவத்தை வரவைத்துக் கொண்டவன் "என்ன அம்ரு.?" எனக் கேட்டான்.

"இது கவின்.." என்றவள் "நானும் இவனும் லவ் பண்றோம்.." என்றாள்.

'அதுக்குள்ளவா.?' என நினைத்தவன் "கன்கிராட்ஸ்.." என்றான்.

அம்ருதா புன்னகைத்தாள். "எங்கே நீ உன் அண்ணனை காரணம் காட்டி என் லவ்வை ஏத்துக்காம போயிடுவியோன்னு நினைச்சேன்.." என்றாள்.

பாலாஜி புன்னகைத்தான். "இது உன் வாழ்க்கை. உன் முடிவுதான் உன்னோடு கூடவே வர போகுது.. நான் என்ன சொல்றது.?" எனக் கேட்டவன் உள்ளே நடந்தான்.

"நாளைக்கு நாங்க இரண்டு பேரும் வெளியே போறோம்.. நீ ப்ரியா இருந்தா உன் வொய்ப்பை கூட்டி வரியா.? நான் உங்களுக்கு இதுவரை எந்த பார்டியும் தரவே இல்ல.. நாளைக்காவது தரேன்.." என்றாள்.

பாலாஜியின் அவளின் முகம் பார்த்தான். நட்பை தவிர வேறு இல்லை அந்த கண்களில். என்ன இருந்தாலும் கல்லூரி காலத்திலிருந்தே தோழியாக இருப்பவள். பல கடினமான சூழ்நிலைகளில் துணை நின்றவள். காதலில் தவறானவள் என்பதால் அவளின் நட்பை தவறாய் எண்ண தோன்றவில்லை அவனுக்கு.

"வரேன் அம்ரு.." என்றான்.

அம்ருதாவின் புன்னகையோடு தலையசைத்துவிட்டு கடந்தாள்.

"ஹலோ சார்.." என்ற கவினை திரும்பிப் பார்த்தவன் "ஹாய் கவின்.." என்றான்.

"அம்ருதா உங்க அண்ணாவைதான் லவ் பண்ணிட்டு இருந்தாங்கன்னு கேள்வி பட்டேன்.."

"ம். ஆமா.."

"நீங்களும் அவரை போலவே இவங்களை தப்பா நினைக்கிறிங்களான்னு தெரியல.." என்று தூரத்தில் வந்துக் கொண்டிருந்த முத்துராமை கை காட்டிச் சொன்னான்.

"அவன் என்ன நினைச்சான்.?" என்ற பாலாஜியிடம் நடந்ததை சொன்னான்.

சில நாட்கள் முன்பு கவினை சந்தித்தான் முத்துராம்.

"ப்ரதர் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. வாங்க.." என்று அழைத்துச் சென்றவன் "நீங்க சுத்திட்டு இருக்கற பொண்ணு என் பிரெண்டை லவ் பண்ணி கர்ப்பம் வரை போய் கழட்டி‌ விட்ட பொண்ணு.. நீங்க ஏதும் லவ் பண்ணிடாதிங்க.. உங்க லைப்பும் பாழா போயிடும்.." என்றான்.

கவின் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு "ஏன் பாஸ் இந்த சொசைட்டி மட்டும் இப்படியே இருக்கு.?" எனக் கேட்டான்.

முத்துராம் விழிகளை சுழற்றினான்.

"உங்க பிரெண்ட் இன்னேரம் வேறு பொண்ணை பார்த்திருப்பாரு. அவளை மேரேஜ் பண்ணிக்க அனுமதி கூட வாங்கியிருப்பாரு.‌ ஆனா ஒரு பொண்ணு மறுபடி வாழ ஆரம்பிக்க கூடாதா.? பிடிக்காத ஒருத்தனை விட்டு விலக கூட ஒரு பொண்ணுக்கு உரிமை கிடையாதா.? இல்ல பிடிச்ச இன்னொருவனோடு வாழ உரிமை கிடையாதா.?" எனக் கேட்டான்.

"நீதி நேர்மை கரெக்டா பேசுறிங்க ப்ரோ.. ஆனா உருகி உருகி காதலிச்சவனையே விட்டு போனவ. உங்களை கழட்டி விட யோசிக்க கூட மாட்டா.."

"உருகி உருகி காதலிச்சவனையே விட்டிருக்காங்க.. அப்படின்னா அவங்களுக்கு எந்த அளவுக்கு ஹர்ட் ஆகியிருக்கும்.?" எனக் கேட்டவன் "அவங்களை எனக்கு பிடிச்சிருக்கு.. நான் மெதுவாதான் அப்ரோச் பண்ணலாம்ன்னு இருந்தேன். ஆனா அவங்க ஸ்பீடா இருக்காங்க.. எனக்கு பிடிச்சிருக்கு.. உங்களுக்கு பிடிக்கலன்னா ஐ டோன்ட் கேர்.. இனி இந்த மாதிரி பேசிட்டு பக்கத்துல வராதிங்க.." என்றான்.

நடந்ததை கவின் சொல்லி முடிக்கவும் பாலாஜிக்கு முத்துராமை நினைத்து கவலையாக இருந்தது.

"ராம் சொன்னதை மனசுல வச்சிக்காதிங்க.. அம்ருதா நல்ல பொண்ணுதான். என் அண்ணனும் நல்லவன்தான். ஆனா அவங்களுக்குள்ள ஏதோ செட் ஆகல.." என்றுச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்தாள் கனிமொழி. தனது பேக்கை தேடி எடுத்து மாட்டிக் கொண்டாள். வெளியே நடந்தவளின் மீது வந்து மோதினான் வசந்தகுமார்.

அவனை தாண்டி நடந்தாள். திரும்பியவன் அவளோடு இணைந்து நடந்தான். அவளின் தோளில் கை போட்டான். கம்பளி புழுவை தொட்டது போல அருவெறுப்படைந்து அவனின் கையை தள்ளி விட்டாள்.

"பார்றா.." என்றவன் மீண்டும் அவளின் தோளில் கை போட்டான். கடந்துச் சென்ற மாணவ மாணவியர் தங்களுக்குள் எதையோ பேசி சிரித்துச் சென்றனர்.

"கையை எடு வசந்த்.."

"மாட்டேன்.. நான் உன் தோள்ல கை போடுவதால நீ என்ன குறையுற.? பையனும் பையனும் தோள்ல கை போட்டு போக கூடாதுன்னு ஒரு சட்டமும் இல்லையே.." என்றவனின் கைகள் சற்று கீழிறங்கியது.

அவன் கரம் ஏடாகூடமாக தீண்ட ஆரம்பிக்கும் முன்பே வலுக்கட்டாயமாக நகர்ந்து விட்டாள்.

"டோன்ட் டச் மீ.. நான் ஆண் மரம் கிடையாது. நான் அப்படி ஒரு ஆண் மரமா இருந்தாலுமே அதனால உனக்கு பிரச்சனை கிடையாது. ஆண்டவன் என்னை எப்படி படைச்சாலும் சரி. அவர் படைப்பை மதிக்கிறேன் நான். என்னையும் மதிக்கிறேன் நான். என்னை என் அனுமதி இல்லாம தீண்ட உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நான் சைல்ட் கேர்க்கு போன் பண்ணிடுவேன்.." என்றவள் இறந்தாலும் அப்படி ஒரு போனை பண்ண மாட்டாள் என்று அவளுக்கே தெரியும்.

"பொண்ணு மாதிரியே நடந்துக்கற.." என்று சொல்லி சிரித்த வசந்தகுமார் எதிரில் ஆசிரியர்கள் சிலர் வருவது கண்டு அவளை விலகி நடந்தான்.

கனிமொழிக்கு தன் மீதே கோபம் வந்தது. அவனை அறைந்திருக்கலாம் என்று தோன்றியது. மனதுக்குள் ஆயிரம் எரிமலை கொதிக்கும். ஆனால் அவள் அதை ஒருநாளும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர்கள் நால்வரை காணுகையிலும் பயம்தான் முதலில் வந்து பிடித்தது. அவள் தன்னையே வெறுத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் அவளை மாற்றி வைத்திருந்தனர். இந்த நேரத்தில் தன் அம்மாவை அளவுக்கு அதிகமாக வெறுத்தாள் அவள்.

அன்று மாலையில் வீடு திரும்பிய பாலாஜி கனிமொழியின் அறைக்கு வந்தான். கனிமொழி கீழே ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கீர்த்தனா நாளைக்கு நீயும் நானும் கனியும் வெளியே போகலாம்.." என்றான்.

எதையோ வரைந்துக் கொண்டிருந்த கீர்த்தனா எழுந்து நின்றாள்.

"நீங்க இரண்டு பேரும் மட்டும் போய்ட்டு வாங்க.." என்றாள்‌.

"அம்ருதா நம்ம மேரேஜ்க்கு ட்ரீட் தரா.. நாம போகணும்.." என்றான்.

கீர்த்தனா அவனருகே வந்தாள்.

"நீயும் நானும் ஏன் போகணும்.? உனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவளை கூட்டி போ.." என்றாள்.

அவளின் கையை பற்றினான்.

"தொடாதே‌‌.." என்று கையை உதறியவளை முறைத்தான்.

"எனக்கு உன்னைதான் பிடிச்சிருக்கு.." குழையும் பொங்கலாய் சொன்னவனை ஆவேச அம்மனாக முறைத்தாள்.

"இன்னொரு முறை இந்த வார்த்தையை சொல்லாதே. உன்னை கொன்னுடுவேன்.." என்றவள் "எனக்கு உன்னோடு வர பிடிக்கல. சோசியர் சொல்லி இருக்கார் இல்லையா.? வெளியே போற இடத்துல நீ உன் கன்ட்ரோலை மீறிட்டா நம்ம இரண்டு பேர் உயிருக்கும் ஆபத்தா போயிடும். அதனால நான் வரல.." என்று அவன் சொன்னதையே இப்போது திருப்பிச் சொன்னாள்.

பெருமூச்சு விட்டுக் கொண்டான் அவன்.

"கீர்த்தனா.." அவளின் கன்னங்களை அள்ளினான்.

ஆயிரம் கோபம் வந்தாலும் அவன் அன்பாய் அழைக்கையில் மனம் இடறதான் செய்தது. அதை வெளிக்காட்டாமல் இருப்பதே பெரிய கஷ்டமாக இருந்தது.

"அவ என் பிரெண்ட்.. நாம இரண்டு பேரும் போகணும். நான் உன்னை விட்டு வேற யாரை கூட்டிப் போவேன்.? நீ என் லைஃப்.. என்னோடு வா. நம்ம சண்டை இந்த வீட்டோடு இந்த ரூமோடு இருக்கட்டும். வெளியே தெரிய வேணாம்.." என்றான்.

அவள் உதட்டை கடித்தபடி சரியென்று தலையசைத்தாள். அவளின் இதழை பல்லிருந்து விடுவித்தான்.

"மென்மையான லிப்ஸ்.. காயம் பண்ணாத.." என்றான். பல்லின் அச்சு லேசாக தெரிந்த இடத்தில் சிறு முத்தம் தந்தான். பின்னால் விலகி நின்ற கீர்த்தனாவிற்கு கண்ணீர் கொட்டியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN